KAILASA Library/பூங்௯்௪சிட் ங௯்௪சிடபூத/நிழலிலிருந்து நிஜத்திற்குSign in
பூங்௯்௪சிட் ங௯்௪சிடபூத

நிழலிலிருந்து நிஜத்திற்கு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அனாகத சக்கரம்

இந்தச் சக்கரம் மார்பின் மத்தியில் அமைந்திருக்கிறது.

ஆங்கிலத்தில் இதை ஏங்ஹ்ழ்ற் இட்ஹ்ந்ழ்ஹ (இதயச் சக்கரம்) என்று அழைப்பார்கள். இந்த சக்கரத்திற்கு வெகு அருகில் இதயம் அமைந்திருக்கிறது.

நமது இதய உணர்வைப் பொருத்தவரை நாமெல்லாரும் அதன் பயன் கருதி ஏதோ ஒன்றை எதிர்பார்த்துத்தான் வாழ்கின்றோம்.

நமது உறவுகள் அனைத்தும் எதையோ எதிர்பார்த்துத் தான் இருக்கிறது.

மகன் எதிர்காலத்தில் தன்னைக் காப்பாற்றுவானா? என்று ஒரு தந்தை எதிர்பார்க்கிறான்.

அப்பா தனக்கு நிறைய சொத்து, சுகத்தைச் சேர்த்து வைப்பாரா? என்று மகன் எதிர்பார்க்கிறான்.

இப்படி ஒவ்வொருவரும் ஒரு எதிர்பார்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சிலர் பணத்தை, புகழை, பதவியை எதிர்பார்ப்பார்கள். ஆனால்... நான் அப்படியெல்லாம் எதிர்பார்ப்பவன் அல்ல- என்பவர்களின் எதிர்பார்ப்பு இன்னும் கொஞ்சம் காஸ்ட்லியாக இருக்கும்.

இப்படிப்பட்டவர்கள் கவனம், முக்கியத்துவம், ஈர்ப்பு ஆகியவற்றை அன்பு என்ற பெயரிட்டு, அதை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

நம்மைப் பற்றிய புரிதல் நமக்கு இல்லை.

நமக்கு எது கிடைத்தாலும் அதை சாதாரணமாக ஏற்றுக் கொண்டு விடுகிறோம். மதிப்புத் தருவதில்லை. எனவே அதன் அருமை நமக்குத் தெரிவதே இல்லை.

ஒரு சிறிய கதை:

இந்த ஒரே ஒரு கதையைப் புரிந்து கொண்டால், மொத்த ஆன்மீகமும் புரிந்துவிடும்.

ஜெர்மன் நாட்டுக் குட்டிப் போர் விமானம் ஒன்றை இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் மலைவாசிகள் நிறைய வாழும் கிராமத்தில், விட்டுச் சென்றனர்.

அந்தப் பழங்குடி மக்கள் அதற்கு முன்பு அப்படி ஒன்றைப் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதும் இல்லை. அந்தக் குட்டி விமானத்தை ஆச்சரியம் கலந்த பயத்தோடு அந்த மக்கள் பார்த்தனர்.

அது என்னவென்றே தெரியாத நிலையில் ஊர் முழுவதும் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். அதைப் பற்றிய கதைகள், யூகங்கள் என்று தினமும் ஒரு விஷயம் கிளம்பிக் கொண்டிருந்தது.

அப்போது அடுத்த ஊரைச் சேர்ந்த ஒருவன் அதைக் கண்டான். அவன் கொஞ்சம் புத்திசாலி.

இதற்கு சக்கரங்கள் இருப்பதால் அது நிச்சயம் ஒரு வாகனமாகத்தான் இருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தான்.

இது புதுமையான மாட்டு வண்டியாக இருக்கலாம் என்று நினைத்து, அதற்கு பூட்டி, ஒரு மாட்டு வண்டியைப் போலப் பயன்படுத்த ஆரம்பித்தான்.

பல மாதங்கள் கழிந்தன.

அந்த ஊரிலிருந்து வெளியூர் சென்று படித்து விட்டு வந்த ஒருவன், வாகனங்களின் தொழில்நுட்பங்களைப் பற்றிக் கொஞ்சம் அறிந்திருந்தான்.

அவனுக்கு கார் மெக்கானிசமும், கியர் போன்ற அமைப்புகளும், என்ஜினின் பாகங்களைப் பற்றியும் ஓரளவு மட்டுமே தெரியும்.

இது மாட்டு வண்டி அல்ல. இது ஒரு டிராக்டர் என்கிற முடிவுக்கு வந்தான் அவன். அது ஒரு டிராக்டர் என்று சொல்லி அதை ஓட்டியும் காட்டினான்.

மக்களுக்கோ அளவற்ற மகிழ்ச்சி. ஆஹா! மாட்டு வண்டி என்று நினைத்தது எவ்வளவு பெரிய மடத்தனம்! இது ஒரு டிராக்டராமே! என்று சந்தோஷப்பட்டனர்.

இப்படியே சில நாட்கள் ஓடின. பிறகு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் அந்தக் கிராமத்துக்கு வந்தார்.

குட்டி விமானத்தை மக்கள் டிராக்டர் போல ஓட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்.

அடப் பாவமே! என்ன மக்கள் இவர்கள்! விமானத்தை டிராக்டர் போல அல்லவா பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று வேதனைப்பட்டார்.

ஊர் மக்கள் எல்லோரையும் அழைத்தார். இது மாட்டு வண்டியும் அல்ல. டிராக்டரும் அல்ல. இது ஒரு விமானம் இதில் ஏறி பறக்க முடியும் என்றார்.

மக்களுக்குப் புரியவில்லை. மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்.

அதனால் விமானம் என்றால் என்ன என்று விளக்கிச் சொன்னதோடு, விமானத்தை ஓட்டியும் காட்டினார்.

அது வானத்தில் பறந்ததைக் கண்டு மலைவாசி மக்கள் அதிசயித்துப் போனார்கள்.

ஏன் இந்தக் கதையைச் சொன்னேன் என்பது உங்களுக்குப் புரிகிறதா?

சரியான நேரத்தில், சரியான நபர் வந்து, சரியான விளக்கத்தை நமக்குத் தராவிட்டால் நம்மால் எதையும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.

நம்முடைய உடம்பை, அதில் உறைந்து கிடக்கும் சக்தியை சரியாகப் புரிந்து கொள்ளாமல் உடம்பை மாட்டு வண்டியாக பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள்தான் நம்மில் பலர்.

சிலர் நம்முடைய உடம்பை டிராக்டர் போல பயன் படுத்தி வருகிறோம்.

ஆனால் விமானத்தை விமானம் போன்று, உடலின் முழு பயனையும், சக்தியையும் பயன்படுத்துகிறவர்கள் மிகச் சிலர்தான்.

மனிதனால் சிறகடித்துப் பறக்க முடியும்.

ஆனந்தமாக உலா வர முடியும். ஆனால் நம்மில் பலர் மிகக் குறைந்த அளவே நம்முடைய உடல் ச க்தியைப் பயன்படுத்தி மகிழ்ச்சி என்ற பெயரில் கிளர்ச்சி அடைகிறோம்.

மகிழ்ச்சி அடைவதில்லை. கிளர்ச்சி மட்டுமே அடைகின்றோம்.

இதையும் தாண்டிய ஆனந்தம் என்ற ஒன்று இருப்பதைப் பற்றி யோசிப்பது கூட இல்லை.

நமது உடல் இறைவன் கொடுத்த மிக அற்புதமான பரிசு. இந்த பரிசை உடல், மனம், இதயம், உணர்வு, உயிர நிலை என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் வைத்துள்ளோம். அனுபவரீதியாக நாம் அவற்றை ஆராய்ந்து பார்க்கவே இல்லை.

உடலைப் பயன்படுத்தி அடையும் அனுபவத்தின் ஆழத்தைப் பொறுத்து மிகப் பெரிய படைப்பாளிகளாக மனிதன் மாறுகிறான்.

இறைவனின் பரிசை ஆழமாகப் பயன்படுத்தியவர்களின் பெயரே வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.

ஆனால், நாமோ நம்முடைய உடலை, உடலின் சக்தியை, அதன் ஆற்றலை மிகவும் குறைவாகப் பயன்படுத்திவிட்டு, நேரம் சரியில்லை, வாழ்க்கை சரியில்லை என்று புலம்ப ஆரம்பித்து விடுகிறோம்.

இறைவன் கொடுத்த இந்த உடலைச் சிலர் மாட்டு வண்டியாகக்கூடப் பயன்படுத்தாமல் தள்ளுவண்டியாகப் பயன்படுத்துவதுதான் மகா கேவலம்.

ஒரு வீடு, ஒரு கார், கொஞ்சம் தங்கம், வெள்ளிப் பாத்திரம், பட்டுப்புடவைகள், நண்பர்கள் என்று சாதாரண விஷயங்களுக்காக நமது ஆன்மாவை, நமது உள் உணர்வை, அதன் மதிப்பு தெரியாமல் மாட்ட வண்டி போல, டிராக்டர் போல பயன்படுத்துகிறோம்.

ஏதோ ஒரு இயக்கத்திற்கும், அறிவின் மயக்கத்திற்கும், அறியாமைக்கும் அடிமையாகிப் போய், வாழ்க்கைகயை ஒவ்வொருவரும். ஒவ்வொருவகையில் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தியானத்தை நோக்கி வர வேண்டியவர்கள் மயானத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

ஆனந்தத்தைக் கொண்டாட வேண்டியவர்கள், அல்லல்பட்டுத் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் ஒருபடி மேலே போய் சிலர் கவிதை, கலை, நாட்டியம், ஓவியம், தத்துவம் என்று சற்று நுட்பமான விஷயங்களுக்காக வாழ்கிறார்கள். இவர்கள் தனது உடலை டிராக்டர் போலப் பயன்படுத்துகிறார்கள்.

உடலை டிராக்டர் போல் பயன்படுத்துபவர்களால் ஞானிகளைப் போல முழுமையாகப் பயன்படுத்துபவர்கள் அல்ல, உடலுக்குள்ளிருக்கும் சொர்க்கத்தை அவர்களால் அனுபவிக்க முடியாது. ஆனந்தத்தில் பறக்க முடியாமு.

விமானத்தில் சில கியர்கள் இருக்கின்றன. சில பொத்தான்கள் இருக்கின்றன. விமானத்தை எப்படி இய்ககுவது என்று தெரிந்துவிட்டால் போதும் விமாத்தை இயக்கிப் பறப்பது சாதாரண விஷயமாகி விடும்.

விமானத்தின் கியர்கள் போன்று நம் உதலிலும் ஏழு கியர்கள் இருக்கின்றன.

அவைதான் ஏழு சக்கரங்கள் அல்லது சக்திமையங்கள். இவைகளை மிகச் சாயகா இயக்கத் தெரிந்து விட் டால், நாமும் நன்து உடமமைபயும் மனதையும் விமானம் போன்று பயன்படுத்தலாம்.

மனிதன் புழு மாதிரி தரையில் ஊர்வதற்காகப் பிறந்தவன் அல்ல.

பிறர் காலில் மிதிபபடப் பிறந்தவனும் அல்ல.

வானத்தையே வட்டமிட்டு வளைக்கப் பிறந்தவன்.

ஆனால் அவனுக்கு அவசியமே இல்லாததை வெளியே கெஞ்சிக் கூத்தாடி பிச்சை எடுப்பதுதான் பரிதாபம். எது தேவையானதோ அது தன்னிடமே இருப்பததைக் கூட அறியாமல் வெளியே பிச்சை எடுப்பது மகா பரிதாபம்.

ஒரு பெண் விஞ்ஞானி என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, "நாம் அனைவரும் மிகச் சிறந்த விஞ் ஞான அறிவு படைத்தவர்கள் என்பதை நிருபித்து விட்டோம்.

ஆனால் நமக்குள்ளேயே இருக்கும் ஆன்மாவை அறியாமல், அதைப் பட்டினியால் சாக விடுகிறோம்" என்று சொன்னார்.

ஆம்! உண்மைதான் "வாடுவது தென்னை மரம்! தண்ணீர் ஊற்றுவது பனை மரத்திற்கா?" -என்ற கதையாகத் தான் நாம் வாழ்க்கை நலத்திக்கொண்டிருக்கிறோம்.

ஞானம் அடைதல் என்பது எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்து விடுவது அல்ல.

ஞானம் அடைதல் என்றால் நமக்குள் உள்ள மொத்த சக்தியையும் வெளிப்படுத்துதல்.

பூரணமாக உபயோகித்தல், பரிபூபரணத் தன்மையை உணர்ந்து செயல்படுதல். அதுதான் ஆனந்தம், ஆன்மீகம் எல்லாம்!

இப்போது நாம் அனாகதம் என்கிற சக்தி மையத்தை எப்படி இயக்குவது என்று பார்ப்போம்.

  • அனாகதம் என்றால் அது உருவாக்கப்பட முடியாதது என்று அர்த்தம்.
  • அன்பு மலர்ந்தால் அனாகதச் சக்கரம் திறக்கப்படும்.
  • அன்பை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது அனாகதச் சக்ரத்தை மூடச் செய்யும்.
  • அன்பு - அனாகதச் சக்கரத்தின் திறவுகோல். எதிர்பார்ப்பு - அனாகத் சக்கரத்தின் தடைக்கல்.

உனக்கு இதயமே இல்லையா? என்று கேட்கிறோம். இதயம் என்திற உறுப்பு எல்லோருக்குமே இருக்கிறது. அந்த உறுப்பு இல்லாமல் மனிதன் எப்படி உயிர் வாழ முடியும்? ஆனால், இதயம் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு சக்தி நமக்குள்ளிருந்து வெளிப்பட மறுப்பதால்தான் இப்படிக் கேட்கிறோம்.

அன்பென்னும் உணர்வு, இதயம் இருக்குமிடமாகிய அனாகதம் சம்பந்தப்பட்டது. இதை உணர்வு ரீதியாக மனிதன் உணர்ந்து கொண்டதின் விளைவுகள்தான் அன்பு, காதல் இவற்றைக் குறிக்க இதயத்தின் வடிவத்தைப் பயன் படுத்துகிறான்.

தன்னையும் காப்பாற்றிக் கொண்டு, அடுத்தவர்களுக்கு உதவி செய்கின்றன அபரிமதமான சக்தியான

அன்பு நம்மிடம் இல்லாததால் தான், நாம் மற்றவர்களிடமிருந்து கவனத்தை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிவிடுகிறோம்.

மற்றவர்களின் கவனத்தை அன்பை எதிர்பார்ப்பது ஒருவகையான மனநோய்தான்.

மற்றவர்களை நம் பக்கம் ஈர்த்து, கவனிக்கச் செய்கின்ற எல்லாவித காரியங்களும், அடுத்துவர்களது கருத்துக்காவும் மதிப்பீடுகளுக்காகவும், ஏங்கி நிற்பதாகவே இருக்கிறது.

தனி மனித அந்தஸ்துக்காக எல்லா மனிதர்களும், எல்லா நேரமும் இயந்திரங்களைத் ஏங்கி நிற்கின்றனர். திறம்பட இயக்குவது ஓர் கலை. இந்த ஏக்கத்துக்குக் காரணம், நம்முள் நமக்குத் அதேபோல், உடல் என்னும் தேவையான அன்பில்லை. சக்தி இல்லை. தன் இயந்திரத்தையும் திறம்பட மீதே தனக்கு நம்பிக்கையில்லை என்பதே! இயக்கும் கலைக்குப் பெயர்தான் அதனால்தான் மற்றவர்களின் அங்கீகாரத்திற்காகவும் ஞானம். அவர்களிடமிருந்து நற்பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவும் எல்லாக் காரியங்களையும் செய்து கொண்டிருக்கிறோம். படிப்படியாக இயந்திரம் ஒட்டக் நம்மை நாமே திருப்திப்படுத்திக் கொள்வதற்கோ, கற்றுக்கொண்டுவிட நம்முடைய ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கோ முடியும். அதேபோல், நமக்கு அக்கறை இல்லை. இதனால் ஒவ்வொருவர் படிப்படியாக வாழ்க்கையும் அடுத்தவர் கையில் இருக்கும் டிவி தியான மார்க்கத்தில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்டுவிக்கப் படும் மூழ்க மூழ்கத் டி.வி. ரூபலாகிவிடுகிறது. திடீரென ஒரு நாள்

கற்றுக்கொள்வீர்கள்... மற்றவர்களுக்காக நடனம் ஆடவும், அவர்களின் மகிழ்ச்சிக்காக நம்மை கஷ்டப்படுத்திக் கொள்வதிலும் நம்முடைய நாட்கள் உடல், மனம், சக்தி கழிகின்றன. யுதார்ட்ந்து ஆட்டுவிக்கப்படுகிறோம். ஆகிய மூன்றையும் இயக்குவது மற்றவர்களின் சிறு சிறு மகிழ்ச்சிச்சிக்காக நம் எப்படியென்று! வாழ்வின் பெரும் பகுதியைச் செலவிடுகிறோம். இதையேதான் எல்லோரும் எல்லோருக்காகவும் செய்திறார்கள் என்பது விந்தை.

மற்றவர்களின் நன்மதிப்பைப் பெறுவது ஒன்றுதான் நம்முடைய நோக்கமாக இருக்கிறது.

அது கிடைக்காத போது அவர்கள் மீத நாம் வெறுப்பும், கோபமும் கொள்கிறோம். இப்படி உருவாகும் வெறுப்பு நம் மனதில் உறங்கிக் கிடக்கும் மிருகத்தனத்தையும், வன்முறையும் தூண்டி விட்டு நாசத்தை ஏற்படுத்துகிறது.

கணவனுக்கு மனைவியிடம் நல்லவன் என்று சான்றிதழ் வாங்க ஆசை. மனைவிக்கோ கணவனிடம், குழந்தைகளிடமும் நல்லவள் நல்ல அம்மா என்று சான்றிதழ் வாங்க விருப்பம்.

காதலன் காதலியிடமும், மாமியார் மருமகளிடமும், தொழிலாளி முதலாளியிடமும் எப்படியாவது நன்மதிப்பை அடைந்துவிட மாட்டோமா என்று எல்லோரும் ஏங்கித் தவிக்கிறார்கள். இந்த இலக்கை நோக்கித்தான் எல்லாக் காரியங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.

அதாவது, நமது சக்தி மையம், உண்மையில் நன்க்க внутренாமல் மற்றவர்களைச் சார்ந்து இருப்பதால் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இயங்க ஆஜ்ம்பித்து விடுகிறது.

நமது மொத்த வாழ்க்கையும் நமது விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப அமையாமல் மற்றவர்களின் இஷ்டத்திற்கேற்ப அமைந்து விடுகிறது.

யாருமே அவரவர் இஷ்டப்பட்டபடி வாழ்க்கையை வாழ முடியாமல் போனதற்குக் காரணம் இதுதான்.

"காலை முதல் மாலை வரை உனக்காகவே வாழ்கிறேன். உன் தேவையைப் புரிந்து கொண்டு நடக்கிறேன். ஆனால் எனக்குத் தேவையான அன்பு உன்னிடம் இல்லையே!" என்கிறோம்.

என்னைப் புரிந்து கொண்டவர்கள் ஒருவர் கூட இல்லையே என்று வருந்துகிறோம், நாம் அவர்களைப் புரிந்து கொள்ளாமலேயே.

ஆனால், விந்தையான உண்மை என்ன என்று தெரியுமா? நாம் யாரைப் பற்றி சொல்கிறோமோ அவர்களும் இதே வசனத்தை திரும்பச் சொல்வதுதான் விந்தையிலும் விந்தை.

அவர்களும் மற்றவர்களிடம் அன்பை பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நமது உறவுகள் அனைத்துமே, அடுத்தவர்களிடம் அன்பை பிச்சை கேட்டுக் கொண்டிருக்கும் அவநிலையில் தான் இருந்து கொண்டிருக்கின்றது.

நான் கருணை மிகுந்தவன். இந்த உலகையே நேசிக்கிறேன் என்று சிலர் வாய்ச் சவடால் பேசுவார்கள். ஆனால், பக்கத்து வீட்டுக்காரனோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.

நீங்கள் உலகையே நேசிக்கத் தேவையில்லை.

பக்கத்து வீட்டுக்காரர்களை நேசிக்கத் தெரிந்தாலே போதும். அவர்கள்தான் நம் கண் முன்னே நிதர்சனமாக நிற்பவர்கள். அவர்களுக்கு உடனடியாக ஏதாவது செய்ய முடிந்தாலே போதும்.

அடுத்தவருக்கு உண்மையிலேயே பயனுள்ளதாக நாம் ஏதாவது செய்யாத வரை, நான் அன்பு நிறைந்தவன், பாசம் மிகுந்தவன் என்று சொல்வதெல்லாம் வெறும் வாய் வார்த்தைகளே!

உங்களது கவனத்தை யார் மீதும் திருப்ப வேண்டாம்.

யாருடைய கவனத்தையும் நீங்கள் ஈர்க்க வேண்டாம்.

உங்களின் திருப்திக்காக வாழுங்கள். உங்கள் செயல்களில், அதன் அனுபவங்களில் தன்னிறைவு காணும் வரை முழுமையாக வாழுங்கள்.

மற்றவரை முழுமையாக நேசிக்கும்போது, உண்மையில் நம்மை நாமே நேசித்துக் கொண்டிருக்கிறோம்.

மற்றவர்களின் கவனத்தை நாம் பெற நினைப்பது ஏன்?

"நீ புத்திசாலி, நீ மிகவும் நல்லவன். நீ தான் அபத்பாண்டவன்" இப்படிப்பட்ட புகழ்ச்சியான வார்த்தைகளுக்குத்தான்.

"நீ எதற்குமே லாயக்கில்லை. உருப்பட மாட்டாய். நீ தரித்திரம்" என்கிற மாதிரி அவச்சொற்களை வாங்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

நமக்கு புகழ்ச்சியான வார்த்தைகள் கிடைக்கும் போது நாம் சந்தோஷம் அடைகிறோம். இகழ்ச்சியான வார்த்தைகளைக் கேட்கும் போது கோபமும், வெறுப்பும் கொள்கிறோம்.

இப்படி பல ஆயிரம் பேர் நமக்குக் கொணடத்த மதிப்பெண் பட்டியலை எடுத்துக் கொண்டு வரவு, செலவு கணக்கு பார்த்து ஒட்டிக் கொண்டிருக்கிறோம்.

ஆக, நம் வாழ்க்கை நம் கையில் இல்லை.

நமது மகிழ்ச்சி நம்மிடம் இல்லை.

நாம் ஒவ்வொருவரும் வாழாத வாழ்க்கையை, வாழ்ந்ததாகப் போலித்தனமாகப் பாவித்துக் கொண்டிருக்கிறோம்.

நமது வாழ்க்கையை மற்றவர்களிடம் அடகு வைத்து விட்டு உள்ளுக்குள் ஊமையாய் அழுது கொண்டிருக்கிறோம். உள்ளுக்குள் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறோம்.

வெளியே போட்டுக் கொண்டிருக்கும் மேக்கப்பினால் உள்ளே இருக்கும் அசிங்கத்தை மறைந்து விட முடியாது.

நமக்குத் தேவை உள்ளே இருக்கும் அசிங்கத்தைப் போக்கி அகமலர்ச்சியையும், அழகையும் ஏற்படுத்துவதுதான்.

வாழ்ககை என்பது ஒரு சீட்டுக்கட்டால் உருவாக்கப்பட்ட சீட்டுக் கோபுரம் போலாகிவிட்டது.

நாம் ஒவ்வொருவரிடமும் அபிப்பிராயம் என்னும் சீட்டு வாங்கி, அதை ஒன்றன் மீது ஒன்றாக பொறுமையாக அடுக்கி, வீடு கட்டுகிறோம்.

ஒரு மகன், அம்மா சொன்னதைக் கேட்டு நடந்தால், ஒழுங்கான பையன் என்று ஒரு சீட்டு.

மாமியார் சொல்வதை மருமகள் கேட்டால், நல்ல மருமகள் என்று ஒரு சீட்டு.

சொத்து பிரிக்கம் போது கொஞ்சம் விட்டுக் கொடுத்தால், நல்லவன் என்று ஒரு சீட்டு.

இப்படிப் பல சீட்டுகளை வாங்கி வாங்கி, அடுக்கி, அடுக்கி என் வாழ்க்கை என்னும் வீடு கட்டுகிறோம்.

இவர்களில் யாராவது ஒருவரின் கருத்து மாறும்போது, மொத்த சீட்டுகளும் சரசரவென்று கீழே விழுந்து விடுகிறது.

ஒரு சீட்டை உருவினால் மொத்த சீட்டுக் கோபுரமும் தரைமட்டம்தான்.

அதனால்தான் மற்றவர்கள் நம்மை பற்றிக்கூறும் தவறான அபிப்பிராயங்கள் நம்மை உலுக்கிப் போட்டு விடுகிறது.

நீ மோசமானவன், உதவாகக்கரை, ஏமாற்றுக்காரன் - என்று யாராவது கூறிவிட்டால் போதும், அவர்கள் கூறியது உண்மைதான் என்று உடனே கோபப்பட்டோ, நொந்து போயோ நிரூபித்துவிடுவோம்.

இந்த இடத்தில்தான் மன அழுத்தம் அல்லது மன இறுக்கம் உருவாகிறது. இதனுடைய பக்கவிளைவுதான் ஹிஸ்டீரியா போன்ற மனநோய்.

நமது அன்பு, காதல், பாசம் எல்லாமே திருவோடு ஏந்திய கதைதான். ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் முன்பு நின்று பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம் - நாம் மகா ராஜாக்கள், மகாராணிகள் என்ற உண்மை தெரியாமலேயே

இதில் சில வேடிக்கையான விஷயங்களும் நடை பெறுவதுண்டு.

அதில் ஒன்று.

மாமியாரும், மருமகளும்; மனைவியும் கணவனும்; காதலனும், காதலியும் ஓயாது சண்டை போட்டாலும் அவர்கள் பிரிந்து விடுவதில்லை.

சண்டையின் உச்சத்தைப் பார்த்தால் ஏதோ மிகப் பெரிய விபரீதம் ஏற்பட்டுவிட்டது போலத் தோன்றும், ஆனாலும், ஒருவரை விட்டு ஒருவர் பிரியவே மாட்டார்கள்.

காரணம் இது மாதிரியான சண்டைகள்தான் அவர்களிடையே சலிப்பு, உச்சத்திற்குச் சென்றுவிடாமல் காத்துக் கொள்ளுகிறது. சண்டையின் மூலம் மேலும் நெருக்கத்தையே இவர்கள் காண்கிறார்கள்.

ஒருவர் மீத இன்னொருவர் மேலும் அதிக கவனம் செலுத்த இந்த சண்டைகள் மிகவும் உதவியாக இருப்பதால், சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அது ஏதோ ஒரு வகையில் சுவையளிப்பது போன்று மக்களுக்கு தோன்றக் காரணம் இதுதான்.

இப்படி கவனத்தை எதிர்பார்ப்பது கூட ஒருவகையான போதைதான். இந்தப் போதை சிலருக்கு செயற்கையான சக்தியைக் கொடுக்கலாம்.

நூறு பேர் நம்மைக் கவனித்தால் தெருவில் நாம் ஒரு முக்கியமான ஆள்.

ஆயிரம் பேர் கவனித்தல் நாம் ஒரு பிரமுகர்.

பத்தாயிரம் பேர் நம்மைக் கவனித்தால் நாம் ஒரு வி.ஐ.பி..

ஐம்பதாயிரம் பேர் கவனித்தல் நாம் ஒரு தலைவர்.

ஒரு லட்சம் பேர் கவனித்தால், நாம் மிகப் பெரிய தலைவர் ஹீரோ.

ஆனால், இந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தால் நாம் ஹீரோவாக முடியாது. ஜீரோவாகத் தான் இருக்க முடியும். உருக்குலைந்த சீட்டுக் கட்டு கோபுரம் போல மனம் உடைந்து போகும்.

ஒரு சிறய கதை : வாஜஸ்பதி மிஸ்ரா என்பவர் பிரம்மசூத்திரம் என்கிற நூலுக்கு மிகச் சிறந்த உரை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய உரையைப் போல வேறு யாரும் உரை எழுத முடியாது என்கிற அளவுக்கு உலகத்தில் உள்ள தத்துவங்களை எல்லாம் உள்ளடக்கி உரையை எழுதினார்.

அவர் அந்த உரையை எழுதத் துவங்குவதற்கு முன்பு ஒரு சம்பவம். வாஜஸ்பதியின் குரு அவரிடம் சொன்னார், "எனக்கு வயதாகிவிட்டது. என் மகளை நீதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். நான் கூடிய சீக்கிரமே இறந்து விடுவேன்.

அதனால் பிரம்ம சூத்திரத்திற்கான உரையை நீதான் எழுத வேண்டும். மிகச் சிறப்பாக அதைச் செய்துவிடு" என்று சொல்லிவிட்டு, உயிரை விட்டு விட்டார்.

குரு சொன்னபடியே திருமணம் நடந்தது. வாஜஸ்பதியும் தனிக்குடித்தனம் ஆரம்பித்து, உரையை எழுதத் துவங்குகிறார்.

காலம் கடந்தன. வருடங்கள் உருண்டோடின.

உரை எழுதி முடித்தாகி விட்டது. அந்த நூலுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசி த்துக்கொண்டிருந்தார் வாஜஸ்பதி.

தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த போது, அவர் அருகில் இருந்த விளக்கிற்கு ஒரு பாட்டி நெய் ஊற்றி விளக்கேற்றிக் கொண்டிருப்பதைக் கவனித்தார்.

“அம்மா, நீ யார்?” என்று கேட்டார் வாஜஸ்பதி.

“நான்தான் உங்கள் மனைவி. என்னைத் திருமணம் செய்து கொண்டதும் நீங்கள் குருவின் ஆணையை ஏற்று உரையை எழுத ஆரம்பித்து விட்டீர்கள்.

உங்களுக்கு எந்தத் தொல்லையும் தராமல் வேண்டிய உதவிகளை பக்கத்திலிருந்து செய்து வருகிறேன்” என்று பவ்யமாகச் சொன்னார்.

வாஜஸ்பதிக்கு ஒரே பரிதவிப்பாக இருந்தது. ஆனாலும் உள்ளுக்குள் பரவசம் அடைந்தார்.

இவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வோடு ஒரு பெண் இருக்க முடியுமா?

மிஸ்ரா கேட்டார் : “என் கவனத்தை ஒரு முறையாவது திருப்பியிருக்கக் கூடாதா? உன்னை யார் என்று காட்டியிருக்கக் கூடாதா? உன் வாழ்க்கையை நான் வீணடித்து விட்டேனே!” என்று அழுதார்.

அதற்கு அவள் பதில் சொன்னாள் : “உங்களுக்கு சேவை செய்வது ஒன்றே எனது பாக்கியம். அது நிறைவே நீங்கள் தான் எனக்கு உதவினீர்கள்.

உங்களைத் திருமணம் செய்து கொண்டதால்தான் எனக்கு இந்த பாக்கியம் கிடைத்தது. இதற்கு எனது அநேக கோடி நன்றிகள்” என்று நெகிழ்ந்து கூறினாள்.

அவள் பெயர்தான் பாமதி. இந்தப் பெயரையே அவர் எழுதிய பிரம்மசூத்திர உரைக்குப் பெயரமாக வைத்தார்.

பல ஆண்டு காலம் பாமதியை எதையும் எதிர பார்காமல் இயங்க வைத்த எது?

அள்ள அள்ளக் குறையாமல் பெருகும் அன்பு என்னும் சக்திதான்.

இதை உணர்ந்தவர்களுக்கு வாழ்க்கை மிகச் சிறந்த பரிசு. வாழ்க்கை எப்படியிருந்தாலும் சரி அதைக் கொண்டாட இதுபோன்ற அன்பானவர்களால்தான் முடியும்.

எதையும் எதிர்பாராமல் அன்பை அள்ளி அள்ளிக் கொடுப்பவர்கள்தான் உண்மையில் வாழ்கிறார்கள்.

மற்றவர்கள் மீது அன்பு செலுத்தாமல்,மற்றவர்களிடமிருந்து அன்பையும், கவனத்தையும் வேண்டுபவர்கள் வாழும் போதே இறந்து விடுகிறார்கள்.

கவனத்தையும், அன்பையும் தேடித் தேடிக் கிடைக்காமல் நொந்து போய்த் திரிவகைத்தான் தமிழில் நடைப் பிணம் என்று அழைப்பார்கள்.

நிழல் வாழ்க்கையிலிருந்து நிஜத்திற்கு மாறுங்கள்.

கேட்பவடரிலிருந்து வழங்குவராக மாறுங்கள்.

அன்பு என்பது பிறர்க்கு வழங்க வழங்க, நம்முள் பொங்க ஆரம்பிக்கும்.

அன்பு மாபெரும் சக்தி. சுகத்தையும், ஆனந்தத்தையும் அள்ளித் தரும் சக்தி.

மற்றவருக்கு கொடுக்க ஆரம்பிக்கும்போது முதலில் நம்மை நிரப்பி, பின்னர் மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை அள்ளித் தரும் தன்மை படைத்து அன்பு.

நமக்குள் அன்பைப் பெருக்கும் அனாகத் சக்கரத்தைத் திறக்கும் தியானம் திபெத்திய புத்த மத்திலிருந்து எடுக்கப்பட்டது.