சங்கல்பம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
செய்ய ஆரம்பித்ததை செய்துவிடுவது
8.2 நீர் இல்லாத இடத்தில் ஊற்றெடுத்த நீர்
ஆஸ்ரம கட்டிட வேலைகளையெல்லாம்
துரிதமாக ஆரம்பித்த போது நிகழ்ந்த சம்பவம்
இது.
அன்று பரமஹம்ஸரைப் பார்க்க வந்த
பக்தர்கள் எல்லாரும் போர்வெல் போடப்
போவதை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக
இருந்தனர்.
நிலத்தடி நீர் எங்கு இருக்கிறதென்று
சரியாக பார்த்து அளந்து சொல்கின்ற ஒரு
நிபுணர் வந்திருந்தார்.
அவர் இந்த நிலத்தைப் பார்த்துவிட்டு,
"இந்த நிலத்தில் நீர் ரொம்ப ஆழமாக
இருக்கிறது.
அதனால் அவ்வளவு சாமானியத்துல நமக்கு நிலத்தடிநீர் கிடைக்காது சாமி. ரொம்ப ஆழமாக போர்வெல் போட்டாக வேண்டும் சாமி" என்று சொன்னார்.
அந்த நிபுணரோ பார்த்து சிரித்துவிட்டு,
"இந்த இடத்தில் போர்வெல் போட்டா நீர்
கிடைக்காது சாமி.
இந்த இடத்துல நிலத்தடி நீர் ரொம்ப
கம்மியா இருக்கு." என்று தன் கையில்
வைத்திருந்த நீர் ஆழும் காட்டும் கோலைப்
பயன்படுத்தி ஆராய்ந்து பார்த்துவிட்டு
சொன்னார்.
ரை ஒருமுறை பரமஹம்ஸர் பார்த்துவிட்டு,
க இங்கே போர்வெல் போடுங்க. தண்ணீர்
ம்" என்று சொன்னார்.
அவர் திரும்ப சிரித்துவிட்டு, ரொம்ப எடலா...
"என்ன சாமி சொல்றீங்க? நான் இந்தத்
றயில் நிபுணர். எத்துனை வருடம் அனுபவம்
க்கும் சாமி. நிச்சயமாக தண்ணீர் வராது" என
றஹம்ஸரை எதிர்த்து பேசினார்.
பரமஹம்ஸர் சாந்தமாக, "போர் போட டம் மட்டும் தானே வேணும்" எனச்சொல்ல
"..." பதிலேயில்லை
"இப்ப சொல்வதை மட்டும் செய்யுங்கள்" என
றஹம்ஸர் சொன்னதும் கிண்டல் பேர்வழி
மதியானார்.
நிலத்தில் போர்வெல் போட ஆரம்பித்தார்கள்.
ன ஆச்சரியம்! நிபுணர் சொன்ன ஆழத்தில்
தூரம் போவதற்குள்ளேயே தண்ணீர்
ணரின் முகத்திலேயே பீய்ச்சி அடித்தது.
அதுவரை நிமிர்ந்திருந்த நிபுணரின் தலை ழ்ந்தது.
பரமஹம்ஸரால் திடமாயிருக்கும் நிலத்திற்கு
யில் இருக்கும் நீரைக் கூட பார்க்க
ந்திருக்கிறது.
நாம் கற்பனை கூட செய்து பார்க்க
யாத கோணத்திலிருந்து பரமஹம்ஸரால்
யல்படமுடியும் என இச்சம்பவம்
ழமாய்ப் புரியவைக்கிறது.

பரமஹம்ஸரால்
திடமாயிருக்கும்
நிலத்திற்கு அடியில்
இருக்கும் நீரைக் கூட
பார்க்க முடிந்திருக்கிறது.
8.3 லதாஅம்மா வீடு
பரமஹம்ஸர் லதா அம்மா வீட்டில் தங்கியிருந்த காலத்தைப் பற்றி குறிப்பிடும்போது, “அது ஒரு வசந்தகாலம்” என்று தான் பக்தர்கள் குறிப்பிடுவார்கள்.
அந்த காலம் எந்தவித விதிமுறைகளோ, கட்டுப்பாடுகளோ சிறிதும் இல்லாத காலம். சமுதாயத்தில் இருக்கக் கூடிய சாதாரண விதிகளை எல்லாம் மீறி வாழ்ந்த காலம்.
அவர்கள் எப்பொழுது சிரித்து பேச வேண்டும் என்று நினைக்கிறார்களோ அப்பொழுது சிரித்து பேசுவார்கள்.
எப்பொழுது வெளியில் கிளம்ப வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அப்பொழுது வெளியே கிளம்பிச் சென்றுவிடுவார்கள்.
சில நேரங்களில் இரவு உணவிற்காக, சாப்பாட்டை தட்டில் வைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்களென்றால்,
பேசுவார்கள், பேசுவார்கள், பேசிக்கொண்டே இருப்பார்கள். அந்த சாப்பாடும் அப்படியே இருக்கும்.
நடுநிசியில் திடீரென்று ஞாபகம் வந்ததுபோல் 'ஓ!' நாம சாப்பிட ஆரம்பித்தோம்மில்லை என்று சொல்லி தட்டிலிருக்கும் சாப்பாட்டை மீண்டும் சாப்பிடத் துவங்குவார்கள்.
அப்படி சாப்பிட ஆரம்பித்து, மீண்டும் பேசிக் கொண்டே சாப்பிட்ட பின் பார்த்தால் விடிந்திருக்கும். காலை எட்டு, ஒன்பது மணியாகி இருக்கும்.
'ஓ!' மணி ஒன்பது ஆகி விட்டதா? சரி சரி காலை உணவை சாப்பிட்டுவிடலாம் என்று காலை உணவை சாப்பிடுவார்கள்.
'சரிப்பா! தூங்க செல்லலாம்" என்று உடனேயே தூங்கச் செல்வார்கள்.
அப்பொழுது தான் பொழுது விடிந்து உலகமே இயங்கி கொண்டிருக்கும். ஆனால் இவர்களுக்கு அது இரவு நேரமாக இருக்கும்.
எவ்வளவு நேரம் படுத்துத் தூங்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ! அவ்வளவு நேரம் தூங்கிய பின் தான் எழுந்திருப்பார்கள். அப்பொழுது மொத்த உலகமும் தூங்குவதற்கு தயாராகிவிட்டிருக்கும்.
இவர்களுக்கு அப்பொழுதுதான் பொழுது விடிந்து ரொம்ப உற்சாகமா, 'அடுத்து என்ன செய்வது? ஏது செய்வது?' என்று மீண்டும் கூடி பேச ஆரம்பிப்பார்கள்.

ஒரே ஒரு குறிக்கோள்தான் - திரும்ப சிரிப்பது, திரும்ப கும்மாளம் அடிப்பது, திரும்ப விளையாடுவது. என்று ஒரே கொண்டாட்டமாக அந்த இடம் மாறிவிடும்.
மீண்டும் நடு நிசிவரையிலும் செல்லலாம், அல்லது உடனேயே கூட முடிந்துவிடும்.
அவர்கள் விழித்திருக்கும் வரை அந்த மொத்த இடமுமே குதூகலமாக கொண்டாட்டக் களமாக இருக்கும்.
இப்படி எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ரொம்ப சுதந்திரமாக, ஒரு பட்டாம்பூச்சி போல சந்தோஷமாக வாழ்ந்த காலமாக அந்தக் காலத்தை பரமஹம்ஸர் கூட வாழ்ந்த பக்தர்கள் எல்லாரும் குறிப்பிடுகிறார்கள்.
8.4 அஷக்தபோக்ஷசபா
பரமஹம்ஸர் 'டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங்' படித்து முடித்திருந்தார்.
அதனால் பரமஹம்ஸருக்கு பெரிய அளவில் ஆங்கிலமோ, மத்த மொழிகளோ கற்றுக் கொள்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தது.
பெங்களூர் வந்தபிறகு 'Healing' வாங்குவதற்கும், பரமஹம்ஸரை சந்திப்பதற்கும் மேல் தளத்திலிருக்கக்கூடிய மக்கள் பலர் வந்து பார்க்க ஆரம்பித்தார்கள்.
P.hd., முடித்த பேராசிரியர்கள், மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என இப்படி சமுதாயத்தின் வி.ஐ.பி.க்கள் எல்லாம் வந்து பார்க்கத் துவங்கினார்கள்.
வெவ்வேறு நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பரமஹம்ஸரை சந்திப்பதற்கு மக்கள் வரத்துவங்கினார்கள்.
வரும் பக்தர்களுக்கு ஆன்மீகத்தையும், தியானத்தையும் கற்றுக் கொடுப்பதற்கு பரமஹம்ஸர் ஆங்கிலம் பேசியே ஆக வேண்டிய கட்டாயம் உருவானது.
இதற்கு முன்பு பரமஹம்ஸர் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர் அல்ல. அப்பொழுதுதான் பேசுவதற்கு ஆரம்பித்தார்.
அனைவரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். "என்னப்பா இது? ஒரு சில நாட்கள் தான். சாமி பேசிப் பார்த்தார். அதுக்குள்ள ஆங்கிலத்தில் ஒரு செய்தியை சொல்லும் அளவிற்கு கற்றுக்கொண்டார்களே!" என்று பேசிக் கொண்டார்கள்.
அப்படி இருக்கும் பொழுது, பரமஹம்ஸர் திடீரென்று அறிவித்தார், "ஆங்கிலத்தில் ஒரு தியான முகாம் நடத்தப் போகிறோம்."
"அந்த தியான முகாம் ஏழுநாட்கள் இருக்கும்" என்று சொன்னார்.
இதைக் கேட்டதும் அம்மா, ஐய்யா எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி! "என்னது" பரமஹம்ஸர் இப்பதான் பேச ஆரம்பித்துள்ளார். இலக்கணமெல்லாம் சரியாக உபயோகித்து, இப்போது தான் பேசுவதற்கே முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
இன்னும் முழுமையாக பேச ஆரம்பிப்பதற்குள்ளாகவே, ஒரு வாரம் தியான முகாம் நடத்தப்போவதாகச் சொல்கிறாரே?
வி.ஐ.பி.கள் எல்லாரையும் கூப்பிடுங்க என்று வேறு சொல்கிறாரே. இது எப்படி சாத்தியமாகும்? எப்படி நடத்தப்போகிறார்? ஒன்றும் நம்பமுடியவில்லையே'' என்று பதபதைத்தார்கள்.
"சரி, எது எப்படி இருந்தாலும், சாமி சொல்லிட்டாங்க சாமி சொல்லிட்டா செய்துவிட வேண்டியது தான்" என்று சொல்லி அஷக்தபோக்ஷசபா என்ற இடத்தில் வி.ஐ.பி.களுக்கான ஏழு நாள் தியானமுகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்தார்கள்.
தியான முகாமில் வி.ஐ.பி.க்கள் கலந்துகொண்டார்கள் பரமஹம்ஸர் அவர்களுக்கு ஆங்கிலத்தில் உரையாற்ற ஆரம்பித்தார். மெத்தப் படித்த மனிதர்களும் ஆச்சரியப்படும் படி பரமஹம்ஸர் உரையாற்றினார்.
"சாதாரண பிள்ளைத்தமிழ் என்று சொல்லுவார்களே, அதுபோல், சின்ன சின்ன வார்த்தைகளை பயன்படுத்தி மிகவும் எளிமையாக, இவர் என்ன இவ்வளவு அழகாக பேசுகிறார்?" என்று வந்தவர்கள் ஆச்சரியப்படும் வகையில் எளிமையாகவும் பரமஹம்ஸர் பேசி முடித்தார்.
ஆனால் பக்தர்கள் அனைவரும்,
இவர் நன்றாக பேசினாரா இல்லையா?
என்று தெரியாமல் குழப்பத்தில்
இருந்தனர்.
தங்களுடைய அனுபவங்களை
பகிர்ந்து கொள்வதற்காக
தியானமுகாமில் கலந்து
கொண்டவர்களை பரமஹம்ஸர்
அழைத்த போது, ஒரு வி.ஐ.பி
எழுந்தார்.
"ஒரு விஷயத்தை இவ்வளவு
நேரமாகவும் இவ்வளவு
எளிமையாகவும் இவ்வளவு
அருமையாகவும் ஒருவர் சொல்லி
இதுவரைக்கும் என் வாழ்க்கையில்
கேட்டதேயில்லை" என்று அவர்
சொன்னதும், அங்கு இருந்த மக்கள்
அனைவரும் அரங்கமே அதிரும்
அளவிற்கு கைதட்டினார்கள்.

'இரத்தினச் சுருக்கம்' என்கிற
வார்த்தைக்கு இலக்கணமாக
பரமஹம்ஸர் பேசியிருந்தார்.
"சாதிக்க ஆயத்தங்கள்
தேவையில்லை, சாதிக்கக்
குதியுங்கள்.
உங்களிடம் உள்ளதை
வைத்தே வெற்றியின்
சிம்மாசனத்தில் ஏறி
உட்காரவைக்கப்படுவீர்கள்" என
பரமஹம்ஸரின் வாழ்வியல்
போதனைக்கு இச்சம்பவம்
மாபெரும் உதாரணம்.
முதல் A.S.P.
8.5 முதல் A.S.P.
பரமஹம்ஸர் ஒரு நாள்
விளையாட்டாய் சொன்னார், "ஒரு
புதுமையான தியான முகாம் ஒன்றை
நாம் நடத்தப்போகிறோம். ஆனந்த
ஸ்பூரண தியான முகாம் என்று பெயர்.
A.S.P. என்று அதை அழைப்பார்கள்.
இந்த தியான முகாம் உலகம்
முழுக்க கலக்கப்போகுது. மிகவும்
பிரபலமாக இது ஆகப் போகிறது"
என்று சொன்னார்.
பரமஹம்ஸர் சொன்னவுடனேயே
பக்தர்கள் எல்லாரும் "A.S.P. யா?
அப்படியென்றால் என்ன சாமி?
ஆனந்த ஸ்பூரண தியான முகாமில்
என்ன சொல்லித் தரப்போகிறீர்கள்"
என்று கேட்டார்கள்.
பரமஹம்ஸரோ, "யாருக்குத்
தெரியும்!" என்று சொன்னார். பதிலை
கேட்ட அனைவரும்
சிரித்துவிட்டார்கள். "என்ன சாமி?
சொல்றீங்க. A.S.P. என்றால் என்ன
என்று சொல்லுங்க சாமி" என்று
மீண்டும் கேட்டார்கள்.
மீண்டும் பரமஹம்ஸர் "அது
யாருக்குத் தெரியும்! அங்க என்ன
வருதோ அதுதான்!" என்று
சொன்னார்.
சொன்னதோடு
நின்றுவிடாமல் "தேவனஹல்லி
என்னும் இடத்தில் தியானபீடத்தின்
முதல் A.S.P. நடக்கப்போகிறது
என்றும் அறிவித்தார்.
முதல்நாள் தியான அனுபவ
முகாமின் முதல் வகுப்பு செல்லும்
முன் பரமஹம்ஸர் சிறிது நேரம்
மௌனமாக அமர்ந்திருந்தார்.
சில நிமிடத்திற்கு பின், "இந்த
A.S.P. எனும் தியான முகாம்
ரொம்ப நல்ல தியான முகாமாக
இருக்கும். ரொம்ப அருமையாக
இருக்கும்."

“அது யாருக்குத் தெரியும்! அங்க என்ன வருதோ அதுதான்!” என மண்டபத்திற்குள் நுழையும் முன் சொன்னவரா இவர்! என அவர்களுக்கே சந்தேகம் வந்து விட்டதாம்.
“காரணம் மிகத்தேர்ந்த மேடைப் பேச்சாளர் போன்றும், ஆன்மீகத்தில் Phd., பட்டம் வாங்கியவர் பேசும் வார்த்தைத் தெளிவும், 90 வயதைத் தாண்டிய அனுபவாளியின் வாழ்க்கையைப்பற்றிய அசாத்திய விளக்கமும் பரமஹம்ஸரின் பேச்சில் வெளிப்பட்டது தான்!” என உடன் இருந்த பக்தர்கள் எங்களிடம் குறிப்பிட்டார்கள்.
“இரண்டாம் உலகப் போரில் நிகழ்ந்த ஒரு சின்ன கதை” என்று சொல்லி ஆரம்பித்தார். ஆரம்பித்த பின் தான் மெல்ல ஒவ்வொரு சக்கரமும், சக்கரமாக விளக்கும் முறையே பிறந்ததாக பரமஹம்ஸர் சொன்னார்.
“ஏழு சக்கரங்களை ஏழு மதத்திலிருந்து எடுக்கலாம். எடுத்து தொகுத்துக் கோர்த்து இந்த மாதிரி வாழ்க்கைக்கு நேரடியாகப் பயன்படும்படி கொடுக்கலாம்”
என்பதை முன்கூட்டியே திட்டமிட்டால், “சரி அடுத்து இப்படி செய்யலாம், இப்படி கொடுக்கலாம்” என்று அந்தந்த வினாடிக்கு ஞானக்கருத்துகள் வெளிவர துவங்கிற்று.
இவ்வாறு சுமுகமாக உருவாகியது தான் நம்மையெல்லாம் பரமஹம்ஸரோடு கட்டிப் போடும் A.S.P.!
இரண்டாம் நாள் நிறைவுப்பகுதியில் ஒவ்வொருவரும் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட போது, ஒருவருடைய பாராட்டு உரை குறிப்பிடத்தகுது...அது...
“சுவாமி நீங்கள் ஹாலுக்குள் வருவதற்கு முன்பு, நாங்கள் இப்படி பேசிக்கொண்டோம். ஏதோ திருவண்ணாமலையிலிருந்து ஒரு சின்ன பையன் வந்திருக்கிறார். ஒரு சாமியாம். அவர் தொட்ட நோய்களெல்லாம் குணமாகிறதாம்?
ஏதோ சிரித்து சிரித்து பேசுவாராம்.
சரி என்ன தான் பேசுவார் என்று பார்க்க வந்திருக்கேன்” என்று சுற்றி இருக்கிறார்கள் அனைவரும் பேசி சிரித்துக் கொண்டிருந்தோம்.
நீங்கள் அறைக்குள் நுழையும் போது கூட பார்ப்பதற்கு அப்படித்தான் இருந்தீர்கள்.
“என்ன பேசப் போகிறேன் என்பதையே இனிதான் முடிவு செய்யதாகனும்?” என்று சொல்லி ரொம்ப சாதாரணமாக சொன்னார். அப்புறமாக தியான மண்டபத்திற்குள் நுழைந்ததும் கடகடவென பெய்யும் மழைப்போல் பேச ஆரம்பித்தார்.
அதுவரை பரமஹம்ஸரிடம் விளையாட்டாய் பேசிக்கொண்டிருந்தவர்கள் வியர்த்துப்போனார்கள். ஒரு சின்ன பையன் ரொம்ப நளினமாக வந்து மெல்ல உட்கார்ந்த மாதிரி இருந்தது.
ஆனால் முதல்பகுதி முடிவதற்கு முன்பாகவே
எங்க எல்லோருடைய தலையும் உடைப்பட்டதை
உணர்ந்தோம்" என்று சொன்னார்கள்.
"இது நாள் வரையிலும் சைக்காலஜி,
தத்துவம், உலகம் என்று என்னென்ன தெரிந்து
வைத்திருந்தோமோ, அந்த அத்தனை ஐடியாவும்
தலைகீழாக உடைந்தது.
அது மட்டும் அல்லாமல், நாங்கள் இத்துனை வருடமாக எதை தேடிக்கொண்டிருந்தோமோ அவை எல்லாவற்றிற்கும் ஞான விடை கிடைத்து விட்டது. அதற்கு மேல் நடந்த ஒவ்வொரு சக்ரா வகுப்பும் எங்களுக்கு கிடைத்த பரிசாகவே கருதுகிறோம்" என சொன்னார்கள்.
A.S.P. பற்றி பரமஹம்ஸர், "இதுவரையிலும் என்னவெல்லாம் சாமி சொல்ல விரும்புகின்றேனோ,
எதையெல்லாம் சொல்ல நினைத்தேனோ...!
இப்பொழுது என்ன
சொல்லிக்கொண்டிருக்கிறேனோ, இனிமேல் என்ன
சொல்லப் போகிறேனோ, ஆகிய எல்லாவற்றையும்
மொத்தமா சேர்த்துக் கொடுத்ததுதான்
ஆனந்தஸ்பூரணா தியான முகாம்" என்று
சொன்னார்.
மேலும் அவர், "அத்துனை உண்மைகளையும் மிக எளிய வடிவில் A.S.P. ல் தந்திருக்கிறோம்" மனம் மிகவும் எளிமையாக இருக்க கூடியதை ஏற்றுக்கொள்ளாது.
ஆங்கிலத்தில், (MIND
IS SO COMPLEX' THAT'S
WHY MIND CANNOT
ACCEPT THE SIMPLE
TRUTH') என சொல்வார்கள்.
இந்த எளிமையான
கருத்துக்களை ஏற்றுக்
கொள்ளாத அளவிற்கு
சிக்கலாகிப் போன மனதை
கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி
எளிமைப்படுத்துவதுதான்
A.S.P. -ஐ தாண்டி உள்ள
எல்லா அடுத்தகட்ட தியான
முகாம்களும்" என A.S.P.
பற்றிய ரகசியத்தை அன்றே
பகிரங்கமாய் அறிவித்தார்.
இதை ஒவ்வொருவரும்
முழுமையாக ஜீரணித்து ஒரே
ஒரு A.S.P. யில்
உருப்படியாகக் கலந்துகொண்டு
பங்கு பெற்றோமானால்,
'பரமஹம்ஸர் உங்களுக்கு
என்ன தர விரும்புகிறாரோ,
அது அத்துனையும்
முழுமையாக கிடைத்துவிடும்.
முயற்சிகளை முழுமையாக்குங்கள்.
கிடைக்க வேண்டிய அத்தனையும் அந்த நொடியிலேயே கிடைத்து விடும்.
8.6 காண்டஸா காரில் சிக்கிய விரல்

ஒருமுறை பெங்களூரில் தியான சொற்பொழிவை முடித்தபின் பரமஹம்ஸர் பக்தர் ஒருவரின் காண்டஸா காரில் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது.
கார் கதவின் விளம்பிலிருந்து பரமஹம்ஸர் இன்னும் தன் கரத்தை எடுக்கவேயில்லை. அதற்குள் எதிர்பாராத விதமாக கதவு சாத்தப்பட்டு விட்டது.
‘சதக்’ என கதவு இடுக்கில் சிக்கிய விரல் நசுங்கிப்போனது.
“அய்யோ அம்மா!” என அலறி கூச்சலிடுமளவுக்கு அந்த விரல் நசுங்கிப்போயிருந்தாலும் பரமஹம்ஸரின் முகத்தில் வேதனையின் ரேகைகள் தெரியவே இல்லை.
அவர் சாதாாணமாக அந்தவிரலை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாராம். இந்த சம்பவம் பற்றி Laughing Templeல் அப்போது அருகேயிருந்தவர்கள் விளக்கிச் சொன்னத கேட்டுக்கொண்டிருந்தோம்.
“. . அப்போது பொதுவாகப் பார்த்தார் என்றால், பரமஹம்ஸருக்கு கொஞ்சம் கூட வலி ஏற்படவே இல்லையா! ஆச்சரியமாக இருக்கிறதே...” என நாங்கள் ஆச்சரியமாய் பேசிக்கொண்டிருக்கையில்..
அங்கே வந்து சேர்ந்த பரமஹம்ஸர், “இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? என கேட்டபடியே Laughing Templeக்குள் நுழைந்தார்.
“‘சாமி!!!’” என வாரிச்சுருட்டிக் கொண்டு சிரித்த முகத்தோடு எழுந்து நின்றோம்.
பரமஹம்ஸர், “காண்டஸாவில் கைவிரல் நசுங்கிய போது சாமிக்கு வலித்தது. உங்களுக்கு வலிக்கும் அதே அளவுக்கு வலித்தது. ஆனால், அய்யயோ வலிக்குதே! அம்மம்மா வலிக்குதே! என உங்களை வேதனை பட வைக்கும் வேதனை இல்லை.
காண்டஸா காரில் சிக்கிய விரல்
விழிப்புணர்வோடு வலியை பார்க்கப் பார்க்க வலி அதிகரிப்பதை உணர்ந்தோம். அப்புறமும் தொடர்ந்து 'என்னதான் நடக்கிறது, நடக்கட்டும் எனும் விழிப்புணர்வோடு பார்க்கப் பார்க்க வலி குறைந்தது.
சாமி வலி வந்த போது முழு விழிப்புணர்வோடு அந்த விரலை அனுகினோம்.


விழிப்புணர்வோடு வலியை
பார்க்கப் பார்க்க வலி அதிகரிப்பதை
உணர்ந்தோம்.
அப்புறமும் தொடர்ந்து
'என்னதான் நடக்கிறது, நடக்கட்டும்
எனும் விழிப்புணர்வோடு பார்க்கப்
பார்க்க வலி குறைந்தது.
ஒரு சாட்சியாக இருந்து
நசுங்கிய விரலை பார்க்க பார்க்க
வலி குறைந்ததோடு
மட்டுமல்லாமல், அந்த வலி
உடனே குணமடைந்ததை
உணர்ந்தோம்.
சாட்சியாக இருந்து
பார்க்கையில், உடலின் தனிப்பட்ட
ஞானம் (body விழித்துக்
கொண்டதை தெளிவாக உணர
முடிந்தது.
உடலில் இருக்கும் சக்தி
அனைத்தும் ஒன்றாய் திரண்டு வலி
இருக்கும் இடம் நோக்கி பாய்வதை
உணர முடிந்தது.
சில நிமிடங்களுக்கு பின் வலியே இல்லை.
சாமியும் அந்த விரலை மறந்துவிட்டோம்.
விரலும் வலியை
மறந்துவிட்டு நிம்மதியாய் இருந்தது
என சொல்கிறார்கள்” என
அப்புறமாய்
எங்களுக்கு வெவ்வேறு
சூழலில் சிறுகாயம், அடி,
கொசுக்கடி என்று ஏற்பட்ட
போதெல்லாம் பரமஹம்ஸர்
தன் விரல் வலியை பார்த்தது
போலவே பார்த்தோம்
ஆச்சரியமடைந்தோம்.
காரணம், ஒவ்வொரு
முறையும் எங்களுக்கு
பரமஹம்ஸரின் உடலில்
நிகழ்ந்ததே நிகழ்ந்தது. வலி
வேதனையாக மாறாமல்
மறைந்து போனது.
காயங்களும் வெகு
சீக்கிரத்தில் குணமாகிப்
போகின. பரமஹம்ஸரின்
வாழ்வில் நிகழ்ந்த இந்தச்
சம்பவம் ஒரு அருமையான
தியானம். ஒவ்வொருவரும்
அடிக்கடி செய்ய வேண்டிய
ஆழமான தியானம் இது.

ஆசிய கண்டத்திலேயே மிக நீளமானது பெங்களூரில் உள்ள மைசூர் பாலம். இதை கடந்து தான் பரமஹம்ஸர் தினம் பிடதி ஆஸ்ரமத்திற்கு வருவார், பின் பெங்களூரில் இருக்கும் தியான சிகிச்சை மையத்திற்கு வருவார்.
ஒருமுறை மைசூர் பாலத்திற்கு அருகே உள்ள ஒரு வளாகத்தில் பரமஹம்ஸர் சொற்பொழிவாற்ற வேண்டியிருந்தது. மைசூர் பாலம் வரை வந்த டிரைவருக்கு வளாகம் எங்கிருக்கிறது எனக் கண்டுபிடிக்க தெரியவில்லை.
டிரைவரின் தடுமாற்றத்தை பார்த்த பரமஹம்ஸர், "என்னப்பா வழி தெரியவில்லையா?" என கேட்டதற்கும் ஆமாம் என்ற வாக்கில் தலையசைத்தார்.
8.7 கண்ணுக்கு தெரியாத மசூதி

பரமஹம்ஸர் : "மைசூர் பாலம் தெரியுமா?"
டிரைவர் : "தெரியும் சாமி"
பரமஹம்ஸர் : "அந்த பாலத்தின் அருகில் ஒரு பெரிய மசூதி இருக்கறதல்லவா..."
டிரைவர் : "மசூதியா??? அது எங்கே அங்கேயிருக்கிறது!"
பரமஹம்ஸர் : "என்னப்பா இப்படி சொல்கிறாய். அது பெரிய மசூதியாச்சேப்பா"
டிரைவர் : "என்ன சாமி சொல்றீங்க... தினம் இரண்டு முறையாவது மைசூர் பாலத்தை கடக்கிறேன். அங்கே அப்படியொரு மசூதி இல்லவே இல்லை"
பரமஹம்ஸர் : "எனக்கும் அதே சந்தேகம் தான். தினம் இரண்டு முறை கடக்கும் உன்கண்ணில். அது படாமல்போனது எப்படி!"
அடுத்து பரமஹம்ஸர் படிப்படியாக "இடது பக்கம் திரும்பி பின் வலது பக்கம் திரும்பி நேரே சென்றால் வளாகம் செல்லும் வழி வரும், அங்கே ஒரு ஆஞ்சநேயர் கோயில் கூட வருமேப்பா" என வழியை விளக்க டிரைவர் "ஆஞ்சநேயர் கோயிலா சாமி! அது எனக்கு நல்லா தெரியுமே. ஆஞ்சநேயர் கோயிலுக்கு பக்கத்தில் என்று சொன்னால் எனக்கு உடனே புரிந்திருக்கும்.
ஆனால் இந்த இடத்தில் மசூதி எங்கே வருகிறது..." என சந்தேக குரலோடு கேட்டுக்கொண்டே வந்தவர் சடன் பிரேக் அடித்து வண்டியை நிறுத்தினார். எதிரே வந்த ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகேயே தெரிந்தது பரமஹம்ஸர் குறிப்பிட்ட மசூதி!
ஆஞ்சநேயர் கோயிலை விட பல மடங்கு பெரிதாக இருந்த மசூதியைப் பார்த்து டிரைவர் ஆச்சரியமடைந்தார்.
A.S.P. தியான முகாமை பரமஹம்ஸரே நடத்திய காலங்களில்... "யாரும் உலகத்தை முழுமையாகப் பார்ப்பதேயில்லை அவரவர் விருப்பப்படி தான் உலகத்தைப் பார்க்கிறார்.
அதுவும் தங்களுக்குப் பிடித்த உலகத்தை மட்டுமே பார்க்கிறார்கள். நிஜ உலகம் என்பது வேறு" என பரமஹம்ஸர் சொல்லும் ஞானக் கருத்துக்கு மேற்கண்ட சம்பவம் ஒரு அருமையான வாழ்வியல் உதாரணம்.
தன் மதம், தன் இனம் எனும் மனதின் சிறு வட்டத்திற்குள்ளேயே வாழ்ந்ததால் தான் இவ்வளவு பெரிய மசூதி பலமுறை தன் கண்ணில் பட்டிருந்தும், அது நினைவில் பதிவாகவில்லை என்பதை புரிந்து கொண்ட டிரைவர் தன் தவறுக்காக மன்னிப்பு கேட்டார்.