KAILASA Library/வாழும் அவதார புருஷர்/தலைசுற்றல் நோய் வராமல் காக்கSign in
வாழும் அவதார புருஷர்

தலைசுற்றல் நோய் வராமல் காக்க

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Care for Vertigo

நோய் பற்றிய விபரம்

ஒரு வகையான கிறுகிறுப்பும், நாம் நகராதபோதும் சுழல்வது போன்ற உணர்வும் தலைச்சுற்றல் எனப்படுகிறது. காதின் உள்ளே இருக்கின்ற வெஸ்டிபுலர் (Vestibular) அமைப்பு சரிவர வேலை செய்யாததால் இம்மாதிரியான அறிகுறிகள் ஏற்படுகின்றன. குமட்டல், வாந்தி, தள்ளாட்டம், அதிகப்படியான தளர்வு நிலை, நிற்பதற்கும் நடப்பதற்கும் தடுமாறுதல் போன்ற பிரச்சனைகளும் இதனால் ஏற்படுகின்றன.

கலங்கலான பார்வை, பேசுவதில் சிரமம், குறைந்த விழிப்புநிலை மற்றும் காதுகேளாமையும் கூட இதனால் ஏற்படக்கூடும். மைய நரம்பு மண்டல சீர்குறைவுகள், நிரந்தர நோய்களுக்கு வழிவகுக்கும்.

இதில் மூன்று வகையான தலைசுற்றல்கள் இருக்கின்றன.

நோயாளியைச் சுற்றியுள்ள பொருட்கள் நகர்வது (Objective).

நோயாளி அவரே நகர்வதாக உணர்வது (Subjective).

நோயாளியின் தலைக்குள்ளே எல்லாமே சுழல்வதுபோன்ற தீவிரமான உணர்வு (Pseudo Vertigo).

இது ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்கள்:

தீங்கற்ற வலிப்பு நோய்(Benign Paroxymal Positional Vertigo), தலையில் பலமான தாகுதல், பேரதிர்ச்சியடைதல் மற்றும் தொடர்ச்சியாக வருகின்ற ஒற்றைத் தலைவலி இவை தலைச்சுற்றல் ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்கள். இவை தவிர, Meniere's Disease எனப்படும் உட்காதின் மையப்புழை நரம்புமண்டலத்தில் ஏற்படும் கோளாறுகள் (Vestibular Neuritis), போதை தருகின்ற பானங்கள் அதிகப்படியாக உபயோகிப்பதும் கூட தலைச்சுற்றலுக்குக் காரணமாகின்றன.

தலைச்சுற்றல், மக்களிடையே அடிக்கடி காணப்படுகின்ற ஒரு அறிகுறியாக இருக்கின்றது. வயது ஏறும்போது நடைமுறையில் இதுவும் அதிகரிக்கின்றது. ஆண்களை விட பெண்களிடம் இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக காணப்படுகின்றது. அவசர சிகிச்சை பிரிவிற்கு வருகிறவர்களில் 2-3% பேர்கள் தலைச் சுற்றலுக்காக வருகிறார்கள்.

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 27, 2011.

செய்யவேண்டிய படிநிலைகள்:

  1. அந்தராஸனம்
  1. ப்ரக்ருதிகும்பகம்
  1. கூர்மகும்பகம்
  1. ஆரம்பாஸனம்
  1. கடாகும்பகம்
  1. வாமாவர்த்த சக்ரகும்பகம்
  1. தக்ஷிணாவர்த்த ச்'ங்ககும்பகம்

1. அந்த-ஆஸனம்,

ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 193-197

அத அந்த-ஆஸனம்

ப்ரதம பகதலீ ஸம டஹராவை கோர மாஹிலீ உபை மிலாவை /
பணாபாண உகட கர பைஸே தோஉ ஏட குதா நிவைஸே // 193

ஜங்ந ஒர கோடா ஸம கர துரை புன ஆகாகோ உபை பஸாரை /
கோடாமஹிலா நேத்ர தோஉ ஸம கரி காடா தாபே ஸோஉ // 194

போஹுசாStandard ஸந்திமாஹிலீ தாகோ ஐஸே டானி /
கோடா கீ பாஹரி திஸா தாபரி துரை ஜூ ஆனி // 195

நேத்ர மே ஜை படப வ்ஹை புனி ராதீந்தோ ஹோய /
காவா த்ரு'தி அரு மிரசஸோ அஞ்ஜன கீஜை ஸோய // 196

முக மாரக ரேசன கரே மூலத்வாரே தே பந்த /
தோ ராதிந்தோ நா ரஹே நைந்தனி தேகே அந்த // 197

அந்த-ஆஸனம்

அந்த-ஆஸனம்

செய்நுட்பம்

  1. குத்துக்காலிடு அமரவும்.
  1. முழங்கால்களை முன்னோக்கி வளைத்து, தரையில் ஊன்றவும்.
  1. உடலை முன்னோக்கி வளைத்து, முழங்கால்களுக்கு இடையில் தலையைக் கொண்டு செல்லவும்.
  1. முழங்கைகளை முழங்கால்களுக்குப் பக்கவாட்டில் வைக்கவும்.
  1. கைகளால் தலைவைத் தாங்கவும்.
  1. வாயால் சுவாசத்தை முழுமையாக வெளியிடவும்.
  1. இடது குதிகாலை ஆஸனவாய்க்கும் பிறப்புறுக்கும் இடைப்பட்ட பகுதியின் மேல் வைத்து அழுத்தி, ஆஸனவாயை இறுக்கிச் சுருக்கவும். (மூல பந்தத்தை ஏற்படுத்தவும்.)
  1. இந்த நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.
  1. மூல பந்தத்தை விடுவிக்கவும்.

2. அந்தாஸனத்தில் இருந்தபடியே

ப்ரக்ரு'தி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-70

அத ப்ரக்ரு'தி:கும்பக:

வா்நவிதேனாஸு'கம் கர்ஷந் குர்வந்துர்ச்சதரம் ஸ்வநம்/
தாரயேச்சே-துதானஸ்ய ப்ரக்ரு'தி:கும்பக: ஸ்ம்ரு'த: // 70

மொழிபெயர்ப்பு

ஒருவர், ‘வா’ எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே வேகமாகச் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தும் இக்கும்பகம் ப்ரக்ருதிகும்பகம் என்றழைக்கப்படுகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. ‘வா’ எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முழுமையாகச் சுவாசத்தை உள்ளிழுத்தபிறகு, சுவாசக்காற்றை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி வைக்கவும்.
  1. பிறகு மெதுவாகச் சாதா ரணமாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
  1. இதை 21முறை செய்யுங்கள்.

குறிப்பு: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தமோ குடலிறக்கமோ இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ சுவாசக்காற்றை உள்ளே நிறுத்த வேண்டாம்.

3. அந்தாஸனத்தில் இருந்தபடியே

கூர்மகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79

அத கூர்மகும்பக:

நிமீலோந்மீலனே த்யக்த்வா பீடே காஷ்ட_மிவ ஸ்திதி: /
நேத்ரயோச்'வ ஸ'ரீரஸ்ய கூர்மமும்ப: ஸ உச்யதே // 79

மொழிபெயர்ப்பு

கண்களையும் உடலையும் அசைவற்று ஒரு மரக்கட்டை போல்வைத்து, பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்தி, இமைகளை இமைக்காமல் வைக்கும்போது நிகழும்கும்பகம் கூர்மகும்பகம் எனப்படுகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
  1. உங்கள் பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்துங்கள்.
  1. இமைகளை இமைக்காதீர்கள். கண்பாவையை அசைக்காதீர்கள். உடலை அசைக்காதீர்கள்.
  1. இயற்கையாகவே, உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் சுவாசங்களின் அளவுகள் குறைந்து, கும்பகம் நிகழும். அதாவது சுவாசத்தை நிறுத்திவைத்தல் நிகழும்.
  1. இதற்குமேல் முடியாது எனும் நிலைவரும்போது தளர்வாகுங்கள்.
  1. இதை 21முறை செய்யுங்கள்.

4. ஆரம்ப_ஆஸனம்,

யோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 30

அ அத ஆரம்ப_ஆஸனம்

தோஉ பக மிலிவா பஸாரீ பகா கா அகுடா பகடி லிலாட கோடா லாகாவை ஸரீர ஸமீராஷை ஆஸன கெளகுண ஆரப கீ பிதி உத்தர ஸனமுஷ பைஸீ ஆரம்ப கரை

செய்நுட்பம்

  1. கால்களை நீட்டியவாறு தரையில் அமருங்கள்.
  1. உடலை முன்னோக்கி வளைத்து கைகளால் கால்பெருவிரல்களைப் பிடித்துக் கொள்ளவும்.
  1. உங்கள் தலையைக் கொண்டு முழங்கால்களைத் தொடவும்.
  1. இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.

5. ஆரம்பாஸனத்தில் இருந்தபடியே

கதாகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 112

அ அத கதாகும்பக:

உபாப்யாம் பூரணம் யத்ர ரேசனம் ஸூர்யவர்த்மனா /
கதாகும்ப: சி'வேனோக்தோ யோகீனோ பலகாரக: // 112

மொழிபெயர்ப்பு

இரு நாசிகள் வழியே சுவாசத்தை உள்ளிழுத்து, பின்பு வலது நாசி வழியே சுவாசத்தை வெளிவிடுவது கதாகும்பகம் எனப்படும். இது யோகியை உறுதியடையச் செய்யும் என்று சிவன் விளக்குகிறார்.

செய்நுட்பம்

  1. இரண்டு நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை முடிந்த அளவு உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இரண்டு நாசிகளையும் விரல்களைக் கொண்டு அடைத்துக் கொள்ளவும்.
  1. இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்ேபாது, வலது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

6. ஆரம்பாஸனத்தில் இருந்தபடியே வாமாவர்த்த சக்ர கும்பக,

கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 106-108

அத வாமாவர்த்த சக்ரகும்பக:

தக்ஷவாமா-வர்த்த-பேதாச்-சக்ர-ச'ங்கௌ த்விதீதிதெள // 106

ஸூர்யேணாபூர்ய மருதம் கும்பயேதுரஸ்த்திதம் /
ரேசயேதிந்துனா பூயஸ்-ததா தக்ஷேண பூரயேத் // 107

கும்பயேதியா ரிச்யாத்தக்ஷிணாவர்த்த-சக்ரக: /
விலோமோऽயம் சக்ர-கும்பேரா வாமாவர்த்த: சி'வோதித: // 108

மொழிபெயர்ப்பு

இடது மற்றும் வலது என்ற வித்தியாசத்தைக் கொண்டு சங்க மற்றும் சக்ர என்று கும்பகங்கள் இரண்டு வகைப்படும்.

சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுத்து வயிற்றை காற்றால் நிரப்பிக் கொள்ளவும். பின்பு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். பின்பு மீண்டும் சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுத்து வயிற்றை காற்றால் நிரப்பிக் கொள்ளவும். பின்பு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். இது தக்ஷிணாவர்த்த சக்ரகும்பகம். இதன் எதிர்ப்புறச் சுற்று வாமாவர்த்த சக்ரகும்பகம் என்று சிவன் அருளுகிறார்.

செய்நுட்பம்

  1. ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை இடது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
  1. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
  1. சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை வலது நாசிவழியாக மெதுவாக வெளிவிடுங்கள்.
  1. மீண்டும் ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை இடது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
  1. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
  1. சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை மெதுவாக வலது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

7. ஆரம்பாஸனத்தில் இருந்தபடியே தக்ஷிணாவர்த்த ச'ங்ககும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 110

சக்ரகும்பம் த்விதா குர்யாதக்னீஷோமம் ததைகதா /
ச'ங்ககும்போஸயமீசேன பூர்வவத் த்விவித: ஸ்ம்ரு'த: // 110

மொழிபெயர்ப்பு

சக்ரகும்பகத்தை இருமுறையும், அக்னீஷோம கும்பகத்தை ஒருமுறையும் பயிற்சிசெய்வதே சங்ககும்பகம் எனப்படுகிறது. சங்ககும்பகமும் இதற்குமுன் சொல்லப்பட்ட சக்ரகும்பகத்தைப் போன்றே இருவகைப்படும்.

செய்நுட்பம்

  1. ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
  1. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
  1. சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை இடது நாசிவழியாக மெதுவாக வெளிவிடுங்கள்.
  1. மீண்டும் ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
  1. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
  1. சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை மெதுவாக இடது நாசி வழியாக வெளிவிடுங்கள். (1-6 எண் வரை உள்ள இந்தச் செயல்முறையை இன்னொருமுறை செய்யுங்கள். இத்துடன் இருசுற்று தக்ஷிணாவர்த்த சக்ரகும்பகம் நிறைவடைகிறது. அடுத்து (கீழ்க்கண்ட அக்னீஷோமாக்யகும்பகத்தை 1 சுற்று பயிற்சி செய்யுங்கள்.)
  1. வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியிடவும்.
  1. இப்பொழுது மீண்டும் இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வலது நாசி வழியாக வெளியிடுங்கள்.

இந்த மொத்த சுற்றை அதாவது இருசுற்று தக்ஷிணாவர்த்த சக்ரகும்பகம், ஒரு சுற்று அக்னீஷோமாக்யகும்பகச் சுற்றை 21 முறை செய்யுங்கள்.