KAILASA Library/உள்ளே/Cû\YuSign in
உள்ளே

Cû\Yu

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இருக்குமிடம் வரை

FOUUeLs

ஒரு வரைபடத்தை உங்களால் பார்க்க முடிகிற
தென்றால், அதற்குக் காரணம் வரைபடமல்ல.
வரைபடத்தி- ருக்கும் இடைவெளிகளே காரணம்.

ஆனால், படத்தி- ருக்கும் இடைவெளிகளின் மகத்துவம் இதுவரை நமக்குத் தெரிந்திருக்காது.

"இடைவெளிபடிப்பதைசாத்தியமாக்குகிறது". இந்த வாக்கியத்தை படிக்க முடிகிறதா?

"இடைவெளி படிப்பதை சாத்தியமாக்குகிறது" என்ற மேலுள்ள வரியை நீங்கள் படிக்க, புரிந்து கொள்ள உதவுவதே - அதி- ருக்கும் அச்சிடப்படாத இடைவெளிகள் தான்.

உங்களின் பேச்சு கூட 'வார்த்தை - இடைவெளி - வார்த்தை - இடைவெளி" என்றே வருகிறது. மிக வேகமாக ஒருவர் பேசினால் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. காரணம், பேச்சின் வேகம் அதிகரிக்கும்போது இடைவெளிகளின் அளவு குறைகிறது.

பேச்சு புரிவது கூட இடைவெளிகளால்தான்.

இப்படி நீங்கள் ஆராய ஆராய, பல அதிசயங்கள் புலப்படும். உங்களின் வார்த்தைகளுக்கு இடைப்பட்ட அமைதிதான் வார்த்தைகளையே புரிய வைக்கிறதென்றால் எது பெரியது... சப்தங்களா? அமைதியா?

அமைதியிலும், ஒன்றுமில்லா வெற்றுவெளிகளிலும், எல்லாம் வல்ல சக்தி ஒளிந்திருக்கிறது.

உங்களுக்குத் தெரிந்தவைகளுக்கு உள்ளே ஊடுருவுங்கள்... தெரிந்ததற்குள் ஒடுங்கியிருக்கும் தெரியாதவைகள் தெரிய ஆரம்பிக்கும். தியானித்துப்பருங்கள்!

Nithyananda