கட்டுக்குள் அடங்கிய கட்டுக்கடங்காத சக்தி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சிறுவன் தனக்கு தெரிந்து யாருக்கும் துன்பம் கொடுத்ததில்லை. சிறுவனுக்குள் இருந்த கட்டுக்கடங்காத சக்தி ஓட்டத்தால் சிறுவனுக்கு அவனின் இலக்கு மாத்திரமே கண்ணுக்கு தெரியும்.
தனக்குள் இருந்து வரும் உள்ளுணர்வு தூண்டுதலோடு, சிறுபிள்ளைத் தனமும் சேர, தான் விரும்பியதை மாத்திரமே சிறுவன் செய்து வந்தான். மற்றவர்களை பற்றி யோசிப்பதே இல்லை.
வில்லில் இருந்து புறப்பட அம்பு போல சதா எதையாவது செய்து கொண்டே இருந்த சிறுவன், ஒரு சிறிய விபத்திற்கு பின் சாந்தம் அடைந்தான்.
ஒரு முறை அவரின் வயதொத்த உறவுமுறை சிறுவனோடு ஆர்வமாக ஏதோ பேசிக் கொண்டிருக்கையில்...
உற்சாகத்தின் உச்சி சென்று, கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டான் அச்சிறுவன்.
அவனுடைய கலாட்டாவின் அடுத்தகட்டமாக விளையாட்டாய் தன் கையிலிருந்த டம்ளரை எடுத்து பரமஹம்ஸ சிறுவன் மீது தூக்கி எறிந்தான்... விளையாட்டு வினையானது! டம்ளரின் கூரிய விளிம்பு பகுதி பரமஹம்ஸரின் இடது புருவம் மீது பளார்! என மோதியது... டம்ளரின் வேகம், நொடிக்குள் குபு!குபு!! என இரத்தத்தை கொட்ட வைத்தது.
பரமஹம்ஸரின் முகத்தில் இன்னும் அந்த வடு இருப்பதை படத்தில் காணலாம்.
விவேகானந்தருடைய வாழ்க்கை வரலாற்றிலும் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்ததையும், அதன்பின்தான் அவரின் கட்டுக்கடங்காத சக்தி கட்டுக்கு வந்ததையும் படித்தபோது நாங்கள் காரணமேயில்லாமல் பரவசத்திற்குள் மூழ்கி போனோம்.