நீங்கள் பாபாஜியை சந்தித்தீர்களா ?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
2. ஓம்காரீஸ்வரர் மலையில்
இப்படி ஞானத் தேடுதலில் பல மலைகளில் அவர் அனுபவங்களை பெற்றிருந்தாலும்...
ஜன நடமாட்டமே இல்லாத ஓம்காரீஸ்வரர் மலையில் இயற்கையிலேயே தியானம் செய்ய வசதியாக உட்காரும் வகையில் சிறு பிளவோடு கூடிய ஒரு பாறை இருந்தது.
வெகுநேரம் அந்தப் பாறையில் அமர்ந்தபடியே தியானம் செய்வார். ஒரு நாள் சாயங்கால வேளையில் ஜன நடமாட்டமே இல்லாத அந்த மலைப் பகுதியில் தூரத்தில் மரத்தடியில் யாரோ ஒருவர் வருவது போல் தெரியவே ஆச்சரியம் தாளாமல் யார் அது? என்று பார்க்க அந்த நபரை நோக்கி ஓடினார்.
அருகே சென்ற பிறகு அது மனிதன் அல்ல கரடி என்று தெரியவே சற்று திகைத்தார்.
என்ன செய்வது என்று தெரியாததால் வெறுமனே அமைதியாக அந்தக் கரடியைப் பார்த்தார். "இவ்வளவு அருகே வந்தபின் தப்பிக்க முடியாது.
எனவே என்ன நடக்கிறதோ நடக்கட்டும்" என்று அமைதியோடு கரடியைப் பார்த்தார்.
சில நொடிகள் கரடியும் என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்து விட்டு, வலதும், இடதுமாக உடலை ஆட்டித் திரும்பிச் சென்று விட்டது, அமைதியாக.
3. பஞ்ச தபஸ்
ஞானப் பாதையில் பல தபஸ்களைச் செய்து வந்தார். அதில் ஒன்று பஞ்சதபஸ். விழிப்புணர்வை அதிகப்படுத்த தன்னைத் சுற்றித் தீயை எரியச் செய்து, தலையில் ஒரு தீச்சட்டியை வைத்துக் கொண்டு, தீ அணையாமல் இருக்கச் சில சிறுவர்களை அமர்த்திவிட்டுக் காலையில் இருந்து மாலை வரை செய்வார். இதுபோன்ற மிகக் கடினமான தபஸ்களை ஏன் செய்கிறீர்கள்? என்று சிலர் கேட்டதற்கு, "வெளியில் உள்ள தீ சுடுவதை விட, என்னுள் இருக்கும் தீ சுடுவதை என்னால் பொறுக்க முடியவில்லை. அதனால் தான் இப்படி" என்றுாதாரணமாகப் பதில் அளித்து விட்டார்.
