KAILASA Library/பூங்௯்௪சிட் ங௯்௪சிடபூத/தியானம் செய்வது எப்படி?Sign in
பூங்௯்௪சிட் ங௯்௪சிடபூத

தியானம் செய்வது எப்படி?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இந்த தலைப்புக்கு பதில் தெரிந்து கொள்ள இன்று பலர் ஆர்வமாக இருக்கிறார்கள்.

காரணம், இவர்கள் தியானத்தில் அமர்ந்தால் சாதாரண நேரங்களில் வரும் எண்ணங்களை விட அதிகமான எண்ணங்கள் வருவது போலவே தோன்றுவதுதான்.

அப்படித் தோன்றக் காரணம், அப்போதுதான் தங்கள் வாழ்வில் முதல் முறையாகத் தன்னுள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் மனக்குதிரையை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.

இயல்பாக இருக்கிறேன் என்றெண்ணிக் கொண்டிருந்தவர்களின் (உள்ளே இருக்கும்) இயல்பற்ற தன்மைதான் தியானத்தில் அமரும்போது தெரியவரும்.

ஒரு சுவாரஸ்யமான சம்பவம்...

இந்தியா சுதந்திரம் பெற்ற இருபத்தைந்தாவது நாள். தமிழ்நாட்டின் திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் நோக்கி, ஆந்திராவில் இருந்து ஆன்ம சுதந்திரம் தேடி தியானம் கற்க வந்திருந்தான் ஒரு இளைஞன்.

என்றும் போல் அன்றும் காலார நடந்து வர ரமண மகரிஷி புறப்பட்டு விட்டிருந்தார்.

உள்ளே சுதந்திரத் தீ கொழுந்துவிட்டு எரிவதால் நிமிட நேரத்தையும் வீணாக்க அந்த இளைஞன் தயாராக இல்லை.

ரமண மகரிஷியை வழிமறித்து, "சாமி, நான் தியானம் செய்வதற்காக வெகுதூரத்திலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறேன்.

ஆஸ்ரமத்தில் தியானம் செய்ய உகந்த இடம் எது என்று எனக்கு தெரியவில்லை. தாங்கள் எங்கே தியானம் செய்ய சொல்கிறீர்களோ அங்கேயே செய்கிறேன்" என்று கேட்டுக் கொண்டான் இளைஞன்.

கேட்டவனின் கேள்வியை ரமணர் கண்டு கொண்ட மாதிரியே காண்பிக்கவில்லை. அவரின் உடல் அசைவுகள் அப்படி இருக்கிறது.

ரமணர் சிரித்துக் கொண்டே கால்களையும், கணுக்களையும் தேய்த்துக் கொண்டு நடப்பதற்குப் சே ாதிக்கப்பட்டது.

இளைஞனின் பொறுமை சோதிக்கப்பட்டது.

ரமணர் தனது ஊன்றுகோலை எடுத்துக் கொண்டு கேள்வி கேட்ட இளைஞன் முன்னே நிற்க! பின்னால்

இருந்தவர்களை நோக்கித் திரும்பி, "எந்த இடத்தில் தியானம் செய்ய வேண்டுமென்று கேட்டால் என்ன செ ால்வது?!

தான் இருக்கும் இடத்திலேயே இருப்பதுதான் நல்லது. மிகச்சரியானது. அந்த இடதிலேயே இருந்து தியானம் செய்'' என்ற வரிகளைச் சிரித்துக் கொண்டே உதிர்த்துவிட்டது.

கேள்விக்கு கிடைத்த பதில் புரியாததால் இளைஞன் எரிச்சலடைந்து விட்டான்.

பக்கத்திலிருந்தவர்களிடம், "என்னங்க இவர்? நீ இருக்கும் இடத்திலேயே இரு என்கிறார். இதைக் கேட்கவா நான் ஆந்திராவிலிருந்து வந்தேன்.

இவர் பெரியவர், அதனால் எனக்கு தகுந்த இடம் பார்த்துச் சொல்வாரென்று கேட்டால்.

தானிருக்கும் இடத்திலேயே இரு என்கிறாரே! இந்த சோபாவின் அருகில் நான் இருக்கிறேன். அப்போ நான் இங்கேயே இருக்கட்டும் என்றா அர்த்தம் கொள்வது? இதென்ன வீண் விளையாட்டு!" என்று நொந்துபோய் பேசி னான்.

ரமண மகரிஷி எனவ்வளவு பெரிய ரகசியத்தை மிக எளிமைப் படுத்தி அவனிடம் சொன்னால் என்பது அப்போது அவனுக்குப் புரியவில்லை. பின் பக்தர் ஒருவர் அந்த இளைஞனை தனியே அழைத்துச்சென்று,

"நண்பர், பகவான் தமாஷாகச்தியானசூத்தரம் சொல்கிறது
சொன்னாலும் சரி, விளையாட்டாகச்சாட்சியாக மாத்திரம் பார்!
சொன்னாலும் சரி, அவர் பேசுவது
சத்தியத்தை மட்டும்.எண்ணங்களை,
மனக்காட்சிகளை
நான் என்கிற அகங்காரம் எங்கு-நிறுத்தாதே!
இருந்து கொண்டிருக்கிறதோ அதுவே நீ-தொடராதே!
இருக்கும் இடம்.-உருவாக்காதே!
எண்ணங்களையும்,
அகங்காரம் இருக்கும் அந்த இடத்தைகாட்சிகளையும்
விழிப்புணர்வோடு சென்று, பார்வையாளனாகதொடர்ந்து பார்.
விலகி நின்று பார்த்துக் கொண்டிருத்தலேஎண்ணங்கள்
தியானம்.நிற்க ஆரம்பிக்கும்.
பின் நின்றுவிடும்.
நீ (அகங்காரம்) இருக்கும் இடத்தில்ஆனந்தம் பொங்கும்.
விழிப்புணர்வோடு இருப்பதுதான் தியானம்.

அதை விட்டு விட்டு, இங்கே உட்கார்ந்தால் நன்றாக தியானம் செய்ய முடியுமா? அங்கே உட்காரலாமா? என்று கேட்பது எல்லாம் நேர விரயம் என்று விளக்கம் கூறி முடித்தார்.

“ஓ ஹோ! தியானம் என்ற பெயரில் தியானத்தில் ஈடுபடாமல் வெளிவிஷயங்களில் நான் விளையாட்டுத்தனமாக இருப்பதைத்தான் மகரிஷி விளையாட்டாய் குத்திக் காண்பித்திருக்கிறார்’’ என்பதை இளைஞன் உடனேயே புரிந்து கொண்டான்.

பிறகு, தியானத்தில் முழுமையாக ஈடுபட்டான்.

தியானத்தில் ஈடுபடுவதும் சுலபம்.

சில சூட்சுமங்களை சரியாகப் புரிந்து கொண்டால் தியானத்தில் வேகமாக முன்னேறலாம்.

“உங்களுக்குள்ளே இருக்கும் சலனமற்ற அமைதியான உணர்வு நோக்கி ஊடுவுங்கள்’’.

-இதைப் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்தால...

-ஒரு பார்வையாளனாக மாத்திரம் உங்கள் எண்ணங்களை, மனதைப் ;பார்க்க முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.

இதை இன்னும் எல்லோரும் நன்றாகப் புரிந்து கொள்ள ஒரு உதாரணம்.

சினிமாவைத் தியேட்டரில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். சினிமாவில் உங்களுக்குப் பிடித்த காட்சி ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கிறது என்பதற்காக அதே காட்சிகள் தொடர்ந்து வராது.

அதேபோல் உங்களுக்குப் பிடிக்காத காட்சி ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக சினிமாவின் காட்சிகளை அந்த நேரம் தடுக்க முடியாது.

இந்தப் படம் சரியில்லை, போர் அடிக்கிறது எனபதற்காக அந்த நிமிடமே புது சினிமாவை அங்கே திரையிட முடியுமா? முடியாது.

சினிமாவில் என்ன வந்தாலும் வரட்டும் என்று மூன்று மணி நேரம் உட்கார்ந்து, வெறுமனே பார்த்துவிட்டுத் தானே வருவீர்கள்.

அதே காரியத்தைத் தியானத்திலும் செய்யுங்கள்.

சும்மா பாருங்கள்.

சாட்சியாகப் பாருங்கள்.

30 நிமிடம் உள்ளேயே ஒரு சினிமாவைப் பாருங்கள்.

  • ஒருவேளை! வந்த எண்ணங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, அந்த எண்ணங்களை, காட்சி களை நிறுத்த வேண்டாம்.
  • வந்த எண்ணங்கள் உங்களுக்கு பிடித்த எண்ணங்கள் என்பதற்காக, அந்த எண்ணங்களை, காட்சி களைத் தொடர வேண்டாம்.
  • புதிதாக எந்த ஒரு எண்ணத்தையோ, காட்சியையோ உருவாக்க முயற்சிக்க வேண்டாம். அவ்வளவுதான்.

இந்த மூன்று விதிகளைக் கடைபிடித்தால் போதும் சாட்சியாகப் பார்த்து சுலபமாகி விடும்.

தியானத்தில் ஆழ்ந்து நன்றாக ஈடுபட முடியும். தியானித்துப் பாருங்கள்! பலன் புரியும்.