உங்களை கடவுளாக்கும் தியானம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
'நான் கடவுள்' என்பதை நிரூபிப்பதற்காக வரவில்லை.
'நீங்கள் ஒவ்வொருவரும் கடவுள்' என்பதை நிரூபிப்பதற்காகவே வந்திருக்கிறேன்.
'என்னவொரு விறுவிறுப்பான வாசகம் இது!' என நினைக்காதீர்கள். காரணம் அப்படி நினைக்கையில் அது வெறும் நினைவாகவே நின்று விடக்கூடும். அப்படி நின்று விடக் கூடாது!
இது முழுக்க முழுக்க நிஜம். உண்மை. சத்யம். எனவே, இந்த வாசகத்தைத் தியானியுங்கள். அது அனுபவமாக மாற வேண்டும்.
'கடவுள் பெரியவர்' எனச் சொல்- உங்களின் தரத்தைக் குறைப்பது,
'கடவுள் நண்பர்' எனச் சொல்- உங்களின் தரத்தைக் குறைப்பது - ஆகிய இரண்டுமே தரங்குறைந்த செயல்கள்.
'நீங்கள்தான் கடவுள்' எனும் வேத வாக்கியத்தை ஆழமாய் தியானியுங்கள். இப்படிச் செய்தே ஞானமடைந்தவர்களின் எண்ணிக்கை, பல வரலாற்றில் பதிந்திருக்கிறது.
இதையெல்லாம் படித்தபின்...
கடவுளுக்குக் கிடைக்கும் மரியாதைகளைப் பிடித்துக் கொண்டு, மனம் கனவு காண அனுமதிக்காதீர்கள்.
இப்பொழுதி- ருந்து கடவுளின் குணாதிசயங்களை - உங்களின் குணாதிசயங்களாக்குங்கள். கடவுள் தன்மை உங்களுக்குள் புகுந்து பரவட்டும்.
உங்கள் வழியாகக் கடவுள்தன்மை கதிர் வீச... கதிர் வீச...
நீங்களே கடவுளாகி விடுவீர்கள்!