சுதந்திரத்தின் ரகசியம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அடுத்து ஆக்ஞா சக்கரத்தைப் பற்றி பார்ப்போம்.
ஆக்ஞா சக்கரம் என்பது நெற்றியின் புருவ மத்தியில் இருக்கிறது. வாரநாசி என்று பெயர்.
நாசி என்றால் மூக்கு. வாரணம் என்றால் புருவங்கள்.
இந்த இரண்டுக்கும் நடுவில் இந்தச் சக்கரம் உள்ளதால் இதற்கு வாரநாசி என்று பெயர்.
வாரநாசியில் இறந்தால் முக்தி.
"ஓ ஹோ! அதற்காகத்தான் சாகிற காலத்தில் வார நாசிக் சேத்ராடனமாக புனித யாத்திரையாகச் செ ன்று அங்கே உயிர்விட்டால் முக்தி என்ற சொல்லியிருக்கிறார்களே" என்ற நீங்களே ஏதோ கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.
வாரநாசி என்பது உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ஊர். இந்த ஊரைப் பற்றி நம்முடைய முன்னோர்கள் சொல்லவில்லை.
நம்முடைய புருவத்துக்கு இடையில் இருக்கிற ஆக்ஞா சக்கரத்தைப் பற்றித்தான் ஒரு குறிப்பாக சொல்லி இருக்கிறார்கள்.
இந்த இடத்தில் நமது மனதைப் பொருத்ததில் தியானத்தால் நிலை நிறுத்தி விட்டால் நமக்கு நிச்சயம் முக்தி கிடைத்து விடும்.
உத்திரப்பிரதேசத்தின் வாரநாசியும ஒரு சக்திதவாய்ந்த புனித ஸ்தலம்தான். இதுபோன்ற சக்திவாய்ந்த ஸ்தலங்களில் உயிர்விடுவது ஜென்ம, ஜென்ம முக்தி நேராக்கிய தேடுதலை சுலபமாக்கும்.
பிறப்பின் போது மிக ஆழாப் பிறந்திருக்கும் இந்த சக்கரம் நாம் வளர வளர மூடிவிடுகிறது.
இந்த சக்கரம் மூடுவதற்குக் காரணம், முரட்டுத் தனமா எந்த விஷயத்தையும் நாம் அணுகுவதுதான்.
தீர்க்கமாக தெளிவாக யோசிக்காமல் அளவுக்கதிகமாக எந்த விஷயத்தையும் சீரியஸாக சிந்தனை செய்தாலும் இச்சக்கரம் மூடிவிடுகிறது.
எப்போதும் ஒருவித பரபரப்பு மற்றும் நடுக்கம் இருந்து கொண்டேயிருப்பதும் இந்த சக்கரத்தை மூடி விடுகிறது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் டென்ஷன் இந்தச் சக்கரத்தை மூடுகிறது.
ஆனால், எளிமையாக இருக்கும் போது இந்தச் சக்கரம் எளிதாகத் திறந்து விடுகிறது.
அளவுக்கு மீறிய யோசனை செய்தால் தலைவில வரகிறது. சிலபேர் தலைவில தனக்கு வந்தால் உடனே பேசியோ, குழப்பியோ அதை மற்றவர்க்கும் தந்துவிடுவார்கள்.
- ஆக்ஞா சக்ரரம்தான் மூன்றாவது கண் என்று போற்றப்படுகிறது.
- முரட்டுத்தனம் தீவிர சிந்தனை பரபரப்பு ஆக்ஞா சக்கரத்தை மூடுகிறது.
- எளிமைத்துவம், சுதந்தரம் இந்த ஆக்ஞா சக்கரத்தைத் திறக்கிறது.
- எளிமை - ஆக்ஞா சக்கரத்தின் திறவுகோல். டென்ஷன் - ஆக்ஞா சக்கரத்தின் திறவுகோல்.
சிலர் ஏதாவது ஒரு சின்ன வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு, “அதை அப்படி செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டும்” என்று தீவிரமாக நிறையப் பேசுவார்கள்.
கடைசியல் அவர்கள் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். நாம்மான் அவர்களுக்கும் சேர்த்து ஏதாவது செய்ய வேண்டியிக்கும்.
முரட்டுத்தனமும், தீவிரமும் சிந்தனையின் போக்கில் இருக்கும் வரை வாழ்வின் போக்கு படபடப்பு நிறைந்த தாகவோ அல்லது கர்வம் நிறைந்ததாகவோதான் இருக்கும்.
ராமகிருஷ்ணர் சொல்கிறார்: “எளிமையைப் போன்று வேறு பெரிய ஞானம் வேறு இல்லை”.
எளிமையாக இருக்க பல ஜென்மங்கள் தஹ்ம் இருக்க வேண்டும் என்பார்கள். ஆனந்தமாக வாழ குழந்தை இயல்பாக, சரளமாக இருப்பது போல வாழ்க்கையில் நாம் இருக்க வேண்டும்.
இந்த உலகில் நாம் சாதாரணணமாக எளிமையாக இருந்தாலே போதும்; அதுவே நம்மை அசாதாரணமான உயர்ந்த பண்புகள் கொண்ட மனிதனாக நம்மை ஆக்கிவிடும்.
எளிமை தத்துவத்தை, எளிமையாக இருப்பதை நாம் ஏன் முற்றிலும் மறந்துவிட்டோம்?
எதை எடுத்தாலும் சிக்கல் ஆக்குவது, அதை மேலும் பிரச்சினை ஆக்குவது என்கிற நடைமுறையை நோக்கியே ஏன் நாம்போய்க் கொண்டு இருக்கிறோம்?
ஒருவன் ஐநூறு ரூபாய்க்கு வேலை செய்தால், ஐம்பது ரூபாய் கூலி தருகிறோம். அதிகம் தருவதில்லை.
ஆனால், ஐம்பது ரூபாய்க்கு தவறு செய்தால் எவ்வளவு கோபம் கொள்கின்றோம்.
எவ்வளவி சக்தி விரயமாகிறது! ஐநூறு ரூபாய், சில நேரங்களில் ஐயாயிரம் ரூபாய் அளவுக்கு கூட செலவு செய்தாலும் சேமிக்க முடியாத அளவு சக்தியை கோபத்தால் வீண் அடிக்கிறோம்.
“ஏன் இப்படி வெகுண்டு எழுகிறோம்!” என்பதை என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா?
கோபம் என்பது ஒரு சக்தி.
அதை அநாவசியமாக நாம் செலவழித்துவிடுவதால், நம்முடைய பாங்க் பாலன்ஸ் எல்லாம் இழந்து, ஓட்டா ண்டி ஆவதுபோல் ஆகிவிடுகிறோம். வாழ்வதற்கு கூட சக்தி இல்லாமல் அசட்டுத்தனமானவராக மாறிவிடுவோம்.
அளவுக்கு மீறி சில விஷயங்களுக்கு முக்கியத்த்துவம் கொடுக்கும் போது இதுவே மிகவும் சிக்கலான பிரச் னையாக மாறிவிடுகிறது.
எளிமை பற்றி நீண்ட நேரம் பேசினால் அது கடுமையாக மாறி விடும். எளிமை என்ற விஷயமே மிகவும் சி க்கலான விஷயமாக ஆகிவிடும்.
எளிமையைப் பற்றிப் பேசுவதை விட வாழ்க்கையில் இதைக் கடைப்பிடித்து அனுபவப்பூர்வமாக உணர்வதுதான் மிகவும் அவசியம்.
எளிமை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் என்னோடு ஆசிரமத்துக்கு வந்து சில நாட்கள் தங்குங்கள். எளிதாக எளிமையை கற்றுக்கொள்வீர்கள்.
இயற்கையாக, எளிமையாக இருக்கும் போது பல விஷயங்களை அனுபவத்தால் சேகரிக்கலாம்.
ஆனால், தேவையற்ற தீவிரத்தால் நம் கண் பார்வை கூட கோணல் ஆகிவிடும். எதைப் பார்தாலும் குறுக்குப் புத்தியுடன் பார்க்கும் கோணல் பார்வையை நமக்குக் கொடுத்துவிடும். குறுக்கு புத்தியால் பொருள் நிறைய சேர்க்க முடியும். ஆனால் இதற்கு நேர்மாறாக நம்மிடமிருக்கும் சுதந்திர உணர்வும், நிம்மதியும் பறிபோக ஆரம்பித்துவிடும்.
தந்திர குணம் கொண்ட மனிதர்களுக்கு இந்தச் சக்கரம் சுத்தமாக முடி இருக்கும்.
எதைப் பார்தாலும் ஆதாயம் தேடும் மன அமைப்பு கொண்டவர்களுக்கு இந்தச் சக்கரம் முடிவிடும்.
எதிர்பார்ப்பு அனாகச் சக்கரத்தை முடி, அதன் மூலம் ஆக்ஞா சக்கரத்தையும் முடிவிடும்.
எளிமையாக இருப்பது எப்படி என்று உணர ஒரு தியானத்தைக் கற்றுத் தருகிறேன். இந்தத் தியானம் சீக்கியார்கள், பாரசீகர்கள் மூலம் நமக்குக் கிடைத்தவை.
காரணம், அவர்கள் வாழ்க்கையில் மிகவும் எளிமையாகவும், ஹாஸ்ய உணர்வு மிகுந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
புத்தர் சொல்கிறார் : மனம் விட்டு நம் இதயம் விரய சிரித்தால் ஆக்ஞா சக்கரம் திறந்துவிடும.
அதன் பூத்த மதத்தில் சிரிப்பதையே மிகப் பெரிய தியாளமாக உருவாக்கி இருக்கிறார்கள். மாலையில் கூட மணி அடித்தது; கதவை முடி எல்லோரும் சிரிக்க ஆரம்பிப்பார்கள்.
"நாற்பத்தியிரண்டு நிமிஷம் வரை இடைவிடாமல் முகம் மலர, இதயம மலரச் சிரித்தவன் ஞானி ஆவன்" என்கிறார் புத்தர்.
சிரிக்கும் போது மனம் வேலை செய்யாது. நான் என்கிற ஆளுமை எண்ணம் இருந்தால் சிரிப்பு வராது.
நான் என்கிற எண்ணம் ஆக்ஞா சக்கரத்தை முடிவிடுகிறது. எங்கு போனாலும் நான் என்கிற அந்த விசிட்டிங் கார்ட் இல்லாமல் நம்மால் உட்காரக்கூட முடியாது.
சாதாரணமாக, எளிமையாக இருந்தால் ஆக்ஞா, அதாவது ஆன்மீகம் நமக்குள் அழகாகப் பூத்துவிடும்.
ஆக்ஞா சக்கரத்தை பலப்படுத்துவது இரண்டு விதத்திடட பயன்தரும். ஒன்று, கண்பார்வை தெளிவாகும் காரணம் ஆக்ஞா என்பது கண் சம்பந்தப்பட்டது.
இரண்டாவது, ஆக்ஞா சக்கரம் மண அழுத்தத்ததோடு மிகவும் சம்பந்தப்பட்டது.
நமது வாழ்வு பற்றிய கோணல் பார்வை என்று, நேர்பார்வை கிடைக்க ஆக்ஞா சக்கர தியானம் உதவும். மன அழுத்தம் குறையும்.
நேர்பார்வை என்றால் நேராக இருக்கும்.
கோணல் பார்வை என்றால் கோணலாக இருக்கும் என்று சிறுபிள்ளைத்தனமாக கற்பனை செய்யக் கூடாது.
நான் எனம் அனங்காரம் எதையும் கோணலாகப் பார்க்க வைக்கும். நேராக எதையும் புரிந்து கொள்ள உதாவது.
தன்னுடைய மனைவி மரணப் படுக்கையில் கிடந்ததை அழந்து கொண்டே பார்த்துக் கொண்டிருந்தார் முல்லா.
"ஏன் அழுகிறீர்? எல்லாம் பொய்! வேஷம் போடாதீர்!" என்றார் மனைவி.
முல்லா மீண்டும் அழுது கொண்டிருந்தார்.
முல்லாவிடம் சொன்னாள்,’’ முட்டாளே! நான் இறந்ததும் நீர் மற்றொரு திருமணம் செய்து கொள்வீர்.
பிறகு ஏன் இந்த போலி அழுகை?’’ என்று கேட்டாள்.
அதற்கு முல்லா பதில் சொன்னாரா; : ‘‘நான் முட்டாள் தான். ஆனால் மற்றொரு திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு நான் முட்டாள் அல்ல’’ என்றார்.
முல்லா இயற்கையாக அழுததுகூட அந்த அம்மாவிற்கு குதர்க்கமாகத் தெரிந்தது. இந்த மாதிரி எதையும் கோணலாகப் பார்ப்பது, கோணல் வாழ்க்கை வாழ்வது ஆக்ஞா சக்கரத்தை மூடி விடும்.
ஆக்ஞா சக்கரம் திறக்கும் வரை பார்வை நேராகாது.
எதிர்மறையான எண்ணங்களோடு இருக்கும் போது நம்மால் முழுமையாக இயங்கும். நம் முகம் பொலிவடையும்.
எண்ணங்கள் தூய்மையடைந்துவிட்டால் ஆக்ஞா சக்கரம் முழுமையாக இருக்கும். நம் முகம் பொலிவடையும்.
எந்தக் குழந்தையின் முகமாவது அசிங்கமாக உள்ளதா?
ஏழை வீட்டுக் குழந்தையாக இருந்தாலும் அதன் முகம் மலர்ந்து தான் இருக்கிறது. காரணம், குழந்தைப் பருவத்தில்ல ஆக்ஞை சக்கரம் திறந்தே இருக்கிறது. அற்புதமாக இயங்கவே செய்கிறது. ஆனால், வளர வளர அந்த மலர்ச்சி மறைந்து விடுகிறது. புன்னகை, அருள் , ஒளி எல்லாமே போய் விடுகிறது.
ஞானியின் முகம் அறுபது வயதில்கூட குழந்தை போலவே இருக்கும். இரமண மகரிஷி முகம் குழந்தை போலவே இருக்கும். நேரடியாக எளிமையாக பிரதிபலிக்கும்.
எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. ஆனால் எளிமை எந்த நிலையையும எதிர்கொள்ளும். அந்த பக்குவத்தை ஆக்ஞா சக்கரம் நன்குகுத் தரும்.
நீர்வீழ்ச்சியின் பொழிவாக, ஆற்றின் பிரவாகமாக எல்லோருடனும் பழகச் செய்யும் தகுதி பிறக்கும்.
ஒரு சின்ன கதை :
ஒரு இளைஞன் எம்.ஏ., படித்துவிட்டு வீடு, கம்பெனி என வேலைக்கு அலைந்தான். கடைசியில் பத்திரிக்கை ஆசிரியர் காலில் விழுந்து நிருபரானான்.
‘‘வேலை தரும் முன்னரே உனக்கு இது தற்காலிக வேலைதான். வேலை செய்யும் பக்குவம் பார்த்து நிரந்தரம் செய்வேன்’’ என்றார் பத்திரிக்கை ஆசிரியர்.
அந்த நேரத்தில் சென்னை துறைமுகத்தில் குடியரசு தின சிறப்பு விழா நடைபெற இருந்தது. அந்த விழா நிகழ்ச்சியை செய்தியாக்கிக் கொடுக்கும்படி சொன்னார் ஆசிரியர்.
ஆனால், அந்த விழா திடீரென ரத்தானது. கப்பலில் ஓட்டை விழுந்ததால் உயர் பதவியில் இருந்த சில முக்கியஸ்தர்கள் மற்றும் அதிகாரிகளால் வர முடியவில்லை. எனவே விழா நிறுத்தப்பட்டது.
புது நிருபருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முதல் நாளே நமக்கு பிரச்சினையா? என்ன செய்தி எழுதித் தருவேன் என்று நொந்து போனார்.
அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் மூத்த நிருபர் அந்த இளைஞனைப் பார்த்து, ‘‘என்ன ஆச்சு, ஏன் அனுபவரீதியாக இல்லாமல் இப்படி இடிந்து உட்கார்ந்து விட்டாய்? என்ன பிரச்சினை?" அறிவுரீதியாக மாத்திரமே என்று கேட்டார். உருவாகும் கருத்துக்களின் செ றிவு,
"முதல் நாள் செய்தி சேகரிக்க போகலாம் சுதந்திரமாக மனிதன் என்றால், கப்பலில் ஓட்டை விழுந்துவிட்டது. செயல்பட உதவும் அதனால் நிகழ்ச்சியே ரத்தாகி விட்டது" என்றான். எளிமைத்துவத்தைப் பாதிக்கும்.
" இதற்கு போயா இப்படி இடிந்து போய், நடைமுறைப்படுத்தப்படாத, உட்கார்ந்திருக்கிறாய்? நிகழ்ச்சி ரத்தானது, நடைமுறைக்கு முதல் பக்க பரபரப்பு செய்தியாக அல்லவா சாத்தியப்படாத வர வேண்டும். மனக்கருத்துக்கள் ஆக்ஞா ச க்கரத்தை
குடியரசு நிகழ்ச்சி ரத்தானாது ஏன்? செயலிழக்கச் செய்யும். கப்பலில் எப்படி ஓட்டை விழுந்தது? -என்பதை இதன் விளைவுபற்றி செய்தி சேகரித்து எழுதிக் கொடு" என்றார். மனிதனின் கண்ணோட்டம் மாறுகிறது.
பார்க்கும்விதம்
ஒரே சூழ்நிலைதான். ஆனால், இருவரும்
தறம் மாறுகிறது.
இரண்டு விதமாகப் பார்த்தார்கள்.
குழப்பமும்,
டென்ஷனும்
மிஞ்சு
கின்றன.
நமக்கு பல விஷயங்களை சரியாகப் பார்க்கத்
தெரியவில்லையே ஏன்?
விஷயங்களை சரியாகப்
பார்க்கிற பக்குவம் நமக்கு இல்லை.
கண் பார்வை சரியாக இருக்கலாம். ஆனால் பார்க்கும் விதம் தெளிவாக இருக்கிறதா?
குரு கிரந்தம் என்பது பத்து சீக்கிய குருமார்கள் சேர்ந்து தொகுத்த புத்தகம். இந்த புத்தகத்தில் ஒரு உரையாடல், "ஞானம் அடைய எது வழி? " என்று கேட்கிறான் சீடன்.
" பார்" என்று சொன்னார் குரு.
"பார்ப்பதன் மூலமே ஞானம் பெற்று விடலாம்" என்றார். அதாவது, நமது கண் மனதோடு, நேரடித் தொடர்பு உடையது.
கண்ணின் அசைவுகள் இல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் யாரும் கற்றுக் கொள்ள முடியாது.
இதுதான் சாதாரணமாக புலன் வழி நமக்கும் அறிவு.
ஆனால், குருகிரந்தத்தில் வரும் பார்த்தல் என்பது கண்ணின் அமைவில்லாமல், இமைக்காமல் ஸ்திரமாக இருத்தல் பற்றியது.
இந்நிலையில் மனதில் எண்ணங்கள் அலை பாயாது.
எனவே, கண்கள் அலை பாயாமல், மேகங்களற்ற, தெளிவான ஆகாயத்தைப் பார்த்து போல மனதை எண்ணங்களே இல்லாமல், அமைதியாக கவனிப்பதுதான் "பார்த்தல்" என்பதற்கு அர்த்தம்.
அப்படி எண்ணங்களின் சலனமே இல்லாமல் அமைதியாக இருந்து "பார்க்கத் தெரிந்து விட்டால்" எதையும் எளிதில் கற்றுக் கொள்ளலாம். எல்லாமே தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும்.
இந்த சுயமான, தனித் தன்மையான பார்வைதான் நமது வாழ்க்கைக்கு இனிமைத் தரும். எல்லா நஷ்டமும், வளமும் தரும்.
பார்க்கம் விதம் சரியாக இருந்தால் முரட்டுத்தனமும், தீவிர சிந்தனைகளும் மறைய ஆரம்பிக்கும்.
நாம் பார்க்கும் விதம் சரியாகிவிட்டால் நம்மைச சுற்றியிருக்கும் உலகம் சரியாகிவிடும்.
உலகம் எப்பொழுதுமே சரியாகத்தான் இருக்கிறது.
பார்க்கும் பார்வை தவறாக இருப்பதால் எல்லாம் சரியாகிவிடும்.
ஆக்ஞா சக்கரம் திறந்துவிட்டால் நாம் பார்க்கும் விதமே மாறுவதோடு உடலும் ஆரோக்கியமாகிவிடும்.
ஆக்ஞா சக்கரத்தோடு நேரடியாக தொடர்பு கொண்டிருக்கும் பிட்யூட்டரி சுரப்பி புத்துணர்வு பெறுவதால உடல் ஆரோக்கியம் பெறுகிறது.
ஆக்ஞா சக்கரத்திற்கான தியானம் ''திவ்ய நேத்ரா தியானம்''.