III முதல் அனுபவம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
3.1 சந்நியாசிகளோடு நட்பு
தன்னை ஒத்த வயதுடைய சிறுவர்களுடன் விளையாடுவது, அரட்டை அடிப்பது போன்ற விஷயங்களில் ராஜசேகரன் நேரத்தை வீணடித்ததே இல்லை. சிறிய வயதிலேயே தன்னை விட வயதில் பெரிய சந்நியாசிகளிடமிருந்து பெரிய பெரிய விஷயங்களைத்தெரிந்து கொண்டார். அவர்களோடு தான் பெரும்பாலான பகல் நேரத்தை செலவிடுவார். அவர்களில் ஒருவராகவே அவர் வாழ்ந்தார்.
3.2 அண்ணாமலை சுவாமிகளோடு
ஸ்ரீ ரமண மகரிஷியின் சீடர்களில் ஒருவர்தான் இந்த அண்ணாமலையார் சுவாமிகள். திருவண்ணாமலையில் பிலாக்கொத்து என்ற இடத்தில் சுவாமிகள் வாழ்ந்து வந்தார். ஆன்மீகம் சம்பந்தமான விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக ராஜசேகரன் அடிக்கடி சுவாமிகளைச் சென்று பார்த்துவிட்டு, ரமண மகரிஷி மடத்தில் தியானம் செய்வது வழக்கம்.
அப்படி ஒருமுறை சென்றிருந்தபோது, சில பக்தர்களுக்கு வேதாந்த உரையாற்றிக் கொண்டிருந்தார் சுவாமிகள். "நான் சரீரமல்ல, ஆன்மா" என்றார். மேலும், "வலி என்பது சரீரத்திற்குத்தான், ஆன்மாவிற்கு அல்ல" என்று உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதைப் பற்றித் தீவிரமாக யோசித்தவண்ணம் வீடு வந்து சேர்ந்தார்.
'நான் ஆன்மா, வலி சரீரத்திற்குத்தான், என்றால் எனக்கு வலிக்கக் கூடாது அல்லவா?' என்று தனக்குத் தானே கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார். எதையும் சோதித்து உண்மை என்று தெளிவாகத் தெரிந்த பின்னரே நம்பும் இயல்பு கொண்டவர் ராஜசேகரன்.
எனவே இந்த உபதேசக் கருத்தையும் சோதித்துப் பார்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்தார். சுற்றிமுற்றிப் பார்த்தார். கண்ணில் கத்தி தென்பட்டது. ஆவது ஆகட்டும் என்று - துளியும் பயமே இல்லாமல் கத்தியை எடுத்து, சுண்டு விரல் நீளத்துக்கு வலது தொடையில் ஒரு கிழி கிழித்து விட்டார்.
இரத்தம் கொட்டுகின்றது! வலி எடுக்கிறது! எரிச்சல் தெரிகிறது! இருந்தும் சத்தமோ கூச்சலோ போடவில்லை. மாறாக அதே தீவிரத்தோடு மனதில் திரும்ப திரும்ப, "நான் சரீரமல்ல. ஆன்மா என்றால் ஏன் எனக்கு வலிக்க வேண்டும்"? என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.
தொடையில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. ராஜசேகரன் "எங்கு தப்பு நடந்தது?.. எப்படி எனக்கு வலிக்கலாம்?" என்று மீண்டும் அதே சிந்தனையில் மூழ்கிப் போயிருந்தார்.

அண்ணாமலை சுவாமிகள். குடும்பத்தார் பார்த்துப் பதறிப்போய் உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்று தேவையான சிகிச்சை அளித்தார்கள். சிகிச்சை முடிந்த கையோடு நேரே அண்ணாமலை சுவாமிகளைப் பார்க்கக் கிளம்பி விட்டார்.
சுவாமிகளிடம், "நான் ஆன்மா என்றால் - எனக்கு ஏன் வலித்தது? கிழிந்தது சரீரம்தானே," என்று ராஜசேகரன் கேட்டார்.
அண்ணாமலை சுவாமிகள் சரீரம், ஆன்மா பற்றி மீண்டும் தெளிவாக விளக்கிவிட்டு, "இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அது உன் சொந்த அனுபவத்தால்தான் முடியும்" என்று சொன்னார். பின்னர் எண்ணங்கள் எங்கிருந்து உருவாகின்றன என்பதைக் கண்டுபிடிக்கத் தியானம் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தார். "இந்தத் தியானத்தை முழுமையாகச் செய் உன்னுடைய கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்" என்றார். ராஜசேகரன் தியானத்தை முழு மூச்சாகத் தொடர்ந்து செய்தார். பதில் கிடைத்தது சந்தேகம் தெளிந்தது.
3.3 மகத்தான ஆன்மீக அனுபவம்
வைகாசி மாதத்தில் பவளக்குன்று என்ற இடத்தில் ஒரு சிறிய பாறையின் மீது அமர்ந்த படி தியான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த 12 வயதில் தியானம் என்றால் என்ன என்று கூடத் தெளிவாகத் தெரியாத பருவத்தில் தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அன்றைய தினம் முழுப் பௌர்ணமி, விசாக நக்ஷத்திரம். தியான முயற்சியில் அவருக்கு ஓர் மகத்தான ஆன்மீக அனுபவம் ஏற்பட்டது. அது பற்றி பரமஹம்ஸர் சொல்கிறார், "சூரியன் மறைந்து முழுச்சந்திரன் எழும் அழகான சாயங்கால வேளையில் பவளக்குன்றில் தளர்வாக அமர்ந்தபடி - எனக்குள் மூழ்கும் தியானத்தில் ஈடுபட்டேன். சிறிது நேரத்திற்குப் பின் சற்றும் எதிர்பார்க்க முடியாத அனுபவம் ஏற்பட்டது. திடீரென்று, கொஞ்சம், கொஞ்சமாக நான் உடல் என்ற உணர்வு மறைய ஆரம்பித்தது. சட்டென்று! ஏதோ திறந்து கொண்டதைப் போன்று, ஏதோ உள்ளே உடைந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. நான் தனி மனிதன் என்ற உணர்வு முழுவதுமாக மறைந்து விட்டது. நானே எல்லாமாக உணர்ந்தேன்.
என்னை சுற்றி இருந்த எட்டுத் திசைகளையும் ஒரே நேரத்தில் மிகத் தெளிவாகப் பார்க்கவும் உணரவும் முடிந்தது. எனக்கு முன்னால் இருந்த மலையும், பின்னால் இருந்த கோவிலும், இடது பக்கத்திலிருந்த பாறைகளும், வலதுபக்கமிருந்த மரங்களும், மேலிருந்த வானமும், நான் உட்கார்ந்திருந்த பாறையும் மிகத் தெளிவாகத் தெரிந்தன. என்னைச் சுற்றி இருந்த எல்லாம் நானாகவே உணர்ந்தேன்".

பவளக் குன்றில் பரமஹம்ஸ சிறுவன்...
இதுதான் Out of body experience என்று
பின்னாளில் பரமஹம்ஸர் உணர்ந்து
கொண்டார்.
அந்த ஆனந்தமான ஆன்மீக அனுபவம்
கிட்டத்தட்ட ஒன்றை மணி நேரம் நீடித்தது.
மீண்டும் உடலுக்குத் திரும்பிய பின் அவரை
ஆனந்த ஜீரம் பற்றிக் கொண்டது.
தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உடனே
யாரிடமாவது பகிர்ந்து கொள்ள விரும்பினார்.
மாதாஜி குப்பம்மாவை சந்தித்தார். தனக்கு
ஏற்பட்ட அனுபவத்தை விளக்கினார். மாதாஜி,
"இது ஒரு மிகப்பெரிய ஆன்மீக அனுபவம்,
இப்போது உனக்கு இருக்கும் இந்த ஜீரம்
ஆனந்த ஜீரம்" என்று விளக்கம் கொடுத்தார்.
அவர் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆனந்த
நிலையை யாரும் கெடுத்துவிடக்கூடாது
என்பதற்காக ராஜசேகரனைத் தன் முழுப்
பொறுப்பில் ஏற்றுக் கொண்டார்.
கிட்டத் தட்ட ஆனந்த ஜீரம் அவருக்கு
மூன்று நாட்கள் நீடித்தது. அப்போது அவர்
உடல் நிலைக்கேற்ற உணவை மாதாஜி
குப்பம்மாள் தயாரித்துக் கொடுத்தார்.
சில நாட்கள் கழித்து அந்த அனுபவத்தை
மீண்டும் பெற வேண்டும் என்று தீவிரமானார்.
அது அவரது ஆன்மீகத் தேடலின் வேகத்தைப்
பல மடங்கு அதிகரித்தது.
3.4 சுடுகாட்டில் தியானம்
பரமஹம்ஸர் தியானம் செய்த சுடுகாட்டு பகுதிகள் கீழே...



எப்படியும் இவர் சந்நியாசியாகப் போகிறார் என்று தெளிவாகத் தெரிந்த பின், அவரது பெற்றோர் "நாம் இவருக்கு வெறும் பாதுகாவலர்களே" என்று உணர்ந்து கொண்டார்கள். அதன் காரணமாகப் பல நாட்கள் நடுநிசி தாண்டி அவர் வீடு திரும்பினால் கூட எதுவும் கேட்க மாட்டார்கள்.
சுடுகாட்டில் அமர்ந்து வெகு நேரம் மயான
அமைதியில் தியானம் செய்வதும் நள்ளிரவிற்கு
மேல் வீடு திரும்புவதும் ராஜசேகரனின்
வழக்கமாயிற்று. ஒரு முறை கூட அவரது
பெற்றோர் அவரது நடவடிக்கைகள் குறித்து
வருத்தமோ, கோபமோ, சலிப்போ
கொண்டதில்லை.
தன்னுடைய எந்த விதமான ஆன்மீகச் செயலுக்கும் சிறிது கூடத் தடங்கல் செய்யாமல் இருக்கும் தன் பெற்றோரை நினைக்கும் போதெல்லாம் நன்றி உணர்வே மேலிடும். ஏன்? இன்றும் கூட பரமஹம்ஸ நித்யானந்தர் தன் பெற்றோரை மிகுந்த நன்றி உணர்வுடன் நினைவு கூறுகிறார்.
பரமஹம்ஸரிடம் கேட்கப்பட்ட போது...
வாழ்வு?
- ஒரு நீண்ட கனவு
கனவு?
- ஒரு குட்டி வாழ்வு
இரண்டுக்கும் வித்தியாசமேயில்லையா?
உண்டு. ஆனால் சிறியது.
அது கால அளவிலானது.
தூக்கம் 6 மணி நேரங்கள்
வாழ்வு 60 வருடங்கள்.
பரமஹம்ஸர் மரணம் பற்றி சொன்னது...
- மரணம்? ஒரு உடல் விட்டு மறு உடலெடுக்கும் ஓய்வு காலம்.
- தூக்கமும் - மரணமும் ஒன்றா? தூக்கம், ஒரு சிறு மரணம். மரணம், ஒரு நீள தூக்கம்.
3.5 மரண அனுபவம்
பல்வேறு ஆன்மீகப் பாதையில் வழி நடத்தியவர்களில் ஒருவரான அவரது பெரிய பாட்டியின் மரணத்தை சிறு வயதில் அருகில் இருந்து பார்த்தார். அப்படி மரணத்தைப் பார்த்தபின் ‘வாழ்க்கையில் என்னதான் இருக்கிறது என்று எப்பாடு பட்டாவது உணர்ந்தே ஆக வேண்டும்’ என்ற அவரது ஆன்மீகத் தேடல் என்னும் “தீ” கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
3.6 கல்லூரி வாழ்க்கை

பத்தாம் வகுப்பு முடித்த கையோடு பரமஹம்ஸர் குடியாத்தம் நகரில் விடுதி ஒன்றில் தங்கி ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். அங்கும், சக மாணவர்களோடு சேர்ந்து ஊர் சுற்றி, நேரத்தை வீணாக்கவில்லை. ஆட்டம், பாட்டம், சினிமா, கேலி, கூத்து என்று வாழும் சக மாணவர்களின் வாழ்க்கை இவரைச் சிறிதும் ஈர்க்கவில்லை. "நீரின் மேல் இருக்கும் தாமரை” போன்று விடுதி வாழ்க்கையைக் கழித்தார்.
"நீ ஏன் எங்களோடு வெளியில் சுற்ற வருவதில்லை? இப்படித் தியானம், தியானம் என்று செய்து அப்படி என்னதான் சாதிக்கப் போகிறாய்?" என்று கேலி செய்தார்கள்.

சக மாணவர்களிடம் "என்னிடம் ஆசீர்வாதம் வாங்க நீங்கள் எல்லாம் வரிசையில் நிற்க வேண்டிய காலம் வரும் அப்போது புரியும் உங்களுக்கு" என்று ஏதோ ஒரு உத்வேகத்தில் சொன்னாரே தவிர, பின்னாளில் இப்படியெல்லாம் ஞான அனுபவம் கிடைக்கும் என்றோ, கேலி பேசிய அந்த நபரே, வரிசையில் நின்று ஆசீர்வாதம் வாங்குவார் என்றோ! அவர் அப்போது நினைக்கவில்லை.

நேரம் கிடைத்த போதெல்லாம் தியானம், தியானம் என்றே ஏதாவது ஆன்மீக முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். படிப்பிற்காகப் பெரிதாக நேரம் எதுவும் ஒதுக்கவில்லை. பாடம் நடத்தும் போது கவனிப்பதிலேயே கருத்தைப் புரிந்து கொண்டுவிடுவார். 'அது போதும் தேர்வுத் தாளை எதிர்கொள்ள' என்பது அவரது அனுபவம். அதிக மதிப்பெண்களை எடுத்து அவர் தன் கல்லூரிப் படிப்பை முடித்தார்.


பத்திரிக்கையாளரும் பரமஹம்ஸரும்...
● சந்நியாசம்? ராஜ வழி அது ஞான வழி.
● சந்நியாசி ஆக எது அவசியம்? சந்நியாசியாக வாழ வீரனுக்கெல்லாம் இல்லாத வீரம் வேண்டும்... உயிரில், உணர்வில்!
3.7 கிரிவலத்தில் கழுதைப் புலிகள்
ஒரு முறை தொடர்ந்து 108 நாட்கள் கிரிவலம் செல்வது என்று உறுதியாக முடிவு செய்துவிட்டார். (எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கக் கூடாது என்பது பரமஹம்சரின் அடிப்படை குணம்) முடிவு செய்தபடி தொடர்ந்து கிரிவலம் சென்று கொண்டிருந்தார்.
ஒரு நாள் தான் ரசித்துப் படித்த பக்திப் பாடல்களை மனதில் பாடியபடி சென்று கொண்டிருந்தார். ஏதோ உள்ளுணர்வு மேலிடக் கவிதை பாடுவதை நிறுத்தி விட்டுக் கூர்மையாகப் பார்த்தார். பார்த்தவர் திகைத்தார்! எதிரே ஐந்து கழுதைப் புலிகள் நின்று கொண்டிருந்தன. என்ன செய்வது என்று எந்த முடிவும் எடுக்க முடியாத மனநிலையில் அப்படியே நின்று விட்டார்.
அப் போது அவ ர து உள்ளத்திலிருந்து “அருணாச்சலா” என்ற வார்த்தை வெளிப்பட்டது. எங்கிருந்தோ உரத்த குரல் கேட்டது. முதியவர் ஒருவர் கம்போடு ஓடி வந்தார். அந்த மிருகங்கள் அங்கிருந்து ஓடிவிட்டன. இதை அதிசயம் என்பதா? தெய்வச் செயல் என்பதா?
