முழுசுதந்திரம் தரும் தியானம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நான்கு சுவர்களால் ஆன அறையின் ஒரு மூலையில் முட்டிக்கொண்டு நின்றவன் கூச்ச- ட்டான்... " யாராவது காப்பாற்றுங்கள். நான் சிறையிடப் பட்டிருக்கிறேன். எப்படி வெளியே வருவது?"
" மூடனே திரும்பிப் பார்! " என்ற வார்த்தைகள் காதில் விழ திரும்பிப் பார்த்தவன் அதிர்ந்தான். காரணம் நான்காவது பக்கம் சுவரே இல்லை!
அந்த மனிதன் மட்டும் திரும்பிப் பார்க்காமல் இருந்திருந்தால்... அவன் அடைபட்டிருப்பதாக நம்பிக் கொண்டிருந்த அறையி- ருந்து வெளியே வந்திருக்க முடியுமா?
அவன் சுதந்திரமடைய அவன் செய்த ஒரே ஒரு காரியம் 'திரும்பிப் பார்த்தது' மட்டுமே.
நீங்களும் மனதின் எலும்புகளான எண்ணங்கள் எனும் சிறைக்குள் சிக்கிக் கொண்டு தவிப்பவர்தான்.
தியான, ஞானக்கருத்துக்கள் உருவாக்கப்பட்டது இந்த ஒரே ஒரு அற்புதம் நிகழ்த்தான்.
அது நீங்கள் உங்களைத் திரும்பிப் பார்க்கும் சுபநிகழ்வுகளின் தொகுப்பு.
உங்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பார்க்கிறீர்கள். ஆராய்கிறீர்கள். புரிந்து கொள்கிறீர்கள்.
ஆனால், உங்களை மட்டும் தவற விட்டுக் கொண்டேயிருக்கிறீர்கள்.
விளைவு - உங்களின் எண்ணங்களும், நம்பிக்கைகளுமே உங்களை சிறைப்படுத்திவிட்டன.
திரும்பிப் பார்க்காத ஒரே ஒரு காரணத்தால் ஜென்ம ஜென்மமாக உங்களின் வாழ்வு, அனுபவிக்கும் திறன், ஆனந்தம், சுதந்திரம் என்ற எல்லாமே சுருங்கிப் போயிருக்கிறது.
மனிதன் - கட்டுப்பாடுகள் மிகுந்த அடிமையாயிருக்கிறான்.
