த வ வா ழ் க் கை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
4.1 பரிவராஜக வாழ்க்கை
பதினாறு வயது முடிந்து ஆறு மாதம் ஆன நிலையில் தன் ஆன்மீகத் தேடுதலின் மிகத் தீவிரமான கட்டத்தை நெருங்கி விட்டார். வீட்டை விட்டு வெளியேறினார்.
சில காலம் ஆன்மீக ஸ்தாபனங்களிலும், சில காலம் மலைகளிலும் கழித்தார்.
இறைவனை நோக்கித் தவம், தியானம், சாஸ்திரங்களைப் படிப்பது வேதங்களைப் படிப்பது, ஞானிகள் பலரைச் சந்திப்பது, ஞான வழிகள் என்று பல்வேறு தெய்வீக, ஆன்மீக விஷயங்களில் ஈடுபட்டார்.
இமயம் முதல் குமரி வரை பல தீர்த்த ஸ்தலங்கள், கோயில்கள், புராதனச் சிறப்பு மிக்க இடங்கள் என்று யாத்திரை செய்தார். இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக 2000 கி.மீ.க்கு மேல் நடந்து சென்றார்.
பத்திரிக்கையாளரும் பரமஹம்ஸரும்...
- பரிவராஜகம்? எங்குமிருக்கும் இறைசக்தியை தன்னொள் உணர்ந்து கொள்ள 100% பாதுகாப்பின்மையோடு யாருடைய துணையுமில்லாமல் எவனுடைய ஆதரவுமில்லாமல் தன்னந்தனியாய் துணிச்சலோடு ஆனந்த சாகசம் செய்திட புறப்படுவதே பரிவராஜகம். ■
4.2 ஸ்ரீ ராமகிருஷ்ணர், சாரதா தேவியின் தரிசனம்
இடுப்புக்கு ஒரு காவித் துணி
தோளுக்கு ஒரு காவித் துணி
கையில் ஒரு காவித் துண்டு
கழுத்தில் ஒரு ருத்ராட்ச மாலை
கமண்டலம் என்று ஒரு பாத்திரம்
-இவையே பரிவராஜக வாழ்க்கையைத் துவக்கிய போது அவரிடம் இருந்த உடமைகள். கையில் ஒரு பைசா கூட இல்லாமல், அடுத்த வேளைக்கு உணவு சேமிக்கக் கூடாது - என்ற மனக் கட்டளையோடு ஆன்மீகத் தேடுதலை மேலும் தீவிரப்படுத்தினார்
பல புத்தகங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள் என்று படித்துக் கொண்டிருக்கும் போது, "ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் அமுத மொழிகள்" என்ற புத்தகம் அவரை மிகவும் கவர்ந்தது..

பரமஹம்ஸர் மிகவும் விரும்பி பூஜித்த இராமகிருஷ்ணர் படம்
ஒரு விஷயம் தன்னைக் கவர்ந்துவிட்டால் அதில் அவர்காட்டும் ஈபாட்டுக்கும், ஆர்வத்திற்கும் அவரே இணை. என்னை இவ்வளவு ஈர்க்கிறதே இந்த புத்தகம் என்று ஒரே மூச்சில் உட்கார்ந்த இடத்தை விட்டு எழாமல் பத்துமணி நேரம் தொடர்ச்சியாகப் படித்து முடித்தார்.
அதன் பின் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் போதனைகளில் லயித்து மூன்று நாட்கள் கழித்த பின் மீண்டும் ஓர் எதிர்பாராத அற்புதம் நிகழ்ந்தது. அதை அவர் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.
மூன்று நாட்கள் கழிந்த பின் ஸ்ரீ ராமகிருஷ்ணரும், சாரதா தேவியும் தரிசனம் கொடுத்தார்கள். இந்த தரிசன அனுபவம் ஆன்மீகத் தேடுதல் என்னும் அவரது யாகத்தில் நெய் ஊற்றியது போல் ஆயிற்று. அதன் பின் ராமகிருஷ்ணர் அவரது இதயக் கோவிலில் இடம் பிடித்துவிட்டார்.


4.3 நர்மதை பரிகிரமம்
அவருடைய பரிவராஜத்தின் ஒரு பகுதியாக நர்மதையை சுற்றி வலம் வருவதை தவமாக செய்தார்.
பஞ்ச பூதங்கள் வழியாக இறைசக்தியோடு தொடர்பு கொள்ள முடியும். நிலம், நெருப்பு, நீர், காற்று, ஆகாயம், ஆகிய அனைத்தின் மூலமாக இறைசக்தியை தொடர்பு கொள்ளதான் பலவழிகளை ரிஷிகள் உருவாக்கி உள்ளனர்.
விக்ரகங்கள் மண் தத்துவத்தின் வெளிப்பாடு. மண்தத்துவத்தின் மூலம் இறைசக்தியை கிரகிக்கும் முறைதான் விக்ரகங்கள் மூலமாக வழிபாடு செய்வது!.
தீர்த்தயாத்திரைகள் செல்வது நீர்தத்துவத்தின் மூலமாக இறை சக்தியை கிரகிக்கும் முறை.
நர்மதை பரிகிரமம் செய்வதின் மூலம் நீர்சக்தி பற்றியும், அதன் ரகசியங்கள் பற்றியும் பரமஹம்ஸர் முழுமையாக தெரிந்து கொண்டார்.
இந்த நிகழ்வால்தான் பரமஹம்ஸர் பல புது புது அனுபவங்களை சந்தித்தார். அவையனைத்தும் வெவ்வேறு தலைப்புகளில் தொடர்ந்து விளக்கப்படும்.
4.4 நாகா பாபாவோடு
பரிவ்ராஜக நாட்களில் இமயமலை பகுதியில் ஒரு நாகா பாபாவோடு வாழும் வாய்ப்பு பரமஹம்ஸருக்கு கிடைத்தது. நாகா பாபா என்றால் சுதந்திரமாக உடைகள் கூட உடுத்தாமல் ஆனந்தமாய் வாழும் மகான்கள்.
நாகா பாபா பற்றி பரமஹம்ஸர் சொன்னது...
அவர் ஹூக்கா பிடிப்பார். அதுவும் அதில் கஞ்சா கலந்துதான் பிடிப்பார். அவர் மகான். அவர் ஆனந்தமாயிருக்கிறார்... என்ற செய்திகளை கேட்டாலும் அவர் ஹூக்கா பிடிக்கும் செயலை என்னால் அப்போது ஜீரணிக்க முடியவில்லை. அவரின் செயல்கள் மிகவும் புதிராக இருந்தது.
சிலநாட்கள் அவரோடு தங்கினேன். அவர் உணவு எடுத்துக் கொள்வதில்லை. சாதாரண மனிதன் பின்பற்றும் எந்த விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. அவரிடம் பல ஆச்சரியங்களை பார்த்தேன்...
ஹூக்கா பிடிக்க ஆரம்பிக்கும் முன், அதற்குள் ஒரு செப்பு காசை போடுவார்... அப்புறம் தேவைப்படும் போது ஹூக்காவை கவிழ்த்தால் அந்த செப்புகாசு தங்க காசாக மாறியிருக்கும்.
உடனே அந்த காசை எடுத்து சென்று இன்னும் கொஞ்சம் நிரப்பிக் கொண்டு திரும்புவார்.
செப்பு காசை தங்க காசாக்கிய அற்புதம் நிகழ்வும், பின்னர் அதே காசை வைத்து இன்னுங்கொஞ்சம் நிரப்பிக் கொண்டு வருவதும் முன்னுக்கு முரணாய் இருக்கின்றதே! என சிந்தித்துக் கொண்டேயிருக்கையில்...
அதுவரை ஒரு வார்த்தை கூட பேசாதவர், என் எண்ணத்தை படித்தவர் போல் என்னை பார்த்து "அங்கம் பழுத்தால் தங்கம் பழுக்கும்” என மிக திருத்தமான தமிழில் சொன்னார். வடநாட்டவர் சுத்த தமிழில் பேசுவதை கண்டு வியந்தேன்.
மேலும் அவர், "இங்கபாரப்பா, ஞானமடைந்த பின் இந்த உடலுக்குள் உயிர் தங்குவது சுலபான விஷயமில்லை.
பிரபஞ்சசக்தி இந்த உடலுக்குள் தாண்டவமாடுவது, ஒரு சிறு குடிசைக்குள் பெரிய யானையை கட்டி வைப்பதற்கு சமம்.
பெரிய யானையை சிறிய குடிசையில் அமைதியாய் இருக்கச் செய்ய முடியுமா? முடியாதல்லவா...
அதே அந்த யானையை கொஞ்சம் மந்தமாக்கினால், அதை ஒரே இடத்தில் அமைதியாய் இருக்கச் செய்ய முடியும்.
ஒரு சில முக்கியமான காரணங்களுக்காக இந்த உடலில் இன்னுங் கொஞ்சம் காலம் நான் இருக்க வேண்டும். உடலில் தங்குவதற்காக இந்த உடலை கொஞ்சம் மந்தப்படுத்த வேண்டும். அதனால் தான் இதெல்லாம் தேவைப்படுகின்றது” என ஹூக்காவை காட்டி சொன்னார் ஆனந்தம் ததும்பும் புன்னகையோடு!
என்னை அதிசயிக்க வைத்த இன்னொரு அதிசயம்...
"தொடர்ந்து ஹூக்கா பிடித்தாலும் அவரின் உடலிலிருந்து எந்தவொரு துர்நாற்றமும் வராது. மாறாக ஒரு வித நறுமணம் அவரைச் சுற்றி இருக்கும்.”
பெரிய யானையை சிறிய
குடிசையில் அமைதியாய்
இருக்கச் செய்ய
முடியுமா...!
● ஓசூர் கல்லூரி ஒன்றில் பரமஹம்ஸர் தியான சொற்பொழிவாற்றிய போது...
கல்லூரி மாணவர் ஒருவர், "நீங்கள் என்ன தியானம் செய்கிறீர்கள்?" என கேட்டார்.
பரமஹம்ஸர், "எந்த தியானமும் செய்வதில்லை. ஞானமடைந்த பின் தியானம் செய்யமாட்டார்கள். ஞானிகள் தியானம் செய்தால் மேல் நோக்கி நகர ஆரம்பித்து விடுவார்கள். பிரபஞ்ச சக்தியில் கரைந்துவிடுவார்கள். அப்புறம் உடலை இயக்கவே முடியாது.
பிடிதி ஆஸ்ரமத்தின்
Laughing Temple-ல்
பரமஹம்ஸர்
ஆனந்தபுரிவாசிகளோடு
பேசியபோது...
ஒருமுறை சங்கரர் தன்
சீடர்களோடு பாத யாத்திரையாக
போய் கொண்டிருந்தபோது
அவருக்கு தாகமெடுத்தது.
உடனே, அருகே
வைக்கப்பட்டிருந்த ஒரு கலயத்தை
எடுத்து குடித்தார். கலயத்தில்
இருந்தது நீர் அல்ல கள்!
அவரோடிருந்த சில
சீடர்கள், "குருவே குடித்துவிட்டார்"
என சொல்லி கலயத்தில்
இருந்ததை குடித்து முடித்தார்கள்.
இன்னுங்கொஞ்சம் தூரம்
சென்ற பின், அவருக்கு மீண்டும்
தாகமெடுத்தது. இம்முறை
அவர்கள் வந்து நின்ற இடம் பெரிய
கொல்லம் பட்டறை.
காய்ச்சப்பட்ட இரும்பு பொங்கிக் கொண்டிருந்தது.
சங்கரர் அந்த காய்ச்சப்பட்ட இரும்பை அள்ளிப்பருகினார்.
இததை பார்த்த சீடர்கள் திகைத்தனர்.
சங்கரர், "இதையும் குடிக்க
வேண்டியது தானே" என்றார்
சீடர்கள் தலைகவிழ்ந்தனர்.
இப்படியொரு சம்பவம்
நிகழ்ந்ததா? இல்லையா? என
மூளை ரீதியாக ஆராய்ந்து
நேரத்தை வீணடிக்காதீர்கள்.
சம்பவம் சொல்லும் ஞான
செய்தியை உள்வாங்குங்கள்.
"ஞானிகளை எடைபோடாதீர்கள்.
அவர்களின் செயல்களுக்கு
காரணங்கள் பல உண்டு" என்றார்.
அதனால், உடலுக்குள்ளேயே
இருக்க ஏதாவதொரு வகையில் உடலோடு
கட்டிப்போட வேண்டும். கிட்டத்தட்ட
தியானத்திற்குள் ஆழ்த்தாதவற்றை செய்ய
வேண்டும்.
நாங்கள் கீழே வர வேண்டாம்.
நீங்கள் மேலே போக வேண்டும். தியானம் செய்யுங்கள்.
எனவே தான், "ஞானிகள்
சொல்வதை செய்யுங்கள். ஞானிகள்
செய்வதை செய்யாதீர்கள் என்பேன்" என
சொன்னார். அரங்கமே அதிரும்படி
மாணவர்கள் கைதட்டினார்கள்.