உள்ளே
நீங்கள் குட்டிக் கடவுளாகலாம் இப்பொழுதே!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கடவுள் இருப்பதை நிரூபிக்க முடியவில்லை. கடவுள் இல்லை என்பதையும் நிரூபிக்க முடியவில்லை.
பிரபஞ்சம் தோன்றியது இப்படித்தான் எனச் சொல்லும் Big bang theory- யால் கூடத் தோற்றுவாய் வரைதான் விவரிக்க முடிந்தது. தோற்றுவித்தது எது எனச் சொல்ல முடியவில்லை.
'கடவுள்' என்பவர் கடவுளாக ஏற்றுக்கொள்ளப்படக் காரணம் அவர்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்பதால்! படைப்பாற்றல் கடவுளின் இரகசியம். பலம். எல்லாம்.
கடவுள் கருமி அல்ல, சுயநலவாதி அல்ல - என
நிரூபிப்பதற்காக உங்களுள் படைப்பாற்றல்
வைக்கப்படவில்லை.
அது கடவுள் தந்த சொந்தப் பரிசு! பந்தப் பரிசு!