KAILASA Library/குணமளிக்கும் ஆலமரம் ஒரு கல்பதரு/VIII. அச்சரப்பாக்கக் காண்டம்Sign in
குணமளிக்கும் ஆலமரம் ஒரு கல்பதரு

VIII. அச்சரப்பாக்கக் காண்டம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Hanging wind chime

அந்த ஓய்வு
ஒரு ஆனந்த ஓய்வு
ஆனால்
ஆபத்தான ஓய்வு.

8.1. ஆனந்த பரிவ்ராஜஜம்

ஞானமடைந்தபின் இறைசக்தியின் வழிநடத்துதலின் படி மீண்டுமொரு முறை இந்தியா முழுவதும் பரமஹம்ஸர் பரிவ்ராஜகம் சென்றார்.

இதப்பற்றிய விவரமான குறிப்புகளை அறுநூறு பக்கங்களில் வெளியிடப்பட உள்ள பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் காணலாம்.

ஓம்காரீஸ்வர் மலையில் இருந்து தமிழ்நாடு நோக்கிப் பயணமானார்.

தமிழ்நாடு வந்தபின் அவர் அமைதியான சூழலுக்கு இறைசக்தியால் அழைத்துச்செல்லப்பட்டார்.

காஞ்சிபுரம் அருகேயுள்ள அச்சரப்பாக்கம் பகுதியை வந்தடைந்த பரமஹம்சர், அந்த அமைதி தவழும் அழகான காட்டுப்பகுதியில் ஓய்வானார்.

அந்த ஓய்வு ஒரு ஆனந்த ஓய்வு ஆனால் ஆபத்தான ஓய்வு.

ஏன் அந்த ஓய்வு அவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்துகொள்ள ரமணமகரிஷி வாழ்வில் நிகழ்ந்த இதையொத்த சம்பவம் உதவியாயிருக்கும்.

8.2. தீபாவளியன்று பிறந்த உலகின் தீபமொழி

ரமணருக்கு அப்பொழுது பதினான்கு வயது. அந்த பதினான்கு வயதிலேயே ஞானமடைந்தார். ஞானமடைந்தபின் அவருக்குள் ஆனந்தசக்தி பொங்கி பிரவாதித்தது.

அவருள் ஆனந்த ஜுரம் தீ ஜ்வாலையாக கொழுந்து விட்டு எறிந்தது. இன்று பாதாள லிங்கம் என்று அழைக்கப்படும் இடத்திற்கு சென்றார்.

உணர்வு அசைவுகளற்று...
உணவின்றி...
உயிர்மட்டும் ஒட்டிக்கொண்டிருக்க
படுத்த நிலையிலே...
படுத்த இடத்தோடு
ஐக்கியமாகி விட்டார்.

Ramana Maharshi

பல நாட்கள் ஒரே இடத்தில் ஒரே மாதிரியே படித்திருந்தார். விளைவு, உடல் தரையோடு சங்கமித்த இடத்தில் கரையான் அரித்துத் தின்ன ஆரம்பித்தது.

உணர்வளவில் கரையானின் பாதிப்பு சிறிதும் இல்லாமல், தானும் கரையானும் வேறல்ல என்ற முழுமையான விழிப்புணர்வில் அவர் இருந்தார்.

அப்புறம் சேஷாத்ரி சுவாமிகள், ரமணரின் நிலையறிந்து ரமணரின் உடலைப் பத்திரப்படுத்தினார்.

ஆனந்த ஜுரத்திலிருந்து ரமணர் இயல்பு நிலை
திரும்பும் வரை ரமணரின் உடலை மிகக் கவனமாக
சுவாமிகள் பார்த்துக் கொண்டாராம்.

பரமஹம்ஸர் ஞானமடைந்ததிலிருந்து...

Paramahamsa

ஒன்பது மாதங்கள் ஆழ்ந்த மௌனத்திலிருந்தார்.

அப்போது அவரை முழுமையாக...
கண்ணும் கருத்துமாய்...
பராசக்தியே கவனித்து கொண்டாள்.

அன்று உலகெங்கும் தீபாவளித்திருநாள் விமரிசையாகக் கொண்டாடப் பட்டது.

அப்போது அச்சரப்பாக்கத்தில்...

முழுமையாக ஒன்பது மாதங்களுக்கு பிறகு, எல்லாமுமாய், எங்குமிருப்பதாய் பரவியிருந்த விழிப்புணர்வு, முதல் முறையாக ஒரு இடத்தை நோக்கி குவிந்தது. ஒன்றிணைந்த மொத்த விழிப்புணர்வும்... மணிபூரக சக்கரத்திலிருந்து எழும்பி... வார்த்தையாக வெளிவர ஆரம்பித்தது.

அப்போது இவ்வுலகத்தை பார்த்தார்... பார்த்ததும்... அவருள்... தோன்றி... அருளாய் வெளிவந்து விழுந்த வார்த்தைகள்...

'ஆனந்தமாக இருங்கள்'

-இது ஒரு தியானம், இது ஒரு சத்யம், இது ஒரு ஆசீர்வாதம்.

உங்களுக்கு பரிசாக தர விரும்பும் 'தியானம்' இது.

எவ்வளவு காலம் துக்கமாயிருக்கப்போகிறீர்கள். ஆனந்தமாக இருங்கள்... இருக்க முயற்சி செய்யுங்கள்... ஆனந்தமாகவே இருப்பீர்கள்!

ஓய்வாக, நேராக, அமர்ந்து இதை முயற்சியுங்கள்...

பால் நிரப்பப்பட்ட பால் பாக்கெட் போல, உங்களின் மொத்த உடலையும் ஆனந்தம் நிரப்பியிருப்பதாக பாவனை செய்யுங்கள்.

ஒவ்வொரு செல்லும ஆனந்த சத்தியில் முங்கியிருப்பதாக முழுமையாக ஆழமாக உணருங்கள்...

கொஞ்சம் கொஞ்சமாக பொங்க ஆரம்பிக்கும் ஆனந்த உணர்வுக்குள் மூழ்கி போங்கள்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதைச் செய்யுங்கள். ஆனந்தமாக இருப்பீர்கள். அதன் வழியையும் கற்று ருப்பீர்கள்.

உங்களுக்குச் சொல்ல விரும்பும் 'சத்யமும்' இதுதான்.

ஆனந்தமாக இல்லாதிருக்க என்னென்ன செய்ய
முடியுமோ, அவ்வளவையும் மனிதன் செய்து
கொண்டிருக்கிறான்.

தேவை சிறு மாற்றமே.

துக்கம் நோக்கிச் சுழலும் வாழ்க்கைச் சக்கரத்தையும், குணச் சக்கரத்தையும் ஆனந்தம் நோக்கிச்சுழல வைத்தால் பிரச்சனை தீர்ந்தது. திருப்புங்கள்.

ஆனந்தமாக இருப்பீர்கள்.

கடைசியாக 'ஆனந்தமாக இருங்கள்' என ஆசீர்வதித்து...

உங்களின் ஆனந்த வாழ்வுக்கு துவக்கப் புள்ளி வைக்கிறேன். ஆனந்தமாக இருங்கள்!

ஆனந்தமாக இருங்கள்!

8.3 புத்தன் என சாட்சி சொன்ன மரம்

அச்சரப்பாக்கம் காட்டுப் பகுதியில்
பூத்து குலுங்கும் ஒருமரத்தடியில்
பரமஹம்ஸர் இளைப்பாறிக்
கொண்டிருந்தார்.

ரம்யமான அந்த சூழலில்
பரமஹம்ஸருக்குள் ஒரு சிந்தனை உதித்தது.
அது மகாஞானி புத்தரைப் பற்றியது.

இதேப் போன்று பூத்துகுலுங்கிய ஒரு மரத்தடியில் புத்தர் அமர்ந்திருந்தார். அவரின் ஞான சக்தி பிரசன்னத்தால் அங்கிருந்த மரம் கூட நெகிழ்ந்தது. மகிழ்ந்தது.

மகிழ்ந்த மரம் குலுங்கியது மரத்திலிருந்த பூக்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் மரத்திலிருந்து உதிர்ந்து புத்தரின் மேல் பூச்சொரிந்தன.

புத்தரின் ஞானத்தை அந்த மரம் கூட
கொண்டாடியது. இது புத்த வரலாற்றில்
காணப்படும் ஒரு சம்பவம்.

பரமஹம்ஸரின் சிந்தனையில்
புத்தரின் ஞானத்தை மரம் கொண்டாடியது
என்பது ஒரு நல்ல உவமையாக
இருக்கலாம்.

புத்தரின் ஞான சக்தியை
வெளிப்படையாகப் புரியவைக்க
சொல்லப்பட்ட ஒரு மிகையான சம்பவமாக
இருக்குமோ என எண்ணி பரமஹம்ஸர்
சிந்தித்துக் கொண்டிருக்கையில்...

தியான சிகிச்சை தீக்ஷை முகாமில் புது ஹீலர் ஆக தீச்சை பெற இருக்கும் ஒருவர் கேட்டார்...

தியான சிகிச்சையில் காய்க்காத மரம் கூட காய்த்து விடுகிறது. மனிதர்களை விட மரங்களும் விலங்குகளும் சீக்கிரமாக குணமடைந்து விடுவதை நானே பார்த்திருக்கிறேன். அதெப்படி சாமி மரங்கள் மனிதர்களை விட சீக்கிரமாய் குணமடைந்து விடுகின்றன?

காரணம்,

அவற்றிக்கு மனம் இல்லை.

Illustration

பரமஹம்ஸருக்கு அருகேயிருந்த அந்த மரம் வித்யாசமாக குலுங்கியது.

மரத்திலிருந்த அத்தனைப் பூக்களும் பரமஹம்ஸரின் மேல் உதிர்ந்து விழுந்தன.

ஒரு மரம் கூட கொண்டாடும்! உணரும்! என்பது மிகைப்படுத்தலல்ல. அது ஒரு உண்மைக் கூற்று. என இச்சம்பவத்தை பற்றிச் சொல்லும் போது பரமஹம்ஸர் குறிப்பிடுவார்கள்.

பரமஹம்ஸர் புத்த நிலையிலிருக்கிறார் என்பதை மரத்தால் உடனே உணர முடிகிறது. ஆனால் மனிதனால் உடனே உணரமுடிவதில்லை.

ஏன் ?

சிந்தியுங்கள்.

பரமஹம்ஸரும்! புத்தரும்!

Portrait of Nithyananda

9.1 நெறிகட்டிக்கொண்ட வார்த்தைக் கட்டி

ஒன்பது மாதம் எந்த வித சிந்தையுமில்லாமல் சுதந்திரகாற்றாய் வாழ்ந்த பரமஹம்ஸர் உடலுக்குள் ஒன்ற ஆரம்பித்ததும் அவருக்கு செய்தாக வேண்டும் என உதித்த செயல்கள் இரண்டு.

1 ஒன்று, தான் ஞானமடைய எல்லாவிதத்திலும் காரணமாக இருந்த அண்ணாமலையாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

2 அடுத்து தன்னுடைய அம்மாவிடம் ஆசீர்வாதம் பெற வேண்டும்

இது பற்றி பிரம்மச்சாரிகளோடு சிரிக்கும் கோயிலில் (Laughing Temple) அமர்ந்து பரமஹம்ஸர் பேசிக்கொண்டிருக்கையில் பிரம்மச்சாரி ஒருவர் கேட்டார்

"சாமி ஞானமடைந்தபின் இறைசக்தியின் வெளிப்பாடாக ஞானிகள் மாறி விடுகிறார்கள். ஞானமடைந்த பின் ஆசீர்வதிக்கும் கடவுள் நிலையில் ஞானிகள் வாழ்கிறார்கள்.

ஞானமடைந்தபின் எப்படி உங்களால் ஆசீர்வாதம் வாங்க முடியும்?"

பரமஹம்ஸர் "அதுவா... அது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த சம்பவம்.

ஞானமடையும் முன் மனமும் உடலும் மாறிப்போகும், பல தவங்களினால் உடல் மன வேதனைகள், குறைகள் ஆகிய அனைத்தையும் எரித்துவிட்டேன்.

இப்படி எரித்தப்பின் ஞானமடைந்திருக்க வேண்டும், ஆனால் இன்னும் ஞானமடையவில்லை. ஏன் இப்படி தள்ளிப்போகிறது என்று புரியவில்லை.

எனவே, உள்ளுலகில் என்ன குறை? எங்கு குறை? என்று தேடிப்பார்த்தேன். கடைசியாக ஒரே ஒரு சிறிய சக்தி தேக்கம் (energy block) இருப்பதை கண்டுபிடித்தேன்.

அந்த சக்தி தேக்கம் ஒரு குற்ற உணர்வு நினைவாலானது.

அண்ணாமலையாருக்கு நன்றி!

சந்நியாசம் எடுத்துக்கொள்ளலாம் என ஆழ்ந்து யோசித்து தீர்க்கமாய் முடிவெடுத்திருந்த காலம் அது. அப்போது இந்த உண்மையை என் அம்மாவிடம் சொன்னபோது, என்னை தடுக்கவோ எதிர்க்கவோ இல்லை.

மாறாக அவரின் கண்களிலிருந்து தாரைதாரையாக நீர் மட்டும் வடிந்துகொண்டேயிருந்தது.

"ஏன்? ஏம்மா இப்படி அழுகிறாய்?

என்னுடைய முடிவு உனக்கு பிடிக்கவில்லையா? நான் சந்நியாசியாக போவதில் உனக்கு விருப்பமில்லையா, கோபமா?" என கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில் மனதில் அடி ஆழத்தில் சொருகிக் கொண்டது.

"உன்னுடைய வாழ்க்கையை பற்றி நீ எடுத்த முடிவுப்பா இது! இதில் எனக்குப் பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்ற கேள்விக்கு இடமேயில்லை.

சந்நியாசியாக மாற உன்னால் முடிகிறது.

ஆனால் என்னால் தான் அந்த முடிவை தாங்கிக் கொள்ள முடியவில்லை. தாங்கிக்கொள்ள முடியாததால் அழுகிறேன். வேறெதுவும் தப்பா எடுத்துக்காதப்பா!" என தன் இயலாமையை சொன்ன விதத்தில் இடிந்து போனேன்.

ஒருவேளை என் முடிவை அவர்கள் எதிர்த்திருந்தால் அவர்களோடு போராடியிருப்பேன். அது மனதில் குற்ற உணர்ச்சியாக மாறியிருக்காது.

அப்பாவி அபலையாக தன் இயலாமையை சொன்ன விதம் அடிமனதில் வார்த்தை கட்டியாக நெறிகட்டிக் கொண்டது.

அந்த கடைசி சக்தி தேக்கம் தான் ஞானமடைவதை தடுத்துக் கொண்டிருந்தது. முழு விழிப்புணர்வோடு அதையும் அணுகினேன். அணுகியதும் அழிந்து போனது. ஆனந்தத்தில் அமிழந்து போனேன்!" என சொன்னார்.

பரமஹம்சருக்கே வார்த்தைகள் நெறிகட்டிக் கொண்டிருந்தது என்றால் நம்மை பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

தவம்,யோகம்,தந்திரம் என்ற எந்தவொரு உள்ளுலகப் பயிற்சியையும் செய்யாத நமக்குள் எவ்வளவு வார்த்தைகள் நெறிகட்டிக்கொண்டிருக்கும்?

இந்தக் கட்டிகள் தான் பிற்காலத்தில் தீராத தலைவலியாகவும், நாள்பட்ட நோய்களாகவும், டிப்ரஷனாவும் கேன்சராகவும் உருமாற்றம் பெறுகின்றன என நவீன body and mind medicine மருத்துவ விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

நம்முள் ஆழமாய் சொருகி கிடக்கும், இந்த கட்டிகளை தோண்டி எடுத்து சுக சிகிச்சை செய்யும் NSP தியான முகாமை நித்யானந்த ஸ்புரண தியான அனுபவ முகாம் என பரமஹம்ஸர் குறிப்பிடுகிறார்.

இந்த NSP -யில் பரமஹம்ஸர் தான் ஞானமடைய பயன் படுத்திய தியான நுட்பங்களை கற்றுத்தருகிறார்கள் என்பது நம் அனைவருக்கும் இன்னொரு நற்செய்தி.

Nithyananda Publication Banner

நித்யானந்தா பதிப்பகத்தின் புதிய வெளியீடு

கதவைத்திர காற்று வரட்டும்

  • 648 பக்கங்கள் பாகம் II
  • பரமஹம்ஸரின் பல வண்ணப் படங்கள் 16 60 நிமிட VCD ஒன்று ஆகியவற்றை உள்ளடக்கிய இப்புத்தகத்தின் விலை ரூ. 175/- மட்டுமே. புத்தகத்தை உங்களின் முகவரிக்கு கிடைக்கச் செய்ய விரும்பும் அன்பார்கள் புத்தகத் தொகையோடு கொரியர் தொகை ரூ. 40/- ஐ சேர்த்து பெங்களூர் தியானபீட முகவரிக்கு Dhyanapeeta Charitable Trust எனும் பெயரில் DD எடுத்து அனுப்பும் படி கேட்டுக் கொள்கிறோம்.
அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன்

அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன்

ஒரு முறை பரமஹம்ஸ சிறுவனின் பாட்டனார்... அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் காட்டி இவர்கள் உன் தாயும், தந்தையுமானவர்கள் என சொன்னார்.

சொன்ன அன்றிலிருந்து அண்ணாமலையாரோடும், உண்ணாமுலையம்மனோடும் ஆத்மார்த்தமான தொடர்பு பரமஹம்ஸருக்கு ஏற்பட்டு விட்டது.

உருவ அமைப்பை தாண்டிய இறைவனின் அருவசக்தியை இவர்கள் இருவர் மூலமாக பரமஹம்ஸர் உணர ஆரம்பித்தார்.

அவர்களிருவரும் தான் அவருடைய தாய் தந்தை என ஆழ்ந்த உணர்வோடும் உரிமையோடும் பரமஹம்ஸர் வாழ ஆரம்பித்து விட்டார்.

இது தன் வாழ்வின் மாபெரும் திருப்புமுனை என பரமஹம்ஸர் குறிப்பிடுகிறார்.

தன்னை தாண்டிய சக்தி ஒன்று உண்டென்பதை உணரவைக்கும் ஓர் உன்னத வழி பக்திமார்க்கம் என்பார் நம் பரமஹம்ஸர்.

9.2 காலை தடுக்கியது லிங்கம்

அண்ணாமலையாருக்கும், அம்மாவுக்கும் நன்றி செய்ய திருவண்ணாமலை பகுதியின் எல்லையை பரமஹம்ஸர் தொட்டதும் இந்த அதிசயம் நிகழ்ந்தது.

திருவண்ணாமலைக்கு நான் வரமாட்டேன்.

பல நூறு சித்தர்களின் சமாதி கொண்ட அந்த பூமி ஒரு ஞான பூமி. அதனால் அந்த மண் பூஜைக்குரியது.

பூஜைக்குரிய புனித பூமியில் கால் வைப்பது எங்ஙனம் சாத்தியம் என சொல்லி திருவண்ணாமலைக்கு வெளியே யே மாணிக்கவாசகர் தங்கிவிட்டார் என்பது வரலாற்று உண்மை.

அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் பரமஹம்ஸர் தன் சிறு வயது முதல் தன் தாய் தந்தையாகவே பாவித்து வந்தார்.

அதனால் திருவண்ணாமலை ஒரு தனி பூமியாக அவருக்கு தெரியவே இல்லை. தன் தாய் வீட்டு பூந்தோட்டம் போன்றே பரமஹம்ஸர் எண்ணி வாழ்ந்து வந்தார்.

அன்றும் அதே குதூகலத்தோடு தான் திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

திருவண்ணாமலை எல்லையைத் தொட்டதும் பரமஹம்ஸருக்கு கால் தடுக்கியது. இந்த கட்டாந்தரையில் காலை தடுக்கியது எது? என்ற சிந்தனையோடு குனிந்து பார்த்தார். ஆச்சரியத்தில் பூரித்துப்போனார்.

காரணம், அவர்காலை தடுக்கியது கல் அல்ல. அதுவொரு லிங்கம் 'அண்ணாமலை பூமியிலே...' எனும் பழைய துதிபாடல் பரமஹம்ஸரின் நெஞ்சில் பாடியது.

மலர்களை தூவி வரவேற்பது போல்...சிவலிங்கமான அருணாச்சலேஸ்வரர் லிங்கமிட்டு பரமஹம்ஸரை வரவேற்ற விதம் மெட்டா பிஸிக்கல் தளத்திலிருந்து ஆராய்ந்து பார்க்கும் போது மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது.

A monk and a lingam
Mountain landscape

9.3 ஞானியை ஆசீர்வதித்த பெண்

திருமதி. நித்ய லோகநாயகியானந்தா என்பது பரமஹம்ஸரின் தீவிர பக்தையான அவரது தாயாரின் பெயர்.

காலில் பட்ட லிங்கத்தை கையிலெடுத்துக்கொண்டு தன் தாயாரை சந்திக்கச் சென்றார். கள்ளம் கபடமில்லா தூய உள்ளம் படைத்த தன் தாயைத்; தனக்கு கிடைத்த மாபெரும் அதிர்ஷ்டம் என பரமஹம்ஸர் குறிப்பிடுவார்.

எந்தவொரு நல்ல காரியம் செய்வதானாலும் தாயிடம் ஆசீர்வாதம் பெற்றபின் செய்வது தான் பரமஹம்ஸரின் வழக்கம்.

தன் காலில் விழுந்தது பழைய மகனல்ல. ஞானி! - என்ற விவரம் அப்போது தெரியாது. அதனால் எப்போதும் போல் தன் காலில் விழுந்த ஞானியை ஆசீர்வதித்தார் - அன்பு தாய்.

அப்புறம் பரமஹம்ஸர் தன் தாயை பற்றி இருந்த குற்ற உணர்வுப் பதிவை பற்றிச் சொன்னபோது தாயார் மிகவும் ஆச்சரியப்பட்டார்.

ஒரு சம்பவம் நிகழ்ந்ததாகவே எனக்கு ஞாபகம் இல்லை எனாதாரணமாக சொன்னார்.

இந்த சம்பவம் பற்றி சொல்லும் போது பரமஹம்ஸர் வெளியே கொட்டப்பட்டு விட்ட உணர்வுகளால் எந்தவொரு பாதிப்பும் இருக்காது. ஏன் அதைப்பற்றிய சுவடு கூட இருக்காது.

ஆனால் மனதில் சொருகிக்கொண்ட உணர்வுகளும், வார்த்தைகளும் தான் துன்பங்களுக்கான மூலக்காரணங்கள்.

இப்படிச் சொருகிக்கொண்ட வார்த்தைகளை மனதிலிருந்து அப்புறப்படுத்தும் பணியைத் தான் தியானம் என்றழைக்கிறேன். என மிக சுருங்கக் குறிப்பிடுவார்.

9.4 உண்ணாமலையம்மன் சந்நிதியில் உணவு

அண்ணாமலையாரை நேரடியாக தரிசித்து ஆத்மார்த்தமான நன்றிகள் கோடியை பரமஹம்ஸர் செலுத்தியப்பின் ஓய்வாக வந்து உண்ணாமலையம்மன் சந்நிதியில் வந்தமர்ந்தார்.

இருவரையும் எப்போதும் தன் தாயாகவும் தந்தையாகவுமே உணர்ந்து வாழ்ந்ததால் அவர்களோடு அவர் நேரிடையாக தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம்.

சாப்பிட்டு வெகுநேரமாகிவிட்டதால் பரமஹம்ஸரின் உடலில் சட்டென பசியுணர்வு ஏற்படவே, அடடே சாப்பிட்டு வெகு நேரமாகிவிட்டதே என சிந்தித்தவாறு உண்ணாமலையம்மனை பார்த்து,

ஏம்மா என்னை இப்படி பசியில் பட்டினி போடவா அங்கேயிருந்து இங்கே கூட்டிவந்தாய்? என உரிமையாய்க் கேட்டபோது யாரோ அருகில் அழைக்கும் சப்தம் கேட்டது.

திரும்பிப்பார்த்தால் அருகே ஒருவர், சாப்பிடுங்கள் என கட்டிச் சாதத்தோடு நின்று கொண்டிருந்தார். அந்த இடத்தில்ாதாரணமாக அன்னதானம் வழங்கப்படும் என்றுகூட யாராலும் எதிர்பார்க்க முடியாது.

ஆனாலும் அங்கே அப்போது பரமஹம்ஸருக்கு பிரசாதமாய் உணவு வந்தது ஆச்சரியமல்ல என்பதற்கு அவர்களுக்கிடையே ஆத்மார்த்தமான புரிந்து கொள்ளுதல் தான் சாட்சி.

உண்ணாமலையம்மன் சந்நிதியில் உணவு

9.5 அமைக்கப்பட்ட உணவை மறுத்தல்

பரமஹம்ஸர் ராஜ சந்நியாசி என்பது அவரது பால வயதிலேயே ஜோதிடர்களால் கண்டுபிடித்து சொல்லப்பட்ட உண்மை.

முறையான ஒரு சந்நியாசியின் வாழ்க்கையை வாழ்ந்து வந்த பரமஹம்ஸர் தன்தாய் உணவளிக்க வந்தபோது வேண்டாம் என மறுத்துவிட்டார்.

கடந்த ஒன்பது ஆண்டுகாலமாக அடுத்தவேளை உணவு எங்கு கிடைக்கும் என தெரியாத போது, என்னை பார்த்துக் கொண்ட அதே சக்தி இப்போது என்னைப் பார்த்துக்கொள்ளும்.

  • என்ற தெளிவோடு சந்நியாச மரபை மீறாமலிருக்க பரமஹம்ஸர் உணவை மறுத்து விட்டார்.

இதைப்பற்றி பரமஹம்ஸர் சொல்லும் போது, மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான். மரமே தானாக நகர்ந்து தண்ணீரை தேடிப் போகும் போது தான், சரி சரி நீயே உன் வாழ்வை பார்த்துக் கொள் என இறைவன் விட்டு விடுகிறான்.

இறைவனிடம் ஒப்படைத்தபின், இறைவனே என்னுடைய எல்லாத் தேவைகளையும் பார்த்துக்கொண்டார். சரணாகதி நிகழாத வரைதான் எல்லா கஷ்டங்களுமே என அழகாய்ச் சொல்வார்.

Paramahamsar

சரணைாகதி நிகழாதவரைதான் எல்லா கஷ்டங்களுமே!

9.6 நெஞ்சின் மீது கற்கள்

அப்போதுதான் உடலுக்குள் செட்டில் ஆக ஆரம்பித்ததிலிருந்தே பரமஹம்ஸர், உடலோடு தன்னை கட்டிப்போட பெரும்பாடு பட்டார்.

தான் மனிதன் என்பதையும்,

தான் மனித உடலுக்குள் இருக்க வேண்டும் என்பதையும் திரும்ப திரும்ப நினைவுக்கு எடுத்து வர பரமஹம்ஸர் பெரும் முயற்சி எடுத்துக்கொள்வார்.

அந்த காலகட்டங்களில் தன் உடலை இயக்கியது ஒரு மகா சாகசம் தான் என பரமஹம்ஸர் சொல்வார்கள்.

“நீங்கள் உடலை இயக்குவது வெகு எளிது.

உடல் என்னும் ரதத்தை ஐம்புலன்கள் எனும் ஐந்து குதிரைகளில் கட்டி வைத்திருக்கிறீர்கள். ஐந்து குதிரைகளும் அதனதன் வேகத்துக்கு இழுக்க உலக வாழ்வில் மிக பரபரப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

ஆனால், ஞானிகளின் கதை வேறு.

அவர்களுக்கு ஐம்புலன்களும் பூரண ஓய்விலிருக்கும். இது குதிரைகள் பூட்டப்படாத ரதத்திற்கு சமம். குதிரைகள் பூட்டப்படாத ரதத்தை நகர்த்தக் கூட முடியாது.

புலன்களின் தூண்டுதல் சிறிதும் இல்லாத ஞானிகளால் உடலை நகர்த்தக் கூட முடியாது. உடலை நகர்த்துவது என்பது அவர்கள் பெரும் முயற்சிகள் எடுத்துக் கொண்டால் மட்டுமே சாத்தியமாகும்.

இது ஒரு ரதத்தை சிறு குச்சியை வைத்து தள்ளி நகர்த்த முயற்சிப்பதற்கு சமம்.” என ஞானிகளின் உடல் பற்றிச் சொல்லும் போது பரமஹம்ஸர் குறிப்பிடுவார்கள்.

Illustrations of stones being placed on a reclining body

என் மீது அடுக்குங்கள்

போதாது.
இன்னும்
கொஞ்சம்...

ம்ஹும்... அந்த
அம்மி கல்லை
என் மேல்
எடுத்து வையுங்கள்

Paramahamsa Nithyananda

“கற்களை குவித்த பின்பு கூட
உடலுக்குள் சுருங்கமுடியவில்லை.
அம்மி வைத்தபின்புதான் ஓரளவுக்கு
உடலை உணர முடிந்தது.
உடல் இங்கேதான் இருக்கிறது.
என்பதை ஊர்ஜிதம் செய்ய முடிந்தது.
உடலுக்குள் முழுவதுமாக
ஒன்ற வெகு நேரமாகிவிட்டது.”

... பரமஹம்ஸர் வாழ்க்கை அத்தியாயத்தின் கடைசி பக்கங்களில் இருந்தார். தனக்கிருந்த நுரையீரல் புற்று நோயால் உடல் நலம் இழந்து நம்பிக்கையிழந்து, மிகுந்த விரக்தியில் இருந்தார்.

ஆம்! அந்த சூழ்நிலையில் தான் இளம்பிள்ளை ராமசாமி, பரமஹம்சரை சந்தித்தார்.

பரமஹம்சர், ‘இளம்பிள்ளை ராமசாமியைத் தொட்டார்’

பரமஹம்சரின் தொடுதல்... அந்த தொடுதலே ராமசாமியை முழுமையாக, அந்த தீராத வியாதியிலிருந்து குணப்படுத்தியது.

தொட்டதும் நோய் மறைந்தது என்றால் அதை நம்ப நாகரீக மனம் மறுக்கும். அப்படிப்பட்ட ஒரு புதியவர் பரமஹம்சரிடம் கேட்டார்...

“தலைவலியிலிருந்து கேன்ஸர் வரை உங்களுடைய தியான சிகிச்சையில் சரியாகிறதாமே !”

“ஆம். ஒரே தொடுதலில் குணமான கேன்சரும் உண்டு.

குணமான பின்னும் கூட மீண்டும், மீண்டும்,தலைவலி வருகிறதே! என சொல்லும் நோயாளிகளும் உண்டு”

“ஏன் அப்படி?”

Paramahamsa

“கேன்சராக வரவேண்டிய நோய்காரணி தன்னை தலைவலியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போது இப்படி நிகழலாம்.

இன்னொரு முக்கியமான விஷயம்...அது கேன்சராகட்டும் அல்லது தலை வலியாகட்டும் இரண்டுக்குமே மூலக்காரணமாக இருப்பது அந்தந்த விதமான மன அமைப்பே காரணம்.

தியான சக்தி நோயை சரி செய்தாலும்,

நோய்களை உருவாக்கும் மன அமைப்பை நீங்கள் சரி செய்யாதவரை நோய்கள் திரும்ப திரும்ப தொடரும். நோயிலிருந்து பூரண குணம் பெற துன்பந்தரும் மன அமைப்பு மாற வேண்டும்” என்றார்.

10.2 ஜென்ம ஜென்மமாய் ‘தேடியது’ கிடைத்தது

இரண்டாவது அதிசயம் - ஐயாவுடன் முதல் சந்திப்பு

கல்லீரலில் புற்று நோய் மிகவும் முற்றிய நிலையில் இருந்தது. அதனால் ஐயாவின் உடல் நிலை மிகவும் ஆபத்தானதாகி விட்டது.

மருத்துவர்களும் கைவிரித்து விட்டார்கள்.

Apollo மருத்துவமனையில், 'இன்னும் மூன்று நாட்கள் இருப்பார். சொல்ல வேண்டியவர்களுக்கு தகவல் கொடுத்து விடுங்கள்' என்றனர். 'வீட்டிற்கு கொண்டு செல்லுங்கள்' என்ற நம்பிக்கையை உறிஞ்சும் வார்த்தைகளை சுமந்து கொண்டு வீடு சேர்ந்தார்.

அப்பொழுது பரமஹம்சரால் குணமான
இளம்பிள்ளை இராமசாமியின் நண்பர், ஐயாவின்
நண்பர், அந்நண்பர் மூலமாக பரமஹம்சரின்
குணமளிக்கும் சக்தியைப் பற்றி தெரிந்து
கொண்டார்கள்.

அப்பொழுதே, நேராக 'ஐயாவை காரில் பரமஹம்சர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். காரின் பின் சீட்டில் அமர்ந்து ஜன்னல் மீது 'ஐயா' சாய்ந்து இருந்தார்'

வாழ்க்கையில் இதற்கு மேல் 'மீண்டு வர
வழியே இல்லை' என்று மிகவும் தளர்ந்து போய்
அமர்ந்திருந்தார். அதனால் அவரால் தலையை
நிமிர்த்து பார்க்க கூட முடியவில்லை.

பரமஹம்சர் இருந்த இடத்தை கார் சென்றடைந்தது.

நிமிரக்கூட முடியாமல் தலை
சாய்ந்திருந்த ஐயாவின் நெற்றிப்
பொட்டை (ஆக்ஞா சக்ரத்தில்)
பரமஹம்சர் தொட, சலசலவென
இறங்கும் அருவிபோல ஐயாவின்
உடலுக்குள் உற்சாக சக்தி வேக
வேகமாய் பரவியது.

ஜென்ம ஜென்மமாய் தான் தேடி
அலைந்தது கிடைத்ததாக ஒன்றை அந்த
நிமிடங்களில் உணர்ந்தார். ஜென்ம
ஜென்ம தாகம் தீரும் வரை
பரமஹம்சர் கையை எடுக்கவில்லை.
இதை பற்றி குறிப்பிடும் போது ஐயா
பேசியதில் சில வரிகள்...

“அந்த நேரத்தில் நான்
மூழ்கிப்போன பேரின்பத்தை விளக்க
எந்த ஒரு வார்த்தையுமே போதாது. என்
நோய், மன வேதனை ஆகிய
அனைத்துமே நொடிக்குள் காணாமல்
போனது.

உடலுக்குள் பாய்ந்தோடும் புது
சக்தி தந்த உற்சாகத்தில் என்
உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும
குதித்துக் கொண்டிருந்தது.

இறந்தவன் பிழைத்துக்
கொண்டேன். ஒன்றும்
இல்லாமலிருந்தவன் பூரணமாகி
விட்டேன்.

எனக்கு ஆனந்த சக்தியை தந்து
பரமஹம்சர் மீட்டதை சுருக்கமாக
சொல்ல வேண்டுமானால்...பேட்டரி
வைத்ததும் ஓடும் பொம்மை போல்,
இந்த உடலுக்குள் உலவும்
பரமஹம்சரின் ஆனந்த சக்தி இந்த
உடலை இன்றளவு குதுகலமாய்
ஓடச்செய்திருக்கிறது.” என சொன்னார்.

பரமஹம்சரின் தியான சிகிச்சை
பெற்ற பின்னர், ஐயா மிகவும்
நார்மலாகி விட்டார். ஒரே நாளில் சுறு
சுறுப்பாகி விட்டார். அன்று விடைபெறும்
போது, “சரியாகி விடும் போய்வா,”
என்று ஆசிர்வதித்தார்.

அடுத்த நாள், அனைவரும்
ஆச்சரியப்படும் வகையில் முதல் நாள்
நடக்கவே சிரமப்பட்ட ஐயா தனி
ஒருவராக தன் காரை தானே
ஒட்டிக்கொண்டு வந்து, பரமஹம்சரை
சந்தித்தார்.

இதுபோல் தொடர்ந்து ஐயா,
பரமஹம்சரை சந்தித்தார்; பலமணி
நேரங்கள் அவருடன் தாந்தியிருந்துவிட்டு

பரமஹம்சர்

பின் திரும்புவார். சில நாட்களுக்குப்பின் ஐயா, அம்மாவை பரமஹம்ஸரிடம் அழைத்துச் சென்றார்.

அப்பொழுதெல்லாம், அம்மாவிற்கு அடிக்கடி உடல் நிலை சுகமில்லாமல் இருப்பார். ஒவ்வொரு உடல் உபாதைகளாக மாற்றி மாற்றி வர, அம்மா மிகுந்த அவதிக்குள்ளாகியிருந்தார்.

பரமஹம்ஸர் அம்மாவிற்கு தியானசிகிச்சை (Healing) அளித்தார். தியான சிகிச்சை பெரும் போது அம்மாவின் உடல் மிகவும் அலைக்கழிக்கப் பட்டது. 'அம்மாவின் உடலுக்குள் இருந்து ஏதோ ஒன்று வெளியே செல்வதை' அம்மா நிதர்சனமாக உணர்ந்தார்.

அம்மாவின் உடலுக்குள் நுழைந்திருந்த பிரம்ம ராக்ஸஷன் தான் அம்மாவிற்கு இவ்வளவு உபாதைகளையும் தந்து கொண்டிருந்தது. அது வெளியேறியதும் எல்லாம் சரியாகி விட்டது.

மணிக்கணக்கில் அம்மாவை அலைக்கழித்த பிரம்ம ராக்ஸஷன் உடலை விட்டு வெளியேறியபின், “இவ்வளவு உபாதைகள் வரக் காரணம் என்ன?” என வெகுளியாய் அம்மா கேட்டதற்கு,

''பிரம்மராக்ஸஷன்'' என பரமஹம்ஸர் பதில் சொன்னார். “பிரம்மராக்ஸஷன் என்றால்?” என ஆச்சரியப்பட...

“அது ஒரு தனி கதை” என்றார்.

“சாமி...சாமி சொல்லுங்க சாமி?” என குழந்ததைபோல் ஆர்வத்தோடு அம்மா கேட்க,

“அம்மாவிற்கு இதுவரை இவ்வளவு कष्टங்களை தந்த பிரம்மராக்ஸஷன் ஒரு யோகி. பக்தியடைவதற்காக பெரும்பாடு பட்டும் எந்த பலனும் இல்லை.

அகங்கார மிகுதியால் செய்த எல்லா தவங்களும் முக்தி கிடைக்கும் காலத்தை அதிகமாக்கி கொண்டே இருந்தன.

ஒரு காலகட்டத்தில்… மிகவும் மனவெறுப்புக்குள்ளாகி துயரம் தாளமுடியாத நிலைக்கு சென்றதால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

தவத்தை தவறாய் செய்து தற்கொலை செய்து கொண்டதால் அவரால் மீண்டும் உடலெடுக்க முடியவில்லை.

உடலில்லாமல் முக்தியை பெற தவித்து கொண்டிருந்தாலும் அவர் செய்திருந்த பல சித்துக்களால் ஏகப்பட்ட சக்திகளை வேறு உடன் பெற்றிருந்ததின் விளைவே இவ்வளவு பலம்.

இதையெல்லாம் தாண்டி, 'ஒரு அவதார புருஷனின் கைபட்டால் முக்தி பெற்று விடுவோம்' என்ற ரகசியத்தை தெரிந்து வைத்திருந்ததால்… இந்த உடலை தேடி பிடித்துவிட்டது.

கால கணக்குப்படி இந்த பிறவியில் என்னிடம் நீங்கள் இருவரும் வரப்போவதை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்து பிடித்துக்கொண்டது.

மருத்துவத்தால் தீர்க்கவே முடியாத அளவுக்கு பல உபாதைகளை தந்தால்தான் மனிதர்களில் பலர் தியானத்தையும், ஞானிகளையும் தேடிவருவார்கள் என்ற வாழ்வியல் உண்மையின் அடிப்படையில் தான் உன்னைப் பிடித்துக் கொண்டது.

எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டது. உங்களிருவரையும் சந்திக்க வேண்டிய நேரத்தில் சந்தித்துவிட்டதால் எல்லாம் ஆனந்தமயமாய் முடிந்துவிட்டது.” என பரமஹம்ஸர் சொன்னார்.

“சாமி ஐயாவுக்கு மட்டும் நீங்கள் கை வைத்தவுடனேயே எல்லாம் சரியாகி விட்டது. ஆனால், எனக்கு மட்டும் மணிக்கணக்கில் உடல் அலைக்கழிக்கப்பட்டதே ஏன்?” என்ற அப்பாவித்தனமான கேள்விக்கு

சிரித்துக்கொண்ட பரமஹம்ஸர் சொன்ன பதில், “அதுவாமா, அந்த யோகியை முக்தியடையச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஜென்ம ஜென்ம பசி தீராது.

முக்தியின் வாசல் படிவரை வந்து கீழே விழுந்த உயிரை மீண்டும் மேல் எடுத்து வர தான் அவ்வளவு நேரம் தேவைப்பட்டது."

அந்த நிமிடத்திலிருந்து அம்மா தான் ஒரு பட்டாம் பூச்சி போல் ஆனந்தமயமாகச் சிறகடித்து வாழ ஆரம்பித்ததாக சொல்கிறார்கள். ஆனந்த சத்தி பாயும்நிமிடங்கள் அருமையானவை. பரமஹம்ஸரிடம்.

ஒரு கருத்தரங்கில் "நீங்கள் ஞானமடைய பல வருடங்கள் தவம் செய்தீர்கள். ஆனால், எங்களிடம் பேசும் போது ஞானமடைய ஒரு நொடியே மிக நீளமானது என்கிறீர்கள். இது எப்படி பொருந்தும்?."

"நிச்சயம் ஒரு நொடி நீளமானது தான். ஒரு பூட்டை திறக்க நொடி போதும் தான். ஆனால் சாவியை தேட வெகு நேரம் ஆகும்.

அதுவும் எந்த குருவின் உதவியுமில்லாமல் ஞானத்தை தேடியது, ஆயிரக்கணக்கான சாவியில் அந்த சரியான சாவியை தேடித்தேடி கண்டுபிடிப்பதற்கு சமம். காரணம் ஞானத்திற்கு ஆயிரக்கணக்கான வழிகள் இருக்கிறது.

எது சரியானது?

எது எனக்கானது? என்பதை யார் உதவியுமில்லாமல் தேடினேன். தேடிக்கொண்டிருந்தேன். அதனால் தான் பல வருடங்கள் தேவையைாயிருந்தது.

ஆனால் உங்களுக்கெல்லாம் அந்த கஷ்டமில்லையே!

எது சரியான சாவி என்பதை கண்டு பிடித்து விட்டேன். அதைத் தவிர மற்ற எல்லா சாவினையும் பயன் படுத்தியதால்... சரியான சாவியை தேர்ந்தெடுத்து உங்களுக்கு தர தயாராயிருக்கிறேன். அதை பெற நீங்கள் தயாராகிவிட்டால்...

ஞானமடைய ஒரு நொடி மிக நீளமானது தானே?"

Poondi Mahan

10.3 துண்டு துண்டய் உடல்

திருவண்ணாமலையில் இருந்து வேலூர் மார்க்கமாக கலசபாக்கம் எனும் ஊரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தங்கி இருந்து மக்களுக்கு ஆசிகள் வழங்கி பின் சமாதி நிலையை அடைந்தவர் பூண்டி மகான் எனும் சித்தர்.

பார்ப்பதற்குாதாரணமாக எளிமையாக தாடியுடன், காவி உடுத்திக் கொண்டு இருப்பார்.

அவருக்கென ஒரு தனியிடமோ, வீடோ எதுவும் கிடையாது. அவர் தங்கியிருந்த இடம் என்று சொன்னால், ஒரு வீட்டின் முன் உள்ள சிறு திண்ணையில் தான் அவர் இருந்தார்.

அங்கு தான் அவர் பொது மக்களைப் பார்ப்பார். அங்கு வந்து அவரை தரிசிக்க விரும்பும் மக்கள் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய பழம், சுருட்டு போன்ற பொருட்களை அவருக்கு அன்பின் காணிக்கையாக கொடுப்பது வழக்கம்.

அவரைக் காண வரும் பக்தர்கள் கொடுப்பதை, கொடுக்கும் பொருள் எதுவாக இருந்தாலும் அதை மறுக்காமல் அன்புடன் ஏற்றுக் கொள்வார்.

மற்றபடி அவர் பக்தர்களிடமும் மற்ற எவரிடமும் அதிகம் பேசுவதில்லை. அவரை சுற்றி ஒரு சிலர் அவருக்கு தேவையானவற்றை செய்து வந்தார்கள்.

அவர் இருப்பிடத்தை விட்டு பெரும்பாலும் எங்கும் செல்வது இல்லை. யாரும் அவரை பார்த்ததும் இல்லை. மற்றும் அவர் குளிப்பாரா, இல்லையா? என்பது கூட சுற்றி இருப்பவர்களுக்கு தெரியாது. ஆனாலும் அவரிடமிருந்து எந்தவிதமான கெட்ட வாசனைகளும் வருவதில்லை.

அவரைக் காணவரும் பக்தர்கள் கொடுக்கும் பழங்கள் அதிக அளவில் சேர்ந்து இருக்கும். அவைகள் எவ்வளவு நாட்கள் ஆனாலும் கெடுவதில்லை.

நம் பரமஹம்ஸரின் தாயார் மா நித்ய லோகநாயகி ஆனந்தா, அம்மா அவர்கள் பூண்டிமகான் அவர்களை நான்கு ஐந்து முறைகள் சென்று நேரிடையாக பார்த்திருக்கிறார்கள்.

அவர் கொடுக்கும் பழங்கள் எப்போதும் புதியதாகவோ நறுமணத்துடன் இருக்கும் என்று சொல்கிறார்கள்.

பூண்டி மகான் பற்றி நம் நிருபர் அவரிடம் பேட்டி எடுத்த போது இந்த உண்மை நிகழ்ச்சியை அவர் நேரிடையாகவே பார்த்து இருக்கிறார் என்று சொல்கிறார்கள்

பக்தர்கள் மற்றும் அவ்வூர் மக்கள் அவரை ஆற்றுச்சாமியார் என்றும் சொல்வதுண்டு. காரணம் அவர் இருந்த வீட்டின் பின்புறத்திலேயே செய்யாறு ஆறு ஓடுகின்றது.

அங்கு இருந்து தான் அவர் வந்ததாக சிலர் சொல்வதுண்டு.

அவருடைய எளிமை மௌனம் காரணமாகவே அவர் வெளியில் அதிகம் தெரிவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.

இருந்தும் அவரிடம் சில அமானுஷ்ய சக்திகள் இருந்தது என்பதற்கான சாட்சிகள்.. அவரைச் சுற்றி இருந்த பக்தர்களே ஆவர்.

அதில் ஒன்று... பல முறை அவரின் உடலை பார்த்து பயந்து போனது. பூண்டி மகானின் உடல் அவ்வப்போது துண்டு துண்டாக கிடப்பதை தாங்கள் பார்த்து அதிர்ச்சியடைந்ததையும், அது பற்றி அவரிடம் கேட்க முயற்சித்தால் எந்த பதிலும் அவர் சொல்வதில்லை எனவும் குறிப்பிடுகிறார்கள்.

"நேற்று துண்டு துண்டாய் இருந்த உடல் மீண்டும்ாதாரணமாக எழுந்து நடக்கிறதே இன்று!"

"அதெப்படி உடல் துண்டு துண்டாய் மாறிப்போகுமோ.. புரியலையே?"

என குழம்பிய அன்றைய மக்களின் கேள்விக்கு பரமஹம்ஸரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவமும், அதற்கு அவரளித்த விளக்கமும் சொல்லப் போகும் விளக்கமும், இதோ உங்களுக்காக... அடுத்த தலைப்புக்குள்!

10.4 திருச்செங்கோடு

மூன்றாவது அதிசயம்

பரமஹம்ஸர் சில மாதம் திருச்செங்கோட்டில் தங்கியிருந்தார்.

அப்பொழுது பரமஹம்ஸரின் பரம பக்தரான திரு. ஜி.வி வெங்கடகிருஷ்ணன் அவர்கள் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தார்.

பரமஹம்ஸர் தங்குவதற்கென்று தனி அறை கொடுக்கப்பட்டது பரமஹம்ஸரின் அறைக்குள், 'முன் அனுமதியின்றி எவரும் அறைக்குள் வரக்கூடாது' என்று கண்டிப்பாக சொல்லியிருந்தார்

பெரியவர்கள் வெகு கட்டுப்பாட்டோடு இருந்தார்கள். அவரின் மகனோ துரு துருவென செயல்படும் இளைஞன். ஒரு நாள் பரமஹம்ஸரின் அறைக்குள் விளையாட்டாக நுழைந்து விட்டான்.

A portrait photo and an illustration of a body fragmented into pieces

சென்ற அச்சிறுவன், சில வினாடிகள் தான் தாமதம். ‘குய்யோ, முய்யோ’ என்று அலறியபடி, நினைவிழந்தவன்போல் வெளியே ஓடி வந்தான்.

எதனால் இப்படி அலறி அடித்துக் கொண்டு ஓடிவந்திருப்பான்?

Pதிலை புரிந்து கொள்ள பரமஹம்ஸர் சொன்ன ஒரு சிறிய அறிவியல் விளக்கம்,

“ஒலியை ஹெர்ட்ஸ்(Hz) என்ற அலகால் அளவிடுவார்கள். 20 Hz-க்கும் 20000 Hz-க்கும் இடைப்பட்ட அளவுள்ள சப்தங்களை மட்டுமே மனித காதால் கேட்க முடியும்.

20 Hz-க்கு கீழ் உள்ள சப்தங்கள் நீங்கள் கேட்க முடியாது என்பதால், அதை நிசப்தம், அமைதி என்று சொல்லிவிட முடியாது.

அதே போல் உங்கள் காதுகளால் கிரகிக்க இயலாத அளவுக்கு அதிகமான Hz-க்கு சப்தம் அதிமமாகிவிட்டாலும் அதை உங்கள் காதுகளால் கேட்க இயலாது. அதனால் அதை சப்தமல்ல என்று சொல்ல முடியாது.

இதேப்போல் தான் நாம் பார்க்கும் இந்த உடலும். வரையறைக்குட்பட்டதே!

விஞ்ஞானத்தின் E=mc2 மற்றும் மெய்ஞானத்தின் ‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ என்ற இரண்டின் கூற்றுப்படியும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே சக்திதான்.

திரு ஜி.வி.அய்யா அவர்களின் மகன் திரு. வெ.ஜெயசந்திரன் நேரில் பார்த்ததையும், எங்களுக்கு விளக்கியதையும் சித்திரமாக்க முயற்சித் திருக்கிறோம்.

சக்தி என்பது வெறும் அதிர்வுகளின் தொகுப்பு தான் என Quantum Physics விஞ்ஞானம் சொல்கிறது. இங்கு சக்தியின் வெவ்வேறு வடிவங்களே நாம் பார்ப்பவையும், உணர்பவையும்.

சக்தியின் வெவ்வேறு வடிவங்களே நாம் பார்ப்பவையும், உணர்பவையும், சக்தி என்பது வெறும் அதிர்வுகளின் தொகுப்பு தான் என Quantum Physics விஞ்ஞானம் சொல்கிறது.

சக்தியின் அதிர்வுகள் மாறுவதைப் பொருத்து பொருட்களின் வடிவங்கள், வெளிப்பாடுகள் மாறுகின்றன.

உடல் என்பதே சக்தியின்
வெளிப்பாடுதான். அதிர்வுகளின் தொகுப்பு
தான்.

ஒரு குறிப்பிட்ட அதிர்வு எல்லைக்குள்
உள்ள உடலைத்தான் நம்மால் பார்க்க
முடியும். உணரமுடியும்.

அந்த குறிப்பிட்ட அதிர்வு எல்லைக்கு
அப்பாற்பட்ட பிராணசக்தியை நம்மால்
பார்க்க முடிவதில்லை. ஆனால்
உணரமுடிகிறது.

பார்க்க கூடிய இந்த உடலை, பார்க்க
முடியாத மனம் இயக்குகிறது. பிராண சக்தி
சக்தியூட்டுகிறது.

அதிர்வுகள் மாறினால் உடலும், மனமும் மாறிப்போகும்.

ஞானமடைந்த பின், எல்லாமே நம் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்.

நினைத்த மாத்திரத்தில் அதிர்வுகளைக் கூட்ட முடியும், குறைக்க முடியும். இப்படிக் கூட்டி குறைக்கும் போது பல ஏடாூடமான நிகழ்வுகள் நிகழ்ந்து விடும்.

அதிர்வுகளை மாற்றுவதின் மூலமாக உடலை மறையக் கூட செய்யலாம்.

காரணம் மனித கண்களால் பார்க்க
கூடிய வரையரையை அதிர்வுகள்
தாண்டிவிட்டால் மனிதனால் அந்த
உருவத்தைப் பார்க்க முடியாது என்பதே".

உள்ளே சென்றதும்
அலறியபடி ஓடி வந்தது ஏன் என்று
இந்நேரம் புரிந்திருக்குமே!

ஆம்! அன்று பரமஹம்ஸர் மிக ஆழ்ந்த தியான நிலையில் இருந்தார்.

உடலில் பல இடங்களில் முக்கியமான
சக்திமையங்கள் இருக்கின்றன. இந்த
இடங்களின் சக்தியின் அதிர்வு மற்ற இடங்களை
விட அதிகமாக இருக்கும்.

ஆழ்ந்த தியான நிலைக்குள் செல்லச்
செல்ல அதிர்வுகள் அதிகமாக இருக்குமிடங்கள்
வேறு பரிமாணம் எடுத்துக்கொண்டதால்...
அந்த பகுதிகள் மட்டும் பார்ப்பவரின்
கண்களுக்கு புலப்படாத நிலையை நோக்கி
மாறிவிட்டிருந்தன.

அந்த நேரத்திலா இந்த அப்பாவி கதவை திறக்க வேண்டும்.

ஒரு மனிதனால் கனவில் கூட கற்பனை செய்து பார்க்க முடியாத நிலையில் இருக்கும் ஒருவரின் துண்டு துண்டாய் தெரியும் உடலை பார்த்தால் என்ன ஆவது?.

ஒரு உடல் பல துண்டுகளாய்த்
தெரிந்ததை, நிஜமாகவே உடல் துண்டு
துண்டாகிக் கிடக்கிறது என நம்பிவிட்டதால்
அரண்டுவிட்டான்.

அடிவயிறு கலங்க ஓடி வந்தவனை
தேற்றி அவனுடைய தந்தையார், தன் மகனை
அழைத்துக் கொண்டு பரமஹம்ஸர் இருக்கும்
அறைக்குச் சென்றார்.

"சாமி , சாமி !" என
கூப்பிட்டதும், கதவைத்திறந்து "வாங்க" என
அழைத்த பரமயஹம்ஸர் முழு உடலில்
இருப்பதை பார்த்ததும் அந்த இளைஞனின்
பயம் தெளிந்தாலும், குழப்பம் அதிகமானது.

"அதெப்படி இப்படி மாறிப்போனார்.
சில நொடிகளுக்கு முன் தானே அவர் துண்டு
துண்டாய் படுத்திருந்ததை பார்த்தேன்.

இப்படியும் மாற முடியுமா?" என குழம்பிக் கொண்டிருக்கையில்...

" சாமி தான்
சொல்லியிருக்கேனில்லையா... அனுமதி
இல்லாமல் வரகூடாதென்று.

ஏனப்பா வந்தாய். இந்த அதிர்ச்சி தேவையா !?

சாமி ஒரு விஷயம் சொல்றோம்னா
அதை ஆயிரம் கோணத்திலிருந்து அலசி
பார்த்துவிட்டுதான் சொல்வோம்.

உங்களின் மனத்தின் ஒரேயொரு
கோணத்திலிருந்து சாமி சொல்வதை புரிந்து
கொண்டு, சாமி சொன்னதை மீறி நடந்தால்
இப்படித்தான் ஆகும்." என மாபெரும்
தத்துவத்தை அங்கு மிக சுருங்கச் சொல்லி
விட்டு சென்று விட்டார்.

அப்புறம் தொடர்ந்து இரண்டு
நாட்களுக்கு அந்த இளைஞன் ஜீரத்தில்
இருந்தான்.

இதையறிந்து பரமஹம்ஸரே கூப்பிட்டு
தியான சிகிச்சை செய்த பின்பு தான் ஜீரம்
தணிந்தது.

A portrait of a young man smiling

பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது...

* யார் சிஷ்யன் ?
குரு
சொல்வதையெல்லாம்
பரிசோதிப்பவன்
பார்வையாளன்.

குரு
சொல்வதையெல்லாம்
கேட்பவன்
பக்தன்.

குரு
சொல்வதையெல்லாம்
செய்பவன்
சீடன்.

10.5 பேயைக் காட்டியது

நான்காவது அதிசயம்

பரமஹம்ஸர் நம் பக்தருடன்
காரில் பயணித்துக்
கொண்டிருந்தார். உடன் வந்த
பக்தருக்கு ஒரு ஆசை.

பேயை தன் இரு
கண்களால் கண்ணாரப் பார்க்க
வேண்டும் என்று தன் ஆசையை
பரமஹம்ஸரிடம் சொன்னார்.

பரமஹம்ஸர் பொறுமையாக சொன்னார். ‘அப்பா நீ நினைப்பது போல் சும்மா அல்ல, அது நீ தாங்க மாட்டாய்’ என்று சொன்னார்.

“ஆனாலும் நான் பார்த்தே தீருவேன், எனக்கு இப்பொழுதே காண்பியுங்கள்” என்று பிடிவாதமாய்க் கேட்டார். இரண்டு மூன்று முறை பரமஹம்ஸர் மறுத்துப்பேசியும் பின்னரும் அவர் விடுவதாக இல்லை.

அப்படியென்றால் நான் என்ன செய்யட்டும். உன் பின்பக்கம் திரும்பிப்பார்! என்று சொன்னார்.

அடம்பிடித்த பக்தர் கலவரமானார்.

“எதற்கு” எதற்கு என்று தாழ்ந்த குரலில் பக்தர் கேட்க ,

“நீ தானே பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டாய். பார்.

உனக்காக காத்துக் கொண்டிருக்கிறது” என்றார்.

“சாமி! ! ! நிஜமாவே வர வச்சுட்டீங்களா...” என நடுங்கும் குரலில் கேட்டுக்கொண்டே திரும்பி பார்க்கப் போய், நின்று கொண்டிருக்க மனுஷன் மொத்தமாய் ஆடிப்போய் விட்டார்.

பேயை பார்த்த நொடியில் அடிவயிறே கலங்கிப்போனது. சர்வனாடியும் பயத்தில் ஒடுங்கிப் போக...தன் சுயகட்டுப்பாட்டை இழந்து விட்டார்

“ஐயோ! சாமீ...!!!” என்ற சத்தமிடவும் கட்டுப்பாடில்லா சிறு குழந்தையைப் போல பேண்ட் நாசமாகவும் சரியாக இருந்தது. சத்தமிட்ட திக்கை பார்க்க பார்க்க பரமஹம்ஸரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார். பீதியின் உச்சியில், சாமி நான் தான் மூடத்தனமா கேட்கிறேன் என்றால் நீங்கள் இப்படிக் காட்டலாமா... என கேட்ட போது

பரமஹம்ஸர், "சாமி ஒருமுறை சொல்லும் போதே கேட்டிருக்க வேண்டும். பிடிவாதம் பிடித்தால் இதான் கதி.இது இந்த சம்பவத்திற்கு மட்டுமல்ல வாழ்வின் எல்லா சம்பவங்களுக்கும் பொருந்தும்.

இனியாவது சாமி ஒருமுறை சொன்னால் விவாதம் பண்ணாமல் ஏற்றுக்கொள்வது என்று முடிவுக்கு வந்தால் காப்பாற்றப்பட்டுவிடுவீர்கள் என்றர்த்தம்" என வாழ்வின் அர்த்தத்ததையே இந்த இடத்தில் பரமஹம்ஸர் அடிக்கோடிட்டார்.

இப்படி பேசிக்கொண்டிருக்கையில் மெல்ல காற்று வீச ஆரம்பித்தது... அவ்வளவு தான், பரமஹம்ஸர் பற்றி சொல்லவா வேண்டும்.

மீண்டும் வம்பிழுத்து விளையாட ஆரம்பித்தார்.

காற்றில் சில சருகுகள் அசையும் சத்தம் கேட்டது இடத்தை காட்டி "ஏய்! அந்த பக்கம் பார்"... என சொல்ல

"சாமி வேண்டாம், நான் மாட்டேன்... நான் மாட்டேன்... என சிறு குழந்தையைப் போல கூச்சலிட்டார் பக்தர்.

அப்படியும் பரமஹம்ஸர் விடுவதாக இல்லை காற்றில் சருகுகள் உராயும் சத்தம் வரும் திசையெல்லாம் "ஏய்! ஏய்! அங்க பாரப்பா! இதோ அதோ அங்கதான் இங்கே பாரப்பா!" என சொல்லச் சொல்ல

"சாமி என்னை மன்னிச்சிடுங்க...

என் பிடிவாதத்தை இத்தோட விட்டு விடுகிறேன்" என பரமஹம்ஸரின் பாதத்தில் விழுந்த பக்தர் அழ... "தப்பித்து விட்டாய். உனக்கு வைக்கப்பட்ட சோதனையில் ஜெயித்து விட்டாய்."

"இனி சாமி பார்த்துக் கொள்கிறேன்" என சிரித்துக் கொண்டே தாயின் கரிசனத்தோடு சொன்னார்.

பரமஹம்ஸர் இப்படி கிருஷ்ணனைப் போல் விளையாடுத்துத்தனமாய் பக்தர்களோடு இருந்த காலங்கள் உண்டு என்பதை பழைய பக்தர்களின் நினைவு மடல்களை புரட்டும் போது தான் தெரிந்து கொள்கிறோம்.

11.1 காவிரி கரையோர வாசம்

தனக்கென்று ஒரு இருப்பிடமும் உருவாக்கிக் கொள்ளாமல் பரமஹம்ஸர் தன்னுடைய பக்தர்களின் இல்லங்களில் ஆங்காங்கே தங்கி வந்தார்.

Tிருச்செங்கோட்டிலிருந்து பரமஹம்ஸர் பக்கத்து ஊருக்கு வந்து சேர்ந்தார். அங்கு காவிரிக் கரையோரத்தில்,

சுடுகாட்டிற்கும் அருகில்...

ஓர் சின்ன ஓலை குடிசை ஒன்றை ஏற்படுத்தி கொண்டால் பரமஹம்ஸரின் தியான சிகிச்சையால் குணமடைந்த ஒருவர் தானமாக அளித்த அந்த சிறு நிலத்தில் பரமஹம்ஸர் தங்க ஆரம்பித்தார்.

அங்கு வரும் நோயாளிகளுக்கு தியான சிகிச்சையளித்தார்.

மனக்கவலையோடு வருவோர்க்கு ஆறுதல் சொன்னார்.

வாழ்க்கையின் விரக்தியில் இருப்போருக்கு நம்பிக்கையளித்தார்.

அவர் உள்ளுக்குள் ஆனந்தமாக இருந்தாலும் அவரது உடல் அவரோடு ஒத்துழைக்காமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. பொதுவாக பரமஹம்ஸர் தன் உடல் படும் பாட்டை மற்றவரிடம் சொல்ல மாட்டார் தனிப்பட்ட முறையில் ஐயாவும் அம்மாவும் உடன் இருந்து பரமஹம்சரை பார்த்துக் கொண்ட பொழுது அவர்கள் பரமஹம்ஸர் உடல் பட்ட அவஸ்தையைச் சொன்னார்கள். அவர் உடல் பட்ட பாட்டை கேட்பவரின் கண்களில் இருந்து கண்ணீர் தானாய் உருண்டு வரும்.

நமக்கு அவர் கிடைக்க வேண்டும்
என்பதற்காக அவர் பட்ட அவஸ்தைகள்
நினைக்கையிலெல்லாம் காசிகளின் கண்கள்
குளமாகின்றன. முகம் நன்னீர்பெருக்கில்
மலர்ந்திருக்கிறது.

11.2. இனி தான் என் வாழ்வு ஆரம்பிக்கின்றது

அம்மா பரிபூரணமாக குணமடைந்தார்.

ஐயாவும் அம்மாவும் பரமஹம்சரை அவர் இடத்திற்கு சென்று பார்த்துவிட்டு பின் வெகு நேரம் தங்கிவிட்டு வருவார்கள்.

இவ்வாறு நாட்கள் சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது திடீரென்று ஒருநாள் ஐயாவிடம் புதிராக பேசினார்.

"ஐயா இனி நான் சுவாமியுடன் தங்கப்போகிறேன்" என்றார் அம்மா.

அதுவரை எந்த பெரிய முடிவும் வாழ்வில் எடுத்தாத அம்மா அன்று எடுத்த முடிவையும் அவர் தெளிவாகச் சொன்ன விதத்தையும் அவரின் அசைக்கப்பட முடியாத உறுதியையும் கண்ட ஐயாவின் மனம் ஆட்டம் கண்டது.

ஆம் உண்மையில் என்ன சொல்வதென்று தெரியாமல் ஐயா திகைத்து விட்டார்.

"ஒரு மனைவியாக உங்களுக்கு தேவையான எல்லா பணிவிடைகளையும் குழந்தைகளுக்கு தாயாகவும் என்னுடைய எல்லா கடமையையும் முழுமையாக செய்து விட்டேன்.இதுவரை உங்க எல்லோருக்காகவும் நான் வாழ்ந்தேன்.

இனிநான் வாழ வேண்டும் எனக்காக என் வாழ்க்கையை வாழ வேண்டும். என்று அம்மா ஆணித்தரமாக சொன்னார்.

எனக்கு தேவையான உடைகளை எடுத்து கொண்டேன். இனி என்னுடைய வாழ்க்கை சாமிக்கு சேவை செய்வதிலேயே தான் கழியப்போகிறது.

நீங்களும் வந்தால் நாமிருவரும் அவரிடம் செல்வோம் நான் நாளை காலை கிளம்புகிறேன்" என்று தீர்க்கமாகச் சொன்னார். ஐயாவோ இப்படி ஒரு நாடகமடியான மாற்றத்தை எதிர் பார்க்கவில்லை.

நாமும் உடன் சென்று சில காலம் தங்கிவிட்டு பின்னர் பேசி புரியவைத்து அழைத்து வந்து விடுவோம். என்று மனத்திற்குள் எண்ணிக்கொண்டார்.

அடுத்த நாள் காலை அம்மா ஐயாவுடன் காவேரிக்கரையோரம் பரமஹம்ஸர் இருக்கும் இடத்திற்கு சென்றார்கள்.

அம்மாவை பார்த்ததும் தான் தாமதம் பரமஹம்ஸர் வந்துட்டியாம்மா வந்துட்டியாம்மா என்று பரவசத்தோடு நெகிழ்ந்து பேசினார். "நீ வந்துட்டா அவர்களையெல்லாம் யாாரம்மா பார்த்துக் கொள்வார்கள். நீ ஏம்மா வந்தே அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டாமா?" என்று மாற்றி மாற்றி பேசிப்பார்த்தார்.

தான் எடுத்த முடிவிலிருந்து எள்ளளவிற்குக் கூட தன்னை மாற்றிக்கொள்ள அம்மா தயாராக இல்லை.இதற்கிடையில் அம்மாவைப் பார்க்கும் பரமஹம்ஸர் கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டே இருந்தது.

11.5 வட இந்தியா விஜயம்

பரமஹம்ஸர், ஐயா, அம்மா ஒன்ற சேர்ந்து காவிரிக்கரையோரத்தில் இருந்த குட வாழ ஆரம்பித்துவிட்டார்கள். அப்பொழுது ஒருந பரமஹம்ஸர், வட இந்திய சுற்றுப்பயண போகலாம் என்று சொன்னார். எல்லோர ஒன்றாக சேர்ந்து வடஇந்திய சுற்றுப்பயண குஷியாகக் கிளம்பினார்கள்.

அங்கே, பிருந்தாவனம், கிருஷ்ணர் இரு
இடம், மேலும் பல ஆன்மீக ஸ்தலங்கள், தீர்
யாத்திரைகள் போகக் கூடிய இடங்கள் என்
இப்படிப் பல இடங்கள் சென்று விட்
திரும்பினார்கள்.

இது ஒரு சாதாரண சுற்றுலா வாக மட்டு வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு தெரியும். ஆ இதைப்பற்றி அம்மா சொல்லும் பொழுது “நானும் எவ்வளவோ சுற்றுலா போயிருக்கிறேன்.

சிம்லா, டார்ஜிலிங் - என்று மனிதன் ஒ
ஒருமுறை அந்த இடத்தைப் பார்த்தாலே ஆ
அமைதியில் ஆழ்த்தக்கூடிய இடங்களை
பார்த்திருக்கிறேன்.

ஆளையே மயக்கக்கூடிய இயற்கை காட்சிகளைப் பார்த்திருந்தாலும், இந்த வடஇந்தி சுற்றுப்பயணத்தில் நான் அனுபவித்த இந் ஆனந்ததை என்னால் இதுவரைக்கும் இந் உலகத்துல அனுபவித்த எந்த ஆனந்தத்தோ ஒப்பிடமுடியவில்லை.

எதுவுடனும் ஒப்பிடமுடியாத அளவிற்
பலமடங்கு ஆனந்தமாக இருந்தது” என
சொன்னார்கள். மேலும் “சுருக்கமாக சொல்
வேண்டுமென்றால், பரமஹம்ஸர் உட
இருந்ததே ஆனந்தமாக இருந்தது”.

‘‘இல்லையென்றால்
எனக்கு இந்த அனுபவம்
கிடைத்தது அந்த
அனுபவம் கிடைத்தது
அப்படி, இப்படி என்று
அவற்றிலேயே சிக்கி
நின்றுவிடுவீர்கள்”

அந்த ஆன்மீக
அனுபவங்களே
விளக்குகளாக
மாறிவிடும்.
மேற்கொண்டு வளர
முடியாமல் கிணறு வெட்ட
பூதம் வந்த கதையாகி
போய்விடும்.

ஆன்மீக
அனுபவங்கள் என்பது
நல்ல வழிகாட்டிகள்
அதை நினைத்து
பெருமை படுவதோ,
அதனால் அகங்காரம்
வளர்வதோ நடக்காமல்
பார்த்துகொள்வது மிகமிக
முக்கியமானது.”

Figure

எப்படி ஒரு கடற்கரையில் நின்று காண்டிருந்தோமானால் அந்த கடற்கரையில் நிற்பதே சமான அனுபவமாக இருக்கும் அல்லவா!

அந்த தென்றல் காற்று மெல்ல வீச வீச
அதுவொரு சுகமான அனுபவமாக நம்மை ஊடுறுவும்
அல்லவா?

அதேபோல் பரமஹம்ஸரிடமிருந்து வெளிப்பட்டு காண்டிருந்த ஆனந்தக் கதிர்வீச்சு அதாவது அவரின் ாந்நித்யமே என்னை ஆனந்தத்தில் ஆழ்த்திவிட்டது என்று தான் சொல்வேன்" என்று அம்மா சான்னார்கள்.

"ஞானியினுடைய சாந்நித்தியத்தில் மிருகங்கள் கூட ஆனந்தமாக இருக்கும்" என்று பதஞ்சலி யோக ஸூத்திரத்தில் இருக்கின்றது.

அதாவது வன்மை சிறிதும் இல்லாத மனிதனின்
ருகாமையானது நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்தும்
என்பதே அது.

இதுபோன்ற சம்பவங்களெல்லாம் பரமஹம்ஸர் ஆனந்த சக்தி மையம் என்பதற்கு அத்தாட்சிகள்.

அதனால் தான் இந்த ஞானிகளுடைய ாந்நித்தியத்திற்காக அவர்களுடைய சத்சங்கங்களுக்கு மக்கள் தொடர்ந்து கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள்.

ஞானிகளை பார்ப்பதற்கும், வணங்குவதற்கும், தரிசனம் பெறுவதற்கும் மக்கள் ஏங்குவதற்கு காரணம் அவர்களையும் அறியாமல் அவர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தும் அந்த ஆனந்த சக்திதான்.

அதனால் தான் ஞானிகள் வாழும் இடத்தில் வாழ்வதும் ஆஸ்ரமவாசிகளாக மாறுவதும், பக்தர்களுக்கு ஒரு குதூகலவிஷயமாக இருப்பதற்கான காரணம்.

11.6 கொடைக்கானல் விஜயம்

அப்பொழுதெல்லாம் பரமஹம்ஸர், வெகு சுதந்திரமாக இருந்த நேரம். இந்த ஊருக்கு போகலாம், இந்த மாதிரி இந்த வழியில் தான் போக வேண்டும் என எந்த திட்டமும் அப்போது அவர்களுக்கு இல்லை.

திடீரென்று செய்தித்தாளை எடுத்துப் பார்ப்பார்கள். செய்திகளில் வரும் இடங்களில் எந்த இடம் பிடித்திருக்கிறதோ, அந்த ஊரில் திருவிழா நடக்கிறது என்றால் அந்த இடத்திற்கு உடனடியாக கிளம்பிச் சென்றுவிடுவார்கள்.

ஒருநாள் தினசரியை எடுத்து பார்க்கையில்
'கொடைக்கானல் சீசன்' எனவந்த செய்தியை
படித்தார்கள்.

உடனே எல்லோரும் கொடைக்கானலுக்குக் கிளம்பிவிட்டார்கள். முடிவு செய்த சில நிமிடங்களில் கொடைக்கானலுக்குக் கிளம்பிவிட்டார்கள்.

கொடைக்கானலில் இரவு வேளையாகிவிட்டது. அந்த நள்ளிரவு வேளையில் பரமஹம்ஸரும் ஐயாவும் அவர்கள் தங்கிய இடத்திற்கு வெளிப்புறக்கம் இருந்த ஒரு பலகையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

சிறிதுநேரத்திலெல்லாம், ஐயாவால் குளிர்தாங்கமுடியாமல் நடுங்கிக் கொண்டிருந்தார். ஆனால் குளிர் என்ற ஒன்று அங்கு இருக்கிறது என்பதற்கு அறிகுறியே பரமஹம்ஸரின் உடலிலும் பேச்சிலும் இல்லை.

வெகு உற்சாகத்தோடும், சிரிப்போடும் பரமஹம்ஸர் பேசிக் கொண்டிருந்தார். இது ஐயாவிற்கு ரொம்ப வித்யாசமாக இருந்தது. "என்னது? எனக்கு குளிர்கிறது. பரமஹம்ஸருக்கு குளிரவே இல்லையே" என ஐயா யோசித்து கொண்டிருந்ததால் பரமஹம்ஸர் சொல்வதை ஐயாவால் முழுமையாக கேட்க

ஐயா தடுமாறுவதை பார்த்துவிட்டு பரமஹம்ஸர், "என்னாசுங்கய்யா? என்னாச்சு? குளிருதா?" என்று கேட்டார்.

ஐயா ஆமாம் என சிரித்தபடியே தலையாட்ட, பரமஹம்ஸர், "குளிரை நீங்கள் எதிர்க்கும் வரைதான் குளிர் உங்களை வாட்டும். குளிரை எதிர்ப்பதை நிறுத்திவிட்டால் அதுவே உங்களை வருட ஆரம்பிக்கும்.

இந்த சின்ன உடல் மீது இருக்கும் அதிகபற்றால் தான் பயம் என்ற ஒன்றே உருவாகிறது.

'அச்சோ! இந்த குளிரால் என் உடல்நிலை கெட்டுவிடுமோ?... எனும் எண்ணத்தால் குளிரை எதிர்க்கிறீர்கள். உடல் குளிரில் நடுங்குகிறது.

எதிர்ப்பதை விட்டால்... குளிர் கூட வருடும் சுகமாக மாறிவிடும் எதிர்ப்பதை நிறுத்திப் பாருங்கள்" என சொன்னார்.

ஐயா முயற்சி செய்து பார்த்தார். எதிர்ப்பதை விட்டு வெளிவர முடியவில்லை. பரமஹம்ஸர் சிரித்தபடியே, "சரிங்கையா, கண்ணை மூடுங்க", எனச் சொல்லி ஐயாவின் ஆக்ஞா சக்கரத்தில் தன் கட்டை விரலை வைத்தார். இதைப்பற்றி ஐயா சொல்லும் போது...

"என்னால் நம்பவே முடியவில்லை. காற்றில் நழுவும் சருகு போல என்னிடம் இருந்த எதிர்ப்பு அப்போதே நழுவி விழுந்தது. விஷமாய் பாய்ந்த குளிர்காற்று சுகமான உணர்வாய் மாறிப்போனது. அந்த சூழ்நிலையும் மாறிப்போனது.

எதிர்த்தல் எனும் குணம் மறைந்த கணம், உடலே மாறிப்போனது. அந்தச் சூழ்நிலையும் மாறிப்போனது.

இதுவரை நான் பட்டக் कष्टங்களெல்லாம் தேவையற்ற கஷ்டங்கள் என்பது எனக்குப் புரிந்தது" எனச் சொன்னார்.

இதுபற்றி வேறொரு இடத்தில் பேசும் பொழுது பரமஹம்ஸர் மிக அழகாய் சொன்னார், "உங்களுடைய மொத்த கஷ்டமுமே இது போன்ற கஷ்டங்கள் தான்.

வாழ்க்கையிடம் எதிர்ப்பதையும், மற்றவர்களிடம் சண்டையிடுவதையும் பிடிவாதமாயிருப்பதையும் விட்டாலே உங்களின் கஷ்டங்களெல்லாம் கரைந்து போகும்.

எதிர்ப்பதை விடுங்கள் வாழ்வில் எதிர்நீச்சல் அடிக்க வேண்டி இருக்காது. ஆற்றின் பாய்ச்சலோடு பாய்ந்து விளையாடும் மீன் குஞ்சு போலாவீர்கள்" என்றார்.

கொடைக்கானல் சம்பவம் பற்றி வேறொரு முறை பேசும் பொழுது ஐயா சொன்னார். "அப்பொழுது தான் எனக்கு புரிந்தது. பரமஹம்ஸர் சொல்கின்ற வார்த்தை ஒவ்வொன்றும் வார்த்தையல்ல. வேதம்!

அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக குறித்து, ஒரு புத்தகம் ஒன்றை உருவாக்க வேண்டும். காரணம், ஒவ்வொன்றும் சூத்திரங்கள்; ஒவ்வொன்றும் தியான மந்திரங்கள். இந்த உண்மை அன்றுதான் எனக்குள் ஆழமான அனுபவமாக மாறியது" என்று சொன்னார்.

பரமஹம்ஸர் 'கதவைதிற! காற்றுவரட்டும்' புத்தகத்தில் மிக அருமையாகச் சொல்வார். "நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு சம்பவமும் வேதம்" என்று சொல்வார்.

"நீங்கள் வேதங்கள் என்று எதையும் தனியாக படிக்கத் தேவையில்லை.

நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் சரியாகப் பார்த்தால் போதும் அதுவே மிகப் பெரிய வேதம். அதுவே மிகப்பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுக்கும்" என்று சொல்வார்.

பரமஹம்ஸர், "எல்லா ஞானக்கருத்தையும் படிக்க வேண்டும் என்று அவசியமில்லை. அப்படி ஆரம்பித்தால் உங்களால் படிக்க முடியாது.

ஒரே ஒரு ஞானக் கருத்து...

அதை எடுத்து முழுமையாக பின்பற்றினாலே போதும், நீங்கள் ஞானமடைந்துவிடுவீர்கள்.

அந்த ஞானக்கருத்துகள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை. அதனால் தான் ஞானிகளின் வார்த்தைகளை 'மந்திரம்' என்று சொல்லுவார்கள்" என மிக அழகாய் குறிப்பிடுவார்.

இதுபற்றி பேசும்போது நித்யானந்த புரிவாசிகளிடம். எது ஆன்மீகம்?" என நிருபர்கள் கேட்டதற்கு "பரமஹம்ஸருடைய வார்த்தைகளை கேட்பதும், தியானிப்பதும், கடைப்பிடிப்பதும் தான் ஆன்மீகம்" என்று சொன்னார்கள்.

இதே 'குருவின் வார்த்தைகள்' பற்றி வேறொரு இடத்தில்

"நான் வெறுமனே ஆன்மீகவாதி என்றில்லாமல், நான் குருவை நேசிக்கிறேன் என்றில்லாமல், குரு சொல்வதை கடைப்பிடிப்பவனே சிஷ்யன்" என்று பரமஹம்ஸர் சொல்லியிருக்கிறார்.

சேலத்தில் நடந்த அகில உலக தியானபீட மாநாட்டில் பரமஹம்ஸர் "குருவை பூஜிப்பதும், குருவை வணங்குவதும் சுலபம். வார்த்தைகளைக் கடைபிடிக்கும் பொழுதே உங்கள் அகங்காரம் அழிய ஆரம்பிக்கும்.

குருவைப் பூஜிப்பது பெரிதல்ல. குருவின் வார்த்தைகளைக் கடைபிடிப்பதே பெரிது" என்று தியானபீடத்தின் தமிழ்நாடு அமைப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் மாநாட்டில் குறிப்பிட்டார்.

நீங்கள் வணங்குபவரா? கடைபிடிப்பவரா?

Figure

அந்த 18 பேர்

ஒருநாள் தினசரித் தாளை பார்க்கையில், "அட இது மிகப்பெரிய வாய்ப்பாச்சே!" என்று நினைத்தார்.

உடனடியாக பரமஹம்ஸரிடம் ஐயா, "அற்புதமான வாய்ப்பு சாமி. மேட்டூர் டேமில் தண்ணீயே இல்லை"

"மேட்டூர்ல தண்ணீர் இல்லை என்றால் என்ன?" "தண்ணீர் இல்லாவிட்டால் மேட்டூர்ல இருக்கும் கோயிலை பார்க்கலாம் சாமி" என்று சொல்லி, அதற்குள் இருக்கும் கோயிலை ஐயா காட்டினார்.

தினசரியில் உள்ள போட்டாவை காட்டி, பரமஹம்ஸரிடம் ஐயா "சாமி, இதுக்குள்ளே ஒரு கோயில் இருக்கும் சாமி" என்று சொன்னார்.

அந்த கோயிலை பார்த்தது தான் தாமதம்...

அது வரையிலும்ாதாரணமாக இருந்தவர் தன்னுடைய மொத்த கவனத்தையும் திருப்பி, "ஓ அப்படியா! சரி சரி வாங்க ஐயா, உடனே கிளம்பலாம்ங்கய்யா" என்று சொன்னார்.

பரமஹம்ஸர், ஐயா, அம்மா, அதன்பின் உடன் இருந்த பக்தர்கள் அனைவரும் ஒருகாரில் உடனே மேட்டூர் கிளம்பினார்கள்.

வழி நெடுகிலும் பஜன், பாடல், நாமகீர்த்தனம் மற்றும் சின்ன சின்ன நகைச்சுவைகளை பேசி அனைவரையும் சிரிக்க வைத்து, போகிற வழியெல்லாம் ஒரே குதுகலமாகவும், கொண்டாட்டமாகவும் சென்றார்கள்.

மேட்டூர் டேமில் இறங்கியது தான் தாமதம், எங்கு இருந்துதான் அவ்வளவு வேகம் வந்ததோ? என வியக்குமளவுக்கு வில்லிலிருந்து பாய்ந்த அம்பு போல் பரமஹம்ஸர் வேகமாக நடக்க ஆரம்பித்தாராம்.

அவருடைய வேகத்திற்கு உடன் வந்தவர்களால் ஓடிவரக்கூட முடியவில்லை.

அவ்வளவு வேகத்தில் பரமஹம்ஸர் நடந்து வந்தார். மேலும் அவருடைய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒவ்வொருவராக ஆங்காங்கே உட்கார ஆரம்பித்து விட்டார்கள்.

ஐயா மட்டும், 'பரமஹம்ஸர் இவ்வளவு வேகமாக போகிறாரென்றால், இது சாதாரண விஷயம் அல்ல. ஏதோ மிக முக்கியமான ஒன்றுதான்' என தீவிரமாய் யோசித்தவராய் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ, அவ்வளவு வேகமாக, பரமஹம்ஸரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓடினார்.

அதுவரை அவ்வளவு வேகமாக வந்த பரமஹம்ஸர் மேட்டூர் டேமிற்குள் இருந்த கோயிலின் முன்னால் வந்தவுடன் மிகவும் அமைதியாகி விட்டார். அமைதி என்றாலும் ஒரு அமைதி பரமஹம்ஸரின் அமைதியால் அந்த இடமே மவுனமாகிப்போனது.

அமைதியான பரமஹம்ஸர் ஐயாவைப் பார்த்து "ம்... ஞாபகம் வருகிறதா?" என்று கேட்டார் ஐய்யா, "ஞாபகம் வருதா, என்றால் என்னாங்கசாமி? என்ன கேட்கிறீங்க என்றே புரியவில்லையே சாமி" என்றார்.

"இல்லை! நல்லாப் பாருங்க. உங்களுக்கு ஞாபகம் வருதா?" என்று பரமஹம்ஸர் ஆழமாய் கேட்டார்.

ஐயா, "சாமி இந்த இடம்தான் பேப்பரில் பார்த்தோம். இதற்கு மேல் ஞாபகம் வருவதற்கு இதில் என்ன சாமி இருக்கு. நீங்க என்ன சொல்றீங்க என்று புரியவில்லை சாமி. ஆனா என்னவோ சொல்லவறீங்க என்று புரிகிறது?" என்று சொன்னார்.

பரமஹம்ஸர் ஐயாவை ஒருமுறை ஆழமாகப் பார்த்துவிட்டு, பக்கத்தில் இருக்கும் தூணைக்காண்பித்து, "போய் அந்த தூணை தொடுங்கய்யா?" என்று சொன்னார்.

ஐயா போய் அந்தத் தூணைத் தொட்டார்.

அப்படி தொட்டதுதான் தாமதம், அடுத்து நிகழ்ந்தவற்றை மிக அழகாய் ஐயா சொன்னார் "வேறு ஒரு உலகத்தில் போய் விழுந்த மாதிரி உணர்ந்தேன்" இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் பரமஹம்ஸர் சொன்ன சின்ன உதாரணம் ஒன்றை தெரிந்து கொண்டால் நம்மால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். “இப்பொழுது இந்த நிஜ உலகத்தை நாம் நன்றாகப் பார்க்கிறோம். திடமாக இருக்கிறது. சிமெண்டால் கட்டப்பட்ட உறுதியான வீட்டுக் குள் இருக்கின்றோம்.

கனவிலும் இதே மாதிரி திடமாகத்தான் இருக்கின்றது. கனவிலும் சிமெண்ட்டால் கட்டப்பட்ட உறுதியான வீட்டிற்குள் இருக்கின்றோம். அங்கு இருக்கின்ற சிமெண்ட்டும் இதேபோல் உறுதியாகத்தானே இருக்கிறது.

இதேமாதிரி இருக்கக்கூடிய இன்னொரு உலகத்தில் விழிக்கும்போது நழுவி விழுகிறீர்கள்.

ஒரு பயங்கரக் கனவு கண்டுகொண்டிருக்கும் பொழுது, தீடீரென்று எந்திருச்சுப் பார்த்தால் திடீரென்று கனவில் வந்த உலகம் காணாமல் போய்விடுகின்றது. மீண்டும் இதே உலகில் நழுவி விழுகிறீர்கள்.

நிஜ உலகத்திலிருந்து கனவுஉலகத்திற்குள் நழுவி விழுமுடிகிறது. அதேபோல் கனவுஉலகத்திலிருந்து எம்பிகுதித்து நிஜஉலகத்திற்கு வர முடிகின்றது. நம்மால் இன்னொரு உலகத்திற்கு நழுவமுடியும். நமக்குள்ள இன்னும் பல உலகங்கள் உண்டு” என ‘வேத இரகசியங்கள்’ பற்றி பேசும் போது சொன்னார்.

இதேபோல் முன்னூறு வருடங்களுக்கு முன்னால் ஐயா வாழ்ந்த பிறவிக்கு தான் நழுவி விழுந்ததாக ஐயா சொல்கிறார்.

எப்படி நிஜஉலகத்திலிருந்து நழுவி கனவு உலகத்தில் விழுகிறோமோ, அதேபோல் இந்த பிறவியிலிருந்து ஐயா நழுவி முன்னூறு வருஷத்திற்கு முன்னால் இருந்த பிறவில் விழுந்தாராம்.

அப்படி விழுந்த உடனேயே மொத்த இடமுமே உயிரோட்டமாக மாறிவிட்டதாம்.

புதிதாய் கட்டப்பட்ட கோயில் ஒன்று ஐயாவின் கண்முன்னே தெரிகிறது.

அந்த கோயிலில் நாற்பதைம்பது வயதை மதிக்கத்தக்க ஒரு வயதானவர் உட்கார்ந்திருந்தார். சாஸ்த்திரங்கள்பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

அவரை பார்த்த உடனேயே, “அடே,நம்ம சாமி!” என ஐயாவின் உள்ளுணர்வு சொல்கிறது. ஆனால் ஐயாவின் கண்ணில் தெரியும் குருவின் உருவம் வேறு. ஆனாலும் உணர்வு சொல்கிறது, “இவர் நம்ம சாமி” “நம்ம சாமிதான்” என்று!

அதேபோல் ஐயாவிற்கும் வேறு ஒரு உடலாக அந்த உடல் இருக்கிறது.

ஆனால் “நான் தான் இது” என்று உணர்வு மட்டுமே தெளிவாக இருக்கின்றது.

இப்படி பார்த்துக்கொண்டிருக்கும் போது, யாரோ சாமிக்கு உணவு பரிமாறவருகிறார்கள்.

உணவு பரிமாறுபவரை பார்த்ததும், “ஏய்! அங்க பாரு! அது அம்மா!” என்று உணர்வு சொல்கின்றது. ஆனால் உடல் உருவம் சுத்தமாக வேறாக இருக்கிறது. இப்போதிருக்கும் உருவமல்ல அது.

மொத்த காட்சிகளையும் ஐயா பார்த்து இரசித்து கொண்டிருக்கிறார். பரமஹம்ஸரை சுற்றி பதினெட்டுபேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு சாஸ்த்திரங்களும், வேதங்களும் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வேறு வேறு பகுதிகளிலும், காட்டுப்பகுதிகளிலும் சீடர்கள் சேர்ந்து கூட்டம் கூட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அங்கெல்லாம் பரமஹம்ஸர் சென்று, அவர்களுக்கு ஆன்மீகமும் தியானமும் கற்றுத்தந்து, அவர்களையும் தவத்தில் ஈடுபடச் செய்து கொண்டிருப்பதிலேயே மொத்த வாழ்க்கையையும் கழித்துக் கொண்டிருந்தார்.

வேண்டுதல் வேண்டுபவருக்கு பாதகத்தை தரக்கூடியதாக இருந்தால் அதற்கு தேவையான நல்லது நிகழ்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் இந்த ஆனந்த சக்தி பார்த்துக்கொள்ளும்.

இப்படி சுயமாகச் செயல்படக்கூடிய சக்தி கேந்திரத்தை உருவாக்கத்தான் சாமி அப்போது பெரும் முயற்சி எடுத்துக் கொண்டோம்.

அவ்வாறு சாமி முயற்சி செய்துகொண்டிருந்த போது தான், இப்பொழுது மேட்டூர் டேம் எங்கு இருக்கின்றதோ? அங்குதான் அந்த கோயிலை சாமி கட்டியிருந்தோம்.

அங்குதான் அந்த லிங்கத்தை வைத்து சக்தியூட்டும் முயற்சியை சாமி செய்தோம்.

அந்த முயற்சியில் பல விதமான முறையில் தேர்வு செய்து, பதினெட்டு பேரை சாமி தேர்ந்தெடுத்திருந்தோம். அப்படி தேர்ந்தெடுத்த பதினெட்டு பேரை வைத்து ஒரு சக்தி வளையத்தை உருவாக்கினோம்.

ஒரு இடி பூமியில் இறங்கினால், அந்த இடியைத் தாங்குவதற்கு ஒரு இடிதாங்கி வேண்டும்.

அதேபோன்று ஒரு மிகப்பெரிய சக்திதூணை, (Energyshaft) அந்த சக்தி தூணை பிரபஞ்சத்திலிருந்து இழுத்து பூமிக்கு கொண்டு வரும் முறைதான் நிலத்தத்துவத்தை சக்தியூட்டுகிற சூட்சமமான சாதனை.

இந்த நேரத்தில் சாமி அந்த சக்திதூணை இழுத்துக் கொண்டு வரும்போது அதை தாங்ககூடிய இடி தாங்கியாக, இந்த பதினெட்டு சீடர்களும் இருப்பார்கள். என்று சாமி இந்த பதினெட்டு பேரையும் தத்தெடுத்து, அவர்களுக்கு பலவிதமான யோகம், தியானம் போன்ற பயிற்சிகள் எல்லாம் கொடுத்து, பல தவங்கள் செய்ய வைத்தோம்.

மேலும் அந்த லிங்கத்தில் சக்திதூண் பட்டு சிதறும் பொழுது, அதை அப்படியே வாங்கி, அந்த சக்தியை திரும்ப ஒன்றாக சுருக்கி, அந்த சக்தியால் வெயில் பாதிப்பு எதுவும் வராமல், ஒரு சக்தி சுருட்டலாக மாறுவதற்கு, சாமி உருவாக்கிய Inner circle தான் அந்த பதினெட்டு பேரும்.

அந்த குறிப்பிட்ட நாளும் வந்தது.

எல்லா திட்டமும் மிகவும் கனகச்சிதமாகச் செய்யப்பட்டிருந்தது.

மாசு, மறு இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லாத்திட்டமும் மிகச் சரியாகச் செய்யப்பட்டு இருந்தது.

பிரபஞ்ச சக்தியிடமிருந்து சக்தி தண்டை(Shaft), நேராக எடுத்து இழுத்து நேராக லிங்கத்தில் விட்டோம்.

விட்ட அடுத்த நொடி அந்த சக்தி தண்டு, பட்டு அப்படியே தெளித்தது.

தெளிக்கும் பொழுது சக்தி வளையமாக இருந்த பதினெட்டு பேரும் அதை வாங்கியதும், அதற்கு ஒரு Process நடந்தது, அந்தலிங்கம் சக்தியூட்டப்பட்டிருக்க வேண்டும்.

அந்த பெரிய சம்பவம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, அந்த பதினெட்டு பேர்களில் இருந்த இரண்டு பெண்கள் பயந்துவிட்டார்கள்.

பயத்தின் காரணமாக அவர்களின் உடலில் மாதவிடாய் நிகழ்ந்துவிட்டது.

இந்த பயத்தின் காரணமாக அந்த இடத்தில் பெரிய சக்திக் குழி ஒன்று உருவானது.

அவர்களுடைய சுவாதிஷ்டான சக்கரம் பயத்தால் உருக்குலைந்துபோனது.

விளைவு, உருவான அவ்வளவு சக்தி பெருக்கில் ஓட்டை விழுந்துவிட்டது. எதிர்பாராதது நிகழ்ந்துவிட்டது.

அங்கு உருவாகியிருந்த சக்திபெருக்கு கட்டுக்கடங்காதது. பிரபஞ்சத்தையே ஒரு வெடிப்பில் ஒரு க்ஷணத்தில் உருவாக்கிய மகா சக்தி அது. இதுவரையிலும் ஐயாவிற்கு புரிந்துகொண்டிருந்தபோது... நழுவிப்போன பழைய ஜென்ம உலகத்திலிருந்து டக்கென்று நிஜ உலகத்துள் குதித்தார். அப்போது ஐயாவின் ஆக்ஞா சக்ரத்தில் பரமஹம்ஸர் தன்னுடைய கை கட்டை விரலை வைத்து எடுத்தார். இது போதும், "இப்போது ஞாபகம் வருகிறதா?" என்று கேட்டார்.

ஐயா, "இப்ப ஞாபகம் வருகிறது சாமி" என பரமஹம்ஸர் முதலில் கேட்ட கேள்விக்கு ஐயா இப்போது பதிலளித்தார்.

இதுபற்றி பரமஹம்ஸரிடம் கேட்டோம், "என்னசாமி இது? எப்படி சாமி? என்ன நடந்தது?" என்று கேட்டோம்.

பரமஹம்ஸர், "அதுவாப்பா? அது ஒரு பெரிய சம்பவமப்பா" என்று சொன்னார்.

"சாமி! சாமி! அது என்னன்னு சொல்லுங்க சாமி...சொல்லுங்க சாமி!" என்று நாங்கள் வெகு ஆர்வத்தோடு கேட்டோம்.

எங்களின் ஆர்வத்தை பார்த்து ஆனந்தப்பட்ட பரமஹம்ஸர்... 'முந்நூறு வருடங்களுக்கு முன்னால் மனிதர்களுக்கு உதவி செய்ய வேண்டும், எனக்கு நடந்த ஆனந்த சக்தியை எல்லா தலைமுறையினருக்கும் கிடைக்க செய்ய வேண்டும்' என்று ஒரு பெரிய அறிவியல் ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டிருந்ததை பற்றி சொல்ல ஆரம்பித்தார்...

"இந்த பஞ்சபூதத்தத்துவத்தில் இருக்கும் நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்" இதில் ஒரு சில பூதங்களை சக்தியூட்டுவதில் ரிஷிகள் வெற்றி கண்டிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் கங்கை, கங்கை என்ற நீர் தத்துவத்தை சக்தியூட்டுவதில் ஞானிகள் வெற்றிகண்டுள்ளார்கள்.

கங்கையின் தண்ணீரை எடுத்துக் கொண்டீர்களானால், கங்கை நீரை நீங்கள் சூடு செய்யத்தேவையில்லை, வடிகட்ட தேவையில்லை. மேலும் மூன்று மாதாமானாலும் கங்கைநீர் கெடாமல் இருக்கும். குடித்துப்பார்த்தீர்களேயானால் எந்த சுவையும் மாறாமல் அப்படியே அருமையாக இருக்கும்.

கங்கை நீரில் அழுக்கு சேர்ந்திருந்தால் கூட கங்கை நீரின் புனித தன்மையும், அது கெட்டுப்போகாமல் இருக்கும் தன்மையும்ன்றும் மாறாமல் இருக்கிறது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

எவ்வாறு இந்த கங்கை நீருக்கு மட்டும் இவ்வளவு சக்தி கிடைத்தது என்றால், 'அந்த காலக்கட்டத்தில் ரிஷிகள் கூட்டமாக சேர்ந்து ஒரு பெரிய சோதனையை நிகழ்த்தினார்கள்.

அதாவது கங்கை நதியின் முக்கியமான மூன்று இடங்களில்... கங்கை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் வரையில் உள்ள முக்கியமான மூன்று இடங்களில் அந்த ஞானிகளின் கூட்டம் ஒன்றாக அமர்ந்து அந்த மொத்த ஆற்றையும் சக்தியூட்டினார்கள்.

அப்படி சக்தியூட்டியதனால் தான் மொத்த ஆறும் சக்தியோடும், கொடாமலும் இருக்கக்கூடிய அளவிற்குப் புனிதமாகவும் இருக்கிறது.

அதேபோன்று, நில தத்துவத்தை எப்படி சக்தியூட்டுவது என்று தான் சாமி அப்போது முயற்சி செய்தோம்.

பெரிய லிங்கம் ஒன்றைப்படைத்து, என்னுடைய உடலில் என்ன ஆனந்த சக்தி உலாவந்துக்கொண்டிருக்கின்றதோ! அந்த ஆனந்த சக்தியை எடுத்து லிங்கத்தில் வைப்பதே அந்த முயற்சி.

எப்படி ஒரு சாதாரண தேன் இரும்பிற்குள் மின்சாரத்தை பாய்ச்சி அதை காந்தமாக மாற்றிட முடியுமோ; அதைவிட பல ஆயிரம் மடங்கு ஆனந்தத்தை தரக்கூடிய தியான சக்தியை லிங்கத்தில் பாய்ச்சி வைக்க முடியும்.

அப்படியொரு லிங்கத்தை சக்தியூட்டிவிட்டால் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு இந்த சுபிவிருத்தி சக்தியை அந்த மகா லிங்கமானது தொடர்ந்து வெளியேற்றிக் கொண்டே இருக்கும்.

யாரெல்லாம் லிங்கத்திற்கு அருகில் வந்து பக்திஉணர்வோடு தங்கள் வேண்டுதலை சமர்ப்பிக்கிறார்களோ அவர்களின் வேண்டுதல் நிறைவேறி, அவர்களுடைய வாழ்க்கை சுபிட்சமாகும், ஆனந்தமாகும். அந்த சக்தியை சரியானபடி பயன்படுத்தாவிட்டால் அது மாபெரும் பிரளயத்தையே ஏற்படுத்திவிடும். அவ்வளவு வல்லமை நிறைந்த அந்த சக்தியைத் தடுத்தாக வேண்டும்.

எனவே, சாமி அந்த சக்தி பெருக்கை அந்த கோயிலுக்குள் கலைத்துவிட்டோம்.

"கலைத்து விட்ட அந்த குறுகிய க்ஷணத்தில் இருந்த இடம் மொத்தமும் வெடித்து சிதறியது. இதுவரைதான் சாமியோட நினைவிலிருந்து Scan பண்ணி சொல்ல முடிகிறது"

"அதற்குமேல் என்ன ஆயிற்று சாமி"

"இதுவரை தான் தெரிகிறது. இதற்கு அடுத்த நொடி எப்படி இருந்தது என்பதெல்லாம் நினைவில் இல்லை"

எங்கெங்கோ இருக்கிற நினைவுகளை எடுத்து சாமி ஒன்றாக தொகுத்து சாமியோட இந்த Biographyயும் இதுக்குமுன் பிறவிகளில் நிகழ்ந்த விஷயங்களை எல்லாம் சாமி சொல்கிறோம்.

முன்னூறு வருஷத்திற்கு முன் நிகழ்ந்ததை பார்க்கும் பொழுது இந்த ஒருசில நினைவுப்பதிவுகள் மட்டுமே சிக்கலில்லாமல் இருக்கின்றது. பெரிய பிரச்சனை என்னவென்றால் இதுவரை சாமியெடுத்த எல்லா பிறவிகளின் நினைவுகளும் ஒன்றுக்குள் ஒன்று சிக்கி கிடக்கிறது.

அந்த சிக்கலை பிரித்து தேவையானவற்றை பார்ப்பது என்பது அவ்வளவு சுலபமான செயல் அல்ல" என சொல்லி முடித்தார்.

இவ்வளவும் பரமஹம்ஸர் சொல்லிமுடித்த அன்றிலிருந்து சுற்றியிருக்கும் எங்களுக்குள் 'அந்த 18 பேரில் இரண்டு பேர் ஐயாவும், அம்மாவும்.

மீதம் இருக்கும் பதினாறு பேர் யார்? "நீயா? நானா! நீயா? நானா!" என்ற போட்டி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

"அந்த நீயா!!" என்கிற கேள்விக்கு பதில் இதை படித்துக் கொண்டிருக்கும் நீங்களாக கூட இருக்கலாம்.

நீங்களாக கூட இருக்கலாம்

A young man dressed in traditional saffron attire standing outdoors

இதைப்பற்றி சொல்லும் போது பரமஹம்ஸர் பக்கத்தில் இருந்த ஒரு கல்லை காண்பித்து, “இந்த கல் என்ன கல் தெரியுமா?” என்று கேட்டார். கேட்ட பொழுது எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. 'தெரியலயே சாமி' என்று நாங்கள் சொன்னோம்.

“ஐயா எதுவும் சொல்ல இல்லையோ?” என்று கேட்டார்.

“இல்லை சாமி! ஐயாவிடம் இதைப்பற்றி பேசிக்கொள்ளவில்லையே” என்று சொன்னோம்.

அப்பொழுது பரமஹம்ஸர் அந்த கல்லைப் பார்த்து தொட்டு தடவிக் கொண்டு, சிரித்துக் கொண்டே சொன்னார், “அப்போ வெடித்தது என்று சொன்னேனில்ல. அப்படி வெடித்த பொழுது சிதறுன ஒரு துண்டு கல், தான் என்று அந்தக் கல்லை காண்பித்தார்.”

உடனே ஐயாவிடம் வெடித்த கோயிலின் கற்துண்டைப் பற்றி கேட்ட போது...

“ஆமாம்பா... ஆமாம்பா...

பரமஹம்ஸர் அந்தக் கல்லை ஒரு குழந்தையைத் தொடுவது போல் தான் அன்று தொட்டார்.

பரமஹம்ஸர் தொட்ட நளினத்தை பார்ப்பவர்களுக்கு 'இது கல்லா?' இல்லை 'இது ஒரு தனி உயிரா? என எண்ணத் தோன்றும்” என அந்த புனித கல்லைப் பற்றி ஐயா சொன்னார்கள்.

6.8 பழனி விஜயம்

பக்தர்களோடு பரமஹம்ஸர் பழனி மலைக்குச் சென்றிருந்தார். ஒரு முக்கியமான உத்சவம். அதனால் மக்கள் கூட்டம் அங்கு அலைமோதியது. மலையேறும் பகுதியில் ஒரு இடத்தில் படிப்படியாக மேலே ஏறாமல் பக்கவாட்டு வழியாக செல்ல வழி இருந்தது.

அங்கு காவலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நபர் சற்றும் இரக்கமில்லாத கரடுமுரடான ஆசாமியாக இருந்தார்.

மிகவும் வயதான ஒரு தம்பதியினர் தங்களின் வயோதிகத்தால் மேலே ஏற முடியவில்லை என்பதைச் சொல்லி, “தம்பி எங்களை இந்த வழியாகப் போக அனுமதி” என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

“எல்லாருக்கும் ஒரே சட்டம் தான். முடியாது என்றால் முடியாது தான். இடத்தை காலி பண்ணலாம்” என முகத்திலடித்தார் போல் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் அவரின் பின்னால் இரண்டு இளைஞர்கள் அந்த குறுக்கு வழியில் புகுந்து சென்றார்கள்.

எல்லாவற்றையும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டே வந்த பரமஹம்ஸர், “இந்த வயோதிகர்களை அனுமதிக்க மறுக்கிறீர்கள். அதே சமயம் உங்களின் பின்னால் மக்கள் செல்கிறார்களே” என அந்த இரண்டு இளைஞர்களை காட்டி “இவர்களைப் பார்க்கவே பாவமாயிருக்கிறது. இவர்களும் இந்த வழியை பயன்படுத்திவிட்டுப் போகட்டுமே!” எனக் கேட்டுக்கொண்டார். வரட்டுப் பிடிவாதமாய் பேசிய காவல்காரர், "அதெல்லாம் முடியாது. நான் சொன்னால் சொன்னது தான். இவர்களை அனுமதிக்க மாட்டேன்'' என வெகு கறாராக பேசிக்கொண்டிருக்கையில்...

காவல்காரரின் கண்களின் முன் பரமஹம்ஸர் ஒருமுறை வலது கையால் சுடக்கு போட்டார். அடுத்த நொடி நிகழ்ந்தது யாரும் எதிர்பாராதது.!

கைகளை உயர்த்தி, தலையசைத்து பேசிக் கொண்டிருந்த காவல்காரரின் கைகள் அந்தரத்திலேயே நின்றது. மின்சாரம் கிடைக்காததால் அப்படியே நின்றுவிட்ட ரோபோட் போல் அந்த காவல்காரர் சிலைபோல் நின்றார்.

பரமஹம்ஸர் அந்த வயோதிகர்களிடம், "நீங்கள் இருவரும் இந்த வழியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று சொல்ல அவர்கள் இருவரும் அங்கே நிகழ்ந்த அதிசயத்தால் பிரமித்துப்போனார்கள். பிரமித்த விழிகளாலேயே நன்றிப் பெருக்கோடு கண்ணீர் வடித்து கைகூப்பி சென்றார்கள்.

அவர்கள் இருவரும் சென்ற பின், மீண்டும் பரமஹம்ஸர் காவல்காரரின் நெற்றிக்கண்ணில் சுடக்கிட, மின்சாரம் வந்தது போல் இயங்க ஆரம்பித்து, "போங்க போங்க இங்கேயெல்லாம் நிற்கக் கூடாது" என்று சொன்னார்.

இது பற்றி பின்னொரு நாள் பரமஹம்ஸரிடம் கேட்டோம் "சாமி, ஒரே சுடக்கில் ஒருவரின் சர்வநாடி நரம்புகளையும் கட்டிப்போடும் அளவிற்கு அதிசய சக்திகளை நீங்கள் பெற்றிருந்தும், ஒன்றும் தெரியாத சிறுபிள்ளையின் குதுகலமான முகத்தை மட்டுமே எப்போதும் எல்லோரிடமும் காட்டுகிறீர்கள்.

நீங்கள் உங்களின் வல்லமைகளை வெளிப்படுத்தாதிருப்பது ஏன்?"

அதற்கு பரமஹம்ஸர், "ஒருவர் சித்து சக்திகளை பெறுவது பெரிதல்ல. அவற்றை கையாளும் புத்தியைப் பெறுவதே பெரிது.

பொதுமக்களின் முன் சித்து காரியங்களை செய்வது புத்திசாலித்தனமான செயல் அல்ல.

காரணம், சித்து வேலைகள் போன்ற செயல்களினால் மக்கள் நம்மை கடவுள் போல பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். இதன் விளைவாக சாதாரண மனிதனுக்குள் கர்வம் தலைதூக்க ஆரம்பித்துவிடும். ஞானமடையாத ஒருவர் தானும் சித்து வேலைகள் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட ஆரம்பித்தால் அவர் அபாயத்தைத் தேடுகிறார் என்று அர்த்தம். புத்தியைப் பெறும் முன் சக்தியைப் பெற ஆசைப்படக்கூடாது.

அதனால் தான் கல்லடியை விட கண்ணடி பொல்லாதது என்பேன். தவறான ஆசைகள் மக்களுக்கு உருவாகி விடக் கூடாது என்பதற்காகத் தான் பொதுமக்கள் முன் எதையும் செய்வதே இல்லை.

சக்திகளை எங்கு எப்போது பயன்படுத்த வேண்டும் என்ற புத்தியும், சித்துகளின் விளைவாக உருவாகும் அகங்காரத்தை வளரவிடாதாபடி பார்த்துக்கொள்ளும் பக்குவமும் வேண்டும்.

எனவே என்னைப் பொறுத்த அளவிற்கு மக்களுக்கு முதலில் கற்றுத்தரப்பட வேண்டியது புத்தியையும் எளிமையையும் பெறுவது எப்படி என்பது தான். மாயாஜாலங்களும், ஆச்சரிய அதிசய செயல்களும் அல்ல"

ஒரு சில வசிய சக்திகளை வைத்துக் கொண்டு உலகம் முழுக்க அதிசயமான மனிதர் என பேர் வாங்குபவர்களும் உண்டு. எல்லாம் வல்ல சக்தியைப் பெற்றும் பாலகிருஷ்ணன் போல குதுகலமாக எளிமையாக இருப்பவர்களும் உண்டு.

யாயோதைக்கு மட்டும் வாய்க்குள் பிரபஞ்சத்தை காட்டிய பாலகிருஷ்ணனும், அர்ஜுனனுக்கு மட்டும் பகவான் கிருஷ்ணனாக தரிசனம் தந்த ஸ்ரீகிருஷ்ணரும் 'எந்த சக்தியை எப்போது பயன்படுத்த வேண்டும்' எனும் பக்குவ முதிர்ச்சியின் வாழ்வியல் உதாரணங்கள். அதனால் தான் கிருஷ்ணர் ஒரு மனிதனைப்போல வாழ்ந்திருந்தாலும் அவரைக் கடவுள் என அழைக்கிறோம்.

Photograph of Paramahamsa

" " ம க் க ளு க் கு மு த லி ல்
கற்றுத்தரப்பட வேண்டியது புத்தியையும்
எளிமையையும் பெறுவது எப்படி
என்பது தான். மாயாஜாலங்களும்,
ஆச்சரிய அதிசய செயல்களும் அல்ல"

  • பரமஹம்ஸர்

பக்குவ முதிர்ச்சி இல்லாததால் தான் எளிமைத்துவத்தை இழந்து அகங்காரம் பிடித்துத் திரியும் மந்திரவாதிகளை மக்கள் வழிபடுவதில்லை. ஏன் மதிப்பது கூட இல்லை.

எல்லாம் வல்ல சக்திகளைப் பெற்றிருந்தும், நமக்காய், நாம் வழிதவறிவிடக்கூடாதே! என்பதற்காக தன்னைச் சுருக்கிக் கொண்டு மனிதத் தன்மையின் உதாரணமாக வாழும் பரமஹம்ஸர் வாழும் காலத்தில் நாம் வாழ்கின்றோம் என்பதே நமக்கெல்லாம் பெருமைதான்.

அதையும் தாண்டி, பரமஹம்ஸரைப் போல் மனிதத் தன்மையை நம்முள் மலர ஆரம்பித்து விட்டால் அட்டமா சித்திகளையும் தாண்டிய ஞானம் நமக்குச் சொந்தமாகிவிடும்.

மனித தன்மைகளை மலர்த்திக் கொள்ள நீங்கள் தயாரா?

Paramahamsa

6.9 சண்டி ஹோமம்

சங்ககிரி அங்காளம்மன் கோவிலில் தியானபீடத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

பார்ப்பவரையெல்லாம் பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் மஹா சண்டி ஹோமம் ஒன்றை பரமஹம்ஸரே துவக்கம் முதல் கடைசிவரை இருந்து ஆகம விதிப்படி நடத்தி முடித்தார்.

சண்டி ஹோமம் நடைபெற்ற இடத்தில் நிகழ்ந்த ஒரு அருமையான சம்பவம் ஒன்றை பிடதி தியான சிகிச்சை தீட்சையின் போது பரமஹம்ஸரே சொன்னார்கள்.

"இன்று காலையில் தான் சாமி ஒரு புது சென் புத்தகம் ஒன்றைப் படித்தோம். அதில் படித்த ஒரு நல்ல கதை சாமியோட வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை ஞாபகப்படுத்தியது.

ஒரு முறை கிராமப்புறத்து பக்தர்கள் மட்டும் சாமியைச் சுற்றி உட்கார்ந்தார்கள். தியானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்லும் போது எளிய மனது படைத்த அவர்கள் முழு உற்சாகத்தோடு கேட்டார்கள்.

அப்போது அங்கே வந்த ஒரு குதர்க்கவாதியால் இந்தக் காட்சியை பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.

குதர்க்கமாகவே எல்லாவற்றையும் பார்த்துப் பேசி பழகிய அவர் "இதுபோன்ற பாமரர்களிடம் ஆன்மீகம் பேசுவது பெரிய சாதகமல்ல. நீங்கள் சொல்வதற்கெல்லாம் இவர்கள் தலையாட்டி உங்கள் பேச்சுபடி நடக்கவைக்கலாம். ஆனால் என்னைப் போன்ற படித்தவர்களை உங்கள் விருப்பபடியெல்லாம் செய்ய வைக்க முடியாது". என என்னிடம் குதர்க்கத்தின் உச்சியிலிருந்து பேசினார்.

அவரை பார்த்து சாமி சொன்னோம், "ஐயா நீங்கள் பேசுவது தெளிவாக காதில் விழவில்லை. கொஞ்ச முன்னால் வரமுடியுமா?"

அவரும் முன்னால் வந்தார்.

அன்று நிகழ்ந்த சண்டி ஹோமத்தின் ஒரு பகுதி

மீண்டும் அவரைப் பார்த்து, “ஐயா இங்கே நிற்க கூட இடமில்லை, இப்படி இடப்புறமாக வாங்களேன், நிறைய இடமிருக்கிறது” என்றோம்.

உடனே அவர் இடப்புறமாக நகர்ந்து வந்தார்.

அதற்குள் அவர் உட்காருவதற்கென ஒரு நாற்காலியை வலப்புறத்தில் கொண்டு வந்து விட்டார்கள்.

“ஐயா நாற்காலியே வந்து விட்டது. நீங்க மீண்டும் வலப்புறமே வந்து உட்காருங்க” என்று சொன்னதும், உடனே வலப்புறம் வந்தார்.

வலப்புறம் வந்தவரைப் பார்த்து சொன்னோம், என் விருப்பப்படி உங்களை எதுவும் செய்ய வைக்க முடியாது என்று சொன்னீர்கள் அதற்குள் மூன்று முறை கிளிப்பிள்ளை போல் இங்குமங்கும் நகர்ந்தீர்கள். இதுபோதும்.

நிம்மதியாக உட்கார்ந்து தொடர்ந்து கேளுங்கள் என சாமி சொல்லிய வார்த்தைகளை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

அப்புறம் பலமணி நேரங்கள் தொடர்ந்து அந்த பேச்சில் அவர் மிக உற்சாகத்தோடு கலந்து கொண்டார். முடிவில் அவர் முற்றிலும் மாறிப்போயிருந்தார்” என அங்கு நிகழ்ந்த சுவையான சம்பவம் பற்றி பரமஹம்ஸர் குறிப்பிட்டார்.

பூஜைகள் ஹோமங்கள் போன்றவை நடத்துவதிலும், பாாமரர்களோடு பாமரர் போல கள்ளமில்லாமல் இருப்பதிலும், கள்ளத்தோடு வருபவருக்கு தக்க பதிலடி கொடுப்பதிலும் பரமஹம்ஸருக்கு இணை பரமஹம்ஸரே!

சண்டி ஹோமத்தின் மற்றும் ஒரு பகுதி

வாழ்வில் பல்வேறு அம்சங்களில் நாம் வாழ வேண்டும் என்பதைத்தான் ஆங்கிலத்தில் Line all என்று பரமஹம்ஸர் குறிப்பிடுவார்.

வாழ்க்கை பல சுவாரஸ்யங்கள் நிறைந்தது. ஓரிரு துறைகளில் சாதித்ததாலும், ஓரிரு நண்பர்களைத் தேடிக்கொண்டதாலும் நாம் நம்மை சுருக்கிக் கொள்ளக் கூடாது.

மொத்த உலகமே நமக்குச் சொந்தம்தான், இந்த வாழ்வே நமக்கொரு விளையாட்டு தான். அனுபவியுங்கள்... எல்லாவற்றையும்! பரமஹம்ஸரைப் போல் மாறிப் போவீர்கள்.

6.10 'பசிக்கிறது!' என சொல்லத் தெரியாது

காவிரிக் கரையோரத்தில் வசித்த காலத்தில் பரமஹம்சரின் உடல் பட்ட பாடுகளைப் பற்றி சேகரித்த செய்திகளை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

இந்த பிரச்சனை இன்றளவும் நீடிக்கும் பிரச்சனை. அடுத்து எங்காவது தியான சொற்பொழிவாற்ற செல்ல தயாராகையில் "ஏம்மா காலையில் சாப்பிட்டேனா" என பலநேரம் கேட்டு பரமஹம்ஸர் உறுதி செய்துகொள்வார்.

சாப்பிட்டதும், சாப்பிடாததும் கூட அவருக்கு தெரியாது. இரண்டும் அவரது உடலின் ஓர் மூலையில் நிகழும் ஒரு சிறு சம்பவங்கள் மட்டுமே. அவருடைய பரந்து விரிந்த உணர்வுக்கு முன் இந்த உடலே ஒரு சிறு துரும்பு தான்.

ஆனாலும் வெளியே செல்ல வேண்டும், உடல் இயங்க வேண்டும் என்ற கட்டாயம் வரும்போது "உடலுக்கு உணவளிக்கப்பட்டதா" என அவரே பார்த்துக் கொள்வார்.

மீதமுள்ள நேரங்களில் பரமஹம்சருக்கு பணிவிடை செய்பவர்கள் வேளா வேளைக்கு சரியாகப் பார்த்துக் கொள்வார்கள்.

பரமஹம்சருக்கு பக்தர்களோடு நேரம் செலவிடுவதிலேயேயும், தியானத்தை உலகமக்களனைவருக்கும் சென்று சேர்ப்பதிலேயுமே நேரம் சரியாக இருக்கும்.

இப்படித்தான் ஒருமுறை காவிரிக்கரையோர குடிசையில் இருந்தபோது ஒருநாள் நள்ளிரவு தாண்டி பரமஹம்ஸர் பேசி சிரித்துக் கொண்டேயிருந்தார்.

இடையிடையே பலமுறை அவரிடம் உணவருந்துவது பற்றி நினைவுபடுத்தியும் "வேண்டாம்", "பசியில்லை" எனச் சொல்லி மறுத்துவிட்டாராம்.

பரமஹம்ஸர்

அப்புறமாக ஐயாவும், அம்மாவும் சாப்பிட ஆரம்பித்தபோது விளையாட்டாய் ஒரேயொரு தோசை சாப்பிட ஆரம்பித்தவர், எப்போதும் சாப்பிடுவதை போல மூன்று மடங்கு சாப்பிட்டாராம்.

பரமஹம்ஸரின் இந்த செயலைப் பார்த்து மலைத்துப் போன இருவரும் கேட்டனர், "சாமி, இவ்வளவு பசி இருக்கும் போது, பசியே இல்லை என்று சொல்லி ஏன் ஏமாற்றினீர்கள்?"

"ஏமாத்தல்லாம் இல்லை. நிஜமாக இவ்வளவு பசி இருந்த விஷயம் எனக்கே தெரியவில்லை தான்" என மிக மிக பவ்யமாக சொன்னாராம்.

"உணர்வுக்கும் உற்சாகத்திற்கும் நேரடி சம்பந்தமில்லை. சக்தியும், புத்தியும் அதிகமாகிவிட்டால் எதுவுமில்லாமலே நம்மால் ஆனந்தக் கூத்தாட முடியும்" எனும் பரமஹம்ஸரின் ஞானகருத்தை நம் வாழ்வில் செயல்படுத்த உறுதி தரும் ஒரு முக்கியமான சம்பவம் இது.

6.11 வேர்க்கும் போது போர்த்திக்கொள்வது

உடலோடு ஒன்ற முடியாததால், உடலின் தட்பவெப்பம் பற்றிக் கூற பரமஹம்ஸரால் கணக்கீடு செய்ய முடியாது. அம்மாவும், ஐயாவும் பரமஹம்ஸரோடு தங்க ஆரம்பித்தபின் தாங்கள் கண்டவை பற்றிப் பேசும் போது சொன்னார்கள்...

“காவிரிக் கரையோரம் பரமஹம்ஸர் தங்கியிருந்த குடிசையில் பரமஹம்ஸரின் உடலை கவனித்துக் கொள்ள ஆளில்லை.

தன்னந்தனியே பரமஹம்ஸர் வாழ்ந்தபோது பல விசித்திரமான சம்பவங்கள் நடந்தேறியிருக்கிறது.

பரமஹம்ஸர் உறங்கச் செல்லும் முன் ஏதோ கொஞ்சம் காற்று வீசியிருக்கும். அதற்காக கம்பளியை மேலே போர்த்திக் கொண்டு படுத்தவா கொஞ்ச நேரத்தில் உடலைவிட்டு தளர்ந்திருப்பார்.

அப்புறம் அந்த உடல் மீது இருக்கும் போர்வையை புழுக்கம் உருவானதும் அகற்றி வைக்க ஆள் கூட கிடையாது. அவராலும் அது முடியாது.

அதன் பின் நடப்பவைதான் நம் இதயத்தை உருகச்செய் பவை. புழுக்கம் அதிகமாக அதிகமாக உடலுக்குள் வியர்த்துக் கொட்ட ஆரம்பிக்கும்.

இது தொடர்ந்து நிகழ விடிவதற்குள் அவர் போர்த்தியிருந்த போர்வை தொப்பரையாக நனைந்திருக்கும். இரவு முழுவதும் ஈரப்பதத்திலேயே இருந்ததால் உடலுக்குள் சளி கோர்த்துக் கொள்ளும்.

ஒருநாள் இப்படி நிகழ்ந்ததை கண்டுபிடித்த பின் அடிக்கடி இரவு வேளைகளில் விழித்துக் கொண்டு பரமஹம்ஸரின் உடல் நிலையை கவனித்துக் கொள்வோம். அப்புறம் பரமஹம்ஸர் தியானசிகிச்சை செய்து தான் மீண்டும் ஆரோக்கியத்தை எடுத்து வருவார்.”

ஞானமடைந்த பின் கூட தொடர்ந்து 100% பாதுகாப்பின்மையிலேயே தான் பரமஹம்ஸர் வாழ்ந்திருக்கிறார். அவ்வளவு அபாயகரமான சூழல்களையும் பத்திரமாக பராசக்தி தாண்ட வைத்திருக்கின்றார்.

“என்னவொரு அற்புதமான வாழ்வு இது!” என நம்மை வியக்க வைப்பதோடல்லாமல், எல்லாம் வல்ல இறைசக்தியிடம் நம்பி ஒப்படைத்தால், நம்மை பார்த்துக் கொள்ளும் என்ற உறுதியை நமக்களிக்கும் இச்சம்பவம் சாதாரண சம்பவமல்ல!?! ஞான சரித்திரம்.

ஞானமடைந்த பின் பரமஹம்ஸர் பத்திரமாக பராசக்தியின் அரவணைப்பில்

ஞானமடைந்த பின்
பரமஹம்ஸர்
பத்திரமாக
பராசக்தியின் அரவணைப்பில்

6.12 மீண்டும் குழந்தையாக

பரமஹம்ஸரிடம் ஏதாவதுஒரு பொம்மை கிடைத்துவிட்டால் மிகவும் குஷியாகி விடுவார்.

பொம்மையைப் பார்த்ததும் ஒரு சிறு குழந்தை எப்படி குதூகலிக்குமோ அதேபோல் பரமஹம்ஸர் குதூகலிப்பாராம்.

"ஆறடியில் ஆஜானுபாகுவாக இருக்கும் சாமி ஆறு வயது குழந்தையைப் போல் கண்களை சிமிட்டுவதையும், துள்ளிக்குதித்து ஆர்ப்பரிப்பதையும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

அதுவொன்றே நம்மை பரவசத்தில் ஆழ்த்திவிடும்" என அம்மா ஆர்வம் பொங்கச் சொல்வார்கள்.

கிராமத்தில் ஓடியாடும் சிறுவர்கள் தங்களை ஏதாவதுஒரு கார் கடந்து சென்றால் "ஏ! கார்!" என கூச்சலிட்டு அதை ரசிப்பார்கள்.

பரமஹம்ஸரும் இதே போல் தான் சந்தோஷப்படுவாராம். அதுவும், நீளமான கார்களை பார்த்துவிட்டால்,

சிறுவர் போல ஏ! ஏ! இங்கப்பார்... இங்கப்பார்!" என பக்கத்திலிருப்பவரை உலுக்காமல் விடமாட்டாராம்.

அப்போது ஒருமுறை ஐயாவும், அம்மாவும் ஒரு கார் வாங்கலாம் என முடிவெடுத்தார்கள்.

பரமஹம்ஸரிடம் ஐயா கேட்டார், "சாமி, எந்த கார் வாங்கலாம்? ஒரு ஐடியா சொல்லுங்க..."

பரமஹம்ஸர், "எந்த கார் என்றால் எப்படிங்கய்யா?. நல்ல நீளமா இருக்குற ஒரு காரை வாங்க வேண்டியது தான்?"

ஐயா, "நீளமான கார் என்றால் எப்படி சாமி? எந்த கம்பெனி காரை வாங்கலாம் என்று சொல்லுங்க" என்றார்.

பரமஹம்ஸர், "ஐயா என்ன சொல்றீங்க? கார் வாங்குவதற்கும் கம்பெனிக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டார்.

ஐயாவுக்கும் பரமஹம்ஸரின் பேச்சு புரியவில்லை. பரமஹம்ஸருக்கும் ஐயாவின் பேச்சு புரியவில்லை.

பரமஹம்ஸர்

இருவருக்கும் ஒரே மாதிரியான குழப்பத்தை உருவாக்கியது... பரமஹம்ஸரிடம் இருக்கும் எரிந்து போன மனமே!

மனம் கடந்த ஞானியாகிவிட்டதால்... எதையும் பிரித்து பார்க்கும் மனம் அவரிடம் இல்லை. சிறுவயதிலிருந்தே ஆன்மீகத்திலேயே தான் நேரத்தை செலவழித்தார் என்பதற்கு மேலுள்ள சம்பவம் கூட ஒரு உதாரணம் தான்.

கார்களில் பலவகை உண்டு என்ற சாதாரண உண்மையை தெரிந்து கொள்ளும் அளவுக்குக் கூட பரமஹம்ஸருக்கு அந்த சிறுவயதிலேயே நேரமில்லை.

அதனால் தான் அவரது நினைவுப்பதிவில் கூட கார்களைப் பற்றிய பாகுபாடுகள் இல்லை.

அப்புறம் தான் காரில் பலவகைகள் உண்டு என்பது பற்றியே பரமஹம்ஸர் தெரிந்து கொண்டார்.

அதன் பின் வாங்கப்பட்டதே படத்தில் நீங்கள் காணும் ஒப்பல் கார். கருத்துக்களைப் பிடித்துக் கொண்டு தொங்கும் மனமில்லாமல் விகற்பமில்லா ஆனந்தநிலையில் பரமஹம்ஸர் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறதா?

6.13 மனம் என்னும் கடிவாளம் எனக்கில்லையே!

பரமஹம்ஸர் செய்யும் இன்னொரு வேடிக்கையான செயல், பணம் எண்ணுவது.

காவிரிக் கரையில் பக்தர்களுக்கு நோய்களை குணப்படுத்த ஆரம்பித்ததும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக ஆரம்பித்துவிட்டது.

அன்பு மிகுதியால் அந்த ஏழை மக்கள் பத்துபைசா, நாலனா என்று பரமஹம்ஸரின் காலடியில் போடுவதுண்டு.

நோயாளிகள் விட்டுசென்ற கர்மத்தை கழிப்பதற்காக அந்த காசுகளையெல்லாம் ஒருமுறை தொட்டுவிட்டு கொடுத்துவிடுவார்.

சிலநேரம் விளையாட்டாய் அந்த காசுகளை எடுத்து வைத்து கொண்டு எண்ண ஆரம்பித்தால்... அருகேயிருப்பவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.

காசுகளை எண்ணுவதில் பலமுறை முயன்றும், "யம்மா நம்மால முடியலம்மா..." என அந்த காசுகளை திரும்ப கொடுத்துவிடுவார்.

இதுபற்றி, "ஏன் உங்களால் காசுகளை எண்ண முடிவதில்லை?" எனக் கேட்டோம்.

அதற்கு அவர், "என்னால் Logical (எதையும் தட்டிக்கழித்தே பார்க்கும் தர்க்க மனம்) ஆக செயல்பட முடியாது. எந்த திசையில் அடுத்து செல்வோம் என்ற உண்மையை தென்றல் அறியாது.

மனம் என்னும் கடிவாளம் எனக்கில்லாததால், அடுத்த நிமிடம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வலுக்கட்டாயம் இல்லை.

அடுத்த நிமிடம் எப்படியிருக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல வாழ்வு இனிக்கும். தென்றல் போல் வாழும் வாழ்விற்கு Logical அவசியமில்லை.

வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், Logic ஆக வாழ்பவரின் வாழ்வு இனிப்பதற்கான வாய்ப்பே இல்லை." என்று பதிலளித்தார்.

பணக்கணக்கில் தோற்றாலும், வாழ்க்கை கணக்கில் வெற்றி பெற்றுவிட்ட பரமஹம்ஸர் நம்மெல்லோருக்கும் ஒரு முன்னுதாரணம். மனம் இல்லாமல் மனிதரால் வாழமுடியும் என உறுதியாய் சொல்லும் வாழ்வியல் உதாரணம் நம் பரமஹம்ஸர்.

6.14 மூடி மூடி திறந்துகொள்ளும் வாய்

அப்போதெல்லாம் இரவு தூக்கத்தில பரமஹம்ஸர் பல பாடுகளுக்கு உள்ளாகியிருக்கிறார்.

நம்முடைய வாயின் உட்புற ஜவ்வுகளும், தொண்டையின் உட்புற ஜவ்வுகளும் எப்போதும் ஈரப்பதத்தில் இருந்து கொண்டேஸிருக்கும். ஈரப்பதம் கொஞ்சம் குறைந்தாலும் வாய் எரிச்சலெடுக்க ஆரம்பித்துவிடும்.

ஈரப்பதம் வற்றி ஜவ்வுகள் காய்ந்து போனால், உள்ளிழுக்கும் காற்று படப்பட்ட ஜவ்வுகள் புண்ணாகி விடும்... என்பது மருத்துவ ரீதியான உண்மை.

பரமஹம்ஸரின் கை, கால் முட்டிகளோ கட்டுப்பாட்டில்லாமல் இருக்கும் போது தாடை மட்டும் எப்படி கட்டுப்பாட்டில் இருக்க முடியும்?.

அதுவும், இரவில் தூங்கும் போது பரமஹம்ஸரின் தாடை தானாக தளர்ந்து கொள்ளும். ஒரு முறை தளர்ந்து விட்டால் அப்புறம் இரவு முழுவதும் வாய் திறந்தபடியே தான் இருக்குமாம். ஐயாவும், அம்மாவும் வந்தபின் நிகழ்ந்த சம்பவம். அன்று எழுந்தவுடன் பரமஹம்ஸரின் பேச்சு எப்போதும் போல் கணீர் குரலில் இல்லாமல் குரல் பிசிறப் பிசிற வந்ததை பார்த்து, "என்ன ஆயிற்று, ஏன் இப்படி குரல் கம்மிவிட்டிருக்கிறது?" என ஆச்சரியமாய் கேட்டனர்.

பரமஹம்ஸர் பதிலேதும்ப சொல்லாமல் சிரித்து வைத்தார்.

'நேற்று இரவு தூங்கும் வரை நல்லாயிருந்த சாமியின் குரல் எப்படி திடீரென இப்படி மாறிபோகும்' என ஆழமாய் யோசித்த ஐயாவால் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை.

அன்று இரவு யதேட்சையாக எழுந்த ஐயா பதறிப்போனார். காரணம், பரமஹம்ஸரின் உடல் பூரண ஒய்விலிருக்க அவரின் தொண்டை மட்டும் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தது.

வாய் அகல திறந்த நிலையில் மூச்சுக் காற்று வாய் வழியே உட்செல்வதும், மீண்டும் வாய் வழியே வெளியே வருவதுமாக இருந்தது.

தொண்டை, வாய் ஜவ்வுகள் முழுவதுமாக ஈரப்பதமற்று காய்ந்து போனதால்... வேகமாக உள்ளே வரும் காற்றை தாங்க முடியாத தொண்டை ஜவ்வு வரட்டு இருமலை உருவாக்கிக் கொண்டேையிருந்தது.

தொண்டை படும் கஷ்டத்தைப் பார்த்து ஐயா
உடனே எழுந்து தளர்ந்திருந்த பரமஹம்ஸரின்
தாடையை மூடினார்.

மூடிய வாய் மூடிய சிலநிமிடங்களுக்குள் திறந்து கொண்டது. மீண்டும் மூட மீண்டும் திறந்து கொண்டது. இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தவர் எதோவொரு எண்ணத்தால் தலை நிமிர்ந்து பார்த்தார்... பொழுது விடிந்துவிட்டிருந்தது.

Paramahamsaji portrait

பல இரவுகள் இப்படியே தான் கழிந்திருக்கிறது என்ற செய்தியை அம்மா சொல்லி முடிக்கும் போது எங்களை மீறி கண்களிலிருந்து நீர்வடிந்தது.

அதற்கு, "நமக்கெல்லாம் நல்லது செய்யவேண்டும் என்ற ஒரேயொரு காரணத்தை மட்டும் பரமஹம்ஸரின் கருணை பற்றிக் கொண்டதால், பாவம்! அவரின் உடல் எவ்வளவு பாடுபட்டிருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி, ஆனந்தத்தை நமக்குத் தருவது எனும் ஒரேயொரு குறிக்கோளோடு செயல்படும் பரமஹம்ஸரை புரிந்து கொள்ளாமல், பழைய சம்ஸ்காரங்களை வைத்துக்கொண்டு நாம் வேறு அவரை பாடாதபாடு படுத்துகிறோம்.

அன்று உடலோடு... இன்று நம்மோடு...

பரமஹம்ஸர் சந்திக்கும் கஷ்டங்களையெல்லாம் மீறி நமக்காக அவர் இந்த உடலில் உயிரை பிடித்து வைக்கவே எவ்வளவு அன்பு வேண்டும்?" என அம்மா எங்களை பார்த்து கேள்வி கேட்டு நிறுத்தியதும்,

எங்களினுள்ளிருந்து நன்றியுணர்வு ஆனந்த
உணர்வாக மாறி உடலெங்கும் பரவியதை இப்போது
நினைத்தாலும் பரவசம் படர்கிறது.

7.4 மூன்றுநாள் கொண்டாட்டம்

சிவ சிவ 9.10,11.1.2001 திரிசண்டி மஹாயாகபூஜை
பரமஹம்ஸர்
பாதங்கள்

மூன்று நாட்கள் கவுந்தப்பாடியில் பரமஹம்ஸர் ஸ்ரீவித்யா ஹோமம் மற்றும் திரி சண்டி மஹாயாக பூஜை.

பரமஹம்ஸர் விரும்பிய திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்

7.5 பரமஹம்ஸர் விரும்பிய திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்

7.6 பலகாலம் பரமஹம்ஸரோட வாழ்ந்த பாம்பு

காவிரிக்கரையோரத்தில் பரமஹம்ஸர் தங்கியிருந்தபோது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்.

வெகு நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் தெய்வ உருவங்களின் நடுவேயிருக்கும் லிங்கத்தை உற்றுப்பாருங்கள்.

தன் அறையில் சுகமாய், பாதுகாப்பாய்
இருப்பது போல் லிங்கத்தை தன் உடலால்
கட்டியணைத்தபடி ஓய்வெடுக்கும் பாம்பை
கவனிக்கமுடிகிறதா...

பலகாலம் பரமஹம்ஸரோடு வாழ்ந்த பாம்பு இது. பொதுமக்கள் வருவது போவது பற்றி கவலைப்படாமல் பரமஹம்ஸரின் தியானசக்தியால் பரவசத்திலேயே மூழ்கி, எப்போதும் ஒரு வித சாந்தமான நிலையிலேயே அந்தப் பாம்பு இருக்குமாம்.

இந்தப் பாம்பு எப்படி அப்படி
சாந்தமாகயிருந்தது என்று நாங்கள்
பரமஹம்ஸரிடம் கேட்டதற்கு, “மிருகங்கள்
ஒரு ஞானியின் அருகாமையை விரும்பும்.
ஞானிகளின் அருகாமை அவற்றை
ஒருவித ஆனந்தமயமான சுக உணர்வில்
ஆழ்த்தும். அந்த சுக ஈர்ப்பினாலேயே
மிருகங்கள் இந்த அருகாமையைப்
பெரிதும் விரும்பும்.

இன்னொரு உண்மை, ஞானியின்
சாந்நித்யத்தில் வாழும் உயிர்கள்
நேரடியாக முக்தி பெற்றுவிடும். அவை பல
ஜென்மங்கள் பிறவியெடுத்து அல்லல்பட
வைக்க வேண்டிய அவசியமிருக்காது”
என்றார்.

“ஹூம்... கொடுத்துவைத்த பாம்பு”
என எங்களால் பெருமூச்சு மட்டுமே
விடமுடிந்தது.

பலகாலம் பரமஹம்ஸரோட வாழ்ந்த பாம்பு

நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அற்புத காட்சி இது!

இந்த சிறிய உடலுக்குள் தான் முழுமையாக வாழ ஆரம்பிக்காமல், உடலோடு உயிரும். உயிரோடு உடலும் ஒன்றாய் சேர்ந்திருக்க படாத பாடுபட்ட அந்தக் காலத்திலேயே இவ்வளவு செயல்களையும் இந்த உடல் மூலமாகச் செய்திருக்கிறோமா ! என பேசும் படங்களை பார்க்கும் போது பரமஹம்ஸர்

7.7 ஆற்றுக்குள் மகாமேரு பூஜை

ஆற்றுக்குள் மகாமேரு பூஜை

காவிரித்தாயின் மடியிலே அமர்ந்து பரமஹம்ஸர் மகாமேரு பூஜை செய்யும் அற்புதக் காட்சி.

பரமஹம்ஸர்

இது போன்ற பக்தி பரவசமிகு நிகழ்வுகளை நம்மால் கற்பனை செய்து பார்ப்பது கூட சாத்தியமற்ற ஒன்று...என்று தான் சொல்ல வேண்டும்.

7.8 காவிரிக் கரை பூஜை

காவிரிக் கரை பூஜை

பரமஹம்ஸருக்குப் பின்னால் தெரிவது அன்றைய தியான சிகிச்சை மையம். காவிரிக் கரையில் பரமஹம்ஸர் வாழ்ந்த போதெல்லாம் பக்தர்களின் கூட்டம் எப்போது ஒன்று சேர்கிறதோ அப்போதெல்லாம் பரமஹம்ஸர் இதுபோல் காவிரிக் கரை பூஜை செய்வதுண்டு.

கண்கள் கோடி வேண்டும்

கண்கள் கோடி வேண்டும்

பரமஹம்ஸர் அப்போது தங்கி பொதுமக்களுக்கு இலவச தியான சிகிச்சைகள் செய்து கொண்டிருந்த குடிசை. அங்கு பரமஹம்ஸரே ஆரத்தி செய்வாராம். "மெல்ல அபிநயத்தோடு பரமஹம்ஸர் செய்யும் இந்த பூஜைகளை பார்க்கவே கண்கள் கோடி வேண்டும்" எனச் சொல்கிறார்கள் அந்த பூஜைகளை கண்டுகளித்த அனைவரும்.

Priest performing homa

7.9 முதல் சிவராத்திரி

Priest performing arati

காவிரிக்கரையில் துவங்கிய விழாக் கொண்டாட்டம். புகைப்படங்களில் நீங்கள் பார்ப்பவை பரமஹம்ஸரால் நிகழ்த்தப்பட்ட முதல் சிவராத்திரி விழாவின் சில பகுதிகள்.

7.10 அன்றே ஆரம்பித்த தானங்கள்

அன்றைய காலக்கட்டத்தில் பரமஹம்ஸருக்கென்று தனிப்பட்ட வருவாய் எதுவுமே கிடையாது.

எப்போதாவது எடுக்கும் தியானமுகாம்களின் வாயிலாகவும், குணம்பெற்ற ஏழைமக்கள் தரும் சில்லைறை காசுகளைக் கொண்டும் அந்த நாட்களிலேயே பரமஹம்ஸர் அன்னதானத்தை ஆரம்பித்திருக்கிறார்.

தன்னால் இயன்ற உதவிகளை ராஜ பாணியில் அன்றிலிருந்தே பரமஹம்ஸர் செய்ய ஆரம்பித்திருக்கிறார் என்பதை புகைப்படத்தை பார்த்த நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

அன்னதானம் செய்யும் படம்

7.11 குணமளிக்கும் விபூதி

பரமஹம்ஸரிடமிருந்து வாங்கிய விபூதி பாக்கெட்டில் இருந்த விபூதியைத் தடவினோம், "பலகாலமாக இருந்த மூட்டுவலி பறந்தோடி விட்டது", "என்னுடைய வயிற்று பிரச்சனை அதற்குப்புறம் வருவதேயில்லை", "தோல்வியாதிகூட இந்த விபூதியைத் தடவிய பின் சரியாகிவிட்டது" என மக்கள் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

மக்களை நோய்களிலிருந்து விடுவிக்கும் விபூதியை சக்தியூட்டி தருவதை காவிரிக்கரை காண்டத்திலேயே பரமஹம்ஸர் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

படத்தில் நீங்கள் பார்ப்பது...கிராம மக்களுக்காக பரமஹம்ஸர் தர வைத்திருந்த சக்தியூட்டப்பட்ட விபூதி. எப்படி ஒரு தேனிரும்புக்குள் மின்சாரத்தை பாய்ச்சுவதால் சாதாரண இரும்பான அதை காந்தமாக்க முடியுமோ,

அதேபோல் விபூதி, தாமிரம், வெள்ளி, தங்கம், பட்டு, ருத்ராக்ஷம், ரத்தசந்தனம் போன்ற பொருட்கள் உடலிலுள்ள எதிர்மறை சக்திகளை கவர்ந்திழுத்து எரித்துவிடும்.

விபூதி சக்தியூட்டும் படம்
சக்திகாப்பு மாலை

7.12 சக்திகாப்பு மாலை

இன்று இலட்சக்கணக்கான மக்கள் விரும்பி அணியும் சக்திமாலையை முதல் முறை பரமஹம்ஸர் அணிவிக்கும் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்.

விபூதி, சக்தி காப்புமாலை, யந்திரம் போன்ற எல்லாமே பரமஹம்ஸரால் தனிப்பட்ட முறையில் சக்தியூட்டப்பட்டவை.

அப்படி சக்தியூட்டப்பட்ட தால் தான் விபூதி, சக்திகாப்பு மாலை போன்றவற்றை பயன்படுத்துபவர்கள், “பரமஹம்ஸர் தீட்சையளிக்கும் போது பாயும் அதே சக்தி பரமஹம்ஸரால் சக்தியூட்டப்பட்ட பொருட்களை பயன்படுத்தும்போதும் கிடைக்கிறது” என சொல்கிறார்கள்.

சக்தி தரிசனம்

7.13 சக்தி தரிசனம்

உலகின் வெவ்வேறு நாடுகளில் இருந்தெல்லாம் பரமஹம்ஸரின் சக்திதரிசனத்தைப் பெறுவதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக இன்று வருகிறார்கள். A.S.P. என்றழைக்கப்படும் முதல்நிலை தியானமுகாமில் கலந்துகொண்டவர்கள் மட்டுமே பரமஹம்ஸர் அளிக்கும் சக்திதரிசனத்தில் பங்கேற்க முடியும். ஆனால் அன்று இப்படி வரம்பு எதுவும் இல்லை.

பொதுமக்கள் யார்வேண்டுமானாலும் வந்து கலந்துகொள்ளலாம். ‘சக்திதரிசனம்’ என்ற நிகழ்ச்சி மூலமாக ஒரு ஞானியிடமிருந்து நமக்குக் கிடைக்கப் பெறும் ஆனந்த சக்தி தான் மாபெரும் பாக்கியம். பரமஹம்ஸர் தங்கியிருந்த சிறு குடிசையில் சக்திதரிசனம் நிகழ ஆரம்பித்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

தியானபீட மஹா சமஸ்தானம் பிறந்த அன்று எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் உங்களுக்காக...

7.14 காவலுக்கு வந்த ஆவல்

காவலுக்கு வந்த ஆவல்

புகைப்படத்தில் நீங்கள் பார்ப்பது பரமஹம்சரே நேரடியாக காவல் అధికారుளுக்கு வகுப்பெடுத்தபோது எடுக்கப்பட்டது. காவல் துறையை சேர்ந்தவர்களுக்காகத் தனிப்பட்ட முறையில் பரமஹம்ஸர் பேசியதைப் பாராட்டியும், பரமஹம்ஸர் கற்றுத்தந்த தியானம் எந்தவகையில் தங்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை பற்றியும் காவல் துறை அதிகாரி விளக்கிக் கொண்டிருக்கிறார்.

கிரீடம் அணிந்த பரமஹம்ஸர்

இந்த கிரீடத்தைப் பற்றித் தான் பரமஹம்ஸர் யோகிகளிடம் அன்று சொன்னார் "என் தலையின் மீது இருப்பது தங்கக்கீரிடம் அல்ல. அது ஒருவரின் தலை கேன்ஸர். ஹீலிங் கேன்ஸர் சரியானதால் அவர் தந்த காணிக்கையே இந்த கிரீடம்.

எதுவும் லேசாய் வந்ததல்ல...

சாமியின் இரவு பகல் பாரா உழைப்பில் மக்களிடம் பெற்ற காணிக்கைகளே இவை. எனவே பக்தர்களுக்கு தியானத்தை ஆனந்தத்தையும் சென்று சேர்ப்பது நம் கடமை."