KAILASA Library/வாழும் அவதார புருஷர்/குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்யும் க்ரியா நிலை - 1Sign in
வாழும் அவதார புருஷர்

குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்யும் க்ரியா நிலை - 1

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Kriya for kundalini awakening Level-1

குண்டலினி சக்தியைப் பற்றிய சத்தியங்கள்

ஹட பிரதீபிகா என்ற யோக சாஸ்திர நூல், குண்டலினி சக்தியைப் பற்றியும், அதனை விழிப்பிக்கச் செய்வதில் குருவின் பங்கு பற்றியும், குண்டலினி சக்தி விழிப்படைவதால் விளையும் உயர் நன்மைகளைப் பற்றியும் மிகத்தெளிவாக விளக்குகிறது.

குண்டலினி சக்தி

ஹட ப்ரதீபிகா, அத்யாயம்-3, ஸ்லோகம்-1

ஸசை'லவன- தாரீணாம் யதா-தாரோSஹி-நாயக: /
ஸர்வேஷாம் யோகதந்திராணாம் ததா தாரோ ஹி குண்டலீ // 3-1

மொழிபெயர்ப்பு

ஆதிசேஷன், தன் தலையால் இந்தப் பூமி, அதிலுள்ள மலைகள், மரங்கள் அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குவது போல், குண்டலினி சக்தி, அனைத்து யோகப் பயிற்சிகளுக்கும் ஆதாரமாக விளங்குகிறது.

குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்வதில் குருவின் பங்கு

ஹட ப்ரதீபிகா, அத்யாயம்-3, ஸ்லோகம்-2

ஸுப்தா குருப்ரஸாதேன யதா ஜாக்ரதி குண்டலீ /
ததா ஸர்வாணி பத்மானி பித்யன்தே க்ரந்தயோSபி ச// 3-2

மொழிபெயர்ப்பு

ஆனாலும், தூங்கிக்கொண்டிருக்கும் குண்டலினி சக்தி குருவின் கருணையினால் மட்டுமே விழிப்படைகிறது; குருவின் கருணையினால் எல்லா முடிச்சுக்களும் அவிழ்க்கப்பட்டு, அனைத்து தாமரைகளும் (சக்ரங்களும்) மலர்கின்றன.

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படி:

மஹாமுத்ரா

மஹாமுத்ராவுக்கும் குண்டலினி சக்திக்கும் இடையே மிக நெருங்கிய தொடர்பு இருப்பத்தைக் கீழ்வரும் ஸ்லோகங்கள் நிரூபிக்கின்றன.

மஹாமுத்ரா

ஹட ப்ரதீபிகா, அத்யாயம்-3, ஸ்லோகங்கள்-10-13,15

பாதமூலேன வாமேன யோனிம் ஸம்பீட்ய தக்ஷிணம் /
ப்ரஸாரிதம் பதம் க்ரு'த்வா கராப்யம் தாரயேத் த்ரு'டம் // 3-10

கண்டே பந்தம் ஸமரோப்ய தாரயேத்-வாயும் ஊா்த்தவத: /
யதா தண்ட -ஹதஹ ஸா்போ தண்டாகாரஹ ப்ரஜாயதே // 3-11

ரு'ஜ்வீ - பூத்வா ததா ச'க்தி: குண்டலீ ஸஹஸ பவேத் /
ததா ஸா மரணாவஸ்தா ஜாயதே த்விபுடாச்'ரயா // 3-12

ததஹ ச'னைஹி ச'னைரேவ ரேசயத் நைவ வேகத: /
மஹாமுத்ராம் ச தேனவ வதந்தி விபுதோத்தமா: // 3.13

சந்த்ராங்கே து ஸமப்யஸ்ய ஸூர்யாங்கே புனரப்யஸ்யேத் /
யாவத்-துல்யா பவேத் ஸங்க்ாய ததோ முத்ராம் விஸர்ஜயேத் // 3-15

மொழிபெயர்ப்பு

இடது காலை மடக்கி, குதிகாலை பிறப்புறுப்பின் (யோனி) வாயிலில் அழுத்தமாக வைத்து, வலது காலை நீட்டி, வலது பாதத்தை இரண்டு கை களாலும் உறுதியாகப் பிடிக்கவும். (3.10)

தொண்டையை இறுக்கமாக்குவதன் மூலம் சுவாசத்தை உள்ளே நிறுத்தும்போது, கம்பால் அடிக்கப்பட்ட பாம்பு சீறி நேராக எழுவதுபோல், பிராண சக்தியானது நேராக எழுகிறது.(3.11)

குண்டலி சக்தி நேராக எழும்பும்போது, ஸுஷும்னா நாடி வழியாகச் சக்தி பாய்வதால், இடகலை பிங்கலை நாடிகள் இரண்டுமே செயலிழக்கின்றன. (3.12)

பிறகு சுவாசத்தை மிக மிக மெதுவாக வெளியே விடவும். இதுவே 'மஹாமுத்ரா' என்று மஹாத்மாக்களால் (ரிஷிகளால்) விளக்கப்பட்டுள்ள முத்ராவாகும். (3.13) இடது குதிகாலை வைத்து செய்ததுபோல், வலது காலை மடித்தும் செய்யுங்கள்.

ஏதாவது ஒரு கால் பக்கம் மட்டும் செய்துவிட்டு, அடுத்த கால் பக்கம் செய்யாமல் இடையிலேயே நிறுத்தக்கூடாது. இரண்டு புறமும் சமமான எண்ணிக்கையில் செய்யவே வேண்டும். பிறகு முத்திரையை விடுவிக்கவும்.(3.15)

மஹாமுத்ரா ஆஸனம்

மஹாமுத்ரா ஆஸனம்

செய்நுட்பம்

  1. கால்களை நேராக நீட்டி அமரவும்.
  1. இடது காலை மடக்கி, குதிகாலை பிறப்புறுப்பிற்கும் ஆஸனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் அழுத்தமாக வைக்கவும். வலது பாதத்தை இரண்டு கைகளாலும் உறுதியாகப் பிடிக்கவும்.
  1. மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. தொண்டையை இறுக்கமாக்குவதன் மூலம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
  1. முடிந்தளவு சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, இனியும் நிறுத்த முடியாது எனும்போது, மிக மிக மெதுவாக சுவாசத்தை வெளியேற்றவும்.
  1. எண் 3 முதல் 5 வரை உள்ள இந்தச் சுற்றை 7 முறை செய்யுங்கள்.
  1. பிறகு இடது குதிகாலை வைத்துச் செய்ததுபோல், வலது காலை மடித்தும் 7 முறை செய்யுங்கள்.

மஹா முத்ராவைப் பயிற்சி செய்வதால் விளையும் உயர் நன்மைகள்:

(மஹா முத்ராவைப் பயிற்சி செய்வதால் குண்டலினி சக்தி விழிப்படைகிறது என்பது குறிப்பிடத்தக்கது)

ஹட ப்ரதீபிகா, அத்யாயம்-3, ஸ்லோகங்கள்-14,16,17

இயம் கலு மஹாமுக்ரா மஹாஸித்தை: ப்ரதர்சி'தா /
மஹாக்லேசா'தயோ தோஷா: க்ஷீயந்தே மரணாதய: /
மஹாமுக்ராம் ச தேனைவ வதந்தி விபுதோத்தமா: // 3-14

ந ஹி பத்யம்-அபத்யம் வா ரஸா: ஸர்வே'பி நீரஸா: /
அபி புக்தம் விஷம் கோரம் பீயூஷமபி ஜீர்யதி // 3.16

க்ஷய-குஷ்ட-குதாவர்த-குலமாஜீர்ண-புரோகமா: /
தஸ்ய தோஷா: க்ஷயம் யாந்தி மஹாமுக்ராம் து யோ'ப்யஸேத் // 3.17

மொழிபெயர்ப்பு

துன்பத்தைத் தரும் பஞ்ச கிலேசங்களான ஆசை(இராகம்), குரோராதம் (துவேஷம்), அஞ்ஞானம்(அவித்தை), புத்தியே ஆன்மா என்று நினைத்தால்(அஸ்மிதை) பற்று மற்றும் மரணபயம் (அபினிவேசம்) எனப்படும் ஐந்து வித பாவங்களிலிருந்தும் மரணத்திற்கான காரணங்களிலிருந்தும் ஒருவனை இந்த மஹாமுக்ரா விடுவிப்பதால், இதனைச் ‘சிறந்த மனப்பாங்கு’ என்று மேலான ரிஷிகள் விளம்புகின்றனர்.(3.14)

மஹா முத்ராவினைப் பயிற்சி செய்யும் ஒருவருக்கு, ‘இது உடல் நலத்துக்கு உகந்தது அன்று’ என்று எந்த ஒரு பொருளும் கிடையாது. அவர் எதையும் உண்ணலாம். மரணத்தை விளைவிக்கக்கூடிய கொடிய விஷம்கூட அவருக்கு ஜீரணமாகிவிடும் அமிர்தத்தைப்போல! (3.16)

குஷ்ட ரோகம் போன்ற எல்லா நோய்களும் இந்த மஹா முத்ராவினைப் பயிற்சி செய்வதன் மூலம் அகல்கின்றன.(3.17)