KAILASA Library/குணமளிக்கும் ஆலமரம் ஒரு கல்பதரு/வாழும் வரலாறுSign in
குணமளிக்கும் ஆலமரம் ஒரு கல்பதரு

வாழும் வரலாறு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பாகம் - 2

Ebook ISBN: 979-8-88572-940-6

அமெரிக்காவின் ப்ராட்டஸ்டெண்ட் தேவாலயம் ஒன்றில் சொற்பொழிவாற்றி முடித்தபின் பரமஹம்ஸரிடம் “நீங்கள் ஞானமடைந்த ஆனந்த அனுபவத்தைப் பற்றி எங்களுக்குெல்லாம் விளக்க முடியுமா?” என ஒரு பார்வையாளர் கேட்டார்.

பரமஹம்ஸர், “என்னங்க இவ்வளவு பேர் முன்னிலையில் இப்படி கேட்கறீங்க?!” எனக் கேட்டதும், கேள்வி கேட்டவருக்குத் தூக்கிவாரிப்போட்டது.

பரமஹம்ஸர் என்ன விதத்தில் தன் கேள்வியை எடுத்துக்கொண்டிருப்பார்! என்ற சிந்தனையில் ஆழ்ந்தார். மீண்டும் கேட்டார்.

“எங்களோடு உங்களின் ஞான அனுபவத்தைப் பற்றிப் பகிர்ந்து கொண்டால் எங்களுக்கு அதுவொரு மாபெரும் உற்சாகமாக இருக்குமே?”

“இரு நெருங்கிய நண்பர்களுக்குள் அல்லது காதலர்களுக்குள் நிகழ்ந்த பாசப் பரிமாற்றங்களைப் பற்றி பலர் முன்னிலையில் பகிர்ந்து கொள்ள முடியுமா?”

“இல்லை முடியாது.”

“அதுவே முடியாது என்றால், என் அனுபவம் இன்னும் நெருக்கமானது. இன்னும் ஆழமானது.”

“ஆழமானது என்றால்...ரகசியமானதா?”

“ரகசியமானதல்ல. புனிதமானது.
ஞான அனுபவம் என்பது
எனக்கும் எனக்குமானது.
என்னில் நான் கரைந்த அனுபவம் மிக
அந்தரங்கமானது.

பகிரங்கமாய் பேசச் சொல்லி கேட்கிறீர்களே!.

பரமஹம்ஸரை
பார்த்து மலரும்
பரவச மலராவீர்கள்.

மன்னிக்கவும். பகிரங்கமாய் பகிர்ந்து கொள்ளக் கூடியதல்ல அது.

அடுத்துவரும் தியான முகாமில் கலந்து கொள்ளுங்கள்.

அவற்றை தெரிந்து கொள்ளுமளவுக்கு நெருக்கம் ஏற்பட்டதும் சொல்கிறேன்” என சாந்தமாய் பேசிமுடித்தார் பரமஹம்ஸர்.

இனி நீங்கள் படிக்கப்போகும் பல சம்பவங்கள் பரமஹம்ஸரின் வாழ்வில் நிகழ்ந்த மிக முக்கியமான சம்பவங்கள்.

இந்த இரகசியங்களைப் படிப்பதின் மூலமாகவே பரமஹம்ஸருக்கும் உங்களுக்குமான இடைவெளி குறைய ஆரம்பிக்கும்.

சூரியனைப் பார்த்து
திரும்பும் சூரியகாந்தியைப் போல,
பரமஹம்ஸரை பார்த்து
மலரும் பரவச மலராவீர்கள்.

A portrait of Paramahamsa Nithyananda wearing an orange turban

6.2 பக்தியீர்ப்பு விசை

"உங்களின் நேர்மறை எண்ணங்களின் தொகுப்பே ஒரு புத்தனை உருவாக்குகிறது.

உங்களின் எதிர்மறை எண்ணங்களின் தொகுப்பே ஒரு பின்லேடனை உருவாக்குகிறது."

  • பரமஹம்ஸ நித்யானந்தர்

"சீடன் பிறக்கத் தயாராகும் முன்பே, குரு வளர்க்கத் தயாராகி விடுவார்" என அழகாய்ச் சொல்லும் பரமஹம்ஸரிடம் பக்தை ஒருவர் இப்படி கேட்டார்,

"எதற்காக நீங்கள்
ஜனித்தீர்கள்?"
"உங்களுக்காக..."
"எங்களுக்காகவா?"
"ஆம்"
"ஏன்?"
"ஒரு புத்தன் பூமியில்
அவதரிப்பது யதேச்சையான
ஒன்றல்ல. அது ஒரு கணக்கீடு"
"கணக்கீடு என்றால்..."
"மேலே சென்ற பொருளை
கீழே இழுக்கும் புவீர்ப்பு
விசையைப் போல,

பிரபஞ்ச சக்தி வெளியில்
கரைந்து விட்ட ஞானிகளை பூமி
நோக்கி ஈர்க்கும் விசைக்குப் பெயர்
குரு பக்தி. அல்லது தேடுதல்
(Seeking)"
"பக்திக்கு அவ்வளவு
சக்தியுண்டா..."

"இல்லாவிட்டால் மூன்றாவது
முறையாக இறங்கி
வந்திருப்பேனா?. குருவின்
அவசியத்தை உருவாக்கும்
பக்தர்களின் கூட்டம்
உருவாகுமிடத்தில் பக்தியீர்ப்பு விசை
உருவாகும்.

அந்த பக்தியீர்ப்பு விசை,
பூமி நோக்கி ஞான சக்தியை
இழுக்கும்.

அங்கே அதற்காக ஞானசக்தி மனித உருவில் அவதரிக்கும்."

"அதென்ன பக்தியீர்ப்பு விசை?"

"ஆமாம், நீங்கள் எங்கிருந்தாலும்
உங்களின் பெண் பிள்ளையை பற்றிய
நினைப்பு இருந்து கொண்டேயிருக்கும்
தானே.

இது பாச ஈர்ப்பு.
அது உங்களை எங்கிருந்தாலும்
வீட்டை நோக்கி இழுத்துக் கொண்டு வந்து
விடும் தானே!"

"பாச ஈர்ப்பு போல்
ஆயிரம் மடங்கு பலம் வாய்ந்தது
உங்களின் பக்தியீர்ப்பு விசை.

அந்த விசையின் பலத்தை
அதிகரிக்கும் குருவின் கருணை விசையும்
ஒன்றுக்கொன்று உதவ நீங்கள்
காப்பற்றப்படுவீர்கள்."

"சாமி, என்னது காப்பாற்றப்படுவோமா?"

"ஆம்,
பக்தியும்,
தேடுதலும்
பூரணமாகாதவரை
நீங்கள் குருவைத் தேடி ஓடுவீர்கள்.

பக்தியும்,
தேடுதலும்
ஆழமாக ஆரம்பித்ததிலிருந்து
குரு உங்களைத் தேடி ஓடிவருவார்.

குருவை நீங்கள் தேடுவதா? இல்லை. உங்களை குரு தேடுவதா?

முடிவு உங்களின் பக்தியீர்ப்பு விசையைப் பொறுத்தது.”

இந்த உரையாடலுக்குப்பின் அந்த பக்தை முழுமையாக மாறிவிட்டார்.

பரமஹம்சரை குரு என பார்ப்பதை
தாண்டி மாபெரும் பொக்கிஷமாகப் பார்க்க
ஆரம்பித்தார். அதன்பின் தன் வாழ்வில்
ஆனந்த தாண்டவம் ஆரம்பித்துவிட்டதாக
உற்சாகத்தோடு சொன்னார்.

நீங்களும் ஆனந்தத் தாண்டவமாட விரும்பினால் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான், உங்களின் எண்ணங்களை ஆராயுங்கள்.

நேர்மறை எண்ணங்கள் எக்கச்சக்கமாக அதிகமாகும் போது ‘தேடுதல்’ என்பது தானாய்ப் பிறக்கும். தேடுதல் ஆழமாக ஆழமாக உங்களிடமிருந்து பக்தி வெளிப்பட ஆரம்பிக்கும்.

இந்த பக்தியீர்ப்பு விசை உங்களின் எல்லா தேவைகளையும் கவனித்து, தேவைகள் கடந்த ஆனந்த நிலைக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

Nithyananda speaking with a microphone

6.3 விழித்துக்கொண்டே பிறந்தேன்

பரமஹம்சரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாய் கேட்டறியாத சுதர்க்க வாதி ஒருவர் ASP-யில்

“பூமி நோக்கி ஈர்க்கப்பட்டதாக நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அப்படியானால் பிறக்கும் முன்பே நீங்கள் ஒரு ஞானி.

ஏற்கனவே ஞானியாய் இருந்த நீங்கள் மீண்டும்
2000-ஆம் ஆண்டில் ஏன் ஞானமடைய வேண்டும்?”
எனக் கேட்டார்.

புன்னகையோடு பதிலளிக்கத் துவங்கிய பரமஹம்சர், “இதற்கான பதில் நீளமானது” “சொல்லுங்கள்”

“ஆற்றில் இறங்கிய பின் ஆற்றை தேடித்தேடி பிடித்துப் பார்த்தவன், கடைசியில் ‘ஓ! இது தான் ஆறா எனக் கொண்டாடியது போல் நிகழ்ந்த ஒரு சம்பவம் தான் 2000- ஆம் ஆண்டில் நிகழ்ந்தது.”

“சாமி இன்னுங்கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்.” “சாமியின் பிறப்பு விழிப்புணர்வோடு நிகழ்ந்த ஒன்று தான்.

சாமி பிறந்த ஊர், பெற்றோர், காலம் ஆகிய அனைத்துமே தேர்வு செய்யப்பட்டவையே.

சாதாரண மனிதனாயிருக்கும் போது இந்தத் தேர்வை செய்ய முடியாது.

டிக்கெட் வாங்காதவர், வரும் வண்டியில்
தொற்றிக்கொண்டு செல்ல வேண்டியது தான். அதே
கதிதான் உடலெடுக்கும் போதும் நிகழும்.

பிறக்கும் முன்பே நீங்கள் ஒரு ஞானி?

உடலை விட்டு உயிரை விடும் போது, அது விழிப்புணர்வோடு நிகழாவிட்டால், அடுத்த பிறப்பு விழிப்புணர்வோடு நிகழாது.

விளைவு, பிரபஞ்சக் கணக்குப்படி ஏதோ ஒரு ஊரில், ஏதோ ஒரு உடலெடுத்து, யாரோ ஒருவருக்குப் பிள்ளையாகப் பிறப்போம்.

ஆனால் கடைசி ஜென்மத்தில் சாமியின் இறப்பு விழிப்புணர்வோடு நிகழ்ந்தது.

அதனால் தான் முந்நூறு வருடங்கள் காத்திருந்து மிகச் சரியான இடத்தில், சுய தேர்வுப்படி பிறக்க முடிந்தது''.

"சாமி கோபித்துக்கொள்ளக் கூடாது.

இவ்வளவு நிகழ்ந்த பின்னும் ஞானமடைதல் தள்ளிப்போனது ஏன்.? மீண்டும் ஞானமடைந்தது ஏன்?"

"அப்பனே!
என்னால் மட்டுமல்ல
உன்னால் கூட ஞானமடைய முடியாது."

"சாமி என்ன சொல்கிறீர்கள்?"

"ஆம். நீங்கள் அனைவரும் ஏற்கனவே ஞானமடைந்தவர்கள்"

"நான் ஞானியா?"

"சந்தேகமே வேண்டாம்

நீங்கள் ஒவ்வொருவரும் ஞானி தான்."

"சாமி குழப்பமாயிருக்கிறதே"

"இதை புரிந்து கொள்ளுங்கள் குழப்பம் தீரும்.

மனிதர்களில் இரண்டு வகையினர் மட்டுமே.

  1. தான் ஞானி என உணர்ந்தவர்கள்.
  1. தான் ஞானி என இன்னும் உணராதவர்கள்."

"எங்கள் கதையில் இது சரி உங்களுக்குமா இப்படி இருந்தது."

"சரியான கேள்வி.

என் வாழ்வில் நிகழ்ந்தவை என்னால் நிகழ்ந்தவையல்ல.

பராசக்தியின் காலக்கிரமப்படி பல விஷயங்களை நான் கற்றுக் கொள்ள வேண்டுமென பராசக்தி விரும்பியிருந்தாள். அதனால் எல்லா மார்க்கங்களிலும் நுழைந்து வர வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தாள்.

எல்லாம் முடிந்து,
விரக்தியின் உச்சியதைத் தொட
பராசக்தி யத்தனித்திருந்த காலம் வர,

உணர்ந்து கொண்டேன். எல்லாம் உணர்ந்து கொண்டேன்.

எனக்கு நானே செய்து கொண்ட கண்கட்டி விளையாட்டு முடிவுக்கு வந்தது.

ஆற்றில் ஆற்றை தேடித் தேடி பார்த்தவனின் கரம் ஒரு கணம் ஓய்வெடுக்கையில் "அடடே இது தான் ஆறா" எனக் கண்டு கொண்டது போல்...

என்னைச் சூழ்ந்துள்ள ஆனந்த சக்தி என்னுள் உள்ள கடவுள் சக்தி என் வழியே வரும் கருணை சக்தி என்ற எல்லாவற்றையும் அந்த நொடியில் உணர்ந்து கொண்டேன்.

இவ்வளவுதான் நடந்தது. புரிந்ததா?

என பரமஹம்ஸர் செல்லவும், கேள்வி கேட்டவரின் கண்களில் இருந்து ஒரு சொட்டு நீர் வழியவும் சரியாக இருந்தது.

பரமஹம்ஸரின் மொத்த உழைப்பும் நம்மை உணர்ந்து கொள்ள வைப்பதற்காகத்தான் என்பது புரிகிறதா?.

6.4 அதிசயத்தின் அதிசயங்கள்

பரமஹம்ஸரின் வாழ்க்கைச் சம்பவங்களைப் பற்றி பரமஹம்ஸர், அவ்வப்போது சொல்வதைக் கேட்டது, அம்மா, ஐயா மற்றும் பரமஹம்ஸரோடு தொடக்கக் காலங்களில் வாழ்ந்தவர்களிடமிருந்து பதிவு செய்யப்பட்டவற்றிலிருந்து பரமஹம்ஸரின் உடல் பட்ட பாடுகளைத் தொகுத்தளிக்கிறோம்.

இவற்றைப் படிக்கையில் உங்களுக்குள் பிறக்கப்போகும், "இப்படியும் இருக்குமா?" என்ற சிந்தனைத் துளிகள் உங்களுக்குள் புதுக் கதவுகளைத் திறந்து வைக்கும்.

Illustration
Paramahamsa seated under tree
Tree structure
Large banyan tree

6.4.1 உடலோடு ஆடையை இருக்க வைப்பதே சாதனைதான்

Portrait of Ramakrishna Paramahamsa

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பெரும்பாலான நாட்களில் உடைகளை பற்றிய கவனமின்றி இருப்பார்.

எப்போதும் ஆனந்த நிலையிலேயே, அதாவது சமாதி நிலையிலேயே இருப்பார். எப்போதாவது தான் அவர் சாதாரண மனிதனின் இயல்பு நிலைக்குத் திரும்புவார்.

பரவசப் பெருக்கில் உடலின் ஒவ்வொரு செல்லும் கிறங்கியிருக்கும் போது, உடலின் மீதுள்ள மெல்லிய ஆடையை பற்றி யார் தான் கவனத்தில் வைத்துக்கொள்ள முடியும்.!

இதையெல்லாம் கருத்தாய்ப் பார்க்கும் மனம்தான் அப்போது ஆனந்தத்தில் கரைந்து போயிருக்குமே.

மனமில்லாத போது
மானம் பற்றிய மாயக்கருத்துக்களை
நினைவூட்டக் கூட அங்கு யாருமில்லை.

இன்னொரு முக்கியமான விஷயம், அது போன்ற சூழல்களில் இயற்கையோடு அவர்கள் கலந்திருப்பதால், ஆடைகள் பற்றி அவர்கள் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. யோசிக்கவும் முடியாது.

இது பற்றி ராமகிருஷ்ணர் ஒருமுறை மிக விளையாட்டாக குறிப்பிட்டிருக்கிறார்.

தன் சீடர்களிடம், "இந்த உடலில் நான் வாசம் செய்யும் நேரங்கள் மிக மிகக் குறைவு. அப்படி எப்போதாவது வாசம் செய்யும் போது அழுக்கில்லாத, கிழிசலில்லாத நல்ல உடைகளையே உடுத்திக் கொள்கிறேன்.

Portrait of Nithyananda

ஆனால், எப்போதுமே உடலுக்குள் சிக்கியிருக்கும் நீங்கள், எப்போதுமே ஆடைகளைப் பற்றி கவனப்படுத்திக் கொள்வதேயில்லை. என்ன பசங்கப்பா நீங்க..." என வேடிக்கையாய்ச் சொல்வதுண்டு.

சமீபத்தில் வாழ்ந்த மஹா ஞானியான
ரமணர்கூட ஒரு சிறு கோவணத்தை மட்டுமே தன்
உடலில் ஒட்ட அனுமதித்தார்

நமக்கு உடையில்லாமல் இருப்பது கடினம்.
ஞானிகளுக்கு உடையோடு இருப்பது தான்
கடினம்.

காரணம், உடைகள் ஒருவகையில் அவர்களின் சுதந்திரத்தை பறிக்கின்றன.

அதனால் தான் "சமுதாயமே எதிர்த்தாலும்
சரி!" என நிர்வாணமாகவே வாழ
ஆரம்பித்துவிட்டார் மகாவீரர்.

உடைகளின்றி இருப்பது சுதந்திரமயமானது
என்பதால் தான் நாகா பாபாக்கள் எப்போதும்
உடைகள் அணிவதே இல்லை.

ஞானிகளுக்கு உடை என்பது ஒரு சுமை.

அதுவும் அவர்கள் சமாதி நிலையில்
இருக்கும் போது, அவர்களின் உடைகளை பற்றி
கவனமெடுத்துக் கொள்வது என்பது சுமையைத்
தாண்டிய வலி.

"ஞானமடைந்ததிலிருந்து 'மொத்த உலகுக்கும் நான் பொறுப்பு' என்ற மிகப் பெரிய பொறுப்பை எடுத்துக்கொண்டதால் பலவகையில் என்னை ஒடுக்கிக் கொள்ள வேண்டியிருந்தது

என்னுடைய பல சுதந்திரங்களை
தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது." என
சொல்லும் பரமஹம்ஸர்,

உடலுக்குள் செட்டிலாக ஆரம்பித்ததிலிருந்தே குரு பணியை ஆரம்பித்து விட்டார்.

அதனால் அந்த இக்கட்டான காலங்களில் கூட
தன் உடைகள் கொஞ்சமும் நழுவாமல் இருக்கும்
படி பார்த்துக் கொள்வார். இது மிக மிக
கடினமானது.

ஒரு செய்தியை நினைவில் வைத்துக்
கொள்ளத் தான் படும் பிரயாத்தனங்கள் பற்றி
ஆனந்த புரிவாசிகளிடம் பரமஹம்ஸர் சொன்ன
செய்தியைக் கேட்டதும் எங்கள் கண்கள்
குளமாயின.

"திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்திக்
கொண்டேயிருக்கும் மனம் நம்மிடம் இல்லை.
எப்போதாவது உங்களைப் போன்றவர்களுக்கு
ஆலோசனைகள் சொல்வதற்கு மட்டுமே அதை
எடுத்து வருவோம்.

மற்ற நேரங்களில் ஏதாவது ஒரு செயலை ஞாபகப்படுத்திச் செய்ய வேண்டும் என்றிருக்கும் போது, அவற்றை ஞாபக படுத்திக் கொள்வதற்காக உள்ளே கிழித்து வைக்க வேண்டும்.

கட்டைவிரலை ஞாபக படுத்துவதற்காக கட்டை விரலில் ஒரு கிழி கிழித்தால் எப்படியிருக்குமோ, அப்படியோரு காரியத்தை ஏதாவதுஒன்றை ஞாபகமாள்ச் செய்து முடிக்க வேண்டும் என்றிருக்கும் போது செய்து கொள்வேன்

அப்படித்தான் ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டியிருக்கிறது. என இயல்பாய் பரமஹம்ஸ

Figure

இதையெல்லாம் தாண்டி நாம் கவனிக்க வேண்டிய ஒன்று பரமஹம்ஸரும் எப்போதும் சமாதி நிலையிலேயே இருக்கிறார் என்பது தான்.

இந்த நிலையின் வெளிப்பாடுகள் பற்றி டாக்டர். காலின்ஸ் பரமஹம்ஸரின் நரம்பியலில் செய்த ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சமாதி நிலையிலேயே இருந்து கொண்டு உடலை இயக்குவது, உலகின் மீது அளவுகடந்த கருணை கொண்ட ஒருவரால் தான் முடியும் என்ற உண்மையை உணர முடிகிறதா?

பரமஹம்ஸர்

6.4.2 ஆண் பெண் வித்தியாசம் தெரியாது.

நமக்கு ஏழு உடல்கள் உண்டு.

  • வேத ரகசியம்.

"கண்ணுக்குத் தெரியாத காற்று இருப்பது உண்மை. அதை உணர முடியும். ஆனால் பார்க்க முடியாது.

காற்றை விட சூட்சுமமான பிராண சக்தியை சாதாரண மனிதனால் உணரக் கூட முடியாது. விழிப்புணர்வு அதிகம் பெற்றவர்களால் தான் அதை உணரக் கூட முடியும்.

இதே போல் இன்னும் சூட்சுமமான... உடலின் ஏழு அடுக்குகள் ஒவ்வொருவருக்கும் உண்டு.

இவற்றில் முதல் சில அடுக்குகளுக்குள்ளேயே பெரும்பாலான் மனிதர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். இவர்கள் மேல் அடுக்குகளிலேயே வாழ்பவர்கள். இவர்களுக்குக் கீழ் அடுக்குகளுக்கு செல்வது பெரும் ப்ரயர்த்தனம்.

மேல் அடுக்கில் இருக்கும் போது உலகை நாம் பார்க்கும் விதம் முற்றிலும் மாறிப்போயிருக்கும்" என் ஏழு உடல்கள் பற்றி தியான சிகிச்சை தீட்சை முகாமில் சொல்லும் போது ஒருவர் கேட்டார்.

"மாறிப்போயிருக்கும், என்றால் புது உலகங்கள் தெரியுமா?"

"அப்படி கூடச் சொல்லலாம். இப்போது நீங்கள் பார்க்கும் உலகம் கண்ணை மூடித் தூங்கும் போது எங்கே போகிறது.?

தூக்கத்தில் மட்டுமே வரும், இதே போன்ற கனவுலகம் இப்போது எங்கே இருக்கிறது...?

"..................."

A person writing on a blackboard

“பதில் தெரியாவிட்டாலும்
இரண்டு உலகங்கள் உங்களுக்கு
தெரிந்தவகையில்
இருக்கும் என்பது
உண்மைதானே.”

“ஆமாம் சுவாமி”

“அதே போல் தான்,
உங்களுக்குள்ளே பல அதிசயங்கள்
ஒளிந்திருக்கின்றது.

அவற்றை தெரிந்து கொள்ள,
இது தான் நான் என நீங்கள்
நம்பும் மனத்தையும் உடலையும்
தாண்டவேண்டும்.

அந்த அளவுக்கு
விழிப்புணர்வு அதிகமாகி விட்டால்
மனிதர்களை உடல்களாகப்
பார்க்காமல், அவர்களை சக்தி
தொகுப்புகளாக பார்க்க
ஆரம்பிப்பீர்கள்.” எனச் சொன்னார்.

இந்த புது அனுபவத்திலேயே
பரமஹம்ஸர் வாழ்ந்திருந்த நாட்களும்
உண்டு.

தமிழ்நாட்டில் பொது மக்களுக்கு
அப்போதுதான் தியான சிகிச்சை செய்ய
ஆரம்பித்திருந்தார் பரமஹம்ஸர்.

அப்போதெல்லாம் உடலின்
ஏழுஅடுக்குகளிலுள்ள மேலடுக்கிலேயே தான்
எப்போதும் பரமஹம்ஸர் இருந்து
கொண்டிருப்பார்.

சக்திமயமான உலகில், அவரும் ஒரு
சக்திகோளமாக இருப்பார். மற்றவர்களும்
சக்தி கோளங்களாக இருப்பார்கள்.

இது பற்றிச் சொல்லும் போது...

“அப்போதெல்லாம் நோயாளிகளின்
பிரச்சனை என்ன என்பது பார்த்ததும்
தெரியும் வடிவாயிருக்கும்.

உடலோடு சிக்காதிருந்தால்,
நேரடியாக அவர்களின் சூட்சும சரீரம் தான்
(etheric body) தெரியும்.

உடலில் எங்கு நோய்க்கான சக்தி
குறைவு இருக்கின்றதென பார்த்ததும்
தெரியும்.

உடனே அந்த பிரச்சனைக்கான
தியான சிகிச்சையைச் செய்வேன்.
நோய்களிலிருந்து விடுபட்ட ஆனந்தத்தோடு
அவர்கள் செல்வார்கள்” என்று சொல்வார்
பரமஹம்ஸர்.

ஒரு போர்வை போல இருக்கும் இந்த மூட
உடலை பரமஹம்ஸர் பார்க்காததால், அவருக்கு
எதிரே வருவது ஆணா, பெண்ணா? என்ற
பாகுபாடே தெரியாது.

பரமஹம்ஸர் மற்றவர்களின் திட
உடல்களை இனங்கண்டு பார்க்குமளவுக்கு கீழ்
அடுக்குகளில் வாழ ஆரம்பிக்கப் பல
மாதங்களானது.

ஆனந்த ப்ரோக்ஷா மாணவர்களிடம்
பேசிக் கொண்டிருக்கையில் பரமஹம்ஸர்
ஒருமுறை இப்படிச் சொன்னார்.

“ஆண், பெண் என்ற வேறுபாடே போலியானது.

அது மனம் காட்டும் மாயைகளில் ஒன்று.

தொடர்ந்து தியானம் செய்து கொண்டே இருங்கள்...

ஒரு கட்டத்தில் உடலைத்தாண்டிய சூட்சும
உடலோடு தொடர்பு கொள்வது எப்படி என்ற
இரகசியத்தைக் கற்றுக் கொள்வீர்கள்.

அப்புறம் விகல்பமில்லா ஆனந்த நிலையில் வாழ ஆரம்பிப்பீர்கள்.

சாமி எந்த அறையில்
இருக்கிறேன் என்பதை பார்த்தே சொல்லி
விடுவீர்கள். உடலைத்தாண்டிய சூட்சும
உடலைப் பார்க்க ஆரம்பித்ததும், சாமியின்
சூட்சும உடல் பார்ப்பதற்கு லிங்க வடிவில்
தெரியும்.

Paramahamsa sitting under a banyan tree

“இவ்வளவு இருந்தும் மாறாத எளிமையோடு இருக்கும் இந்த ஒரேயொரு பண்பைக் கற்றுக் கொண்டால், மற்ற எல்லாவற்றையும் நீங்கள் இருக்கும் இடத்தைத் தேடி ஓடி வர வைப்பார் இறைவன்.

எளிமையை விட்டு விட்டு மற்ற எல்லாவற்றையும் கற்றுக் கொண்டாலும் இம்மியளவுக்கு கூடப் பிரயோஜனமில்லை. அவற்றால் உங்கள் நரகத்தின் டிகிரியை அதிகப்படுத்த முடியும். அவ்வளவே!” என்பார் பரமஹம்ஸர்.

பரமஹம்ஸர் வாழும் வரலாறு மட்டுமல்ல. வாழும் பாடம் கூட

Banyan tree illustration

அதைப்பார்த்தே சாமி எங்கே
இருக்கிறார் எனச் சொல்லுமளவுக்கு
உங்களின் விழிப்புணர்வு அதிகமாகி
விடும்.”

மேலுள்ள அத்தனை
சம்பவங்களையும் ஒன்றாய்க்
கோர்த்துப்பார்த்தால் ஒரு மாபெரும்
உண்மை புரியவரும். அது
பரமஹம்ஸரால் எல்லா
தளங்களிலும் வாழ முடிகிறது என்பதே.

கற்பனையில் கூட நாம் புரிந்து
கொள்ளக் கஷ்டப்படும் மிகப்பெரிய
வாழ்வியல் இரகசியங்களை மிக
எளிமையாகப் பரமஹம்ஸர் சொல்வதையும்,

இவ்வளவு பெரிய
சக்திகளையெல்லாம் பெற்றிருந்தும்
ஏதுமறியா பால கண்ணனன் போல்
விகல்பமில்லாமல் சிரிக்கும்
எளிமைத்துவத்தையும் தான் நாம்
பரமஹம்ஸரிடமிருந்து கற்றுக் கொள்ள
வேண்டும்.

Portrait of Paramahamsa Nithyananda

6.4.3 உடலுக்குள் வர ஒரு காரணம்

ஒரு மனிதன் காலையில் எழ
வேண்டுமானால்
ஏதாவதொரு காரணம் இருந்தாக
வேண்டும் காரணமில்லாவிட்டால்,
உடலுக்குள் விழிப்புணர்வு திரும்பாது

  • பரமஹம்ஸ நித்யானந்தர்

“எல்லா ஆசைகளையும்
ஞானமடையும் போது எரித்து
விட்ட ஞானிகளுக்கு
உடலுக்குள் வாழ எந்தவொரு
காரணமும் இருக்காது.

அதேபோல் உடலிலேயே ஒரு
முறை மரணத்தை ஞானிகள் சந்தித்து
விட்டதால் அவர்களிடம் பயமும்
இருக்காது.

இந்த இரண்டு
காரணங்களுமில்லாமல் காலையில்
உடல் எழுந்து கொள்ளாது.

நீலவரம் இப்படியிருக்க, எப்படி
சாமி உங்களால் தினம் காலையில் எழ
முடிகிறது?” என ஆர்வத்தோடு
ஆச்சாரியர் ஒருவர் கேட்டார்.

“வேறு என்ன காரணங்கள் இருக்க முடியும்?”

Musician playing violin

கொஞ்சம் கொஞ்சமாய் ஆனந்தமயமான உணர்வுக் குள் மூழ்குங்கள். ஆனந்தத்தில் முழுமையாக மூழ்கியிருங்கள்.

அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் அமர்ந்த பின், மெல்ல கண்களைத் திறந்து

உங்களின் பணிகளைச் செய்ய ஆரம்பியுங்கள்.

தினம் இந்த தியானத்தை செய்து வந்தால் அந்த நாள் வெறும் நாளாக இருக்காது. அது ஒரு திருநாளாக மாறி விடும்."

நம் சேவையை மிகப்பெரிய தேவையாக உணரும் பக்தர்களைப் பற்றிய நினைவுகளும்,

எல்லோருக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வும் தான் உடலை எழ வைக்கும்” என பதிலளித்தார்.

Group of people gathering

இதைப்பற்றி சொல்லும் போது பரமஹம்ஸர் குறிப்பிட்ட அருமையான தியான முறை ஒன்று...

“காலையில் எழும் போது எந்த எண்ணத்தால் எழுகிறீர்களோ அந்த எண்ணத்தின் தாக்கம் அந்த நாள் முழுவதிலும் இருந்து கொண்டேய்ருக்கும்.

எனவே காலையில் நீங்கள் எழும்போது பிறக்கும் எண்ணத்தைக் குறித்து மிக எச்சரிக்கையாக இருங்கள்

நாள் முழுக்க ஆனந்தமாக இருக்க, படுக்கையை விட்டு எழுந்தவுடன் இந்த தியானத்தைச் செய்யுங்கள்.

கண்களைக் திறக்காமல் முதுகெலும்பு, கழுத்து, தலை ஆகிய மூன்றும் நேர்கோட்டில் இருக்குமாறு நேராக அமர்ந்து கொள்ளுங்கள்.

இப்படி பரமஹம்ஸரின் ஒவ்வொரு பேச்சும் ஞானக்கருத்துக்களாகிறது. அவரின் ஒவ்வொரு செயலும் தியான நுட்பங்களாக மாறுகின்றன.

பார்ப்பதற்கு நம்மை போன்றே இருப்பவரிடம் இத்தனை அதிசயங்கள் நிகழ்வது எப்படி? என்ற நம் சந்தேகத்திற்கு பகவத் கீதை பேருரையின் போது பரமஹம்ஸர் சொன்ன சொற்றொடர் ஒன்று விடையளிக்கும்.

அது - இறைவனை உன்னுள் உலவ அனுமதித்தால்...

உன் வார்த்தைகள் வேதமாகும்.
உன் செயல்கள் தியானமாகும்.
உன் வாழ்வு வழியாகும்.

ஆனால் நாம் இறைவனை அனுமதிக்க வேண்டுமே... அனுமதிப்போமா.!?

Krishna

6.4.4 இனிப்பும் காரமும்

Paramahamsa Nithyananda

கிருஷ்ணரின் பால பருவத்தில் தேவைக்கு அதிகமாக வெண்ணையைச் சாப்பிட்டு விடுவார்.

அதேபோல் ராமகிருஷ்ணரின் வாழ்க்கைப் பக்கங்களைப் பார்க்கையில் திடீரென சில நாட்களில் எப்போதும் சாப்பிடுவதை விட பல மடங்கு இனிப்புகளைச் சாப்பிட்டு விடுவார்.

ஏதோ உணவு உண்பது போல் ஒரு பாத்திரம் முழுவதும் இருக்கும் இனிப்புகளை சாப்பிட்டு விடுவார். ஆனால் இப்படி எக்கச்சக்கமாக சாப்பிடும் போது அவருடைய വയிறுக்கு எதுவும் ஆவதில்லை.

இப்படிப்பட்ட எல்லா சூழ்நிலைகளிலும் அவர் பாவ நிலையிலேயே இருந்திருக்கிறார்.

நம்ம பரமஹம்சரும் சில நாட்களில் எதிர்பாராத விதமாக "எனக்கு இனிப்பு வேண்டும், காரமாக ஏதாவது இருந்தால் குடும்மா" எனக் கேட்பாராம்.

Drawing of Ramakrishna Paramahamsa

எப்போதும் காரமில்லாத சாத்வீக உணவுகளை மட்டுமே விரும்பிச் சாப்பிடும் நம்ம பரமஹம்ஸர் இப்படிக் கேட்கும் போது அம்மாவும் ஐயாவும் குழம்பிவிடுவார்களாம்.

ஏன் இப்படி கேட்கிறார்?!, என ஒரு நாள் கேட்டபோது... "சமாதி நிலையில் அடிக்கடி ஆழமாக செல்ல ஆரம்பித்து விடுகிறேன்.

ஒரு நல்ல நிகழ்வைப் பார்த்தால் கூட எனக்குள் பொங்கும் ஆனந்தம் கட்டுக்கடங்காததாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நேரங்களில் இனிப்பு, காரம் மூலமாகப் பொங்குவதை மந்தப்படுத்த முயற்சிக்கிறேன். ஏதாவது ஒரு புலன் மூலமாவது புவியிலேயே இருக்க முயற்சிக்கிறேன்.

அதனால்தான் அதிக இனிப்பும், காரமும் வேண்டுமெனக் கேட்கிறேன்." என சொன்னார்.

இந்த ஒரே ஒரு நிகழ்ச்சியிலிருந்து பரமஹம்ஸரின் நுண்ணுணர்வுத் திறன் (Sensitivity) பற்றி நம்மால் நன்றாய் புரிந்து கொள்ள முடியும்.

தேவையில்லை எனும் போது

காரமில்லாத சாத்வீக உணவை மட்டுமே எடுத்துக் கொள்ளும் கஷ்டமில்லா சுயகட்டுப்பாடு,

தேவை எனும் போது

தயங்காமல் இனிப்பையும் காரத்தையும் எடுத்துக் கொள்ளும் சுயதெளிவும் தான் இந்த சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை.

இந்த நுண்ணுணர்வு ஒரு மாபெரும் சுதந்திரம்!

நாம் ஒவ்வொருவரும் அடைந்தே ஆகவேண்டிய அடிப்படையான சுதந்திரம் இது.

பரமஹம்ஸர் விரும்பி சாப்பிடும் ரசகுல்லா...

6.4.5 வேகவைத்த கறி, குழந்தையின் முட்டி

ஞானமடைந்த சில வருடங்களுக்குப்
பரமஹம்ஸரின் உடல் மிக மிக மென்மையாக
இருந்தது என பரமஹம்ஸருக்குப் பணிவிடை
செய்தவர்கள் சொல்கிறார்கள்.

தன் உடல் இருந்த நிலையைப் பற்றி குறிப்பிடுகையில் "எலும்பின் மீது வைக்கப்பட்ட வெண்ணெய்யைப் போலதான் தசைகள் குழு குழுவென இருக்கும்" என குறிப்பிடுவார்.

பார்ப்பதற்கு யோக சாஸ்திரப்படி
செதுக்கப்பட்ட சிலை போல உடலமைப்பு
இருந்தாலும் தொட்டால் விரல் உள்ளே போகும்
வேகவைத்த கறி போலத்தான் மெது
மெதுவென தசைகள் இருக்குமாம்.

இவ்வளவு தளர்ந்த தசைகளையுடைய
ஒருவருக்கு அன்றாட செயல்களைச் செய்வதே
பெரும் கேள்விக் குறியாகத்தான் பொதுவாக
இருக்கும்.

ஆனால், நம் பரமஹம்ஸரோ துள்ளிக் குதிக்கும் மான் குட்டிப் போல தான் எப்போதும் உற்சாகத்தோடு இருந்து கொண்டிருப்பார்.

மேலும் அப்போதெல்லாம் பரமஹம்ஸரின்
கை, கால்களில் உள்ள மூட்டுகள் உறுதியற்று
இருக்கும்.

தத்தக்க, பித்தக்க என நடக்கும் ஒரு சிறு
குழந்தையின் முட்டி எவ்வளவு
தளர்வாயிருக்குமோ அவ்வளவு தளர்வாக
பரமஹம்ஸரின் முட்டிகள் இருக்கும்.

Man in orange robes performing a ritual
Close-up of Paramahamsa smiling

பஞ்சு போல் இருக்கும் தசைகளையும்,

உறுதியற்ற மூட்டுகளையும் வைத்துக்கொண்டு பரமஹம்ஸர் நடத்திய யாகங்களையும், மஹா ஹோமங்களையும் பார்க்கும் போது எங்களையுமறியாமல் உள்ளுக்குள்ளிருந்து உற்சாகம் பொங்குகிறது.

தன்னுடைய வேகத்துக்கு
ஒத்துழைக்காத உடலிருந்து கொண்டு
பரமஹம்ஸர் இவ்வளவையும்
சாதித்திருக்கிறார் என்றால்,...

திடமான உடல் கொண்ட நாமெல்லாம்
எவ்வளவு சாதிக்கலாம்? எந்த அளவு
உழைக்கலாம்? எனும் புது உத்வேகம்தான்
நம்முள் பிறக்கிறது.

"எலும்பின் மீது
வைக்கப்பட்ட
வெண்ணெய்யைப்
போலதான் தசைகள் குழு
குழுவென இருக்கும்"

7.1 மிதந்து வந்தேன்

'நான் நானாக இல்லை' என்ற நிலையில் தான் ஞானமடைந்தபின் பரமஹம்ஸர் வாழ்ந்து வந்தார்.

ஓம்காரீஸ்வர் மலையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி பரமஹம்ஸர் வந்ததைப் பற்றி சொல்லும் போது...

“இந்த சிறு உடலுக்குள் தான் வாழ்கின்றேன்... என்ற எண்ணமே அப்போது இருக்காது.

எனக்கு பசிக்கிறதா? இல்லையா?
உடல் குளிர்கிறதா? வேர்க்கிறதா?
நடக்கிறேனா! உட்காரந்திருக்கிறேனா?
என்ற பாகுபாடுகள் இருக்காது.

ஆனந்தமயமான உணர்விலேயே மூழ்கிப் போயிருப்பேன்.

உடல், அதற்கு எது தேவையோ, அதைத் தானே பார்த்துக்கொள்ளும்.

நடக்கும் போது கூட இங்கு திரும்ப வேண்டும். இங்கு ஏற வேண்டும், இங்கு இறங்க வேண்டும் என்பதையெல்லாம் உடல் தானே முடிவு செய்து கொள்ளும். இதை தான் body intelligence என்றழைக்கிறேன்.

அந்த நாட்களில் வாழ்ந்த விதத்தை சொல்ல வேண்டுமானால், 'காற்றில் இலகுவாய் பறக்கும் காய்ந்த இலை போல, ஞானமடைந்த பின் முழு பரிமாற்றமடைந்த இந்த உடல் இவ்வுலகில் மிதந்து கொண்டிருந்தது' என்று தான் சொல்ல வேண்டும்.

உணர்வும் உடலும் ஆனந்தத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருந்தது. உயிரோடிருக்கும் பொறுப்பையும் பாதுகாப்பாயிருக்கும் பொறுப்பையும் பராசக்தியே பார்த்துக்கொண்டாள் - என்பதை என் அனுபூதி நினைவுகளிலிருந்து Scan செய்து பார்த்துக் கண்டுபிடித்தேன்.” என குறிப்பிடுவார்.

Figure

7.2 பொங்கும் ஆனந்தம்

பரமஹம்ஸர்

பரமஹம்ஸரின் தீவிர பக்தைக்கு ஒரு சந்தேகம். 'ஞானமடைந்த பின் எப்படி இருக்கும் ?' என யோசித்தார்..

கேள்வி நீண்டு கொண்டே சென்றதால்... பரமஹம்ஸரிடமே கேட்டார்...

"சுவாமிஜி, ஞானமடைந்த பிறகு இருக்கும் இந்த உடம்பிற்கும், ஞானமடையும் முன் இருந்த உடம்பிற்கும், என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள் ?"

பரமஹம்ஸர், "நிச்சயமாக ஞானமடையும் முன் இருந்த உடல் இப்போது இல்லை. ஞானம் அடைந்த பின், என் மொத்த உடலும் மாறிவிட்டது.

உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லும்பின்னும், தனக்குள்ளிருந்து ஆனந்த சக்தியை பிழிந்து விட்டன.

ஆனந்தத்தில் திக்கு முக்காடிப்போனேன்.

உண்மையாக, உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் முழுமையாக இறந்து விட்டேன். ஆனந்தத்தில் ராஜசேகரன் இறந்து போக, நித்யானந்தம் மலர்ந்தது.

ஆம்! நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், இது உண்மையையே. மீண்டும் இந்த உடலில் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறேன். அது தான் உண்மை.

ஞானமடைவதற்கு ஏழு நாட்கள் முன்பு, சுவாமி, விரக்தியின் உச்சியிலிருந்து விடுபட்டு, மிகவும் தளர்வாக இருந்தோம். அப்பொழுது, சுவாமிக்கு அபூர்வ சக்திகள் ஏகமாக் கிடைத்தது.

உலகத்தில் இருக்கும், மாந்திரிக சக்தி, வசியம், சித்திகள். இன்னும் உள்ள எல்லாவிதமான சக்திகளும் கிடைத்தன. ஆனால் சாமி, அதை சீந்தக்கூட இல்லை. சாமி அச்சக்திகளை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

இவ்வாறு ஏழு நாட்கள் பொறுமையோடு பார்த்துக்கொண்டிருந்தேன். நிரந்தரமில்லாத இச்சக்திகள் வந்து வந்து போய்கொண்டிருந்தன.

திடமான, உறுதியான, என்ன நடந்தாலும் எப்பாடு பட்டாலும் நிரந்தரமான சத்யத்தைத் தெரிந்து கொண்டே தீருவது என்ற சங்கல்பத்துடன் மிக உறுதியாக இருந்தேன்.

சாமியிடம் இருந்த மிக முக்கியமான ஒரு குணம்... சாமி உறுதியாக ஒரு முடிவு எடுத்துவிட்டால், முடிவெடுத்தது முடிவெடுத்தது தான். அதை எக்காரணம் முன்னிட்டும் மீறியதே கிடையாது.

அந்த உறுதிதான், அத்தனை வசிய சக்திகளையெல்லாம் தாண்டிய நித்ய ஆனந்த நிலையை அடையச்செய்தது.

2000-ம் ஆண்டு, ஜனவரி 1-ஆம் தேதியில் நித்தியானந்தத்தில் ஒன்றியதிலிருந்து இன்றுவரை, என்னைச் சுற்றி என்ன நடந்தாலும்...

எனக்குள் இருக்கும் ஆனந்தம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. தொடர்ந்து ஆனந்தம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த சக்தி எந்தவித பற்றோ, எதிர்பார்ப்போ, காரணகாரியமோ இல்லாமல் தொடர்ந்து பொங்கிக் கொண்டேயிருக்கிறது" என சொன்னார்.

7.3 ஞான சரீர மாற்றங்கள்

ஞானமடையும் பொழுது ஆனந்த சக்தியானது, ‘தொப்பென்று’ இடி போல் உடலுக்குள் இறங்கும் இது ஆனந்த சக்தியே ஆனாலும், எல்லா சரீரத்தாலும் தாங்கிக்கொள்ள இயலாது.

அதற்கென்று தனித்துவமான பக்குவம் வேண்டும்.

உடல் சிவன் போல் மாறாவிட்டால் உச்சந்தலையில் விழும் இடிபோல இறங்கும் ஞான சக்தியை ஒருவராலும் தாங்க இயலாது.

கட்டுக்கடங்கா கங்கை தன் முழு ஆற்றலோடு, சிவன் தலையில் மட்டுமே சங்கமிப்பாள். அந்த ஆனந்த வலியை சிவன் ஒருவரால் மட்டுமே தாங்கிக் கொள்ள இயலும்.

இப்படி இந்த சக்தியை பெற்றுக்கொள்வதற்கு, உடலையும் மனதையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.

சிரத்தையுடனும், சலிப்பில்லாமலும் மேற்கொள்ளும் தவம், யோகம், தியானம் ஆகியவை உடலையும், மனதையும் இந்த ஆனந்த அதிர்ச்சிக்குத் தயாராகச் செய்யும்.

இது பற்றி பேசும் போது பரமஹம்ஸர் ஒருமுறை இப்படிச் சொன்னார்...

Lord Shiva

ASP-ல் பக்தர் ஒருவர் இப்படி கேட்டார்...

எது ஆனந்தம்?

எதனாலும், யாராலும் கலைக்கமுடியாத ரம்யமான விழிப்புணர்வே ஆனந்தம். (ஆ)னந்தம் - 'னந்தம்'என்றால்...

அது
குறையக்கூடியது.
ஆனந்தம் என்றால்...

அது
குறையாதது !
திகட்டாதது !
தித்திப்பானது!
திருப்தியானது!

எது ஞானம் ?

மேற்கண்ட படி வாழ்தல்.
அதாவது...
ஞானத்தின் வெளிப்பாடு ஆனந்தம்.
ஆனந்தத்தின் ஆதிமூலம் ஞானம்.

ஞானமே ஆனந்தம்- ஆனந்தமே ஞானம்.

Sadhya/Spiritual Practitioner

"இடியை ஒரு இடிதாங்கியால் தான் தாங்க முடியும் ...

ஞானத்தை ஒரு தியான உடலால் தான் தாங்க முடியும். ...

பரவசம் உடலில் பரவ, முதலில் நீங்கள் 'ஞான இடிதாங்கிகளாக' மாற வேண்டும் ...

ஞான இடிதாங்கியாக மாற... உடலை தியான சக்தியால் உருவேற்ற வேண்டும், மனதை ஞானக் கருத்துக்களால் உருமாற்ற வேண்டும்.

சாமி வாழ்க்கையில் மேலுள்ள இரண்டுமே நிகழ்ந்தது மட்டுமில்லாமல், பிறந்ததிலிருந்து கடைபிடித்த சைவ உணவுப் பழக்கமும், பால்முதிர்ச்சி அடையும் முன் சிறுவயதிலேயே கிடைத்துவிட்ட முதல் ஞான அனுபவமும், உடலை மிக ஸ்திரமாக உருவாக்கி வைத்துவிட்டன. இது சாமிக்கு மாபெரும் பலமாயிருந்தது''. எனச் சொல்லி முடித்தார்.

உடலை ஸ்திரமாக வைப்பது பற்றிய விளக்கத்தை ஒரு முகம்மதிய பெரியவர் கேட்ட போது பரமஹம்ஸர் சொன்ன பதில்...

"சைவம் சிறந்ததா? அசைவம் சிறந்ததா?"

''உலகின் தலைசிறந்த படைப்பாளிகள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், சைவ உணவுப்பழக்கம் கொண்டவர்கள்.

என் அனுபவத்திலிருந்து சொல்ல வேண்டுமானால்...

சைவ உணவு உடல், மனதின் sensitivity-ஐ அழிப்பதில்லை. மாறாக அதிகப்படுத்துகின்றது.

அவை பறிக்கப்படும் போது - கதறுவதில்லை, வேதனைப்படுவதில்லை.

தான் கொல்லப்படுகிறோமே! என்ற வேதனையில் துடி துடிக்கும் போது... உடலுக்குள் பீய்ச்சியடிக்கப் படும் வேதனையின் ஹார்மோன்கள் தாவரங்களுக்குள் சுரப்பதில்லை.

எனவே, அந்த ஹார்மோன்களால் நம் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் சைவ உணவில் ஏற்படுவதில்லை.

"வேதனையின் ஹார்மோன்களால்" நமக்குள் உருவாக இருக்கும் மிருக குணங்கள் சைவ உணவில் உருவாகாது.

சைவ உணவின் மகிமைகள்...

  1. உடல் மனதில் சாந்தத் தன்மையை நிலவச் செய்கிறது.
  1. விழிப்புணர்வை அதிகப்படுத்துகிறது.
  1. ஆனந்த சக்தியைத் தாங்கவல்ல உடலை தயாராக்குகிறது.

எனவே சைவம் சிறந்தது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து'' . என மிக பண்பாய்ப் பேசி முடித்தார் பரமஹம்ஸர்.

கொல்லம் பட்டறையில் கூராக்கப்படும் கடப்பாரையைப் போல, தன் உடலையும் மனதையும் வடித்திருக்கிறார் நம் பரமஹம்ஸர்.

அந்த சிறுவயதிற்குள் நம்மைப் போன்றே வாழ்ந்த ஒருவரால் இவ்வளவையும் செய்ய முடிந்திருக்கிறது என்பதே நமக்கு கிடைத்த மாபெரும் உத்வேகம் தான்.

நம்மாலும் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்ற

நம்பிக்கையை தரும் ஒரு கற்பதரு தான் 'வாழும் வரலாறு!'.

Portrait of Paramahamsa