ஆதி சைவம் - அறிமுகம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பகவான் நித்யானந்த பரமசிவம்
இறையனார் தாம் அருளிய சுத்தாத்வைத சத்தியங்களை இறைமொழியாம் தமிழில் மீண்டும் உரைக்கின்றார்.

நித்யானந்த ஹிந்து பல்கலைக்கழகம்

ஆதி சைவம் - அறிமுகம்
உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
ஆதி சைவம்...
ஆதி சைவத்தை அறிமுகப்படுத்த முயற்சி செய்வது, ஆண்டவனையே, சிவனையே அறிமுகப்படுத்த முயற்சிப்பதற்கு சமம். சாத்தியம் இல்லாதது என்பது மட்டும் அல்லாது, வாழ்ந்து மட்டுமே பார்த்து, அனுபவித்து மட்டுமே பார்க்ககூடியது என்கின்ற தகுதி உடையது ஆதி சைவம்.
ஆண்டவனை அறிமுகப்படுத்த இயலாது, வாழ்ந்து மட்டும் தான் பார்க்க இயலும்.
ஆதி சைவத்தையும் அறிமுகப்படுத்த இயலாது, வாழ்ந்துதான் பார்க்க இயலும். அறிமுகப்படுத்த இயலாது என்கின்ற அறிமுகத்தை வேண்டுமானால் அளிக்க இயலும்.
ஆதி சைவம்... பிரபஞ்சத்தில், இந்த பேர் அருள் வடிவான ஞானப்பிரபஞ்சத்தில்... என்றென்றும் விரிவடைந்து கொண்டே சென்று கொண்டிருக்கும்...
மரணம் இலாத சிரஞ்சீவியான, நிரந்தரமான இந்தப் பிரபஞ்சத்தில் ‘உயிர்’ தோன்றியபொழுது, அது எவ்வாறு தன் வாழ்க்கையை மேம்படுத்தி, பிரபஞ்சத்தின் எல்லா சக்திகளையும் தன் உள்ளிருந்து வெளிப்படுத்தி, ‘கடவுள்துகள்’ என்கின்ற நிலையில் இருந்து கடவுளாக மாறுவது எப்படி, தன்னுடைய இருப்பு நிலையான பிரபஞ்சத்தின் வடிவமாக அகண்ட சச்சிதானந்த பரிபூரண நித்யானந்த நிலையில் எப்படி தன்னுடைய இருப்பை நிலைநிறுத்திக் கொள்வது என்கின்ற அறிவியல், வாழ்வியல்-ஆதிசைவம்.
‘கடவுள் துகள்’
என்கின்ற நிலையில்
இருந்து,
‘கடவுள்’ நிலையை
உணர்வது,
கடவுள் தன்மையை
தனக்குள்ளிருந்து
வெளிப்படுத்துவது,
கடவுள் நிலையிலேயே
இருப்பு கொள்வது
என்கின்ற
மிகப்பெரிய வழியின்
‘அறிவியல்’, அதை
அடைவதற்கான
வாழ்வதற்கான
அறிவியல்
- ஆதி சைவம்.
இப்போது நான் கொடுத்த definition... பள்ளியிலே... ஒரு பக்கக் கட்டுரை வரைக என்று ஒரு கேள்வியைக் கேட்டு, பத்து மதிப்பெண்களுக்கு அந்தக் கேள்வியை நிர்ணயித்து, ஒரு பக்க கட்டுரையை வரையச் சொன்னால், ஒரே ஒரு வரியில் நீங்கள் விளக்கம் கொடுக்கின்ற மாதிரி, அறிமுகப்படுத்த முடியாத ஆதிசைவத்தை சில வரிகளில் சொல்ல நான் செய்த முயற்சி தான் இது.
உயிர் பிரபஞ்சத்தில் மலர்ந்த உடன், ‘கடவுள் துகள்’ என்கின்ற நிலையில் இருந்து, ‘கடவுள்’ நிலையை உணர்வது, கடவுள் தன்மையை தனக்குள்ளிருந்து வெளிப்படுத்துவது, கடவுள் நிலையிலேயே இருப்பு கொள்வது என்கின்ற மிகப்பெரிய வழியின் ‘அறிவியல்’, அதை அடைவதற்கான வாழ்வதற்கான அறிவியல் - ஆதி சைவம்.
ஆதிசைவத்தின் வரலாற்றை வைத்தோ, ஆதிசைவத்தின் நிலைகொண்ட புவியியல் சூழல்கள் இவைகளைச் சார்ந்தோ... ஆதிசைவத்தை சுருக்குவது சாத்தியமே இல்லாதது.
ஏனென்றால், வரலாறு... துவக்கமும் முடிவும் இருக்கின்ற ஒன்றுக்குத்தான் இருக்க முடியும். ஓர் இடத்தில் இருந்து, இன்னோர் இடத்தில் இல்லாத ஒன்றைத்தான் புவியல் ரீதியாக நாம் அடையாளம் காட்ட முடியும்.
அந்தம் இல்லாத ஆதி, ஒன்றில் இருந்து இரண்டாக மாற முடியாத அளவுடையது.
அந்தம் இல்லாத ஆதி உடையது, ஒன்று இரண்டாக மாற முடியாத அளவுடையது-ஆதி சைவம். அதனால், வரலாற்றாலோ, வரலாறு சார்ந்தோ, புவியியல் சார்ந்தோ ஆதி சைவத்தை விளக்குவது சாத்தியமில்லாதது. வரையறுப்பது சாத்தியமில்லாதது.
ஒரு காலத்தில் தோன்றி, ஒரு காலத்தில் இல்லாமல் போவது கிடையாது ஆதிசைவம்.
ஒரு இடத்தில் இருந்து, ஓர் இடத்தில் கடைபிடிக்கப்படாமல் இல்லாமல் போவது கிடையாது ஆதிசைவம்.
புவிஈர்ப்பு விசை எப்படி புவி முழுக்க இருக்கின்றதோ, பிரபஞ்சம் முழுமையும் சில குணங்களால் சத்தியங்களால் நிறைந்து, அந்த சத்தியங்களை சார்ந்து

இயங்குகிறது. அந்த சத்தியங்கள்தான் ஆதிசைவம்.
புவிஈர்ப்பு விசை ஓர் இடத்தில் இருக்கு - ஒரு இடத்தில் இல்லை என்று சொல்ல முடியுமா? முடியாது.
எப்படி புவி முழுவதும் புவிஈர்ப்பு விசை நிறைந்திருக்கின்றதோ, அதுபோல பிரபஞ்சம் முழுவதும் சில விதிகள், சத்தியங்கள், சாத்தியங்கள், கருத்துக்கள், உண்மைகள் நிறைந்து இந்த புவியே இயங்குகிறது. இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. அந்த சத்தியங்களை, அந்த பிரபஞ்சமே குறையிலாது, முறை தவறாது வெளிப்படுத்திய ‘வாழ்வியல்முறை’தான் ஆதி சைவம்.
பிரபஞ்சப் பேரருள், பிரபஞ்சப் பரம்பொருள் ‘வடிவம்’ - ‘வடிவமின்மை’ என்னும் நிலைகளைக் கடந்து தன்னுடைய சாந்நித்ய இருப்பின் மாத்திரத்தாலேயே வெளிப்படுத்திய சத்தியங்களைத் தான் வேதங்கள் என்று சொல்கிறோம். அவைகளின் சாரங்கள், சாரம் ‘உபநிடதங்கள்’.
பிரபஞ்சப் பேரருள், அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரம்பொருள்... தன்னுடைய நித்யானந்த நிலையில் இருந்தவாறே, பிரபஞ்சத்தின் சத்தியத்தை, தன் நிலையில் இருந்தவாறே தானே தன் மயமாய் தனக்குள்ளேயே ரசித்துக்கொண்டிருக்கும், தனக்குள்ளேயே அதை வாழ்ந்துகொண்டிருக்கும், தனக்குள்ளேயே தன்னையே ருசித்துக்கொண்டிருக்கும் அந்த தன்மையானந்த நிலையில் வெளிப்படுத்தப்பட்ட, உணர்த்தப்பட்ட சத்தியங்கள்தான் வேதங்கள். அதன் சாரம் உபநிடதங்கள்.
அதே பிரபஞ்சப் பேரருள், அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரம்பொருள்... தன்னுடைய நித்யானந்த நிலையிலேயேதான் இருப்பது மட்டுமல்லாது, உயிர்கள் எல்லாம் உய்வடைய உத்தம நிலை அடைய தன் நிலைதனை உயிர்கள் எல்லாம் உணர்ந்திட சதாசிவனாய் திருமேனி கொண்டு உலகத்திற்கு வெளிப்படுத்திய ஒவ்வொருவரும் பிரபஞ்ச பேரருள் நிலையில் இருந்து சுத்த சிவாத்வைத சத்தியத்தை வாழ்ந்திட, சுத்த சிவாத்வைத சத்தியத்தில் நிலைபெற்று பொங்கி மலர்ந்திட, பெருமானே சத்தியங்களை வெளிப்படுத்தியதுதான் ‘ஆகமங்கள்’.
தன் இருப்பினாலேயே, சாந்நித்யத்தாலேயே, தன்னுடைய இருப்பின் சாந்நித்யதாலேயே, சாந்நித்ய இருப்பின் பலத்தினாலேயே பொங்கிய சத்தியங்கள் - ‘வேதங்களும் உபநிஷதங்களும்’.
திருமேனி தாங்கி சதாசிவனாய் உலகிற்காக அவர் வெளிப்படுத்திய சத்தியங்கள், உயிர்கள் எல்லாம் உய்வதற்காக அவரே வெளிப்படுத்திய சத்தியங்கள் ‘ஆகமங்கள்’.
வேதங்களை சார்ந்து, உபநிடதங்களை சார்ந்து, பெருமானே வெளிப்படுத்திய ஆகமங்களைச் சார்ந்து, உலகமெல்லாம் உய்வதற்கான ஜீவன்முக்த விஞ்ஞானமாக, வாழ்வியல் நெறியாக மலர்ந்ததுதான் ஆதிசைவம்.
ஆதிசைவம் - ஆதிமதம் மட்டும் அல்லாது, மதம் என்கின்ற கருத்து உருவாவதற்கு முன்பாகவே மலர்ந்த ஒரு ஆன்மீக வாழ்வியல் நெறி.
வேறு வேறு நாடுகளில் இடங்களில் இருக்கின்ற மக்கள் கல்லாலே ஆயுதங்கள் செய்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு காட்டு மிராண்டிகளாக வாழ்ந்திருந்த காலத்தில், நாங்கள் கல்லாலயம் செய்து, ஜீவன்முக்த வாழ்கையை வாழ்ந்து கொண்டிருந்த வாழ்வியல்நெறி 'ஆதி சைவம்'.
மொழி இல்லாத காலத்தில் மேலை நாட்டவர்கள் பல்வேறு கண்டங்களில் இருந்த மக்கள் ஹீன சப்தங்களால் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி கொண்டிருந்த காலத்தில், முறையான செம்மொழியான 'தமிழி' என்னும் அருமையான மொழியில் வாழ்வியல் சத்தியங்களை ஆகமங்களாக நாங்கள் வாழ்ந்து கொண்டு இருந்த வாழ்வியல்நெறி ஆதிசைவம்.
ஆகமங்கள் சமஸ்க்ருதத்தில் எழுதப்பட்டதாக பலபேர் கருதுவது பொய். அது மிகப்பெரிய தவறான கருத்து. உண்மையில் பல சம்ஸ்க்ருத வல்லுனர்கள், அறிஞர்களால் ஆகமத்தின் அரைப்பகுதி 50 சதவிகிததைகூட மொழிபெயர்க்க இயலவில்லை என்பதுதான் நான் நேரடியாக பல சம்ஸ்க்ருத அறிஞர்களோடு தொடர்புகொண்டு வேலை
ஆதிசைவம் - ஆதிமதம்
மட்டும் அல்லாது,
மதம் என்கின்ற
கருத்து உருவாவதற்கு
முன்பாகவே மலர்ந்த
ஒரு ஆன்மீக
வாழ்வியல் நெறி.

செய்துபார்த்ததன் இறுதி உண்மையாக அறிந்த சத்தியம்.
உண்மையில் ஆகமங்கள் சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் மூலமொழியான ‘தமிழி’ என்னும் மொழியில் தான் அருளப்பட்டது.
கிரந்த எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, தமிழி என்னும் இலக்கணம் சார்ந்து வெளிப்படுத்தப்பட்டு எம்பெருமானே மொழியின் இலக்கணமும் தந்து, எம்பெருமானே வாழும் வழியையும் தந்து, எம்பெருமானே வாழ்வியல் நெறியும் தந்து, ஜீவன் முக்த விஞ்ஞானம் மாத்திரம் அல்லாது, உணவு சமைக்கும் அடிப்படை விதிகளில் இருந்து உடை நெய்தலில் இருந்து உடை உடுத்தும் முறையில் இருந்து எழுவது விதமான உடை உடுத்தும் முறையை முப்பத்தைந்து விதம் ஆண்களுக்கும் முப்பத்தைந்து விதம் பெண்களுக்குமாக, எழுவது விதமான உடை உடுத்தும் முறையைகூட மிகத்தெளிவாக ஆதி சைவர்கள் பல்வேறு குழுக்களாக தங்களுடைய தொழில் திறமை சார்ந்து தங்களை பிரித்துக்கொண்டார்கள். அந்த பிரிவின் வகையும் திறமும் உட்பட அவர்கள் வாழ்க்கைமுறை, யார் வியாபாரம் செய்ய வேண்டிய கடமையில் இருக்கிறார்கள், யார் ஆட்சி செய்து நாட்டின் முறைமையும் தகமையையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள், யார் இந்த வாழ்வியல் முறையான ஆதிசைவத்தை உலகிற்கு உபதேசித்து உரைக்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்று ஒவ்வருக்கும் தங்கள் தங்களுடைய விருப்பம் மற்றும் வேலைகள் சார்ந்து, தங்களுடைய வாழ்கைமுறை சார்ந்து தங்களைத் தாங்களே பிரித்துக் கொண்டார்கள்.
இந்த பிரிவு முறையும் அவர்கள் ஒவ்வொருவருக்குமான உணவுமுறை, உடைமுறை ஒரு நகரம் அமைக்கும் பொழுது ஒவ்வொருவருக்கும் எங்கு இருப்பிடம் இருக்க வேண்டும் என்கின்ற இடம்முறை, அவர்கள் ஒவ்வொருவரும் எப்படி வாழ்க்கையை அமைத்து கொள்ளவேண்டும் என்கின்ற வாழ்வியல்முறை... அனைத்தையும் எண்ணிக்கூட பார்க்க முடியாத அளவிற்கு மிகத் தெளிவாக, நுட்பமாக... ஒரு கோசாலை அமைக்க வேண்டும் என்றால் எந்த இடத்தில் பசு போன்ற மிருகங்கள் இருக்க வேண்டும், எந்த இடத்தில் குதிரை போன்ற மிருகங்கள் இருக்க வேண்டும், எந்த இடத்தில் காவலுக்கான நாய்கள் போன்ற மிருகங்கள் இருக்க வேண்டும் என்கின்ற அளவிற்கு, திருநீறு பஸ்மத்தை உருவாக்க வேண்டும் என்றால் எந்த நிற எந்த முறையான பசுவின் சாணத்தை எப்படி எடுத்து எப்படி திருநீற்றை உருவாக்க வேண்டும் என்கின்ற ஆழமான தெளிவான, ஏறத்தாழ சில கோடி ஸ்லோகங்கள் மூலமாக.. சிலகோடி பாடல்கள் மூலமாக... ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள் சிலகோடி ஏனென்றால் காமிக ஆகமத்தை எம்பெருமான் விவரிக்கும் பொழுது கோடி கோடி ஸ்லோகங்கள் அருளியதாக சொல்லுகின்றார்.
இப்பொழுது நம்முடைய கையில் கிடைத்து இருப்பவை இருபது லக்ஷம்
வேதமும் அதன்
சாரமாக உபநிடதமும்,
அதை வாழும்
முறையான ஆகமமும்
ஒன்றாய் சேர்ந்து...
இந்த மூன்றையும்
சார்ந்த வாழ்வியல்
முறையைத்தான்
ஆதி சைவம்
மாத்திரமே. அதுபோக காரண ஆகமம் மற்ற காமிகம் முதல் இருபதெட்டு ஆகமங்களும் இதுபோக உப ஆகமங்களாக நூற்றியெட்டு ஆகமங்களும், அதுபோக இதன் பாகமாக அறுபத்திநான்கு தந்திரங்களையும் பெருமானே நேரடியாக அருளி உள்ளார்.
வேதமும் அதன் சாரமாக உபநிடதமும், அதை வாழும் முறையான ஆகமமும் ஒன்றாய் சேர்ந்து... இந்த மூன்றையும் சார்ந்த வாழ்வியல் முறையைத்தான் ஆதி சைவம் என்று சொல்லுகின்றோம்.
வேதங்கள் பொது நூலாக இருந்து ஆகமங்கள் சிறப்பு நூலாய் இருந்து வாழுகின்ற வாழ்க்கைமுறை வாழ்வியல் விஞ்ஞானம் ஜீவன் முக்த வாழ்வியல் விஞ்ஞானம் தான் ஆதி சைவம்.
பிரபஞ்சம் தோன்றிய பொழுதே உயிரனங்களை உருவாக்கும் பொழுதே எம்பெருமான் ஆகமத்தை உலகுக்கு அளித்துவிட்டார்.
தன்னுடைய இருப்பின் சாந்நித்யத்தினாலேயே உயிர்கள் எல்லாம் உய்வடைந்து மேம்பட்ட வாழ்க்கை நிலையை அடைய... ஆகமங்களை பெருமான் சதாசிவன், மகாதேவன், ஆதிசிவன், எம்பெருமான் ஈசன், அண்ணாமலையான் உலகத்திற்கு அருளிய மிகப்பெரிய நன்கொடை, வாழ்வியல் சாத்திரம், வாழ்வியல் சூத்திரம்... வாழ்பவர்கள் அவனை நோக்கி பொழியும் தோத்திரம்... இது எல்லாம் ஒன்று அடக்கி மிகப்பெரிய வாழ்வியல் நெறியாக பெருமான் அருளியதுதான் ஆதி சைவம்.
தானே அந்த உண்மைகளை உலகத்திற்கு சொன்னது மட்டும் அல்லாது... எப்பொழுதெல்லாம் மக்கள் அதை மறந்து மாயையிலே சிக்குகிறார்களோ... எப்பொழுது எல்லாம் மூடர்கள் அரக்கர்கள் வாழ்க்கையின் அடிப்படை தெரியாதவர்கள் அசுர பலத்தாலே வாழ்வியல் நெறியை அழிக்க முயற்சித்து தனக்கும் மற்றவர்களுக்கும் தீங்கு செய்து கொள்ளுகின்ற ராக்ஷசர்களாக மாறி உலகத்திற்கு பெருங்கேடு விளைவிக்க முயற்சிக்கின்றார்களோ அப்பொழுது எல்லாம் தீமையை அழித்து நன்மையை மலரச்செய்து சைவத்தை புனரமைத்து வேதநெறி தழைத்து ஓங்க மிகு சைவ துறை விளங்க மீண்டும் மீண்டும் பெருமானே அவதரிக்கின்றான்.
வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவ துறை விளங்க, பூத பரம்பரை பொலிய பெருமானே மீண்டும் மீண்டும் அவதரித்து, தன்னைத்தானே அடையாளம் காட்டி தன்மையானந்தத்தில் சின்மையானந்ததில் சிவானந்த போதத்தில் ஜீவன் எல்லாம் திளைத்து இருக்க வழியும் காட்டி, வாழ்வும் காட்டி
உய்யவும் காட்டி உணவாய் ஊட்டி உணர்விலும் காட்டி உயிரிலும் காட்டி மெய்நினைவும் உயிர்நினைவும் உயிர்உணர்வும் மலர்த்தி ஆதி சைவத்தை நம் வாழ்வியல் நெறியாக மீண்டும் நிறுத்திடவே குருவாய் மீண்டும் மீண்டும் வருவாய் என கேட்கும் ஜீவ ராசிகளுக்காக குருவாய் வருவாய் என ஏங்கும் ஜீவர்களுக்காக தன் திருமேனி விட்டு குருமேனி தாங்கி உறும் உலகத்தில் உய்ய வாழி காட்டவே என்றென்றும் இருந்திருக்கும் அந்தம் இல்லாத ஆதி சைவத்தை உயிர் கொடுத்து புனரமைக்க மீண்டும் வாழ்வியல் நெறியாக மாற்றிட இறைவன் குருமேனி தாங்கி வரும் நிகழ்வுகளைத்தான் அவதாரங்கள் என்றும் விளையாடல்கள் என்றும் ஆதிசைவத்தின் பாரம்பரிய சாத்திரங்கள் தெளிவாய் வகுத்து உலகிற்கு வரைத்து உரைக்கின்றன.
பாலில் நெய்போலே வேதங்களில் இருக்கும் சத்தியமான நெய்யை உபநிஷதம் மூலமாய் உயிர்க்குச் சொல்லி வெறும் நெய்யை உண்பது சாத்தியம்மில்லை என்பதனால் ஆகமம் என்னும் உணவாய் சமைத்து அதில் நெய்யையும் கலந்து நம் நெஞ்செல்லாம் இனிக்க
கல் நெஞ்சாய் இருக்கும் மனமெலாம் கரைந்து நெஞ்சு பஞ்சாக நெஞ்செலாம் இனிக்க உலகத்திற்கு சொன்ன வாழ்வியல் நெறிதான் ஆதி சைவம்.