KAILASA Library/குணமளிக்கும் ஆலமரம் ஒரு கல்பதரு/பெங்களூர் காண்டம்Sign in
குணமளிக்கும் ஆலமரம் ஒரு கல்பதரு

பெங்களூர் காண்டம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

7.1 பெங்களூர் விஜயம்

காவிரிக்கரை ஓரத்துல் பரமஹம்ஸர் தங்கியிருந்த குடிலில், சாமியால் குணமடைந்த ஒரு பக்தர் வந்து, பரமஹம்ஸரிடம் “சாமி, ஒரு பெரிய நிலத்தை தானமாக உங்களுக்கு தருகிறோம். சாமி மட்டும் 'ம்' என்று ஒப்புதல் சொன்னால் போதும், பின் பெரிய ஆசிரமமே உருவாக்கிவிடலாம் சாமி” என மிக உற்சாகமாகச் சொன்னார்.

அவர் சொல்லி முடித்தவுடன், பரமஹம்ஸர் பார்த்து சிரித்துவிட்டு “இல்லப்பா ஆசிரமம் இங்கே வராது. சும்மா கொஞ்ச நாள் தங்கி ஓய்வெடுப்பதற்கான இடம். அவ்வளவு தான்.

மிகப்பெரிய ஆலமரத்தோடு கூடிய நிலம் ஒன்று தானமாக நமக்காகக் காத்திருக்கிறது.

அந்த நிலம் பெங்களூரில் இருக்கின்றது.

அந்த நிலத்தில் தான் சாமியோட இந்த மொத்த இயக்கத்திற்குமான (Head Quarters) தலைமை செயலகம் இருக்கப்போகிறது” என்று சொன்னார்.

சாமி சொன்னதை கேட்டுக்கொண்டிருந்த பக்தர்களுக்கெல்லாம் ஒரு விதமான சிரிப்புதான் வந்தது.

“என்ன சொல்கிறார் பரமஹம்ஸர்? பெங்களூரில் நமக்கு யாரையுமே தெரியாது.

நாம் இருப்பதோ தமிழ்நாடு. நிலைமை இப்படியிருக்க அங்கிருக்கும் நிலம் எப்படி நமக்கு தானமாகக் கிடைக்கும்?!!” என்று பரமஹம்ஸர் சொல்கிறார்,” என்று எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

இந்தப் பேச்சு முடிந்து ஓரிரு நாட்களிலேயே பரமஹம்ஸர் அங்கிருந்த பக்தர்களிடம் “வாங்க! உடனே எல்லோரும் பெங்களூருக்கு கிளம்பலாம்” என்று சொன்னார்.

அப்பொழுது கூட இருந்த பக்தர்கள், “எப்படிசாமி? நமக்குத் தான் அங்கு யாரையுமே தெரியாதே. எப்படி நாம் நமக்குரிய நிலத்தைக் கண்டுபிடிக்க போகிறோம்? அங்கு எப்படி எங்கே தங்கப் போறோம்?” என்று கேட்டார்கள்.

“அதைப்பற்றி எல்லாம் நீங்கள் யோசிக்காதீர்கள். பராசக்தி அதையெல்லாம் பார்த்துக்கொள்வாள். நாம் கிளம்பலாம்” என்று தீர்க்கமாய்ப் பரமஹம்ஸர் சொன்னதும் விறுவிறுப்போடு எல்லோரும் பெங்களூருக்குச் சில நிமிடங்களில் கிளம்பிவிட்டார்கள். பெங்களூர் வந்தபின் சில பக்தர்கள் வீட்டில் தங்கினார்கள்.

அப்படி தங்கியிருக்கும் போது சாமி பொதுமக்களுக்கு Healing செய்ய ஆரம்பித்தார்.

Healing எடுத்துக் கொள்ள வந்த மக்களெல்லாம் தொடப்பட்டவுடனே குணமாகிச் சென்றார்கள். பெரிய பெரிய நோய்களில் இருந்தெல்லாம் முழுமையாக விடுதலை பெற்றார்கள்.

இந்தச் செய்தி காட்டுத்தீப்போல பரவியது. காலையில் இருந்து மாலை வரை தொடர்ந்து நோயாளிகள் பரமஹம்ஸர் இருக்கும் இடத்திற்கு வந்த வண்ணம் இருந்தார்கள். Healing நடந்த வண்ணமாக இருந்தது. இதனால் பரமஹம்ஸர் இருக்கிற இடம் ரொம்பப் பரபரப்பாகிவிட்டது.

7.2 அதே ஆலமரம்! அதே ஆலமரம்!

மக்கள் கூட்டம் பெங்களூரில் பரமஹம்ஸர் தங்கியிருந்த வீட்டை நோக்கி சாரை சாரையாக வந்து கொண்டிருந்த காலம் அது. அப்போது பரமஹம்ஸரிடம் ஒரு பார்வையாளர் சொன்னார்.

"உங்களுக்கு எங்கள் நிலத்தை நாங்கள் தானமாக தர வந்திருக்கிறோம்" என்றார்

பரமஹம்ஸர் "நிலம் எங்கிருக்கின்றது?" என்று கேட்டார்.

"சாமி ஆலமரத்தோட கூடிய நிலம் அது. என் கனவில் தக்ஷிணாமூர்த்தி தோன்றி உங்களுக்கு இந்த நிலத்தைத் தானமாக கொடுக்கச் சொன்னார்."

பரமஹம்ஸர் "நன்றாக யோசித்துப்பாரப்பா! எனக்குத்தான் தானமாக கொடுக்கச் சொன்னாரா?

ஏன் என்றால் நீங்கள் சொல்வதை வைத்து பார்க்கும் போது அந்த நிலம் எப்படியும் ஒருகோடி ரூபாயாவது பெறுமானமுள்ளது எனத் தோன்றுகிறது. 25 ஏக்கர் நிலம் என்கின்றீர்கள். முக்கியமான இடத்தில் இருக்கும் நிலம் வேறு.

என்னை நன்றாய் மீண்டுமொருமுறை பாருங்கள். எனக்குத்தான் தக்ஷிணாமூர்த்தி அந்த நிலத்தை தரச் சொன்னாரா?" என்று கேட்டார்.

நிலத்தை தானமாய் தருவதாய் சொன்ன ஜீவன்ராவும், விநாயகராவும் அண்ணன் தம்பிகள்.

அந்த இருவருமே சொன்னார்கள்...

"இல்லை சாமி, உங்களுக்குத் தான் கொடுக்கச் சொல்லி தக்ஷிணாமூர்த்தி கனவில் சொன்னார். நாங்கள் ஒரு மாதமாக உங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.

உங்களைப் பார்த்தபின் தான் எங்களுக்கு நிம்மதியாக இருக்கிறது. எங்கள் மனதில் இருந்த பாரம் எல்லாம் இறங்கியது போல் இருக்கிறது தடுக்காமல் தயவுசெய்து இந்த நிலத்தை தானமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

முதல் வேலையாக உங்களுக்குத் தானம் செய்துவிட்டு அதன்பின்தான் அடுத்த வேலையை ஆரம்பிப்போம்.

ஏனென்றால் தக்ஷிணாமூர்த்தி சொல்லிவிட்டார்." என்று சொன்னார்கள்.

Figure 1

"என்னுடைய தரிசனத்தில் எந்த மரம் பார்த்தேனோ அந்தமரம் அப்படியே சாட்சாத் இந்த இடத்தில் வாழ்கிறது" -- பரமஹம்ஸர் பரமஹம்ஸரோ, "சரி! சாமி நிலத்தை வந்து பார்க்கிறேன். பார்த்துவிட்டு, சாமி தரிசனத்தில் தெரிந்த நிலம் தான் அது என்பது உறுதியானால் அதை ஏற்றுக் கொள்வேன். இல்லையென்றால் ஏற்றுக்கொள்ள மாட்டேன்." என்றார்.

நேராக ஆலமரத்தைப் பார்த்துவிட்டு,
"என்னுடைய தரிசனத்தில் எந்த
மரம் பார்த்தேனோ அந்தமரம்
அப்படியே சாக்ஷாத் இந்த
இடத்தில் வாழ்கிறது. இந்த இடம்
தான் அந்த இடம்" என்று பரமஹம்ஸர்
பேசிய தொனி உடனிருந்து பக்தர்களுக்கு
புதிதாயிருந்தது.

காரணம் சாதாரண மரத்தை 'இருக்கிறது' எனச் சொல்லாமல் 'வாழ்கிறது' என பரமஹம்ஸர் சொன்னது தான். உலகை நாம் பார்க்கும் விதம் வேறு, பரமஹம்ஸர் பார்க்கும் விதம் வேறு என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.

இதற்கு நடுவில் பரமஹம்ஸர்
ஆலமரத்தோடு கூடிய 80 நிலங்களை
பெங்களூர் மாநகரை சுற்றியுள்ள
இடங்களிலெல்லாம் பார்த்திருக்கிறார்கள்.

அந்த 80 நிலங்களிலும்
நிலங்களை பார்த்தவுடனேயே "இது நம்ம
நிலம் இல்லை" என்று பரமஹம்ஸர்
சொல்லிவிடுவார்.

இந்த இடத்தை மட்டும்தான் பார்த்தவுடனே 'இது நம்ம இடம்' என்றார்.

Paramahamsa Nithyananda

'இது நம்ம இடம்'

அந்த நிலத்தில் பரமஹம்ஸர் முதலில்
காலடி வைத்தபோது, "ஏதோ எல்லா இடமும்
ஏற்கனவே அவருக்குத் தெரிந்த மாதிரி, அவர்
அந்த இடத்தில் நடந்து கொண்டார்.

ரொம்ப ரொம்ப அன்னோன்யமாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்த இடத்தில் நாம் எப்படி நடந்து கொள்வோமோ அப்படி பரமஹம்ஸர் நடந்து கொண்டார். இது எங்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது'' என்று உடனிருந்த பக்தர்கள் நினைவு கூறுகிறார்கள்.

7.3 மாடு புரிந்து கொண்டது

பிடிதி நிலத்தை ஆச்சரியமாக பரமஹம்ஸர் பார்த்துக் கொண்டு வரும் போது அங்கு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருப்பது பார்த்ததும் அருகே சென்ற பரமஹம்ஸர் "என்னப்பா" என்று விசாரித்தார்.

"ஒரு மாடு விழுந்து விட்டது. அதை காப்பாற்றுகிறோம்" என்று சொன்னார்கள்.

மக்கள் மாட்டைப் பிடித்து இழுத்தல்

"ஒரு மாடு விழுந்து விட்டது. அதை காப்பாற்றுகிறோம்"

  • மக்கள்

ஆனால் அங்கு பார்த்தால் அந்த காட்சியே தலைகீழாக இருந்தது.

குழிக்குள் மாடு இருக்கிறது.

பரமஹம்ஸர் மாட்டைப் பார்த்தல்

"மாட்டை கண்ணுக்குக்கண்" பார்த்தார் பரமஹம்ஸர்.

பரமஹம்ஸர்

அந்த மாட்டை காப்பாற்றுகிறோம் போர்வழிகள் என்று அந்த மாட்டின் இடுப்பில் ஒரு கயிறையும், கழுத்தில் ஒரு கயிறையும் கட்டிவிட்டு, பின்னால் இருந்து இரண்டு பேர் குச்சியால் குத்திக் கொண்டிருந்தார்கள்.

மாடு

உயிரினங்கள் மற்றும் மனிதர்களின் உணர்வுகளையெல்லாம் பரமஹம்ஸர் மிக ஆழமாக புரிந்தவர்

பரமஹம்ஸர் பின்னால் போய் அதன் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டது முன்னால் இருந்து இவர்களும் கயிறை பிடித்து இழுத்தார்கள்.

காப்பாற்றுகிறவர்களைப் பார்த்து பயந்த மாடு "இது ஏதோ பாதகம்!" என்று மிரண்டுவிட்டது.

மேலே பிடித்து இழுத்துக் கஷ்டப்படுத்தப் போகின்றனர் என்று நினைத்து, பயந்து இவர்கள் எவ்வளவு தூக்கினாலும் பாதிதூரம் வந்ததும் நான்கு கால்களையும் உதறி மறுபடியும் கீழே விழுந்து கொண்டிருந்தது.

அதற்குள் மாட்டிற்கு ஏகப்பட்ட காயம் ஏற்பட்டுவிட்டது. பரமஹம்ஸர் இதை பார்த்த உடனே "மாட்டைக் கஷ்டப்படுத்தாதீர்கள். கட்டியிருப்பதை எல்லாம் அவிழ்த்துவிட்டு எல்லாரும் இடத்தைவிட்டு நகருங்கள்" என்று கட்டளையிட்டார்.

அங்கு இருந்த மக்கள் வித்தியாசமாக பார்த்தாலும் பரமஹம்ஸரின் வார்த்தையில் இருந்த தீர்க்கத்தால் உடனே கட்டியிருந்த கயிறுகளை அவிழ்த்துவிட்டு மக்கள் நகர்ந்துவிட்டனர்.

எல்லாரும் விலகி தூரமாக சென்றபின் பரமஹம்ஸர் நேராக, "மாட்டை கண்ணுக்குக்கண்" பார்த்துவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்துவிட்டார்.

குழிக்குள் இருந்த மாடு தானாக எம்பிக்குதித்து மேலேறி பரமஹம்ஸரின் பின்னால் நடந்து வர ஆரம்பித்தது!

சுற்றியிருந்த மக்கள் "யார் இவர்?! எப்படி இது சாத்தியமாகும்" என வியந்த கண்களோடு பரமஹம்ஸர் சென்ற திசையைப் பார்த்து கை கூப்பி நின்றனர்.

உடன் இருந்த பக்தர்களுக்கும், அந்தமாட்டை
காப்பாற்ற முயற்சி செய்த மக்களுக்கும் ஒரே
ஆச்சரியம்.

"என்னப்பா இது? நாம் எவ்வளவு
கஷ்டப்பட்டு மாட்டை வெளியில் இழுக்க
முயற்சி செய்தோம். அப்போது எம்பி எம்பி
கீழே விழுந்தது.

இவர் வந்தார், மாட்டை பார்த்தார்,
அப்புறம் தானாகவே எழுந்து அவர் பின்னால்
போய் அதன் வேலையை பார்க்க
ஆரம்பித்துவிட்டது.

ஒரு சாந்தமான மனிதனைப் போல்
இவ்வளவு தெளிவாக இந்த மாட்டை
பரமஹம்ஸர் எப்படி மாற்றினார்?" என
விதவிதமாய்ப் பேசியபடி நகர்ந்தார்கள்.

அங்கிருந்த ஒரு பக்தர்
பரமஹம்ஸரிடம், "சாமி! நீங்க என்ன
செய்தீர்கள்? குழிக்குள் இருந்த மாடு
தானாகவே எழுந்து வெளியே போய் விட்டதே!
எப்படி இது?" என்று கேட்டார்.

அதற்கு பரமஹம்ஸர், "நீங்கள் தொடர்ந்து அந்த மாட்டை காப்பாற்றுகிறேன் என்று அதை வன்மையாகக் கையாண்ட விதத்தைப் பார்த்து அது பயந்து போய்விட்டது.

நான் எதுவும் மாயாஜாலமெல்லாம்
செய்யவில்லை. நேராக அதன் ரெண்டு
கண்களையும் பார்த்தேன்.

பார்த்துவிட்டு 'மேலேவா!' என்று
கட்டளை மட்டும் பிறப்பித்துவிட்டு வந்து
விட்டேன்.

'மேலே வா!'...

Portrait of Paramahamsa Nithyananda

7.4 மஹா கண்டுபிடிப்பு

மெல்ல நடந்தபடி பேசிக்கொண்டே மீண்டும் ஆலமரத்திற்குச் சென்றார் பரமஹம்ஸர்.

ஆலமரத்திற்குச் சென்றவுடனே, அந்த ஆலமரத்தை தன்னுடைய மிக முக்கியமான ஒரு உறவினரை அல்லது நண்பரை கட்டிப்பிடித்தால் எப்படி கட்டிப்பிடிப்பார்களோ, அதுபோல அந்த ஆலமரத்தை கட்டிப்பிடித்து, சில நிமிடங்கள் அந்த ஆலமரத்தின் மீது சாய்ந்து கொண்டிருந்தார்.

பின் பக்தர்களை திரும்பி பார்த்து பரமஹம்ஸர் சொன்னார். "இந்த மரத்திற்கு வயது 600"

பக்தர்கள் "என்ன சாமி? அறநூறா!!" என்று கேட்டார்கள்.

பரமஹம்ஸர் அவர்களிடம், "நிச்சயமாக மரத்தினுடைய வயது 600க்குள் இருக்கும்" என்று சொன்னார்.

"வேண்டுமென்றால் இந்த மரத்தை வேறு எந்த வழிமுறையில் வேண்டுமானால் பரிசோதித்து கொள்ளுங்கள்" என்று சொன்னார்.பின் அங்கு வந்த மரப்பியல் விஞ்ஞானிகள் பரிசோதனை செய்து "இந்த மரத்திற்கான வயது 300-ல் இருந்து 600 வரை" என்று சொன்னார்கள்.

இந்த சம்பவத்தை எல்லாம் பார்த்த நித்ய மனீஷானந்தா ஒரு மிகப்பெரிய உண்மையையை கண்டுபிடித்தார்.

அவருக்கு பரமஹம்ஸருடைய வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்து இருந்ததால் இந்த உண்மையையை மிக எளிதாக கண்டுபிடித்துவிட்டார்.

அவர் இதுபற்றி பேசிய போது, "300 வருடத்திற்கு முன்னால் மேட்டூர் அணையிருக்கும் இடத்தில் பரமஹம்ஸர் ஒரு கோயில் கட்டி லிங்கத்தை சக்தியூட்டும் முயற்சி எதிர்பாராத விதமாக பாதியில் நின்றுவிட்டது.

கோயிலும் வெடித்துச் சிதறிவிட்டது. சீடர்களும் சிதறிப்போனார்கள். என்னுடைய கேள்வியெல்லாம்,

"அதன்பின் பரமஹம்ஸர் என்ன ஆனார்?"

"பரமஹம்ஸர் எங்கு சென்றார்?"

' 'அப்படியென்றால் பரமஹம்ஸர் எங்காவது சென்றிருக்க வேண்டும்"

இப்போது ஆலமரத்தின் வயது 300. மேட்டூர் கோயிலில் நிகழ்ந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பரமஹம்ஸர் மிகவும் மவுனமாகியிருப்பார். அவருக்கு அப்போது பூரண ஓய்வு தேவை.

அங்கிருந்து நடந்து நேராக இங்கு வந்து, இந்த இடத்தில் அவர் ஜீவசமாதி ஆகியிருக்க வேண்டும்" என்று எங்களிடம் சொன்னார்.

அவ
பரம
நம்ப
'ஒரு
இங்
சாத
ஒளி
வெ

La பக்

தா சொ

சரி

ஒரு
எகு
பர

Figure 1

300-ல் இருந்து 600

அவர் சொன்னதும் தான் பரமஹம்ஸரிடமிருந்து வந்த 'இது நம்ம இடம்', 'ஆலமரம் வாழ்கிறது', 'ஒரு ஞானியின் ஜீவசமாதி இங்குள்ளது' என அவர் சொன்ன சாதாரண வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டிருந்த அர்த்தங்கள் வெளிவந்தன.

ஒருமுறை, பரமஹம்ஸர் Laughing Temple - ல் பக்தர்களுடன் உட்கார்ந்திருந்தார்.

அப்போது பரமஹம்ஸரிடம் தான் கண்டுபிடித்ததை திரும்ப சொன்னார் நித்யமனீஷானந்தா.

"என்னுடைய கண்டுபிடிப்பு சரியா சாமி?"

அவரைப்பார்த்து சின்னதாய் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார் நம் பரமஹம்ஸர்.

7.5 சத்யானந்தா பூமி மீது நடப்பதில்லை

பிடதி நிலத்தில் ஒரு முனிவர் வாழ்வதாகவும், அந்த முனிவர் அவ்வப்போது மக்களுக்கு தரிசனம் கொடுப்பதாகவும், ஒரு செய்தி சுற்று வட்டாரத்தில் நிலவியது.

அதனால் தான் வியாழக்கிழமை, வியாழக்கிழமைகளில் அருகில் இருக்கும் மக்கள் எல்லாரும் ஒன்றாய் சேர்ந்து இங்கு இருக்கும் சுயம்பு லிங்கத்திற்குப் பூஜை செய்வார்கள்.

சுயம்பு லிங்கம் என்றால் பூமியில் இருந்து தானாகவே புறப்பட்ட லிங்க வடிவத்தில் உருவான சுயம்பு.

எந்த இடத்தில் அந்த ஞானி ஜீவசமாதி அடைந்தாரோ அந்த இடத்தின் மேல் தான் ஆலமரம் உருவாகியிருக்கிறது.

வியாழக்கிழமையை "குருவாரம்" என்று கன்னடத்தில் சொல்வார்கள். குருவாரத்தில் வந்து இந்த லிங்கத்திற்கு பூஜை செய்து அவர்கள் என்ன வரம் கேட்டாலும் அந்த வரம் கிடைக்கிறது.

இதைத் தொடர்ந்து நிகழத்தக்கடிய அதிசய சக்தி இந்த இடத்தில் இருந்து கொண்டே இருப்பதாக மக்கள் பரவலாகச் சொல்வார்கள்.

இந்த உண்மையைப் பரமஹம்ஸர் கவனத்திற்கு பக்தர்கள் எடுத்துச் சென்ற போது, பரமஹம்ஸர் மெல்ல சிரித்து, "ஓ! சத்யானந்தாவா!" என்று சொன்னார்கள். உடனே சுற்றியிருந்தவர் அனைவரும், "என்ன சாமி? என்ன சொல்கிறீர்கள்? சத்யானந்தானா யாரு சாமி!!" என்று கேட்டார்கள்.

பரமஹம்ஸர், "இல்லை!
அது இங்கிருக்கும் ஞானியின்
பெயர். ஜீவ சமாதி அடைந்த
ஞானி அவர். அடிக்கடி அவர்
வரத்தான் செய்வார்” என்று
மிகவும் சாதாரண மாகச்
சொன்னார்.

அதோடு நின்றுவிடாமல்
இந்த பக்தர்களுக்கு
உண்மையைப் புரிய
வைப்பதற்காக...

சத்யானந்தாவை
பார்த்ததாகச் சொல்லும் சுற்றுப்புற
கிராம பகுதியை சேர்ந்த 20
வெவ்வே று நபர்களை
நேரடியாகக் கூப்பிட்டு,

“நீங்கள் பார்த்த அந்த ஞானியின் உருவம் என்ன?

அவர் எவ்வளவு உயரம் இருப்பார்?

அவர் எப்படி நடப்பார்?”
என்றெல்லாம் இருபது பேரிடமும்
பரமஹம்ஸரே நேரடியாக
கேட்டார்.

நேரடியாகக் கேட்கப்பட்ட
இருபது பேருமே சொன்னவை
ஒரே மாதிரியே இருந்தன.

' ‘அவர் கொஞ்சம் குள்ளமாக இருப்பார்

நல்ல வெள்ளை நிறத்தில் தாடி வைத்திருப்பார்.

தரையிலிருந்து ஒரு
அடிமேலேதான் நடப்பார்” என
இருபது பேருமே சொன்னார்கள்.

“ஞானி சத்யானந்தா
தான் இவ்வளவு நாள் அந்த
நிலத்தில் சுபிக்ஷமான சக்தியை
இங்கு வரும் மக்களுக்கெல்லாம்
அளித்து வருகிறார்.

இவர்தான் தொடர்ந்து
முன்னூறு வருடமாக இந்த
நிலத்தில் இருந்தார்.

மக்கள் என்ன வரம்
கேட்கிறார்களோ, கேட்கும் வரம்
அத்துனையும் அளிக்கின்ற ஒரு
சக்தி களஞ்சியமாக இங்கு
இருந்தது சத்யானந்தா தான்.

அவரால் தான் இந்த
மக்களுக்கெல்லாம் நல்லது
நிகழ்ந்தன.

அவர் தொடர்ந்து எல்லா
நல்லதையும் நிகழ்த்திக்
கொண்டிருப்பார்'' என்று
பரமஹம்ஸர் அந்த நேரத்தில்
குறிப்பிட்டார்கள்.

7.6 ஆலமரக்குகை

இந்த வாழும் வரலாற்றுக்காக நாங்கள்
தீவிரமாக ஆராய்ச்சி செய்து
கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும்
பரமஹம்ஸரோடு சம்பந்தப்பட்டவற்றை
வெவ்வேறு கோணங்களில் பார்க்க
ஆரம்பித்தோம்.

பரமஹம்ஸர் அன்று எங்களிடம்
நின்று பேசின அந்த இடத்திற்கு அருகில்
இருந்த ஆலமரத்துக் குகையைப் பார்த்ததும்,
எங்களுக்குப் புதியதாக ஒரு சந்தேகம்
ஏற்பட்டது.

“ஆலமரத்தின் வயது முந்நூறில்
இருந்து அறுநூறு வரை
இருக்கும்” என்று
பரமஹம்ஸரும்
விஞ்ஞானிகளும்
சொன்னார்கள்.

அப்படிப் பார்க்கும் போது
300 வருஷத்திற்கு முன்பு
மேட்டூர் பகுதியில் நடந்த
நிகழ்வுக்கு பின், அவர் இங்கு
வந்து ஜீவசமாதி ஆன இடத்தில்
ஒரு குகை இருந்திருக்க
வேண்டும் அல்லது சீடர்கள்
இந்த குகையை
பரமஹம்ஸருக்காகக்
கட்டியிருக்க வேண்டும்.

குகைக்குப் பின்னால்
இருந்த ஆலமரம் மெல்ல
மெல்ல வளர்ந்து வளர்ந்து அந்த
குகையை மூடி விட்டிருக்க
வேண்டும்... என்பது
எங்களுக்கு புதியதாக ஏற்பட்ட
சந்தேகம்.

இந்த சந்தேகத்தைப்
பற்றி பரமஹம்ஸர் அடுத்த
முறை இந்தியா வரும்போது
நிச்சயம் கேட்போம்.

உங்களுக்கும் இதே
சந்தேகம் வந்திருக்கும் என்று
நினைக்கிறோம்.

7.7 இயற்கை வாஸ்து

பரமஹம்ஸர்

பரமஹம்ஸர்
மொத்த நிலத்தையும்
நடந்து பார்த்த பிறகு
தன்னுடைய பக்தர்களில்
ஒருவரான வாஸ்து
நிபுணரைப் பார்த்து,
“ஐயா மொத்த
நிலத்தையும்
பார்த்தீர்களா?” என்று
கேட்டார்.

வாஸ்து நிபுணரும் சிறியதாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, “பார்த்தேன் சாமி” என்றார்.

பரமஹம்ஸர், “எப்படி அமைந்திருக்கிறது பார்த்தீர்களா?” என திரும்பக் கேட்டார். வாஸ்து நிபுணர், “ஆமா சாமி! இந்த மாதிரி இயற்கையாகவே வாஸ்துப்படி

‘நைருத்தி மூலையில் என்ன இருக்கணுமோ அது சரியாக நைருத்தி மூலையிலும்,

வாயுமூலையில் என்ன சரியாக இருக்கணுமோ அது சரியாக வாயு மூலையிலும்

அக்னி மூலையில் என்ன இருக்கணுமோ அதுசரியா அக்னி மூலையிலும் கொண்ட ஒரு நிலத்தை இப்பத்தான் முதன்முதலில் பார்க்கிறேன் சாமி.

பொதுவாக ஏதாவது ஒரு சின்ன குறையாவது இருக்கும். அதை வாஸ்து மூலம் சரிசெய்ய வேண்டியிருக்கும். ஆனால் இந்த நிலம் தான் சாமி என்னுடைய வாழ்க்கையிலேயே முதல் முறையாகப் பார்க்கும் வாஸ்து சாஸ்திரப் படி அமைந்த நிலம். எது எது, எந்த எந்த, இடத்தில் இருக்க வேண்டுமோ! அது அது, அந்த அந்த, இடத்தில் இருக்கிறது.

நீர் எங்கு தேங்கி
இருக்கணுமோ அங்கே நீர்
தேங்கியிருக்கிறது.

எந்த இடம்
உயரமாக இருக்க
வேண்டுமோ அந்த இடம்
உயரமாக இருக்கிறது.

எந்த இடம்
வெட்டவெளியாக
இருக்கவேண்டுமோ அந்த
இடம் வெட்டவெளியாக
இருக்கிறது.

இது ஒரு இயற்கை
வாஸ்து சாமி” எனச்
சொல்லி முடித்தார்.

அவரைப் பார்த்து
சிரித்து, “ஆமாம்! நல்லது!”
என்ற வார்த்தைகளை
உதிர்த்துவிட்டு அங்கிருந்து
நகர்ந்து சென்றார்.

பெரிய அளவிற்கெல்லாம் கஷ்டப்பட
வேண்டியதில்லை. அவர் காண்பித்த
சிரத்தையையும், ஈடுபாட்டையும்
கொண்டு என்ன கஷ்டம் வந்தாலும்
சரி...

செய்ய ஆரம்பித்ததை
செய்துவிடுவது. என்ற ஒரேயொரு
சங்கல் பத்தை வாழ்க்கையில்
எடுத்துக்கொண்டால், சாதனை
என்பதெல்லாம் நம் கால்தூசிக்கு சமம்
ஆகிவிடும்.

இந்த சங்கல் பத்தை
விழிப்புணர்வோடு
எடுத்துக்கொள்ளுங்கள். உள்ளுலகிலும்,
வெளியுலகிலும்
வெற்றிவாகைசூடுவீர்கள்.

பரமஹம்ஸர் காண்பித்த சிரத்தையும், ஈடுபாடும் நம் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய பாடம்.

Sankalpam portrait