KAILASA Library/உள்ளே/காத்திருப்பு காலங்களை தியானகாலங்களாக மாற்றுங்கள்Sign in
உள்ளே

காத்திருப்பு காலங்களை தியானகாலங்களாக மாற்றுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒரு பேருந்துக்காக, ஒரு நபருக்காக, ஒரு ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் நேரங்களில், உங்களின் மனம் பொங்கியெழும்.

உங்களின் உள்ளே குடியிருக்கும் பொறுமையின்மை எட்டிப் பார்க்கும் காலங்கள் அவை!

நீங்கள் நினைத்தால், இந்தக்
காலங்களையெல்லாம் தியான காலங்களாக மாற்ற
முடியும்.

வெறியும், வெறுப்பும்தான் பொருமையின்மையின் ஆணிவேர்கள். மனத் தடுமாற்றத்தின் காரணகர்த்தாக்கள்.

நாம் காத்திருக்கும் காலங்களில், நம்முள்ளேயிருக்கும் மேற்கண்ட மனக் குறைகள் கிண்டியெடுக்கப்படும்.

பொறுமையின்மையால் மனம் தடுமாறும் காலங்களில்...

உங்கள் கட்டுப்பாட்டை இழக்கிறீர்கள். விழிப்புணர்வின்மையில் விழுகிறீர்கள்!