இந்த நிமிடம் ஜெயிக்காவிட்டால்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
எந்த நிமிடம் ஜெயிக்கப் போகிறீர்கள்?
பூனைக்கு நிச்சயம் பு- பிறக்காது. அதுபோல் துன்பப்படும் மனிதனுக்கு நிச்சயமாய் ஆனந்தம் பிறக்காது.
அவன் துன்பப்படும்வரை இது உண்மை. மாற முடியாதது. துன்பமிருக்கும் வரையில் இது மாற்ற முடியாததும் கூட.
ஒரு மழைத்துளி பூமியை வந்து தொடுவதை, அந்த மழைத்துளியே நினைத்தாலும் தடுக்க முடியாது. காரணம் புவிஈர்ப்பு விதி!
கொட்ட ஆரம்பித்த மழை, பூமியில் கொட்டியே தீரும். உங்களுக்குள் துக்கம் கொட்ட ஆரம்பித்து விட்டால் அதை உங்களால் தடுக்க முடியாது. இது மன இயல்பு விதி.
இந்த நிமிடத்தி- ருந்துதான்
அடுத்த நிமிடம் பிறக்கிறது.
எதிர்காலம் பிரசவமாவது...
நிகழ்காலத்தில் இருந்துதான்!
பிறக்கப் போவது பு- யா? பூனையா? என்பதை முடிவு செய்வது இயற்கை.
அடுத்த நிமிடம் நீங்கள் ஆனந்தமாக இருக்கப் போகிறீர்களா இல்லையா என்பதை நிர்ணயிப்பது நீங்களல்ல, நிகழ்காலம். எனவே, எதிர்காலத்தின் தாய் நிகழ்காலம்.
இந்த நிமிடம் நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்... ஆய்வு செய்யுங்கள்.
அப்படித்தான் அடுத்தடுத்த நிமிடமெல்லாம் இருக்கப் போகிறது.