ஞானச் சொற்பொழிவுகள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
புரிந்துகொள்ளுதலே வளர்ச்சி.
மனிதன் தன்னையும், வாழ்க்கையையும் புரிந்து கொள்ள வளர்ந்து கொண்டேயிருக்கிறான்.
தனி மனித வளர்ச்சியை எளிமையாக்குவதே ஞானச் சொற்பொழிவுகளின் நோக்கம்.
காலங்காலமாக ஞானிகள்தான் அந்தந்தக் காலத்திற்கு தகுந்த மாதிரி மனிதன் தன் பண்புகளையும், குணங்களையும் உயர்வாக மாற்றி வடிவமைத்துக் கொள்ள உதவுகிறார்கள்.
மொத்த மனித குல வரலாற்றையும் எடுத்துப் பார்த்தால், விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஞானிகள்தான் மனிதனுக்கு உண்மையான நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
மனிதப் பண்புகளையும், மனித நேயத்தையும் தொடர்ந்து காப்பாற்றி வருவது ஞானிகளின் ஞானச் சொற்பொழிவுகள்தான்.
ஞானிகள் இல்லாத போயிருந்தால் மனிதனுக்கு மனிதப் பண்புகளை யார் கற்றுக் கொடுத்திருப்பார்கள்?
மனிதனின் மிருக குணங்களை பக்குவமாகச்சுட்டிக் காட்டி மனிதனாக வாழ வைத்த பெருமை ஞானக் சொற்பொழிவுகளையே சாரும்.
நமது எல்லா தியான முகாம்களிலும் அரை மணி நேரத் தியானத்திற்கு, குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது சொற்பொழிவாற்றப்படும்.
அரை மணி நேரத் தியானத்திற்கு இவ்வளவு நீண்ட சொற்பொழிவாற்றுவதன் ரகசியம் என்ன?
மனிதன் மறந்துபோன பல வாழ்வியல் ரகசியங்களையும், மனிதன் தவறாகப் புரிந்து கொண்டவை களையும் சுட்டிக் காட்ட வேண்டும்.
மனதில் இருக்கும் தவறான கருத்துக்களை நீக்கிச் சரியான கருத்துக்களை நிலைபெறச் செய்ய வேண்டும். ஆன்மீக வளர்ச்சியின் முதல் படி இது.
மொத்தத்தில் மனிதன் பொய்யை விட்டு உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மனித மனதுக்கு அதிகம் வலிக்காமல், தவறுகளை உணர்ந்து கொள்ளச் செய்வதற்காகத்தான் அவ்வளவு நேரம் சொற்பொழிவாற்ற வேண்டியிருக்கிறது.
எது ஆன்மீகம் என்று கற்றுக்கொடுப்பதை விட, எது எதுவெல்லாம் ஆன்மீகமல்ல என்று சுட்டிக்காட்டத்தான் நேரம் அதிகம் தேவைப்படுகிறது.
இந்த இரண்டு நாள் ஆனந்த ஸ்பூரண தியான முகாமில் நம்முள் இருக்கும் மூன்று சக்தி அடுக்குகளையும் ஒவ்வொன்றாக செயல்படவைக்கும் விதத்தில் தியான முறைகள் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
நீங்கள் ஆனந்தம் என்னும் வானில் சிறுகடித்துப் பறக்க விரும்பினால் இரண்டு இறக்கைகள் நிச்சயம் தேவை.
ஒன்று தியான முறை.
இன்னொன்று ஞானச்சொற்பொழிவு.
தியானத்தையும் ஞானத்தையும் ஒரு சேர மனிதன் கிரகித்தால்தான் ஆனந்தத்தில் பறக்க முடியும்.
பல வருடமாகத் தியானம் மட்டுமே செய்து கொண்டிருப்பது எந்தப் பலனையும் தராது. தியானம் மட்டுமே செய்வது பறவை ஒரே ஒரு இறக்கையை மட்டுமே இயக்குவதற்குச் சமம்.
அதேபோல, பல வருடமாக ஞான, ஆன்மீகப் புத்தகங்களை மட்டுமே படித்துக் கொண்டிருப்பதும் எந்தப் பலனையும் தராது. இதுவே ஒரே ஒரு இறக்கையை இயக்குவதற்குச் சமமே.
இரண்டு இறக்கைகளையும் அசைத்தால்தான் வானில் பறக்கலாம்.
ஒரே ஒரு இறக்கையை மட்டுமே இயக்கினால்... அது எப்படியிருக்கும்? காக்காவுக்கே வலிப்பு வந்து விட்டது போலிருக்கும்.
வாழ்வில் சிறகடித்துப் பறந்து முன்னேற விரும்பினால் தியானம், ஞானம் என்ற இரண்டுமே மிக அத்தியாவசியமானது.
ஞானசொற்பொழிவுகள் மூலமாக உங்களையும் உலகையும் புரிந்து கொள்ளுங்கள்.
தியான முறைகள் மூலமாக உலகை முழுமையாக அனுபவிக்கும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்வின் தரம் உயரும்.