KAILASA Library/பூங்௯்௪சிட் ங௯்௪சிடபூத/மணிப்பூரக சக்திக் கிரியா தியானம்Sign in
பூங்௯்௪சிட் ங௯்௪சிடபூத

மணிப்பூரக சக்திக் கிரியா தியானம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மணிப்பூரக சக்கரத்திற்கான தியானம் கிறிஸ்தவ மதம் மனித குலத்துக்கு வழங்கிய நன்கொடை.

மனிதனின் கவலையைப் போக்கி மாணிக்கம் போல திகழ வைக்கம் தனித்துவம் பெற்றது இந்த தியானம்.

மணிப்பூரக சக்திக் கிரியா தியானத்திற்கு முன்பு ஓர் எளிய அறிவுப்பூர்வமான பயிற்சி.

இந்தப் பயிற்சி இனி வரப் போகும் கவலைகளில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு பெரிதும் உதவும்.

முதலில், இருபத்தி நான்கு மணி நேரமும் ஓய்வே இல்லாமல் உங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ண ஓட்டத்தை கவனமாக ஆராயுங்கள்.

தொந்தரவும் எரிச்சலும் தருகிற வார்த்தைகள், சம்பவங்களின் நினைவுகள் எவையெவை என்பதைக் கண்டு பிடியுங்கள்.

திரும்பத் திரும்ப வரும் சில வார்த்தைகளை நினைவுகளைத் தனித்தனியாக பிரித்து விடுங்கள்.

பின் அந்த வார்த்தைகள் நினைவுகள் மனதில் வரவர ஒடித்து, ஒடித்து வெளியே போடுங்கள்.

ஒரு விளக்கமாற்று குச்சியை தனித்தனியாகப் பிரித்து சிறு, சிறு குச்சிகளாக உடைத்து விளையாடுவது போன்று இதைச் செய்யலாம்.

அதாவது கண்டுபிடிக்கப்பட்ட துன்புறுத்தும் வார்த்தைகள் மனதில் வரும் நொடியிலேயே இனம் கண்டு அதை மனதை விட்டேத் தூக்கி எறியுங்கள்.

தொடர்ந்து முயற்சி செய்தால் துன்புறுத்தும் வார்த்தைகளை தூக்கியெறியும் கலையை எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும்.

பத்து, பதினைந்து நாட்கள் இதே மாதிரி தொடர்ந்து செய்தால், உங்கள் மனதில் புதிய சூழ்நிலை உருவாகும். மீண்டும் அந்த இடத்தில் கவலை ஏற்படுத்தக் கூடிய வார்த்தைகள் தோன்றாது.

மற்றவர்கள் தவறு செய்யும் போது மற்றவர்களை துன்புறுத்தும் வார்த்தைகளால் திட்டுகிறோம். நாம் தவறு செய்யும் போதும் அதே துன்புறுத்தும் வார்த்தைகளைத்தான் நமக்குள் பிரயோகப்படுத்தி துன்புறுவோம்.

கர்ஸ்ங் ற்ட்ஹ் யங்ங்ட்கூஷர்ன்ழ் ஹள் ற்ட்ஹ்ள்ங்ப்conf என்று இயேசு சொல்கிறார். ஏன்?

மற்றவர்களுக்கு என்ன நீங்கள் செய்கிறீர்களோ அதையேதான் உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளுவீர்கள்.

அதனால்தான்மற்றவர்களை நேசியுங்கள், உங்களை நேசிப்பதைப் போல இயேசு சொல்லியிருக்கிறார்.

மற்றவர்களை துன்புறுத்தினால் நீங்கள் துன்புறுவீர்கள். மற்றவர்களை மதித்தால் நீங்கள் மதிக்கப்படுவீர்கள்.

எனவே உங்களை நேசிப்பது போல பிறரையும் நேசியுங்கள் என்பதின் சாரம் இதுவே.

மிக மோசமான வார்த்தைகளால் நீங்கள் திட்டு வாங்க விரும்புவதில்லை.

ஆனால், கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் அந்த வார்த்தைகளை நமக்குத் கீழே இருக்கும் எளிய மனிதர்கள் மீது அள்ளி எளிகிறோம்.

எந்த விஷயத்தையும் பாஸிட்டિવ்வாகவே பேச வேண்டும் என்று நம்முடைய பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஏனென்றால் நீங்கள் என்ன பேசுகிறீர்களோ, அதுதான் உங்களை வந்து சேரும்.

விளக்கு வைத்த பின் கண்டபடி பேசக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

நம்மை நாமே தியானத்தில் இயற்கையாக ஆழ்த்திக் கொள்ள நம்முடைய முன்னோர்கள் கற்றுக் கொடுத்த மிக எளிமையான பயிற்சிதான் இது.

மற்றவர்கள் மீது நாம் எறியும் துன்புறுத்தும் வார்த்தைகளை ஒவ்வொன்றாகத் தூக்கி எறிந்துவிட்டால், நம் மனம் சாந்தமடையும்.

நம் மீது நமக்கே கருணை, அன்பு வரத் தொடங்கும். அந்த அன்பு மற்றவர்கள் மீதும் பாயத் தொடங்கும்.

சுருக்கமாக சொல்வதென்றால், வார்த்தைகளை நெறிப்படுத்தி சரியாக வடிவமைக்கும் ஒரு பயிற்சிதான் இந்த தியானம்.

எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கண்டபடி சாப்பிட்டதால் நம் வயிறு அஜரணப்பட்டு, உப்புசமாகிக் கிடக்கிறது. அப்போது என்ன செய்ய வேண்டும்? வயிற்றை சுத்தப்படுத்துவது தவிர வேறு வழியில்லை.

அதே மாதிரி மனம் முழுவதும் நிறைய வார்த்தைகளால் நிரம்பி குப்பை கூளமாகி இருக்கிறது. இந்தக் குப்பையைப் பெருக்கி வெளியே கொட்டுகிற வரை நமக்கு அமைதி இல்லை.

கிறிஸ்தவத்தில் பாவ மன்னிப்பு கோருதல் என்ற ஒரு வழக்கம் உண்டு. தான் செய்துவிட்ட தவறுகளின் துக்கத்தை வார்த்தைகளாக வெளியே கொட்டுவதுதான் பாவ மன்னிப்பு கோருவது.

நாம் செய்த தவறுகளை அறிக்கை செய்தவுடன் நம் மனதில் உள்ள பாரம் குறைந்துவிடுகிறது.

கிறிஸ்தவர்களின் சில பிரிவினர்களிடையே தெய்வ மொழி போசுதல் அல்லது அன்னிய பாசை பேசுதல் என்பது ரொம்பப் பிரபலமான ஒரு தியான முறை. விழிப்புணர்வோடு செய்யும் பட்சத்தில் இறைசக்தியோடு நாம் நேரடியாக தொடர்பு கொள்ள இந்த தியானம் உதவும்.

இதை ஒரு தியான முறையாகவே உருவாக்கித் தந்திருக்கிறார் ஒரு ஞானி.

அவர் ஒரு கிறிஸ்தவப் புனிதர்.

செயின்ட் பிராண்ஸிஸ் ஆப் அஸ்ஸிஸி என்ற கிறிஸ்துவ மத ஞானியால் முறையாக வடிவமைக்கப்பட்ட இந்த தியானம் மணிப்பூரக சக்கரத்தில் ஆழ்ந்து வேலை செய்யும் திறன் பெற்றது.

மணிப்பூரக சக்கரத்தை சக்தியூட்டி சுத்தம் செய்வதால் இந்த தியானத்தை மணிப்பூரகா சக்திக் கிரியா தியானம் என்று அழைக்கிறோம்.

இந்த தியானத்திற்கு கிலாஸலோலியா என்ற பெயரும் உண்டு.

நமது மணிப்பூரக சக்கரத்தினுள் இருக்கும் மாசுக்களை, எதிர்மறை எண்ணங்களை, நாம் சேர்த்துள்ள கவலைகளை, வெளியில் கொட்டும் அழகான தியானம்தான் இது.

இந்த தியானத்தை சாப்பிடுவதற்கு முன்புதான் செய்ய வேண்டும்.

சாப்பிட்ட பிறகு இந்த தியானத்தை செய்தால் வாந்தி எடுத்துவிட நேரிடும்.

காரணம் மணிப்பூரகச் சக்கரமும் வயிறும் நேரடி தொடர்பில் இருப்பவை.

தினமும் குளித்து உடலை சுத்தப்படுத்திக் கொள்வதுபோல், இனி நாம் மனதையும் சுத்தப்படுத்த வேண்டும்.

இந்த தியானத்தை மனக்குளியல் என்றழைக்கலாம்.

புரியாத மொழியில் நம் மனதில் இருக்கும் அசிங்கங்களை எல்லாம் வெளியே கொண்டு வந்து கொட்டினால் மணிப்பூரக சக்கரம் சுத்தமாகும். மன அழுத்தங்கள் ஆவியாகி வெளியேறும். சந்தோஷம் பிறக்கும்.

கவலை என்ற தடைக்கல் விலக, சந்தோஷம் தானாகப் பொங்க ஆரம்பிக்கும்

(கவலைகளை களைந்தெரிவதற்கு இன்னும் பல அற்புதமான தியானங்கள் தியானம் உங்களுக்காக புத்தகத் தில் இருக்கிறது படித்துப் பயன் பெறுங்கள்).

தியான அனுபவங்கள்...

"சாமி... மழை பெய்ந்து ஓய்ஞ்சா மாதிரி என் மனசுக்குள் ஒரு அமைதி இருக்கிறது. மணிப்பூரக தியானம் முடிந்து கடைசி பத்து நிமிடங்கள் ஓய்வாக இருந்த போது எனக்குள் நான் அனுபவித்த அமைதியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது..."

  • ரேவதி ( மும்பை அநட- ல்)

"நல்லது! மனதின் ஓட்டம் குறைந்திருக்கிறது".

★ "தியானத்தின் கடைசி பத்து நிமிடங்களில் விதவிதமான மலர்களின் நறுமணங்களை உணர்ந்தேன். இந்த அறையில் நறுமணங்களை அந்த நேரத்தில் தெளித்தீர்களா?..."

திவாரி
-
(
ஒஹாயோ
அநட -ல்)

(ஹா... ஹா... ஹா... சிரித்துவாறே பரமஹம்ஹர் பதிலளித்தார்)

"நறுமணங்கள் ஏதும் தெளிக்கவில்லை.... உங்களுடைய இந்திரியங்கள் விழித்துக் கொண்டதற்கான அடையாளம் தான் இது!

ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒவ்வொரு மலருக்குரிய தனித்தனி வாசனைகள் உண்டு. அந்தந்த சக்கரங்கள் செயல் பட ஆரம்பிக்கும் போது சிலருக்கு இது போன்ற அனுபவங்கள் கிடைக்கும்".

✦ “சாமி... மீண்டும் ஒரு முறை குழந்தைப் போல மாறினோம். எங்களுடைய கவலைகளை இவ்வளவு சுலபமாக வெளிக்கொட்ட முடியும் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது. வெறும் 21 நிமிடங்களில் எங்கள் கவலைகளையெல்லாம் ஐஸ்கட்டி கரைவது போல கரைந்து விட்டீர்களே நன்றி சுவாமி!’’

கோதை ஆச்சி
(
ஏற்காடு அநட -ல்)

‘‘ நல்லது. நீங்கள் தியானத்தை முழுமையான செய்திருக்கிறீர்கள். இந்த தியானத்தில்ட எந்தவித தயக்கமும் இல்லாமல் குழந்தைப் போல நீங்கள் ஈடுபட்டால்தான் ஒரே முறை செய்ததிலேயே இவ்வளவு நல்ல தங்ள்ப்ற் கிடைத்திருக்கிறது.’’

✦’’ சாமி... அடிவயிற்றில் மிகப் பெரிய துளை விழுந்தது போல இருந்தது. என்னுடைய உணவுக் குழாய் முழுக்க ஒரே கசப்பாக இருப்பதை உணர்கிறேன்’’.

சிங்வலம்பானி
(
சியாட்டல் அநட -ல்)

‘‘உங்களுடைய கவலைகள் மணிப்பூரக சக்கரத்திற்குள் புதைந்து கிடைக்கின்றனர்!

இந்த தியானத்தில் புதைந்திருக்கும் கவலைகள் தோண்டப்படுகின்றன. கவலைகள் உடலின் மேற்பகுதிக்கு வரும்போது அவை உடலில் கெட்ட வேதிப் பொருட்களை சுரக்கச் செய்கின்றன. கவலைகள் கெட்ட வேதிப்பொருட்களாக கொட்டித் தீர்க்கப்படுகின்றன.

இந்த நிகழ்வு இந்த தியானத்தை செய்யும் எல்லோருக்கும் நிகழும்.

உணர்வு பூர்வமாக வாழக் கூடிய மக்களுக்கு மாத்திரமே இது போன்ற நுண்ணிய மாற்றங்களும் தெரிய வரும்.

கவலைப்பட வேண்டாம். உடலுக்குள் நல்ல மாற்றங்கள் தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன’’.

✦ “என்குள் இவ்வளவு கஷ்டங்களும் கவலைகளும் ஒளிந்து கொண்டிருக்கிறது? மணிப்பூரக தியானம் செய்யச் செய்ய மடைதிறந்த வெள்ளம் போல் ஒவ்வொரு கஷ்டங்களாக வந்து கொண்டேயிருக்கிறது.

இவ்வளவு துக்கங்களை உள்ளுக்கு வைத்துக் கொண்டு வெளியே நான் நன்றாக இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கின்றண.

என்னுடைய உள் அவல நிலையை வெளிச்சம் போட்டு காட்டிய குரு நாதருக்கு நன்றி.

அநட -ம் தியானங்களை ஒவ்வொரு மனிதனும் ஒரு முறையாவது செய்து பார்க்க வேண்டும். அப்போது தான் ஒரு மனிதன் தன் அவலநிலையையும், தன் இயலாமைகளையும் தானே பார்க்க முடியும்.

புனித குலத்தின் நலனுக்காக நீங்கள் செய்யும் சேவைக்கு. நன்றிகள் கோடி காணிக்கையாக்குகிறேன்....’’