பரமஹம்ஸரின் முகத்தில் இன்னும் அந்த வடு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மாதாஜி குப்பம்மாளுடன் ராஜசேகரன்

மாதாஜி குப்பம்மாள் தியானத்தில்
அமர்ந்திருக்கும் காட்சி
பின்புறத்தில் தெரிவது அருணாச்சல மலை.
2.5 மாதாஜி குப்பம்மாளுடன்...
அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்று
சிறுவன் ஜெபம், பிராத்தனை என்று ஈடுபட்டு
கொண்டிருக்கும் போது, ஓர் அற்புத முக்கோண
வடிவம் தரிசனத்தில் தெரிந்தது. வீட்டிற்கு
வந்தவுடன், தான் தரிசனத்தில் கண்ட
வடிவத்தை வரைபடமாக்கி விட்டான்
சிறுவன்.
தங்கள் குடும்பத்திற்கு நட்பு முறையில் அறிமுகமாகி இருந்த மாதாஜி குப்பம்மாளிடம் ராஜசேகரனின் பாட்டி தன் பேரன் வரைந்த வரைபடத்தை காண்பித்தார். பார்த்த மாத்திரத்தில் வெகு ஆச்சரியத்தோடு, "இது ஸ்ரீசக்கரம்! ஸ்தபதிகளும், ஆச்சாரியார்களுமே, வரையக் கஷ்டப்படும் இந்த ஸ்ரீ சக்கரத்தை இந்தச் சிறுவனால் எப்படி இவ்வளவு தெளிவாக வரைய முடிந்தது?" என்றார். சிறுவனுக்கோ தான் வரைந்திருப்பது "ஸ்ரீசக்கரம்" என்ற விஷயம் தெரியாது. மாதாஜி குப்பம்மாள் ஆச்சரியம் நிறைந்த பார்வையோடு சிறுவனை, "நாங்கள் எவ்வளவோ தியானம், பூஜைகள் செய்தும் கிடைக்காத தரிசனம் உனக்கு எப்படிக் கிடைத்தது?" என்று பக்தி கலந்த குரலில் கேட்டார்கள். இது போன்று கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென்று அப்போது சிறுவன் ராஜசேகரனுக்குப் புரியாது.
அதன் பின் மாதாஜி குப்பம்மாள் சிறுவனுக்கு "சக்தி மந்திரத்தையும்", "ஸ்ரீசக்கர பூஜை" செய்யும் விதத்தையும் கற்றுக் கொடுத்தார்கள்.
மாதாஜி குப்பம்மாளுடன்..

தரிசனத்தில் பார்த்த
“ஸ்ரீ சக்கரம்”
சிறுவன், யந்திரமாய் வடித்த
“ஸ்ரீ சக்கரம்”


ஓம். சத்குருவே துணை
மஹா. ஞா. ரூ. ஸ்ரீ. ஸ்ரீ. ஸ்ரீலஸ்ரீ. பஞ்சமுக யோகி பிரஹ்ம. ரிஷி இசக்கி மாமுனிவர் அவர்களின் உபதேசி அடைந்த பிரஹ்மயோகினி . விதான . என்ற அடியேன் அடியேன் . என் அன்புக்கு பாத்திரமான . லோகநாயகி, அருணாசலம் தமக்கு பிறந்த . ராஜ சேகரன் என்பவனு திரு . பவ . ஆண்டு . வைகாசி திங்கள் 10 நாள் . விசாகம் நட்சத்திரம் மங்களவாரம் . பௌர்ணமி அன்று . நான் பெற்ற பேற்றை என்சிறு பாலனுக்கு தரக்க ண்ணியும் . அவரின் போர்வையிலும் . தீக்ஷை அளிக்கப்பட்ட தீக்ஷா . நாமமும் சூட்டப்பட்டு தீக்ஷையும் . அளிக்கப்பட்டு தீக்ஷா நாமமும் . பிரஹ்மசுகி இப்படிக்கு, இசக்கிமுனிவர் அடிமையா . விதானஎன்கிறகுப்பம்மாள் பிரஹ்ம யோகினி
திருவண்ணாமலை 24.5.94
மீண்டும் ஜோஷ்யர்
ராஜசேகரன் சிறுவனாக இருந்தபோதே இனங்கண்டு கொண்டவர்களில் சாது பிரம்மச்சாரியும் ஒருவர். திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரிய வாழ்க்கை வாழ்ந்து வந்து ஜோஷ்யரை மக்கள் “சாது பிரம்மச்சாரி” என்று மதிப்பு கலந்த பிரியத்தோடு அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஜோஷ்யத்தை முறைப்படி பார்க்கும் சாது பிரம்மச்சாரி கணித்துக் கூறும் விஷயங்கள் அப்படியே நடக்கும்.
சிறுவனை பார்க்கும் போதெல்லாம் சாது பிரம்மச்சாரி அன்போடு சிரித்து சில நொடிகளாவது ராஜசேகரனின் கண்களை கூர்ந்து பார்ப்பார். இந்த செயல் சிறுவனுக்கு கொஞ்சம் வினோதமாகத் தெரியும். தொடர்ந்து சிறுவன் இது போன்ற வினோதங்களை பார்த்துக் கொண்டிருப்பதால், வினோதமாக மற்றவர்கள் பார்ப்பதை வினோதமாக எடுத்துக்கொள்ளாமல் இயல்பாக எடுத்துக் கொள்ள பழகி விட்டான்.
ஒரு முறை ராஜசேகரனின் வயதொத்த உறவுமுறை சிறுவனும், ராஜசேகரனும் ஜோதிடர் சாதுபிரம்மச்சாரியை சந்திக்க சென்றார்கள். ஜோசியர் அறையில் உட்கார்ந்து ஏடுகளைப் புரட்டிக் கொண்டிருந்தார்.
அறை வெளியில் இரண்டு சிறுவர்களைப் பார்த்ததும் ஜோசியர் ராஜசேகரனின் உறவுமுறை சிறுவனைப் பார்த்து, "நீ மட்டும் உள்ளே வா, சந்நியாஸிகள் உள்ளே வரக்கூடாது, சந்நியாஸிகளுக்கு ஜோதிடம் பார்க்க மாட்டேன், எனவே ராஜசேகரா! நீ உள்ளே வர வேண்டாம்” என்றார்.
ராஜசேகரன் வினோதசூழ்நிலைகளை இயல்பாக அணுக பழகிவிட்டதால் ஒரு மெல்லிய புன்னகையோடு சிறுவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.
வீட்டிற்கு வரும் வழியெல்லாம் சிறுவனுக்கு ஒரே ஒரு சிந்தனைதான் திரும்ப திரும்ப வந்தது, நான் சந்நியாஸி என்று இவரால் ஆணித்தரமாக கூற முடிந்தது எப்படி?

கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.
சட்டென்று ஒரு யோசனை, இதற்கு ஒரு முடிவு தெரிய வேண்டுமென்றால் ஒரே ஒரு வழிதான். என்னுடைய ஜாதகத்தை நான் பார்த்தே ஆக வேண்டும்.
தன்னுடைய ஜாதகத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற வேகத்தில் பெற்றோரை அணுகி நான் என்னுடைய ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றான் சிறுவன் வெகு நிதானமாக.
திக்கென்று திடுக்கிட்டார்கள் பெற்றோர்கள். ஜாதகம் கணித்துவிட்டு தீர்க்கமாக ஜோஷ்யர் சொன்ன வரிகள் நினைவுக்கு வந்தது, இந்த பையனுக்கு உண்மை தெரியாத வரை அவன் உங்களை விட்டு பிரிவது கொஞ்சம் தாமதமாகும்.
என்னாத்தான் தங்கள் மகன் சந்நியாசி ஆவது இறைச் சித்தம் என்று ஏற்றுக் கொண்டாலும், பந்தத்தின் பாசம் விடுமா? பெற்றோர் அவர்களால் முடிந்தஅளவு நடித்தார்கள். ‘ஜாதகம் அங்கே இருக்கிறது, இங்கே இருக்கிறது’ என எல்லாம் தேடுவது போல தேடி விட்டு ‘எங்க இருக்குன்னு தெரியல, காணாமல் போயிடிச்சு போலஇருக்கு’ என்று சொன்னார்கள்.
சிறுவனும், மீண்டும் மீண்டும் கேட்டு விட்டு அலுத்துப்போய், விட்டு விட்டான்!.
அலுத்துப் போய்விட்டாலும்... ‘நடப்பது, நடந்தே தீரும்! என்ற விதிப்படி எல்லா நல்லதும் நடந்துவிட்டது’ என்பது நாமெல்லாம் கண்டுகளிக்கும் பரவசம் தானே!

படத்திலிருக்கும் இந்த கம்பளியை வெகு சிரமப்பட்டு தியானபீடத்தின் பிரம்மச்சாரிகள் கண்டுபிடித்து கொண்டுவந்திருக்கிறார்கள்.

2.6 யோகி ராம் சூரத் குமாருடன்
திருவண்ணாமலை கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள சின்ன நந்திக்கு எதிரே இருக்கும் படிக்கட்டில் அமர்ந்து கொண்டிருப்பது யோகி ராம் சூரத்குமாருக்கு வழக்கமான ஒரு விஷயம்.
இளம் மாணவர்கள் யோகியை வணங்கி, "சாமி, நான் இந்தப் பரீட்சையில் தேறி விடுவேனா?" என்று கேட்பது வழக்கம்.
யோகி சிலசமயம் ஏதாவது பதில் சொல்வார். பெரும்பாலும் பதில் கொடுக்க மாட்டார். சில சமயங்களில் "ராம்,ராம்" அல்லது "போய்வா" என்பார்.
இதனால் அவரை ஒரு புரியாத புதிராகவே எல்லோரும் நினைத்தனர். ஒரு முறை ராஜசேகரன் வணங்கி எல்லோரும் போல் "சாமி, நான் பரீட்சையில் தேறி விடுவேனா?" எனக் கேட்டார். அவரோ, "நீ வாழ்க்கைப் பரீட்சையில் தேறிவிடுவாய்" என்றார். ராஜசேகரனுக்கு ஏதோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் பதிலளிப்பது போல தோன்றியது. எனவே விளக்கம் கேட்டு நின்றார். யோகி சொன்னார்.
"போ, போ, இது இப்போதைக்குப் புரியாது, ஆனால் போகப் போக இந்த வார்த்தைகளை நீ மறக்க மாட்டாய்" என்றார்.
மெல்ல, மெல்ல யோகியின் வார்த்தைகளில் இருந்த அர்த்தம் சிறுவனுக்குப் புரிய ஆரம்பித்தது. இன்றளவும் பரமஹம்ஸ நித்யானந்தர் அந்த வார்த்தைகளை நினைவில் வைத்திருக்கிறார்.
2.7 வகுப்பறையில் ஐயப்பன்
சரிசனம்
ஒரு நாள் வகுப்பிற்குத்
தாமதமாக வந்ததால் அனுமதி
வேண்டி வகுப்பு வாசலில் நின்று
கொண்டிருந்தார் ராஜசேகரன்.
அது கணித வகுப்பு.

பரமஹம்ஸ சிறுவன் படித்த பள்ளி.
கணித ஆசிரியர் ஏதோ குனிந்த படி எழுதிக் கொண்டிருந்தார். அவர் ஓர் ஐயப்ப பக்தர்.
உள்ளுணர்வு தூண்டப்பட்டவராய் வாசலை நோக்கித் திரும்பிப் பார்த்தார். பார்த்ததும் திடீரென்று ஏதோ மாயக் காட்சியைக் கண்டது போல் செயலற்றுச் சில வினாடிகள் எழுந்து நின்றார். பின் ராஜசேகரனுக்கு வணக்கம் தெரிவித்தார்.
வகுப்பு முடிந்ததும் ஆசிரியர் சிறுவனைத் தன் வீட்டுக்குச் சாப்பிட வருமாறு அழைத்தார். அழைத்திருந்தபடி ராஜசேகரன் ஆசிரியர் வீட்டிற்கு வந்தார். மாணவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவர் காலில் விழுந்த ஆசிரியர் "நீங்கள் என் குருநாதர்" என்றும் "நான் தங்கள் சிஷ்யர்" என்றும் கூறினார். மேலும் "நான் உங்களை பார்க்கும்போது சுவாமி ஐயப்பனைத் தரிசனத்தில் கண்டேன்" என்றார். அந்த நிமிடம் ராஜசேகரனால் 'என்ன நடக்கிறது, என்ன பேசுகிறார் இவர்' என்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை

ஐயப்ப
தரிசனமாய்
பரமஹம்ஸ
சிறுவன் தன்
ஆசிரியருக்கே
காட்சி தந்த
வகுப்பறை
வாசல்!