KAILASA Library/வாழும் அவதார புருஷர்/தலைமைப் பண்புணர்வை உருவாக்கும் கிரியா நிலை - 1Sign in
வாழும் அவதார புருஷர்

தலைமைப் பண்புணர்வை உருவாக்கும் கிரியா நிலை - 1

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Kriya for Creating Leadership Consciousness Level-I

செய்முறைப் படிகள்

  1. பத்ராஸனம்
  1. நபோமுத்ரா
  1. பஸ்த்ரிகாகும்பக:

1. பத்ராஸனம்,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகங்கள் 9-10

அத பத்ராஸனம்

குல்பௌ ச வ்ரு'ஷ்ணஸ்யாதோ வ்யுத்க்ரமேண ஸமாஹித: /
பாதாங்குஷ்டௌ கராப்யாஞ்ச த்ரு'த்வா ச ப்ரு'ஷ்ட-தேச'த: // 2-9

ஜாலந்தரம் ஸமாஸாத்ய நாஸாக்ரமவலோகயேத் /
பத்ராஸனம் பவேதேதத் ஸர்வ-வ்யாதி-விநாச'கம் // 2-10

மொழிபெயர்ப்பு

இரண்டு கால்களையும் மடக்கி, பாதங்களை நேராக நிமிர்த்தி, அண்டகோசங்களுக்கு அடியில் வைத்து அமர்ந்து, கைகளை முதுகுப்புறம் குறுக்காக மடித்து, பாதங்களின் விரல்களைப் பிடித்து, மூக்கு நுனியின் மீது முழுக் கவனத்தையும் செலுத்தி, ஜாலந்தர முத்ராவைச் செய்யுங்கள். இந்த பத்ராஸனம் அனைத்துவித வியாதிகளையும் போக்குகிறது.

பத்ராஸனம்
பத்ராஸனம்

பத்ராஸனம்

செய்நுட்பம்

  1. (உடலின் பின் பக்கமாக) இரண்டு கால்களையும் மடக்கி, பாதங்களை நேராக நிமிர்த்தி, அவற்றின் மீது அமரவும்.
  1. கைகளை முதுகுப்புறம் எடுத்துச் சென்று வலது கையால் இடது பாதத்தின் விரல்களையும், இடது கையால் வலது பாதத்தின் விரல்களையும் சேர்த்துப் பிடிக்கவும்.
  1. மூக்கு நுனியின் மீது முழுக் கவனத்தையும் செலுத்தி, தொண்டையைச் சுருக்கி, முகவாய்க் கட்டையை நெஞ்சில் பதிய வைக்கும் ஜாலந்தர முத்ராவைச் செய்யுங்கள்.
  1. இந்த நிலையிலேயே 30 நொடிகள் இருக்கவும்.
  1. ஜாலந்தர முத்ராவிலிருந்து விடுபட்டு தளர்வாக அமரவும்.

2. பத்ராஸனத்தில் இருந்தபடியே நபொமுத்ரா, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 9

அத நபொமுத்ரா

யத்ர யத்ர ஸ்திதோ யோகீ ஸர்வகார்யேஷு ஸர்வதா /
ஊர்த்வஜிஹ்வ: ஸ்திரோ-பூத்வா தாரயேத் பவனம் ஸதா /
நபொமுத்ரா ப்ரவேகேஷா யோகீனாம் ரோகநாசினீ // 3-9

மொழிபெயர்ப்பு

ஒரு யோகி எங்கிருந்தாலும், எந்தச் செயல் செய்து கொண்டிருந்தாலும் எப்போதும் தம்முடைய நாக்கை மேற்புறமாக மடித்து, வாயின் மேல் அண்ணத்தில் படுமாறு வைத்திருப்பது அவசியம். சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, பிறகு மெதுவாக சுவாசத்தை வெளிவிட வேண்டும். இந்த நபொ முத்ரா, யோகிகளின் அனைத்துவித வியாதிகளையும் போக்குகிறது.

செய்நுட்பம்

  1. நாக்கை மேற்புறமாக மடித்து, வாயின் மேல் அண்ணத்தில் படுமாறு வைக்கவும்.
  1. நாசிகளின் வழியாக மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. கண்களை மூடி, எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. பிறகு நாசிகளின் வழியாக மெதுவாக சுவாசத்தை வெளியேற்றவும்.
  1. இதை 16 முறை செய்யுங்கள்.

3. பத்ராஸனத்தில் இருந்தபடியே பஸ்த்ரிகாகும்ம்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகங்கள் 75-77

அத பஸ்த்ரிகாகும்ம்பக:

பஸ்த்ரைவ லௌஹகாராணாம் யதா-க்ரமேண ஸம்ப்ரமேத் /
ததா வாயும் ச நாஸாப்யாமுபாப்யாம் சாலயேச்சனை: // 5.75

ஏவம் விம்ச'திவாரம் ச க்ரு'த்வா குர்யாச்சகும்பகம் /
ததந்தே சாலயேத்-வாயும் பூர்வோக்தம் ச யதாவிதி // 5.76

த்ரிவாரம் ஸாதயேதேனம் பஸ்த்ரிகா-கும்பகம் ஸுதி: /
ந ச ரோகோ ந ச க்லேச' ஆரோக்யம் ச தினே தினே // 5.77

மொழிபெயர்ப்பு

கொல்லனின் உலைக்களத்தில் இருக்கும் துருத்தி தொடர்ந்து விரிந்து சுருங்குவது போல், மூக்கின் இரண்டு துவாரங்கள் வழியாகவும் சுவாசத்தை மெதுவாகவும், அதே சமயத்தில் அழுத்தமாகவும் உள்ளிழுத்து, நுரையீரலை விரிவடையச் செய்து, பிறகு சுவாசத்தை மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும். (5.75)

இவ்வாறு 20 முறை செய்யுங்கள். செய்து முடித்தவுடன் சுவாசத்தை உள்ளிழுத்து முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள். பிறகு மேலே சொன்ன முறையில் சுவாசத்தை வெளியேற்றவும். (இது 1 சுற்று). இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யும் புத்திசாலி மனிதர் எந்த ஒரு நோயாலும் பாதிக்கப்பட மாட்டார். அவர் என்றென்றும் ஆரோக்கியமாகவே இருப்பார். (5.76-77)

செய்நுட்பம்

  1. தொடர்ந்து அதே ஆஸனத்தில் இருக்கவும்.
  1. நாசித் துவாரங்களின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள். நுரையீரலைச் சுவாசத்தால் நிரப்பவும்.
  1. சுவாசத்தை நாசித் துவாரங்களின் வழியாக மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.
  1. 21 முறைகளுக்குப் பிறகு, சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள். உங்களால் இனி முடியாது எனும்போது மிகவேகமாக சுவாசத்தை மூக்கு வழியாக வெளியேற்றவும். (2லிருந்து 6வது எண்வரை சொல்லப்பட்டுள்ள செயல்முறை 1 சுற்று எனப்படுகிறது.)
  1. இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யுங்கள்.