துக்கஹரணா தியானம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
துக்கஹரணா தியானம் தந்த்ர சாஸ்திரம் மனித குலத்துக்கு வழங்கிய நன்கொடை. தியானத்தின் பெயரே தியானத்தை விளக்கிவிடும்.
துக்கஹரணா = துக்கம் + ஹரணம் (அதாவது துக்கத்தை ஹரணம் (அழிக்க) செய்யக்கூடிய தியானம் இது).
கற்பனைகள் என்பது வாழ்வின் நடைமுறை அம்சங்களை செம்மையாகச் செய்வதற்காக, இறைவனிளத்த ஒத்திகைப் பார்க்கும் ஓர் அம்சம் மட்டுமே!
✦ எல்லாக் கற்பனைகளுமே அவை உடல் மூலமாக அனுபவமாவதற்கு தேவையான சத்தி பெற்றவை. அதற்கு தேவையான ஹார்மோன்களை உடலுக்குள் சுரக்கச் செய்பவை.
✦ கற்பனைகளும் கனவுகளும் அனுபவிக்கப்பட வேண்டும்.
✦ நிஜத்தில் அனுபவிக்கப்படாத கனவுகளும், கற்பனைகளும். தொடர்ந்து உடலுக்குள் ஹார்மோன்களை உமிழ்ந்து கொண்டேயிருக்கும்.
✦ பயன்படுத்தப்படாத ஹார்மோன்கள் நச்சுக்களாக மாறி உடலுக்குள் தேங்கிவிடும்.
உடலில் தேங்கிவிட்ட நச்சுக்களான, பயன்படுத்தப்படாத ஹார்மோன்களும், தேங்கி விட்ட சக்திகளும் உடலிலிருந்து வெளியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
பஞ்சிலிருந்து நீரைப் பிழிந்தெடுப்பது போல உடலில் தேங்கிவிட்ட நச்சுக்களை பிரித்துவிடும் தனித் தன்மை வாய்ந்தது இந்த தியானம்.
80 நோய்கள் மூலாதாரச் சக்கரம் சம்பந்தப்பட்டவை என்பதால் இந்த தியானம் எல்லா நோய்களின் நச்சுக் காரணிகளை வெளியேற்றி ஆரோக்கியம் தரும்.
தியான அனுபங்கள்...
✦ “சுவாமிஜி இந்த டிசம்பர் மாசக் குளிரில் இவ்வளவு வேர்க்குமென்று யாரும் கற்பனைக் கூட செய்ய முடியாது. சட்டையே நனையும் அளவிற்கு இவ்வளவு வேர்வை தொடர்ந்து எனக்கு வந்ததே இல்லை... துக்கஹரணா தியானம் முடிச்சப் பிறகு என் உடலே பூ மாதிரி இருப்பதாக உணர்கிறேன்”.
பிரபா
(தேவனஹல்லி அநட-ல்)
"நம்முடைய உடலில் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் பல காரமாக தேங்கிக் கிடக்கும் நச்சுக்களை துக்கஹரணா தியாம் பிழிந்து வெளித்தள்ளும்.
உடலுக்கும் இருக்கும் நச்சுக்கள்தான் துர்நீராக வெளியேறுகின்றன.
தியாத்தை எந்த அளவுக்கு ஈடுபாட்டோடு செய்கிறீர்ளோ அந்த அளவுக்கு வியர்வையோடு சேர்ந்து நச்சு க்களும் உடலை விட்டு வெளியேறும்.
பிற்காலத்தில், ஒரு கட்டியாகவோ இல்லை ஒரு நாள் பட்ட நோயாகவோ வெளிப்பட வேண்டிய நச்சுக்கள், இப்போதே உடலை விட்டு வந்து விட்டதற்காக நன்றி சொல்லுங்கள்!’’
✸ “என்றால் தியானத்தை முழுமையாக செய்ய முடியவில்லை. தோள்பட்டையிலும் காலிலும் ஏகப்பட்ட வலி. ஏன் எனக்கும் மட்டும் இவ்வளவு வலி”.
- மேரி
( ஏற்காடு அநட- ல்)
“நீர் ஓடினால் ஆறு. அமுதம்!
நீர் தேங்கினால் குட்டை. விஷயம்!
அதேபோல் தான் உடலுக்குள் சக்தியானது தன் சக்தி ஓட்டப் பாதைகளில் சரியான ஓட வேண்டும்.
உணர்ச்சிக் கொந்தளிப்புகளால் சக்கரங்ளின் இயக்கும் தடைபடும் போது சக்தி ஓட்டப் பாதைகளில் அடைப்புகள் உருவாகும்.
சக்தி ஓட்டப் பாதைகளில் ஏற்படும் அடைப்புகளால் உருவாகும் சக்தித் தேக்கம் துர்சக்தியாக மாறிவிடும். உடலுக்குள் நஞ்சாகி, தெங்கிக் கிடக்கும் இந்த துர்சக்தியை தியான சக்தி எரிக்க ஆரம்பிக்கும்.
தியானம் செய்யும் போது உடலில் எந்தெந்தப் பகுதியில் வலி ஏற்படுகிறதோ அந்தப் பகுதிகளிலெல்லாம் ச க்தி சுத்திகரிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பொருள்.
துர்சக்தி முழுவதுமாக தியான சக்தியால் எரித்து தீர்க்கப்படும் வரை வலிகள் தோன்றலாம்.
சக்தி ஓட்டப் பாதையின் அடைப்புகள் குறைய, குறைய வலி குறை ஆரம்பிக்கும்.
தொடர்ந்து தியானம் செய்து வர வலிகள் மறைந்து புத்துணர்வு பறக்கும். உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும்.
✸ “சாமிஜி, தியானத்தில் கடைசி பத்து நிமடங்கள் சாட்சி மாத்திரமாக அமர்ந்திருப்பதை முழுமையாக செய்ய முடியவில்லை. என்னுடைய இரண்டு கால்களும் மரத்துப் போய்விட்டது”
விஸ்வநாதன்
( மலேசிய அநட - ல்)
“நம்மில் பலர் நம்முடைய உடலை முழுமையாக மதிப்பதில்லை.
உடலின் மதிக்கப்படாத பகுதிகள் நம் கவனத்திலிருந்து விலகி விடுகின்றன. உடலின் கவனம் செலுத்தப்படாத பகுதிகள், தேவையான அளவு சக்தியை பெறுவதும் இல்லை. இது இயற்கையின் நியதி.
காமத்தைப் பற்றி பல குழப்பமான கருத்துக்களால் இன்று சமூகமே குழம்பிக் கிடக்கிறது.
குழப்பம் உச்சிக்கு சென்றுவிட்டதால் காமம் கண்டனத்திற்குரியதாகிவிட்டது.
கண்டனத்திற்குரியவற்றை வெறுக்கச் சொல்லி சமூகம் சிறுவயதிலிருந்தே கற்றுத் தருகிறது.
இதன் விளைவாக நம் உடலில் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகள் மனிதலிருந்து மதிப்பை இழக்கின்றன. போதிய அளவு சக்தி பெறத் தவறுகின்றன. இரண்டு கால்களும், தொடைகளும் சக்தி குறைவை சந்திக்கின்றன.
துக்கஹரணா தியானம் முடிந்தது சாட்சி மாத்திரமாக அமரும் போது மூலாதாரச் சக்கரத்திலிருந்து சக்தி உடலுக்குள் பாய ஆரம்பிக்கும்.
தொடைகளிலும், கால்களிலும் பழுதடைந்து விட்ட சக்தி ஓட்டப் பாதைகள் புதுப்பிக்கப்படும்.
பலநாள் பயன்படுத்தப்படாத சாலையை சரி செய்யும் போது அங்கே வளர்ந்து விட்ட முட்புதர்கள் செடிகளை அகற்ற சில காலம் பிடிக்கும்.
அதேபோல் நாம் மதிப்பளித்து விழிப்புணர்வு சக்தியை சரியாகத் தரத் தவறிய உடலின் பகுதிகளிலும் அப்படித்தான்...
சக்தி ஓட்டப் பாதைகள் முழுமையாக சரியாக சரியாகும் வரை மரத்துப் போதல், குத்துதல் விறுவிறுத்தல் போன்ற சிலருக்குத் தோன்றும். தொடர்ந்து தியானம் செய்ய செய்ய இவை மறைந்துவிடும்''.