KAILASA Library/பூங்௯்௪சிட் ங௯்௪சிடபூத/மகாமந்திர தியானம்Sign in
பூங்௯்௪சிட் ங௯்௪சிடபூத

மகாமந்திர தியானம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மகாமந்திர தியானம் மிகப் பழமையான திபெத்திய தியானம்.

ஆரம்ப காலத்தில் இந்த தியானத்தை அதிகாலையில் மட்டுமே செய்து வந்தனர். ஆனால் இந்த தியானத்தின் தனி சிறப்பே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்தத் தியானத்தை செய்யலாம் என்பதே.

மின எளிமையான அதே நேரத்தில் மிக வலிமையான தியானம் இந்த மகாமந்திர தியானம்.

ஆதார நாதங்கள் என்றழைக்கப்படும் ஆ,ஊ, ம் என்ற மூன்று நாதங்களிலிருந்து மிக மிக அடிப்படையான நாதம் இந்த மகாமந்திர தியானத்தில் பயன்படுத்தப்படுகிறது.

உபநிஷத்துக்களின் கூற்றுப்படி உள்ள பரபஞ்ச தோற்றத்தின் முதல் நாதம் மகாமந்திர தியானத்தின் போது நம்முள் உருவாக்கப்படுகிறது.

பிரபஞ்ச தோற்றத்தின் மகாசக்திகளை தன்னுள் அதிர்வுகளாக கொண்டிருக்கும் ஆதி நாதத்தை அனைத்துச் ச க்கரங்களிலும் அதிர்வுச் செய்வதே மகாமந்திர தியானம்.

மகாமந்திர தியானத்தில் உடல், மனம், உயிர் ஆகிய மூன்றும் ஒருசேர சக்தியூட்டப்படுகின்றன.

ம் , ஹும் என்ற நாதம் ஆதார நாதம் என்று உபநிஷத்துக்கள் அன்று சொன்ன உண்மையை இன்று அறிவியல் உலகமும் ஏற்றுக் கொள்கிறது.

ஆண்ஞ் க்ஷஹய்ங் ற்ட்ங்ர்ழ்ஹ் என்றழைக்கப்படும் பிரபஞ்ச தோற்றக் கொள்கை உபநிஷத்துக்களின் கூற்றை உண்மை என்று நிரூபித்திருக்கின்றன. பிரபஞ்சத்தின் அடிப்படை அலகு ஹும், ம் என்று ஆண்ஞ் க்ஷஹய்ங் ற்ட்ங்ர்ழ்ஹ் நிரூபிக்கின்றது. மேலும் பிரபஞ்சம் உருவானதிலிருந்து இன்று வரை நிகழ்ந்த எல்லா நிகழ்வுகளும் சக்தி அதிர்வுகளாக ஒவ்வொரு துகளிலும் பதிந்திருக்கிறது.

பிரபஞ்சத்தின் அடிப்படை அலகான இந்த சக்தி அதிர்வுகளை முறையாக தன்னுள் உருவாக்க ஒருவர் கற்றுக் கொண்டு விட்டால், உடலையும் மனத்தையும் ஒருசேர சக்தியூட்டும் கலையை கற்றுக்கொண்டு விடலாம்.

ம் என்ற ஆதார நாதத்தைக் கொண்டு உடலுக்குள் உற்சாக சக்தியை பொங்க வைக்கும் கலைதான் மகாமந்திர தியானம்.

ததியானபீடத்தின் எல்லா தியான சத்சங்கங்களிலும் மகாமந்திர தியானம் இலவசமாக கற்றுத் தரப்படுகிறது.

நம்முள் இருக்கும் ஆரோக்கியம், சுகம், உற்சாகம் அனைத்தையும் வெளிகொண்டு வரும் சூட்சும சக்தி பெற்ற இந்த மகாமந்திர தியானம் ஒவ்வொரு மனிதனும் செய்து பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான தியானம்.

ஒரு மண்டலம் அதாவது தொடர்ந்து 48 நாட்கள் மகாமந்திர தியானத்தை செய்பவர் தியானத்தின் முழு பலனையும் அனுபவமாக உணர முடியும்.