KAILASA Library/உள்ளே/அபாய காலங்களில்தான்Sign in
உள்ளே

அபாய காலங்களில்தான்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நிதானம்

அதிகமாக வேண்டும்.

நெருக்கமானவர்களுக்கு ஏதாவதொரு அபாயம் நிகழ்ந்தால் பதறிப்போவது... பாசமா, வேஷமா, இயலாமையா? "பெரும்பான்மையினரின் கதையில் அது இயலாமையின் வெளிப்பாடுதான்!" என்பது மனோ குண ஆராய்ச்சியாளர்களின் முடிவான கருத்து.

அன்பிற்குரியவர் அடிபட்டு இரத்தம் சிந்துவதைப் பார்த்ததும்; அடிவயிறு கலங்கிப் பதறி, நீங்களும் மயங்கி விழுந்தால்,

உங்களின் அன்பிற்குரியவர் இன்னும் கொஞ்சம் பரிதாபத்திற்குரிய நிலைக்கு தானே தள்ளப்படுவார். நீங்களும் மயங்கி விட்டால், யார் அவரைக் காப்பாற்றுவது.

அடிப்பட்டிருப்பவருக்கு...

பரிவும், பாதுகாப்பும்தான் உடனடித் தேவை! பதற்றம் உங்களுக்கும் அவருக்கும் இன்னும் கொஞ்சம் தொல்லைகளை அதிகப்படுத்தும்! அவ்வளவே.

‘பதற்றம்’ உங்கள் அன்பின் ஆழத்தைச் சொல்லும் அளவீடல்ல.

அது 'எதிர்பாராததை எதிர்த்துக் கையாளும் பக்குவம்' இல்லாதிருப்பதை அளந்து சொல்லும் அளவீடு மட்டுமே.

அகநடுக்கம் இல்லாத ஒருவரின் உடலும், மனமும், பதட்டந்தரும் சூழ-ல்தான் முழுமையாய் விழித்துக் கொள்ளும்.

பதட்டந் தரும் சூழ- ல் உங்களிடமிருந்து வெளிப்படும் நிதானத்தின் அளவுதான் உடல் - மன ஆரோக்கியத்தின் அளவீடுகள்.