தியானபீடம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மொத்தமும் காடாக இருந்த இடம் நாடாகியிருக்கிறது.
பரமஹம்ஸருடைய உடலிருந்து வெளிப்படக்கூடிய அந்த ஆனந்த சக்திதான் இந்த அத்தனையும் சாதித்து இருக்கிறது.
பரமஹம்ஸரும் அவரோடு இருந்த பக்தர்களும் சேர்ந்து ஆஸ்ரமம் கட்டும் பணியையும், தொடர்ந்து பொதுமக்களுக்கு ஹீலிங் செய்கின்ற பணியையும் மாற்றி மாற்றி பார்த்துச் செய்து கொண்டிருந்தார்கள்.
இந்த மொத்த ஆஸ்ரமத்தையும் கட்டுவதற்கு பரமஹம்ஸர் வெகு பிரயத்தனம் பட்டிருக்கிறார்கள் என ஏற்கனவே விவரித்திருந்தோம்.
அந்த பிரயத்தனத்தையெல்லாம் நாம் கேட்கும்போதே நம் கண்களிலிருந்து நீர் பெருகும். அந்தளவிற்கு ஒவ்வொரு நிமிடத்தையும் சிந்தித்துப் பார்த்தால் தான் பரமஹம்ஸருடைய அன்பையும், கருணையையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
இரவு பன்னிரெண்டு, பன்னிரெண்டரை மணிக்குத்தான் பெங்களூர் சிட்டி சென்டரில் ஹீலிங் முடியும். அங்கு பக்தர்களில் யாராவது ஒருவர் காரில் பரமஹம்ஸரை பிடதிக்கு அழைத்து வருவார்கள்.
பிடதி ஆஸ்ரமத்திற்கு வந்த உடன் ஆஸ்ரமத்தில் ஒரு சிறிய மாட்டு கொட்டகை உள்ளது. ஆலமரத்திற்கு அருகில் அந்த கொட்டகை இன்னும் இருக்கின்றது. அந்த கொட்டகையில் தான் பரமஹம்ஸர் தங்கியிருப்பார்கள்.

ஆலமரத்திற்கு
அருகில்...
அந்த கொட்டகை
இன்னும் இருக்கின்றது.
அந்த கொட்டகையில் தான்
பரமஹம்ஸர் தங்கியிருப்பார்கள்.
அந்த கொட்டகை மாடு கட்டி
வைக்கின்ற கொட்டகை.
அந்த கொட்டகையை பார்த்தாலே நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். ஏனென்றால், அந்த கொட்டகை மாடு கட்டி வைக்கின்ற கொட்டகை. பகல் நேரத்தில் அந்த கொட்டகையில் மாட்டுக்கான தீவனம் இருக்கும் அவற்றையெல்லாம் அங்கு கட்டி வைத்திருப்பார்கள்.
இரவில் பரமஹம்ஸர் வந்தவுடன் தங்குவதற்கு வேறு எந்த இடமும் இல்லாததால் அங்கே தங்கிவிடுவார். அப்போது இங்கு ஒரு கட்டிடம் கூட இல்லாததால் கொட்டகையில் உள்ளே தூங்குவதற்கு ஒரு சிறிய கட்டில் ஒன்றும் அதுவும் ஒடிந்து போன கட்டில், சரியான நூலில் கட்டப்படாத ஒரு கட்டில்...
அந்த கட்டிலில் பரமஹம்ஸர் வந்தவுடன் படுத்துக்கொள்வார்கள் விடியற்காலையில் எழுந்து, இந்த ஆஸ்ரமத்தின் பணிகளை பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
"கட்டுமானப்பணிகள் சரியாக நடக்கின்றதா, எப்படி நடக்கிறது, நேற்று கொடுத்த வேலைகளையெல்லாம் சரியாக முடிந்திருக்கிறதா? என அங்குள்ள அத்தனை வேலையாட்களையும் அழைத்து, காலையிலேயே விசாரித்து மேற்பார்வையிட ஆரம்பித்துவிடுவார்கள்.
என்னென்ன செய்ய வேண்டும், அதை எப்படி, எப்படியெல்லாம் செய்ய வேண்டுமென்று சொல்லி, மொத்த கட்டுமானப் பணியையும் பரமஹம்ஸரே நேரே இருந்து அவருடைய சுய விருப்பப்படி இந்த ஆஸ்ரமத்தை வடித்துக் காட்டினார்கள்.
காலையில் இருந்து மதியம் வரை இங்கு இருந்து கட்டிட பணிகள் மத்த பணிகள் எல்லாம் பார்ப்பார்கள். இந்தப் பணிகளை பார்த்து முடித்தபிறகு, மீண்டும் பரமஹம்ஸர் வண்டியில் ஏறி மதியத்திற்கு மேல் சிட்டி சென்டருக்கு சென்று சேருவார்கள்.

அங்கு பக்தர்கள் கூட்டம் அவர்களுக்காக காத்துக்கொண்டு இருக்கும் சென்றவுடனே ஹீலிங் செய்ய ஆரம்பித்தார்களென்றால், நூற்றுக்கணக்கான நோயாளிகள் இருப்பார்கள், ஒவ்வொருவருக்கும் ஹீலிங் செய்து, செய்து, அது முடிய இரவு பன்னிரெண்டில் இருந்து பன்னிரெண்டரை மணியாகிவிடும்.
பன்னிரெண்டரை மணிக்கு முடிந்த உடன், திரும்பவும் அங்கிருந்து கிளம்பி பிடீக்கு வருவார்கள். பிடீயில் திரும்பவும் அடுத்தநாள் காலையில் இருந்து மதியம் வரை, பிடீயில் இருக்கும் கட்டுமானப்பணிகளை பார்த்துவிட்டு, திரும்பவும் உடனே இங்கிருந்து மதியமே கிளம்பி சிட்டி செண்டர் சென்றாக வேண்டும்.
இப்படி ஓய்வே இல்லாமல்நான் பரமஹம்ஸர் இந்த தியானபீடத்தை கட்டியிருக்கிறார்.
இப்படி தொடர்ந்து மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் கொஞ்சம்கூட உடலுக்கு ஓய்வே கொடுக்காமல் இந்த இரண்டு வேலைகளையும் பரமஹம்ஸர் மாறி, மாறி பார்த்து, பார்த்துத்தான் இந்த மொத்த தியான பீடத்தையுமே கட்டியிருக்கிறார்கள்.
இந்த தியானபீடத்தை கட்டுவதற்கு பரமஹம்ஸருக்கு தனிப்பட்டமுறையில் பணமோ, சொத்தோ கிடையாது.
இந்த ஆஸ்ரமத்தை ஆரம்பிக்கும்போது ரூ.13.45 காசுதான் பரமஹம்ஸர் கையில் இருந்தது.
ஆரம்பிப்பதற்கு முன், அவர் கையில் இருந்த காசை ஒரு துணியில் எடுத்துப்போட்டு எண்ணியிருக்கிறார். பதின்மூன்று ரூபாய் நாற்பத்தைந்து காசுதான் இருந்தது.
அதுகூட காவிரிக்கரையில் இருக்கும் போது அவ்வப்போது அங்கிருந்த ஏழைமக்கள் வந்து ஒரு ரூபாய், நாலனா, அரையனாவென்று அவர்கள் போட்ட அந்த காசுகளைத்தான் ஒன்றாக எடுத்துக் கட்டி வைத்திருந்திருக்கின்றார்.
அந்த பதின்மூன்று ரூபாய் நாற்பத்தைந்து காசுதான் கையில் இருந்தது. ஆஸ்ரமத்தை பரமஹம்ஸர் கட்ட ஆரம்பித்தார்கள்.
தனிப்பட்ட முறையில் பரமஹம்ஸருக்கு எந்தப் பணமும் இல்லாததால், மதியத்திலிருந்து இரவு வரைக்கும் தியான சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பக்தர்கள் அவர்களாக விரும்பி என்ன காணிக்கையை பரமஹம்ஸரின் பாதத்தில் வைத்துவிட்டு செல்கிறார்களோ, அந்த காணிக்கையை ஒன்றாக சேர்த்து சேர்த்துதான், தியானபீடத்தையே பரமஹம்ஸர் கட்டினார்.
இந்த தியானபீடத்தின் மகிமையை ஒருமுறை பரமஹம்ஸர் இப்படிசொன்னார்... அப்போது பரமஹம்ஸர் நடத்தும் ஒரு வருட இலவச குருகுல கல்வியில் நாங்கள் அனைவரும் சேர்ந்திருந்தோம்.
நாங்கள் அனைவரும் ஆனந்த சபைக்குள் பரமஹம்ஸருடன் இருந்த பொழுது, அங்கு தெய்வங்களை ஒன்றொன்றாக பார்த்துவிட்டு, "அம்மா! அப்படியே யாசகத்துல வந்ததென்று நினைக்காதீங்கபா!
இங்கே இருக்கிற ஒவ்வொறு கல்லும் ஒவ்வொருத்தரின் கால்வலி குணமானதால் வந்தது.
அங்கே இருக்கிற நடராஜர் மேல போடப்பட்டிருக்கிறது.. காசுமாலை இல்லைப்பா! ஒருத்தரோட காமாலை. அவரோட காமாலை குணமானதால் குடுத்தது அது.
அங்கே சாமிக்குகாக இருக்கிற கிரீடம் ஒன்றும் சும்மா யாசகத்தில் வரலை. அது ஒருத்தரோட தலைவலி, குணமானதினால் அவர் காணிக்கையால் கொடுத்ததப்பா.
இங்கு இருக்கும் ஒவ்வொரு கடப்பா கல்லும் ஒவ்வொருத்தருடைய இடுப்புவலி, ஒருத்தனுடைய தலைவலி என்று ஹீலாகி, ஹீலாகி அவங்களுடைய காணிக்கையாக கொடுத்த பணத்தினால் கட்டப்பட்டது.
அதனால் ஒரு பைசா கூட வீணாக செலவு செய்யக் கூடாது.
ஏதோ இன்று இவ்வளவு பெரிய கட்டிடம் இருக்கிறது என்பதால் வெறுமனே இதையெல்லாம் அனுபவிக்க ஆரம்பிக்கக்கூடாது.

மக்களுக்கு
நம்மால்
என்ன
சேவையை
கொடுக்க
முடியுமோ?
அந்த
சேவையை
தொடர்ந்து
கொடுத்துக்
கொண்டேயிருக்க
வேண்டும்.
இதையெல்லாம் உணர்ந்து மக்களுக்கு நம்மால் என்ன சேவையைக் கொடுக்க முடியுமோ? அந்த சேவையைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
அப்படி கொடுத்தால்தான் இந்த இடத்தில் இருப்பதற்கு நமக்கு தகுதி இருக்கிறது. இல்லையென்றால் இது அத்துனையும் கர்மாங்கள்.
மக்களுடைய கர்மாங்கள் தான் இங்கு கட்டிடங்களாக எழுந்து நிற்கின்றன. வெளியுலகத்தில் சாதாரண ஒரு மனிதன் உழைப்பது போல 4 மடங்காவது நாம் உழைக்க வேண்டும்.
மக்களுக்கு திரும்பத்திரும்ப நாம் சேவை செய்து கொண்டே இருக்கணும்ப்பா" என்று மிகவும் எளிமையாக எங்களுக்கு விளக்கினாலும், இந்த கட்டிடத்தை உருவாக்குவதற்கு பரமஹம்ஸர் எவ்வளவு பாடுபட்டிருக்கிறார்,
அவர் எவ்வளவு தூரம் ஒவ்வொரு மக்களுக்கும் பொறுமையாக தியான சிகிச்சை அளித்திருக்கிறார்" என்பதை யோசித்துப் பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. இவற்றை சாதாரண சாமானியமான மனிதர்களாக இருந்து நாங்கள் யோசித்துப் பார்க்கும்பொழுதுதான் பரமஹம்ஸர் செய்வதெல்லாம் மிகப்பெரிய ஹிமாலய சாதனையென்று தோன்றுகிறது.
வாழும் வரலாறு வாழும் காலத்தில் வாழவரம் பெற்ற நம் ஒவ்வொருவரும் நாம்பெற்ற வரத்தை இன்றிலிருந்து முழுமையாய் பயன்படுத்துவோம்.
முழுமையாக பயன் படுத்துவோர்க்கு முக்தி... உறுதி..
அதற்கு நான் பொறுப்பு என
பகிரங்கமாகவே பரமஹம்ஸர் அறிவித்திருக்கிறார்.
9.0 வாழும் வரலாற்றுப் பேசும் படங்கள்...
9.1 பெங்களூர் சத்சங்கங்கள்

பரமஹம்ஸர் பெங்களூரில் முதல் முதலாய் பேசிய பொதுக் கூட்டத்தின் புகைப்படம், மற்றும் வேறு சில முக்கியமான பகுதிகளில் துவக்ககாலத்தில் பரமஹம்ஸர் தியான சத்சங்கங்களை நடத்திய இடங்கள்.


9.2 ஒப்பல் கார்

பரமஹம்ஸர் முதன் முதலில் பயன்படுத்திய ஒப்பல்கார். இந்த காரில் தான் துவக்ககாலத்தில் பல முக்கியமான இடங்களுக்கு பரமஹம்ஸர் சென்றுவந்தார்.
9.3 கர்நாடகாவின் முதல் தியான முகாம்

கர்நாடகாவின் முதல் தியான முகாம்
கர்நாடக மாநிலத்தில் பரமஹம்ஸர் நடத்திய முதல் தியானமுகாமின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்.
அந்த தியான முகாமில் பரமஹம்ஸரின் அருகே அமர்ந்திருப்பவர் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவபுரி மஹாசுவாமிஜி.

9.4 செட்டிமுருகன் கோவில்
புகைப்படத்தில் நீங்கள் பார்ப்பது பிரசித்திப்பெற்ற செட்டிமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா சமயத்தில் எடுக்கப்பட்டது.
பரமஹம்ஸரை பற்றிப் புரிந்து கொண்டிருந்த பக்தர்கள் அழைத்ததின் பேரில் செட்டிமுருகன் கோவிலுக்குச் சென்று, அங்கேயிருக்கும் தெய்வவிக்ரகத்தை பிராணப் பிரதிஷ்டை செய்கிறார்.
அடுத்த படத்தில் பரமஹம்ஸருக்கு அவர்கள் அன்போடு செய்த மாலைமரியாதையைப் பார்க்கிறீர்கள்.

மாலை மரியாதை
9.5 தீபோத்சவம்
திருவண்ணாமலையின் தீபோத்சவம்
பரமஹம்ஸருக்கு மிகமிக விருப்பமான ஒன்று.
பரமஹம்ஸர் அவரோடிருந்த பக்தர்களோடு
தீபோத்சவ திருநாளை, திருவண்ணாமலைக்குச்
சென்று கொண்டாடியபோது எடுக்கப்பட்டப்
புகைப்படம்.

9.6 கனாக்காலங்கள்
அப்போதெல்லாம்
பரமஹம்ஸருக்கு நிறைய ஓய்வு
நேரங்கள் கிடைக்கும். இப்போதுிருப்பது
போல் 24நாடுகளில் கிளைகள்,
ஆயிரக்கணக்கான சீடர்கள்,
நூற்றுக்கணக்கான சென்டர்கள்
அப்போது இல்லை. எனவே
பரமஹம்ஸருக்கு கிடைக்கும்
நேரங்களையெல்லாம் பக்தர்களோடு
விளையாடுவதிலேயே கழிப்பார்.
அப்போதெல்லாம் பரமஹம்ஸர்
உணவு பரிமாறுவார். ஏன்! சில
நாட்களில் பரமஹம்ஸரே உணவு
தயார் செய்வார்.
பரமஹம்ஸர் உணவு
பரிமாறும்போது ஒரு தாயைப் போல
வாரி வழங்க ஆரம்பித்துவிடுவார்.
அதோடு எப்படியாவது ஒரு
நகைச்சுவையையும் உருவாக்கிக்
கொண்டேயிருப்பார்.
அந்த இடமே கலகல என சிரிப்பு சத்தத்தால் நிரப்பப்பட்டிருக்கும். இப்படி பரமஹம்ஸரோடு மக்கள் ஆனந்தமாக வாழ்ந்தனுபவித்த காலங்கள் கனாக்காலங்கள் போல்தான் நினைவில் இருக்கின்றன.
ஆம்!
கனாக் காலங்களின் எண்ணிக்கை குவிந்து கொண்டேவிருக்கின்றன.
தொடர்ந்து பரமஹம்ஸரோடு
வாழ்ந்த அத்துணை நாட்களும் கனாக்
காலங்களாக நினைவுக்கு வருகின்றன.
இன்றும் நிஜமெனத் தெரியும் உண்மை நிகழ்வுகள் அவை.
அவரின் தீர்க்கமான பேச்சும்,
தன்நம்பிக்கையை ஊட்டும் பார்வையும்,
குழந்தையைப்போல் பேசிச் சிரித்து
விளையாடும் குதூஹலமம், ஆனந்த
அலையை அந்த சூழலில் உள்ள
அனைவருக்குள்ளும் ஏற்படுத்தும்.
வாழ்க்கையின் திக்குத் தெரியாமல்
தவித்த எங்களுக்கு தியானத்தைக்
கொடுத்து, ஞானத்தையும் கொடுத்து
ஆன்மீக ரகசியங்களை சுவாரஸ்யமாய்
பகிர்ந்து கொள்வதும், உலகத்தையே
அசைத்துப் பார்க்கக் கூடிய உண்மைகளை
மிக எளிமையாக புரிய வைப்பதும்.
எங்களோடு பேசிச்சிரித்து விளையாடிய
நேரங்கள் மிக சுவாரஸ்யமானவை.
அடேயப்பா! என்று
மலைத்துப்போகுமளவுக்கு அத்துணை
விஷயங்களையும் ஒரு சேர
அனைவரோடும் பகிர ஞானியான இவர்
ஒருவராலே சாத்தியம்.

6 மணிநேரம் பரமஹம்ஸரோடு பேசிக்கொண்டே இருந்தாலும், நேரம் செல்வதே தெரியாது. 6 நொடிகளானது போன்றே தோன்றும், அத்துனை நிமிடங்களையும் அணு அணுவாக சுவாரஸ்யமாக்கி, மிகப்பெரிய பாதுகாப்புணர்வை ஏற்படுத்திவிட்டுச் செல்வார்.
அவரோடு வாழ்ந்து கழித்த நாட்களை நினைக்கையில்...
60 ஆண்டு காலம் வாழ்ந்ததைப் போன்ற அன்யோன்யத்தை ஏற்படுத்தக் கூடியது. பரமஹம்ஸரோடு அவரின் சக்தி சூழலில் வாழ்ந்து அனுபவித்த நாட்கள் இன்றும் பசுமையாக நெஞ்சில் நிற்கின்றன.
இப்படி பரமஹம்ஸரோடு நிகழ்ந்த இனிமையான பல சம்பவங்கள் அடுத்த வாழும் வரலாறு புத்தகத்தில் உங்களை ஆனந்த அனுபவ மழையில் நனைப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றோம்.
இலவச தியான சிகிச்சை பெற...
தியானத்தை கற்றுக் கொள்ள...
உங்களுக்கான சேவையில் தியானபீடம்
பரமஹம்ஸ நித்யானந்தர் ஓர் வாழும் ஞானி. ஆன்மீக உலகில ஓர் ஒப்பற்ற நட்சத்திரம். இவர் நிறுவிய தியானபீட சேவை நிறுவனம் தற்போது 30 நாடுகளில் 1000 கிளைகளுடன் இயங்கி வருகிறது.
மூன்றே ஆண்டுகளில் இவ்வளவு வேகமாக உலகம் முழுவதும் பரவமுடிந்ததற்கான முக்கிய காரணங்கள் இரண்டு...
1. நம்முடைய நடைமுறை பிரச்சனைகளுக்கு பரமஹம்ஸர் நித்யானந்தர் தரும் எளிய நேரடி தீர்வுகள்.
2. வலிமை மிகு தியானங்கள்.
இவை இரண்டின் மூலம் மக்களுக்குள் நிகழ்ந்த ஆனந்த ஆரோக்கிய மாற்றங்கள்நான் காரணம்
நீங்களும் வாழ்க்கையில் ஆனந்த ஆரோக்கிய மாற்றங்களை பெற தியானத்தை வாழ்க்கையில் சேருங்கள் மேலும் விபரங்கள் பெற கீழ்கண்ட தொலைபேசியில் தியானபீட அமைப்பாளர்களை அணுகவும் (தியான பீட தமிழ்நாடு கிளைகளுக்கு மட்டும்)
ஆம்பூர் - 94431-46631; ஆத்தூர் - 94433-40904; சென்னை, அடையாறு -988404-27966; வடபழனி - 93802-72799 ;கோயம்புத்தூர் - 98434-23544; தர்மபுரி - 94421-32764; ஓசூர்- 94434-49697, 99947-77898; கண்ணமங்கலம் - 94439-64023; கரூர் - 94434-79031; மதுரை - 98942-02536 ; மணப்பாறை ; 98652-76321 ; நாமக்கல் - 94433 - 70552, 94433-88437 ; புதுச்சேரி - 94432 - 87504; இராஜபாளையம் - 98421 - 30008; ராசிபுரம் - 94420-23021 ; சேலம் - 94432-35262,94439-15194; திருச்செங்கோடு - 94435 - 15717 ; திருநெல்வேலி - 94436-14167, 98427-67668,98430-60665; திருப்பத்தூர் - 94431-31058 ;திருவண்ணாமலை - 94432-33789, 94433-26202; திருச்சி - 94427 - 85586 ; வாணியம்பாடி - 99941-28019 ;வேலூர் - 94432-42833; விழுப்புரம் - 94432-85685.

Ebook ISBN: 979-8-88572-940-6
திருவண்ணாமலை ஞானத்திற்கான Incubator.
குறைமாத குழந்தையை கத கதவென காக்கும் Incubator போல...
ஞானமடைய காத்திருக்கும் கடவுளை, கடவுளாக்கும் வரை காத்தருளும் தியான சக்திமிகு Incubator தான் திருவண்ணாமலை.
- பரமஹம்ஸ நித்யானந்தர்