தியான சக்தியின் மீதான
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி
பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்தரின் தியான ஞான வெளிப்பாடுகளை அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சிக் குழு பரிசோதி த்தது.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்பட வைத்த ஆராய்ச்சியின் முழு விபரமும் மனம் கடந்த நிலை என்ற புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
மருத்துவ ஆராய்ச்சி குழுவின் மிக முக்கியமான நபரான ஈழ். முரளி கிருஷ்ணா இந்த ஆராய்ச்சி பற்றி வெளியிட்ட இணையதள சான்றிதழை தமிழாக்கம் செய்திருக்கிறோம்.
✦ ஞானம் என்பது உண்மையா?
✦ஆனந்தம் என்பது சாத்தியமானாதா?
✦ மனமில்லாமல் மனிதன் வாழ முடியுமா?
✦ மனத்தை அதன் உணர்ச்சிகளை மனிதன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமா?
என்பன போன்ற பல கேள்விகளுக்கு ஈழ். முரளி கிருஷ்ணாவின் இணையதள கடிதம் பதிலளிக்கிறது...
M.I.N.D MATTERS
A Mind Matters Colum The Mind of a Mystic
By R. Murali Krishna , M.D. President, James L.Hall, Jr.Center for Mind Body & Spirt President, INTEGRIS Mental Health Oklahoma City, Okalahoma.
ஆரோக்கியமான தேகம் ; பளிச்சிடும் கண்கள் ; தோள்பட்டையில் எப்போதும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஜடாமுடி; அம்சமும் அமைதியும் நிறைந்த முக அமைப்பு; திறந்த மனதோடு தொடர்ந்து உற்சாகத்தை வெளியிடும் உற்சாக களஞ்சியம் - இந்த வர்ணனைகளுக்கு சொந்தக்காரரான ஸ்ரீ நித்யானந்த சுவாமி, சட்டென்று பார்க்கும் போது ஒரு அமெரிக்க கல்லூரி மாணவனைப் போல தோற்றமளிப்பார். ஆனால்...
மனதை ரம்யமாக்கும் காவி உடை ; மிருதுவான கம்பீரத்தை ஏற்படுத்தும் தலைப்பாகை, இதை ஒரு ச ாதாரண அமெரிக்க கல்லூரி மாணவனிடம் எதிர்பார்க்க முடியாது. அதற்கு மேல் ஒரு அமெரிக்க மாணவனிடம் சுவாமியை போல ஞானம் அடைந்திருப்பதையோ, பல இலட்சம் மக்களுக்கு இன்னல் தீர்க்கும் ஆன்மீக குருவாக இருப்பதையோ, எப்போதும் ஆனந்தத்தில் தான் இருந்து கொண்டு பலருக்கும் ஆனந்தத்தை அளிக்கும் ஞானியாக இருப்பதையோ கனவில் கூட எதிர்பார்க்க முடியாது.
ஙஹ்ள்ற்டீண்ப்ஸ்ரீ -ஞானி இந்த பெயர் சுவாமிக்கு நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியாகப் பொருந்தும். புகழ்பெற்ற கலாச்சாரங்களை பலவும் கூறுவது: ஞானி ஙஹ்ள்ற்டீண்ப்ஸ்ரீ என்றால் கடவுளோடு நேரடி தொடர்பு கொண்டிருப்பவர் அல்லது கடவுளோடு இயைந்துஇருப்பவர். இவர்களின் நிலையைப் புரிந்து கொள்ள முடியாது. ஆராய்ந்து அளக்க முடியாது.
ஞானிகள் உன்னதமான உண்மைகளை, சத்யங்களை எளிதில் கிரகித்து தெரிந்து கொள்ளும் சக்தி படைத்தவர்கள் ஞானிகளின் உருவத்தை நினைத்துப் பார்த்தாலே... நமக்குள் இருந்து ஆனந்தம் பொங்கினால் மட்டுமே இப்படி ஒரு சாந்தத் தன்மையை நாம் பெற முடியும்-என்று நாம் புரிந்து கொள்ள முடியும்.
ஞானி இருக்கும் இடம் சக்தியூட்டப்பட்டு அங்கு அமைதியும், சுகமும் நிலவும் என்று பலரால் ஒத்துக் கொள்ளப்படுகிறது.
இதுவரை நான் கொடுத்த வர்ணனைகள் 27 வயதே நிரம்பிய தென்னிந்திய சுவாமிக்கு நிச்சயம் பொருந்தும். ஆயிரக்கணக்கான மக்கள் வருடந்தோறும் சுவாமியை அணுகி தங்களின் தீர்க்க முடியாத நோய்களில் இருந்து விடுபட்டு குணமடைந்து செல்கிறார்கள்-இவ்வளவு மகத்துவம் பெற்ற சுவாமிகள் 17 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி, இந்தியாவின் பல ஆஸ்ரமங்கள், ஆன்மீக மையங்களுக்கு சென்று மபா உண்மைகளையும், வேத தத்துவங்களையும் முழுமையாகப் பயின்று- தியான முறையில் ஒரு தேர்ந்த வல்லுனராக மாறும் அளவிற்கு சிறந்த பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
சுவாமியின் உலக அமைதி சுற்றுப்பயணத்தில், ஒகலஹாமா நபரில், மருத்துவ குழு சார்பாக சுவாமியை அதி நவீன மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் அவரின் தியான ஞான நிலையை பரிசோதிக்க விடுக்கபட்ட அழைப்பை, புன்சிரிப்போடு ஏற்றுக்கொண்டு ஒத்துழைத்தார்.
தியானத்தின் சூட்சுமமான விளைவுகளை உலகிற்கு நிரூபித்து உணர்த்த வேண்டும் என்பது மாத்திரமே சு வாமியின் முக்கிய நோக்கம்.
விஞ்ஞானத்தால் மெய் ஞானத்தை நிரூபிக்கும் காலம் கனிந்திருக்கிறது என்பதை உணரும் சுவாமி, பரிசே ாதனையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பரிசோதனையில் அந்தந்த துறையில் அதிக அனுபவம் பெற்று பிரபலமடைந்த மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கு பெற்றனர்.
டாக்டர் போர்டைசி ருவ், டாக்டர் ஹிக்ஹின்ஸ் பங்கு பெற்றனர். டாக்டர் சாக்கோ ஆகியோர், சுவாமியின் பரிசோதனையில் குறிப்பிடத்தக்கபடி சுவாமியை பரிசோதித்த பின் இதுவரை தாங்கள் ஆராய்ந்து பதிவு செய்தது ச ாதாரணம்த, சராசரி என்று முடிவு செய்து வைத்திருந்த உண்மைகள், எல்லாம் பொய்யாகி அசாதாரணமாக முடிவுகள் சுவாமி மூலம் வெளிப்படுவதை ஒவ்வொருவரும் உணர்ந்தார்கள்.
நிச்சயமாக...
பரிசோதனையின் முடிவுகள் சாதனைகள்தான்.
பரிசோதனையின் முடிவுகள் சாதாரணம் அல்ல, அசாதாரணம்தான்.
மூளையின் செயலை நிழல்படம் பிடித்தல் (ஜம்ஹ்ஞ்ண்ய்ஞ் ஆழ்ஹண்ய் அபுரீற்ண்ஸ்ண்ட்ற்ஹ்)
முதல் வேலையாக பொசிசன் எமிஸன் டோமோ கிராபி (டர்எ்ண்ற்க்ணர்ய் உம்ண்ள்ள்ணர்ய் பர்ம்ர்ங்ழ்ஹல்ட்ஹ்) - பெட் சாதனம் (டங்ற்க்ங்ஸ்ண்ட்ரீங்) மூலம், சுவாமியின் மூளைக்கு நிகழும் நிகழ்வுகளை நிழல்படம் பிடித்து ஆராய்ந்து பார்த்தோம்.
ல - ழ்ஹஹ், இப நஸ்ரீஹய், ங்தஜ நஸ்ரீஹய் மூலமாக நம் உடலிற்குள் இருக்கும் எலும்புகள் மற்றும் உறுப்புகளை எப்படி நம்மால் நிழல் படம் பிடித்து ஆராய முடிகிறதோ, அதேபோல் மனித மூளையின் செல்களில் நமக்கும் வளர்ச்சிதை மாற்றங்களை துல்லியமாக படம் பிடித்துக் காட்டும் நவீன சாதனம்தான் பெட் சாதனம். பெட் டிரேசர் எனப்படும் கதிரியக்க தின்மத்தை உடலுக்குள் செலுத்தி ஆராய்வதின் மூலம் மூளையின் செயல்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.
பெட் டிரேசர் கதிரிக்க தனிமம் சுவாமியுடைய மூளையின் உச்ச இயக்க பகுதிகளை ஆராய்வதற்காக பயன்படுத்தப்பட்டது.
கண்கள் விழித்த உணர்வு நிலை.
தொடக்க தியான நிலை.
ஆழ்தியான நிலை-என்ற மூன்று நிலைகளில் சுவாமியின் மூளை இயக்கம் பற்றி பெட்ஸ்கேன் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டது.
ஆராய்ச்சியின் முடிவுகள் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியைக் கொடுத்தது.
பிரான்டல் கதுப்பில் ஆராய்ச்சியை துவங்கிய எங்களுக்கு ஆச்சரியம் தாளவில்லை. ஏனென்றால் கதுப்பின் இயக்கம் சாதாரண மனிதனை விட பல மல்ங்கு அதிகமாக இருந்தது. இப்படி பல மடங்குகள் அதிகமாக இருப்பது அதிசயத்திலும் அதிசயம். ஏனென்றால் பிராண்டல் கதுப்பின் இயக்கம் மனிதனின் புத்திசாலித்தனம், கவனம், அறிவு, தெளிவாக முடிவு எடுக்கும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தது. பல மடங்குகள் பிராண்டல் கதுப்பு இயங்கினால் - சுவாமியின் பத்திசாலித்தனம், கவனம், முடிவெடுக்கும் திறன், ஞானம் எவ்வளவு அபாரம் !!!
ஆரம்ப தியான நிலையிலிருந்து ஆழ்தியான நிலைக்கு செல்ல, சுவாமியை வேண்டிக் கொண்ட பிறகு பரிசே ாதனையில் மேலும் இரண்டு மெய்சிலிர்க்க வைக்கும் ஆதாரங்கள் கிடைத்தன.
ஒன்று, சுவாமியின் மூளை இயக்கத்தில் 90 % ஓய்வாக, அமைதியாக இருந்தது ஏதோ தன்னுடைய வேலைகளுக்கெல்லாம் டாட்டா சொல்லிவிட்டு இன்ப சுற்றுலா சென்ற செயலாளர் போன்று, சுவாமியின் மூளை எந்த வேலையும் செய்யாமல் மிக ஓய்வாக இருந்தது. உயிரோடும், உணர்வோடும் இருக்கும் சுவாமியின் மூளை மிக அமைதியாக, இயக்கம் இல்லாமல் இருந்தது. இந்த மூளை - அமைதி நிகழ்வு முழுக்க, முழுக்க சுவாமியின் கட்டுப் பாட்டிற்குள்தான் நிகழ்ந்தது. நாம் எங்கு இருக்கிறோம், எப்படி இருக்கிறோம் என்பதை நமக்கு விரிவாக தொடர்ந்து உவ்ர்த்திக் கொண்டே இருக்கும் மூளையின் ஒரியண்டேஷன் பகுதியும் மிக குறைந்த இயக்கத்தையே காட்டியது. இது ஒருவர் தன் உடல் வரம்பு எங்கிருக்கிறது, பிரபஞ்சம் எங்கிருக்கிறது ஒன்றாகக் கலந்து இருக்கிறார் என்பதை குறிக்கும் நிலை.
இரண்டாவது மெய்சிலிர்க்க வைத்த ஆதாரம் - சுவாமியின் மீஸியல் பிராண்டல் கதுப்பின் கீழ்பகுதியில் தெரிந்த ஒளிப் பிரவாகம் மீஸியல் பிராண்டல் கதுப்பின் கீழ்பகுதி மெய்ஞானம் கூறும் மூன்றாவது கண் சம்பந்தப்பட்ட இடம். இந்த இடம் இந்த அளவு ஒளிர்வது இதுவே முதல் முறை.
பரிசோதனை முடிந்த பின் சுவாமியிடம் "ஒளிப்பிரவாகம் தெரியும் போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டதற்கு "என்னுடைய மூன்றாவது கண்ணை திறந்து வைத்திருந்தேன்" என்று வெகு இயல்பாகக் கூறினார்.
பிரபஞ்ச ஞானம் மற்றும் உள் உலக அனுபவம் பற்றி விரிவாகக் கூறும் ஆன்மீக மார்க்கங்கள் இந்த மூன்றாவது கண்தான் ஆத்மாவின் இருப்பிடம் என்று கூறுகின்றன. ஆழ்நிலை தியானத்தின் போது இறைவனோடு தொடர்பு கொள்ள முடியும், இறைசக்தியோடு இரண்டற கலக்க முடியும் என்ற கூற்றுகளோடு சம்பந்தப்பட்ட பகுதி மூளையில் நிச்சயம் இருக்க வேண்டும். அதைத்தான் இருப்பு (நங்ப்remote ச்) என்று ஆன்மீக மார்க்கங்கள் கூற வேண்டும், அந்த பகுதியை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க "ஈ-எல்ார்ட்" நிச்சயமாக உதவும் என்பது என்னுடைய தீவிர நம்பிக்கை ; என் நம்பிக்கை வீண் போகிலவலை. நான் கூறும் ஈ-எல்ார்ட் என்பது மனிதன் எவ்வளவு இன்பம் அடைகிறான், ஆனந்தப்படுகிறான் என்பதை குறிக்கும் பகுதி என்று எடுத்துக் கொள்ளலாம், அல்லது டோப்பாமென் பகுதி (ஆனந்தத்தின் போது மனிதனுள் சுரக்கப்படும் வேதிப்பொருள்) அல்லது தெய்வீக தன்மையின் இருப்பிடம் என்று எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்.
இந்த ஈ-எல்ார்ட் -ல் இருந்து சிறு, சிறு அலகுகளில் சாதாரண மனிதன் சந்தோஷப்படும் போது டோப்பமைன் சுரக்கும். ஆனால், சுவாமியிடம் இந்த -ஐ ஆராய்ந்து பார்க்கும் போது கண்கிடமுடியாத அளவு டோப்பமைன் சுரந்து கொண்டே இருக்கிறது. தியானம் இந்த -ஐ தூண்டுகிறது என்று ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
மூளை அலைகளை அளத்தல்
இரண்டாவதாக சுவாமியின் மூளையை பரிசோதிக்க நாங்கள் பயன்படுத்திய முறை குவாண்டிடேட்டிவ் எலக்ட்ரோன் செபலோ கிராபி (ணனஹய்ற்ண்ற்ண்ஸ்ங் ங்ப்ஙஸ்ரீற்ழ்ர்ங்ய்ஸ்ரீங்ப்ர்ட்ப்ர் ஞ்ழ்ஹல்ட்ஹ் (ர்ழ்) அஉஉஎ). மூளையின் மின்சார சமிக்கைகளை உஉஎ மூலமாக அளக்க முடியும். இந்த சமிக்கைகளை பொதுவாக மூளை அலைகள் என்று அழைக்கிறோம்.
நான்கு வகைப்பட அலைக்கள, அவற்றின் அலை இயக்கம் அகல அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு அலையும் வெவ்வேறு வேகத்தோடு வெவ்வேறு மன நிலையோடு சம்மந்தப்பட்டவை.
உதாரணத்திற்கு பீட்டா -அலைகள் அலை அகலத்தில் சிறியவை, மனிதனின் விழித்துக் கொண்டிருக்கும் உணர்வு மனநிலை சம்பந்தப்பட்டவை, வேகமானவை. ஆல்பா -அலைகள் அலை அகலத்தில் பெரியவை, மனதின் சுகமான (ரம்யமான) மனநிலை சம்பந்தப்பட்டவை, பொதுவானவை 0 - அலைகள் விழித்து கொண்டிருக்கும் மன நிலைக்கும், தூக்க நிலைக்கும் இடைப்பட்டவை, வேகமான எண்ண ஓட்டங்கள் இல்லாமல் அமைதியாக இருக்கும் மனநிலை.
ஒரு பகல் பொழுதில் பெரும்பாலான மனிதர்களிடம் இந்த நான்கு அலைகளுமே வெளிப்படும். ஒரு அலையிலிருந்து மற்றொரு அலைக்கு (அலை அகல அடிப்படையில்) சுய கட்டுப்பாட்டினால் தாண்டிச் செல்வது என்பது மிகக் கடினமான ஒரு விஷயம்.
ண-உஉஎ பரிசோதனையிலிருந்து சுவாமி தன்னுடைய மூலை அலைக்ள மீது முழு சுயகட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறார் என்பது நிரூபனமாகிவிட்டது. ஒரு கைத்தேர்ந்த பியனோ கலைஞர் எப்படி ஒரு ராகத்திலிருந்து இன்னொரு ராகத்திற்கு இலகுவாக மாற முடியுமோ அதே போல் ஆழ்தியான நிலையில் இருக்கும்போது, சுவாமியின் இரண்டு வலது, இடது மூளைப்பகுதியும் அற்புதமான மனநிலையைப் பெற்றிருந்தன.
ஒரு மனநிலையிலிருந்து இன்னொரு மனநிலைக்கு மிக எளிதாக சுவாமியால் மாறிக்கொண்டே போக முடிந்தது.
ஒரு நிலையிலிருந்து இன்னொரு மனநிலைக்கு மனிதன் மாறுவதை ஊர்ஜிதப்படுத்தும் திரவங்கள் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் இலகுவாக மாறிக்கொண்டே போவதையும், தொடர்ச்சியான மாற்றத்தையும் காண முடிந்தது. ண-உஉஎ என்பது ஐந்து மூளை அலைகளை ஐந்து வர்ணங்களில் அளவைப்படம் பிடித்துக் காட்டும்.
ஒரு வர்ணத்திலிருந்து இன்னொரு வர்ணத்திற்கு சுவாமி மாறுவது ஒரு அழகான வானவில் உருவாவதைப் போன்று காட்சி அளிக்கிறது.
முடிவுரை
நமது உடலின் மிகச் சிக்கலான உறுப்பு மூளை. இது 100 பில்லியன் நியுரான்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு நியுரானும் மற்ற நியுரான்களோடு (வேதியியல் மற்றும் மின்சாரயியல் சம்மந்தப்பட்ட பரிமாற்றங்கள் செய்பவை) 10,000 முறையாவது தொடர்பு கொள்கின்றன. மூளையின் செயல்பாடுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள, தெரிந்து கொள்ள, ஆச்சரியத்தால் விரியும் நம் விழிகளை மூடுவது கொஞ்சம் கடினம்தான்.
மூளையின் இந்த சிக்கல்-சுவாமி அவரது மூளையை வெகு இயல்பாகச் செயல்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்த வேண்டும். அதாவது சுவாமியின் மனம், எண்ணங்கள், அறிவுப் பகுதி, உவர்ச்சிப் பகுதி ஆகியவை நிச்சயம் சுவாமியின் மூளையைக் கட்டுப்படுத்த வேண்டும்.
ஆனால், வியப்பு தருவது எதுவென்றால்- இவ்வளவு சிக்கலான மூளையின் செயல்களையும், மூளை அலைகளையும் சுவாமி அவர் சுய விருப்பப்படி வேண்டும் போது வேண்டியபடி இலகுவாக மாற்றுவதுதான்.
சுவாமியை பரிசோதித்தப் பிறகு பல பதில் தெரியாத கேள்விகளுக்கு விடை கிடைத்ததை விட, மருத்துவ அடி ஆதாரத்தை அசைத்துப் பார்க்கும் பல புதிய கேள்விகளும் உருவாகியிருக்கின்றன என்பது தான் உண்மை.
சுவாமியிடம் இருக்கும் உணர்வு, மனம், எண்ணம் ஆகியவற்றை நம் விருப்பப்படி மாற்றிக் கட்டுப்படுத்தும் சுயக்கட்டுப்பாட்டு முறைகள்....
மனித குல வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவருமா?
உள்ளுக்குள் சமநிலையும், உள்அமைதியையும் கொண்டு வருமா?
மனிதனுக்குள் நோய்களை குணமாக்கும் சக்தியை அதிகப்படுத்துவதை முடியுமா? நோய்களை வெறும் தொடுதலால் கற்றுக்கொண்டு மனித குலத்தை காக்க முறையாக்கி எல்லோரும் வேதனையைத் தாங்கும் சக்தியை நமக்குள் நாமே ஏதாவது பயிற்சிகள் மூலம் அதிகப்படுத்திக் கொள்ள முடியுமா? நோயின் போக்கை மாற்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியுமா?
நமக்குள் இருக்கும் ஆனந்த ஊற்றான ஈ-ஸ்ல்ர்ட் -ஐ நாம் விரும்பும் நேரத்தில் தூண்டி பேரின்பம் அடைய முடியுமா
மூளை பற்றிய உலக மருத்துவ ஆராய்ச்சி வரலாற்றில் சுவாமியின் மருத்துவ ஆராய்ச்சி மிகவும் முக்கியமானது என்பதில் எந்த ஒரு சந்தேகமும இல்லை. மனிதனால் மனிதனை முழுமையாக குணப்படுத்திக் கொள்ள முடியும் என்ற மருத்துவ உலகின் தீவிர தாகத்திற்கு சுவாமியின் அசாதாரண ஆராய்ச்சி வெளிப்பாடுகள், முடியும் என்று நம்பிக்கையூட்டுகின்றன.
மொத்த மனித குலமும் பயன் அடைய வேண்டும என்பதற்காக சுவாமியின் சக்தி வெளிப்பாடுகளையும், குணப்படுத்தும் முறைகளையும் எந்தஒரு சராசரி மனிதனும் கற்றுக் கொண்டு மனித குலத்தின் வேதனைகளை குணப்படுத்துவதற்கான வழி வகைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
இதய நோய்கள், கேன்சர், மூட்டுவலிகள், மது அடிமை போன்ற பல நோய்களை எளிதில் குணப்படுத்த முடியும் என்பதற்கான அத்தாட்சிகள் உறுதியாக உலகிற்கு தெரிய ஆரம்பிக்கிறது.
சுவாமி - நம் கண்களுக்கு தெரியாத, புரியாத புனான உலகான மெய்ஞானத்திற்கும் இடைப்பட்ட ஒரு பாலமாக இருக்கிறார்கள்.
மூளை பற்றிய எங்களுடைய ஆராய்ச்சியை பரவலாக மிகப் பெரிய அளவில் செய்து மெய்ஞானத்தின் சாரம்சத்தை விஞ்ஞானபூர்வமாக நிரூபித்து, எல்லோரும் பயின்று பலன் பெறும் ஒரு கல்வி முறையாக மாற்ற எங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்கிறோம்.