KAILASA Library/பூங்௯்௪சிட் ங௯்௪சிடபூத/திவ்ய நேத்ரா தியானம்Sign in
பூங்௯்௪சிட் ங௯்௪சிடபூத

திவ்ய நேத்ரா தியானம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

திவ்ய நேத்ரா தியானம் ஜென் புத்த மதம் நமக்கு வழங்கும் நன்கொடை.

ஆக்ஞா சக்கரம் மிக எளிதாக திறந்துகொள்ளும் தன்மை கொண்டது. எனவேதான் எல்லா மதங்களுமே இந்த சக்கரம் சம்பந்தப்பட்ட தியானத்தில் ஈடுபடுகின்றன.

இந்த ஒரு சக்கரத்திற்கு மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியான முறைகள் இருக்கிறது.

இதுவரை செய்த எல்லாத் தியனங்களும் முழுக்க முழுக்க நீங்களே உங்கள் முயற்சியோடு செய்தது. இந்த ஒரு தியானம் மாத்திரம் குரு சக்தியோடு நேரடியாக தொடர்பு கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

திவ்யமான தரிசனங்களையும் அருமையான ஆன்மீக அனுபவங்களையும் தரும் வல்லமை பெற்றது இந்த திவ்ய நேத்ரா தியானம்.

இந்த தியானத்தை தொடர்ந்து செய்ய செய்ய புத்திசாலிதனம் பூரணமாக மலரும்.

காரணம் ஆக்ஞா சக்கரம் பிட்யூட்டரி சுரப்பியோடு (டன்ற்த்ன்ற்ஹ்ழ்ஹ் ஞ்ப்ஹய்க்) நேரடியாக தொடர்பு கொண்டது. திவ்ய நேத்ரா தியானத்தை செய்ய செய்ய ஆக்ஞா சக்கரத்தோடு தொடர்புடைய பிட்யூட்டரி சுரப்பி முழு ஆரோக்கிய நிலையில் இயங்க ஆரம்பிக்கிறது.

பிட்யூட்டரி சுரப்பி ஒரு மனிதனின் புத்திசாலித் தனத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கிறது.

மனிதன் உடல் மன ஆரோக்கியத்தைப் பெற்று ஆன்மீகத்தில் வேகமாக வளர திவ்ய நேத்ரா தியானம் வழிசெய்யும்.

இந்த தியானத்தை சிரத்தையோடு செய்து ஓரிரு நாட்களிலேயே கண்பார்வைக் கோளாறு சரியானவர்கள் இருக்கிறார்கள். கண்பார்வை கோளாறு இருப்பவர்களுக்கு இந்த தியானம் பேருதவி புரியும்.

தியான அனுபவங்கள்...

✶ "நெற்றிப் பொட்டிலிருந்து ஒருவித சூடு உருவாகி முகம் முழுவதும் பரவியது என் தலைக்குள் இது வரை நான் அனுபவித்திராத ஒரு உற்சாக சக்தி பரவியதை உணர்ந்தேன்..."

  • பவித்ரா

(பிடதி அநட -ல்)

"நல்லது..."

✶ "சுவாமி என்னுடைய ஆக்ஞா சக்கரம் வழியாக உங்களை பார்த்துக் கொண்டேயிருந்தேன். ஒரு கட்டத் தில் நீங்கள் மறைந்துவிட்டீர்கள்.

என்ன ஆச்சரியம்! நீங்கள் உட்கார்ந்திருந்த சோபா எனக்கு முழுமையாக தெரிந்தது. நீங்கள் அங்கு இல்லவேயில்லை.

என் கண்களாலேயே என்னை நம்ப முடியவில்லை. ஏன் அப்படி நிகழ்ந்தது?"

  • மாதவன்

(தேவனஹல்லி அநட-ல்)

“ ஒரு ஞானிக்கும் சாதாரண மனிதனுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது சாதாரண மனிதனுக்கு மிக்க கடினம்.

இதுபோன்று விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் மாத்திரமே, சாதாரண மனிதன் ஞானிகளை புரிந்து கொள்ள உழ்வும் துருப்புச் சீட்டுகள்.

ஒரு மனிதன் ஞானம் அடையும் போது அந்த மனிதனின் முழு உடலும் மிகப் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகிறது.

ஞானியான பின் அந்த ஞானியின் உடல் சாதாரண மனிதனின் உடல் போலவே காணப்பட்டாலும் அது முற்றிலும் மாறுபட்டது.

உடல் உருவாவதற்கு உயிரோடிருப்பதற்கு காரணமான சக்தியின் அடிப்படையில் ஒரு ஞானியின் உடல் பல பரிமாணங்கள் மாறுபட்டது.

ஆக்ஞா சக்கரம் என்றழைக்கப்படும் மூன்றாவது கண் வழியாக தியான நிலையில் பார்க்கும் போது ஞானியின் உடலை சக்தி ரீதியாக பார்க்கிறீர்கள்.

ஞானமடையும் போது சக்தி தனது பூரண வெளிப்பாடு நிலையை அடைந்து விடுகிறது. சக்தியின் பூரண நிலையை அடைந்துவிட்ட ஒருவர் இருந்தும் இல்லாதிருப்பதற்கு சமம்.

அதனால் உங்களுக்கு அப்படித் தெரிந்தது!

இந்த அனுபவம் இதை அனுபவித்த ஒருவரால் மட்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடியது.

வேறு ஒருவர் சொன்னால் இது போன்ற விஷங்களை நம்ப மனது கஷ்டப்படும். ஏற்றுக் கொள்ளாது.

மனிதனாக பிறந்தவன் உள் உலகத்திற்கும் கொஞ்ச நேரம் ஒதுக்க வேண்டும். அப்போதுதான் ஆன்மீகம் என்ற ஆனந்த வாழ்வியல் பற்றி புரிந்து கொள்ள முடியும்”.

ஆனந்த வாழ்வியலை கற்றுக் கொண்ட பின்புதான் வெளி உலகை ஒருவன் முழுமையாக அனுபவிக்க முடியும்.

  • “சுவாமிஜி! தியானத்தில் ஆழமாக செல்ல செல்ல ஒரு நிலையில் நீங்கள் கிருஷ்ணரைப் போல எனக்குத் தரிசனம் கொடுத்தீர்கள். மேலும் கிருஷ்ணரைப் போன்று நடமாடிக் கொண்டே என்னைப் பார்த்து சிரித்தீர்கள்...”
  • கீர்த்தி

(ஹைதராபாத் அநட -ல்)

“ நல்ல அனுபவம்.

மனதை இது போன்ற அனுபவங்களோடு கட்டிப் போட்டு விடாதீர்கள். தொடர்ந்து ஆன்மிகத்தில் முன்னேறிக் கொண்டேயிருங்கள்”.

✦ "குருஜி, ஆக்ஞா சக்கர தியானத்தின் போது உங்களைப் பார்க்கும் போது எனக்குக் கிடைத்த தரிசனம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. பிறந்ததிலிருந்து நான் இந்துவாகவே வளர்ந்தேன். என் வாழ்வில் எந்த ஒரு கட்டத்திலும் கிருஸ்தவ மதத்தை நான் கடைப்பிடித்ததேயில்லை.

ஆக்ஞா சக்கரத்தில் உங்களைப் பார்த்துக் கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் நீங்கள் முழுமையாக மறைந்து விட்டீர்கள்.

சாக்ஷாத் இயேசு நாதரை உங்களின் இடத்தில் பார்த்தேன். இது தொடர்ந்து மூன்று முறை கண்களை மூடி திறந்து பார்த் இயேசு நாதரின் திருவுருவம்தான் என் கண்களுக்குத் தெரிந்தது.

எனக்கு சம்பந்தமேயில்லாத ஒரு தெய்வத்தின் திருவுருவம் எனக்குத் தரிசனத்தில் தெரிந்தது எப்படி?

  • ஸ்வர்னா

(சியாட்டில் அநட-ல்)

இந்த தரிசனம் உங்களின் முன் ஜென்மத்தோடு தொடர்புடையது. முன் ஜென்மத்தோடு தொடர்புடையது. முன் ஜென்மத்தில் கிறிஸ்தவராக நீங்கள் பக்தி நினைவுகளே இப்போது தரிசனமாக கிடைத்திருக்கிறது. உங்களுடைய இஷ்ட தெய்வம் இயேசு நாதர்தான்''.

✦ "சுவாமி, திவ்ய நேத்ரா தியானத்தின் கடைசிப் பகுதியில் திடீரென நீங்கள் மறைய ஆரம்பித்தீர்கள். கொஞ்ச நேரத்தில் நீங்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் உங்களுக்கு பதில் மீனாட்சி அம்மனைப் பார்த்தேன்.

  • ராம்குமார்

(ஓக்லஹாமா அநட -ல்)

" நல்ல தரிசனம். ஆனால் இத்தோடு நின்றுவிட வேண்டாம். தொடர்ந்து முன்னேறுங்கள்''.

✦ "சுவாமிஜி!! திவ்யநேத்ரா தியானத்தில் பலருக்கு அவர்கள் விரும்பி வழிபடும் தெய்வத்தின் தரிசம் கிடைத்திருக்கிறது. எனக்கு அப்படி எதுவும தெரிய வில்லை. ஆனால், என்னுடைய ஆக்ஞா சக்கரத்தில் அளவுக்கிதிமான உஷ்ணம் உருவானது!.

உங்கள் ஆக்ஞா சக்கரத்திலிருந்து ஒரு ஆங்ஹம் போல அந்த உஷ்ணம் என்னையடைந்தது....''

  • கீதா

( ஹைதராபாத் அநட - ல்)

"எல்லோருக்கும் தரிசனம் கிடைத்தேயாக வேண்டு மென்ற கட்டாயம் ஏதுமில்லை. சிலருக்கு இது போன்ற ச க்கர அனுபங்கள் கிடைக்கும். நல்லதே!

இந்த அனுபவங்கள் நல்லவை. ஆனால் அனுபவங்களைத்தான் அனுபூதியைப் பெற வேண்டும்...''

✸ “ஜெய்குருதேவ்!...

எங்களுடைய இஷ்ட தெய்வங்கள் மாத்திரம் எங்களுக்கு தரிசனமாக கிடைப்பது ஏன்?

ஒரே நேரத்தில் ஒரே தியானத்தில் பலருக்கு பல விதமான தரிசனங்கள் உங்கள் ஒரே ஒருவரிடமிருந்து கிடை த்தது எப்படி? இந்த மாதிரியான தரிசனங்கள் சாத்தியமாவது எப்படி? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்?”

மாலா ஸ்ரீதர்
( ஏற்காடு
அநட - ல்)

“ உங்களுடைய எல்லா கேள்விக்கும் இந்த ஒரு பதில் விளக்கம் தந்துவிடும்.

தியான சக்தி அல்லது குரு சக்தி முகம் பார்க்கும் கண்ணாடி போன்றது.

குருவின் தியான சக்தி தன் எதிரிலிருக்கும் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் தன்மைக் கொண்டது.

சாதாரண மனிதன் தன்னுடைய ஆக்ஞா சக்கரத்திலிருந்து குருவின் ஆக்ஞா சக்கரத்தோடு தொடர்பு கொள்வதுதான், - குருவின் தியான சக்தியோடு நேரடியாக தொடர்பு கொள்ள உதவும் எளிய வழி.

திவ்ய நேத்ரா தியானத்தின் போது உங்களுடைய விழிப்புணர்வு அதிமாவதால் குருவின் தியான சக்தியை நேரடியாக உங்களின் ஆக்ஞா சக்கரத்தால் பார்க்கிறீர்கள். உணர்கிறீர்கள்.

குரு சக்தியின் இயல்பே உங்களின் உணர்வு நிலையை பிரதிபலிப்பதுதான். உங்களுடைய இஷ்ட தெய்வங்கள் பற்றிய பக்தியுணர்வுகள் எப்போதுமே மிக வலிமையானவை.

அதனால் குருவைப் பார்க்கும் போது, குருவின் தியான சக்தியில் உங்கள் பக்தியுணர்வு மட்டுமே பிரதிபலிக்கப்படுகிறது. உங்களுடைய இஷ்ட தெய்வத்தின் உருவம் உங்களுக்கு மட்டும் தெரிகிறது.

வேறொருவருக்கு அதே நேரத்தில் அவரின் இஷ்ட தெய்வம் தெரிகிறது”.

✸” இந்த தியானத்தில் என்னால் முழுமையாக ஈடுபடவே முடியவில்லை. தலைவலி தொடர்ந்து என்னை இம்சித்துக் கொண்டேயிருந்தது”.

குமார்
( ஓக்லஹாமா
அநட-ல்)