ஆதி சைவத்தின் முக்கியமான பாகங்கள் - நான்கு...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
‘சரியை’ - வாழ்வியல் முறை எவ்வாறு துயில் எழ வேண்டும் என்பதில் இருந்து துயில் எழுந்ததும் செய்ய வேண்டிய செயல்களில் இருந்து நாள் முழுவதையும் உங்கள் உடலும் - மனமும் செய்ய வேண்டிய செயல்கள், செய்யக்கூடாத செயல்கள், எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்ககூடாது என்பது துவங்கி, உங்கள் உணவுமுறை, உடைமுறை உறக்கமுறை, உறைவிடமுறை என்னும் எல்லா முறைமைகளையும் வாழ்வியல் சத்தியங்களையும் நெறியையும் சரியாக சரியாக வாழவேண்டிய இருக்க வேண்டிய முறையை சொல்வது ‘சரியை’.
இதைத்தாண்டி...

பிரபஞ்ச பேரருளான அகண்ட சச்சிதானந்தா பரம்பொருளான சதாசிவனோடு பக்தியில் சங்கமித்து, பக்தியால் பொங்கும் ஆனந்தத்தை அனுபவித்து, சிவஞானத்தால் பொங்கும் சிவபோதத்தை வாழ்ந்து, சிவஞானத்தால் பொங்கி பெருகும் சிவபோததில் சிந்தை கரைந்து, நிறைந்து, உறைந்து கிடந்து வாழும் வாழ்க்கை முறைதான் ‘க்ரியை’.
வழிபடும்முறை... மலர் கொய்வதில் துவங்கி சந்தனம் அரைப்பதில் இருந்து மாலை சாற்றுவதில் இருந்து ஆத்மார்த்தமாக இறைவனை வழிபடுவதில் இருந்து பரார்த்தமாக ஆலய வழிபாட்டில் என்னென்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதுவரை எல்லாவற்றையும் முறையாக தானே தன்னை வழிபடும் விதியை தவறு இல்லாது ஜீவன்களுக்கு எல்லாம் சொன்ன விதம் -‘க்ரியை’.
சரியை - வாழ்வியல்முறை, க்ரியை -பக்தியால் பொங்கி பழுத்து இறைவனோடு இரண்டற கலந்து இருக்கும் இனிமையான நெறிமுறை.
யோகம் - ஜீவன் சிவனாக மாற,
ஜீவன் சிவத்துவத்தை உணர்ந்து
சிவனுடைய அதே உணர்வு நிலையில்
சிவமயமாய் ஒளிர்ந்து மிளிர்ந்து சிவத்துவpropertyற்கு தன்னை யோக்கியனாக்கி கொள்ளும் முறை 'யோகம்'.
தாமே சிவமாய் தன்மயமாய் சிவோஹம் என்னும் ஜீவன் முக்த தன்மையில் நிலைத்து இருக்கும் நுட்பம் 'ஞானம்'.
சரியை - ஆதி சைவத்தின் வாழ்வியல்முறை. க்ரியை - ஆதி சைவத்தின் வழிபாட்டியல்முறை யோகம் - ஆதி சைவ நிலையில் உடலையும் மனதையும் வைத்து அடைகின்ற முறை. ஞானம் - ஆதி சைவ நிலையில் 'சிவோஹோம்' எனும் ஜீவன்முக்த நிலையில் நிலை பெற்று இருப்பதற்கான சத்திய சிவபோத சுகபோத சிவஞான ரகசிய சத்தியங்கள். இதைதான் ஞானம், வித்யை என்கின்றோம்.
ஆகமம் நான்கு முக்கிய பகுதிகளாக இருந்து ஆதிசைவத்தின் வாழ்வியல்களை நமக்கு காட்டுகிறது... சரியை க்ரியை யோகம் ஞானம்.
அடுத்த பத்து நாட்களும் இந்த தொடர்ந்த சத்சங்கங்களின் மூலமாக... சரியை க்ரியை யோகம் ஞானம் என்று ஆதி சிவன் ஆதிப்பரம்பொருள் வேதங்களின் மூலம் ஆகவும்
சரியை - ஆதி சைவத்
தின் வாழ்வியல்முறை.
க்ரியை -
ஆதி சைவத்தின்
வழிபாட்டியல்முறை
யோகம் - ஆதி சைவ
நிலையில் உடலையும்
மனதையும் வைத்து
அடைகின்ற முறை.
ஞானம் - ஆதி
சைவ நிலையில்
'சிவோஹோம்'
எனும் ஜீவன்முக்த
நிலையில் நிலை பெற்று
இருப்பதற்கான சத்திய
சிவபோத சுகபோத
சிவஞான ரகசிய ச
த்தியங்கள். இதை
தான் ஞானம், வித்யை
என்கின்றோம்.
உபநிஷதங்களின் சாரம் ஆகவும் ஆகமங்களின் மூலம் ஆகவும் வெளிப்படுத்தி அருளிய மிகப்பெரிய வாழ்வியல் முறையான ஆதி சைவத்தின் சாரத்தை இந்த நான்கு முக்கியமான சரியை க்ரியை யோகம் ஞானம் எனும் நான்கு முக்கியமான தலைப்புக்களின் வழியாக உங்களோடு பகிர்ந்து கொள்ளுகின்றேன்.
இதை உங்கள் வாழ்வியலாக மாற்றி கொள்வதற்கு உங்களுக்கு தேவையான சத்தியங்களையும், அதில் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் போன்றவற்றை நீக்கி, கேள்விகளுக்கான விடைகளை கொடுத்து, அடுத்த 10 நாட்களும் இந்த ஆதிசைவத்தின் சாரத்தை அனுபவமாக மாற்றி கொள்வதற்காக, இந்த வாழ்வியல் விஞ்ஞானத்தை உங்கள் முன் திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.
நீங்கள் எல்லோரும் சிரத்தையுடனும் சீரிய பக்தியுடனும் இந்த ஆதி சைவத்தின் சாரத்தை உள்வாங்கி, உங்களுக்குள் இருக்கும் கடவுள் துகள் விழிப்படைந்து கடவுள்நிலை அடைந்து சிவோஹம் எனும் அனுபூதியில் நிலைபெற்று சிவஞானத்தில் நிலைத்திருந்து சிவபோதத்தில் வாழ்வீர்களாக... நித்யானந்தத்தில் நிலைபெறுவீர்களாக.
எத்துனையோ நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான சம்பிரதாயங்களையும், வாழ்வியல் முறைகளையும், மதங்களையும் தத்துவக் கோட்பாடுகளையும், சித்தாந்தங்களையும் கருத்துக்களையும்...


கம்யூனிசம், நாத்திகம் உட்பட எல்லாவிதமான வாழ்வியல் கருத்துக்களையும்... பல்வேறு கோணங்களிலும் ஆராய்ந்து அறிந்து படித்து சிந்தித்து... அவைகளின் உட்பொருளை உள்வாங்கி இருக்கின்ற தெளிவினாலும் தைரியத்தாலும் உங்களுக்கு சொல்லுகின்றேன்... ஆழ்ந்து கேளுங்கள்... மக்களே... தமிழ் எனும் பெருமொழி புரிகின்ற உடலும் மனமும் கொண்டதனாலேயே நீங்கள் புண்ணியவான்கள். ஏனென்றால் அந்த ஒரு மொழியில்தான் ஆதிசைவத்தின் சத்தியங்கள் எல்லாம் நேரடியாய் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. மற்றவர்கள் எல்லோருமே மொழி பெயர்ப்பைத்தான் படித்தாக வேண்டும். நீங்கள் ஒருவர் மட்டுமே நேரடியாய் படிக்கவும் அதன் துடிப்பை உங்கள் இதய துடிப்பாய் உணரவும் உங்களுக்குள் அதை உள்வாங்கவும் வாழவும் வாழ்வியல் அனுபவமாக மாற்றி கொள்ளவும் மிகப்பெரிய வாய்ப்பு உடையவர்களாக இருக்கின்றீர்கள். நீங்கள் மட்டும்தான் இந்த மிக பெரிய புண்ணியத்திற்கு ஆளானவர்களாக இருக்கின்றீர்கள்.
தெரிந்து கொள்ளுங்கள் தமிழ் மொழி புரிந்து கொள்ளுகின்ற மனம் உங்களுக்கு இருந்திருக்குமானால் இருக்குமானால் இருந்தோ அல்லது இப்போது இருக்குமானால் சைவத்தை இழக்காதீர்கள் சைவத்தை கண்டு கொள்ளுங்கள்
கண்டு அறியுங்கள் வாழுங்கள். அது உங்களுடைய வாழ்வியல் நெறியாக மாறட்டும். உங்கள் வாழ்வியல் சத்தியமாக மாறட்டும். வேறு எந்த சித்தாந்தத்திலும் இத்துனை தெளிவாக கடைநிலை மனிதனுக்கும் கடைதேறும் வழியை இடைசெருகல் ஏதும் இல்லாது ஒரு இம்மி எடையும் சத்தியத்தில் குறையாது எடையும் குறையாது மாத்திரையும் குறையாது சத்தியத்தை சத்தியமாகவே சத்தியமாய் சதாசிவன் சொல்லி அருளிய வாழ்வியல் முறையான சைவம் பிடியுங்கள். வாழ்ந்திட வாழ வைக்கும் பெருவழியான சைவம் வாழுங்கள்.
மேண்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்... மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்... மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்...
ரமண மகரிஷி ரொம்ப அருமையாக அண்ணாமலையானை பார்த்து வாழ்த்துவார்... 'என்போலும் தீனரை இன்புற காத்து நீ எந்நாளும் வாழ்ந்து அருள்
சைவத்தை
இழக்காதீர்கள்
சைவத்தை கண்டு
கொள்ளுங்கள்
கண்டு அறியுங்கள்
வாழுங்கள்.
அது உங்களுடைய
வாழ்வியல் நெறியாக
மாறட்டும்.
உங்கள் வாழ்வியல்
சத்தியமாக மாறட்டும்.

அருணாசசலா...’ என்னை போன்ற தீனார்களை எல்லாம் இன்புற காக்கின்ற நீ இதேபோல் எல்லா காலத்திலும் காத்து எந்நாளும் வாழ்ந்தருள் என்று இதே வார்த்தையைத்தான் ஆதிசைவத்தை நோக்கியும் நான் சொல்ல கடமைப்பட்டு இருக்கின்றேன்.
என்போலும் தீனரை நித்யானந்தத்தில் நிலைபெற செய்த சைவ சத்தியமே... ஆதிசிவமே உலகமெலாம் நீ பொங்கி பெருக மேன்மைகொள் சைவநீதி மேன்மை தரும் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.
மேன்மையை தரும் இந்த சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.
ஆகமங்களாலும்... வழிவழியாய் வந்த சைவத்தை மீண்டும் உயிர்ப்பித்து ஸ்தாபனம் செய்த சர்வஞ்டனபீடாரூடரான ஞான சம்பந்த பெருந்தகையாலும், அப்பர் பெருமான் எனப்படும் திருநாவுக்கரசு சுவாமிகளாலும், சுந்தரராலும், மாணிக்கவாசகராலும், நாயன்மார்களாலும்... நெறிபடுத்தபட்டு, வாழ்வியல் முறையாக வாழ்ந்து காட்டப்பட்ட பெருமானோடு இரண்டற கலக்கும் ‘சிவோஹம்’ எனும் நிலையில்... நித்யானந்தமாய் நிலைபெற்று இருக்கும் இந்த மிகப்பெரிய வாழ்வியல் ஞானம் சொல்லவும், கேட்கவும் மிகுந்த புண்ணியத்தை தருவது. சொல்லவும், கேட்கவும் வாழ்கையை மேம்படுத்துவது. அதனால்தான்...
மேன்மை கொள் என்னும் வார்த்தையை உபயோகிக்கிறார்கள். மேன்மை கொள் என்றால்... சொன்னவர்கள், கேட்டவர்கள், எதிர்காலத்தில் கேட்கப்போகிறவர்கள்... இவர்கள் எல்லோருக்கும் மேன்மையை கொடுப்பது, மேன்மையில் அவர்களை நிறுத்துவது மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
சைவநீதி ஆதிசைவம் சார்ந்து உங்கள் எல்லோருக்கும் இருக்கும் கேள்விகள் சந்தேகங்கள் இவைகள் அனைத்தையும் நித்யானந்த தியானபீடம் பெங்களூரு ஆதீனத்திற்கு அனுப்பலாம். உங்கள் சந்தேகங்களை கேள்விகளை அனுப்பலாம்.
அதுமட்டுமல்லாது... மிக முக்கியமான இந்த ஆதி சைவத்தை உங்கள் வாழ்வியல் நெறியாக, அனுபவமாக மாற்றி கொள்வதற்கு எம்பெருமான் அருளியிருக்கும் மிக முக்கியமான சமய தீட்சை, விசேஷ தீட்சை என்கின்ற இரண்டும் நடைபெறுகிறது. அன்பர்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டு சமய தீட்சையும், விசேஷ தீட்சையும் பெற்று, ஆதி சைவத்தை அனுபவமாக மாற்றிக்கொண்டு எம்பெருமானோடு இரண்டற கலந்து, இறைநிலை உணர்ந்து சிவஞானத்தை அனுபூதி ஆக்கிக்கொண்டு,
சமய தீட்சையும், விசேஷ
தீட்சையும் பெற்று, ஆதி
சைவத்தை அனுபவமாக
மாற்றிக்கொண்டு
எம்பெருமானோடு
இரண்டற கலந்து,
இறைநிலை உணர்ந்து
சிவஞானத்தை அனுபூதி
ஆக்கிக்கொண்டு,
சிவபோதத்தில் நிலைத்து
வாழுமாறு, சிவபோதத்தில்
நிலைபெற்று இருக்குமாறு,
உங்கள் அனைவரையும்
ஆசீர்வதிக்கின்றோம்.
சிவபோதத்தில் நிலைத்து வாழுமாறு, சிவபோதத்தில் நிலைபெற்று இருக்குமாறு, உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கின்றோம்.
எம்பெருமான் ஆகமத்திலே மிகத் தெளிவாக விளக்குகின்றார்... பத்து விதமான தீட்சை முறைகள், ஒன்பது விதமான தீட்சைகள்... சமய தீட்சை, விசேஷ தீட்சை, நிர்வாண தீட்சை, ஆச்சர்ய அபிஷேகம் என்று ஒன்பது விதமான தீட்சைகளையும் பத்து விதமான தீட்சை முறைகளையும் ஆகமத்தில் இறைவன் விளக்குகின்றார்.
அதில் ஒரு முக்கியமான விதியாக சமய தீட்சையும் விசேஷ தீட்சையும்... ஜாதி இன, மதம் ஏதும் பாராது எல்லா மனிதர்களுக்கும் எல்லா ஜீவராசிகளுக்கும் பிரதிபலன் எதிர்பாராது கைமாறு கருதாது அளிக்கப்பட வேண்டும் என்று ஆணையிடுகின்றார். அவரின் உத்தரவை அவரின் ஆணையை சிரமேற்கொண்டு... எந்த கட்டணமும் இல்லாமல் விலை இல்லாது அனுமதி இலவசமாக சமய தீட்சையும், விசேஷ தீட்சையும் நவம்பர் 21, 22, 23, 24 ஆகிய நான்கு நாட்களும் பெங்களூரு ஆதீனத்தில் நடைபெறுகின்றது. நித்யானந்த தியானபீடத்தில் நடைபெற இருக்கின்றது. அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற்று 'சிவோஹம்' எனும் அனுபூதியை உணர்ந்து, ஜீவன்முக்த நிலையில் வாழ்ந்து, சிவபோதத்தில் நிறைந்து நித்யானந்த நிலையில் இருக்குமாறு, நித்யானந்த நிலையில் மலருமாறு உங்களை வாழ்த்துகின்றேன்.
எந்தவிதமான அனுமதி கட்டணமுமின்றி சமய தீட்சையும் விசேஷ தீட்சையும் அளிக்கப்படும். விசேஷ தீட்சை பெற்றவர்கள் தினந்தோறும் சிவபூஜை செய்வதற்கான பாத்திரங்களும், ஆத்மலிங்கமும், பூஜை செய்யும் முறையை பற்றிய விளக்க புத்தகமும், மற்ற பொருட்களும் உங்களுக்கு சிவசேவையாக இலவசமாக அளிக்கப்படும்.
ஆழ்ந்து இதை வாழ்ந்து பாருங்கள். ஆதி சைவம் - வாழ்ந்து பார்த்து அனுபவிக்க வேண்டிய 'சத்தியம்'. வெறும் எண்ணத்தாலோ வார்த்தையாலோ புரிந்துகொள்ள முடியாத, வாழ்ந்து பார்த்தே உணர்ந்து கொள்ளப்பட வேண்டிய வாழ்வியல் நெறி, வாழ்வியல் சத்தியம்.
வாருங்கள்...
சைவத்தை வாழுங்கள்.
மேன்மை கொள்வீர்கள்.
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.
நீங்கள் எல்லோரும்
நித்யானந்தத்தில் நிறைந்து
நித்யானந்தத்தில் மலர்ந்த
நித்யானந்தத்தில் கரைந்து
நித்யானந்தமாகிட
ஆசீர்வதித்து முடிக்கின்றேன்.
நன்றி.
ஆனந்தமாக இருங்கள்.


Ebook ISBN : 979-8-88572-963-5
nithyananda.tv kailaasa.org
நித்யானந்த ஹிந்து பல்கலைக்கழகம்