அரண்மனையா?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கோயிலா?
பார்ப்பவரை ஆச்சரியப்பட வைக்கும் தஞ்சை பெரிய கோயிலை கற்களாலேயே கட்டிய இராஜராஜ சோழன், நிச்சயம் தான் தங்குவதற்கு அதேபோல் உறுதியான ஒரு அரண்மனையைக் கட்டியிருப்பார்தானே.
இன்று அது இருக்கிறதா?
எல்லாப் பழமைவாய்ந்த கோயில்களையும்
கட்டியவர்கள் மன்னர்கள்தான். இன்று வரை
அக்கோயில்கள் உயிர் வாழ்கின்றன.
அந்த மன்னர்களின் அரண்மனைகளும், சொகுசுமாளிகைகளும் எங்கே? எப்படி அழிந்தன?
எவ்வளவு படையெடுப்புகள், ஆக்கிரமிப்புகள்... ஆனால், இன்று வரை, கோயில்கள் பத்திரமாகவே இருக்கின்றன என்றால், அக்கோயில்களை ஏதோ ஒரு பெரிய சக்தி அல்லது சங்கதி காப்பாற்றுகிறது என்பது புரிகிறதா...?
கோயில்கள் மட்டும் காக்கப்பட்டிருப்பது தற்செயலானது எனச் சொல்- சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது.
இது ஆச்சரியப்பட வேண்டியது மட்டுமல்ல... ஆராயப்பட வேண்டியது.
நீங்கள் பிறக்க, வெட்டவெளியில் பூமி பறக்க, அணுவி- ருந்து அண்டம் வரை ஒழுங்காய் இருக்க, காரணமான காரண சக்தியின் (Super Natural Power) சக்தி நிலையங்களாகக் கோயில்கள் இருப்பதால்தான், அவை இயற்கையாகவே காக்கப்பட்டிருக்கின்றன.
கோயில் மற்றும் சம்பிரதாயங்களைச் சுற்றி, ஏதோ சிறுசிறு மூடநம்பிக்கைகள் இருக்கிறதெனப் பெரிதுபடுத்தி பார்க்க வைத்து, கோயில்களில் இருக்கும் மகா சக்தியை நீங்கள் இழக்கக் காரணமாயிருக்கும் மனதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.!