காமத்தில் இருந்து கல்வுளுக்கு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மூலாதார சக்கரம்.
இந்த சக்கரம் முதுகெலும்பு முடியும் இடத்தல், கீழ் நுனிப்பகுதியில் இருக்கிறது.
இது சக்திக் களஞ்சியம்.
எல்லா சக்திகளுக்கும் ஆதாரமாக இருப்பது மூலாதார சக்கரம்தான்.
எனவேதான் இந்தச் சக்கரத்தை எல்லா சக்கரங்களுக்கும் அடிப்படையான சக்கரமாகச் சொல்கிறார்கள் (மூல ஆதாரம் - மூலாதாரம்).
✦ பிறக்கும் போது திறந்தே இருக்கும் மூலாதார சக்கரம் காலம் செல்லச் செல்ல, காம விகாரத்தினாலும், கற்பனையாலும் மூடப்படுகிறது.
✦ பயனாகாத பகல் கனவுகள் மற்றும் கற்பனைகளைக் கீழே தூக்கிப் போட்டுவிட்டு நிஜவாழ்க்கையை நேரடியாக அணுகும்போது, இந்தச் சக்கரம் இயல்பாகத் திறக்கிறது.
✦ பகல் கனவுகளையும், இஸ்ல்புக்கும் நடைமுறைக்கும் சாத்தியப்படாத கற்பனைகளையும் தூக்கிஎறிந்துவிட்டு...
நிஜத்தை ஏற்றுக்கொள்ளுதல்-
மூலாதாரத்திற்குத் திறவுகோல்-
பகல் கனவுகளும், கற்பனைகளும்-
மூலாதாரச் சக்கரத்தின் தடைக்கற்கள்.
மூலாதாரச் சக்கரத்தைத் திறக்க முக்கியமான ஒரு தியானத்தைக் கண்டுவிடித்தார்கள் நமது முன்னோர்கள். தந்திர சாஸிரிரத்தில் அந்த தியானம் பற்றி அற்புதமாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது தந்திர சாஸ்திர நூல். இந்த நூலில் சிவபெருமானே உபதேசம் செய்ததுதான் இந்த சக்கரத்திற்குரிய தியானம்.
தந்திர சாஸ்திரம்:
தந்திர சாஸ்திரம் ஐந்தாயிரம் ஆண்டுக்கு முன்பு என்ன சொன்னதோ அதை இன்றைய நவீன விஞ்ஞானிகள் எந்த மறுப்போ, மாற்றுக் கருத்தோ இல்லாமல் பல ஆராய்ச்சிகளுக்குப் பின் ஒப்புக் கொள்கிறார்கள்.
தந்திர சாஸ்திரம் பல விஷயங்களைச் சொல்கிறது. அதில் முக்கியமான ஒரு கருத்து, எந்த ஒரு தனிமனிதனும் தனித்த ஆணும் அல்ல: தனித்த பெண்ணும் அல்ல என்பது.
ஒரு மனிதன் ஆண் என்றால் 51 சதவிகிதம் ஆணாகவும், 49 சதவிகிதம் பெண்ணாகவும் இருக்கிறான்.
யுபண் என்றால் 51 சதவிகிதம் பெண்ணும், 49 சதவிகிதம் ஆணுமாக இருக்கிறாள்.
நமது உலற்கூறு இயலின்படி முழு ஆண், முழு பெண் என்று யாரும் இருப்பது இல்லை.
ஆர்மோன்களைப் பகுத்து ஆராய்ந்து பார்த்தாலும்...
ஆணுக்கும்ம, பெண்ணுக்கும் இருக்கும் வித்தியாசம் அதிகபட்சம் ஒரு சதவிகிதமே என்று நிபுணர்கள் இன்று பல ஆராய்ச்சிகளுக்குப் பின் கூறுகிறார்கள்.
நாம் ஆணா, பெண்ணா என்பது ஒரே ஒரு சதவிகித வித்தியாசத்தைப் பொறுத்ததுதான்.
ஒரு ஆண், ஒரு பெண் என்று இருவரின் மூலாதாரமுன் சேர்வதால் மனிதன் பிறக்கிறான்.
எனவேதான், நமக்குள் ஆணின் குணாதிசயங்களும், பெண்ணின் குணாதிசயங்களும் சரிவிகிதத்ததில் கலந்திருக்கிறது. அப்படிப் பிறப்பவர்களே ஆத்மசக்தி நிறைந்த மனிதர்கள். இதைத்தான் அர்த்தநாரீஸ்வரர் என்று செ ல்கிறது தந்திரம்.
நாம் எல்லோருமே அர்த்தநாரீஸ்வரர்கள்தான்.
நம்மிடமிருக்கும் பெண் பாகத்தை அல்லது ஆண் பாகத்தை அடக்குவதால், ஆணாகவும், பெண்ணாகவும் பிரிந்திருக்கிறோம்.
சமூகம் அப்படி நம்மை பிரித்து வைத்திருக்கிறது. பிளவுபட்டு வாழூச் செய்கின்றது.
ஒரு பெண்ணிடம் அன்பு, கருணை, கனிவு, தாய்மை போன்ற குணங்களை மாத்திரம் சமூகம் வரவேற்கிறது. அதே சமூகம் அந்தப் பெண்ணிடம் துணிவு, வீரம் போன்ற ஆண்கள் சம்பந்தப்பட்ட குணங்கள் சிறந்து விளங்க அனுமதிப்பதில்லை.
இதனால் ஒரு பெண்ணிடம் தேவையே இல்லாமல் சில குணங்கள் அடக்கப்படுகின்றது.
ஆண் ஆழக்கூடாது, பயப்படக் கூடாது என்று ஒரு ஆணிடம் பெண்மை சம்பந்தப்பட்ட குணங்கள் அடக்கப் படுகின்றது.
ஒரு ஆண் தனக்குள் இருக்கும் பெண்மையை இலக்கி விட்டு, அதை வேறு ஒரு பெண்ணிடம் தேடி முழுமை அடைய முயற்சிக்கிறான்.
எதிர்பாலர் மேல் மனிதனுக்கு ஈடுபாடும், ஏக்கமும் தோன்றுவதற்குக் காரணம் உள்ளிருக்கும் அடக்கப்பட்ட ஆண் பெண் குணங்களின் தூண்டுதல்தான்.
ஏன் இப்படித் தேடுகிறான் மனிதன்?
- இது பல காலமாக சிந்தனைவாதிகள் கேட்கும் கேள்வி.
பதில்...
தன்னை முழுமைப்படுத்தி கொள்வதற்காகத்தான்.
பூரணத்துவத்தை அடைவதற்காகத்தான் உள்ளுக்குள் அல்க்கி லுவத்ததை வெளியே தேடுகின்றான்.
பூரணத்துவத்தில் இருந்து பிறந்தவன்தான் மனிதன். இயற்கையே பூரணத்துவமானது. ஆனால், உள்ளே நிறவை இ;ல்லாதபோது, வெளியில் உள்ள பூர்த்தியை, நிறைவை, உறவைத் தேடுவதுதான் காதல்.
தன் வாழ்வில் இழந்துவிட்ட, அனுபவிக்காமல் இடக்கப்பட்டு விட்ட குணங்களை பெண் ஆணிடமும், ஆண் பெண்ணிடமும் தேட ஆரம்பிக்கிறான்.
சிவபெருமான் சொன்ன தந்திர சாஸ்திரம் அழகாகக் கூறுகிறது :
வெளியில் உள்ள பெண் தொந்தரவு தருவதில்லை. உள்ளே இருக்கும் அடக்கப்பட்ட பெண்மைதான் தொந்தரவு செய்கிறது.
பதினான்கு வயது ஆனவுடன் வெளியில் இருக்கும் பெண்களின் பிம்பங்களை, உருவங்களை ம்மங்க்ண்ஹ -க்கள் விழயாக விதவிதமான காட்சியாகப் பார்த்து, சேகர்த்து உள்ளே தன்னுடைய வாழ்க்கைத் துணையை மனதில் செதுக்க ஆம்பிக்கிறான் மனிதன்.
என் மனைவி இப்படி இருக்க வேண்டும். அப்படி இருக்க வேண்டும் என்கிற கற்பனை செய்கிறான். கனவுகளைத் காண்கிறான்.
பெண்களும் எதிர்கால வாழ்க்கை துணையைப் பற்றி கற்பனை செய்கிறார்கள். கணவனின் குணம், நடத்தை எப்படியிருக்க வேண்டும் என்ற ரீதியில் ஏகப்பட்ட எதிர் பார்புகளை உருவாக்கிவிடுகிறார்கள்.
இந்த கற்பனைக் கனுகளை காண்பது பதினான்கு வஸ்து முதல் ஆரம்பமாகிறது. இருபத்தோரு வயதில் கற்பனைகளும், கனவுகளும் ஒரு வகையான வடிவத்திற்கு வந்து விடுகிறது.
பெற்றோர்கள்தான் மாதிரிகள் :
அந்தக் காரத்தில் குழந்தைகள் தன் பெற்றோர்களிடம் இருந்து மட்டுமே எதிர்காலம் பற்றிய கற்பனைகளைச் சேகரித்தார்கள்.
ஆணாக இருப்பவன் அவன் விரும்பும் முதரல் பெண், அவனது தாயுதான். ஒரு பெண்ணாக இருந்தால் அவள் விரும்பும் முதல் ஆண், அவளது தந்ததை தான்.
ஆண் குழந்தைகள் அம்மாவிடமும், பெண் குழந்தைகள் அப்பாவிடமும் எப்போதும் பாசமாக இருப்பதன் ரகசியம் இதுதான்.
ஏனெனில் தாயின் உருவத்தில் தான் தாரத்தை எதிர்பார்ப்போம். அம்மா தன்னை கவனித்தது போல் மனைவியும் கவனம் எடுக்க வேண்டும் என எதிர் பார்க்கிறோம். தாய் வசமிருந்த அக்கறை, கவனம், அன்பு அனைத்தும் தாரத்தின் மூலமாகவும் எதிர்பார்க்கிறோம்.
அதேபோல் பெண்ணும், தன் தந்தையின் குணங்களான ஆதரவு, தேற்றுதல், பாதுகாப்பளித்தல், அன்பு போன்றவற்றையே கணவன் வடிவில் எதிர்பார்ப்பாள்
அந்தக் காலத்தில் தாய் வசமிருந்த கற்பனையை உள் வாங்கி உருவாக்கி, தனது தாரத்தை எதிர்பார்த்தார்கள். அது மதிப்புக்குரியதாக இருந்தது. புனிதமாக இருந்தது.
ஆனால், இப்போது அது சாத்தியம் இல்லை.
இந்தக் காலத்தில் ஒருபடி மேலே போய் சினிமா, தொலைக்காட்சி மூலம் நடைமுறைக்கு ச ஈதிதயமேயில்லாத விதிவதமான கற்பனைகளை உள்வாங்கி, அதற்கோர் உருவம் கொடுத்து, அதன்படி எதிர்பார்க்கிறோம்.
நிஜவாழ்க்கையில் இருக்கும் சாதாரண வாழ்க்கையை துணைக்கும், கனவில் வடித்து வைத்திருந்த வாழ்க்கைத் துணைக்கும் சம்பந்தமே இருப்பதில்லை. இந்தப் பொருத்த மின்மையே அதிருப்தியாக மாறுகிறது.
இப்போதுள்ள இளைஞர்கள் ஏகப்பட்ட கனவுகள், கற்பனைகள், விளம்பரங்களை மீடியாக்கள் மூலாமக சேகரித்துக் கொள்கிறார்கள்.
பார்த்த நடிகையின் கண், காது, மூக்கு எல்லாம் உள்வாங்கி, மனதில் வெட்டிஒட்டி நன்து வாழ்ககைத் துணையை கனவில் தஸ்ார் செய்கிறோம். நாமாகவே ஒரு உருவத்தை அமைக்கிறோம்.
அதே உருவத்தை மனதில் கொண்டு, அதையே தேடிக் கொண்டு இருக்கிறோம். இந்தத் தேடுதலால் மனிதனின் எதிர்பார்ப்புகள் பல மங்ங்கு தூண்டிவிடப்படுகிறது.
கிடைத்தவற்றிற்கு நன்றி சொல்லி சந்தோஷமாக வாழ வேண்டிய மனிதன், நான் எதிர்பார்த்தபடி கிடைக்க வில்லையே என துக்கப்படக் காரணம், மனித மனதில் காலூன்றி விட்ட அதீத கற்பனைகள்தான்.
ஏகபத்தினி விரதம் :
சென்னையில் தியான வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கும் போது ஏகபத்தினி விரதம் பற்றி என்னிடம் கேள்வி கேட்டார்கள்.
"முன்பு இந்தியாவில் நன்றாக இருந்த ஏகபத்தினி விரத தத்துவம், ஏன் இன்று தோல்வி அடைந்து விட்டது ?
ராமர், சீதை வாழ்ந்த காலத்தில் நடைமுறையில் இருந்த விஷயம், இப்போது ஒத்துவராமல் போனதன் காரணம் என்ன?" என்று கேட்டார்கள்.
"இந்தக் கேள்விக்கான பதிலை ஆழமாக யோசித்துப் பார்த்தால், நாம் இப்போது பார்க்கிற அளவுக்கு விளம்பரங்களையோ, திரைப்படங்களையோ ராமனும், சீதையும் பார்க்கவில்லை என்கிற விஷயம் ஞாபகத்துக்கு வரும். உண்மையும் அதுதான்.
கற்பனையின் மன அழுத்தம் சீதைக்கு இல்லை.
சீதை பார்த்த ஒரே கதாநாயகன் ஜனகன்தான். சீதை வேறு ஒருவரை ஹீரோவாக பார்க்க வாய்ப்பே கிடையாது. சீதைக்கு வேறு யாரையும் பற்றி தெரியவும் தெரியாது.
ஜனகனோ மகாராஜா! வில்வித்தை போன்று பல திறமைகளை உடையவர். ராமனுக்கும் வில்வித்தை உள்பட நிறைய திறமைகள் இருந்தது.
ஜனகனுக்கும், ராமனுக்கும் இடையில் எந்த இடைவெளியும் இல்லை. ஜனகனைப்போலவே ராமனுமிருந்ததால், ராமனை சீதைக்கு உடனே பிடித்து விட்டது.
சீதையின் மனதில் ஒருவான வாழ்க்கைத் துணையின் எதிர்பார்பு, நிஜதுணையான ராமனோடு ஒன்றி விட்டது.
அதீத கற்பனைகளாலும்
கனவுகளாலும் கற்பனையின் எதிர்பார்ப்புக்கும் நிஜத்திற்கும் இயற்கையான காமம் ருவறுபாடுகள் மிகக் குறைவு. எனவே கணவனே விகாரப்பட்டுவிட்டது. ஹீரோவாக தெரிந்தான். இயல்புக்கு மாறான
கற்பனைகளைத் தின்று ராமன் பார்த்த கதா நாயகிகள் கைகேயிய, கோசரை தான். அது செறிக்காததால் இரண்டு பேரும் அரசகுமாரிகள். அழகானவர்கள். உள்ளிருந்து வரும் அன்பானவர்கள். சீதையும் அவர்களைப் போலவே,, பகல் கனவுகளால் அழகாகவும் அன்பாகவும் இருந்ததால் ராமனுக்கும் இயற்கையான காமம் உடனே பிடித்து விட்டது. இன்று காமவிகாரமாக
மாறிப் போய்விட்டது.
ராமனுக்கு தன்னுடைய எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் முழுமையாக பொருந்தக் கூடிய சீதையைத் தாண்டிய எதிர் பார்ப்புகள் இருக்காது. மனைவியே கதாநாயகியாகத் தெரிந்தாள்.
அந்தக் காலத்தில் கற்பனைக்கும் நிஜத்திற்கும் வாழ்க்கையில் இடைவெளியோ, வேறுபாடோ இல்லை.
ஆனால், இப்போதோ நம் கற்பனைக்கும் உண்மைக்கும் இடையே ஏற்பட்டு விட்ட இடைவெளி எதைக் கொண்டும் நிரப்ப முடியாத அளவுக்கு அதிகமாகிவிட்டது.
அதனால்தான் இன்று நம் சமுகத்தில் ஏகபத்தினி விரதத்தை சரயாகக் கடைப்பிடிக்க முடிவதில்லை" என்று அந்தக் கேள்விக்குபதில் சொன்னேன்.
விளம்பரங்கள், விளம்பர நிறுவனங்கள், பத்திரிகைகள் மற்றும் ஏனைய மீடியாக்கள் அனைத்துமே உங்களின் மூலாதார சக்கரத்தை தூண்டுகின்றன.
உங்கள் பலவீனத்தைத் தெரிந்து கொணடு உங்களை வீழ்த்தி விடுகிறார்கள். பலவீனமான இடம் எது என்பது அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.
அந்த கலையைத் தெரிந்து சரியாக மூலாதாரத்தில் கற்பனைகளையும், ஆசைகளையும் கொடிட்டிப் பறக்க வைக்க தேவையானவற்றை செய்து விடுகிறார்கள்.
எந்த வளம்பர போர்டு எடுத்துக் கொண்டாலும் அதில பெண்படம் இல்லாமல் இருக்காது. விளம்பரங்களில் ஆண்களை அதிகம் பார்க்க முடியாது. காரணம் என்ன?
விளம்பரம் மூலம் தாங்கள் சொல்லவரும் செய்தியை மினதனுக்குள் ஆழமாக விதைத்து விட்டாலதான் மனிதர்களை தங்கள் நோக்கத்திற்கு இழுக்க முடியும்.
அதனால்தான் நவீன மினதனின் பலவீனமான மூலாதாரத்தின் நோக்கத்திற்கேறார் போலவே விளம்பரங்கள் தயாராகின்றன.
கார் ஓட்டுகின்ற பெண்கள் இந்தியாவில் பத்து சதவிகிதம்தான்.
ஆனால், ஆண்களை விட பெண்களைத்தான் அதிகம் கார் ஓட்டுகிற மாதிரி விளம்பரங்களில் காட்டுவார்கள்.
விளம்பரங்களில் எங்கு திரும்பினாலும் பெண்கள் தான். காரணம், சபலத்தினால் மனசு மூலாதாரத்திர் சுலபமாக விழுகிறது. கற்பனையின் பலவீனத்தில் கீழே விழுந்து விடுவோம்! அந்த நொடிகளில் விளம்பரத்தின் செய்தி மிக ஆழமாக நுழைந்துவிடும்.
பலவீனம் தெரிந்து நம்மை சுரண்டுவார்கள். நாம் இந்த கனவுகளைக் காசு கொணடத்து வாங்கி, சாப்பிட்டு, பசியைத் தீர்த்து கொள்ள முயற்சிக்கிறோம்.
நிஜத்துக்குப் பதிலாக கனவுகளை அனுபவி;பபது, தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக உப்பைத் தின்பதற்கு சமம்.
உப்பைத் தின்றால் தாகம் தீரமா? தாகம் குறைவதற்குப் பதிலாக அதிகமாகும்!
அதுபோல் வாழ்க்ககையில் எந்தத் திருப்தியும் ஏற்படுத்தாத அசாத்தியமான கற்பனைகளை வாங்கி ச ாப்பிடுவதால், மனக்குழப்பம்தான் அதிகமாகும், குறையாது.
மீடியாக்கள் உருவாக்கிக் கொடுக்கும் கனவை பவ்ம் கொடுத்து, பார்த்து, வீட்டில் வந்து விழுகின்றோம்.
மனம் நிம்மதி ஆகும் என்றுதான் நினைக்கிறோம்! ஆனால் மன நிறைவுக்கு பதில் குழப்பம்தான் ஏற்படுகிறது. ஆசைகள் இன்னமும் தீவிரமாகின்றன.
குழப்பத்திற்கும், அதிகமாகும் ஆசைக்கும், தொடர்ந்து வரும் அதிருப்திக்கும் காரணம் அசாத்தியமான கனவுகள் தான் என்று தெரியாமலே இதுநாள் வரை தவித்துக் கொண்டிருக்கிறோம்.
கனவுகளை உண்ணுவதால் நன்து மூலாதாரத்தின் எடை அதிகமாகிறது. எதிர்பார்ப்புகள் அளவுக்கு மீறி போய்விடுகிறது.
பதினான்கு வயது முதல் இருபத்தியோரு வயது வரை நிறைய எதிர்பார்ப்புகளை உருவாக்கி, உள்ளே வாங்கி, பதுக்கி, பதுக்கி வைக்கின்றோம்.
வாழ்க்கை இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என்கிற கற்பனை உலகில் மிதப்போம்.
இந்த கற்பனைகள் நிஜமாக வேண்டும்; நிறைவேற வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் ஒரு ஆணையும், ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணையும் முனைந்து தேட ஆரம்பிக்கிறார்கள்.
இருபத்தியோரு வயதில்தான் மனதின் எதிர்பார்ப்புகளுக்கு முழு உருவம் வந்து சேருகிறது.
ஒவ்வொரு பெண்ணைப் பார்க்கும் போதும் மனதில் உள்ள உருவத்தோடு ஒப்பிட்டு, இது தேறும், இது தேறாது என்கிற முடிவுக்கு வருகிறோம். மனதிலிருக்கும் கற்பனையை வைத்து நிஜத்திற்கு தீர்ப்பிடுகிறோம்.
மனத்தின் கற்பனை உருவத்திற்கு ஓரளவு நெருங்கி வரும் பெண்ணைக் கண்டவுடன், அவளை எதிர்பார்த்து ஏங்க ஆரம்பிக்கிறோம். காதல் பிறந்துவிட்டது என்ற நம்பித்திரிகிறோம். சொல்லித் திரிகிறோம்.
இவற்றால் கனவு நிஜமாவது போன்ற ஒரு பிரம்மை மனதில் உருவாகிறது. தூரத்திலிருந்து பார்த்தால் எல்லாமே பசுமையாகத்தான் தெரியும். ஆஹா நம் மனதிலிருந்த அதே பச்சைதான் என்று தோன்றும்.
முதன் முதலில் ஒரு பெண்ணைத் தேடிப் போய் அரை மணி நேரம் மட்டும் பார்த்து பேசும்போது, எல்லாமே பிடித்துப் போய் ஜிவ்வென்று பறப்பதுபோல் தெரியும்.
தூரம் குறையக் குறைய, நெருக்கம் அதிகமாக, அதிகமாக நமக்கு முன்பு தெரிந்த நிறங்கள் மாற ஆரம்பிக்கும். பச்சை வெளுத்து வெளிர் பச்சை ஆகிவிடும். நான் நினைத்த மாதிரி இவள் / இவன் இல்லை என்று தெரியவரும்.
காலம் ஆக ஆக, உறவின் நெருக்கத்தில் சிறிய சிறிய ஏமாற்றங்கள் ஏற்பட்டு, இது வெளிர்பச்சை கூட இல்லை, மஞ்சள்தான். நான் எதிர்பார்த்த பசுமை கூட இதுவல்ல என்று தோன்றும். உறவில் வெறுப்பு முளைக்க ஆரம்பிக்கும்.
அதுவே இருபத்தி நான்கு மணி நேரமும் தொடர்ந்தால் நெருக்கமாக இருந்த உறவில் உஜ்ராய்வி ஏற்பட்டு, மஞ்சளாகத் தெரிந்தது வெளீரென்று வெளுத்து விடும். மனம் சலிக்க ஆஜ்ம்பிக்கும். உறவு சலித்து விடும்.
முன்பு பசுமை என்று பழக ஆரம்பித்ததற்கும் இன்று வெளுப்பு என்று தெரிந்துவிட்ட நிஜத்திற்கும் சம்பந்தமே இல்லை.
இப்போது அருவருப்பாகத் தோன்றும் நபர்தான் அப்போது அருமையான ஒரு மனிதராக தெரிந்தார். அழகாகவும் கண்ணுக்குத் தெரிந்தார்.
கனவுகள் கலைந்தபின், முன்பு செய்த கற்பனை வேறு; இப்போதுள்ள யதார்த்தம் வேறு என்பது நன்றாகப் புரியும்.
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் கற்பனையின் அடிப்படையில் மனிதர்களைத் தேடுவது நவீன வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. இப்படித் தேடுவது நமது வாழ்க்கையின் கதி ஆகிவிட் டது.
நம் மனதில் பசுமை (அதிக அழகு, அதிக குணம், அதிக அந்தஸ்து) என்ற கற்பனை செய்துவிட்டதால்தான் ச ாதாரண வெண்மை ( இயல்பான அழகு, குணம், அந்தஸ்து) நிறம் கூட வெளுப்பாகத் தெரிகின்றது.
தவறு வெறுப்பு மீது அல்ல. மனதில் திணிக்கப்பட்ட பசுமையால்தான் பிரச்சினை உருவாகிவிட்டது. யுவண்மை வெளுப்பாக மாறி இளக்காரமாக கருதப்படுகிறது.
இயல்பான வாழ்க்கைத் துணை கூட சில நேரங்களில் இள்காரமாகத் தெரிகின்றது.
கடற்கரையில் காத்திருந்து...
ஒரு மனிதன் தினமும் மாலை கடற்கரைக்கு வந்து இரவு வரை பெஞ்சில் அமர்ந்து, கலந்து செல்பவர்களை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டே இருந்தார். அவருக்கு வஸ்து ஐம்பது.
இதைப் பார்த்த இன்னொருவர், "நானும் உங்களைப் பல வருடமாக பார்த்து வருகிறேன். தினமும் இங்கு வந்து என்ன தேடுகிறீர்கள்?" என்று கேட்டார்.
"என் வாழ்க்கைத் துணைவியைத் தேடுகிறேன்" என்றார் பெரியவர்.
கேள்வி கேட்டவருக்கு ஆச்சரியம். "நீங்கள் சின்ன வயதில் இருந்து தேடி இன்னும் கிடைக்கவில்லையா? என்ன மாதிரியான வாழ்க்கைத் துணையைத் தேடுகிறீர்கள்? நான் வேண்டுமானால் உங்களுக்கு பதிவ செய்யட்டுமா?" என்று ஆர்வத்தோடு கேட்டார்.
உடனே பெரியவர்," உலகத்தில் உள்ள அனைத்து நல்ல குணங்களும் உள்ள, பூரணமான ஒரு டங்ழ்ச்ங்ஸ்ரீற் -ஆன பெண்ணை தேடுகிறேன்" என்றார்.
"முப்பது வயது முதல் தேடித் தேடி ஒரு டங்ழ்ச்ங்ஸ்ரீற் -ஆன பெண் கூடவா இதுவரை கிடைக்கவில்லை?" என மீண்டும் கேட்டார்.
"கிடைத்தாள்!"
நான் நினைக்கிற மாதிரியே ஒரு பெண் கிடைத்தாள்!
அவனிடம் என் விருப்பதை எடுத்துச் சொன்னேன்.
உங்களை எனக்கு மிகவும் படித்திருக்கிறது. காரணம், நீங்களும் என்னைப் போலவே யோசிக்கிறீர்கள். நானும் - டங்ழ்ச்ங்ஸ்ரீற் - ஆன ஒரு ஆணைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். நல்லவேளை உங்களைச் சந்தித்தேன்.
உங்களுக்குத் தெரிந்த டங்ழ்ச்ங்ஸ்ரீற் -ஆன ஆண் யாராவது இருந்தால் தஸ்வு செய்து என்னிடம் செ ால்லுங்கள் என்று சொல்லிவிட்டாள்" -என வருத்தத்தோடு சொல்லி முடித்தார் பெரியவர்.
இதுதான் ஒவ்வொருவர் கதையும். "போகாத ஊருக்கு வழி கேட்டால்" என்பது இதுதான். சாத்தியமே இல்லாதவற்றை கற்பனையில் ஊற வைத்து அதிலேயே உழன்று, உழன்று உருப்படியாகாமல் போவது இதனால்தான்.
கனவு வேறு, நிஜம் வேறு. இது பச்சை, இது வெள்ளை என்று ஒவ்வொன்றின் நிறத்தையும் தெரிந்து கொள்வதற்குள் தேன்நிலவு மட்டுமல்ல, சிலருக்கு வாழ்க்கையே முடிந்துவிடுகிறது.
திருமணப் பரிசு :
நந்தி ராஜன் நண்பருக்கு திருமணம் நடந்தது. நண்பருக்குப் பரிசாக நாய் குட்டி ஒன்று வாங்கி கொண்டு போனார் நித்தி. நாய்க் குட்டி புதியது. இன்னும் பழகவில்லை பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றார் நித்தி.
நண்பரின் நலம் விசாரிக்க... இரண்டு மாதம் கழித்து அவரைப் பார்க்கச் சென்றார் நித்தி.
நண்பனே கஷ்ந்து கொடுத்த சூடான காப்பியைக் குடித்துக் கொண்டே திருமண வாழ்க்கை எப்படி;பா இருக்கிறது என்று கேட்டர்.
நண்பர், வாழ்க்கை எப்போதும் போலத்தான் இருக்கிறது. ஆனால் உன் நாய்க்குட்டிதான் மிகவும் மாறி விட்டது என்றார்.
நத்தி, அப்படியா... என்று ஆச்சரியத்தோடு கேட்டார்.
ஆம்... திருமணம் ஆன புதிவ் மனைவி பேப்பர் கொண்டு வந்து தருவாள். நாய் குறைத்தது.
இப்போது சிறிய மாற்றம் நாய் பேப்பர் கொண்டு வந்து தருகிறது மனைவி குரைக்கிறாள் என்றார்.
கற்பனை நிஜமாகவில்லை என்றால் குரைக்க ஆரம்பித்துவிடும் வாழ்க்கையே
எதிர்பார்த்தபடி எதிரிலிருப்பதில்லை.
அதன் விளைவே சண்டை. சத்தம் போடுதல், சண்டையிடுதல் மூலமாக நம்முடைய எதிர்பார்ப்புக்கேற்றபடி எதிர்ல இருப்பவர்களை வளைக்க முயற்சிக்கிறோம்.
நமது கற்பனை கருத்துக்களுக்குத் தக்கபடி வாழ்க்கைத் துணையை வசைகள் மூலமாக செதுக்க ஆரம்பிக்கிறோம்.
திருமணமானதும தன் மனதில் இருக்கிற மாதிரிக் கணவன் போன்று மனைவி தன் கணவனை செதுக்கி, மாற்ற முயற்சிக்கிறாள்.
அழுதோ அடம்பிடித்தோ அடங்கிப் போயோ ஏதோ ஒரு வகையில் கணவனைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கவே முயற்சிக்கிறான்.
கணவன் அவனுடைய மனதில் பிடித்து வைத்திருக்கும் மாதிரி மனைவியின் குணாதிசயங்களுக்கு ஏற்ப தன் மனைவியை மாற்ற முயற்சிக்கிறான்.
அதட்டியோ அடித்தோ அடக்கியோ அடங்கிப் போயோ ஏதோ ஒரு வகையில் மனைவியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே முயற்சிப்பான்.
ஒரு கல்லாக இருந்தால் நாம் விரும்பியபடி செதுக்கலாம்.
ஒரு மதம் ஆக இருந்தால் எதுவாக வேண்டுமானாலும் செதுக்கலாம்.
உயிர் உள்ள மனிதனை எப்படி செதுக்குவது அப்படி செதுக்கினால் என்ன ஆகும்? ரத்தமும், சதையும்தான் மிஞ்சும். வீடுகள் குருஷேத்திரமாக மாறும். தர்மஷேத்திரம் குருஷேத்திரமாக மாறுவதற்கு காரணம் கற்பனைகளே.
குடும்பம் நிம்மதியாக நடக்க வேண்டும், மீண்டும் தர்மஷேத்திரமாக மாற வேண்டும் எனில் கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் திருத்துவதை நிறுத்த வேண்டும்.
வாழ்க்கைத் துணைப் பற்றி ஏற்கனவே வைத்திருந்த கற்பனைகளுக்கும் நிஜத்திற்கும் பொருந்தாததால் வாழ்க்கைத் துணை பற்றி நாம் முடிவு செய்திருக்கும் தவறான கருத்துக்களை தூக்கியெறிய வேண்டும்.
இரண்டு காரியங்கள் செய்ய வேண்டும்.
ஒன்று. ஏற்கெனவே வைத்திருந்த சாத்தியமாகாத வாழ்க்கைத் துணை பற்றிய கற்பனைகளை தூக்கியெறிய வேண்டும்.
இரண்டாவது,. சிலகாலப் பழக்கத்திற்கு பின் அதிருப்தியால் வாழ்க்கைத் துணை பற்றி கண்டுபிடிக்கப்பட்ட தவறான கருத்துக்களையும் தூக்கியெறிய வேண்டும்.
இவைகள்தான் வாழ்க்கையை நரகமாக்குகின்றன.
தவறான கற்பனைகள் மற்றும் கருத்துக்கள் வாழ்க்கைத் துணை பற்றி மட்டுமல்ல. மற்றவர்களையும் தூக்கி எறிய வேண்டும்.
அழகிய கலைப் பொருட்களின் மேல் படிந்த தூசி போன்றுதான், வாழ்க்கையையும் மனிதர்களையும் பற்றிய அபிப்ராயங்கள் எனப்படும் கற்பனைகளின் தொகுப்பு.
தூசி துடைக்கப்பட்டதும் பளபளக்கும் அழகு கலைப் பொருட்கள் போல நம் உறவுகளும் வாழ்க்கையும் அழகென அற்புதமென தோன்றும்.
வீட்டில் ஏன் அமைதி இல்லை?
வீட்டில் ஏன் அமைதி இல்லை என்பதற்கு நமது தந்திர சாஸ்திரத்தில் சிவ பெருமான் சொல்லும் காரணம் என்ன தெரியுமா?
கணவன், மனைவி ஆகிய இரண்டு பேர் மட்டுமே வீட்டில் வசிக்கும் போது வீடு அமைதியாக, நிம்மதியாக இருக்கும்.
ஆனால், நான்கு பேர் ( கணவன் + கணவனைப் பற்றிய கற்பனை + மனைவி + மனைவியைப் பற்றிய கற்பனை) வாசம் செய்யும் போது வீடு, வீடாக இல்லாமல் நரகமாக மாறிவிடும்.
இரண்டு பேரும் கற்பனை உலகை விட்டு அன்போடு ஒன்றிப் போனால் அனிமையான, ஒரு உண்மையான வாழ்க்கையை நடத்த முடியும் என்று சொல்கிறார்.
மூலாதாரச் சக்கரம் அதிகமான கற்பனையால் மூடப்படுகிறது. கற்பனையையட தவிர்த்து, நிஜத்தை நேரடியாக எதிர்கொள்ளும் போது அந்தச் சக்கரம் முழுமையாகத் திறக்கிறது.
மூலாதாரச் சக்கரம் முழுமையாக இயங்கும் பட்சத்தில் மூலாதாரச் சக்தி மேல்நோக்கி எழும்பும்.
தன் சுயகட்டுப்பாடுகளை மீறி எண்ணங்களை சதா கற்பனைகளாகத் தந்து கொண்டிருக்கும் பலவீனப்பட்ட மூலாதாரச் சக்கரம், பலமடைந்துவிட்டால், கட்டுப்பாடற்று எண்ணங்கள் சுயக்கட்டுப்பாட்டுக்குள் வரும்.
எண்ணங்கள் நம் கட்டுப்பாட்டில்; இருந்தால் அதற்குப் பெயர்தான் தெளிவு.
பலமடைந்த மூலாதாரச் சக்தி மனிதனின் எண்ணங்களையும், செயல்களையும் தெளிவாக்கும் தன்மை கொண்டது. மனிதனுக்கு உற்சாகமளிக்கும் தன்மை கொண்டது.
நாள்பட்ட நோய்கள், தோல் நோய்கள், வாதங்கள் போன்றவை உருவாவதற்கான மிக முக்கியமான காரணம் பலவீனமான மூலாதாரம்தான்.
கிட்டத்தட்ட எல்லாப் புற்றுநோய்கள் மற்றும் உயிர்க் கொல்லி நோய்கள் உருவாகவும், மனிதனை உருக்கிக் கொல்லவும் மூலாதாரத்தின் பலவீனமே மிக மிக அடிப்படையான காரணம்.
தெளிவாக உற்சாகமாக இருந்தால், உயிர்க் கொல்லி நோய் எதுவும் வராது.
முழுவதும் நன்றாகப் புரிந்து கொண்டு மூலாதாரத்தை இயங்க வைத்தால், நமது உயிர்சக்தி, உடல் சக்தி, ஆன்மீக சக்தி ஆகியவற்றை வெளிக்கொண்டு வர முடியும்.
மூலாதாரச் சக்கரத்தின், தத்துவத்தை புரிந்து கொள்ளாததால்தான் பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன.
தெளிவு வந்தால், வாழ்வில் எண்பது சதவிகித பிரச்சினைகள் மறைந்துவிடும். கனவை கீழே போட்டு விட் டால் நிஜத்திற்குள் நிம்மதியாக வாழ ஆரம்பிப்போம். வாழ்க்கைத் துணைவியையும், வாழ்க்கையையும் நிதானமாக பொறுமையாகத் தேடலாம்.
ஏன் தேடுகிறோம்?
கணவுகளையும், கற்பனைகளையும் நாம் தேடக் காரணம் என்ன?
நம் உடம்பில் உள்ள ஹார்மோன்கள்தான், நம்மை இவ்வளவு பாடுபடுத்துகிறது.
ஏதோ ஒரு வேகம்.
விவேக மற்ற வேகம்.
யாரையாவது அவசரம் அவசரமாக தேர்ந்து எடுத்து வாழ்க்கையை நரகம் ஆக்கிவிடுகிறோம்.
திருமணம் ஆகாதவர்கள் இந்தச் சக்கரத்தை கற்பனையாலும், கனவுகளாலும் மூடி, பலவீனமாகாதபடி தெளிவாக, தூய்மையாக வைத்துக் கொண்டால், வாழ்க்கை முழுவதும பொறுமையாக சேர்ந்து வாழக் கூடிய நல்ல துணைவி இயற்கையாகவே வந்தமைவாள். இது இயற்கை விதி.
எங்கெங்கோ இருந்து நாம் கற்று வைத்திருக்கும் கற்பனைகளைத் தூர எறிந்து விட்டு, இந்தச் சக்கரத்தை சரியாக இயக்கச் செய்தால், எதிரில் உள்ள உங்கள் வாழ்க்கைத் துணையை முழுமையாக அன்பான நிச்சயம் தேசிக்க முடியும்.
இல்லறம், நல்லறம் ஆக மாறும்
வாழ்ககையில் புதுப்புது பரிமாணங்களைக் காணலாம்.
கற்பனை செய்வதை விட்டுவிட்ட மனிதன், எதிர் பார்ப்புகளை விட்டுவிட்டு இறைவனுக்கு அருகே சென்று விடுகிறான்.
கற்பனை இல்லாத பெண் பார்வதி ஆகிறாள்.
கற்பனை இல்லாத ஆண் சிவனாகிறான்.
அடிப்படை பெண்ணுக்கு ஆணுக்கு வாழ்க்கை இனிமையாகவும், சியமயமாகவும், அன்புயமாகவும் அமையும். கற்பனைகளை சுமந்து திரியும் மனிதன் நடைப் பிணமாகவே அலைகிறான்.
துக்கஹரணா
எதிர்பார்ப்புகளை விட்டுவிடும் போது, இந்தச் சக்கரத்தின் சக்தி நமக்கு முழுமையாகக் கிடைக்கிறது.
மனதிற்கும் ஹார்மோன்களுக்கும் நேரடித் தொடர்பு உண்டு.
ஹார்மோன்களால் ஏற்படும் தொந்தரவுகளினால் உணர்ச்சி நிலையில் மாற்றம் ஏற்படுகிறது.
மனதில் இயக்கத்தை ஹார்மோன்கள் பாதிக்கின்றன.
பாதிக்கப்பட்ட மனமும் தூண்டப்பட்ட உணர்சிகளும் அதன் போக்கில் நம்மை இழுத்துச் செல்லும்.
மனம் விரும்பும் போக்கில் நாம் இழுத்துச் செல்லப் படாமல் இருக்க சிவபெருமான் ஒரு அருமையான தியான முறையைச் சொல்லுகிறார். அதன் பெயர்தான துக்கஹரணா என்று அர்த்தம்.
ஒரு காரில் ஏறி வெளியே போகிறோம். வீடு வந்ததும் ப்ரேக் போட்டு நிறுத்துகிறோம். வேண்டிய நேரத்தில் நீங்கள் காரை ஓட்டி., நிறுத்தினால் நீங்கள் காடிரை ஓட்டுகிறீர்கள் என்று அர்த்தம்.
அப்படியில்லாமல், நீங்கள் ஒரு பக்கம் காரைத் திரும்ப நினைக்க, அது இன்னொரு பக்கம் திரும்புகிறது.
ப்ரேக் போட நினைத்தால் அது எங்கோ போய் இடித்து விட்டு நிற்கிறது என்றால் காரை நீங்கள் ஓட் டவில்லை. கார்தான் உங்களை ஓட்டுகிறது என்று பொருள்.
அதே போல்...
மனம்தான் நம்மை இயக்குகிறது.
நாம் மனதை இயக்கவில்லை.
மனம் இஷ்டப்பட் நேரத்தில் நாம் சாப்பிடுகிறோம். தூங்குகிறோம். எல்லா வேலைகளையும் செய்கிறோம்.
நாம் சொல், செயல், சிந்தனை ஆகிய அனைத்துமே பெரும்பாலான நேர்களில் நம் கட்டுப்பாட்டை மீறி விடுகின்றன
மனதில் விருப்பம் இல்லாமல் நம்மால் எதையும் நினைத்து செய்ய முடிவதில்லை.
மனம் நமக்கு எப்போதும் கட்டளையிடும் எஜமானாக இருக்கிறது. அதற்கு கட்டுப்பட்டு நடக்கும் அடிமைகளாகவே நாம் இருக்கிறோம்.
அப்படி இல்லாமல் மனதை நம் விருப்பப்படி இயக்க நமக்கு உதவும் ஒரு தியானமுறைதான் துக்கஹரணா.
இந்தத் நமது வாழ்க்கையின் துக்கத்தை அழித்துவிடும்.
ஹார்மோன்களின் கொடுமையிலிருந்து, அவற்றின் தன்னிச்சையான செயல்பாட்டினால் பாங்கும் உணர்ச்சி களிலிருந்து உடலையும், மனதையும் துக்கஹரணா தியானம் காப்பாற்றும்.
நன்து மனதை ஓர் இயற்கையான கட்டுப் பாட்டினுள் கொண்டு வருவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அழகான தியன முறைதான் துக்கஹரணா.
உண்மையான பிரம்மச்சரியம் :
பிரம்மச்சரியம் என்பது வெளியில் வாழும் வாழ்க்கைக்கு சம்பத்தமில்லாத ஓர் விஷயம்.
உண்மையான பிரம்மச்சரியம் என்பது, கல்யாணம் ஆகிவிட்டாரா, இல்லையா என்பதைப் பொறுத்தது அல்ல. திருமணம் ஆகியும் சுத்தமான பிரம்மச்சாரியாக இருக்கும் மனிதர்கள் நிறைய பேர் உள்ளார்கள்.
பிரம்மச்சாரி என்பவன் யார்?
இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பவனையே நாம் பிரம்மச்சாரி என்கிறோம்.
இல்லறத்தில் ஈடுபடாமல் இருந்து விட்டாலே போதுமோ?
பிரம்மச்சரியம் புறம் அதாவது உடல் சம்பந்தப்பட்டவை அல்ல. அது அகம் சம்பந்தப்பபட்டது.
இல்லறம் துறத்தல் மட்டுமே பிரம்மச்சரியம் ஆகி விடுமா?
இல்லறத்தைத் துறப்பதினால் மட்டுமே பிரம்மச்சரியத்தை அடைந்துவிட முடியாது.
பிரம்மச்சரியம் என்பது, ஓர் ஆண் வெளியே இருக்கும் பெண்ணை அல்ல, உள்ளே இருக்கும் பெண்ணைத் தூக்கி எறிந்துவிட்டு வாழ்வது. உள்ளிருக்கும் பெண்ணின தொந்தரவு இல்லாமல் வாழ்வது.
உங்கள் உள்ளுக்குள் இருக்கும் பெண் எந்த தொந்தரவும் தராமல் இருக்கும் பெண் எந்த தொந்தரவும் தராமல் இருந்தால், வெளியில் எத்தனை பெண்கள் இருந்தாலும் உணர்ச்சி ரீதியாக பாதிக்கப் படாமல் வாழ்க்கையை இனிமையாக இயல்பாக வாழ முடியும். இதுதான் உண்மையான பிரம்மச்சரியம்.
கிருஷ்ணரைச் சுற்றி அவ்வளவு பெண்கள் இருந்தாலும், அவரின் உணர்வு நிலை எப்போதும் அவர் வச த்திலேயே இருந்தது.
உள்ளிருக்கும் பெண்ணின் தொந்தரவு இல்லாத நிலையில் கிருஷ்ணர் எப்போதும் ஆனந்தரமாகவே இருந்தார்.
பரவச நிலையிலேயே இருந்த கிருஷ்ணர் எந்த ஒரு சூழ்நிலையிலும் உணர்ச்சி வசப்பட வேயில்லை.
உள்சுதந்திரம் அடைந்து விட்டாமல் பரவசப்படுவோம். உணர்ச்சிவப்படமாட்டோம். இந்த நிலையைத்தான் பிரம்மசரிய நிலை என்று ஞானியர் குறிப்பிடுகிறார்கள்.
உள்ளிருக்கும் பெண்ணிடமிருந்து சுதந்திரம் பெற்று விட்டால் வெளியில் உள்ள பெண்ணைப் பற்றி பயப்பட வேண்டியதில்லை.
உள்ளிருக்கும் பெண்ணின் பாதிப்பே சற்றும் இல்லாத வாழ்வுதான் உண்மையான பிரம்மச்சரியம்.
✦ ஆணுக்குள்ளிருக்கும் பெண், பெண்ணுக்குள்ளிருக்கும் ஆண் பாதிக்காத வாழ்வே உண்மையான பிரம்மச்சரியம்.
✦ பெண்ணுக்குள்ளிருக்கும் ஆணின் தூண்டுதல்கள் இருந்தால் இல்லற வாழ்க்கையில் பெண்ணுக்கு நிம்மதி இருக்காது.
✦ ஆணுக்குள்ளிருக்கும் பெண்ணின் தூண்டுதல்கள் இருந்தால் இல்லற வாழ்ககையில் பெண்ணுக்கு நிம்மதி இருக்காது.
✦ அகத்தில் ஆண், பெண் பாதிப்புகள் இல்லாத எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையும் ஆன்ந்தமயமாக இருக்கும்.
வெளியிலருக்கும் விஷயங்களுக்கு அளவுக்கு அதிக மான முக்கியத்தவம் தந்த தற்பனைகளை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
உங்களுக்குள் இயற்கையான இருக்கும் தன்மைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். உங்களது வாழ்வு இயற்கையாகவே இருக்கட்டும்.
உள்ளுக்குள் இருக்கும் ஆண் / பெண் தன்மைகியின் மூல வேரான மூலதார சக்கரமை இயற்கையாக ஆரோக்கியமாக இயங்க அனுமதியுங்கள்.
இயற்கையாக குழந்தைகீள ஊனமுற்றவர்களாகப் பிறப்பதற்குக் காரணம் மூலாதார சக்கரம் உடலளவிலோ, மனதளவலோ பாதிக்கப்பட்டடிருப்தால்தான்.
ரிஷிகள் காலத்தில் ரிஷிகள் உண்மாக்கிய குழந்தைகள் கூர்மமையான அறிவு படைத்தவர்களாக இருப்பார்கள். அப்படிபடி;பட்ட குழந்தைகள்ட இன்று இல்லாமல் போக்க காரணம் என்ன?
மூலாதாரத்தை ஒழுங்க்டாக இயக்கும் திறமை இப்போது இருப்பவர்களிடம இல்லை.
ஆனால் ரிஷிகளுக்கு மூலாதாரத்தை இயக்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்களுக்குக்க கற்பனைகள, எதிர்பார்டபுகள் எதுவுமே இல்லை.
அதனால்தான் இனிமையான இல்லறம் நடந்தது. அவர்கள் மூலம் வெளிப்பட்ட எல்லா விஷயங்களும் இனிமையாகவே இருந்தன.
நமது மூலாதாரம் அளவுக்கு மீறிய அழுத்தத்தோடு இருப்பதால்தான் குழந்தைகள் மந்தரமாகவும், புத்திச ாலித் தனம் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள்.
கனவா? நிஜமா?
இன்று நாம் உள்வாங்குகின்ற கற்பனைகள் நிஜத்திலிருந்து எடுக்கப்படுவதில்லை கற்பனையிலிருந்துதான் எடுக்கப்படுகின்றன.
ஒரு கற்பனையிலிருந்து மற்றொரு கற்பனை உருவாகின்றது.
நிறைய கற்பனைகள் சேரும் போது, அது கனவு சாம்ராஜ்ஜியமாக மாறிவிடுகிறது.
நிஜமாகவே உங்கள் அம்மாவிடம் இருந்து மாதிரமே ஒரு வடிவத்தை எடுத்து இருந்தால் அம்மாவிற்கு,மனைவிக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. இருந்தாலும் சரி செய்துவிடக் கூடியதாகவே அந்த வித்தியசம் இருக்கும்.
தொலைக் காட்சி, சினிமா, விளம்பரங்கிலிருந்து இன்று கற்பனைகள் எடுக்கபடுவதால் வித்தியாசம் மிகப் பெரியதாக உள்ளது.
கற்பனைக்கும் நிஜ வாழ்க்கைக்க்கும் இடையே உள்ள இடைவெளி அதிமாகிவிட்டது.
இடைவெளி அதிகமானதால் குழப்பமு, வருத்தமும் அதிகமாகிவிட்டது.
நம்மில் பலர் தவறான கருத்துக்களுடன் வாழ்கின்றோம். மனிதர்கள் வாழ வேண்டிய விதத்தில் வாழ்வதில்ரைல. பலர் வாழ்க்கையில் நொந்து போய் உள்ளார்கள்.
காரணம், தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சோகமு;ம, குழப்பமுமே.
நாம் விரும்பிய வாழ்க்கை வேறு. ஆனால்...
நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கை வேறு.
பெற்றோர்களால் செய்ய முடியாத காரியங்களை நம்மைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.
உண்மையான பெற்றோர்கள் தங்களின் நோக்கத்தை திணிக்காமல் தன் மகன் அல்லது மகளின் நலனை மட்டும் கருத்திள்ட கொண்டு வளர்க்க வேண்டும்.
எந்த வகையிலும் அவர்கள் மீது கருத்துகளைத் திணித்தல் கூடாது. அவர்கள் விருப்பம் என்வென்று கேட்டு, அவர்களின் வாழ்க்கையில் அதை நிறைவேற்றுவதுதான் நல்லது.
உங்கள் வாழ்க்கையின் நோக்கம், பிள்ளைகள் மூலமாக எநிறைவு பெறுவதற்காக, அவர்கள் வாழ்க்கையில் கண்டிப்புடன் நடந்து கொண்டால், மிக எளிதல் அவர்கள் உங்களை எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள்.
அன்பை கற்றுக் கொள்வதற்கு பதிலாக வெறுப்பைக் கற்றுக் கொள்ள ஆரம்பிப்பார்கள்.
எல்லா விஷயங்களிலும் அப்படிச் செய், இப்படிச் செய் என்று சொல்லிக் கொண்டிருப்பதை விட அவர்களையும் யோசனை செய்யச் சொல்ல வேண்டும்.
நாம் மட்டும் வழிகாட்டாமல் அவர்களின் நுண்ணறிவையும் வளர்க்க உதவ வேண்டும்.
மற்றவர்களுக்கும் உதவலாமே தவிர எந்த வகையிலும் உபத்திரவமாக இருந்துவிடக் கூடாது.
கடைசியாக, பெற்றோர் - குழந்தைகள் பற்றிய ஒரு உண்மை.
நம் குழந்தைகள் நம் மூலமாக கடவுளிடமிருந்து பூமிக்ககு வந்தார்கள்
குழந்தைகளுக்கு மட்டுமல்ல குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் நாம் அன்பு மிக்க சேவர்களே
நம் இஷ்டத்திற்கு மற்றவர்களை இழுத்தப்பதற்கு இன்றோடு முற்றுப்புள்ளி வையுங்கள்.
உங்கள் உறவுகளிடம்உள்ள நல்ல கெட்ட குணங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்களிடமிருக்கும் அப்பழுக்கற்ற அன்பிற்கு மற்றவரிடமிருக்கும் அற்ப குணங்களை அடியோடு மாற்றிடும் பக்குவம் உண்டு.
மற்றவரை திருத்துவதை விட, நாம் திருந்துவது நல்லது!
திருத்துவதை விட்டு திருந்துங்கள். திருந்தட்டும் வாழ்க்கை!
கேள்வி- பதில் :
ஜனனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களைக் கனவு காண, கற்பனையை வளர்க்கச் செ ால்லுகின்றார்களே! அதற்கும் சுவாமி சொல்வதற்கும் என்ன வித்தியாசம்? இவை இரண்டும் எதிர்மறை போல் உள்ளதே! முரண்பாடு மாதிரி தெரிகிறதே?
சுவாமிகளின் பதில் :
அப்துல்கலாம் லட்சியத்தை உருவாக்குகிற கனவுகளை உள்வாங்கி, அதனைப்பின்பற்ற வேண்டும் என்கிறார்.
ஆனால், நான் கூறுவது மற்றவர்களை நாம் செதுக்குவதை விட்டுவிட வேண்டும் என்கிறேன்.
உங்களை நீங்களே செதுக்கிக்கொள்ளும் ஆக்கபூர்வமான கற்பனையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
கனவு காணுங்கள்.
ஆனால, அடுத்தவரை செதுக்கும் அசாத்தியக் கனவுகளைக் காணாதீர்கள். உங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்த சாத்தியமில்லாத பகல் கனவுகளைக் காணாதீர்கள்.
கற்பனை குறையக் குறைய தியானம் நடக்கும். தியானம் செய்யச் செய்ய கற்பனை குறையும்.
கற்பனைகளைக் குறைத்து மூலாதாரச் சக்கரத்தை நிதானமாக இயங்கச் செய்வதற்கு நிச்சயமாக ஒரு குரு தேவை.
ஏன் குரு வேண்டும்? குரு இல்லாமலேயே தியானம் கற்றுக் கொள்ள முடியாதா? என்று கேட்கலாம்.
காரை வேகமாக ஒட்டிக் கொண்டு செல்கிறோம். திடீரென்று பிரேக் பிடிக்கவில்லை.
ரோட்டோரத்தில் நிற்கும் மஜ்த்தின் மீது காரை மோதவிட்டு நிறுத்துவதில்லையா? அந்த மரம் மாதிரித்தான் குருவும்.
நவீன காலத்து மனிதன் தன் கட்டுப்பாட்டை இழந்து கற்பனைச் சுழலில் சிக்கிக் கொண்டிருக்கிறான். சுழல் காற்றில் சிக்கிகக் கொண்ட சருகு போல சுழன்று தவிக்கும் மனித மனத்தை தடுத்து நிறுத்த உதவும் கருணை ;மரம்தான் குரு.
நன்து உடலில் 72 ஆயிரம் நாடி, நரம்புகள் உள்ளன. கற்பனেনிலேயே சக்தி விரயமாவதால் 72 ஆயிரம் நாடிகளில் சுமார் 14 ஆயிரம்தான் சுறுசுறுப்பாக எப்போதும் வேலை செய்கின்றன.
மற்றவையெல்லாம் நீண்டநாள் விடுமுறை எடுத்துக் கொண்டு போய்விட்டது. மீண்டும் வேலைக்கு வராமலே ஓய்வு பெற்று விடுகிறது... மனிதன் இறக்கும் வரையிலும் இப்படித்தான்!
இந்த மாதிரி விடுமுறையில் இருக்கும் நாடி, நரம்புகளை உடனே தட்டி எழுப்ப வேண்டும். தூங்கிக் கொண்டிருக்கும் இந்த நரம்புகளை உயிர்ப்பிக்கும் முறை தான் துக்கஹரனா தியானம்.
இந்த அற்புதமான தியானத்தை எப்படி செய்வது என்பதை முறையாகக் கற்றறிந்து தினமும் செய்யுங்கள்.
இந்த தியானத்தால் உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும். வளர்ச்சி பெருகும்.
நாடி நரம்புகள் புத்துணர்வு பெறுவதால், உடம்பின் ஒவ்வொரு செல்லும் ஜீவனோடு நுட்பமாக, நுண்ணுணர்வோடு செயல்படும். வாழ்க்கையின் உண்மையான அன்பு, பக்குவம், விழிப்புணர்வு எல்லாமே வளரும், பெருகும், சிறக்கும்.