KAILASA Library/வாழும் அவதார புருஷர்/தலைமைப் பண்புணர்வை உருவாக்கும் கிரியாSign in
வாழும் அவதார புருஷர்

தலைமைப் பண்புணர்வை உருவாக்கும் கிரியா

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நிலை - 2

Kriya for Creating Leadership Consciousness-Level-2

செய்முறைப் படிகள்

1.பத்மாஸனம்
2.நாதகும்பகம்
3.த்ரிநேத்ரகும்பகம்
4.த்ரிகு'லகும்பகம்

1. பத்மாஸனம்,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 8

அத பத்மாஸனம்

வமோருபரி தக்ஷிணம் ஹி சரணம் ஸம்ஸ்தாப்ய வாமம் ததா
தக்ஷோருபரி பச்'சிமேன விதினா க்ரு'த்வா கராப்யாம் த்ரு'ட'ம் /

அங்குஷ்டௌ ஹ்ரு'தயே நிதாய சிபுகம் நாஸாக்ரமாலோகயே -
தேதத்-வயாதி-விநாச'காரணபரம் பத்மாஸனம் ப்ரோசயதே // 8

மொழிபெயர்ப்பு

பத்மாஸனம்

வலது காலை இடது தொடையிலும், இடது காலை வலது தொடையிலும் வைத்து, கைகளை முதுகுப்புறத்தில் குறுக்காக மடித்து, வலது கையால் வலது கால் பெருவிரலையும், இடது கையால் இடது காலின் பெருவிரலையும் பிடிக்கவும். முகவாய்க்கட்டையில் மார்பில் பதித்து, மூக்கின் நுனிப்பகுதியைக் கூர்ந்து கவனிக்கவும். இது பத்மாஸனம் (தாமரை ஆஸனம்) என்றழைக்கப்படுகிறது. இந்த ஆஸனம் எல்லாவகை நோய்களையும் அழிக்கும் சக்திபடைத்தது.

செய்நுட்பம்

  1. வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும்.
  1. இப்பொழுது இடது காலை மடித்து வலது தொடை மீது வைக்கவும்.
  1. கைகளைப் பின்பக்கத்தில் குறுக்காக வைக்கவும்.
  1. வலது கால் பெருவிரலை வலது கையாலும், இடது கால் பெருவிரலை இடது கையாலும் பிடிக்கவும். 5. தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
  1. மூக்கின் நுனியைக் கூர்ந்து கவனிக்கவும்.
  1. இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
  1. முகவாய்க் கட்டையைத் தளர்த்தவும்.

2. பத்மாஸனத்தில் இருந்தபடியே

நாதகும்பக:, ஹட ஸங்கேத சந்த்ரிகா

மொழிபெயர்ப்பு

பத்மாஸனத்தில் அமர்ந்து, ஓம்கார மந்திரத்தை மெலிதாக உச்சரித்துக்கொண்டே சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும். நீண்ட நேரம் உச்சரித்தால் மட்டுமே நாபிக்கமலத்திலிருந்து எழும் ஓம்கார நாதம் பிரம்மரந்திரத்தை அடையும்.

செய்நுட்பம்

  1. பத்மாஸனத்தில் இருந்தபடியே ஓம்கார மந்திரத்தை நீண்ட நேரம் மெலிதாக உச்சரித்துக்கொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. நாபிக்கமலத்திலிருந்து எழும் ஓம்கார நாதம், அனாஹதம், விசுத்தி, ஆஜ்ஞா சக்கரங்கள் வழியாகப் பயணம்செய்து ஸஹஸ்ரார சக்கரத்தை அடைவதை உணருங்கள்.
  1. உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை உள்ளிழுக்க முடியாதபோது, ஓம்கார மந்திரத்தை மெலிதாக உச்சரித்துக்கொண்டே சுவாசத்தை வெளியேற்றவும்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

3. பத்மாஸனத்தில் இருந்தபடியே

த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192

அஅத த்ரிநேத்ரகும்பக:

ஸக்ரு'ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய ஸூர்யேண பூரயேத் /
நியம்பூ பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //

மொழிபெயர்ப்பு

இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் த்ரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).
  1. பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். 9 இதை 21 முறை செய்யுங்கள்.

4. பத்மாஸனத்தில் இருந்தபடியே

த்ரிசூ'லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193

அத த்ரிசூ'லகும்பக:
க்ராணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
த்ரிசூ'லினா த்ரிசூ'லாக்ாய: கும்ப_ உக்தஸ்-த்ரிசூ'லனுத் // 193

மொழிபெயர்ப்பு

எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.