கவலையைப் பற்றி கவலைப்படாதே
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மணிப்பூரக சக்கரம்.
அடுத்து மணிப்பூரக சக்கரத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
இந்தச் சக்கரம் நமது தொகுப்புகளுக்கு இரண்டு விரல்கடை - மேலே அமைந்திருக்கிறது.
தொப்புளுக்கு மேல் அமைந்திருக்கிறது என்றவுடன், "வயிற்றை அறுத்துப் பார்த்தால் இந்தச் சக்கரத்தை பார்க்க முடியுமா" என்று கேட்டால், நிச்சயம் பார்க்க முடியாது.
நான் விரிவாக விளக்கும் சக்கரம் ஒவ்வொன்றுமே சக்தியின் மையங்களே அன்றி உடல் உறுப்புகள் அல்ல.
மணிப்பூரக சக்கரம் வயிற்றோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டது.
பிறக்கும் போது மிக அருமையாகத் திறந்து இருக்கும் இந்தச் சக்கரம் தேவையில்லாத கவலையாலும், மன அழுத்தத்தாலும் நாம் வளர, வளர மூடிவிடுகிறது.
- மகிழ்ச்சி (ஒருவ) இந்த சக்கரத்தை திறக்கிறது. மகிழ்ச்சிதான் இந்தச் சக்கரத்தை திறக்கும் திறவுகோல்.
- வாழ்வில் சந்தோஷத்தை இழக்கும் நிமிடங்களை கவலை பற்றிக் கொள்கிறது. கவலை இந்தச் சக்கரத்தை மூடி விடும்.
- மகிழ்ச்சி - மணிப்பூரக சக்கரத்தின் திறவுகோல்.
கவலை - மணிப்பூரக சக்கரத்தின் தடைக்கல்.
கவலை :
கவலை என்பது என்ன?
நம் எண்ண ஓட்டத்தில் நம்மால் ஜீரணிக்க முடியாத, அதிகம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வார்த்தைகள்தான் கவலை.
மனதில் திரும்பத் திரும்ப வரும் வார்த்தைகள்தான் கவலை.
நமக்குள் எப்போதுமே இரண்டு விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.
ஒன்று, வாய் திறந்து பேசுவது.
மற்றொன்று வாய் மூடிக் கொண்டே பேசுவது.
வாயைத் திறந்து பேசுவதுதான் உரையாடல். அதாவது, மற்றவருடன் பேசுதல்.
வாயை மூடிக் கொண்டு பேசுவதுதான் எண்ண ஓட்டம். அதாவது, நமக்குள்ளேயே ஓடும் சிந்தனை ஓட்டம்.
திரும்பத் திரும்பவரும் சிந்தனைகளும், எண்ணங்களும் தான் மனிதனை கவலைக்குள்ளாக்குகிறது. மனிதனை துன்புறுத்தும் எண்ண ஓட்டம்தான் கவலை.
காரணம்?
கவலைக்கான காரணம் என்னவென்று விசாரித்தால் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு காரணத்தை செ ால்வார்கள்.
ஒருவர், குழந்தை இல்லை என்பார். இன்னொருவர், நிறைய குழந்தைகள் இருக்கின்றன என்பார்.
நிறைய கடன்பட்டவர்கள் கடனை எப்படி அடைக்கப் போகிறோம் என்று கவலைப்படுவார்கள்.
கடனே இல்லாத பணக்காரர்கள் இவ்வளவு பணத்தை எப்படி பத்திரமாக்க காப்பாற்றுவது என்று கவலைப்படுவார்கள்.
தொடர்ந்து கொஞ்ச நேரம் மகிழ்ச்சியாக இருக்க நேரிட்டால்... உடனே மனமானது... "கவலைப்படுவதற்கு விஷயமே இல்லையே!
இவ்வளவு மகிழ்ச்சியாக நான் இருந்ததே இல்லையே!
அப்போ ஏதோ பெரிய கவலை வரப் போகுதோ?" என்று யோசிக்க வைத்து கவலைப்பட வைக்கும்.
கவலை இல்லாத மனிதன் இந்த உலகத்தில் யாரும் இல்லை. கவலை என்பது எல்லா மனிதர்களிடமும் இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இன்டர்நெட்டில் ஒரு சர்வே செய்தார்கள்.
இந்த உலகத்தில் மிகக் கொடூரமான, நிறைய பேரைத் தாக்கி துன்பதைத் தரக்கூடிய நோய் எது என்பதைக் கண்டறியத்தான் இன்டர்நெட்டில் சர்வே நடத்தினார்கள்.
இன்டர்நெட்டின் முடிவு என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
இன்டர்நெட் சர்வேயில் இந்த இரண்டு நோய்களைப் பற்றி யாருமே புகார் செய்யவில்லை.
இந்த உலகத்திலேயே மிக மோசமான நோய் என்று மன அழுத்தத்தைப் பற்றித்தான் சொன்னார்கள்.
மன அழுத்தத்திற்கு என்ன காரணம் என்று கேட்டால் எந்த ஒரு காரணத்தை் பற்றியும் குறிப்பாக சொல்ல முடியாது.
கவலைக்கும், மன அழுத்தத்திற்கும் காரணம் வெளியில் இருப்பதாகவே நம்பிக் கொண்டிருக்கிறோம்.
"இந்தப் பிரச்சினை சரியாகிவிட்டால் அடுத்து கவலையே இருக்காது...
இந்த காரியம் நடந்து விட்டால் அடுத்து வாழ்வில் என்றும் மகிழ்ச்சிதான்..."
- என்று கவலைக்கான காரணத்தை வெளியே சுட்டிக் காட்டுகிறோம்.
வெளிக்காரணம் என்று ஏதாவது இருந்தால் உலகில் உள்ள ஒரு கோடீஸ்வரனாவது அல்லது ஒரு பெரிய ச ாதனையாளனாவது அதை சரிசெய்து கவலையைத் தாண்டி திருப்தி கண்டிருக்கலாமே.
பணத்தால், பேரால், பதவியால் நான் முழுத் திருப்தி அடைந்தேன் என்று சொல்லும் ஒரு பெரிய மனிதன் கூட வரலாற்றில் இல்லையே ஏன்,
நம்முடைய மனக் கவலைகளுக்குக் காரணம்,
நமக்கு வெளியே இல்லை. நமக்கு உள்ளேயே இருக்கிறது.
கவலை நமக்கிருப்பது நமக்குத் தெரியும் அளவிற்கு, கவலைக்கான காரணமும் நம்முள்தான் இருக்கிறது என்ற உண்மைத் தெரிவதேயில்லை.
அதனால் தான் கவலைக்கான காரணங்கள் வெளி உலகில் இருப்பதாகவே நமக்கு நாமே கற்பித்துக் கொண்டு வாழ்கிறோம்.
சில மனிதர்களையும், வாழ்வின் சில அசம்பாவிதமான சூழல்களையும் தான் நம் கவலையின் காரணகர்த்தாக்கள் என்று கூறித் திரிகிறோம்.
ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.
கவலைக்கான எல்லா வெளி காரணங்களையும் சரி செய்த பின்னும் கூட கவலையின் அளவு கொஞ்சமும் குறையாமல் அப்படியே தான் இருக்கும்.
ஒருவருக்கு வியாபாரத்தில் நஷ்டம் வருகிறது. உடனே அதிருப்தி உண்டாகிறது. இதே எண்ணத்தோடு வியாபாரத்தில் ஈடுபட மீண்டும் நஷ்டம் வருகிறது.
மனமொடிந்து போய் "நான் எது தொட்டாலும் விளங்காது. நான் எதற்கும் பிரயோஜனமில்லை" என்று புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.
இந்தப் புலம்பல் அவரிடம் இருக்கும் சக்தியை பயனற்றதாக மாற்றி விடுகிறது. இதுதான தோல்வி மனப்பான்மைக்கு முதல் படி.
இந்தக் கவலை நம்முள் வளர, வளர மிகப் பெரிய நோயாகவே மாறிவிடும்.
"நான் உதவாக்கரை",
"துரதிர்ஷ்டக்காரன்",
"இயலாதவன்..".
- போன்ற தோல்வி உணர்வுகள் வார்த்தைகளாக மாறி மனதில் மீண்டும் மீண்டும் தோன்றி துன்புறுத்த ஆரம்பிக்கும். நிம்மதியைக் குலைத்துவிடும்.
மொத்த உலகத்தின் எல்லா அடிப்படைத் தேவையையும் பூர்த்தி செய்துவிட முடியும்.
ஆனால், ஒரு தனிமனிதனின் ஆசை யை மட்டும் பூர்த்தி செய்ய முடியாது.
கவலைக்குரிய காரணத்தை வெளியே கண்டுபிடித்து அதை நீக்கி விட்டாலும் கூட கவலையை நீக்கிவிட முடியாது.
நீங்களே உங்களை ஆராய்ந்து அறிய முயற்சி செய்தால் உங்கள் கவலையை நிச்சயம் உங்களால் விரட்டிவிட முடியும்.
சுயபட்சாதாபம் :
"யாருக்காக கவலைப்படுகிறேன்? எல்லாம் என் குடும்பத்துக்காகவும், உலகத்துக்காகவும் தானே கவலைப் படறேன்.
மத்தவங்க மேலே இருக்கிற கருணையால்தான் கவலைப்படறேன்.
மற்றபடி எனக்கு ஒரு கவலையுமில்லை" என்று சுயபட்சாதபம் (நங்ப்ச் டண்ச்ற்ஹ்) தேடும் சிலர் கூறுவதுண்டு.
கருணையால் ஏற்படும் உணர்வு ஒரு உற்சாக சக்தி.
அன்பின் மிகுதியால் மற்றவர்களின் பரிதாப நிலையை உணர்ந்து, அவர்கள் நஷ்டம் பெற தன்னுடைய நேரத்தையும் சக்தியையும் செலவு செய்வது ஒரு உற்சாகமான நிகழ்வு.
இது மகான்கள் ஞானத்தின் வெளிப்பாட்டால் செய்வது.
ஆனால் சுயபட்சாதபம் தேடுபவர்கள் கருணையால், பாசத்தால்தான் கவலைப்படுகிறேன் என்று சொல்வார்கள் ஆனால் சோர்ந்து விடுவார்கள்.
கருணையால் மற்றவர்களை காப்பாற்றும் போது, உழைக்கம் போது, உற்சாகம் பொங்க வேண்டும்.
இதுபோன்ற நேரங்களில் சோர்வும், மந்தத்தன்மையும் தோன்றினால் அது கருணையே அல்ல. கருணை என்ற பெயரில் வெளிப்படுத்தப்படும் சுயபட்சாதாபம் (நங்ப்் ச் டண்ற்ஹ்) என்று தெரிந்துகொள்ளுங்கள். உடலையும், மனதையும்
ஏனோ மனிதன் சுயபட்சாதபத்தை ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையில் குப்பைத் தொட்டி வெளிப்படுத்துகிறான். போன்ற
பயன்படுத்துகிறான். நம்முடைய கவரைகளை மறைக்க சுயபட்சாதபம் பேசி ஒரு கவனம் உணவு மற்றவர்கள் மேல் கருணை இருப்பதாகக் கூறுவது தப்பிக்கும் வயிற்றில் போய் செயல் அல்ல. தானே வலியச் சென்று மாட்டிக் கொள்ளும் செயல் விழு்கிறது!
கவலை தரும் எனவே, கவலையை ஒழிக்க வேண்டும் எனில் மற்றவர்களைப் எண்ணங்கள் பற்றி நாம் கவலைப்படுவதை முதலில் நிறுத்த வேண்டும். மணிப்பூரகத்தில்
உழல்கிறது! அடுத்து, நாம் கவலையிலிருந்து நம்மை நாம்தான் வெளியே எண்ணங்களையும் அழைத்து வர வேண்டும் உணவையும்
ஜீரணிக்கூம் சக்தியாகிய நம் கவலைகளை ஒழிக்க, நம் எண்ண ஓட்டத்தில் ஓடிக் ஜடாராக்கினி கொண்டிருக்கும் துன்புறுத்தும் வார்த்தைகளை நாமே குறைந்துவிட்டால்... கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும். உணவு
அஜீரணமாகவும் நாம் பிரயேஜனம் இல்லாதவன். நான் முட்டாள். எண்ணங்கள் நான் துரதிர்ஷ்டசாலி.... என்று நம் எண்ண ஓட்டத்தில் ஓடிக் கவலையாகவும் கொண்டே இருக்கும் சில தவறான வார்த்தைகள் கண்டு மாறுகின்றன. பிடிக்கப்பட்டு களையப்பட வேண்டும். தியானத்தால் மட்டுமே
ஜடாராக்கினியை எப்படி இது சாத்தியம் என்கிற கேள்விக்கு இனி பதில் அதிகப்படுத்த முடியும். சொல்கிறேன்.
சுயமரியாதை :
நமக்குள் ஓடும் எண்ண ஓட்டங்களை, பேச்சுக்களை உடனடியாக மாற்ற முடியாது. காரணம், பன்னெடுங்காலமாக அதை நாம் பதிவு செய்து பயன்படுத்தி வருகிறோம்.
மேலும், நம் மீதே நமக்கு சுயமரியாதை இல்லை என்பதால்தான் மனசுக்குள் நம்மை நாமே கேவலப்படுத்திக் கொள்கிறோம்.
உள்ளுக்குள் நாம் கேவலமாக உணர்வதால்தான் வெளியே மரியாதையையும், மதிப்பையும் தேடுகிறோம்.
தவறான வார்த்தைகளை வாய் விட்டுச் சொன்னால் சமூகம் ஏற்றுக் கொள்ளாது.
நீ ஒரு அயாக்கியன் என்று யாரையாவது பார்த்து நாம் சொல்ல நினைத்தால், அவன் பதிலடியாகத் தரப்போகும் விளைவைச் சந்திக்க நாம் தாயராக இருந்தாக வேண்டும்.
எனவே, மற்றவரிடம் பேசும் வார்த்தைகள் பற்றி அதிக கவனத்தோடு இருப்போம்.
ஆனால், அதே வார்த்தையை மனசுக்குளட நாம் பயன்படுத்தும் போது அது யாருக்கும் தெரியப் போவதும் இல்லை. அதனால் யாரும் நம்மை ஆட்சேபிக்கப் போவதும் இல்லை.
அதனால்தான் நமக்குள் ஓடும் வார்த்தைகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை.
மற்றவர்களுடன் பேசும்போது மரியாதை தந்து பேசும் நாம், மனதிற்குள் பேசிக் கொள்ளும் போது மட்டும் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமில, இங்கிதமில்லாமல், நடந்து கொள்கிறோமோ, ஏன்?
உள்ளே கேள்வி கேட்க ஆளே இல்லை. அதனால்தான் என்ன வேண்டுமானாலும் யோசிக்கிறோம் ; எப்படி வேண்டுமானாலும் யோசிக்கிறோம்.
வாயின் பேச்சுக்கு நாம் வரையறை வைத்திருப்பது போல, மனத்தில் எண்ணங்களுக்கு வரையறை வைத்திருப்பதேயில்லை.
கட்டுப்பாடே இல்லாத காட்டுக் குதிரை போல இத்தனை வருடங்களாக வளர்க்கப்பட்டதால் தான் நம் மனம் - சில அவமானங்கள், சில தோல்விகளுக்கே வெகுண்டு எழுகிறது.
நம் மனத்தால் வெளியில் நிகழும் எதிர்பாராத நிகழவுகளை ஜரணிக்க முடியவதில்லை. மனத்தின் ஜீரணிக்க முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத தன்மையே கவலை.
கவலையும், அஜீரணமும் :
கவலை வரும் போது, நமக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்படும் போது என்னால் ஜீரணிக்க முடியவில்லை என்கிறோம்.
உலகத்தில் உள்ள பல மொழிகளில் இந்த மாதிரி ஒரு சொற்றொடர் உண்டு. ஆங்கிலத்தில் கூட ஐ ஸ்ரீஹய்ற் க்ண்ஞிவ்ற் என்று ஒரு சொற்றொடர் உண்டு.
கவலைக்கும், ஜீரணத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கவலை மணிப்பூரக சக்கரத்தைத்தான் முதலில் தாக்குகிறது.
கவலை வந்தவுடன் முதலில் நமக்கு வயிறுதான் பாதிக்கப்படுகிறது. நாம் தாறுமாறாக சிந்தனை செய்யும் போதும் வயிறு பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
நெருங்கியவருக்கு ஆபத்து! விபத்து! எனக் கேள்விப்பட்டது என்ன நடக்கிறது நம்முள்.
முதலில் பசி காணாமல் போய்விடும்.
அடுத்து உணவு சாப்பிட பிடிக்காது.
கடைசியாக சாப்பிட்ட உணவு ஜீரணிக்காது.
காரணம் வயிறுகுக்கும் கவலையால் பாதிக்கப்படும் மணிப்பூரக சக்கரத்திற்கும் இருக்கும் சக்தி ரீதியாக தொடர்பு தான்.
ஜீரணிக்கும் சக்தியான ஜடஜார்க்கினி குறைவாக இருந்தால் உள்ளே நுழைந்துவிட்ட உணவை ஜீரணிக்க முடியாமல் வியறு கஷ்டப்படும். அஜீரணம் உருவாகும்.
அதேப்போல் மணிப்பூரக சக்கரத்தில் சக்தி குறைவாக இருக்கும் போது, மனதில் உள்ளே நுழைத்து நம்மை கஷ்டப்படுடத்தும் வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் மனம் தடுமாறும். கவலை உருவாகும்.
ஜீரணமாகாமல் நம்மை துன்புறுத்தும் வார்த்தைகளை தூக்கி எறிவதற்காகவே ஒரு சிறப்பு தியானம் உருவாகும்.
இந்த தியானத்தின் மூலமாக உங்களுக்கும், மற்றவர்களுக்கும் பாதிப்பு விளைவிக்கின்ற வார்த்தைகளை உங்கள் மனத்திலிருந்தே வெளியே தூக்கி எறிந்துவிடலாம்!