சஹஸ்ரார தியானம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சஹஸ்ராத தினம் சூஃபி மதம் உலகிற்கு வழங்கிய நன்கொடை. இந்த தியானம் நன்து பீனியல் சுரப்பியை உற்சாகப்படுத்தும். சஹஸ்ராத தியானத்தை இரண்டு விதமாக செய்யலாம்.
முதலில் சஹஸ்ரார சக்கரத்தை எப்போதும் முழு இயக்கத்தில் வைத்திருக்கும் நன்றியுணர்வை நடைமுறைப்படுத்துவது.
நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் நமக்கு உதவியவர்கள், உதவிக் கொண்டிருப்பவர்கள் என அனைவருக்கும் நன்றி செலுத்துங்கள்.
உதாரணம் நீங்கள் செல்லும் பேருந்தின் ஓட்டுனர்.
உடன் வருபவர்.
உங்கள் வாகனத்தின் மீது மோதாமல் சென்ற வாகனங்கள்.
பேருந்து என்ற ஒன்ற உருவாவதற்க காரணமாணவர்கள் என வரலாற்றிற்கும் நன்றி செலுத்துங்கள்.
நன்றியுணர்வு உங்கள் குணநிலையின் ஒரு பகுதியாக மாறிவிட்டால் உற்சாகம் உங்களை விட்டு அகலாது. அதிருப்தி உங்களை நெருங்கவே நெருங்காது.
திருப்தியான வாழ்வு வாழ நன்றியுணர்வை நடைமுறைப்படுத்துவதுதான் எளிய வழி.
அடுத்து, குருவின் வழி நடத்துதல்படி நாம் கருவாக உருவானது முதல் இன்று வரை நடந்த ஒவ்வொன்றுக்கம் முறையாக ஒரு மணி நேரம் நன்றி தியானம் செய்வது.
சஹஸ்ரார தியானத்தை ஆனந்த ஸ்பூரண தியான முகாமகளில் தியான பீட ஆச்சாரியர்களிடமிருந்து முறையாக நீங்கள் கற்று பயன்பெறலாம்.
கஹஸ்ரார தியானம் மனித குலம் மறந்து போன ஒன்றை நினைவுப்படுத்தும் ஒரு அற்புதமான தியானமுறை.
தியான அனுபங்கள்...
✸ " சுவாமிஜி நன்றியுணர்வு இவ்வளவு நல்ல சுக உணர்வு தரும் என்பது இதற்கு முன் எங்களுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் வாழ்பவை மிக அருமையா அனுபித்திருப்போம்".
- ஆனந்தி ( சியாட்டல் அநட -ல்)
"இழந்த வருடங்களை நினைத்து கவலைப் படாதீர்கள் இனி வரப் போகும் வருடங்களை முழுமையாக பயன்படுத்துங்கள்.
ஒரே ஒரு நாள் முழுமையாக ஆனந்தமாக வாழ்வதே போதுமானது. அதுவே ஒட்டுமொத்த துக்கங்களையும் எர்த்துவிடும்".
- “தியானம் செய்யும் போது அடிக்கடி கொட்டாவி வருவது ஏன்?”
பாலச்சந்தர்
( பிடதி அநட
-ல்)
“ உடலில் பிரான, வியான, அபான, உதான, சமான என ஐந்துவிதமான வாயுக்கள் உடலில் இருக்கிறது.
இன்றைய மனிதனுக்குள் இந்த வாயுக்கள் இடம் மாறியிருக்கின்றன.
தியானம் செய்யும் போது உடலில் இடம் மாறி இருக்கும் வாயுக்கள் உடலை விட்டு வெளியேறும்...
அதன் வெளிப்பாடுதான் ஆவியாக வெளியேறும்”.
“ பொதுவாக தியானம் செய்யும் போது எனக்கு தூக்கம் வருகிறது. இது ஏன்? மற்றவர்களிடம் இது பற்றிக் கூறினால் சிரிக்கிறார்கள்”.
அனுநிதன்
( ஜான்உஸே அநட-
ல்)
“நன்க்subject...
தமஸ்,
ரஜஸ்,
சத்வம் - என்ற மூன்று குணங்கள் இருக்கிறது.
ரஜோ குணம் பரபரப்பையும்,
தமோ குணம் மந்தத் தன்மையையும் வெளிப்படுத்தும்.
சத்வகுணம் ரம்யமான அக உணர்வில் தொடர்ந்து இருக்கச் செய்யும்.
நமக்குள் சத்வ குணத்தை மலரச் செய்வதே தியானத்தின் முக்கியமான குறிக்கோள்.
மந்தத்தன்மையை ஏற்படுத்தும் தமோ குணத்தை வெளித் தள்ளுவது தியானத்தின் முதல் கட்ட வெளிப்பாடு.
தமோ குணத்தால் அதிகமான பீடிக்கப்பட்டிருப்பவர்கள் சில தியானத்தின் போது திடீரென தூக்க உணர்வு அதிகமாவதை உணரலாம்.
இவ்வளவு நேரம் உற்சாகமாக இருந்தவர்கள் தியானத்தில் ஈடுபடும்போது தூக்கம் வருவது போல் உணர்வதுதான் தமோ குணம் வெளிப்படுகிறது என்பதற்கான ஆதாரம்.
தொடர்ந்து தியானம் செய்ய செய்ய சில நாட்களுக்குள் மந்தத் தன்மையைத் தரும்தமோ குணம் தியான ச க்தியால் முழுமையான எரிக்கனப்பட்டுவிடும். எல்லா சரியாகிவிடும்.
தூக்கத்தை விழிப்புணர்வோடு எதிர்கொள்ளுங்கள்”.
★ “சஹஸ்ரார தியானம் செய்யும் போது என்னுடைய உச்சந்தலை மட்டும் துடித்தது. அங்கிருந்து உடல் முழுவதும் இனம் புரியாத ஒரு இன்ப உணர்வு என்னை வருடி வருடி ஊடுருவியது.
போதும்! போதும்! என்று என்னும் அளவுக்கு அந்த இன்ப உணர்வு என்னை ஆட்கொண்டது''.
-
தமிழரசன்
( திருவண்ணாமலை அந்
-ல்)
“நல்ல அனுபவம்.
இதைத் தாண்டிய பல ஆச்சரியங்கள் உள்ளேக் காத்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து முன்னேறுங்கள்!''
★ “ தியானத்தில் அமர்ந்ததும் மனதில் எண்ணங்கள் அதிகமாகி விடுகிறது. என்னால் எண்ணங்களை கட்டுப்படுத்த முடியல. மனதை அடக்க நான் என்ன செய்ய வேண்டும்?''
- லெச ஷ்மி மூர்த்தி ( தேவனஹல்லி அந் - ல்)
“எண்ணங்கள் என் கட்டுப்பாட்டில் இல்லை என கூறுவதே நீங்கள் ஆன்மீகத்தில் வளர ஆரம்பித்து விட்டீர்கள் என்பதை அறிகுறி.
தியானத்தில் எண்ணங்கள் அதிகமாகாது.
தியானத்தில் அமர்ந்ததும் எண்ணங்கள் அதிகமாவது போன்று தெரியும்.
காரணம் அப்போதுதான் முதல் முறையாக உங்கள் எண்ணங்கள் நீங்களே சந்திக்கிறீர்கள்.
கண்விழித்திருக்கும் போது நம் கவனத்தில் நம் எண்ணங்கள் இருப்பதில்லை.
கண்மூடி நம் கவனத்தை விழிப்புணர்வு எண்ணங்கள் மீது திருப்பும் போதுதான் எண்ணங்கள் ஆடும் ஆட்டம் நமக்குத தெரிய வருகிறது. அது நமக்கே அந்த ஆச்சரியத்தைத் தருகிறது.
அடுத்து,
மனதை அடங்க வேண்டாம். மனதை அடக்க முடியாது -எனவே மனதை அடக்க கூடாது. தானாய்,இயல்பாய், மனமானது அடங்க வேண்டும்.. எண்ணங்களை அதன் போக்கில் விட்டுவிடுங்கள்.
சத்தம் போட்டு களேபரம் செய்து கொண்டிருக்கும் குழந்தைகள் ஆசிரியையின் பார்வை பட்டதும் அமைதியாவது, நமது விழிப்புணர்வும் கவனமுமே நம் மனதைக் சாந்தப்படுத்திவிடும்.
குழந்தைகள் தாமாய் அடங்க வேண்டும். குழந்தைகளை அடக்க நினைத்து ஏதாவது செய்துவிட்டால் குழந்தை சத்தம் போட்டு அழச் செய்யும் அடங்காது.
மனமும் அப்படித்தான்.
மனதை அடக்க முயன்றால், மனம் இன்னம் கொஞ்சம் திமிரவே முயலும்.
தியானம் செய்யுங்கள்!
சாட்சி மாத்திரமாக பாருங்கள்!
விழிப்புணர்வோடு இருங்கள்!
மெல்ல மெல்ல எண்ணங்கள் ஓய ஆரம்பிக்கும். மனம் சாந்தமடையும்”.
✶ “நன்றி! நன்றி! சுவாமிஜிக்கு நன்றி!
இந்த இரண்டு நாட்களுக்குள் எங்களை புதுப் பிறவியெடுக்க வைத்த தெய்வப்புதல்வனுக்கு நன்றி!
ஆனந்தம் என்ற வார்த்தையை எங்களுக்கு அனுபமாக்கிய ஆன்மீகச் செம்மலுக்கு நன்றி!
அநட பற்றி இவ்வளவு புகழ்கிறானே என் நண்பன் அப்படி அதில் என்னதான் இருக்கிறது ? என சோதி த்தறிவதற்காக வந்தவன் வார்த்தையிழந்து நிற்கிறேன்...
என்ன சொல்லி எனக்கு கிடைக்க தியான அனுபவத்தைச் சொல்ல!!!
நன்றி என்ற வார்த்தையை மட்டும் சொல்லி என் ஆனந்தத்திற்கு நானே முற்றுப் புள்ளி வைக்க விரும்பவில்லை.
தொடர்ந்து தியானம் செய்து நீங்கள் அடைந்த நித்ய ஆனந்த நிலையை அடைவேன்”.
ராஜ்குமார்
( ஏற்காடு அநட -ல்)
(இதையெடுத்து,ஒரு ஞானியிடமிருந்து ஒரு மனிதன் பெறக் கூடிய மிக அற்புதமான நன்கொடையான சக்தி தரிசனம் என்னும் புனித நிகழ்வு முடிந்த பின் பரமஹம்ஸர் சொன்ன வார்த்தைகள்...)
“கவலை பகிரப்பகிர குறையும்.
ஆனந்தம் பகிரப்பகிர அதிகமாகும்.
நீங்கள் பெற்ற ஆனந்தத்தை, பார்ப்பவரிடமெல்லாம் பகிர்ந்து கொள்ளுங்கள். பெற்ற ஆனந்தத்தை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து தியானம் செய்யுங்கள்.
ஆனந்தமாக இருங்கள்!”.