KAILASA Library/பூங்௯்௪சிட் ங௯்௪சிடபூத/மரணத்தின் ரகசியம்Sign in
பூங்௯்௪சிட் ங௯்௪சிடபூத

மரணத்தின் ரகசியம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அடுத்து நாம் ஸ்வாதிஷ்டான சக்கரத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஸ்வாதிஷ்டான சக்கரம் மணிபூரகத்திற்கு சற்று கீழே, அதாவது தொப்புளுக்கு இரண்டு அங்குலம் கீழேயும், மூலாதார சக்கரத்திற்கு இரண்டு அங்குலத்துக்கு மேலேயும் உள்ள இடத்தில் இருக்கின்றது.

பலருக்கு மரண பயம் தங்களுக்கு இருப்பது தெரியாது.

வாழ்வில் நமக்கு ஏற்படும் எல்லா பயங்களும் நமது பாதுகாப்பு, உயிர் என்ற இரண்டைச் சுற்றியே அமையும்.

எல்லாப் பயங்களும் மரண பயத்தின் வெளிப்பாடே.

பயத்தால் இந்தச் சக்கரம் பாதிப்படைகின்றது.

மரணம் என்பதை விட மரணபயம்தான் இந்த சக்கரத்தை மூடுகிறது என்று கூறுவது மிகச்சரியாக இருக்கும்.

மரணத்தையும் பயத்தையும் எதிர்கொள்ள உதவும் துணிச்சல் மற்றும் தெளிவு - இந்தச் சக்கரத்தை திறக்கிறது.

இந்தச் சக்கரத்தின் கதவுகளைத் திறக்கும் திறவுகோல் மரணத்தையும், பயத்தையும் பற்றி சரியாகப் புரிந்து கொள்வதுதான்.

வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால் தைரியத்தோடு பயத்தை அணுகுவது பயத்திலிருந்து விடிவைத் தரும்.

ஸ்வாதிஷ்டானம் :

✸ (ஸ்வ-அதிஸ்டானம்) என்றால் உயிர் இருப்பிடம் என்று பொருள்.

✸ தைரியம் பிறந்தால் சுவாதிஸ்டானச் சக்கரம் திறந்து கொள்ளும்.

✸ பயத்தோடு வாழ்வது சுவாதிஸ்டானச் சக்கரத்தை மூடச் செய்யும்.

✸ தைரியம் - ஸ்வாதிஷ்டானச் சக்கரத்தின் திறவுகோல். பயம் - ஸ்வாதிஷ்டானச் சக்கரத்தின் திறவுகோல்.

உலகத்தில் உள்ள எல்லா ஆன்மீக தத்துவங்களும், மதங்களும் எப்படி உருவாயிற்று ? இவை எல்லாம் உருவாக அடிப்படையாக ஒரு பொதுக் காரணம்...

மரணத்திற்கு அப்பால் என்ன நடக்கிறது ? என்பது பற்றிய சந்தேகத்திற்கு விளக்கமளிக்கும் முயற்சிகள்தான் எல்லாத் தத்துவங்களும், மதங்களும்.

மரணம் தரும் அனுபவத்தை உணர்ந்தவர்கள் பற்றி கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று செ ால்கிறார்கள்.

கண்டவர் விண்டதும், விண்டவர் கண்டதும் அரிதே!. அதனால் தான் கண்டும் விண்டவர்களை நாம் கடவுள் என்றழைக்கிறோம்.

நாம் மரணத்திலிருந்து மீண்டும் வந்து கடவுள் நிலையை எட்டியே ஆக வேண்டுமென்ற கட்டாயமில்லை.

ஆனால் எல்லா பயங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் மரண பயத்தின் பிடியிலிருந்து கட்டாயம் விடுதலைப் பெற வேண்டும். அப்போதுதான் ஸ்வாதிஷ்டானச் சக்கரம் கொடுக்கும் சக்தியை நாம் முழுமையாக பயன்படுத்த முடியும்.

மரணத்தையும், பயத்தையும் பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்வதன் மூலமே வாழ்க்கையின் ரகசியத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்?

மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது ? மரணம் என்றால் என்ன?

இந்தக் கேள்விகளுக்கான பதில் நமக்கத் தெரியாததால், மரணம் பற்றி நமக்குத் தெளிவு இல்லாததால் வாழ்க்கையில் நாம் எவ்வளவோ இழந்திருக்கிறோம். இது சூட்சுமமான உண்மை.

வாழ்க்கையை மேம்போக்காகவே அணுகுகிறோம். வாழ்வில் எது நடந்தாலும் அதை தவிர்க்க முடியாதது என்று எடுத்துக் கொண்டு விடுகிறோம்.

இதற்குக் காரணம் பயத்தாக்குதலை தாங்கமுடியாமல் நாம் தடுமாறி விடுவதுதான்.

தடுமாற்றத்திற்கு காரணம் ஆழ்மனதில் புதைத்திருக்கும் மரணபயம் என்னும் வேர்தான்.

மரணம் நமக்கு எல்லாவற்றையும் கற்றுத் தரும் ஆசான். மரணம் மாதிரி குரு எதுவும் கிடையாது.

மரணத்திற்கு அதிபதி எமதருமன்.

மரணம் பற்றி அவனே சொன்ன விஷயங்கள்தான் கடோபநிஷத் என்னும் உபநிடத்தில் எடுத்துச் சொல்லப் பட்டிருக்கிறது.

அதைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன்பு ஒரு சிறிய கதை.

மரணத்தைச் சிந்திக்கச் சென்ற நசிகேதன் :

வாஜசிரவஸ் என்ற ஒரு மன்னன் இருந்தார். அவர் பெரிய யாகம் ஒன்று செய்தார். விசுவஜித் யாகம் என்றால் உலகையே வெல்லும் யாகம் என்று அர்த்தம்.

அந்த யாக விதப்படி நமக்கு பிடித்தமான பொருள்கள் மற்றும் மதிப்புள்ள பொருள்கள் அனைத்தையும் யாகத்திதல் தானமாக்க கொடுத்துவிட வேண்டும். அப்படி தானமாக்க கொடுத்ததால்தான் இந்திர பதவி கிடைக்கும்.

இந்திர பதவியின் மோகத்தில் தன்னிடம் உள்ள பொருளை யாகத்திற்காகத் தேர்ந்தெடுத்து சிலவற்றைத் தானமாக கொடுத்தார்.

எதையும், எதிர்பார்க்காமல் கொடுப்பதுதான் தானம். எதையாவது எதிர்பார்த்துக் கொடுத்தால், அது தானமாகாது.

இதையெல்லாம் தானமாக கொடுக்கிறேன் ; அதற்குப் பதிலாக... இறைவா! எனக்கு இது வேண்டும் என்று கேட்பது வியாபாரம்.

விலை குறைந்த பொருளை விற்று, விலை அதிமான பொருளை வாங்கி, லாபம் அடைய வேண்டும் என்று நினைப்பதுதான் வியாபாரம்.

வாஜசிரவஸ் விலை குறைந்த பொருட்களை எல்லாம் கொடுத்து விட்டு, விலை மதிப்பே இல்லாத இந்திர பதவியை வேண்டினான்.

அரசன் தானம் செய்வதை அவனது ஏழு வயது மகன் பாரத்துக் கொண்டு இருந்தான். நசிகேதன் என்பது அவன் பெயர்.

யாகத்தைப் பார்த்ததும் அப்பா தவறு செய்கிறார் என்பதைப் புரிந்து கொண்டான் என்றாலும், அவனால் நேரடியாக சொல்ல முடியாத நிலை.

சின்னக் குழந்தைகள் பெரியவர்களை விட பல சமயங்களில் புத்திசாலிகள். அவர்களை யாரும் அவ்வளவு எளிதாக ஏமாற்றி விட முடியாது.

அப்பாவின் அருகில் மெல்ல தயங்கித் தயங்கி சென்றான்.

“அப்பா, உங்களிடம் இருக்கும் எல்லா விலை உயர்ந்த பொருட்களையும் நீங்கள் தானமாக கொடுக்கிறீர்கள். நானும் உங்கள் உடைமைதான். என்னை யாருக்கு தானமாகத் தரப் போகிறீர்கள்?'' என்று கேட்டான்.

குழந்தை கேட்கும் கேள்வி அரசனுக்குப் புரிந்து விட்டது. மான் செய்கிற தவறைத்தான் குழந்தை சுட்டிக் காட் டுகிறான் என்பதால் பதில் சொல்லாமல் இருந்தான் அரசன்.

குழந்தையோ அந்தக் கேள்வியை விடுவதாக இல்லை. மீண்டும், மீண்டும் கேட்டுக் கொண்டேயிருந்தான்

நான் என்கிற உணர்வு பாதிக்கப்பட்ட நிலையில் கோபம் கொண்ட அரசன். “எமனுக்கு உன்னைத் தானாக தரப் போகிறேன்''. என்று கத்தினார்.

“மற்றவர்களாக இருந்தால், எமனிடமா, நானா? வேண்டும் என்றால் நீ போ. என்னை அனுப்பாதே'' என்று ஓடியிருப்பார்கள். ஆனால், நசிகேதன் உறுதியானவன்.

இந்த மாதிரி உறுதியாக இருப்பவர்களைத் தான் உபநிலத்தில் சிரத்தாவிவேச என்று சொல்வார்கள்.

“சரி, நீங்கள் சொன்ன மாதிரியே எமலோகம் போகிறேன்'' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

நசிகேதன் எமலோகம் போனான். மற்றவர்கள் எல்லாம் வாழ்க்கை முடிந்த பிறகும் எமலோகம் போக மாட்டேன் என்று அடம் பிடிப்பதால் என்னே நேரடியாக பூமிக்கு வந்து மனிதர்களின் உயிரைப் பறித்துச் செல்ல வேண்டியிருக்கும்.

ஆனால், நசிகேதனோ அவனே விரும்பி எமலோகம் சென்றான்.

நசிகேதன் எமலோகத்துக்குப் போன நேரத்தில எமன் அங்கே இல்லை. இரண்டு நாட்கள் நசிகேதன் எமனுக்காகக் காத்திருந்த பின், மூன்றாம் நாள் எமன் வந்து சேர்ந்தான்.

எமனின் வேலையாட்கள், “உங்களைப் பார்க்க ஒரு விருந்தாளி வந்திருக்கிறார். உங்களைப் பார்க்காமல் எதுவும் ச ாப்பிட மாட்டேன் என்று உண்ணாவிரதம் இருக்கிறார்'' என்றனர்.

“விருந்தாளியை கவனிக்காமல் விடுவது எவ்வளவு பெரிய தவறு? அதுவும் எமலோகத்துக்கே வந்த விருந்தாளியை கவனிக்காமல் விட்டது எவ்வளவு பெரிய தவறு?'' என்று யோசித்த எமதர்மன் மிகுந்த வருத்தத்திற்குள்ளானார்.

நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் எமதர்மன் நாடகங்களின் வேடிக்கை கதாபாத்திரமல்ல உவமை விளக்கப்படி எமதர்மன் மிகப் பெரிய குரு.

மூன்று வரம் :

வேக, வேகமாக ஓடி வந்தார் எமன். “எல்லோர் வீட்டுக்கும் நான்தான் விருந்தாளியாக, அதுவும் அழைக்காத விருந்தாளியாகப் போவேன்.

ஆனால் நீயோ என் வீட்டுக்கே அழைக்காத விருந்தாளியாக வந்து சேர்ந்திருக்கிறாய். உன்னை மூன்று நாட்கள் கவனிக்காமல் விட்டது மகாபெரிய தவறு. நீ மூன்று நாட்கள் காத்திருந்தால் மூன்று வரங்களைக் கொடுக்கிறேன். என்ன வேண்டும்? வாங்கிக் கொள்!'' என்றார் எமன்.

மூன்று வரம் கேட்கிறான் நசிகேதன்.

முதல் வரம்'' என்னை என் அப்பாவிடம் திருப்பி அனுப்பு''.

இரண்டாம் வரம் “ சொர்க்கம் போக வழியைச் சொல்லு''.

மூன்றாம் வரம் “மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை சொல்''.

மூன்றாவது வரத்தைக் கேட்ட எமன் சிறிது நேரத்துக்கு ஆடித்தான் போனார்.

“நீ கேட்கும் முதல் இரண்டு வரங்களையும் கொடுத்து விடுகிறேன்; நீ கேட்ட மாதிரி உன்னை உன் தந்தையிடம் அனுப்புகிறேன். சொர்க்கத்துக்கான வழியையும் சொல்கிறேன்.

ஆனால், மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை மட்டும் கேட்காதே. அது தேவர்களுக்கு கூட தெரியாதது'' என்றார்.

“நீ மூன்று வரங்களைக் கொடுக்கிறேன் என்று ஏற்கெனவே வாக்கு கொடுத்து விட்டாய். எனவே, மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை நீ சொல்லியாக வேண்டும்'' என்றான் நசிகேதன்.

“ உனக்கு பத்தாயிரம் தேர்கள் தருகிறேன்.

பத்தாயிரம் வேலையாட்கள் தருகிறேன்.

உனக்கென தனியாக ஒரு ராஜ்ஜியம்கூட அமைத்து கொடுக்கிறேன்.

என்ன வேண்டுமானாலும் நீ கேள்...

ஆனால், மரணத்தின் ரகசியத்தை மட்டும் கேட்காதே!'' என்று மன்றாடிக் கேட்க ஆரம்பித்தார் எமன்.

மரணத்தின் ரகசியத்தைத் தெரிந்து கொண்டவர்கள் ஞானிகளாக மாறிவிடுவார்கள். அவர்களின் ஆத்மா அனுபூதி அடைந்துவிடும்.

ஆனால், நசிகேதன் என்னின் சாக்குபோக்குகளை கேட்கிற மாதிரியில்ல..

“ நீ எனக்கு எத்தனை தேர்கள் தந்தாலும், வேலையாட்கள தந்தாலும், ராஜ்ஜியம் அமைத்துக் கொடுத்தாலும், அதிகபட்சமாக ஆயிரம் ஆண்டுகள் வரை அதை வைத்திருக்க முடியுமா? ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் நீ கொடுத்தவற்றை மீண்டும் உன்னிடம் நான் கொடுத்துத் தானே, ஆக வேண்டும். மனிதனும்

ஏதாவதொரு வகையில் உன் பொருட்களுக்கு நான் அதிபதியாக சில காலம் இருக்கலாமே ஒழிய மரணத்தின் ரகசியத்தை நான் அறிய முடியுமா?'' என்று கேட்டான் நசிகேதன்.

இந்த தொடர் நிசகேதனின் அசைக்க முடியாத உறுதியையும்,

பயம் சக்தியை
விரயமாக்கும்.
தைரியம்
சக்தியைப் பலப்படுத்தும்,
ஒவ்வொரு

தினம் தினம்
பயப்பட்டுக்
கொண்டிருக்கிறான்.

பயங்களுக்கு பெயர்தான் பக்குவத்தையும் நமகு தெரிந்து கொண்ட என்ன, பயத்தாக்குதல். அவனுக்கு மரணத்தின் ரகசியத்தை அனுபவமாக பயத்தாக்குதலிருந்து எந்தவொரு மனிதன் எடுத்துச் சொன்னார்.

தப்பிக்கின்றானோ என்ன கொடுத்த அனுபவத்தால் பால அவனின் உடலும் பருவத்திலேயே ஞானியாக மலர்ந்தான் நசிகேதன். மனமும் உற்சாக த்தால் நிரம்பும். இது கதையா, புராண காலத்தில் நடந்த உண்மைச் சம்பவமா? இல்லை சரித்திரமா? என்று நீங்கள் கேட்கலாம்.

இதற்கு பதில் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இதிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்கிறோம் என்பதுதான் நமக்கு முக்கியம்.

பொதுவாக மனிதர்கள் மரணத்தை எதிர்கொள்ள பயப்படுவார்கள். ஆனால், நசிகேதன் மரணத்தைத் துணித்து எதிர்கொண்ட போது மரணம் அங்கில்லை.

மரணத்தை தைரியத்தோடு நாம் சந்திக்கச் சென்றால் அங்கு மரணம் இருக்காது.

✦ மரணம் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பவை முழுக்க, முழுக்க கற்பனையினாலேயே உருவாக்கப்பட்ட கருத்துக்கள்தான். உண்மையான மரண அனுபவம் என்பது நம்முடைய கற்பனைக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாததாக இருக்கும்.

✦ மரணம் நமக்கு தீமைகளை விளைவிக்கும் என்றே சமுதாயத்தால் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். எனவே தான் நாம் அதைப் பற்றிய நினைவு வந்தவுடன் நடுங்கி, ஒடுங்கிப் போகிறோம்.

✦ பாதுகாப்பு குறையும் எந்த ஒரு பிரச்சினையையும் மரணத்தோடு மனம் முடிச்சுப்போட்டுப் பார்ப்பதால் தான் பலம் பிறக்கிறது. ஆனால், மரணத்தை தைரியமாக நாம் எதிர்கொள்ளத் துணிந்தால், அது நமக்குத் தீமைகளைத் தராது. அதற்கு பதிலாக வரங்களையே தரும்.

✦ மரணம் நமக்கு வரங்களைத் தருவதோடு மட்டுமல்லாமல், ஆத்ம ஞானத்தையும் அளிக்கும் குருவாகவும் இருக்கும்.

இந்த நான்கு செய்திகளையும் சுவையாக சொல்வதற்காகத்தான் இந்தக் கதை.

என்ன என்றால் நம் உயிரைப் பிடுங்கிக் கொண்டு செல்லும் கொடுமைக்காரனாகத்தான் கேட்டிருக்கிறோம். ஆனால், நசிகேதனுக்கு என்னே ஞானகுருவாகவும் இருந்திருக்கிறார்.

நசிகேதனுக்கு ஞானகுருவாக இருந்தவன் நமக்கு இருக்க மாட்டானா?

நிச்சயம் இல்லை.

மரணத்தைப் பற்றி சரியாகப் புரிந்து கொண்டு, எந்த பலமும் இல்லாமல் துணிந்து அதை சந்திக்கப் புறப்பட்டால் என்ன நமக்கு ஞானகுருவாக நின்று, ஆத்மஞானத்தை அளிப்பான்.

நாம் மரணத்தைக் கண்டு அஞ்சி ஓடுகிறோம். நசிகேதனோ மரணத்தை தேடிப் போனான். இதுதான் அவனுக்கும், நமக்கும் மிகப் பெரிய வித்தியாசம்.

நாம் இறக்கின்ற காலம் நம்மைத் தேடி வருவதற்கு முன்பு நாமாகவே எமலோகம் செல்ல நினைப்பது தன்னுடைய உயிரைத் தானே மாய்க்கும் தற்கொலை முயற்சி தானே!

நசிகேதன் செய்ததும் தற்கொலை தானே!

"மரணம் எவ்வளவு ஆத்ம ஞானத்தைக் கொடுப்பதாக இருந்தாலும் தற்கோலையை முன்வைப்பது தவறல்லவா?" என்று நீங்கள் கேள்வி கேட்கலாம்.

நசிகேதன் செய்தது தற்கொலை அல்ல" மரணத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக நசிகேதன் எமலோகம் செல்லவில்லை.

மரணத்தை எதிர்கொள்வதென்பது மரண உணர்வையும், பயத்தையும், உயிர் பிரியும் போது நமக்குள் நடக்கும் நிகழ்ச்சியையும் ஆழமாக கவனித்துப் பார்க்கும் தெரியம்.

சுருங்கச் சொன்னால்...

நசிகேதன் பயத்தை தைரியமாக எதிர்கொண்டான்.

ரமண மகரிஷி :

மரணத்தை எதிர்கொள்ளம் நிகழ்ச்சியை ஒரு தியானமாகவே வகுத்துள்ளார் ரமண மகரிஷி.

பதினாறு வயதாக இருந்தபோது மரணம் அடைந்து ஞானம் பெற்றவர் ரமண மகரிஷி.

ரமண மகரிஷி பிறந்தது திருச்சுழியில். மதுரையில் அவருடைய உறவினர் வீட்டில் இருக்கும் போது திடீரென அவரது உள்உணர்வில் மரணம் என்றால் என்ன? என்கிற அனுபவம் இயல்பாக விரியத் தொடங்கியது.

முதலில் கை, கால் செத்துவிட்டது. பிறகு மார்பு, தலை. இறுதியில் உடல் முழுவதும் செத்துப் போனது.

உடலிலிருந்து ஏதோ ஒன்று வெளியில் வந்து விழுந்த மாதிரி ஓர் உணர்வு.

தனக்கு நேர்ந்து கொண்டிருப்பதை உணர்கின்ற உணர்வின் மூலமாக அவர் தன்னைத் தானே சாட்சியாகப் பார்த்தார்.

தன் உடல் எரிந்து போவதை, எரிந்து சாம்பலாவதை நிதர்சமனாக்க கண்டார். மரணத்தின் தன்மையை, அதன் அனுபவத்தை, அணுஅணுவாக அனுபவித்தார்.

பளிச் என்று ரமணரின் ஆத்ம அனுபூதி பேரொளியாக வீசியது.

உடல் அழிந்தாலும் தான் என்ற அழியாத இந்த உணர்வுதான் ஆத்மா. இது என்றும் அழிவதில்லை என்ற தெளிவு அவருக்குள் பிறந்தது. அந்தத் தெளிவுதான் ரமணரை ஞானியாக மாற்றியது.

இதே அனுபவம் நமக்கு ஏற்பட்டிருந்தால்!

நாம் அமைதியாக இருந்து, நமக்குள் என்ன நடக்கிறது என்பதை கவனித்துப் பார்த்திருப்போமா?

உயிர் போய் விடப் போகிறது என்கிற பயத்தில் கத்திக்களேபரம் செய்திருப்போம்.

ரமணர், நசிகேதன் மாதிரி ஆன்மபலம் கொண்டவர்.

அவரால் எந்தக் கடுமையான அனுபவத்தையும் அமைதியாக கவனிக்க முடியும். ஆனால், சாதாரண மனிதர்களால் அது முடியாது.

நமக்கு உண்மையிலேயே மரணம் நேர வேண்டாம். அந்த நிகழ்ச்சி கொடுக்கும் அனுபவத்தைக் கண்டு ரசி க்க, நாம் இன்னும் நிறைய பக்குவம் அடைய வேண்டியிருக்கிறது.

ஆனால், உண்மையிலேயே மரணம் நேர வேண்டாம். அந்த நிகழ்ச்சி கொடுக்கும் அனுபவத்தைக் கண்டு ரசிக்க நாம் இன்னம் நிறைய பக்குவம் அடைய வேண்டியிருக்கிறது.

ஆனால், அந்த அனுபவத்தை அடையாமலேயே மரணத்தின் மீது நமக்கு இருக்கும் பயத்தைப் போக்கிக் கொள்வதற்காகவே ஒரு தியானத்தை சொல்லித தருகிறேன்.

அந்த தியானத்தின் பெயர் நிர்பயா தியானம்.

இந்தத் தியானத்தை நீங்கள் முழுமையாக செய்தால், வாழ்வில் இதுவரை நீங்கள் பார்க்க மறத்த விஷயங்கள், உங்கள் பார்வையில் படாத கோணங்கள் என பலவும் இப்போது உங்களுக்குத் தெரிய வரும்.

பட்டாம்பூச்சி ஞானி :

ஒரு நாள் காலையில் ஒரு ஜென் ஞானி ஓ வென்று அழுது கொண்டிருந்தார்.

சுற்றியிருந்த சீடர்கள் எல்லாம், ‘ ’ஏன் அழுகிறீர்கள் நீங்கள் ஞானியாயிற்றே! அழலாமா? ’ ’ என்று கேட்டனர்.

‘‘நேற்ற இரவு ஒரு கனவு கண்டேன் கனவில் நான் ஒரு பட்டாம் பூச்சியாக மாறிவிட்டேன் ’ ’ என்று ஞானி செ ான்னவுடன், எல்லா சீடர்களும் சிரித்தார்கள்.

‘‘நீங்கள் பட்டாம்பூச்சியாக மாறியது கனவில் தானே அதற்கு ஏன் இப்போது அழுகிறீர்கள்? ’ ’ என்று கேட்டனர் சீடர்கள்

மெதுவாக தன்னுடைய சந்தேகத்தை சொன்னார் ஞானி, ‘‘ இப்போதுள்ள ஞானி என்ற நான், படாம் பூச்சியாக கனவு கண்டு கொண்டிருந்தேனா? அல்லது பட்டாம் பூச்சிதான் இந்த ஞானியாக கனவு கண்டு கொண்டிருக்கிறதா?

எது கனவு?

எது உண்மை?

ஒன்றுமே புரியவில்லை.

அதனால் அழுது கொண்டிருக்கிறேன் ’ ’ என்று சொன்னதைக் கேட்டவுடன் சீடர்கள் சிரிப்பதை விட்டு விட்டு யோசிக்கத் தொடங்கி விட்டார்கள்.

‘‘ நாம் இப்பொழுது வாழ்வது வாழ்வா கனவா! ’ ’ என்று யோசிக்க ஆரம்பித்தனர். யோசித்ததும் கனவு விளங்கத் துவங்கியது, சீடர்களுக்கு. மாயா கனவே விலகியது பலருக்கு.

ஒரு சின்னக் கனவுதான், வாழ்க்கையின்ன எவ்வளவு பெரிய ஞான விளக்கத்தை கொடுத்துவிட்டது.

அதே மாதிரி சில சமயங்களில் தத்ரூப கற்பனைகளும் இரண்டு வார்த்தைகள் உண்டு.

சமஸ்கிருதத்தில் கற்பனை என்றும், பாவனை என்றும் இரண்டு வார்த்தைகள் உண்டு.

கற்பனை என்பது இல்லாத ஒன்றைப் பற்றி நாம் நினைக்கும் எண்ணம். பாவனை என்பது இருக்கிற ஒன்றைப் பற்றி நாம் லயித்துப் பார்ப்பது.