தியானங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
முதுகெலும்பின் அடி நுனியிலிருந்து உச்சந்தலை வரையிலுள்ள ஏழு சக்கரத்திற்குமான தியானத்தை வரிசைக் கிராமப்படி கீழே காணலாம்.
1. மூலாதாரம் - துக்கஹரணா தியானம்
2. ஸ்வாதிஷ்டானம் - நிர்பயா தியானம்
3. மணிப்பூரகம் - மணிப்பூரக சக்திகிரியா
4. அனாஹதம் - மஹாமந்திரம்
5. விஷுத்தி - சக்தி சாகரா தியானம்
6. ஆக்ஞா - திவ்ய நேத்ரா தியானம்
7. சஹஸ்ராரம் - சஹஸ்ரார தியானம்
ஆனந்த ஸ்பூரணா தியான முகாமில் பயிற்சிகளின் போது சக்கரங்களின் வரிசைக் கிரமம் மாறும்.
காரணம், இரண்டு நாட்களில் மனிதனின் மூன்றடுக்கு சக்திகளும் திறக்கப்பட வேண்டுமென்பதற்காக, சக்தி நிலையின் அடிப்படையில் தியானங்கள் வேறுவிதமாக வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன.
இந்த ஏழு தியானங்களும் வெவ்வேறு மதங்களிலிருந்தும், ஆன்மீகப் பாதைகளிலிருந்தும் எடுக்கப்பட்டவை.
அமைதி!
ஆன்மீகம்!
ஆனந்தம்!
ஆகிய அனைத்தும் அத்துணை மதங்களுக்கும் சொந்தமானது.
மதபேதங்களைத் தாண்டி மன பேதங்களை சீர் செய்யும் தனிச்சிறப்பு பெற்றவை தியானங்கள்.
தியானங்களை எப்போதும் ஒரு குருவிடமிருந்தோ இல்லை முறையாக பயிற்றுவிக்கப்பட்ட ஆச்ச ாரியரிடமிருந்தோ கற்றுக்கொண்டு செய்வதுதான் மிகவும் பாதுகாப்பானது.
எல்லா தியானங்களையும் எழுத்துக்கள் மூலமாக மட்டும் விளக்கிவிட முடியாது.
அப்படியே எழுத்துக்கள் மூலமாக பல தியானங்கள் விளக்கப்பட்டாலும் எத்தனை பேர் அந்த தியானத்தின் செய்முறை விளக்கத்தை சரியாக புரிந்து கொள்வார்கள் என்று உறுதிகூற முடியாது.
யாருக்கம் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாத மகாமந்திரா தியானம் போன்ற தியானங்களை யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். யாருக்கு வேண்டுமானாலும் சொல்லித் தரலாம்.
ஆனால் சில தியானங்களை தியான முகாம்களில் முறையாக கற்றுக்கொண்ட பின்தான் நம்மால் சரியாக செய்ய முடியும்.
முறையாக தியான முகாம்களில் கற்றுக் கொண்ட பின்னரே செய்யப்பட வேண்டிய தியானங்களை நீங்கள் உங்களுக்கு மாத்திரமே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அவற்றை மற்றவர்களுக்கு கற்றுத்தர முயற்சிக்க வேண்டாம்.
காரணம் தியான முறைகளை எப்படி செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை அரைகுறையாகவோ குழப்பியோ மற்றவருக்கு கூறினால் சில தியானங்கள் சில சமயங்களில் அவர்களுக்கு பாதகங்களை ஏற்படுத்தலாம்.
தியான பீடத்திலிருந்து முறையாக பயிற்றுவிக்கப்பட்ட ஆச்சாரியர்கள் நேரடியாக நடத்தும் ஆனந்த ஸ்பூரணா (அநட) தியான முகாம்களில் தியானங்களை முறையாக பயின்று, சரியாகச செய்து, புத்துணர்வையும் ஆரோக்கியத்தையும் முழுமையாக அடையுங்கள்.