கௌரவமான இலக்கு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நீங்கள் ஞானியாவதற்கும், நீங்கள் ஆனந்தமடைவதற்கும், கண்டிப்பாக ஒரு குரு இருந்தாக வேண்டுமா?
இந்த வாசகத்தைப் படித்த பின் முடிவெடுங்கள்...
தனி மனிதன் சுயமாய் முடிவெடுக்காதவரை, ஒரு குருவோடு வாழ்நாள் முழுவதும் தங்கியிருந்தாலும் கூட குருவால் உதவ முடியாது.
தனி மனிதன் சுயமாய் முடிவெடுத்து விட்டால், ஒரு குருவின் உதவி அவனுக்குத் தேவையாய் இருக்காது. ஆனந்தத்தை அவனே அடைந்திடுவான்.
அப்படியென்றால் குருவின் உதவி எதற்கு? இதற்குதான்...
ஆனந்தமாய் வாழ முடிவெடுக்காதவனை முடிவெடுக்க வைப்பது சுலபமல்ல. அதற்கு இரசவாதம் நிகழவேண்டும்.
அது நிகழாவிட்டால், முடிவெடுக்காத ஒரே ஒரு காரணத்தால், பல பிறவிகளை வீணடிக்க வேண்டியிருக்கும்.
'தாய்' வெறும் சமூக அந்தஸ்த்து.! இன்னொரு புனைப் பெயர் மட்டுமே.!
ஆனால், தாய்மை என்பது மலர்ச்சி. அது குணமுதிர்ச்சி.
தாய்மை குணத்தை எவராலும் பெற முடியும். ஒரு ஆணால் கூட முடியும்.
காரணம் அது குணரீதியான மாற்றம். உடல்ரீதியான மாற்றமல்ல.
ஒரு பெண், தாய்மை குணத்தைப் பெறுவதற்கு 'கரு' ஒரு எளிய வழி. தாய் எனும் சமூக அந்தஸ்தும், சேய் எனும் வாழும் சாட்சியும் சேரச் சேர - அப்பெண்ணுள் நிகழும் இரசவாதங்கள், அவரை தாய்மை நோக்கித் தள்ளும்.
தாய்மையைப் பெறுவது ஒரு கௌரவமான இலக்காக மாறிவிடும். பெண் முழுத் தாயாக மாறுவாள் வெகு எளிதாக... இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்
