திராடக்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
5.4 திராடக் :
நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒரு விஷப்பரீட்சை தான் திராடக்.
நம்மால் எத்தனை நொடிகளுக்கு மேல் சூரியனை நேருக்கு நேர் பார்க்க முடியும். சில நொடிகளுக்கு மேல் முடியாது.
ஆனால் திராடக் எனும் தியானத்தில் காலையில் சூரியன் உதித்ததிலிருந்து மாலையில் அது மறையும் வரை தொடர்ந்து விழிப்புணர்வோடு சூரியனை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
தன்னுள் கொழுந்து விட்டு எரியும் விழிப்புணர்வு தீயை மேலும் அதிகப்படுத்திக் கொள்ள இந்த திராடக் தியானத்தையும் தான் மேற்கொண்டதாக பரமஹம்ஸர் சொல்வார்கள்.
பாம்பு கூட பரவசத்தில்
ஓம்காரீஸ்வரர் மலைப்பகுதியில் மிக சுதந்திரத்தோடு அவர் வாழ்ந்துகொண்டிருந்த போது நிகழ்ந்த சம்பவம் இது.
பாறை ஒன்றின் மீது மிக ஓய்வாய் படுத்திருந்தார்.
ஆழ்ந்த தியான நிலைக்குள் செல்லும் போதெல்லாம் உடல் தாண்டிய அனுபவத்திலிருப்பார். அவரைச் சுற்றியுள்ளவற்றிடமிருந்து அவரால் பிரித்துப்பார்க்க முடியாது.
அவரே எல்லாமாக உணரும் அந்த நிலையில்... அருகில் பாம்பொன்று படுத்திருந்தது. அந்த நிலையில்... இது பாம்பு! நான் மனிதன், என்று பிரித்துப்பார்க்கும் மனம் இல்லை.
எனவே அவரின் அருகாமையை பாம்பும், பாம்பின் அருகாமையை அவரும் ஆனந்தத்தோடு அனுபவித்துக் கொண்டிருந்தனர். இருவருக்கும் பயமில்லை.
வெகு நேரம் கழித்து இயல்பு நிலைக்கு திரும்பி வந்ததும் மனதில் வந்த முதல் எண்ணம் "அச்சசோ! பாம்பு!" அடுத்த கணம் 빠ம்பிடம் "அச்சோ மனிதன்!!" எனும் உணர்வு பிறந்ததை பார்க்க முடிந்தது, என பரமஹம்ஸர் சொல்வார்.
அதுவரை பரவசமாய் படுத்திருந்த பாம்பு உஷாராவது அதன் உடலசைவுகளில் நன்றாய் தெரிந்தது. பாம்பு உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றுவிட்டது.
● எனக்கு அது பாம்பு என்ற எண்ணம் வராத வரை... அதற்கு பாதகமே இல்லை. அதுவும் பரவசத்தில் ஆழ்ந்திருந்து.
ஒரு எண்ணம் அந்த உயிரை அங்கிருந்து விரட்டியே விட்டது. எனவே சொல்கிறேன், 'எண்ணங்கள் மிக மிக வலிமையானவை' என இந்த சம்பவம் பற்றி சொல்லும் போது பரமஹம்ஸர் சொல்வார்கள்.

இந்த வாரத் தியானம்:
பதஞ்சலி யோக சூத்திரம் சொல்லும் அருமையான வாழ்வியல் தத்துவம் ஒன்று...
"வன்முறை துளியுமில்லா மனிதனின் அன்மை மிருகங்களைக்கூட ஆனந்தமடையச் செய்யும்."
உங்களிடம் உள்ள வன்முறை, தடுமாற்றம் ஆகியன உங்களின் கவனத்திற்குத் (அதாவது மேல்மனத்தின் கவனத்திற்கு) தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அவை தொடர்ந்து உங்கள் உடலில் ரசாயன மாற்றங்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றன.
1.3.2006 குமுதம் வார இதழில் "மனதை திற... மகிழ்ச்சி பொங்கட்டும்" எனும் தொடரில் பரமஹம்ஸர் எழுதியது...
5.5 எலும்பு முறிவும் அதிசய குணமும்
தபோவனத்திலிருந்து திரும்பும் போதும் பரமஹம்ஸர் ஒரு ராணுவ வாகனத்தில் பயணம் செய்தார். அதில் வசதியாக உட்காருவதற்கான இருக்கைகளுக்கு பதிலாக மரப் பலகைகளே இருந்தன. திடீரென எதிர்பாராத ஒரு பள்ளத்தில் இறங்கி ஏறியதில் வாகனம் கொஞ்சம் தடுமாறியது. பரமஹம்ஸரின் இடுப்பெலும்பில் ஏதோ ஒரு விரிசல் ஏற்பட்டது போன்ற உணர்வும், வலியும் தெரிந்தது. அந்த இராணுவ முகாமைச் சேர்ந்த மருத்துவர் மாவுகட்டு போட்டு விடுவதாகக் சொன்னார். பரமஹம்ஸர் அதை ஏற்கவில்லை. உள்ளங்கையால் தடவி விட்டபடியே “எல்லாம் சரியாகிவிடும்” என்றார்.
ஹரித்வார் சென்றதும் ஒரு மருத்துவமனையில் Radiograph எடுக்கப்பட்டது. அதைப் பார்த்த மருத்துவர் திகைத்துப் போனார். எலும்பு முறிவு இருந்தும் பரமஹம்ஸர் எதுவும் நடಕ್ಕாதது போல் இயல்பாகவே வலியில்லாமல் இருந்ததைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார். பரமஹம்ஸர் முதன் முதலில் தனக்கே Healing செய்து கொண்டு, இன்று அதை உலக மக்கள் பலருக்கும் ஒரு பெரும் சேவையாகச் செய்து வருகிறார்.
கங்கையில் காவி
“கந்தையானாலும் கசக்கிக் கட்டு” என்பர் நம் அனுபவமிக்க தமிழ் முன்னோர்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸர் “ஒருவன் கிழிந்த உடையை உடுத்துவது தரித்திரத்தை வீட்டுக்கழைக்கும்” என்பார். என்பார்.
ஆனாலும் நம் பரமஹம்ஸரோ கிழிசல் இல்லாமல் கசக்கி கட்டுவதோடு எப்போதும் புதுப் பொலிவோடு பளிச்சென தன்
அவரிடமிருந்ததோ ஒரே ஒரு செட் காவி துணி மட்டுமே. அந்த காவி துணியை பளிச்சென வைத்திருப்பதற்காக அவரிடம் பாத்திரமும், புதிதாய் காலிப் பொடியோ கிடையாது. தன் துணிகளுக்கு காவி போடுவதற்கு அவர் பின்பற்றிய முறை மிகவும் சுவாரஸ்யமானது. இதைப் பற்றி அவர் சொன்னவை...
“பெரும்பாலும் ஆற்றங்கரையோரங்களில் தான் நான் வாழ்ந்து வருவேன். அருகேயிருக்கும் புற்று மண்ணையெடுத்துக் கொண்டு ஆற்றங்கரையோரத்தில் ஒரு சிறு பள்ளம் பறிப்பேன். அந்த பள்ளத்தில்ீ நீரை ஊற்றி புற்று மண்ணைனை கரைத்து என் துணியை முங்கியெடுத்தால் துணி புதுக் காவியோடு பளிச்சிடும்.”
இப்படி எனக்குத் தேவையான எல்லா அடிப்படை விஷயங்களையும் மிக எளிமையான முறையிலேயே தாயார் செய்து கொள்வேன். எந்த கட்டுப்பாடுமில்லாமல் வாழ்ந்த அந்த பரிவ்ராஜக காலம் ஒரு சுகயோக காலம் தான்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
நல்லவனுக்கு சொல்லும் ஆயுதம்
பரமஹம்ஸருக்கு பார்ப்பதெல்லாம் ஆயுதம்
“இருப்பதைக் கொண்டு திருப்தியாய் வாழ முடியும்” என்ற மகா வாக்கியத்தை நடைமுறை வாழ்க்கையில் நம் பரமஹம்ஸர் சாத்தியப்படுத்திக்காட்டி வாழ்ந்திருக்கிறார்.
தேடுதல் தீவிரம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. தவம், தியானம் என்றே 24 மணி நேரமும் வாழ்ந்து வந்தார். பயணம் திடீர் திடீர் என்று மாறிப் பல்வேறு இடங்களுக்குச் சென்று கடைசியில் காசியில் வந்து நின்றது.
காசியில் மணிகார்னிகாகாட் என்ற இடத்தில் நூற்றுக் கணக்கான பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன. அதைப் பார்த்ததும் பரமஹம்சரின் மனதில் ஒரு உத்வேகம் தோன்றியது. “மரண ரகசியம் பற்றித் தெரிந்து கொள்ளாமல், உணராமல் இந்த இடத்தை விட்டு எழுந்திருக்கப் போவதில்லை” என்று உறுதி பூண்டார். மரண பயத்தை வெல்ல இரண்டரை நாட்கள் மௌன நிலையில் பொறுத்திருக்க வேண்டியிருந்தது.
அந்த நாட்களில் அவரது உடல் காலில் இருந்து மெல்ல மெல்ல இறக்க ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக மரண பயம் தெளிந்தது. முழு மௌனநிலையில் முழு விழிப்புணர்வோடு இருந்ததால் அந்த பயத்தை இரண்டரை நாட்களில் தாண்டிவிட்டார். அதற்கு பின் பயம் என்பது ஏற்பட்டதே இல்லை.
