KAILASA Library/பூங்௯்௪சிட் ங௯்௪சிடபூத/வெற்றியின் ரகசியம்Sign in
பூங்௯்௪சிட் ங௯்௪சிடபூத

வெற்றியின் ரகசியம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

படைப்பாற்றல்

இனி அடுத்த மிக முக்கியமான சக்கரமாக விளங்கும் விசுத்தி சக்கரம் பற்றி பார்ப்போம்.

தொண்டைக் குழியில் இருக்கிறது இந்தச் சக்கரம்.

தொண்டை, நுரையீரல் சம்பந்தப்பட்ட ஆஸ்துமா, சளி, ஈசினோ - பிலியா போன்ற நோய்களுக்கு இந்தச் ச க்கரம்தான் அதிபதி.

  • விசுத்தி என்றால் சுத்த, அசுத்தத்திற்கு அப்பாற்பட்டது என்று பொருள்.
  • மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு போது, பொறாமைப்படும் போது விசுத்தி சக்கரம் மூடிவிடுகிறது.
  • நம்மிடம் இருக்கும் தனித்தன்மையையும், படைப்புத் திறனையும் வெளிப்படுத்தும் போது விசுத்திச் ச க்கரம் திறந்து கொள்கிறது.
  • தனித்தன்மையும், படைப்பாற்றலும்
  • விசுத்தி சக்கரத்தின் திறவுகோல்.

ஒப்பிடுவதும், பொறாமைப்படுவதும்

  • விசுத்திச் சக்கரத்தின் தடைக்கல்.

மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு நாம் இப்படி இல்லையே, அப்படி இல்லையே என்று எண்ணும்போது பொறாமை ஏற்பட்டு இந்தச் சக்கரம் மூடிவிடுகிறது.

ஆனால், நமக்குள் சக்தியை முழுமையாக ஆற்றலாக வெளியே கொண்டு வரும் போது இந்தச் சக்கரம் திறந்து கொள்கிறது.

பொறாமை :

பொறமை என்பது என்ன?

மற்றவர்களுடைய சிறப்பான குணங்களைப் பார்த்த உடன் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் புழுங்குவதால் ஏற்படும் உணர்ச்சிக்கு பொறாமை என்று பெயர்.

நம்மிடம் இருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். அல்லது அடுத்தவருடன் நம்மை ஒவ்வொரு நிமிஷமும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

பக்கத்து வீட்டில் ஏசி ஓடுகிறது. அங்கே குளிர்ச்சி, ஆனால், நம் வீட்டில் ஏசி இல்லையே! என்ற எரிச்சல் பொறாமையாக வரும் போது நம் வீடு உஷ்ணத்தில் கொதிக்க ஆரம்பித்து விடுகிறது.

நம் பக்கத்து வீட்டுக்காரனிடம் இருக்கும் கார் நம்மை உறுத்தினால் நம்முடைய சைக்கிளை நாம் கேவலமாக மதிக்க ஆரம்பித்து விடுகிறோம்.

சைக்கிள் வைத்திருப்பது கேவலமல்ல. பக்கத்து வீட்டுக்காரரின் காரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போதுதான் நம் சைக்கிள் நமக்கே கேவலமாகத் தெரிகிறது.

பேய் என்று ஒன்று இந்த உலகத்தில் இல்லை. ஆனால், அதை நினைத்து நாம் பயப்படுவது போலத்தான், மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதும், பார்த்து பொறாமைப்படுவதும்.

பொறாமைப்படுவது நடைமுறை உலக வாழ்க்கைக்கு தேவை இல்லாத வழக்கம். ஆனால், பொறாமை என்னும் மாய குணத்திலிருந்து மீள எந்த முயற்சியையும் செய்யாமல், நம்முடைய வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.

விசுத்திச் சக்கரத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் பெயரே அற்புதமானது.

விசுத்தி என்றால் சுத்தம், அசுத்தம் இரண்டையும் தாண்டிய, கடந்த ஒரு பூரண நிலை.

இந்த சக்கரத்தை யாரும் சுத்தம் செய்யவும் முடியாது. அசுத்தம் செய்யவும் முடியாது.

மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதினால் பொறாமை ஏற்படுகிறது. ஒப்பிட்டுவது தாய் என்றால் பொறாமை அதன் குழந்தை.

மற்றவர்களோடு ஏன் நம்மை ஒப்பிட்டுக் கொள்கிறோம்? அதன் அடிப்படை என்ன? இந்த ஆராய்ச்சி க்கு முன் ஒப்பீடு பற்றி சுவாரஸ்யமான சுருக்க விளக்கம்.

1. பணம்

2. பதவி

3. அழகு

4. அறிவு

இந்த நான்கு விஷயங்களில்தான் நாம் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுக் கொள்கிறோம்.

மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதினாலேயே நமக்கு பலம் கிடைத்துவிடப் போவதில்லை.

அதனால் பதவி தேடி வந்து விடாது.

அழகு கூடிவிடாது.

அறிவு பெருகி விடாது.

ஆனால், நம்மிடம் ஏற்கெனவே இருக்கும் அமைதி நிச்சயம் போய்விடும். ஒப்பிடுவதால் கிடைக்கும் பலன் இது தான்.

இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி வெளியே வருவது?

இந்தப் பிரச்சினை என்ன, ஏன் ஏற்படுகிறது என்பதை தர்க்கரீதியாக அலசி, ஆராய்ந்தாலே போதும். பிரச்சி னைக்கு தீர்வு கிடைத்துவிடும்.

ஒரு சிறிய கதை :

ஒரு அழகான காலைப் பொழுதில் ஒரு பெரிய கர்ச்சிப்போடு வகுப்புக்கு வந்தார் புத்தர். அந்தக் கர்ச்சிப்பில் சில முடிச்சுகள் இருந்தது. முக்கியமான விஷயம், அந்தமுடிச்சுகளைப் போட்டது புத்தர் அல்ல. புத்தர் அந்தக் கர்ச்சிப்பை சீடர்களிடம் கொடுத்து, முடிச்சை அவிழ்க்கச் சொன்னார்.

முடிச்சை அவிழ்த்து புத்தரிடம் நல்ல பெயரை வாங்கி விட வேண்டும் என்பதற்காக சீடர்கள் எவ்வளவோ முயன்றனர்.

பல சீடர்களும் முடிச்சை அவிழ்த்துவிட வேண்டும் என்று முயற்சி செய்தனர்.

ஆனால் முடிச்சு அவிழவே இல்லை. முடிச்சு இன்னும் கொஞ்சம் இறுக்கமானது!

கடைசியில் அந்த கர்ச்சிப்பைக் கொண்டு வந்து புத்தரிடம் கொடுத்தனர். புத்தர் அந்தக் கர்ச்சிப்பை சில நொடிகள் உற்றுப் பார்த்தார். பிறகு எளிதாக முடிச்சை அவிழ்த்தார்.

மற்றவர்கள் முடிச்சை எப்படி அவிழ்க்கலாம் என்பதை மட்டும் பார்த்தார்கள். ஆனால், புத்தரோ முடிச்சை எப்படி போட்டிருக்கிறார்கள் என்பதை கவனித்துப் பார்த்தார்.

கவனித்துப் பார்ப்பது என்பதே ஒருவகை தியானம் தான். பாலி மொழியில் இதற்கு பாய்சன் என்று பெயர்.

எல்லாப் பிரச்சினைகளுமே தீர்க்கக்கூடிய பிரச்சனைகள்தான்.

ஒவ்வொரு பிரச்சினை என்கிற தாய்க்குள்ளும் தீர்வு என்கிற குழந்தை இருக்கிறது.

சற்று உற்றுப் பார்த்தாலே எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கண்டுவிடலாம்.

வெற்றியின் ரகசியம் இன்னும்கவனித்துப் பார்த்தால் பிரச்சினையை

படைப்பாற்றலுக்குள் எளிதாகத் தாண்டி வந்துவிடலாம். ஒளிந்திருக்கிறது. படைப்பாற்றலின் நம்முடைய உடம்பில் இருக்கிற சக்கரங்களும் ரகசியம் உங்களின் கர்ச்சிப்பில் விழுந்திருக்கிற முடிச்சுகள் மாதிரிதான். தனித்துவத்திற்கும் ஒளிந்திருக்கிறது. உணர்ச்சிகள் சம்பந்தப்பட்ட இந்த சக்கரங்களில் தனித்துவம், படைப்பாற்றல், எங்கே? எப்படி? முடிச்சுகள் உருவாகியிருக்கின்றன. வெற்றி இம்மூன்றும் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். சேர்ந்தே வரும். இம்மூன்றும் ஒருவனுக்குள் கொஞ்சம் கவனத்தோடு நம்முடைய உணர்ச்சிகள் மலர வேண்டுமானால் தோன்றும் விதம், தோன்றும் நேரம் அவனுக்குள்ளிருக்கும் சக்தி ஆகியவற்றைப் பார்த்தாலே உவர்ச்சிக் சாகரமான விஷத்திச் கொந்தளிப்புகளுக்கு தீர்வு கண்டுபிடித்து விடலாம். சக்கரம் திறக்கப்படவேண்டு உள்ளுக்குள் பொங்கினால் பலம், பதவி, அழகு, அறிவு - இந்த நாலு

இம்மூன்றும் சக்தி விஷயத்தில்தான் நாம் மற்றர்களோடு அதிகம் ஒப்பிட்டுக் தாமாகவே வந்து நம்மை கொள்கிறோம். எங்கோ? எப்படியோ முடிச்சு நம்முள் வெற்றியடையச் செய்யும். விழுந்தது இவற்றால்தான்.

ஒன்று, நம்மிடம் எல்லாம் இருக்கிறது என்கிற முடிவுக்கு வருகிறோம்.

இதனால் உயர்வுமனப்பான்மை நம்மிடம் ஏற்படுகிறது.பின் நம்முடைய நடவடிக்கைகள் மற்றவர்களைப் பாதிக்கிற மாதிரி அமைய, சமூகம் நம்மை உதைத்து சரி செய்கிறது.

இந்த உயர்வு மனப்பான்மை தோன்றாத பட்சத்தில் நாம் எதற்கும் பிரயோஜனம் இல்லாதவர்கள் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம்.

மனதளவில் அம்மை விழுந்த மாங்காய் போல கும்பி சுருங்கி விடுகிறோம். தாழ்வுமனப்பான்மை நம்மை தாக்குகிறது.

மனிதனை தாழ்வு மனப்பான்மையும், உயர்வு மனப்பான்மையும் மாறி மாறித் தாக்குகிறது.

நம்மிடம் பணம் இல்லாமல் இருப்பதுதான் பிரச்சினையா? இல்லை, நமது ஏழ்மை நிலைதான் நம் வாழ்க்கையை நரகம் ஆக்கியதா? நம் வாழ்க்கை நரகமாவதற்கு இந்த இரண்டு நிலைகளுமே காரணம் அல்ல.

நான் ஏழை, நான் பணக்காரன் அல்ல என்கிற எண்ணம்தான் காரணம்.

நான் பணக்காரன், நான் ஏழை என்பதை எதை வைத்து அளந்து பார்க்க முடியும்?

நம்மை விட பக்காரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நம்மை விட ஏழைகளும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை வைத்து மாத்திரமே நாம் நம்மைப் பற்றிய முடிவுக்கு வருகிறோம். இது முட்டாள்தனமானது.

பணத்தின் அடிப்படையில் மொத்த உலக மக்களை வரிசைக் கிரமமாக நிறுத்தினால் நாம் எங்கே இருப்போம்?

யோசியுங்கள்... நிச்சயமாக வரிசையின் நடுப்பகுதியில்தான் இருப்போம்.

வரிசையின் முதல் பகுதிக்கு போவதும் கடினம், அதேப் போல் கடைசிப் பகுதிக்கு போவதும் கடினம்.

பதவியை எடுத்துக் கொண்டாலும் நாம் மிக உயர்ந்த இடத்திலும் இல்லை. மிக மோசமான இடத்திலும் இல்லை.

அதிகாரத்தில் நான்தான் பெரியவன் என்று எவனுமே இந்த உலகில் மார்தட்டிக் கொள்ள முடியாது. அதிகாரத்தில் உச்சாணி என்பதே இல்லை.

யாராவது ஒருவர் இன்னொருவரை கட்டுப்படுத்த இருப்பார்.

அழகு, அறிவு விஷயத்திலும் நாம் நடுத்தர ரகம்தான்.

அலகின் உச்சம், அறிவின் உச்சம் என்று யாரைச் சொல்ல முடியும். அதேபோல் அழகு, அறிவு துளிகூட இல்லாதவர் இவர் என்று யாரைச் சொல்ல முடியும்.

நம்மைவிட அதிகம் பணம் வைத்திருப்பவர்கள், பதவி வகிப்பவர்கள், அழகும், அறிவும் கொண்டவர்கள் பலர் நம்மை விட அதிகம் கஷ்டப்படுகிறார்கள். அதிக நெருக்கடிகளைச் சந்திக்கிறார்கள்.

நம்மை விட குறைவாக பணம் வைத்திருப்பவர்கள் ; தாழ்ந்த பதவியியல் இருப்பவர்கள் ; அழகும், அறிவும் குறைவகா உடையவரிகளில் பலர் நம்மைவிட துக்கமான நிலையிலா இருக்கிறார்கள்? பலரும் மேன்மையாக இருக்கின்றார்களே

எதை அடிப்படையாக வைத்துப் பிரித்துப் பார்த்தாலும் நாம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்ளாகவே இருப்போம்.

பணம், பதவி அழகு, அறிவு அதிகமான இருந்தால் இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைக்கிறோம்.

ஆனால் இவை அதிகமாக அதிகமாக நெருக்கடிதான் அதிகமாகிறதே தவிர மகிழ்ச்சி அதிகமாகவதில்லை.

பொறாமையால் ஏற்படும் வளர்ச்சி எப்பொழுதும் நெருக்கடியைத்தான் தரும். நிம்மதியைத் தராது.

உண்மை இப்படியிருக்க...

மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து, நாம் அவனைப் போல இல்லையே! அவனிடம் இருக்கிற மாதிரி என்னிடம் இல்லையே! என்று பொறாமையால் வேதனைப்படுகிறோம்.

வேதனைக்கு மருந்தாக உடனே சாதிக்க புறப்படுகிறோம். பெரும்பாலான நேரங்களில் சாதனைக்கான விதை வேதனையாகத்தான் இருக்கிறது.

பொறாமையாலர் வேதனைபடும் நாம் நம்மிடம் இருக்கும் நல்லவற்றிற்காக என்றைக்காவது கடவுளுக்கு நன்றி சொல்லி இருக்கிறோமா?

இறைவா! நீ எனக்குக் கொடுத்த இந்த மனித வாழ்க்கைக்கு நன்றி ! என்று என்றைக்காவது ஆனந்தப் பெருக்கோடு நன்றி சொல்லி இருக்கிறோமா?

நன்றியுணர்வின்றி மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து பொறாமை கொள்பவன் இந்த உலகத்தில் முன்னேறியதாக சரித்திரமே இல்லை.

ஒப்பிடுதல் நமது வளர்ச்சிக்கு உட்படாது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் ;

ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடுகிறான் ஒரு வீரன்.

முன்னூறு மீட்டர் ஓடியவுடன் ஒருமுறை திரும்பி, அடுத்து ஓடி வருபவன் எவ்வளவு தூரத்தில் இருக்கிறான் என்பதைப் பார்க்கிறான்!.

ஐநூறு மீட்டர் தூரம் ஓடியவுடன், பின்னால் ஓடி வருபவன் எவ்வளவு தூரத்தில் என்று மீண்டும் ஒருமுறை பார்க்கிறான்.

எண்ணூறு மீட்டர் தூரம் ஓடியவுடன் மீண்டும் திரும்பிப் பார்கிறான்.

ஆயிரம் மீட்டர் தூரமும் ஓடிய பிறகுதான் அவனுக்குப் புரிகின்றது. தான் தேவையே இல்லாமல் சில வினாடிகளை திரும்பிப திரும்பிப பார்த்ததில் வீணாக்கியிருப்பதை உணர்கிறான்.

அடுத்து வரும் வீரனோடு தன்னை ஒப்பிட்டுக் கொண்டே இருந்தால்தானே இத்தனை வினாடிகளும் வீணானது!.

அவன் வருகிற வேகத்தில் வஜ்ட்டும். என்னால் எவ்வளவு வேகமாகச் செல்ல முடியுமோ அவ்வளவு வேகமாகச் சென்றுவிடுகிறேன் என்று எதற்கும் கவலைப்படாமல் ஓடியிருந்தால் நிச்சயம் அந்த வினாடிகளை வீரன் வீணாக்கியிருக்க மாட்டான். இன்னும் வேகமாக ஓடி வெற்றியும் பெற்றிருக்கலாம்.

மற்றவர்களோடு நாம் ஒ;பிபட்டுச் செய்கிற விஷயம், மற்றவர்களைப் போலவே இருக்கும். அது நம்முடைய உண்மையான வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கக்கூடிய விஷயமாக இருக்காது.

மகாவீரர் இழுகாக சொல்கிறார்.

‘’நாம் இந்த உலகிற்கு வரும் போது கடவுள் நம்மை வெறும் கையோடு அனுப்புவதில்லை.

நமக்குத் தேவையான மொத்த உணவையும், அதைத் தேடிக்கொள்ளும் சக்தியையும் கொடுத்துத்தான் அனுப்புகிறார்’’.

எந்த அளவுக்கு நாம் பொறுப்பை எடுத்து சுமக்கத் தயாராக இருக்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கு இறைவன் பணத்தையும், புகழையும் கொடுக்கிறான்.

ஆனால் நாம் இறைவன் நமக்கென கொடுத்ததை மறந்து விட்டு, மற்றவர்களிடத்தில் இருப்பதையே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு அது இல்லையே! அவனிடத்தில் அது இருக்கிறதே! என்று நினைத்து, நினைத்து மனம் புழுங்குவதில்தான் நமக்குள் பிரச்சனைகள் உருவாகின்றது.

நம்மிடத்தில் என்ன இருக்கிறதோ இதை திருப்தியோடு அனுபவிக்கிற போது பிரச்சனை தோன்றாது. மாறாக நம்மிடம் இருப்பது அதிகரிக்கவே செய்யும்.

உங்களுக்குத் தேவையான உணவையும், உடையையும், இருப்பிடத்தையும் இறைவன் கொடுத்து விட்டார்.

அதை சந்தோஷமாக அனுபவிப்பதை விட்டு, விட்டு பக்கத்து வீட்டுக்காரன் நகைக்கடைக்குள் நுழைகிறானனே என்று நீங்களும் இங்கு நுழைய ஆசைப்பட்டால் அமைதியை இழந்துவிடுவீர்கள். அமைதியோடு சே ர்த்து சொத்தையும் இழக்க ஆரம்பிப்பீர்கள்.

நம்மிடத்தில் இருப்பதை வைத்து திருப்திப்படாமல் அதிருப்தியோடு இருந்தால் நம்மிடம் இருப்பது குறைய ஆரம்பிக்கும்.

ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் நீங்கள் ஒருபோதும் திருப்தி கண்டுவிட முடியாது.

முதலில் ஏதாவது ஒரு கார் கிடைத்தால் போதும் என்று நினைப்போம்.

உடனே கஷ்டப்பட்டு ஒரு கார் வாங்கிவிடுவோம்.

ஆனால் காரில் ஏறி அமர்ந்து ஓட்டும் போது, சிக்னலில் சிவப்பு விளக்கு வரும்போது. பக்கத்தில் ஒரு பென்ஸ் கார் வேகமான வந்து ஒரு குலுங்கு, குலுங்கி நிற்கும்.

அதைக் கண்டவுடன் நம்முடைய மனசும் லேசாக குலுங்கம். பென்ஸ் காருக்காக நம்முடைய மனமும் ஏங்க ஆரம்பத்து விடும்.

மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டே இருந்தால் நம் வாழ்க்கை பூரணத்துவம் அடையாது. அடுத்து, அடுத்து என்று மனம் ஏங்கிக் கொண்டே இருக்கும்.

ஆல்பர்ட ஐன்ஸ்ட்டீன் மரணப்படுக்கையில் இருக்கும் போது, “அடுத்த ஜென்மத்தில் நீங்கள் என்னவாக பிறக்க விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

ஐன்ஸ்ட்டீன் மிகப் பெரிய விஞ்ஞானி என்பதால் முக்கியமாக பதிலை அவர் செல்வார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் ஐன்ஸ்ட்டீனோ, “நான் ஒரு சாதாரண பிளம்பராகப் (டப்ன்ம்கூஷிங்) பிறக்க விரும்புகிறேன்” என்றார். அந்த பதிலைக் கேட்டு எல்லோரும் அதிர்ந்து போனார்கள்.

“ஏன் பிளம்பர் ஆக பிறக்க வேண்டும் என்று நினைத்தீர்கள்?” என்று கேட்டார்கள்.

“சின்ன வயதில் நான் ஒரு பிளம்பராக ஆக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன்.

அது தான் என் விருப்பம் சூழ்நிலை மாறி அமைய நான் விஞ்ஞானியாகி விட்டேன்.

நான் எதிர்பார்க்காத பேர், புகழ், பலம் எல்லாம் கிடைத்தது. ஆனால் வாழ்க்கையை வாழ்ந்த திருப்தி எனக்கில்லை.

நான் விரும்பியபடி பிளம்மராக வாழ்ந்திருந்தால் குறைந்தபட்சம் என் வாழ்க்கையை நான் வாழ்ந்தேனே என்ற திருப்தியானவது எனக்கு இருந்திருக்கும்" என்றார்.

ஐன்ஸ்ட்டன் விஞ்ஞானியாக மாறியதால் அவருக்கு நிறைய பேரும், புகழும் கிடைத்தது. ஆனால், அவர் வாழ விரும்பிய வாழ்க்கையை அவரால் வாழ முடியவில்லை. வாழ்ந்த திருப்தியில்லை.

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய உண்மையைக் கண்டுபிடித்தவர், பொய்யான ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கிறார்.

நாமும் நமக்குக் கிடைத்த வாழ்க்கையை திருப்தியோடு வாழாமல் மற்றவர்களின் வாழ்க்கையை நம் வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டு வாழ ஆசைப்படுகிறோம்.

ஐன்ஸ்ட்டன், பில்கேட்ஸ், பெரிய நடிகர் போன்றவர்களைத்தான் நம் மனதில் நாம் ரோல் மாடலாக வைத்து நம்மை மதிப்பிடுகிறோம்.

வெளியிலிருந்து பார்ப்பதற்கு நன்றாக இருப்பது போன்ற இவர்களின் வாழ்க்கையை நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டு குறுகிப் போகிறோம்.

நாம் நம்புவது போல அவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்களா என்பது நமக்குத் தெரியாது.

அவர்களும் நம்மைப் போன்றே துக்கத்தில் இருக்க வாய்ப்புகள் அதிகம். அவர்களின் துக்கத்திற்கு வேறு வகையான காரணங்கள் இருக்கும்.

நமக்குத் தேவையில்லாத ஒன்றைப் பார்த்ததும், கவர்ச்சி அல்லது பொறாமை காரணமாக வாழ்க்கையின் திசை மாறினால் ஐன்ஸ்ட்டன் கதிதான் நமக்கும்.

பொறாமை மனித வாழ்க்கையின் இயக்கத்தை நிறுத்திவிடும். ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையின் பாதையை மாற்றிவிடும்.

விசுத்தி சக்கரத்தை முற்றிலுமாக மூடி விடும் அபாயம் கொண்டது இந்த பொறாமை.

விசுத்தித்ச சக்கரம் சக்திச் சாகரம். அந்த சக்தி ஊற்றையே அடைத்துவிடும் தடைக்கல்தான் ஒப்பிடுதலும், பொறாமைப் படுதலும்!

விசுத்திச் சக்கரத்தை திறக்க வேண்டும் எனில் மற்றவர்களுமன் ஒப்பிட்டுப் பார்த்து பொறாமைப்படுவதை நிறுத்த வேண்டும்.

நமது சொந்த அறிவினால், சுய அனுபவத்தால் வாழ்க்கையை நடத்த வேண்டும்.

ஒப்பிடுவது தவறு அல்ல. மற்றவர்களுடன் ஒப்பிடுவதுதான் தவறு. உங்களுக்கு நீங்களே ஒப்பிட்டுக் கொள்வது தான் உணர்வுக்கு வழிவகுக்கும்.

இன்று நீங்கள் ஐம்பது ரூபாய் சம்பாதிக்கிறீர்கள். நாளை நூறு ரூபாய் சம்பாதிக்க வேண்டும என்று நினை த்தால், நீங்கள் நிச்சயம் முன்னேற்றம் கண்டுவிடுவீர்கள்.

நேற்றைய நீங்கள்!

இன்றைய நீங்கள்!

நாளைய நீங்கள்!

  • இப்படி ஒப்பிடுங்கள். சோம்பி உட்காராதீர்கள்.

தொடர்ந்து முன்னேற்றத்தையே இலக்காக வைத்துச் செயல்படுங்கள். நீங்கள் ஒப்பீடற்றவர்களாகி விடுவீர்கள்.

ஒரு குட்டிக் கதை :

ஒரு மனிதன் கடவுளின்; தரிசனத்திற்காக காட்டில் தவம் செய்ய ஆரம்பித்தான்.

ஒரு நாள் காலை கடவுள் திடீரென்று அவர் முன்பு தோன்றினார்.

“உனக்கு என்ன வேண்டும் என்று கேள்” என்றார் இறைவன்.

“ இறைவா! நான் பெரிய ராஜ்ஜியத்துக்கு அதிபதியாக இருந்தேன். அதை எல்லாம் இழந்துவிட்டேன். நான் மீண்டும் மிகப் பெரிய நிலப்பரப்புக்கு மன்னனாக வேண்டும்” என்றான்.

“சரி, நாளை காலை முதல் சூரியன் அஸ்தமனம் ஆகிற வரை நீ எவ்வளவு தூரம் ஓடுகிறாயோ, அந்த நிலப் பரப்பெல்லாம் உனக்குத்தான் சொந்தம்” என்றார் இறைவன்.

மறுநாள் காலை சூரியன் உதயம் ஆவதற்கு முன்பே ஓட ஆரம்பித்தான். ஆரம்பித்திலேயே வேகமாக, வேகமாக படுவேகமாக ஓடினான். காலையில் சாப்பிடாமல் கூட ஓடினான். மதியம் வயிறு பசித்தது. ஆனால், ச ாப்பிட அவனுக்கு மனம் வரவில்லை.

மீண்டும் ஓடினான்! ஓடினான்!

மாலை நான்கு மணியாகி விட்டது. இனிமேல் ஓட முடியாது என்கிற நிலை...

“ பக்கத்து நாட்டு மன்னனுக்கு முன்னூறு கிலோ மீட்டர் தூரம் சொந்தம். நாம் நூறு கிலோ மீட்டர் தூரம் தானே ஓடி வந்திருக்கிறோம்” என்று நினைத்தவுடன், புதிய வேகம் அவனுக்குள் பாய, மீண்டும் ஓட ஆரம்பித்தான்.

மணி மாலை ஐந்து. ஏழு தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்துவிட வேண்டும் என்கிற ஆசை வந்தது. மீண்டும் ஓட ஆரம்பித்தான்.

மணி 5.55. இனிமேல் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாத என்கிற நிலை.

இருக்கிற நேரத்தில் ஒரு நூறு அடி எடுத்து வைத்துவிட்டால் அதுவும் நமக்கு சொந்தமாகி விடுமே என்கிற ஆசையில் மீண்டும் உடம்பில் உள்ள கடைசிச் சொட்டு சக்தியையும் கொண்டு வந்து தள்ளாடித் தள்ளாடி நடக்க ஆரம்பித்தான்.

அவன் ஒரு சில அடிகள் கடப்பதற்கும், சூரியன் மறைவதற்கும் சரியாக இருந்தது.

சூரியன் மேற்குப் பக்கம் சாயவும் இவன் தரையில் சாயவும் சரியாக இருந்தது. சாய்ந்தவன் ச ாய்ந்தவன்தான்...இறந்தே போனான்.

நாமும் இப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஓடி, ஓடிக் கடைசியில் நிறைய சம்பாதிக்கிறோம். ஆனால், வாழ்க்கையைத்தான் இழந்துவிடுகிறோம்.

“ அப்பாடா சொத்து சேர்த்துவிட்டேன்” என்று சிலர் சாதித்தபின் பெருமூச்சு விட்டு வாழ்வை திரும்பிப் பார்க்கும் போது மூச்சு போய்விடுகிறது. வாழும் வயது கடந்து விடுகிறது.

லுசபிரஸ் என்கிற முள்செடியும், “ரோஜா செடியே! ஓர நாள் பேசிக் கொண்டது.

லுசப்பிரஸ் செடி சொன்னது : ரோஜா செடியே உன்னை நினைத்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது.

உன்னைத்தான் எத்தனை பேர் அன்பாகப் பார்க்கிறார்கள். உச்சி முகர்ந்து முத்தம் கொடுக்கிறார்கள். என்னை சீண்டுவதற்குக் கூட ஆள் இல்லையே!’’

முள்செடிக்கு ரோஜாவின் பதில் : ‘‘ என்னை பார்த்தா நீ யுபapacheமைப்படுகிறாய்!

உண்மையில் உன்னைப் பார்த்துத்தான் நான் பொறாமைப்படுகிறேன்.

மனிதர்கள் சதாசர்வ காலமும் என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

உச்சி முகர்ந்து முத்தமிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் என்னைக் கிள்ளும் போது வலி தாங்காமல் துடித்து அழுகிறேன்.

உன் நிலைமை அப்படியில்லையே’’ உன்னை யாரும் தொடுவதில்லை.

நிம்மதியாக இருக்கிறாய்!

அடுத்த ஜென்மத்திலாவது நான் உன்னைப் போல் பிறக்க வேண்டும்’’ என்றது ரோஜா.

நம்முடைய வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது.

நாம் பக்கத்து வீட்டுக்காரனைப் போல ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க, பக்கத்து வீட்டுக்காரன் அவனுக்கு அடுத்த வீட்டுக்காரனைப் போல ஆக வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறான்.

புத்தர் சொல்கிறார் :

‘‘மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்தி விட்டு உங்களுடன் மட்டும் ஒப்பிட ஆரம்பியுங்கள்.

மற்றவர்களுடன் ஓடுவதை நிறுத்தி விட்டு, உங்களோடு நீங்களே ஓட ஆரம்பியுங்கள்.

நமக்கு நம்மைப் பற்றி தெளிவாகத் தெரிந்தால் பாதிப்பு இல்லை. ஆனால், மற்றவர்களைக் கண்டு நாம் பாதிக்கப்படுகிறோம் என்றால் நமக்குள்தான் பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம்’’.

உங்களை உங்களோடு மட்டும் ஒப்பிட்டுங்கள் இன்றைய நீங்கள் தான் நாளைய நீங்களாக மாறப் போகிறீர்கள். யுதாடர்ந்து உங்களோடு நீங்களே ஓட ஆரம்பியுங்கள்.

உங்களுக்குள் தனித்தன்மைகளும், படைப்பாற்றலும் கொட்டிக் கிடக்கிறது.

மற்றவர்களோடு ஒப்பிட்டால் பொறாமையால் சக்தி விரயமாகும். நீங்களே உங்களோடு ஒப்பிட்டு ஓடினால் சக்தி வீரியமாகும்.