பால்ய பருவம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
II பால்ய பருவம்
2.1 பாட்டனாருடன்
தாய : லோக நாயகி அம்மாள்
தந்தை : அருணாச்சலம்.
(சமீபத்தில் எடுத்த படம்)


பாட்டனார் வி.ராஜி முதலியார் பேரன் ராஜசேகரனை தனக்கு கிடைத்த பொக்கிஷமாகவே நினைத்து கொண்டாடினார்கள். ராஜசேகரன் நடக்க ஆரம்பித்த காலத்திலிருந்து பாட்டனாரும், பல ஆன்மீகக் கதைகளைச் சொல்லி வளர்த்தார்கள். வளரும் போதே, ஓர் ஆன்மீகச் சூழ்நிலையில் வளர்ந்தார்.
ராஜசேகரனுக்கு முதன் முதலில் கிடைத்த அன்பளிப்பு "விநாயகர் விக்ரகம்!". பிறந்த நாள் பரிசாகக் கிடைத்த இந்த விக்ரகத்தை ஏதோ ஓர் உயிரை பாவிப்பது போல பாவித்து பாதுகாத்து வந்தார்.
பால்ய பொழுதில் அந்த விக்ரகத்தை வைத்து பூஜை செய்ய ஆரம்பித்துவிட்டார். சிறுவன் அவனுக்கே உரிய பால்ய மொழியில் விக்ரகத்திற்கு பூஜை செய்து, படையல்கள் படைத்துவிட்டு நாளைக்கு காலையில் வரும் போது எல்லாத்தையும் சாப்பிட்டிருக்கணும், இல்லன்னா உன்ன கிணத்துல தூக்கிப் போட்டுடுவேன்!" என்று பேச உரிமையும், பக்தியும் கலந்த கலவையாக ஆன்மீகப் பாதையில் காலடி எடுத்து வைத்தான்.
சிறுவனைப் பாட்டனார் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச் சென்று கண்ணப்பர், மார்க்கண்டேயன், பிரகலாதன் போன்ற மகான்களின் கதைகளைச் சொல்லுவதுண்டு. இது போன்ற கதைகளைக் கேட்டு முடித்தவுடன் சிறுவன் வீட்டிற்குச் சென்று குடும்பத்தில் உள்ள எல்லோரையும் அழைத்து, தான் கேட்ட கதைகளை ரசனையோடு சொல்லும் வித்தையும், ஆர்வத்தையும் இன்று நினைத்தாலும் குடும்பத்தார் பூரிப்படைகிறார்கள்.
● வேலூர் தியான சத்சங்கத்தில், இந்து மதத்தின் உருவ வழிபாடு சரியா?, தவறா? என ஒருவர் கேட்டபோது... “தயவு செய்து கேள்வியை திருத்திக் கேளுங்கள்”.என்றார் பரமஹம்ஸர்.
இந்து மதத்தில் உருவ வழிபாடு கிடையாது. உருவத்தின் மூலமாக தான் வழிபாடு நடைபெறுகிறதே தவிர, உருவத்தை வழிபடுவதே கிடையாது. எந்த ஒரு பக்தரும் ஏ! விக்ரகமே! இதைக்கொடு, ஏ! சிலையே! அதைக்கொடு, என்று கேட்பதில்லை. தங்களுடைய பக்தி உணர்வை வெளிப்படுத்த ஒரு வாயிலாக மட்டுமே விக்ரகங்களை பயன் படுத்துகிறார்கள். அந்த உருவங்களை பயன் படுத்தும் பொழுது, வெங்கடாசபதியே! எம்பெருமானே! என்று தன் தாய் தந்தையை விட மேலான உயிராக மட்டுமே பாவித்து வழிபடுகிறார்கள். இந்து மதத்தின், உருவம் மூலம் வழிபடுதல் எனும் கருத்து சரியான கருத்து. இது ஒரு தியான முறை. பக்தியை பற்றி பேசும் போதெல்லாம், முழுமையாக நீங்கள் பக்தி செய்யும் போது நீங்கள் தியான நிலையிலேயே இருக்கிறீர்கள் என்று சொல்வார்கள். அதனால் தான் அவருடைய பால வயதிலேயே பக்தி மார்க்கத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பெற்றோர்கள்
“உங்கள் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகள் என்று சாதாரண மாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்துங்கள்.
நீங்கள் உங்கள் பிள்ளைகளை தேர்ந்தெடுக்கவில்லை. உங்கள் பிள்ளைகள் தான் உங்களை பெற்றோர்களாக தேர்ந்தெடுத்தார்கள். இது மிக சூட்சமமான உண்மை.
இளைஞன், இளைஞி என்று சாதாரண பருவ நிலையில் இருந்த உங்களை தாய், தந்தை என்ற மதிப்பு மிகுந்த ஸ்தானத்திற்கு உயர்த்தியவர்கள் உங்கள் பிள்ளைகள்.
எனவே உங்கள் பிள்ளைகளுக்கு நன்றி உணர்வை முழுமையாக காணிக்கை ஆக்குங்கள்” என்று ஆனந்த ஸ்பூரண தியான முகாமில்(ASP) பரமஹம்ஸ நித்யானந்தர் சஹஸ்ரார தியானத்தில் சொல்வார்கள்.
மேலும் தன்னுடையப் பெற்றோர்களைப் பற்றி சொல்லும் போது, “நான் தேர்ந்தெடுத்தற்கான முக்கிய காரணம், அவர்கள் என்னுடைய ஆன்மீகப்பாதையில் எந்த ஒரு வகையிலும் குறுக்கீடு செய்யமாட்டார்கள். அவர்கள் முடிந்தால் உதவி செய்வார்கள். முடியாவிட்டால் நிச்சயமாக தடங்கல் செய்யமாட்டார்கள். அந்த அளவுக்கு கண்ணியமும், கள்ளங்கபடமற்ற (Innocence) தன்மையும் அவர்களிடம் நிறைந்திருந்ததே அவர்களை நான் பெற்றோராக தேர்ந்தெடுக்க காரணம்” என்று சொல்வார்கள்.

அருணாச்சல ஆலயத்தின் உட்பிரகாரம்
★ இந்து தர்மத்தில்
விக்ரக வழிபாடே இல்லை!
விக்ரகத்தின் மூலம்
இறைவனின் வழி படுதல் மட்டுமே உண்டு.
★ ஜெபிக்கையில்
கடவுளிடம்
ஜெபிக்கிறாய்.
தியானிக்கையில்
கடவுளாகவே
மாறிவிடுகிறாய்
★ தியானம் செய்யத் தவறாதீர்கள்
கோயில் சென்றால்
தவறாமல்
ஒரு இருபது நிமிடமாவது
அமைதியாய் அமர்ந்து
தியானம் செய்யுங்கள்.
உடல், மனம், உயிர்
ஒரு சேர உற்சாகப்படும்.
...பரமஹம்ஸ நித்யானந்தர்
புனித நகரமாம் திருவண்ணாமலை.
அருணாச்சலரின்
திருப்பாதங்களில்
சாஷ்டாங்கமாக
சரணாகதம்
அடைந்துள்ளது.
பல நூறு ஆண்டுகளாக
எண்ணிக்கையில் அடங்கா
ஞானிகளும்,
புனித ஆத்மாக்களும்
தோன்றிய நகரமாம்.

திருக்கோயில் கோபுரங்களும், சுற்றுப்புற நகரமும்.
2.2 பாட்டியுடன்
பாட்டி தனுக்கோடி அம்மாளுக்கு பேரனின் மீது கொள்ளைப் பிரியம். துருதுருவென இருக்கும் சுட்டிப் பேரனுக்குப் பரிசளிக்க நினைத்தார். ராஜசேகரனைக் கூப்பிட்டு வீட்டின் நாகைப் பெட்டியைத் திறந்து காண்பித்து "உனக்கு வேண்டியதை எடுத்துக் கொள்" என்றார். சிறுவனுக்கு ஒரே குஷி.
தங்க நகைகளில் எந்த நகையைப் பேரன் எடுக்கப் போகிறான் என்று பாட்டி ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்.
நாகைப் பெட்டியை உற்சாகத் துள்ளலோடு பார்த்த ராஜசேகரன் தங்க நகைகளுக்கு நடுவே இருந்த ருத்ராட்ச மாலையை அதே துள்ளலோடு தாவி எடுத்துக் கொண்டான். பாட்டிக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. இந்தச் சிறுவயதில், ருத்ராட்ச மாலை மேல் எப்படி ஆசை வந்தது என்பது பாட்டிக்கு மிகப்பெரிய வியப்பாக! இருந்தது.

பாட்டி தனுக்கோடி அம்மாள்

அருணாச்சலமலை உச்சியிலிருந்து எடுக்கப்பட்ட காட்சி வானம்ரூபமாய் தெரியும் திருவண்ணாமலை நகரம் மத்தியில் கம்பீரமாய் வான் நோக்கி உட்கார்ந்திருக்கும் ராஜகோபுரங்கள்
• அறியா பருவத்தில் வரும் ஆசைகள் நீங்கள் யார் என்பதை முன்னறிவிக்கும் அறிவிப்பாளர்கள். சிறு பிள்ளைகளுக்கு வரும் சின்னச்சின்ன ஆசைகள் வராமல் மகான்களுக்கு மட்டுமே வரும் ருத்ராக்ஷத்தின் மீதான விருப்பம்... இவர் சிறுகுழந்தையின் உடலில் வாழ்ந்த பெரியவர் என்பதை உறுதி செய்கிறது. மேலும் ஆசைகளால் அங்கும் இங்கும் இழுத்தடிக்கப்படும் அல்லாடும் மனம் இவரிடம் இல்லை என்பதை இந்நிகழ்ச்சி உறுதி செய்கிறது.
ராஜசேகரன்(இடதுபக்கம்) தனது சகோதரர்களுடன் நிற்கும் புகைப்படம். தன் வீட்டு மேற்கூரையில் இருந்து எடுக்கப்பட்ட காட்சியின் பின்புறத்தில் தெரிவது அருணாச்சலமலையும், ஆலயத்தின் இரண்டு கோபுரங்களும்.

ஹரித்வாரில் ஒரு பண்டிதருக்கு பரமஹம்ஸரின் பதில்...
பிரம்மச்சாரியம்? பிரம்ம-சரியம் என்றால் பிரம்மனை போல் வாழுதல். பெண்களை கண்டாலே, ஓடி ஒளிவதல்ல பிரம்மச்சரியம். உன் உள்ளிருக்கும் பெண்ணாலும் வெளியே உள்ள பெண்களாலும் தூண்டப்படாத, துன்பப்படுத்தபடாத ஆனந்தமயமான, சுதந்திரமயமான கிருஷ்ண நிலையே பிரம்மச்சரியம்.
பரவசம்? பரம் வசமாதலே பரவசம்.

2.3 ரகுபதி யோகியுடன்
திபெத்திலும், பர்மாவிலும் யோகமும், தாந்த்ரிகமும் கற்றுத் தேர்ந்து மற்றவர்களுக்கும் கற்றுத் தந்து கொண்டிருந்த ரகுபதி யோகியுடன் சுமார் ஐந்து வயதில் அறிமுகம் ஏற்பட்டது.
யோகி என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்தாற்போல் உடலமைப்பு கொண்டிருந்தார் ரகுபதி யோகி. சிறுவன் ராஜசேகரனை தினம் கோயிலுக்கு அழைத்துச் செல்வதும் அங்கு தினம் "யோகம்" கற்றுக் கொடுத்துச் செய்ய வைப்பதுமாய் இவர்களின் நட்புறவு தொடர்ந்தது.
ரகுபதி யோகி
இயற்கையின் திருவிளையாடல் - ரகுபதி யோகியும் ராஜசேகரனும் சந்தித்தது.
தனது பலவருட யோக ஞானத்தை சிறுவனுக்கு கற்றுக்கொடுத்தார். சிறுவனுக்கு கிருத்திகை மண்டபத்தில் தீட்சை அளித்தார். சந்நியாசம் தான் வாழ்க்கை, என்ற புரிதலின் பிறகு,

தீட்சை பெற்ற அந்த கனம்...
சிறுவன் ராஜசேகரனுக்கு கிடைத்த தரிசனம், அன்னை பராசக்தியின் எழில் உருவம். தன் மனக்கண்ணில் கண்ட காட்சியை பரவசத்துடன் சிலையாக வடித்தான்
இன்றும் உடன் இருக்கும் பொக்கிஷம்
கிருத்திகை மண்டபத்தில் யோகி இவருக்கு சக்தி தீட்சை கொடுத்தார். தீட்சை பெற்ற அதே கனம் ராஜசேகரனுக்கு பராசக்தியின் தரிசனம் கிடைத்தது. யோகியும் நடந்ததை உணர்வுபூர்வமாக அறிந்து கொண்டார். சிறுவனிடம் "பராசக்திதான், இனி உன் இஷ்டதேவதை"என்றுசொன்னார்.
வீட்டிற்கு வரும் வழியெங்கும் தரிசனத்தில் தோன்றிய பராசக்தியின் நினைவாகவே சிறுவன் நடந்து வந்தான். வீடு வந்ததும் முதல் வேலையாக ஒரு மாவுக்கல்லை எடுத்து, வெறும் கோணி ஊசி கொண்டு, தரிசனத்தில் பார்த்த அம்பிகையின் சிலையை உருவாக்கினான்.
"பிற்காலத்தில் நீ ஒரு பெருந்துறவி ஆவாய்" என்று ரகுபதி யோகி ஆருடம் கூறினார். அத்தோடு ஒரு புகைப்படக்காரரை ரகுபதி அழைத்துக் கொண்டு ஒரு மான்தோலின் மீது அமர வைத்துப் புகைப்படம் எடுக்கச் சொன்னார். அவரும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதெல்லாம் எதற்கு என்று புரியாமல் வினவிய ராஜசேகரனுக்கு "உனக்குக் காலம் வரும் போது புரியும் அதுவரை இந்தப் புகைப்படத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்" என்றார்.
"இதையெல்லாம் எப்படி நம்புவது" என்று கேட்ட சிறுவனுக்கு யோகி ஒரே சொடக்கில. வெறுங்கையில் இருந்து ஒரு சங்கை உருவாக்கிக் கொடுத்தார். என்ன நடக்கிறது இங்கே என்று வியப்போடு சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறுவனுக்கு ரகுபதியோகி கொடுத்த, பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் தன் வீட்டிலிருந்து வருவிக்கப்பட்ட (teleport)சங்கு(conch)இது. இதில் தேதி பொறிக்கப்பட்டிருக்கும். எப்போது கண்ணப்பர், மார்கண்டேயன், பிரகலாதன் போன்று மாறுவேன்" என்று சிந்திப்பான்.
"கண நேரத்திற்கு கனவு கண்டு விட்டு, அடுத்து அதை விட பெரிய வேறொரு கனவு" என்று செல்லும் சராசரி மனித மனப் போக்கு ராஜசேகரனிடம் அறவே இல்லை.
"நான் என்று அவர்களைப்போல மாறுவேன்?" என்று சிந்தித்ததோடு நின்றுவிடாமல், அந்த பால பருவத்திலேயே "நான் அப்படி மாறவேண்டுமானால், என்னென்ன நான் செய்ய வேண்டும்?, எப்படி என்னை தயார்படுத்த வேண்டும்?" என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டான்.
சிந்தித்ததை செயல்படுத்த கதை சொன்ன பாட்டனாரிடமே வழி கேட்டது தான் வேடிக்கை.
பாட்டனார், 'இதோ பார் ராஜசேகரா, எனக்கு கதை மட்டும் தான் சொல்லத்தெரியும், கதாபாத்திரத்தை விளக்க முடியும். அவ்வளவு தான்.
இதுக்கு மேல அது எப்படி? இது எப்படி? என்றெல்லாம் நீ கேட்டால் எனக்கு தர்மசங்கடம் தான் மிச்சம். உண்மையிலேயே எனக்கு எதுவுமே தெரியாது.
தயவுசெய்து, இதுபோன்ற கஷ்டமான கேள்வியெல்லாம் கேட்டு என்னை கஷ்டப்படுத்தாதே' என்று தன் தெரியாமையை தெரிந்தே ஒத்துக் கொண்டது தான் அந்த வேடிக்கை.
"குறைந்தபட்சம், உங்களுக்கு தெரியாது என்ற விஷயம் தெரிந்து விட்டால், உங்களுக்கு தெரியாது என்ற விஷயமாவது தெரிய வரும். இல்லையென்றால் தெரியாது என்ற விஷயமே கடைசி வரை உங்களுக்கு தெரியாமல் போய்விடும்" என்று பரமஹம்ஸ நித்யானந்தர் ஆனந்த ஸ்பூரண தியான முகாமில் (ASP) சொல்வதுண்டு.
ASP எனும் இரண்டு நாள் தியான முகாமில், ஞானமடைந்த பின் நடந்தவை, பல கதைகள், வேத சத்யங்கள், விஞ்ஞானம் பற்றி பேசி, பேசி நமக்கு தெரியாது என்ற உண்மையைத்தான் தெரிய வைப்பார் நம் பரமஹம்ஸர்.
இப்போது இவர் செய்யும் செயலை, சிறுவனாக இருக்கும் போதே செய்து, பாட்டனாரையே "எனக்கு தெரியாது" என்று ஒத்துக் கொள்ள வைத்தது ஆச்சரியமா? சாதாரணமா?
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது இது தானோ!.
"நான் எப்போது
கண்ணப்பர்,
மார்கண்டேயன்,
பிரகலாதன் போன்று
மாறுவேன்!"