நிர்பயா தியானம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நிர்பயா தியானத்தைக செய்வதினால் உங்கள் பொருளாதாரம் மாறுமா? என்பதை என்னால் சொல்ல முடியாது.
ஆனால், நிச்சயம் உங்கள் அருளாதாரம் மாறும்.
பற்றற்ற நிலை எந்த கஷ்டமுமில்லாமல் உருவாகும்.
ஏற்கெனவே அனுபவித்த விஷயங்களை மனம் தேடிச் செல்வதை விட்டுவிட்டு, புத்தம் புதிய ஆனந்தத்தை நோக்கி பயணிக்க ஆரம்பிப்போம்.
இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றிய கணக்கு, வழக்குகளை பைசல் செய்து விட்டு, மீண்டும் புதியொதொரு வாழ்க்கையை வாழத் துவங்குவதற்கான வாய்ப்பைக் கொடுப்பது இந்த தியானம் தான்.
சுவாதிஸ்டானச் சக்கரத்தைத் திறக்கும் இந்த தியானத்தை முழு ஈடுபாட்டோடு - கொஞ்சம் ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்.
நிர்பயா தியானம் வேதாந்தம் நமக்கு வழங்கும் நன்கொடை.
இந்த தியானத்தன்த்தை தனியே வீட்டில் செய்வது சில நேரத்தில் பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.
எனவே இந்த ஒரு தியானம் மாத்திரம் குருவின் முன்னிலையில் மட்டுமே செய்யப்படட வேண்டும்.
பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக நிர்பயா தியானம் பற்றிய செய்முறை விளக்கத்தை இந்நூலில் தவிர்த்திருக்கிறோம்.
அற்புதமான உணர்வு அனுபவத்தை ஏற்படுத்தும் இந்த தியானத்தை ஆன்ந்த ஸ்பூரண தியான முகாமில்ல நீ ங்கள் கற்றுக் கொள்ளலாம்.
நீங்கள் தொடர்ந்து பயத்தை எதிர்கொண்டு அதைத் தாண்டி வர ஒரு சின்ன டெக்னிக்.
பயம் வரும்போது பயந்துவிடுகிறோம். பதட்டத்தால் செயலில் தடுமாற்றம் வருகிறது. அந்த நிமிடங்களில் சக்தி விரயமாகிறது.
இனி பயம் ஏற்படும் நிமிடங்களில் பதட்டத்தால் உடலோ, மனமோ, நடுங்குவதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.
உடல் நடுங்கட்டும்...
மனம் படபடக்கட்டும்...
இவை இரண்டையும் தாண்டி பயத்தை தைரியமாக அணுகமுடியும்.
இருளில் எதிரிலிருக்கும் பொருள் கண்ணுக்கு தெரியாது தான், இருக்கும் பொருட்களை பார்க்க முடியாத இருளையும் பார்க்க முடியுமே. பார்க்க முடியாததை பார்ப்பது சாத்தியமே.
பயத்தை இதுபோன்ற எதிர்கொள்ளுங்கள் என்று சொல்கின்றேன்.
தைரியத்தோடு இருக்கமுடியாத பயத்தை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.
இது சாத்தியமே.
பயத்தை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.
- இதை ஒரு மந்திரம் போல மனத்தால் பற்றிக் கொண்டு பயம் வரும்போதெல்லாம் செய்யுங்கள். உங்களைத் தொற்றிக் கொண்டிருந்த பயம் என்னும் மாயம் விலகி விடும். தைரியம் பிறந்து விடும்.
தியான அனுபங்கள்...
- '' நிர்பயா தியானத்தில் எங்கள் மரணத்தை நேரடியக எங்களையே சந்திக்க வைத்து அற்ப்பதம்... ஆச்சரியம்!''
ரவி
( மதுரை
அநட -ல்)
- '' மறுபிறவி என்ற வார்த்தைக்கு இன்றுதான் அர்த்தம் புரிந்தது. உடலில் உயிரோடு இருக்கும் போதே மீண்டும் ஒரு முறை பிறந்தது போல உணர்கிறேன்...''
பைரவி
(
பெங்களூர் அநட -ல்)
- ''என் உடலை விட்டு வெளியே வந்து என் உடலை நானே பார்த்த அனுபவம்... ஆஹா... என்ன செ ால்லி என் அனுபவத்தை விளக்குவது!?!''
ராமசாமி
( மும்பை
அநட -ல்)
- ''நாம் இறந்தபிறகு நம் வீடு எப்படியிருக்கும், நம் உறவினர்கள் எப்படி எப்படியெல்லாம் பேசுவார்கள், அதன் பின் எப்படி வீடு இயல்பு நிலைக்கு வரும் என்பது வரை காட்சியாக பார்த்ததில் வாழ்வின் மறு பக்கம் பார்த்ததை போன்று உணர்கிறேன்...''
மீனாப்பிரியா
( ஏற்காடு
அநட -ல்)
- '' வாழ்க்கை இவ்வளவுதான் என்பதை ஒரே ஒரு தியானத்திற்குள் போதித்துவிட்டீர்களே!''
பிரணவ் ( நியூஜெர்ஸி அநட -ல்)
- "நிர்பயா தியானத்தை என்னுடைய வீட்டிற்கு சென்ற பிறகும் நான் தொடர்ந்து செய்யலாமா?"
ராஜ்குமார் ( தேவனஹல்லி அநட - ல்)
"கூடாது.
- இந்த தியானம் குருவின் நேரடிப் பார்வையில் மட்டுமே செய்யப்பட வேண்டும். தன்னிச்சையாக இந்த தியானத்தை செய்வது நல்லதல்ல.
எனவே இந்த ஒரு தியானம் மாத்திரம் தியான முகாம்களில் மட்டுமே செய்யப்பட வேண்டும்".
- "வாழ புது வழி பிறந்துவிட்டது! வாழ்வில் மதி வழி தெரிகின்றது!
மொத்தத்தில் வாழ்வே மாயம் என்ற இரு வார்த்தைகள் எனக்குள் ஒரு அனுபவமாக மலர்ந்திருக்கிறது.
வாழ்வின் மாயங்கள் விலக்கி, சாபங்கள் நீக்கி, நேயங்கள் படைப்பேன் என்ற நம்பிக்கை உதித்திருக்கிறது.
நன்றி சுவாமிஜி!"
- அன்புச் செல்வன் ( ஏற்காடு அநட -ல்)