KAILASA Library/பரமஹம்ச நித்தியானந்தர்/இசக்கி மாமுனிவர்Sign in
பரமஹம்ச நித்தியானந்தர்

இசக்கி மாமுனிவர்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இசக்கி மாமுனிவர்
A bound book with Tamil handwriting

ராஜசேகரனுக்கு தனி
மரியாதை கொடுத்தார்
மாதாஜி. மாதாஜி கூடவே
எப்போதும் இரண்டு ஆன்மீக
சேவை புரியும் பெண்கள்
இருப்பார்கள். ராஜசேகரன்
வந்த அடுத்த கனம்
அனைவரையும்
வெளியேறும்படி மாதாஜி
கேட்டுக் கொள்வார் (மாதாஜி
கூடவே இருக்கும்
பெண்கள் உட்பட)

வெகுநேரம்
ராஜசேகரனோடு மாதாஜி
பேசிக் கொண்டிருப்பார்.
ஆன்மீகம் பற்றிய
போதனைகள் நிறைய
செய்வார்.

பக்தி, யோகம் என்றே வாழ்ந்து வந்த ராஜசேகரன் ஞானமார்க்கத்திற்குள் நுழைய காரணமாக இருந்தவர் மாதாஜி. பல ஞானமார்க்கம் சம்பந்தப்பட்ட ஆன்மீக புத்தகங்களை கொடுத்தார்.

"இந்த புத்தகங்களை நீயே புரிந்து கொண்டு, நீயே விளக்கமளிக்கும் காலம் வரும் அதுவரை இதை பத்திரமாக வைத்திரு" என்று புதிராக கூறி பல அபூர்வமாக கிடைக்கக்கூடிய ஞானப்புத்தகங்களை பரிசளித்தார்.

ராஜசேகரன் அந்த புத்தகங்களை புரட்டிப்பார்த்தான் முடிந்த அளவு புரிந்து கொள்ள முயன்றான். தோல்வியே மிச்சம். மற்றவர்களிடம் விளக்கம் கேட்டான். யாராலும் விளக்க முடிய வில்லை. "சரிசரி மாதாஜி சொன்னது போல் ஏதோ ஒரு நல்ல காலம் பிறக்கும். அதுவரை நாம் பொறுத்திருப்போம்" என்று முடிவு செய்து புத்தகங்களை பத்திரமாக எடுத்து வைத்தான்.

2.4.6 சிறுவனின் பாதுகைப் பிரியம்

தற்செயலாக சிறுவனுக்கு மரப்பாதுகை ஒன்று கிடைத்தது. வயதான சந்நியாசிகள் விரும்பி அணியும் பாதுகையை, வாலிப வயதை கூட தொடாத ராஜசேகரன் விரும்பியது விந்தை.

பாதுகையை விரும்பியதோடு மாத்திரம் நில்லாமல், நாள் முழுவதும் எங்கே சென்றாலும் அந்த பாதுகையை போட்டுக்கொண்டே சென்றான். திருவிழாவானாலும் சரி, வீட்டு விஷேசங்களானாலும் சரி சிறுவன் வருவது ராஜசேகரன் தான் என்பதை உறுதி செய்யும்.

"டக்..டக்..டக்.." என்ற சப்தத்தோடு மரப் பாதுகையை போட்டுக் கொண்டே தான் செல்வான்.

எந்த ஒரு காரணத்திற்காகவும் யார் ஒருவர் செய்த கேலிக்காகவும் மரப்பாதுகையை சிறுவன் விட்டுத் கொடுத்ததே இல்லை.

பலவீடுகளில் சிலர் மதியம் சாப்பிட்டதும் தூங்குவது போல் ராஜசேகரன் இருந்த அந்த பெரிய வீட்டில் சில உறவினர் தூங்குவது உண்டு. விடுமுறை என்றால் அவர்களுக்கெல்லாம் கொஞ்சம் வயிற்றை கலக்கும் காரணம் சிறுவன் வீட்டுக்குள் நடமாட, நடமாட டக்..டக்..டக் என்ற தனி சப்தம். அமைதியான வீட்டில் காதில் இடி போல விழும். மற்றவர்களுக்கு சோம்பி, தூங்கி, நேரத்தை வீணடிப்பது என்பது சிறுவன் வீட்டில் இருக்கும் போது சாத்தியப்படாத ஒன்று.

Pair of wooden sandals
Kulam

குளம் பற்றி

பரமஹம்ஸர் சொன்னது...

திருவண்ணாமலையைச் சுற்றி இதைப் போன்று 365 குளங்கள் இருக்கின்றது. வருடத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குளத்தின் தீர்த்தத்தை பயன்படுத்துவார்கள். அங்கிருக்கும் யோகிகளும், சாதுக்களும்.