KAILASA Library/வாழும் அவதார புருஷர்/தலைசுற்றல் நோயிலிருந்து குணமடையSign in
வாழும் அவதார புருஷர்

தலைசுற்றல் நோயிலிருந்து குணமடைய

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Cure For Vertigo

◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 28, 2011

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

  1. கோரகஜாலீ ஆஸனம்
  1. ப்ர்க்ருதிகும்பகம்
  1. கூர்மகும்பகம்
  1. கானிபாவ ஆஸனம்
  1. கதாகும்பகம்
  1. வாமாவர்த்த சக்ரகும்பகம்
  1. தக்ஷிணாவர்த்த ச'ங்ககும்பகம்

1. கோரகஜாலீ ஆஸனம்,

ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 85-87

அத கோரகஜாலீ ஆஸனம்

ப்ரதம ஹீ ஊபௌ ஹோய பஹுரி நீசௌ புனி ஹோவை /
தோஉ கர தோஉ ஜங்த மதி நீகீ வித பெளசை //
பஹுரி தோஉ பூஜ ஸனை ஜங்த பாஹர லே ஆனை /
நாஸாத்ரிஷ்டி லகாஇ காங்கஸீ நாபி ஜு டானை // 85

பரஸ ஏக லக் ஸாதியை பைடிக ஊசுடு ஹோய /
ஸனை ஸனை சடதோ கரே கோரகஜாலீ ஸோய // 86

ப்ரஹ்மத்வார குண்டலி தஜை அரு புனி ஸுதீ ஹோய /
சிமத்கார தனகை மஹீ ஸாதிக தேகே ஸோய // 87

செய்நுட்பம்

  1. குத்துக்காலிட்ட நிலையில் அமருங்கள்.
  1. இரு கைகளையும் கெண்டைக்கால் தசை மற்றும் தொடைகளுக்கு நடுவில் வைக்கவும்.
  1. இரு கை விரல்களையும் கோர்த்துக் கொள்ளவும்
  1. உள்ளங்கைகளைத் தொப்புள் பகுதி மீது வைத்துக் கொள்ளவும்.
  1. மூக்கு நுனியைப் பார்த்தவாறே 30 வினாடிகள் இருக்கவும்.

2. கோரக்ஜாலீ ஆஸனத்தில் இருந்தபடியே

ப்ரக்ரு'தி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-70

அத ப்ரக்ரு'தி:கும்பக:

வாங்விதேனாஸு'கம் கர்ஷந் குர்வந்துர்ச்சதரம் ஸ்வநம்/
தாரயேச்சே-துதானஸ்ய ப்ரக்ரு'தி:கும்பக: ஸ்ம்ரு'த: // 70

மொழிபெயர்ப்பு

ஒருவர், 'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே வேகமாகச் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தும் இக்கும்பகம் ப்ரக்ருதிகும்பகம் என்றழைக்கப்படுகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. 'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முழுமையாகச் சுவாசத்தை உள்ளிழுத்தபிறகு, சுவாசக்காற்றை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி வைக்கவும்.
  1. பிறகு மெதுவாகச்ாதாரணமாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
  1. இதை 21முறை செய்யுங்கள்.
கோரக்ஜாலீ ஆஸனம்

குறிப்பு: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தமோ குடலிறக்கமோ இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ சுவாசக்காற்றை உள்ளே நிறுத்த வேண்டாம்.

3. கோரக்ஜாலீ ஆஸனத்தில் இருந்தபடியே

கூர்மகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79

அத கூர்மகும்பக:

நிமீலோந்மீலனே த்யக்த்வா பீடே காஷ்டமிவ ஸ்திதி: /
நேத்ரயோச்'வ ச'ரீரஸ்ய கூர்மகும்ப: ஸ உச்யதே // 79

மொழிபெயர்ப்பு

கண்களையும் உடலையும் அசைவற்று ஒரு மரக்கட்டை போல்வைத்து, பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்தி, இமைகளை இமைக்காமல் வைக்கும்போது நிகழும்கும்பகம் கூர்மகும்பகம் எனப்படுகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
  1. உங்கள் பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்துங்கள்.
  1. இமைகளை இமைக்காதீர்கள். கண்பாவையை அசைக்காதீர்கள். உடலை அசைக்காதீர்கள்.
  1. இயற்கையாகவே, உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் சுவாசங்களின் அளவுகள் குறைந்து, கும்பகம் நிகழும். அதாவது சுவாசத்தை நிறுத்திவைத்தல் நிகழும்.
  1. இதற்குமேல் முடியாது எனும் நிலைவரும்போது தளர்வாகுங்கள்.
  1. இதை 21முறை செய்யுங்கள்.

4. கானி பாவ ஆஸனம்,

யோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 94

அத கானி பாவ ஆஸனம்

ஆஸண கெள குண ஆஷி துஷ்தா ஹோஇ தோ ஆசீ ஹௌள / 94

(இந்த ஆஸனத்தை யோகாவில் நன்கு தேர்ச்சிபெற்றவர்கள் மட்டுமே செய்யமுடியும். ஆகவே ஆரம்பநிலை பயிற்சியாளர்கள் இரண்டாவது புகைப்படத்தில் உள்ளபடி வர்த்தமானி யோகாஸனத்தைச் செய்தால்

நிலை 1
நிலை 2

நிலை 1

நிலை 2

நிலை 3

நிலை 3

செய்நுட்பம்

  1. குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில், இரண்டு கைகளையும் (சௌகரியமான நிலையில்) தரையில் ஊன்றிக் கொள்ளவும்.
  1. முழங்கைகளை வளைக்கவும்.
  1. கால்களைத் தரையிலிருந்து உயர்த்தி, முழங்கால்களை முழங்கைகளைத் தொட்டவாறு வைக்கவும்.
  1. முழு உடலையும் இரு உள்ளங்கைகளால் சமமாகத் தாங்கிக் கொள்ளவும்.
  1. இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.

5. கானி பாவ ஆஸனத்தில் இருந்தபடியே கதாகும்ம்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 112

அத கதாகும்ம்பக:

உபாப்யாம் பூரணம் யத்ர ரேசனம் ஸூர்யவர்த்மனா /
கதாகும்பு: சி'வேனோக்தோ யோகீனோ பலகாரக: // 112

மொழிபெயர்ப்பு

இரு நாசிகள் வழியே சுவாசத்தை உள்ளிழுத்து, பின்பு வலது நாசி வழியே சுவாசத்தை வெளிவிடுவது கதாகும்பகம் எனப்படும். இது யோகியை உறுதியடையச் செய்யும் என்று சிவன் விளக்குகிறார்.

செய்நுட்பம்

  1. இரண்டு நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை முடிந்த அளவு உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இரண்டு நாசி களையும் விரல்களைக் கொண்டு அடைத்துக் கொள்ளவும்.
  1. இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்ேபாது, வலது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

6. கானி பாவ ஆசனத்தில் இருந்தபடியே வாமாவர்த்த சக்ர கும்பக,

கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 106-108

அாத வாமாவர்த்த சக்ரகும்பக:

தக்ஷவாமா-வர்த்த-பேதாச்-சக்ர-ச'ங்ஙெள த்விதீோதிதௌ // 106

ஸூர்யேணாபூர்ய மருதம் கும்பயேதுதரஸ்திதம் /
ரேசயேதிந்துனா பூயஸ்-ததா தக்ஷேண பூரயேத் // 107

கும்பயேதியா ரிச்யாத்தக்ஷிணாவர்த்த-சக்ரக: /
விலோமோऽயம் சக்ர-கும்போ வாமாவர்த்த: சி'வோதித: // 108

மொழிபெயர்ப்பு

இடது மற்றும் வலது என்ற வித்தியாசத்தைக் கொண்டு சங்க மற்றும் சக்ர என்று கும்பகங்கள் இரண்டு வகைப்படும்.

சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுத்து வயிற்றை காற்றால் நிரப்பிக் கொள்ளவும். பின்பு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். பின்பு மீண்டும் சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுத்து வயிற்றை காற்றால் நிரப்பிக் கொள்ளவும். பின்பு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். இது தக்ஷிணாவர்த்த சக்ரகும்பகம். இதன் எதிர்ப்புறச் சுற்று வாமாவர்த்த சக்ரகும்பகம் என்று சிவன் அருளுகிறார்.

செய்நுட்பம்

  1. ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை இடது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
  1. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
  1. சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை வலது நாசிவழியாக மெதுவாக வெளிவிடுங்கள்.
  1. மீண்டும் ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை இடது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
  1. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
  1. சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை மெதுவாக வலது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

7. கானி பாவ ஆஸனத்தில் இருந்தபடியே தக்ஷிணாவர்த்த ச'ங்ககும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 110

சக்ரகும்ப_ம் த்விதா குர்யாதக்னீஷோமம் ததைகதா /
ச'ங்ககும்பேSயமீசேன பூர்வவத் த்விவித: ஸ்ம்ரு'த: // 110

மொழிபெயர்ப்பு

சக்ரகும்பகத்தை இருமுறையும், அக்னீஷோம கும்பகத்தை ஒருமுறையும் பயிற்சி செய்வதே சங்ககும்பகம் எனப்படுகிறது. சங்ககும்பகமும் இதற்குமுன் சொல்லப்பட்ட சக்ரகும்பகத்தைப் போன்றே இருவகைப்படும்.

செய்நுட்பம்

  1. ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
  1. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
  1. சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை இடது நாசிவழியாக மெதுவாக வெளிவிடுங்கள்.
  1. மீண்டும் ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
  1. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
  1. சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை மெதுவாக இடது நாசி வழியாக வெளிவிடுங்கள். (1-6 எண் வரை உள்ள இந்தச் செயல்முறையை இன்னொருமுறை செய்யுங்கள். இத்துடன் இருசுற்று தக்ஷிணாவர்த்த சக்ரகும்பகம் நிறைவடைகிறது. அடுத்து கீழ்க்கண்ட அக்னீஷோமாக்யகும்பகத்தை 1 சுற்று பயிற்சி செய்யுங்கள்.)
  1. வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியிடவும்.
  1. இப்பொழுது மீண்டும் இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வலது நாசி வழியாக வெளிவிடுங்கள்.

இந்த மொத்த சுற்றை அதாவது இருசுற்று தக்ஷிணாவர்த்த சக்ரகும்பகம், ஒரு சுற்று அக்னீஷோமாக்யகும்பகச் சுற்றை 21 முறை செய்யுங்கள்.