KAILASA Library/பரமஹம்ச நித்தியானந்தர்/ஞானிகள் சொல்வதை செய்யுங்கள், ஞானிகள் செய்வதை செய்யாதீர்கள்Sign in
பரமஹம்ச நித்தியானந்தர்

ஞானிகள் சொல்வதை செய்யுங்கள், ஞானிகள் செய்வதை செய்யாதீர்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

4.5 வலியில்லா பிரசவம்

தன் பரிவராஜக நாட்களில்...

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடியினர் வாழும் பகுதியில் ஒரு வாரத்திற்கு மேல் தங்கும் வாய்ப்பு பரமஹம்ஸருக்கு கிடைத்தது.

அப்போது அங்கே அவர் கண்ட காட்சிகள் நாம் வாழும் இதே உலகில் கற்பனை கூட செய்ய முடியாதவை.

திடீரென ஒருநாள் பழங்குடி கிராமத்தின் நடுவே சிறு கூடாரம் ஒன்று போடப்பட்டது.

கூடாரம் போட்ட ஆண்கள், சில நிமிடங்களில் அங்கிருந்து நகர்ந்து கொள்ள.. கொஞ்ச நேரம் கழித்து அந்த கூடாரத்திற்குள் ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் வந்தார்.

பத்து பதினைந்து நிமிடங்கள் அந்த கூடாரத்திற்குள் அப்பெண்மணி இருந்திருப்பார். கூடாரத்திற்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது...

அதுவரை அந்த கூடாரத்தில் இருந்து எந்த சத்தமும் வெளிவரவே இல்லை. மழலையின் அழுகுரல் கேட்ட சில நிமிடங்களில் அதே பெண்மணி தானே ஈன்றெடுத்த குழந்தையோடு சர்வசாதாரணமாக அப்பெண்மணி கூடாரத்தை விட்டு வெளியேற... பரமஹம்ஸர் ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்றுவிட்டார்.

ஒரு பெண்ணிற்கு பிரசவம் நிகழ்ந்திருக்கிறது...

ஆனால் அப்பெண்ணிடமிருந்து கூச்சலில்லை; பிரசவத்திற்கு முன் பயம் இல்லை: பிரசவத்திற்கு பின் சோர்வில்லை; எப்படி இதெல்லாம் சாத்தியம்? எனத்தீவிரமாய் சிந்தித்தபின்...

விடையேதும் கிடைக்காததால் அருகே இருப்பவர்களிடம் விசாரித்தார். அவர்களுக்கு இவரது விசாரணை தான் புதிரென தோன்றியது.

“அதெப்படி வலியோ, கூச்சலோ இல்லாமல் பிரசவம் நிகழ முடியும்?”

“பிரசவம் நிகழ வலியும், கூச்சலும் வரவேண்டிய அவசியமென்ன?”

“என்ன! அவற்றைக்கெல்லாம் அவசியமே இல்லையா?”

“இதென்னப்பா இவ்வளவு விசித்திரமாக கேட்கிறாய். பிரசவம் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. அதற்கான நேரம் வந்ததும் பிரசவம் நிகழ்ந்து விடும் அவ்வளவே!” என அவர்கள் பேசிய தோரணையிலிருந்து...

அந்த மக்களின் மனதில் வலி, வேதனை என்ற ஒன்றே பதிவாகவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.

வலி என்பதே மனதின் ஒரு பதிவுதான். மனதில் அந்த பதிவு இல்லாவிட்டால் மனிதனால் பல வேதனைகளில் இருந்து தப்பித்து வாழ முடியும் என்ற மகா உண்மை அந்த கிராமத்தில் பரமஹம்ஸருக்கு அனுபவமானது.

புளிசோறு

தன்னுடைய பரிவராஜக வாழ்க்கை பற்றி பரமஹம்சர் சொல்வதை கேட்பதே ஒரு வித்தியாசமான அனுபவம் தான். மலைகளிலும், குகைகளிலும் படுத்துறங்கி வாழ்ந்து வந்த காலங்களில்... அவருக்கு சமைத்துக் கொடுக்க யார் இருந்தார்கள்?

ஏதாவது ஒரு கிராமத்தைத் தாண்டிச் செல்லும்போது அங்கிருந்து சிறிது அரிசியை வாங்கி, தன் மேல் துண்டில் முடிச்சிட்டுக்கொள்வார். ஆள் நடமாட்டமில்லாத காட்டுப் பகுதிக்குள் அவர் நடமாட ஆரம்பித்தபின்... எப்போதும் தன்னுடன் இருக்கும் கமண்டலத்திலுள்ள நீரை ஊற்றி, தற்காலிகமாக நெருப்பு மூட்டி அங்கே பக்கத்திலிருக்கும் புளிய மரத்திலிருந்து புளியம் பழத்தை எடுத்து கொதிக்கும் நீரில் அந்த புளியம் பழத்தை ஆட விடுவார்...

நீர் கொதிக்க கொதிக்க இயற்கை ரசம் தயார். அதில் சிறிதளவு அரிசியை போட்டால் சில நொடிகளில் இயற்கை புளிசாதம் சுட சுட தயார்.

இப்படி இயற்கையாய் தயாரிக்கப்பட்ட புளிசாதம் பல நாட்களுக்கு கெடாது என்பார். நம் பரமஹம்ஸர் அதிலிருந்து ஒரு கைபிடி புளியஞ்சோறு சாப்பிட்டால் அதுவே ஒரு நாளுக்கு போதுமானதாக இருக்குமென்பார். இப்படி உணவை ஒரு பொருட்டென்று எண்ணாமல் இயற்கையில் சமைத்து, இயற்கையில் வாழ்ந்து எல்லா தவங்களையும் தியான உருவேற்றினார் நம் பரமஹம்ஸர்.

4.6 இமயமலையில் பரமஹம்ஸர்

வடக்கே, சாதுக்களிடம் ரயிலில் டிக்கெட் கேட்பதில்லை.

அவர்கள் எங்கு வேண்டுமானாலும் ரயிலில் செல்லலாம்.

நடந்து நடந்து களைத்துப் போனால் அடுத்த ரயிலில் ஏறி வேறு இடத்திற்கு செல்வார். ‘இந்த ரயில் எங்கே போகிறது?’

இது எந்த இடம்? என்று எதையுமே தெரிந்து கொள்ளமாட்டார்.

ஜன்னலுக்கு வெளியே பார்ப்பார். இடம் பிடித்திருந்தால் இறங்கிவிடுவார்

Himalayan mountain landscape

பரமஹம்ஸர் ஏதாவது ஒரு ரயிலில் ஏறுவார். மனதுக்குப் பிடித்தமான இடத்தில் இறங்கிக் கொள்வார்.

ஏதாவது ஒரு திசையில் பயணப்படுவார்.

4.7 சக்தி சாகர அனுபவம்

ASP தியான முகாமை பரமஹம்ஸரே நடத்திக் கொண்டிருந்த காலகட்டங்களில் பரமஹம்ஸர் விஷுத்தி சக்கரம் எடுக்கையில் விரும்பி சொல்லும் சம்பவம் இது.

"கோமுக் தாண்டி தபோவனில் சாமி தவம் செய்துகொண்டிருந்தோம். அங்க தகரடப்பாவால் ஆன சின்ன சின்ன குடில்களில் தான் நாங்கள் தவம் செய்து கொண்டிருப்போம்.

அந்த இடத்தில் புலிகளின் நடமாட்டம் அடிக்கடி இருக்கும். யாராவது ஒருவர் பார்த்துவிட்டால் உடனே சமிக்கை சப்தங்களை எழுப்புவார்கள்.

அவரவருக்கு அருகே இருக்கும் குடில்களுக்குள் சென்று பூட்டிக்கொள்வோம்.

அப்படியொருநாள், இரவு சமிக்கை சப்தம் வந்ததும் அனைவரும் குடில்களுக்குள் சென்றுவிட்டோம். காலை பொழுது விடிந்ததும் குடிலைவிட்டு வெளியே வந்துவிட்டோம்.

ஒரேயொரு குடில் மட்டும் திறக்கப்படவேயில்லை. சந்தேகத்தோடு எல்லோரும் அந்த குடிலை நோக்கி சென்றோம். உள்ளே இருப்பவர்கள் பற்றிய பதைபதைப்போடு கதவை தட்டி விசாரித்தோம்.

‘உள்ளே இருந்து ஒரேயொரு சந்நியாசியின் குரல் மட்டும் கேட்டது, நான் பத்திரமாக இருக்கிறேன். ஆனால் என்னால் கதவை திறக்க முடியவில்லை’.

‘மூடிய உன்னால், எப்படி திறக்க முடியாமல் போகும்?’

வடக்கே, சாதுக்களிடம் ரயிலில் டிக்கெட் கேட்பதில்லை.

Paramahamsa in Himalayas

‘ஜன்னல் வழியா உள்ளே குதித்து பார்த்தால் தான் புரியும்,’

உடனே நான்கு சந்நியாசிகள் உள்ளே குதித்தோம். உள்ளே கதவுக்கு முட்டுக்கொடுத்து கோதுமையை அரைக்கும் ஒரு பெரிய அரவைக் கல்லை பார்த்ததும் ஆச்சரியமானோம்.

காரணம், நான்கு பேராய் சேர்ந்து அந்த கல்லை நகர்த்துவதே கடினம்தான். நான்கு பேராய் அந்த கல்லை நகர்த்தி வைத்துவிட்டு கேட்டோம்,

நான்கு பேர் சேர்ந்து நகர்த்தும் கல்லை எப்படியப்பா நீ ஒரு ஆளாய் நகர்த்தி வைத்தாய்?

‘என்னது! நகர்த்தினேனா!... புலி வருகிறது என எல்லோரும் போட்ட சத்தத்தில் அந்த கல்லை நான் தூக்கி கொண்டுாந்தல்லவா வைத்தேன்!’ என்றார்.

Tனியொரு நபரால் அசைக்க முடியாத கல்லை, தனியாய் தூக்குமளவுக்கு அவருள் சக்தியை பாய்ச்சியது எது? அந்த சக்தி எங்கேயிருக்கிறது?

இரண்டுக்கும் ஒரே பதில், அது விஷுத்தி சக்கரம். நம்முடைய தொண்டைக்குழியில் உள்ள விஷுத்தி சக்கரம் ஒரு (சக்தி சாகரம்) சக்தி ஊற்று. சூழ்நிலையை சந்திக்க நேரிடும் போது அச்சக்கரம் திறந்து கொள்கிறது.

தியானத்தில் ஆழ்ந்து செல்ல செல்ல அவசரகாலங்களில் உடலுக்குள் பொங்கும் சக்தி,ாதாரணமாக இருக்கும் போதே பொங்க ஆரம்பிக்கும்.

உடலும், மனமும் உற்சாகத்தோடு இருக்கும்”. என பரமஹம்ஸர் விஷுத்தி சக்கரம் பற்றி சொல்லும்போது சொல்வார்.

Puri Rath Yatra Chariot
ஸ்ரீ இராமகிருஷ்ண மடம்

ஸ்ரீ இராமகிருஷ்ண மடம்- பரமஹம்ஸர் மிகவும் உவகையுடன் தங்கும் புனித பீடங்களில் ஒன்றாகும். (பேலூர் மடம்)

தாஜ்மஹால்-பரமஹம்ஸர்

ய மு னா நதிக்கரையிலே...சலசலக்கும் ஆறும் ... பைம்பொழில் தோட்டமும்...மனதை மயக்கும் காற்றும்... தனித்துவமான பேரமைதியும்... எவர்தான் கரையார்? உடையாத மனமும் உருகுமன்றோ!...

ஆம்! பார்வையாளர் பார்வைநேரங்களில் மட்டும் அனுமதிக்கப்பட...பரமஹம்ஸரோ. ..அங்கே தங்கி...ஏழு நாட்கள் தியானம் செய்தார். எவ்வாறு சாத்தியம்? இக் கேள்விக்கு பதில்... மீண்டும் கேள்வியாக?...

மர்ம புன்னகை மட்டுமே.

தாஜ்மஹால் மேலிருந்து பார்வை

கிழக்கு கடற்கரையோரத்தில்...ஒரிசாவின் திருக்கோயில் நகரமாம் புரியிலும் நான்கு புனித பீடத்துள் ஒன்றாய்...உலக பிரசித்தி பெற்ற...ஜெகத்தின் நாதமாய்...ஜெக நாதர் ஆலயத்தின் ரத யாத்திரை.

முக்தியளிக்கும் ஜெகந்நாதர் வீற்றிருக்க பக்தர்கள் பக்தி பரவசத்தோடு...ரதத்தை யாத்திரைக்கு அழைத்துச்செல்ல...பக்தி பரவச நிலையில் பக்தர்கள் முகம் பக்தியின் பக்தியாய்... தன்னைத்தானே கொடுக்கவும்...தயாராய்... பக்தியில் கரைந்து ...உருகி ரதயாத்திரை துவங்குகிறது. முக்தியளிக்கும் கடவுளே மக்களுக்காக... தேரில் அமர்ந்து... வெளியே யாத்திரை வருகிறார்.

கங்கோத்ரி பனிமலை

கங்கோத்ரி பனிமலை

கங்கோத்ரி கோயில்

கங்கோத்ரி கோயில்

கும்ப காட்

கும்ப காட்

சங்கம்

சங்கம்

பரிவராஜகம்

பரமஹம்ஸரின் ஞானவேட்கை அவரை இந்தியாவின் நெடுங்கிலும் இயங்கச் செய்தது. வடக்கே இமயத்திலிருக்கும் தபோவனத்திலிருந்து...தெற்கே கன்னியாகுமரி முனை வரையிலும்...மேற்கே துவாரகையில் துவங்கி.... கிழக்கே கல்கத்தா கடல் வரையிலும்... தன்னந்தனியாய்...உடைமைகளின்றி, உரைவிடமின்றி... அன்னமின்றி...காடு, மேடுகளிலும் திரிந்து குகையிலும், இடுகாட்டிலும் உறங்கினாலும். மகாராஜாரைப் போல் வாழ்ந்தார்.

நர்மதை ஆறு

நர்மதை ஆறு

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

வரைபடம்

மதுரா
கஜூராஹோ
துவாரகா
அஜந்தா
எல்லோரா
ஷீரடி
மந்த்ராலயம்
திருப்பதி
கொடுங்கலூர்
சபரிமலை

அமர்நாத்

அமர்நாத்

நேபால்

ரிஷிகேஷ்

நேபால்
அமர்நாத்
ரிஷிகேஷ்

காமக்யா

பெலூர், தட்சினேஷ்வர்

ஹரித்வார்

புரி

ஹரித்வார்
பாண்டிச்சேரி

இத்தேடுதலில் ஒரே இடத்திற்கு...மீண்டும்,
மீண்டும் செல்லாமலும், ஒரே இடத்தில்
தங்காமலும் தன் தவத்தில்... தொடர்ந்து
பயணித்து கொண்டிருந்தார். இப்பரிவ்ராஜக
வாழ்க்கையில் இந்தியாவின்... மிகவும்
அற்புதமான... மிகவும்
கவித்துவமான... இயற்கையின்
வளங்களையும், புனித ஸ்தலங்களையும்
கண்டார்...உணர்ந்தார்... பின் தொடர்ந்து
பயணித்தார். பரிவ்ராஜக வாழ்க்கையில்
பரமஹம்ஸர் சென்ற மிக முக்கியத்துவமான
இடங்கள்.

மதுரை

பாண்டிச்சேரி

மதுரை

கவசம்!

பரமஹம்ஸர் சிறுவனாயிருந்த போது அவருக்கு கிடைக்கும் பணத்தை சிறுபிள்ளை போல் செலவு செய்ததே கிடையாது. அதற்கொரு உதாரணம் தான் இந்த கவச பொருட்கள். தெய்வ விக்கிரகங்கள் மேல் சாத்தப்பட்டு அழகு பார்க்கப்படும் இந்த கவசங்களை தனக்கு தரப்படும் காசுகளை பத்திரப்படுத்தி, பத்திரப்படுத்தியே வாங்கியிருக்கிறார். 'மனதைச் சிதறவிடாத' பக்குவ நிலையிலேயே பரமஹம்ஸர் வாழ்ந்தார் என்பதற்கு இதைவிட ஒரு பெரிய சான்று தர முடியுமா என்ன!

கவசம்

"மரத்தின் நடுவேயிருந்தது... உன் முதுகில் ஏறுகிறது!"

"360degree அனுபவம்" என தன் பவள குன்று அனுபவத்தை பற்றி சொல்லும் போது பரமஹம்ஸர் குறிப்பிடுவார். அந்த ஆனந்த அனுபவத்திற்கு பிறகு அதே நிலையில் அவர் வாழும் போது, பக்தி மார்க்கத்தில் மிகவும் ஆர்வங்கொண்ட தன் வயதொத்த சிறுவனிடம் தன் உடலில் நிகழும் மாற்றங்கள் பற்றி ஒரு இரவு வேளையில் பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்க... அந்த சிறுவனை நடுக்கம் பற்றிக் கொண்டது."எல்லாம் தெரிகிறது. எல்லாம் புரிகிறது, நான் தான் எல்லாம்..." என்ற உண்மைகள் அச்சிறுவனின் மனதை உலுக்கியது.

உலுக்கப்பட்ட சிறுவன், "சும்மா கதை விடாதே. நீ சொல்கிற மாதிரி எல்லாம் ஒருவர்க்கு நடக்க வாய்ப்பேயில்லை." என பொங்கினான். பரமஹம்ஸ சிறுவன், "இல்லப்பா...நான் சொல்வதெல்லாம் உண்மை. என் பின்னால் என்னென்ன இருத்திறதென்று சொல்லவா?." அந்த வெளிச்சம் மாங்கிய இரவு சூழலில் தன் முதுகிற்கு பின்னே என்ன மரம் இருக்கிறது? அது எவ்வளவு பெரிதாக இருக்கிறது என பின்னால் திரும்பி பார்க்காமலே சொன்னார்.

"இப்படி குத்துமதிப்பா யார் வேண்டுமானாலும் சொல்லலாம்." என அச்சிறுவன் சொல்லி முடிப்பதற்குள்... பரமஹம்ஸ சிறுவன், "ஏய்! ஏய்! நல்லா பார் அந்த மரத்தின் நடுவே கட்டெறும்பு ஒன்று ஏறுகிறது."

சட்டென திரும்பி பார்த்த சிறுவன் அதிர்ந்தான்... காரணம் மரத்தின் நடுவே கட்டெறும்பு! ஆனால் அவரின் தலை திரும்பவே இல்லை.

"புடனியில் ஒரு கண் இருந்தால் மட்டுமே நேர் பின்னால் நடப்பதை இவ்வளவு துல்லியமாக ஒருவரால் சொல்ல முடியும்...

திரும்பாமலே பார்க்க முடிகிறதென்றால்.... அச்சோ!

இவனுக்கு ஏதோ நடந்திருக்கிறது. ஏதோ இவனை பிடிச்சிருக்கு! முதலில் நான் இங்கேயிருந்து தப்பிக்க வேண்டும்..." என நினைத்துக் கொண்டிருக்கையில், பரமஹம்ஸ சிறுவன், "டேய்...டேய் அந்த கட்டெறும்பு இப்ப உன் முதுகில் ஏறிகிட்டிருக்குடா" என சொன்னதும், அச்சிறுவன் தன்கையால் முதுகில் தடவ கட்டெறும்புகிக்கியது...அவ்வளவுதான். சிறுவன் வெலவெலத்துப்போனான். தலையை பக்கவாட்டில் கூட திருப்பாமல் இவ்வளவுவையும் சொன்ன விதத்தை யோசிக்க யோசிக்க வயிறே கலங்க ஆரம்பித்தது.

"நீ இங்கேயே உட்கார்ந்திரு... ஒரு சின்ன வேலையிருக்கிறது. முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். அப்புறமா இரண்டுபேரும் ஒன்னா வீட்டுக்கு போகலாம்" என அச்சிறுவன் நடுங்கும் குரலில் சொல்லிக்கொண்டே ஓட முயற்சிப்பதை பார்க்க பார்க்க பரமஹம்ஸ சிறுவனுக்கு சிரிப்புதான் வந்தது...

'டேய் நில்லு... நானும் வரேன்!' என சொல்லச் சொல்ல, நடுக்கமெடுத்த சிறுவன், "இல்லை! இல்லை!... நீ ரொம்ப நல்ல நிலையில் இருக்கிறாய். அப்படியே உட்கார்ந்திரு, இதோ என் வேலையை முடித்த கையோடு வந்துவிடுகிறேன்", என ஒட்டமும் நடையுமாய் ஓடிப்போன அச்சிறுவனைப்பற்றி இன்று சொல்லும் போது கூட பரமஹம்ஸர் வயிறு குலுங்க சிரிப்பார்கள்.

• அந்த சம்பவத்திலிருந்து அச்சிறுவன், பரமஹம்ஸரை நண்பனாக பார்த்ததில்லை. குருவாக மட்டுமே பார்க்க முடிந்ததாம். இவ்வளவு பெரிய மாற்றங்கள் நிகழ்ந்த பின்னும்...பரமஹம்ஸர் எளிமையை விட்டு மாறவே இல்லை. குதூகலம் குறையவே இல்லை. 'நான் பெரியவன்', 'உனக்கெல்லாம் என்ன தெரியும்?' என்பன போன்ற எந்தவொரு கர்வமும் அவருக்குள் பிறக்கவேயில்லை. அவர் அவராகவே இருந்தார். நமக்கு இப்படியொரு அனுபவம் நிகழ்ந்துவிட்டால்... எப்படியெல்லாம் இருப்போம்? சிந்தித்துப் பாருங்கள்!.

அந்த மரம்! அந்த கல்!

V. ஞானம் அடைதல்

1. மஹா அவதார் ஸ்ரீ பாபாஜியோடு

இப்படியாக, தேடுதல் என்னும் தீ அவரை இமயமலை வரை அழைத்துச் சென்று விட்டது. அங்கே கங்கோத்ரிக்கு அப்பால் உள்ள தபோவனம் அருகில் தவமேற்றுக் கொண்டிருந்தார். அப்போது அவர் இருந்த இடத்தை ஜடாதாரியான உடலும், நீண்ட தலைமுடியும், தெய்வீகத் தன்மையைப் பிரதிபலிக்கும் முகஅமைப்பும் முகபாவமும் கொண்டவராக ஒரு மனிதர் கடந்து சென்றார். அவரது இளமை மிளிரும் உடலும், நடையும் வெளிப்படுத்திய தெய்வீகத் தன்மையும் நமது பரமஹம்ஸரை ‘இவர் நிச்சயம் ஏதோ ஒரு பெரிய மகானாகத்தான் இருக்க வேண்டும்’ என்று உணரவைத்தது.

அந்த மனிதர் பரமஹம்ஸரை தாண்டும் போது “பரமஹம்ஸ... நித்யானந்த...” என்ற வார்த்தைகளை உதிர்த்தவாறு கடந்து சென்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு தாடியோடு வந்த ஒரு வயதானவர் பரமஹம்ஸரைப் பார்த்து “நீங்கள் பாபாஜியை சந்தித்தீர்களா?” என்று கேட்டார். (தன்னைக் கடந்தது மகா அவதார் பாபாஜி என்ற விஷயம் பரமஹம்ஸருக்கு அப்போது தெரியாது)

“பாபாஜியா யார் அவர்?” அப்படி யாரையும் நான் சந்திக்கவில்லையே என்றார் பரமஹம்ஸர்.

“இல்லை! இல்லை! உங்களைப் பார்த்த உடனேயே நீங்கள் பாபாஜியின் தரிசனம் பெற்றவர் என்பதை உணர முடிகிறது. நான் பாபாஜியின் சீடன்” என்றார்.

பாபாஜி உதிர்த்த பரமஹம்ஸ.. நித்யானந்த என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்று அப்போது அவரால் உணர முடியவில்லை. பின்னர் பரமஹம்ஸர் சந்நியாசம் பெற்றுக் கொள்ளும் போது அவருக்கு நித்யானந்த என்று பெயர் அருளப்பட்டபோது பாபாஜியை நினைத்து ஆச்சரியப்பட்டார், பரவசம் அடைந்தார்.

Portrait

சேலம் - IMA வளாகத்தில் தியான சொற்பொழிவு...

மருத்துவர் ஒருவர் கேட்டார், “மருத்துவ ரீதியாக 300 வருடங்கள் வரை மனிதன் வாழ முடியும் என உறுதி செய்திருக்கிறோம். ஆனால் 2000 வருடங்கள் மகா அவதார் பாபாஜி வாழ்கிறார் என்று சொல்வதை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்வது. அது உண்மையா? பொய்யா?”

“உங்களை பார்க்கும் இதே இரண்டு கண்களால் மகா அவதார் பாபாஜியை நான் பார்த்திருக்கிறேன். அவர் பேசியதை இதே காதால் முழுமையாக கேட்டிருக்கிறேன். முழுமையாக உணர்ந்திருக்கிறேன் மகா அவதார் பாபாஜி இருக்கிறார் என்பது சர்ச்சைக்கு அப்பாற்பட்ட உண்மை...”