KAILASA Library/பரமஹம்ச நித்தியானந்தர்/அவதாரம்Sign in
பரமஹம்ச நித்தியானந்தர்

அவதாரம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

1.2 அவதாரம்

ராஜ சேகரன் என்பது
சிவனின் நாமம். ராஜ-
சேகரன் என்றால்
"கடவுள்களின் அரசன்"
என்று அர்த்தம்

உண்மையான தேடுதல் இருந்தால் நிச்சயம் ஞானம் கிடைக்கும் என்பதைத் தொடர்ந்து நிரூபிக்க பூமியில் அவ்வப்போது மகான்கள் ஆன்மீக மலர்களாக மலர்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி மலர்ந்த ஓர் அற்புத மலர்தான் நமது - பரமஹம்ஸ நித்யானந்தர்.

உண்மையான குருவிற்கு எந்தக் காலத்திலும் பஞ்சமிருந்ததில்லை. உண்மையான சீடர்களுக்குத்தான் எல்லாக் காலங்களிலும் பஞ்சம்.

மனிதர்களின் இயல்பே, தான் கெட்டுப் போவதற்கான 99 வழிகளை தெரிந்து வைத்திருப்பது. உருப்படி ஆவதற்கான வழிகளை அறிந்திருந்தும் ஒரு வழிகளையும் பயன்படுத்தாமல் இருப்பதுதான் விந்தை!

நாம் மனித உருவெடுத்தற்கான ஒரே ஒரு காரணம் நிலையான, நித்தியமான ஆனந்தத்தை அடைவதற்காகத்தான். இந்த நிலையான நித்யானந்தத்தை நாம் அடைவதற்காக உன்னதமான ஒரு வழியைக் காட்டி, 99 தவறான வழிகளையும் ரத்தினச் சுருக்கமாக சுட்டிக் காட்டி மாபெரும் ஆன்மீகச் சேவையைச் செய்து வருகிறார் நமது பரமஹம்ஸ நித்யானந்தர். இவர் ஆன்மீக உலகின் ஓர் ஒப்பற்ற நட்சத்திரம்.

இவர் அக ஒளியைக் கண்டு கொண்டவர், இறை சக்தியை அனுபவமாக உணர்ந்தவர், காலத்தையும், உடலையும் தாண்டும் தெய்வீக அனுபவம் பெற்றவர், ஆனந்தம் என்னும் பெருங்கடலைத் தன்னகத்தே கண்டு கொண்டவர். இவர் நோயாளிகளுக்கு நோய் தீர்க்கும் மருத்துவர், பிரச்சனைகளோடு வருவோர்க்கு சிறந்த ஆலோசகர், வாழும் கலை கற்க விரும்புவோர்க்கு சிறந்த வழிகாட்டி, ஆன்மீகத் தேடுதலோடு வருவோர்க்கு அருமையான குரு.

● யார் குரு?
உன்னுள் உள்ள குருவை
விழிக்கச் செய்பவர்,

● எதிர்காலத்தை குருவால் க்கணிக்க முடியுமா?

உன் எதிர்காலத்தை சொல்ல
வந்தவரல்ல குரு,
அதை மாற்றி
எழுத வந்தவரே குரு,

  • பரமஹம்ஸ நித்யானந்தர்
பரமஹம்ஸ நித்யானந்தர்

இந்த நூற்றாண்டில் வாழும் ஒரு சிறந்த மகான் (Contemporary Master) தென்னிந்தியாவின் ஆன்மீக நகரான திருவண்ணாமலையில் அவதரித்தார். 1978ஆம் வருடம் ஜனவரி முதல் தேதி, நள்ளிரவு சரியாக 12.30 மணிக்கு அஷ்டமி திதியில், அருணாசலம், லோகநாயகி தம்பதியருக்கு மூன்று மகன்களில் இரண்டாமவாராகப் பிறந்த இவருக்கு பூவுலகில் பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் ராஜசேகரன்.

முக்காலத்தையும் உணரும் ஞான அனுபவம் கிடைத்தப்பின் அவருடைய பிறப்பைப் பற்றி ஞான தரிசனத்தில் தெரிந்து கொண்டதை பக்தர்களுடன் பரமஹம்ஸர் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்னது, "என்னுடைய உடலில் புகுந்து கொள்வதற்கு முன்பும், புகுந்த பொழுதும் இருந்த நிலைகள் எல்லாமே எனக்குத் தெளிவாக நினைவில் இருந்து தெரிகிறது. எல்லாமே நானாக இருக்கும் நினைவில் இருந்து பூமியைப் பார்த்தேன். பூமி இருளால் கவ்வப்பட்டிருந்தது. காற்று மண்டலம் அமைதியாக இருந்தது.

அப்போது தென்னிந்தியாவின் ஒரு மூலையில் நட்சத்திரம் போன்ற ஓர் ஒளியைக் கண்டேன். அடுத்த வினாடியே அந்த ஒளியில் புகுந்தேன். கண்விழித்துப் பார்த்தேன். அது திருவண்ணாமலையில் பிறந்திருப்பது தெரிந்தது. அந்த க்ஷணத்தில் தான் நான் உடலில் புகுந்து இந்தப் பிறவியை எடுத்தேன்."

தன் சூட்சும உடலிலிருந்து ஸ்தூல உடலில் புகுந்த பிறகு திருவண்ணாமலைக் குன்றில் தன் ஞானக் கண்ணால் கண்ட காட்சிதான் மேலே தரப்பட்டுள்ள பிறப்பின் ரகசியம்.

1.4 ஜோதிடத் தீர்க்கம்

குடும்ப வழக்கப்படி அவர் பிறந்த பத்தாம் நாள் ஜாதகம் கணிக்கப்படுவதற்காகக் குடும்ப ஜோதிடர் அழைக்கப்பட்டார். அவரது ஜன்ம திதியில் நக்ஷத்திரங்களின் போக்கை மிகவும் கவனத்தோடு கவனித்து, "இவர் கன்யா ராசி, கன்யா லக்னத்தில் பிறந்தவர்.இவர் ஜாதகத்துக் கணிப்பின்படி இவர் ஒரு நாள் உலக வாழ்க்கையைத் துறந்து சந்நியாசியாகி விடுவார்" என்று சொன்னார்.

தங்கள் மகன் சந்நியாசியாகப் போய்விடுவான் என்று தெரிந்து கொண்ட கணம் பெற்றோர்கள் மிகவும் மனக் कष्टத்திற்கு ஆளானார்கள்.

"இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா" என்று ஜோசியரைக் கேட்டதற்கு "இந்த கணிப்பு இம்மி அளவு கூடப் பிசகாது, நான் கூறிய படி நடந்தே தீரும் தன் ஜாதகம் பற்றி தெரிந்து கொள்ளாதவரை - சந்நியாசி ஆவது கொஞ்சம் தாமதப்படும், அவ்வளவுதான்" என்று முடித்துக் கொண்டார்.

இப்படித்தான் நடக்கும், இதுதான் இறைச் சித்தம் என்று தெளிவாகத் தெரிந்த பின் பெற்றோர் தங்களைத் தேற்றிக் கொண்டு, தங்கள் பிள்ளை சந்நியாசியாகத்தான் போக வேண்டியிருந்தால் அப்படியே நடக்கட்டும். நாம் நமது பிள்ளையின் எந்தச் செயல்களிலும் குறுக்கிட வேண்டாம் என்று தெளிவான முடிவுக்கு வந்தார்கள்.

● ஞான அனுபவம் ஞான அனுபவங்கள் வார்த்தைக்கு அப்பாற்பட்டவை. ஒரு ஞானியின் ஞான அனுபவத்தை கேட்கும் பொழுதும், படிக்கும் பொழுதும், நம் மனதால் கற்பனையே செய்ய முடியாத ஒரு கோணத்திலிருந்து அது விளக்கப்படுவது தான் ஞான அனுபவம் என்பதற்கான அத்தாட்சி.

2003ல் திருவண்ணாமலை தியானசத்சங்கத்தில்... பரமஹம்ஸர்

ஒருவர் : ஜோதிடம் உண்மையா? பரமஹம்ஸர் : ஜோதிடம் உண்மை. ஆனால் அதை சொல்பவர்களெல்லாம் உண்மையானவர்களாக இல்லை.

● பிள்ளைகள் வளர்க்கப்படுவதில்லை. அவர்கள் வளர்கிறார்கள். "பிள்ளைகளை வளர்ப்பதற்கு, நீங்கள் வளர்ந்திருக்க வேண்டும்." என்று சொல்வார் நம் பரமஹம்ஸர். தன் பிள்ளையின் சுதந்திரத்தை முழுமையாக மதித்த நம் பெற்றோர்கள் வளர்ந்தவர்கள். முதிர்ந்தவர்கள் உங்கள் பிள்ளைகளுக்கு இதேபோல் சுதந்திரம் அளித்துப் பாருங்கள். அவர்களோடு சேர்ந்து நீங்களும் வளர்வதைக் காண்பீர்கள்.

பக்தி! சக்தி! முக்தி!