KAILASA Library/பரமஹம்ச நித்தியானந்தர்/பறந்த யோகி,Sign in
பரமஹம்ச நித்தியானந்தர்

பறந்த யோகி,

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

"அ கங்காரம் அற்றுப் போனால் உயரே பறக்க முடியும்" என்று யோகி ஒரு முறை கூறினார். சொன்னது மட்டுமில்லாமல் செய்தும் காட்டினார். யோகி ஆசனத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்து பூமியில் இருந்து அரை அடி உயரத்தில் எழும்பிக் காண்பித்தார். 'என்ன?' நாம் பார்த்துக் கொண்டிருப்பது நிஜம்தானா! என்று சிறுவன் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான். "நேரம் வரும் போது எல்லாம் புரியும்" என்று புன்முறுவலோடு யோகி சொன்னார்.

அதிக விலை கொடுத்து, ஏமார்ந்து போய் அலுமினியப்பாத்திரம் ஒன்றை வீட்டில் வாங்கிவிட்டார்கள். பரமஹம்ஸரின் தந்தையாருக்கு, "மதியில்லாமல் இப்படி காசை கரியாக்குகிறார்களே" என்று வீட்டார் மீது கோபம்.

"எதுக்கு இப்போ தேவையில்லாம இந்த அலுமினியகுவளை? இதனால் என்ன பிரயோஜனம்!" என்று சீறினார்.

பரமஹம்ஸர் குழந்தை தனத்தோடு, "அப்போ இந்த அலுமினிய குவளையால் பலன் இல்லைன்னு சொல்றீங்களா?"

சிறுவனின் பால குரலை கேட்டு கோபத்தையும் மீறி மெலிதாக சிரித்துவிட்டு "ஆமாம்" என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

அன்று மாலை 6 மணி தந்தையார் வருகைக்காக சிறுவன் காத்துக் கொண்டிருந்தான் தந்தையார் வந்ததும் ஓடிச்சென்று, "பார்த்தீர்களா!... இது எவ்வளவு அழகாக இருக்கிறது" என்று சொல்லிக் கொண்டே ஒரு சிறிய உலோகத்தால் செய்யப்பட்ட லஷ்மி விக்ரகத்தை காண்பித்தான்.

தந்தையார், "ஆஹா!... பேஷ்! பேஷ்! ரொம்ப அழகா இருக்குப்பா. யார் கொடுத்தாங்க இதை?" என்று கேட்டார்.

சிறுவன் "இதை நானே வாங்கினேன்" பதிலை கேட்டவருக்கு ஆச்சரியம்! அதிக விலை பெரும் அளவுக்கு இருக்கும் இந்த விக்ரகத்தை எப்படி வாங்கியிருக்க முடியும். சாத்தியமே இல்லையே!.

தந்தையார், "எப்படி இந்த விக்ரகத்தை வாங்கினாய்... சொல்லு". சிறுவன், கொஞ்சம் கூட மழலை மாறாமல், "பிரயோஜனமில்லாததை, பிரயோஜனப்படுத்திட்டேன்".

தந்தையார், என்னப்பா சொல்றாய்!!! .

சிறுவன், "நீங்க காலையில் அந்த அலுமினிய குவளை பிரயோஜனமில்லைன்னு சொன்னீங்க, அதனால் நம்ம பக்கத்து தெரு கடையில் கொடுத்து பிரயோஜனப்படும் பொருளை வாங்கிட்டேன், சரிதானே?" என்றான் மழலை குரலில். தந்தையாருக்கு திட்டுவதா, சிரிப்பதா ஒன்றுமே புரியவில்லை. குழப்பத்தை மீறி வாய் விட்டே சிரித்து விட்டார். சிரிப்பு கலந்து, "ச..ரி..தா..ன்" என்றார்.

சிறுவனின் குறும்பு கலந்த புத்திசாலித்தனங்கள் ஏதாவது ஒன்று வீட்டிலோ, வெளியிலோ இதுபோன்று நடந்து கொண்டே இருக்கும்.

பாலன் சதா பக்தி சிந்தனை வயப்பட்டவனாகவே இருந்தான் என்பதற்கு இது போன்ற ஒரு நூறு வாழ்க்கை சம்பவங்கள் சான்றாக இருக்கிறது.

"சிறுவனின் கண்ணிற்கு பட்ட விளையாட்டு பொருள் கூட விக்ரகமாகவே இருந்தது தான் விந்தை. வயதையும், பக்குவத்தை மீறிய ஒன்றோ இது!" என்று நம்மை இச்சம்பவங்கள் யோசிக்க வைக்கும்.

புத்தன் - பில்கேட்ஸ்

"கிடைக்கும் வழிகளிலெல்லாம் முன்னேறிக் கொண்டே இருப்பவரே சாதனையாளராகிறார். இது வெளி உலகுக்கும் பொருந்தும், உள்ளுலகுக்கும் பொருந்தும்" என்று சொல்லும் பரமஹம்ஸர்...

அன்றே தன் வாழ்வில் இவ்வுண்மையை மெய்ப்பித்து காட்டியிருக்கிறார். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு சிரத்தையோடு இருந்தாரோ, அதே சிரத்தையோடு யோக மார்க்கத்தையும், ஞானமார்க்கத்தையும், தந்திரமார்க்கத்தையும் கற்றுத் தேர்ந்தார்.

இந்த சிரத்தையை உள்ளுலகில் எடுத்து வந்தால் புத்தன், வெளி உலகில் எடுத்து வந்தால் பில்கேட்ஸ் என மிக அழகாய்ச் சொல்வார் பரமஹம்ஸர். ■ ராஜசேகரன் முடிவு செய்து விட்டான். ஒரு முறை முடிவு செய்துவிட்டால் முடிந்தது. தனது முடிவை எப்பாடு பட்டாவது நிறைவேற்றியே தீருவது சிறுவனின் இயல்பு.

"தனிபூஜை அறை வேண்டும்" என்று முடிவு செய்தாகி விட்டது. என்ன செய்வது? சிறுவனிடம் பணமோ, பொருளோ இல்லை. தனக்கு தனிஅறை வேண்டும் என்று வீட்டில் கேட்பது நியாயமாகவும் தோன்றவில்லை.

சும்மா கிடந்த பெரிய பிஸ்கட் பாக்ஸ் இரண்டு, மூன்று கண்ணில் பட்டது.

பளிச்சென்று ஒரு யோசனை. அடுத்த நிமிடம் சிறுவன் உளி, சுத்தியல் தேடி ஓடினான். பெரிய தகர டப்பாக்களை உடைத்தான். தகரட்டிகள் தயாரானது. கொஞ்சம் ஆணிகள், கொஞ்சம் கட்டைகள்.

சிறிய ஸ்டூல் உதவியோடு, வீட்டின் கடைசியில் கொல்லைபுரத்தில் தனக்கென ஒரு சிறிய அறையை தனி ஆளாகவே உருவாக்கிவிட்டான்.

சிறுவனின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. முதல் வேலையாக தன்னுடைய வயதொத்த சிறுவர்கள் அனைவரையும் அழைத்து வந்து, வீட்டாரையும் அழைத்து வந்து, உட்கார வைத்து, பூஜை செய்து, பொரி குடுத்து ஒரு விழா போல கொண்டாடினான் சிறுவன்.

வீட்டில் பத்து பேரை கூப்பிட்டு, நல்லபடியாக விருந்தோம்பி, ஒரு விழா நடத்துவதற்குள் பலர் பாடு, படாத பாடாகி விடுகிறது. ஆனால், இங்கு ராஜசேகரன் ஒரு சிறுவன். நினைத்த மாத்திரத்தில் ஒரு கூட்டத்தை கூட்டிவிட்டான். அனைவர் முகத்திலும் சந்தோஷம் வேறு. இது அனைத்தும் எப்படி சாத்தியம்?

பிற்காலத்தில் உலகமக்களுக்கும் இதேபோல் தான் நினைத்த மாத்திரத்தில் தியான சத்சங்கங்கள், தியான முகாம்கள் நடத்தி ஒரு விழாவை விட அதிகமான மகிழ்ச்சியை மக்களுக்கு கொடுக்கப் போவதற்கான - முன்னோட்டம் தான் பூஜை அறை கொண்டாட்டமோ.

பொருட்கள்

நீங்கள் இங்கே காணும் பொருட்கள் சுவாரஸ்யமானவை.

இவை, சிறுவன் விதம் விதமாய் தெய்வ விக்ரகங்களை செய்து பார்க்க பயன் படுத்தும் உபரி பொருட்கள்.

ஒவ்வொரு முறையும் வெவ்வேறு
விக்ரகங்களை களிமண்ணில் செய்து மகிழ
சிறுவன் விரும்பி பயன் படுத்தியவை இவை!

பரமஹம்ஸரின்

இன்றைய பக்தி விளக்கம்

கதவைத்திற காற்று வரட்டும்

பாகம் II புத்தகத்திலிருந்து சில உங்களுக்காக...

1

கடவுள் உண்டு என்ற வார்த்தையை உதிர்த்ததால் நீங்கள் ஆத்திகவாதியாகிவிட முடியாது. வார்த்தை உங்களின் அனுபவமாகாதவரை ஆத்திகம் நிகழவில்லை.

2

பக்தி ஆத்திகவாதிகளுக்கு மட்டுமே சொந்தமானதல்ல.

அன்பிற்குரிய நாத்திகருக்கு....உங்களின் கொள்கை மேல் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை மற்றும் மரியாதையின் கூட்டுத்தொகையே பக்தி.

பக்தி முக்கியம், அது பக்தி செய்யப்படும் பொருளை விட முக்கியமானது. எந்த பொருளின் மீது, எதன் மீது பக்தி வந்தாலும் அது நல்லதே. அது பக்தியுணர்வை உருவாக்க உதவும் ஒரு டெக்னிக்.

3

பக்தியுணர்வு உங்களுள் எங்கே, எப்போது, எதன் மீது வந்தாலும், அங்கு அப்போது தியானம் நிகழ்கிறது.

பரமஹம்ஸரின் அன்றைய பக்தி வெளிப்பாடு...

பரமஹம்ஸரின் அன்றைய பக்தி வெளிப்பாடு...

6

நாத்திகத்தின் உச்சம்வரை நாத்திகரும், ஆத்திகத்தின் உச்சம் வரை ஆத்திகரும், சிரத்தையோடு அவரவர் பாதையில், அவரவர் ஏறிச் செல்ல, வரும் சிகரமே ஆன்மீகம். அது... தனிமனித ஆனந்தம்.

7

பக்தி நிறைந்தவன் சக்தி நிறைந்தவன்

5

நாத்திக ஞானம் கடவுள் இல்லையென்பதை கட! 'உள்' இருந்திட! கடந்து உள் இருந்திட... ஆனந்தம் வரும்! சுதந்திரம் பெருகும்! இது நிகழ்ந்தால் மட்டுமே நாத்திகம் முழுமையாகிறது.

கடவுள் இல்லையெனும் வாதம் நாவுக்கு வந்த நோவு மட்டுமே.

வாதம வேதமாகட்டும். உள்சுகம் சொந்தமாகட்டும். உண்மைகள் உரித்தாகட்டும்.

4

நாத்திக ஞானம் கடவுள் இல்லை என்ற வார்த்தை வலைக்குள் தொக்கி நின்றுவிடாதீர்கள்.

அவ்வார்த்தைகள் அனுபவமாக மாறுமளவுக்கு பக்தியோடு தியானியுங்கள். உங்களின் உயிரோட்டத்திற்குக் காரணமான அந்த ஆனந்த சக்தியால் ஆட்கொள்ளப்படுவீர்கள்.

எது உண்மை? என்பது உதயமாகும்.

செல்போன்கள் மூலமாக, உங்கள் நண்பரோடு பேசலாம். , தெய்வ விக்கிரகங்கள் மூலமாக , உங்களின் தெய்வத்தோடு பேசலாம்

“உனக்குள் வாழ்கிறேன்”
இப்படிக்கு
கடவுள்
வாழும் வரலாறு

வயதில் பெரியவர் சிறுவனிடம் "நீ பெரியவனானதும் என்னவாகமாறுவாய்?" என்று கேட்டார் தான் வரைந்த இந்த படத்தை சுட்டி காட்டி இதுபோல் வருங்காலத்தில் ஆவேன் என்று குறிப்பால் உணர்த்தினார்.

வரைபடம்
Calculator photo with closeup

சிறுவயதில் சதா பக்தியிலேயே வாழ்ந்தார் என்பதை அவர் பயன்படுத்திய Calculator கூட சொல்லும்.

ஓம் சக்தி என Calculatorல் அவர் எழுதியிருப்பதைக் காணலாம்

நவராத்திரி பூஜையில் தான் அலங்கரித்த துர்கா தேவியுடன் ராஜசேகரனும், நண்பர்களும்

நவராத்திரி பூஜை
குழு படம்

விளையாட்டில் வழிபாடு :-

நண்பர்கள் கேளிக்கையில் ஈடுபட ராஜசேகரன் வழிபாட்டில் ஈடுபட்டார். சம்பிரதாய சடங்குகளில் தேர்ந்தவரானார். மற்றவரையும் ஈடுபடுத்துவார்

திருவிழா காலங்களில் தான் செதுக்கிய சிற்பத்தை அலங்கரித்தார்... வழிபடச்செய்தார்.

உண்மையான தேவதைகளின் சிற்பத்திற்கும். சிறுவனின் படைப்பாற்றல் திறனுக்கும். இடையே கடும் போட்டிதான்.

Rajasekaran with family in Kanyakumari

ராஜசேகரன்(இடதுபக்கம்) தன் குடும்பத்தாருடன் கன்னியாகுமரி சென்றிருந்தபொழுது எடுத்தபடம். அந்தி மாலை பொழுதில் ரம்மியமான மேகங்களுக்கிடையே தூரத்தில் விவேகானந்தா பாறை.

Rajasekaran with Durga Amman idol

இளவயதில் தான் உருவாக்கிய துர்கைஅம்மனுடன் ராஜசேகரன்

...பரமஹம்ஸரின் தியான சொற்பொழிவிலிருந்து

பக்தி என்பது உணர்வு பிரவாகம். தன்னை தாண்டிய சக்தியிடம் 'நான்' எனும் சிறு அகங்காரத்தை சமர்ப்பித்து சந்தோஷமாய் உணர்வு பொங்க வாழ்வதே பக்தி மார்க்கம். ■

Record Note Book and books

மந்திரங்கள் பற்றி புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் இருக்க... ஒரு சிறுவன், தன் Record Note Book-ஐ எழுதும் சிரத்தையோடு மந்திரங்களை பாண்டித்யத்தோடு எழுதியிருப்பது பரவசத்திற்குரியது. நம் அனைவருக்கும் 'எடுத்த காரியத்தை சிறப்பாய் முடிப்பது எப்படி?' எனும் உத்வேகத்தை தூண்டும் சம்பவம் இது.

Rajasekaran in class

தன் மொத்த உணர்வையும் பார்வையில் வெளிப்படுத்தி வகுப்பை கவனிக்கும் ராஜசேகரனை அடையாளம் காண்பது கடினமானது அல்லவே!.

2.4.5 புத்தகக் கடைக்காரரின் பக்தி பரவசம்

திருவண்ணாமலையில் புத்தக கண்காட்சி ஒன்று நடைபெற்றது. ஆன்மீக புத்தகங்களில் நாட்டம் நிறைந்த ராஜீ பாட்டனார் சிறுவனோடு புத்தக கண்காட்சிக்கு கிளம்பினார்.

புத்தகங்கள் தேடி முடிக்கும் வரை சிறுவன் ஒரு ஓரத்தில் ஓய்வாக உட்கார்ந்திருக்கட்டுமே, என்று எண்ணிய பாட்டனார், சிறுவனை புத்தக கடை உரிமையாளரின் அருகே உட்கார வைத்துவிட்டு புத்தகம் தேர்ந்தெடுக்க சென்றுவிட்டார்.

"துரு துரு கண்கள். அமைதியான முகம். கள்ளங்கபடமற்ற சிரிப்பு. பார்ப்பதற்கு சிறுவன் போல தோன்றும். பேச்சை கேட்ட பிறகு பண்டிதன் போல தோன்றும். கொஞ்ச நேரம் பழகிவிட்டால் பிரிய மனம் கஷ்டப்படும். இது எல்லாவற்றையும் மீறி வார்த்தைகளால் விளக்க முடியாத ஈர்ப்பு" என்று குரல் தழுதழுக்க ராஜ சேகரனைப் பற்றி பக்திப் பெருக்கோடு அந்த புத்தகக் கடைக்காரர் விவரிப்பது வழக்கம்.

இந்த அளவு புத்தகக்கடைக்காரரை சிறுவன் வசீகரித்தது எப்படி?....

பாட்டனார் புத்தகங்களை தேடிக் கொண்டிருக்க, சிறுவன் சுற்றுப்புறத்தை அலசி ஆராய ஆரம்பித்து விட்டான். சிறுவனின் கண்களில் அந்த புத்தகம் பட்டதும் தான் தாமதம், தாவி குதித்து புத்தகத்தை கையில் எடுத்தான். வெகு ஆவளோடு பக்கம், பக்கமாக புரட்டினான். அந்த புத்தகத்தில் சிறுவர்களுக்கு ராமாயணம் படங்களோடு - என்று எழுதப் பட்டிருந்தது.

சிறுவனின் ஈடுபாட்டை பார்த்த கடைக்காரர் நெகிழ்ந்து போய், 'கண்ணா உனக்கு இந்த புத்தகம் பிடித்திருக்கிறதா?' சிறுவன் ஆமாம்.

கடைக்காரர் 'அப்படியென்றால் நீயே வைத்து கொள். இது என் பரிசு' என்றார்.

சிறுவன் இது வேண்டாம் வேறு நல்ல புத்தகம் கொடுங்கள். அதை எடுத்துக் கொள்கிறேன் என்றான்.

கடைக்காரர் 'ஏன்! ஏன் வேண்டாம்! என்கிறாய்?'

சிறுவன், "இந்த புத்தகத்தில் ராமாயணத்திற்கு புறம்பான சிலவரிகள் இருக்கிறது. ராமாயணத்தை சித்திரங்களாக வரைந்தது போல் இல்லை. சித்திரங்களுக்காக ராமாயணத்தை பயன்படுத்திக் கொண்டது போல இருக்கிறது.

ராமாயணம் அதன் முழு பரிமாணத்தில் சொல்லப் படவில்லை. நிறைய பொய் கருத்துக்களை சித்திரங்கள் மூலம் கலந்திருக்கிறார்கள். எனவே இந்த போலி புத்தகம் எனக்கு வேண்டாம்" என்றான்.

கடைக்காரர் அதிர்ந்து விட்டார். இந்த சிறுவயதில் இவ்வளவு ஆதாரப் பூர்வமாக பண்டிதனைப் போல எப்படி பேச முடியும்? கணீர் குரலும், தெளிவான வார்த்தைகளும் எங்கிருந்து கிடைத்தது?. ஆச்சரியத்தின் விளிம்பில் இருந்து கொண்டே, "சரி கண்ணா ராமாயணத்தை நீ முழுபரிமாணத்தில் சொல்லேன் பார்ப்போம்" என்று கேட்டார்.

சிறுவன் தனது பாட்டனார் கூறியது, பல ஆன்மீக சொற்பொழிவாளர்கள் திருவண்ணாமலையில் வந்து பேசியது என்று தன் விவரம் தெரிந்த நாள் முதல் கிரகித்த மொத்த ராமாயணத்தையும் சொல்ல ஆரம்பித்தான்.

புத்தகக் கடைக்காரரின் கண்களில் இருந்து நீர் வடிய ஆரம்பித்தது. தான் பேசிக் கொண்டிருக்கும் சிறுவன் சாதாரண சிறுவன் அல்ல! அவனுள் ஏதோ பெரிய சக்தி ஒன்று நிச்சயமாக இருக்க வேண்டும் - என்று உணர்ந்ததும்,

ராஜசேகரனை நாற்காலியில் இருந்து தூக்கி, மேஜை மீது உட்கார வைத்துக் கொண்டார். சிறுவனை கை கூப்பி வணங்கிவிட்டு, கை கட்டி உட்கார்ந்து கொண்டார். சிறுவனுக்கு என்ன நடக்கிறது இங்கே? என்று புரியவில்லை. புத்தகக் கடைக்காரர், தொடர்ந்து ராமாயணத்தை சொல்லுங்கள், என்று சிறுவனை வேண்டிக் கொண்டார்.

சிறுவன் மீண்டும் உற்சாகத்தோடு, கதாபாத்திரங்களின் பொருத்தமான வர்ணனையோடு, குரலில் ஏற்ற இறக்கத்தை கொடுத்து பேசிய நயம், மேசையைச் சுற்றி கடைக்கு வந்திருந்த மக்களை ஆச்சரியமாக பார்க்க வைத்தது.

கிட்டத்தட்ட ஒருமணி நேரத்திற்கு பிறகு சிறுவன் பேச்சை நிறுத்தினான். சுற்றி இருந்த மக்கள் அனைவரும் உற்சாகத்தோடு கரங்களை தட்டினார்கள்.

புத்தகக் கடைக்காரர் தன் உள்ளுணர்வு மேலிட பக்தி பரவசத்தோடு தேம்பி, தேம்பி அழ ஆரம்பித்து விட்டார். அழுது கொண்டே சிறுவனின் கால்களை தொட்டு கும்பிட்டு, “இது சாதாரண மனித பிறவி இல்லை, சாதாரண மனித பிறவி இல்லை” என்று கால்களை கட்டிப் பிடித்துக்கொண்டார்.

சிறுவனுக்கு ஏதும் புரியவில்லை. “நாம் தவறு ஏதும் செய்யவில்லையே” ஏன் இவர் இப்படி அழுகிறார்? என்று புரிந்து கொள்ள முடியவில்லை. “ஒரு வேளை நாம் தான் ஏதோ தவறு செய்து விட்டோமா?!” என்ற சந்தேகம் எழ, வரும் வழியில்...

சிறுவன் பாட்டனாரிடம், “நான் என்ன தவறு செய்தேன் ஏன்? அவர் அப்படி அழுதார்?” என்று கள்ளமில்லாமல் கேட்டான்.

பாட்டனாரும் அழ ஆரம்பித்து விட்டார். சிறுவனுக்கு மிகவும் வினோதமாக தோன்றியது. இப்படி இவர்கள் நடந்து கொள்ள காரணம் தான் என்ன என்று யோசித்துத் கொண்டே இருக்க, சிந்தனையை தடுத்த பாட்டனார், “நீ ஒரு தவறும் செய்யவில்லை கண்ணே!, இப்போது உன்னால் புரிந்து கொள்ள முடியாது. நீ பெரியவனாகும்போது, எப்படியிருப்பாய் என்பதை இப்போதுதே எங்களால் உணர முடிகிறது. அந்த உணர்வு தான் எங்களை சந்தோஷ பரவசத்தில் அழ வைக்கிறது”. என்றார்.

இதற்குள் வீடு வந்து சேர்ந்து விட்டார்கள். சிறுவனுக்கு “அப்போ நான் தவறு செய்யவில்லை என்கிறீர்கள், அது போதும்! ஆளை விடுங்கள்!” என்று சிரிப்பு கலந்த குரலில் கூறிவிட்டு நேரே தன்னுடைய பூஜை அறைக்கு ஓடினான் ராஜசேகரன்.