வாழ்வில் வளம் பெற
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நம் உடலில் மொத்தம் ஏழு சக்கரங்கள் இருக்கின்றன. இதில் ஏழாவது சக்கரமான சஹஸ்ராரம் நம் தலையின் உச்சியில் அமைந்திருக்கிறது.
எல்லா சக்கரங்களையும் இயக்குகிற சக்தி இந்த சக்கரத்திற்கு இருக்கிறது. எனவே உச்சந்தலையில் இருக்கிறது.
✦ நன்றி மறந்து செயல்படும்போது இந்தச் சக்கரம் மூடி விடுகிறது.
✦ நன்றியோடு எந்தக் காரியத்தையும் செய்யும் போது இந்தச் சக்கரம் திறந்து கொள்கிறது.
✦ பீனியல் சுரப்பியோடு (டங்ய்ண்ஹப் எப்ஹய்க்) நேரடியாக தொடர்பு கொண்டிருக்கும் இந்த சக்கரம் நன்றி உணர்வோடு சம்பந்தப்பட்டது.
✦ நன்றியுணர்வும் திருப்தியும்
- சஹஸ்ரா சக்கரத்தின் திறவுகோல்.
நன்றியற்ற மந்தஉணர்வும், அதிருப்தியும்
- சஹஸ்ரார சக்கரத்தின் தடைக்கல்.
இந்த சக்கரத்தைத் திறக்க ஒரு தியான முறை உண்டு. இஸ்லாம் மதம் கொடுத்த பல அரிய பரிசுகளில் ஒன்று சூபி தத்துவம்.
அந்தத் தத்துவத்திலிருந்துதான் சஹஸ்ரா சக்கதரத்திற்குரிய தியானம் எடுக்கப்பட்டிருக்கிறது.
ஒரு சின்ன சூபி கதை :
ஒரு சூபி ஞானி காலையில் எழுந்ததும் இறைவனுக்கு நன்றி கூறுவதைக் கடமையாகக் கொண்டிருந்தார்.
காலையில் எழுந்து தினமும் பிரார்த்தனை கூட செய்ய மாட்டார். கடவுளுக்கு நன்றி சொல்வார். அவ்வளவுதான்.
" இறைவா!ஒரு நாள் இரவு முழுவதும் என்னைக் கவனத்தில் எடுத்து காத்துக் கொண்டாயே! நன்றி.
இன்று, கண்திறந்தேன். அற்புதமான நாள்! நன்றி. பொழுது விடிந்துவிட்டது நன்றி!. இன்னும் சுவாசிக்கிறேனே நன்றி.!
இப்படி ஒவ்வொரு சின்ன விஷயத்திற்காகவும் இறைவனிடம் சூபி ஞானி நன்றி சொல்லச் சொல்லச் சொல்ல, சீடர்களும் நன்றி சொன்னார்கள்.
வழக்கம் போல அவரின் சீடர்கள் குருவோடு சேர்ந்து யாத்திரையை தொடர்ந்தார்கள்.
இஸ்லாமியத்தின் ஒரு பகுதிதான் சூபி தத்துவம். என்றாலும், சூபி ஞானிகளுக்கு பெரிய அளவில் மரியாதை கிடையாது. உணவு தர மாட்டார்கள்.
ஒரு நாள் ஒரு ஊரில் சாப்பாடு கிடைக்கவேயில்லை. மறுநாள், அடுத்த ஊர் சென்றார்கள்.
அந்த ஊரிலும் உணவு கிடைக்கவில்லை. மூன்றாவது நாளும் அதே நிலை நீடித்தது, உவ்வு கிடை க்கவில்லை.
ஆனால், தினமும் அந்த ஞானி இறைவனிடம் பகல் முழுவதும் வழி நடத்தியதற்கும், நன்றாக பொழுது விடிந்ததற்கும் நன்றி கூறாமல் இருப்பது இல்லை.
நான்காவது நாளும் அவர்களை ஓர் ஊரில் கூட தங்க விடாமல் விரட்டி அடித்தனர். அன்று வேறு வழியில்லாது ஒரு சுடுகாட்டில் படுத்துக் கொண்டார்கள்.
நான்கு நாட்கள் பட்ட அவஸ்தைகளால் சீடர்கள் நொந்து போனார்கள். பசியின் அகோரம் அவர்களை தூங்க விடவில்லை.
ஐந்தாம் நாள் காலையும் சூபி ஞானி கல்வுளுக்கு நன்றி கூற ஆரம்பித்தார்.
ஆனால், சீடர்களோ நன்றி சொல் மறுத்தனர் மறுத்ததோடு நில்லாமல் தங்களுடைய வெறுப்பை உமிழ ஆரம்பித்தார்கள்.
"மூன்று நாளாக உணவு இல்லை. நான்காம் நாள் தங்கவும் இடம் இல்லை. இன்று என்ன ஆகுமோ தெரியவில்லை. ஏன் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும்?" என்று கேட்டனர்.
ஞானி சிரித்துக் கொண்டே கூறினார் : "மூன்று நாள் இறைவன் உணவளிக்காததிற்காக இவ்வளவு கவளைப் படுகிறீர்களே நமக்கு முப்பது வருடங்களாக தொடர்ந்து உணவு வழங்கியுள்ளாரே!
ஒரே ஒரு நாள் தங்க இடம் தரவில்லை. ஆனால் முப்பது வருடம் இந்த உலகத்தில் தங்கியிருக்கின்றோம்.
முப்பது வருடம் காத்தவனுக்க இந்த மூன்று நாட்கள் பற்றி தெரியாதா என்ன!
முப்பது வருடம் காத்ததற்காக இன்றிலிருந்து நன்றி சொல்ல ஆரம்பித்தாலே நம் நன்றிக் கடன் தீர முப்பது வருடமாகும். நடுவில எங்கிருந்து வந்தது இவ்வளவு வெறுப்பும், கோபமும்" எனக் கேட்டார்.
வாழ்க்கையில் இயற்கை நமக்கு எல்லா விஷயமும் கொடுத்து இருந்தாலும் அதிருப்தியே நம்மில் பலரிடம் இருக்கிறது.
அதிருப்தி பிறந்ததற்கான காரணம் நன்றியுணர்வு என்னும் பெரிய தியான முறையை மனிதன் மறந்து போனது தான்.
நம் வாழ்வில் சரியாக யோசனை செய்து பார்த்தால் புரியம் . இந்த வாழ்க்கைகயே கடவுள் கொடுத்த பரிசு தான்.
யாராவது கைலாயத்தில் இருபத்தைந்து வருடம் வேலை செய்து விட்டு, சம்பளமாக இந்த வாழ்க்கையை வாங்கி வந்தோமா என்ன?
" இறைவா! உன் தோட்டத்தில் உனக்கு நிறைய சேவை செய்து விட்டேன். இருபத்தைந்து வருட சம்பளமாக எனக்கு உலக வாழ்க்கையை பரிசளி!" என்று கேட்டு வாங்கி வந்தோமா?
சம்பளமாக இல்லை. அன்பளிப்பாகத்தான் நமக்கு இந்த வாழ்க்கை தரப்பட்டது. அதனால்தான் அழ்ன் மதிப்பு புரியவில்லை.
மதிப்பு புரியாமல் போனதில் விளைவே சொர்க்கமாக உலகைக் கொண்டாடாமல், நரகமாக்கி அதிருப்தியால் கஷ்டப்படுகிறோம்.
"பெருமாளே, நீ மட்டும் வைர மோதிரம் போட்டுள்ளாயே எனக்கு இல்லையா?" என்று உரிமையாக கேட்கிறோம்.
ஆனால், நமக்கு விரல்களைக் கொண்டத்ததற்கு என்றாவது நன்றி கூறியிருக்கிறோமா?
மோதிர விரலுக்கு நன்றி கூறுவது இல்லை. ஆனால் வைர மோதிரத்துக்கு இறைவனிடம் அப்ளிகேஷன் போடுகிறோம். கேட்கும் போது விலாவாரியாக கேட்கிறோம். பேரம் கூட செய்கிறோம்.
லாட்டரி டிக்கெட்டில் ஐந்து கோடி ரூபாய் விழுந்தால் ஒரு கோடி ரூபாய் உன் உண்டியலில் போடுகிறேன் என்கிறோம். அதில் உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் ஒரு கோடி ரூபாயை நீயே எடுத்துக் கொண்டி மீதம் நான்கு கோடி ரூபாயையாவது எனக்குக் கொடு என்கிறோம்.
விவரம் தெரிந்த நாள் முதல் வெளியே கேட்டே பழகிய நாம் உள்ளே உள்ளத்தால் நன்றி சொல்ல மறந்துவிட்டோம்.
வாழ்க்கையை வரப்பிரசாதமாக நமக்கு தந்த பிரபஞ்ச சக்தியோடு ஒரு நன்றிபூர்வமான வாழ்வை நாம் வாழ்வதே இல்லை.
மேலும் நம்முடைய மடமனம் அடுத்தடுத்து எதுவும் கிடைக்க வில்லை என்றால், வாழ்க்கையே வீண் என்பது போல உணரும். எதாவது கிடைத்துவிட்டால் இவ்வளவு தானே என்று நினைக்கும்.
ரமண மகரிஷி அற்புதமாக ஒரு சுலோகம் சொல்வார்.
" கிடைக்கும் முன் கடுகேயானாலும்
மலையாக்கிக் காண்பித்து
கிடைத்த பின் மலையேயானாலும்
கடுகாக்கிக் காண்பிக்கும் - மடமனம்!"
நம்முடைய மனதில் இயல்பே எவ்வளவு கிடைத்தாலும் அதை அனுபிக்காமல் அடுத்து, அடுத்து என்று பெரிய விஷயங்கள் நோக்கியே ஆசையை திசை திருப்பி விடும்.
எதிர்பார்த்ததடி கிடைத்துவிட்டாலும், எதிர்பார்த்தது கிடைத்த உல்ன் அது மிகச் சாதாண ஒன்றாக மனம் காட்டும். நாம் அதிருப்தியில் மீண்டும், மீண்டும் விழுவோம்.
நமக்கு எது கிடைத்துவிட்டாலும் அதனைத் திருப்தியாக ஏற்றுக் கொள்ளும் முன்னரே அடுத்து என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுகிறோம்.
இந்தப் பிரபஞ்சமே நமக்கு சொந்தரமாக இருக்கிறது.
ஆனால், அதை நம்மால் உணர முடியாததற்குக் காரணம், அந்த உண்மை தெரியாமல் இருப்பதினால்தான்.
இந்த பிரபஞ்சம் நம்முடைய என்கிற உணர்வு நம்மிடம் இல்லை. வேர்ப் பிடிப்பு இல்லை.
திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போன குழந்தை மாதிரி மனதளவில் எதையோ தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.
நாம் பிறந்தது முதல் நமக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் இருக்கும் உறவைப் பற்றி யாரும் நன்க்குச் செ ால்லித்தரவில்லை.
அதனால் பிரபஞ்ச சக்தி மீது நன்க்கு நம்பிக்கையோ, பிடிப்போ இல்லாது போய்விட்டது.
பிரபஞ்ச சக்தியின் மீது நாம் அக்கறை காட்டவில்லை என்பதறகாக அது நம்மைக் கவனிக்காமல் போய்விடுமா?
இதுநாள் வரை நமக்களித்த உணவுப் பொருட்களை அது தொடர்ந்து அளிக்காமல் போய்விடுமா?
நிச்சயம் அப்படிச் செய்யாது. கல்லுக்குள் இருக்கும் தேரைக்குங்கூட கருணை காட்டுவதுதான் பரம்பொருளின் சக்தி.
ஒரு சிறிய கதை :
ஒரு தபஸ்வி பாலைவனத்தில் குடில் அமைத்து தாஸ் செய்து கொண்டிருந்தார். ஒரு இரவு ஒரு இளைஞன் குடிலின் கதவைத் தட்டினான்.
"இன்று இரவு மட்டும் இங்கு தங்கி நாளை காலை எழுந்து போகிறேன்" என்று தபஸ்வியிடம் உதவி கேட் டான்.
தபஸ்வியும் அதை ஏற்றுக் கொண்டு இருக்கச் சொன்னார்.
மறுநாள் காலை அவன் கிளம்பிச் சென்றுவிட்டான். அதன் பிறகு அங்கே வந்தத காவலர்கள், "திருடன் ஒருவன் நேற்றிரவு இங்கே வந்து தங்கினானா?" என்று விசாரித்தார்கள்.
நேற்றிரவு தங்கியிருந்தவனின் அடையாளங்களை தபஸ்வி கூற, "ஆம், அவன்தான் அந்த திருடன்" என்று கூறிவிட்டு காவலலர்கள் திருடனைத் தேடிச் சென்றார்கள்.
இதைக் கேட்டதும் தபஸ்விக்கு குற்ற உணர்ச்சி தாளவில்லை.
" போயும், போயும் ஒரு திருடனைத் தங்க வைத்து சாப்பாடும் அளித்திருக்கிறேனே!" என்று நொந்து போனார். தான் செய்த தவறுக்காக அல்லா முன்பு மண்டியிட்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.
தபஸ்வி அழுது கொண்டிருந்த சமயத்தில் அதே நேரத்தில் வேறு யாரோ சத்தம் போட்டு அழுவதைக் கட்டேடு கண் விழித்தார். அழுதது வேறு யாருமல்ல, தற்ஸ்வி அழுவதைப் பார்த்து அழுதது அல்லாவேதான்.
" ஓ! அல்லாவே, நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?! என்று அல்லா பதில் சொன்னார் : ஒரே ஒரு வேளை அந்த திருடனுக்கு தங்க இல்லம் கொடுத்து உணவு கொடுத்ததற்கே நீ அழுகிறாய்.
அல்லா பதில் சொன்னார் : "ஒரே ஒரு வேளை அந்த திருடனுக்கு தங்க இடம் கொடுத்து உணவு கொடுத்ததற்கே நீ அழுகிறாய்.
ஆனால் பல வருடங்களாக அவனுக்கு உணவு, உடை, உறைவிடம் கொடுத்திருக்கிறேன். நான் என்ன செய்வது?
ஒருவேளை உணவும், தங்குமிடமும் தந்தது பாவம் என்றால் பல வருடம் இரண்டையும் நான் அளித்தது எவ்வளவு பெரிய பாவம்? நீ பாவி என்றால் நான் மகா பாவிதானே! அதனால்தான் அழுகிறேனேப்பா" என்று அல்லா சொன்னார்.
நல்லவனோ, கெட்டவனோ எல்லோருக்கும் பிரபஞ்ச சக்தி எல்லா வரங்களையும் அளித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இதுதான் சத்தியம்.
இதுதான் நித்தியம்.
உண்மை தெரியாத மனிதன் நன்றியுணர்வு மறந்து செயல்பட்டுவது அவனது உலகவாழ்ககை என்றும் நாட கத்தில் இன்னும் சில வேடிக்கைகளை சேர்த்து விடுகிறது. துக்கப்பட ஆரம்பித்துவிடுகிறான்.
ஒரு சிறிய கதை :
ஒரு தேவாலயத்தில் புதிய கட்டிடம் ஒன்று கட்ட முடிவெடுத்தார்கள். அந்த தேவாலயத்திற்கு வரும் ஒரு பெரிய வியாபாரி, "புதிய கட்டிடம் கட்டுவதற்கான நன்கொடை முதலில் நான் தந்ததாக இருக்க வேண்டும், அதுவும் நான்தான் அதிகம் கொடுத்ததாக இருக்க வேண்டும்" என்ற முடிவில்...
2 மில்லியன் டாலருக்கு ஒரு செக் எழுதி எல்லோருக்கும் முன்பாக பாதிரியாரிடம் கொடுத்தான்.
செக்-ல் 2 மில்லியன் டாலர் எழுதியிருப்பதை பாதிரியார் படித்துவிட்டு, "சரி, நான் இதை ஏற்றுக் கொள்கிறேன்" என்றார் வெகு இயல்பாக.
பாராட்டையும், அவைப் புகழ்ச்சியை எதிர்பார்த்த வியாபாரிக்கு பாதிரியாரின் செயல் கோபத்தைக் கிளப்பியது.
பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு நன்றியாவது கூறியிருக்கலாம். இவ்வளவு பெரிய தானத்தை ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளவில்லையே என்ற வேதனையில் வியாபாரி, "அந்த செக் 2 மில்லியன் டாலருக்கானது" என்றார்
பாதிரியார், "ம்ம்...நான் அதை பார்த்தேன்!" என்றார்.
வியாபாரி, "நான் பெரிய வியாபாரிதான்; இருந்தும் 2 மில்லியன் டாலர் தானம் செய்வது மிகப் பெரிய விஷயம் என்று நான் நினைக்கிறேன்".
பாதிரியார் சிரித்துக் கொண்டே, "நான் அதற்கு நன்றி கூற வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள், சரியா?"
வியாபாரி, "ஆமாம், ஆமாம் நீங்கள் அதைத்தானே செய்திருக்க வேண்டும்".
பாதிரியார் சிரித்த முகத்தை கடினமாக்கி, "ஒருவேளை உன்னுடைய தானத்தை ஏற்றுக் கொள்ளாமல் நீயும் உன் தானமும் என்று கூறி தூக்கி எறிந்திருந்தால்!"
வியாபாரி, இந்த மாதிரி பதிலை எதிர்பார்க்காததால் உள்ளுக்குள்ளே தடுமாறி விட்டார்.
பாதிரியார், "முறைப்படி பார்த்தால், உன்னை அவமானப் படுத்தாமல் அத்தனை பேர் முன் உன்தானத்தை நான் ஏற்றுக் கொண்டதற்காக நீதான் முதலில் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்.
நீ ஏன் எனக்கு நன்றி சொல்லவில்லை.
யோசி!
அப்படியாவது உன் அகந்தை அழியட்டும்" என்று கடினமாக பேசிவிட்டு பாதிரியார் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
அன்று முழுவதும் யோசித்த வியாபாரிக்கு ஒவ்வொன்றாக புரிந்தது. தான் நன்றியுணர்வு இல்லாமல் தவறாக வாழ்நத ஒவ்வொரு மகத்தான நிமிடங்களும் நினைவுக்கு வந்தது. கண்ணீர் பொங்கியது.
தான் தவறை உணர்வதற்காகத்தான் பாதிரியார் அவ்வளவு கோபமாக நடந்து கொண்டார் என்ற உண்மையும் புரிந்தது.
அன்றிலிருந்து தான் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் மற்றவர்களையும் முழுமையாக மதித்து வாழக் கற்றுக் கொண்டார். வாழ்க்கைத் தத்துவத்தை ஏற்று கொண்டார்.
✦ உண்மையான காதலன், தன் காதலிக்கு நல்ல பரிசு பொருள் வாங்கி கொடுத்ததை விடவும், அதை தன் காதலி ஏற்றுக் கொண்டாளே என்பதற்காகத்தான் அதிகம் மகிழ்வான்.
✦ உண்மையான மனைவி, தன் கணவனுக்கு இன்று மிக ருசியாக சமைத்துப் போட்டேன் என்று பெருமைப்படுவதை விட, தன் கணவன் அந்த உணவை எவ்வளவு தூரம் ருசித்து சாப்பிட்டார், எப்படி அதை ஏற்றுக் கொண்டார் என்பதைப் பற்றித்தான் அதிகம் சந்தோஷப்படுவாள்.
✦ உண்மையாக தானம் செய்பவனும் தான் செய்த தானத்தை நினைத்து பெருமை பேசுவதை விட, என் தானத்தை ஏற்றுக் கொண்டார்களே, எனக்கும் தானம் செய்ய வாய்ப்பு கிடைத்ததே என்று கூறி சந்தோஷப்படுவான்.
மேற்கூறிய மூன்று நபர்களிடமு; பொதுவாக ஒரு உணர்வு இருக்கிறதே, அதைக் கண்டுபிடித்து விட்டீர்களா?
ஆம்! அது நன்றி உணர்வுதான்.
மனிதன் தன் சாதனைகளை நினைத்து கர்வப்படாமல் அதே நேரத்தில் சந்தோஷமாக சாதனைகளை அனுபவிக்க உதவும் ஒரு அருமையான உணர்வுதான் நன்றி உவர்வு.
''நன்றி உணர்வோடிருத்தல்'' - இது மிகச் சிறந்த தியான முறை.
ஒரு சாதாரண குண்டுசியில் இருந்து நாம் சாப்பிடும் உணவு வரை எவ்வளவு மனிதர்கள், அவை நம் கைக்கு கிடைப்பதற்காக தங்கள் இரத்தத்தையும், சக்தியையும் உழைப்பாக்கியிருக்கிறார்கள்.
ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். கடையில் நீங்கள் பொருட்களை பெறுவதற்காக கொடுக்கும் பணம், அவர்களுடைய உழைப்பை நிச்சயம் ஈடுசெய்ய முடியாது. சிலருக்கு இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும்.
ஆனால் நான் கூறப் போவதை மறுக்க முடியாது.
நீங்கள் பிறக்கும்போது உங்கள் தாய்க்கு மருத்துவ உதவி செய்த மருத்துவச்சிகள் கருணையை எண்ணிப் பாருங்கள்.
கருணை மறந்து வெறும் கடமைக்காகவும், காசுக்காகவும் அவர்கள் செயல்பட்டிருந்தால் உங்கள் கையோ, காலோ முடமாகி இருக்கலாம்.
பச்சிளம் குழந்தையாக பிறந்த உங்கள் மீது அவர்கள் அன்று காட்டிய கருணைக்கு இன்று நீங்கள் எதைப் பதிலாக திரும்பத் தர முடியும்? அவர்கள் யார் என்று முகம் கூட உங்களுக்குத் தெரியாது.
முகம் தெரியாத உங்களை பரிவோடு பார்த்து, பராமரித்து, எந்தக் குறைபாடும் நேராமல் பாத்துக் கொண்ட மருத்துவச்சிகளின் தொழில் நேர்மைக்கும், மனதை நேயத்திற்கும் எதை நாம் பதிலாக திரும்பத் தர முடியும்.
ஒரு வேளை அவர்களை திரும்பவும் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தால் கூட நம்மால் பதிலாக எதையுமே தர முடியாது. அதிகபட்சம் நன்றியுணர்வை அவர்களுக்கு காணிக்கையாக்க முடியும்.
அதேபோல் குண்டூசியில் இருந்து, கோதுமை மாவு வரை ஒவ்வொன்றும் உங்களுக்கு கிடைக்க காரணமாக இருந்த மனிதர்களுக்கு பணம் ஈடல்ல. நன்றியுணர்வுதான் அவற்றிற்கு ஈடாக முடியும்.
''சரி, சரி நீங்கள் கூறுவதெல்லாம் ஒ.ஒ. தான். இந்த நன்றியுணர்வை கடைப்பிடிப்பதால் எனக்கென்ன பயன்?'' என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்.
நன்றியுணர்வை வாழ்வில் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் பலன்களைச் சொல்கிறேன்.
உங்களுக்குப் பிடித்திருந்தால் இந்த நன்றியுணர்வை வாழ்வில் இன்று முதல் கடைப்பிடிக்க ஆரம்பியுங்கள்.
பலன்கள் :
★ கர்வம் தலை தூக்காது.
★ கர்வம், அகந்தையால மற்றவர்களை மனதளவல் துன்புறுத்த, தானும் துன்புறும் கொடுமை அரங்கேறாது.
★ முகம் பொலிவடைய ஆரம்பிக்கும். நன்றியுணர்வு வெளிப்படும் போது உங்களையும் அறியாமல் முகத்தில் இறுக்கம் தளர்ந்து, குதூகலம் பிறக்க ஆரம்பிக்கும்.
★ உறவுகளை கவர்வது சுலபம். கிட்டத்தட்ட எல்லா மனிதர்களும் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது நன்றி உணர்வைத்தான். மற்றவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ஒரு விஷயம் உங்களிடம் இருந்தால் உறவுகளைக் கவர்வது வெகு சுலபம்.
★ நன்றியுணர்வு ஒரு சுகமான உவர்வு. அதை நடைமுறைப்படுத்தக் கற்றுக் கொண்டால் சுகம் உங்கள் கையில்.
நன்றியுணர்வை நடைமுறைப்படுத்திப் பார்த்தால் உவர்வு ரீதியாக மேற்கூறிய அனைத்தும் உண்மை என்பது புரியவரும்.