தியான அனுபவங்கள்...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஒரு தியானம் ஓராயிரம் தியான அனுபவங்களை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது - இது தியான விதி.
தியானத்தின் ஆனந்த அனுபவங்கள் அனைவருக்கும் கிடைக்கும்.
✦ சிலருக்கு தியானம் நேரடியாக ஆனந்தத்தை அனுபவமாகத் தரும்.
✦ சிலருக்கு ஆனந்தத்தின் வெளிப்பாடான பக்குவத்தை அனுபவமாகத் தரும்.
✦சிலருக்கு தெய்வ தரிசனங்கள் கிடைக்கும்.
✦ சிலருக்கு உடலின் சக்திகளங்களில் தரிசனங்களும் அனுபவங்களும் கிடைக்கும்.
அறிவுப்பூர்வமாக வாழும் மனிதர்களுக்கும் பெரும் பாலும் பக்குவமும்,
இதயப்பூரவமாக வாழும் மனிதர்களுக்கு பெரும் பாலும் தரிசனமும்,
உணர்வுப்பூர்வமாக வாழும் மனிதர்களுக்கு பெரும் பாலும் ஆனந்தமும் தியான அனுபவங்களாக கிடைக்கும்.
மனிதனின் இயல்பைப் பொருத்து தியானத்தின் அனுபவங்கள் வேறுபடும்.
பக்குவம், தரிசனம், ஆனந்தம் ஆகிய அனைத்துமே நாம் பேரானந்த நிலை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கான நல்ல அறிகுறிகள் மட்டுமே.
சிலர் சில தியான அனுபவங்கள் கிடைத்ததும் தாங்கள் ஏதோ பெரிதாக சாதித்து விட்டதாக நினைப்பதுண்டு. அத்தோடு நில்லாமல், ஏதோ ஒரு மிகப் பெரிய ஆன்மீக நிலையை அடைந்து விட்டதாக பெருமிதப்படுவதும் உண்டு.
இந்த புத்தகத்தைப் படிக்கும் நீங்கள், தியான அனுபவங்கள் பெற்றவாராகயிருந்தால் ஒரு முறை உங்களை நீ ங்களே ஆராய்ந்து பாருங்கள்.
ஏனென்றால் சில தியான அனுபவங்களின் மூலம் ஏதோ பெரிய ஆன்மீக நிலையை அடைந்துவிட்டதாக, நம்மை நம் மனமே நம்ப வைத்து ஏமாற்றிவிடும். இந்த எண்ணமே ஆன்மீக வளர்ச்சியை தடை செய்துவிடும்.
எனவே தியான அனுபங்கள் கிடைப்பது நல்லதுதான். ஆனால் அவை இறுதியல்ல.
அடுத்தடுத்து நிறைய விஷயங்களைத் தாண்டி பேரானந்த நிலையை அடைவதுதான் முக்கியம் என்பதை உறுதியாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
(தியானத்தில் முதல் முறையாக ஈடுபடும் அன்பர்கள், தியானத்தின் மகத்துவத்தை உவர்ந்து முழுமையாக தியானம் செய்ய உதவியாக, அநட தியான முகாமில் பக்தர்கள் பகிர்ந்த தியான அனுபவங்களின் ஒளிநாடாப் பதிவுகளிலிருந்து சில...)
✦’’ சுவாமி, மகாமந்திர தியானம் செய்யும் போது நெஞ்சுக் குழியிலிருந்து சுக உணர்வு தொடர்ந்து பொங்கிக் கொண்டே இருந்தது. உடல் முழுவதும் அந்த சுக உணர்வு பரவியது. ஒரு கட்டத்தில் உடல் முழுவதும் அதிர ஆரம்பித்து விட்டது. என்னுடைய நாற்பதாண்டு கால வாழ்வில் இன்று அனுபவித்த இந்த சுகத்தையும், மன அமைதியையும் நான் இதுவரை அனுபவித்ததே இல்லை... நன்றி!’’
- ஸ்டாலின் ( ஏற்காடு அநட -ல்)
“ அனாகதச் சக்கரத்ததன் அனுபவம் அது.!
உடல் முழுவதும் பரவிய சுக உணர்வுதான் ஆனந்த சக்தி.
ஒரு கட்டத்தில் உங்களுக்கு உடல் அதிர்ந்தது பற்றி பயப்பட வேண்டாம். தொடர்ந்து தியானம் செய்து வர உடல் பக்குவப்பட்டு விடும்.”
✦ “சுவாமிஜி இந்தத் தியானத்தில் பத்து நிமிடங்கள் தாண்டிய பிறகு என்னுடைய மார்புக்கூட்டுக்குள் மிகப் பெரிய வெற்றிடம் உருவானது. அந்த இடத்தில் எந்த ஒரு உறுப்பும் இல்லாதது போலத் தெரிந்தது”.
ஈழ். சித்ரா
(பெங்களூர் அநட-ல்)
“நல்லது தொடர்ந்து தியானம் செய்யுங்கள்”.
✦ “தியானத்தில் எனக்கு எந்த அனுபவமும் கிடைக்கவில்லை. தியானம் செய்வதில் எந்தப் பலனும் இருப்பதாக எனக்கு நம்பிக்கையில்லை...”
- கோபி ( சென்னை அநட -ல்)
(சிரித்துக்கொண்டே பரமஹம்ஸர் பதிலளிக்க துவங்குகிறார்...)
“இதற்கு முன் முப்பது நிமிடங்கள் நிம்மதியாக ஒரே இடத்தில நீங்கள் உட்கார்ந்திருக்கிறீர்களா....”
“இல்லை சாமி...”
“நீங்கள் தனியாக பத்து நிமிடம் உட்கார்ந்திருந்தால் போர் அடிக்க ஆரம்பித்துவிடும். ஆனால் இப்பொழுது முப்பது நிமிடம் தனியாக உட்கார்ந்தீர்களா? அதுவும் நிம்மதியாக!”
“ஆமாம் சாமி”
“கோபி! ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள்,தியான அனுபவங்கள் என்பது உங்கள் கற்பனைக்கும் எதிர பார்ப்புக்கும் அப்பாற்பட்டது.
உங்களின் இயல்பைப் பொருத்து அனுபவங்கள் மாறுபடும்.
மற்றவர்கள் தங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் பற்றி சொன்வற்றை வைத்து எனக்கு அப்படியெல்லாம் கிடைக்கவில்லையே என்று கற்பனை செய்து விட்டீர்கள்.
முப்பது நிமிடம் நிம்மதியாக உட்கார்ந்திருந்ததே மிகப் பெரிய அனுபவம்தான். தொடர்ந்து தியானம் செய்ய செய்ய உங்களுக்கும் பல்வேறு அனுபவங்கள் கிடைக்கும்”.
✦ “முப்பது நிமிடம் மகாமந்திர தியானம் செய்த பிறகு என் நெஞ்சிலிருநந்து மிகப் பெரிய பாரம் ஒன்றை இறக்கி வைச்ச மாதி இருக்கிறது. மனசு பஞ்சாட்டம் லேசா இருக்கு!’’
சுப்பையா (மலேசியா அந்நட -ல்)
‘‘மனதளவில் ஏற்படும் மாற்றங்கள்தான் மிகமிக உன்னதமானவை.
தியானம் செய்ய செய்ய பக்குவப்பட்டுக் கொண்டே போக வேண்டும் இதுதான் வளர்ச்சி!
தியானத்தில் கிடைக்கும் பக்குவம் தான் நிரந்தரமானது.
மற்ற எல்லா அனுபவங்களும் அந்த நேரத்திற்கு நன்றாக இருக்கும் கொஞ்சம் நம்பிக்கைத் தரும். அவ்வளவு தான்.
ஆனால் பக்குவமும் , முதிர்ச்சியும் தான் கடைசி வரை இருக்கும். நிம்மதி தரும்.
தியான சக்தியை பயன்படுத்தி ஞானக் கருத்துக்களை நடைமுறைப்படுத்துங்கள்’’.
✦ ‘‘நெற்றிப் பொட்டில் ஸ்ண்ர்ட்ப்ங்ற் மற்றும் ஈங்ங்ல் ஆப்ன்ங் நிற வளையங்கள் தொடர்ந்து தோன்றி மறைந்த வண்ணமேயிருந்தது’’.
- ராஹினி (ஒக்லஹாமோ அந்நட -ல்)
‘‘இது ஆக்ஞா சக்கர அனுபவத்தின் வெளிப்பாடு. நல்லது’’.
✦ ‘‘சாமி முதல் சில நிமிடங்கள்தான் நான் தியானம் செய்தேன். அதற்கப்புறம் தியானம் தானாகவே நடந்தது.
நீங்கள் நற்ர்ல் என்று சொல்லும் வரை மஹாமந்திர நகரம் என்னால் செய்யப்பட்டது. நான் செய்யவில்லை...
இது மிகவும் வினோதமாக எனக்குத் தோன்றுகிறது. ஏன் இப்படி?’’
- கோபால் (மதுரை அந்நட -ல்)
‘‘தியானத்தை மிக சரத்தையோடு (நண்ய்ப்ரீங்ழ்ங்) செய்திருக்கிறீர்கள். தியானத்தில் தன்னை இழந்து சாட்சியாக மாற வேண்டும் என்பது ஓர் இழக்கு தான்.
தியான வேளையில் உங்களின் நான் என்ற அகங்ககாரம் கரைய நீங்கள் அனுமதித்திருக்கிறீர்கள். அதனால்தான் நான் தியானம் செய்யவில்லை. தியானம் என்னால் செய்யப்பட்டது என்கிறீர்கள்.
நீங்கள் சாட்சியாகப் பார்த்தற்கான அறிகுறிதான் இது. தொடர்ந்து தியானம் செய்யுங்கள்’’.
✦ “என்னுடைய உடல் எங்கேயிருக்கிறது என்பது எனக்கு மறந்து விட்டது.
நான் இருக்கிறேன் - என்ற உணர்வு இருக்கிறது. ஆனால், நான் எங்கேயிருக்கிறேன்? எப்படி இருக்கிறேன்? என்பது தெரியவில்லை.
சில நிமிடங்கள் இந்த அனுபவம் நீடித்தது”.
நீலவேணி
(திருவண்ணாமலை
அநட -ல்)
'' மனம் இருக்கும் வரை தான் உடல் இருப்பது தெரியும். மனம் மறைந்தால் உணர்விலிருந்து உடலும் மறைந்து விடும்.
உடல் எங்கேயிருக்கிறது என்று உங்களுக்கு தெரியாமல் போன நிமிடங்கள் மனம் ஸ்தம்பித்துப் போன நிமிடங்கள்...
நல்லது
தொடர்ந்து ஆன்மீகப் பாதையில் முன்னேறிக் கொண்டேயிருங்கள்''.
✦ “சுவாமிஜி தொடர்ந்து மகாமந்திர தியானத்தை என் இல்லத்தில் செய்து வருகிறேன். இன்று, இந்த கூட் டத்தில் செய்த தியானத்தில் பல மடங்கு ஆனந்த சக்தி என்னுள் பாய்ந்ததை உணர்கிறேன். ஏன் இந்த வித்தியாசம்?’’
வள்ளி ராமநாதன்
(சென்னை தியான
சத்சங்கம்)
“கூட்டு தியானத்திற்கு எப்போதுமே தனி மகிமை உண்டு. இதை விளக்க ஒரு சிறிய உதாரணம்.
பத்து பத்து ரூபாயாக பத்து பேர் ஒன்று சேர்த்தால் நூறு ரூபாய் வரும். இந்த நூறு ரூபாயை பத்து பேரும் அனுபவிக்க முயற்சித்தால் ஆளுக்கு பத்து ரூபாய் மட்டுமே கிடைக்கும்.
மாறாக பத்து பேரில், ஒவ்வொருவரும் பத்து வோல்ட் கரண்டை ஒரு பேட்டரியில் சேர்க்கிறார். அந்த பேட்டரியில் நூறு வோல்ட் உருவாகிறது.
பேட்ரியின் வொயரை பத்து பேரும் ஒரே நேரத்தில் தொட்டாலும் பத்து பேருக்குமே நூறு வோல்டேஜ் ஷாக் தானே கிடைக்கும்?!
முதலீடு 10 வோல்டேஜ், ஆனால் கிடைத்ததோ 100 வோல்டேஜ்.
கூட்டு தியானமும் இதே போன்றதுதான். ஒவ்வொரு வரும் தியானம் செய்வதால் உருவாகும் ஆனந்த ச க்திகள் அனைத்தும் ஒன்றாக திரண்டு எல்லோருக்கும் கிடைக்கிறது.
இதன் விளைவுதான் நீங்கள் உணர்ந்த பல மடங்கு ஆனந்த சக்தி...
... கடைசியாக ஒரு விஷயத்தை கூறி முடிக்கின்றேன். செய்தால் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தியானம் தியான அனுபவம் நிகழ்ந்தே தீரும்.